Kalaimamani and Oscar 2010

0 views
Skip to first unread message

Ram Kumar

unread,
Feb 26, 2009, 6:35:05 AM2/26/09
to m.lakshm...@gmail.com, Anesh maapu, Esakki, futurepi...@googlegroups.com, G.Ram, Hari Trichy, hariharan v, jagdish...@gmail.com, kannansu...@yahoo.co.in, K.S., Kumaran, Lakshman, Mariappan, mano.dude, Nammavar, Preeti maapu, Paul, Ravi Sankar, Raju, Rajapandian, Ramranjith, Satheesh, Sabari, rsrik...@gmail.com, Velmuruga...@cognizant.com, Venkadesan, Venkadesan mama, vimald...@gmail.com
ரேசன் கார்டுதாரர்களுக்கு கலைமாமணி விருது - தமிழக அரசு அறிவிப்பு.

கழக ஆட்சியில் வீடுதோறும் கலைமாமணி - கருணாநிதி பெருமிதம்.

ஆஸ்கார் விருது அனைவருக்கும் கிடைக்க அறவழியில் போராட்டம்.

கழக ஆட்சியில் வீடுதோறும் கலைமாமணி கொடுத்தற்க்காக பெருமிதம் அடையும் வேளையில், 2009 பொது தேர்தலின் போது ''வருஷம் 5 ஆஸ்கார் லட்சியம், 2 ஆஸ்கார் நிச்சயம் ''என்ற தேர்தல் கோசத்தை நினைவு கூர்ந்த முதல்வர் மேலும் அறிக்கையில் கூறியுள்ளதாவது....
கடந்த ஆண்டு (2009) 2 ஆஸ்கார் விருதுகள் சிறுபான்மை இனத்தவருக்கு கிடைக்க செய்து பேருவகை அடைந்ததை தமிழறிந்த அறிஞர்கள் அறிவார்கள். படத்திற்கு ஒரு ஆஸ்கார் கிடைக்க வேண்டும் என்பதை மத்திய அரசின் குறைந்த பட்ச செயல் திட்டத்திலே இணைத்ததற்கு இந்த தமிழன் பட்டபாடை தரணி அறியும் தாசும் அறிவார். ஆனால் அவர் இன்று கழக ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற அம்மையார் கனவு நிறைவேற "ஆஸ்கார் பகிர்ந்தளிப்பு பேரவை"யை ஆரம்பித்து நாளொரு போராட்டம் நடத்திக்கொண்டு இருப்பதை கண்டு தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்
மேலும் அவர் ஆஸ்கார் விருதுக்கு எடுத்த முயற்சிகளை பட்டியலிட்டுள்ளார்.
 
மே 2009 --ஆஸ்கார் தமிழனின் அடிப்படை உரிமை - செயர்க்குழுவில் தீர்மானம் 

ஜூன் 2009 -- ஆஸ்கார் விருது அரசுடமை ஆக்கப்பட வேண்டும் - கழக உறுப்பினர் திருமண விழாவில் கோரிக்கை.
 

ஆகெஸ்டு 2009 -- ஆஸ்கருக்காக ஆட்சியை இழக்க தயார் - அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

அக்டோபர் 2009 -- ஆஸ்கார் வேண்டி மாநகரில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்
 
ஜனவரி-2010 -- ஆஸ்கார் எமது அவரச தேவை - சட்ட சபையில் இறுதி தீர்மானம்.

இந்த பட்டியலையும், நான் பிரதமருக்கு எழுதிய கடிதங்களையும் தாசும் கோவும் மறந்தாலும் மறைத்தாலும் தமிழக மக்கள் மறக்க மாட்டர்கள். அம்மையாரின் 10 ஆண்டுகால இருண்ட ஆட்சியிலே ஒரு ஆஸ்கார் விருது கூட இல்லாமல் தமிழகம் பட்ட பாட்டை மக்கள் மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை.
 
இன்று மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்ட நிலையிலும் ஆஸ்கார் வேண்டி பிரதமருக்கு தொலைபேசியிலும் கடிதம் மூலமும் வலியுறுத்திக்கொண்டு இருப்பதை நான் மக்களுக்கு சொல்லி காட்ட விரும்பவில்லை. 
அதனால் ஆஸ்கார் கிடைக்கும் வரை அறவழியில் மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருக்க உத்தேசித்து இருக்கிறேன்.
தேவைப்பட்டால் ஆம்புலன்சில் ஆஸ்கார் அகடமிக்கு சென்று விருது வழங்கும் விழாவை சிறப்பிக்க தயார் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Reply all
Reply to author
Forward
0 new messages