mani nasi
unread,Mar 25, 2011, 8:20:25 AM3/25/11Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Kumarasamy R, Manikandan R, raj | oviyas, Rajendra yerra, Rajesh A, ravi ravi, Raziya, santhamohan raviraj, Senthil Velan Rajedrababu, rams6...@yahoo.co.in, ramuve...@gmail.com, ravi.r...@gmail.com, ruu...@gmail.com, Srithar K Thangarajan, tamilse...@gmail.com, G Murugan Yadav HR/9940247505, sahasram -Believe in Love 9444072921, Olivia Vincent, pari p, peris...@yahoo.com, pkishore...@yahoo.com, plnvel...@gmail.com, a.kad...@gmail.com, arafath arafath, ambika...@gmail.com, ambika...@gmail.com, azaffar...@brainwave.in, Muthu Kumar, sathish dharma, Senthil kumar Mani, suresh bala, Suresh K.S, suresh...@excelacom.in, Balaji Dharanipathy, naresh Designer, dear...@gmail.com, fire....@yahoo.com, gemsofts...@googlegroups.com, jegan krishna, sahasram, venku...@gmail.com, venk...@yahoo.com, vijay...@yahoo.com, viv...@gmail.com, vsha...@yahoo.co.in, vinod....@gmail.com, bhavanid...@gmail.com, madur...@gmail.com, maria...@gmail.com, Murug...@yahoo.co.in
அதிபரபரப்பில் இருக்கும் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகர வீதிகளில் ரெஸ்டா-ரென்ட்டுகள், காபி ஷாப்கள், கடைகள் என ஏறியிறங்குகிறது அந்த இளைஞர்கள் குழு.
‘‘நாங்கள் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள்... தமிழர்களுக்கு சர்வதேச ரீதியாக பல பிரச்னைகள் உருவெடுத்து நிற்கின்றன. குறிப்பாக எமது மீனவர்களை இலங்கைக் கடற்படை தொடர்ந்து சுட்டுக் கொன்று வருகிறது. இவற்றை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டும்.
வெறும் குரலாக இருந்தால் அது காற்றோடு கலந்து மறைந்துவிடும். அதுவே நமது கையொப்பமிட்ட மனுக்கள் மூலம் ஐ.நா.வைச் சென்றடைந்தால், இதற்கு தீர்வு கிடைக்க வலியுறுத்தல் ஏற்படும் என்று நம்புகிறோம். தமிழர்களின் தலையெழுத்தை மாற்ற உங்கள் கையெழுத்து மிகவும் அவசியம்’’
-இப்படிப் பேசி அங்கேயே ஆன்லைன் பெட்டிஷனில் கையெழுத்து வாங்கி ஐ.நா.வுக்கும் மற்ற சர்வதேச நிறுவனங்களுக்கும் அனுப்பும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் அந்த இளைஞர்கள்.
‘இளந்தமிழர் அணி’ என்ற பெயரில் தமிழர்களுக்காக கரம்கோர்த்திருக்கும் இவர்கள், கலிபோர்னி-யாவில் சொகுசாக வாழ வசதி-யிருக்கும் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். ஆனபோதும் தமிழர்களுக்கான குரலை எழுப்புவதற்காக அமெரிக்க வீதிகளில் பிரசாரம் செய்துவிட்டு, இவர்கள் தினம் தினம் தூங்கப்போவது இரவு இரண்டு மணிக்கு மேல்தான்.
இளந்தமிழர் அணியை கட்டமைத்து ஒருங்-கிணைத்துவரும் மதுரை சதீஷ், திண்டுக்கல் கேசவன் ஆகியோரிடம் நாம் பேசினோம்.
‘‘தமிழ்மொழி, தமிழர் நலன் மற்றும் தமிழ்நாட்டின் நலன் என்ற ஒரே குறிக்கோளுடன் பரவி வாழ்ந்து-கொண்டிருக்கும் தமிழர்களை ஒன்றிணைத்து... தமிழ்ச் சமூகத்துக்கு மாநில, தேசிய, உலக அளவில் உள்ள பிரச்னைகளை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காண பாடுபடுவதுதான் எங்கள் நோக்கம்.
இந்த வகையில் இப்போது தமிழ் மீனவர் படுகொலைப் பிரச்னைகளை சர்வதேச சமூகத்தின் காதுகளில் உரக்க ஓதிவருகிறோம். ஐ.நா. சபையின் மனித உரிமைப் பிரிவு, ஐ.நா.வின் கடல் விவகாரங்களுக்கான பிரிவு, ஜெர்மனியில் உள்ள சர்வதேச கடல் எல்லை சட்டங்களுக்கான தீர்ப்பாயம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்கு தமிழக மீனவர் பிரச்னையை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். எங்களுக்கு முன்னோடியாக இந்தப் பிரச்னைகளை பல தமிழர் அமைப்புகள் முன்னெடுத்து வரும் நிலையில்... நாங்களும் அந்த அமைப்புகளோடு எங்களை இணைத்துக் கொண்டு தீவிரமாக போராடுகிறோம்.
இதுமட்டுமல்ல... அமெரிக்காவில் உள்ள மீனவர் அமைப்புகளிடமும் தமிழ்நாட்டு மீனவர்களின் கண்ணீர் கதைகளை கூறி ஆதரவு கேட்டோம். அதிர்ச்சியடைந்த அவர்கள் எங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதாக உறுதி அளித்துள்ளனர். இதுபோலவே பல நாட்டு மீனவர் அமைப்புகளிடமும் தமிழக மீனவர்கள் மீதான சிங்கள அடக்குமுறை பற்றி எடுத்துச் சொல்லி-வருகிறோம். அமெரிக்கா வந்தோம்... சம்பாதித்தோம்... என்று இல்லாமல் நமது தமிழினத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தின் தூண்டுதல்தான் இந்த இளந்தமிழர் அணி!’’ என்று ஆர்வத்துடன் கூறினார்கள் அவர்கள்.
உள்ளூர்த் தமிழன் உலகக்-கோப்பை கிரிக்கெட் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கையில்... அமெரிக்காவிலிருந்து இப்படிப்பட்ட குரல்களை கேட்ட நமக்-கெல்லாம்... வியப்பும் வெட்கமும்தான் பாக்கி!
Regards,
N.Mani
Ramboll Chennai
Phone:
+91 44 -4204 0826/ Extn:108
Mobile:
+91 98 8487 7507