இத்தா

58 views
Skip to first unread message

Abu Sohail

unread,
Apr 12, 2010, 11:47:22 AM4/12/10
to நமக்குள் இஸ்லாம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

என்னுடை இந்திய நண்பர் இங்கு ஓமானில் தன் பெற்றோர்களுடன் வசித்து
வருகிறார். கடந்த வாரம் அவருடைய் தந்தை இறந்துவிட்டார்.இந்த சூழ்நிலையில்
நண்பரின் தாய் இத்தாவில் இருக்கிறார்,தன் குடும்ப சூழ்நிலையால் 4
மாதத்தில் தாயகம் திரும்ப வேண்டும்.
அவருடைய கேள்வி என்னவென்றால் குரான் 65;4 வசனப்படி,3 மாதம் இத்தா
இருந்தால் போதுமா அல்லது நான்கு மாதம் பத்து நாள் முழுமையாக பூர்த்தி
செய்ய வேண்டுமா? இந்த இத்தா சட்டம் கணவனை இழந்த பெண்களுக்குமா அல்லது
தலாக் பெரும் பெண்களுக்கு மட்டும்தானா?

65:4 மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து
(அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால்,
அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கு ம், 'இத்தா'(வின்
தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய
('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும், மேலும், எவர்
அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன்
எளிதாக்குகிறான்.

அன்புடன்
ஹுசைன் அஹ்மத்

muslim

unread,
Apr 12, 2010, 4:23:16 PM4/12/10
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள்கள் காத்திருக்க வேண்டும். (இந்த இத்தாத்) தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:234)

மேல்கண்ட வசனத்தில் கூறியுள்ளபடி, கணவன் மரணித்து விட்டால் மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் ''இத்தா'' இருத்தல் வேண்டும். இறந்தவரின் மனைவிக்கான காத்திருத்தல் தவணையின் சட்டம் இதுவாகும்!

இறந்தவரின் மனைவியின் இத்தாவின் தவணையும், தலாக் - விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கான இத்தாவின் தவணையும் ஒன்றல்ல! இரண்டுக்கும் வெவ்வேறு தவணை முறையாகும். இறந்தவரின் மனைவிக்கு மாதவிலக்கைக் கணக்கில் கொள்ளாமல் நான்கு மாதம் பத்து நாள்கள் காத்திருக்க வேண்டும்.

காத்திருந்தல் என்பது மறுமணம் செய்வதற்கான அவகாசம். இறந்தவரின் மனைவி கருத்தரிப்பதை அறிந்து கொள்வதே இதன் நோக்கமாகும். இத்துடன் இறந்தவரின் மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கம்  அனுஷ்டிக்க வேண்டும். கணவனுக்கென அலங்கரித்துக் கொள்ளும் அலங்காரங்களைத் தவிர்த்துக்கொள்வதே  துக்கம் கடைபிடிப்பதின் பொருளாகும்.    

'இறந்தவர்களுக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாள்களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப் பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளோம்" அறிவிப்பவர் உம்மு அதிய்யா (ரலி) (நூல்கள் - புகாரி 313)

(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் சகோதரர் இறந்த சமயம் அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி பூசிக்கொண்டார்கள்.

பிறகு, 'இதோ! (பாருங்கள்.) அல்லாஹ்வின் மீதாணையாக எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சொற்பொழிவு) மேடையில் இருந்தபடி 'அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தன் கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர!' என்று கூறக் கேட்டுள்ளேன்' என்றார்கள். அறிவிப்பவர் ஸைனப் பின்த் அபீ ஸலாமா (ரலி) (நூல்கள் - புகாரி 1280, 1282, 5334. முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத்)

இறந்தவரின் மனைவி காத்திருக்கும் தவணை காலத்தில் அவர் கர்ப்பமாகியுள்ளார் என்பது உறுதியானால், குழந்தையைப் பிரசவிக்கும் காலம் வரை இத்தாவின் தவணை நீடிக்கும்.

மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும். தவிர கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும். மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். (அல்குர்ஆன் 65:4)

சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் 'பனூ ஆமிர் இப்னு லுஅய்' குலத்தைச் சேர்ந்த ஸஅத் இப்னு கவ்லா(ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். ஸஅத் (ரலி) பத்ருப்போரில் பங்கெடுத்தவராவார். 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது ஸஅத் (ரலி) இறந்துவிட்டார்கள். அப்போது 'சுபைஆ' கர்ப்பமுற்றிருந்தார். ஸஅத் அவர்கள் இறந்து நீண்ட நாள்கள் ஆகியிருக்கவில்லை. (அதற்குள்) சுபைஆ பிரசவித்துவிட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப் போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமானபோது, பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான 'அபுஸ் ஸனாபில் இப்னு பஅக்கக்(ரலி) சுபைஆ அவர்களிடம் வந்து, 'திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை காண்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய 'இத்தா' காலமாகிய) நான்கு மாதம் பத்து நாள்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு) மணம் புரிந்து கொள்ள முடியாது" என்று கூறினார்கள். சுபைஆ (ரலி) கூறினார்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் என்னுடைய உடையை உடுத்திக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, 'நீ பிரசவித்துவிட்டபோதே (மணந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்து கொள்' என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள். அறிவிப்பவர் உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) (நூல்கள் - புகாரி 3991, 4532, 4909, 4910, 5318-5320. முஸ்லிம் 2973)

கணவன் மரணித்து விட்டால், மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் இத்தா இருந்தாக வேண்டும். இளம் பெண்களிலிருந்து மூதாட்டிகள் வரை எல்லாப் பெண்களும் இதைக் கடைபிடித்தாக வேண்டும்.

இத்தா காலம் கழியும் வரை அலங்காரம் செய்வதைத் தவிர்த்து, மறுமணம் செய்யக்கூடாது என்பதே இத்தாவின் நிபந்தனை! மற்றபடி தேவைக்காக வெளியில் செல்வது, நாடு விட்டு நாடு செல்வதற்கும் மார்க்க ரீதியாக எவ்விதத் தடையும் இல்லை!

(அல்லாஹ் மிக அறிந்தவன்)  


2010/4/12 Abu Sohail <jhussa...@gmail.com>

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

To unsubscribe, reply using "remove me" as the subject.

Reply all
Reply to author
Forward
0 new messages