அத்தயாதிற்கு பின்பு ஓதுவதற்கு ஆதாரம் இருகிறதா?

648 views
Skip to first unread message

Mohamed Aslam

unread,
Nov 18, 2013, 1:22:12 AM11/18/13
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹும்ம இன்னி அவுதுபிக்க மின் அசாபில் கப்ரி. வ அவுதுபிக்க மின் பித்னதில் மஸி தஜ்ஜால், அவுதுபிக்க மின் பித்னதில் மஹ்ய வல் மமாத்,
அல்லாஹும்ம இன்னி அவுதுபிக்க மினல் மஹ்சமி வல் மக்ரம்.

மேற்கண்ட இந்த துவா அத்தயாதிற்கு பின்பு ஓதுவதற்கு ஆதாரம் இருகிறதா?

--
 With Regards,

A.M.Aslam

muslim

unread,
Nov 19, 2013, 12:42:42 AM11/19/13
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

தொழுகை நிறைவுபெறும் இறுதி அமர்வை அத்தஹிய்யாத்து அமர்வு என்று சொல்லுவோம். இந்த இறுதி அமர்வில் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அத்தஹிய்யாத்து ஓதி, பின்னர் நபியவர்களின் மீது ஸலாவாத்துக் கூறி, பின்னர் நரக வேதனை, கப்ர் வேதனை, மஸீஹி தஜ்ஜாலின் தீங்கு, வாழும்போதும் மரணிக்கும்போதும் ஏற்படும் குழுப்பத்திலிருந்தும், பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாவல் கோரவேண்டும்.

பிறகு ஸலாம் கூறினால் தொழுகை நிறைவுபெற்று தொழுகையின் விலக்குகளிலிருந்து விடுபெற்று விடுவோம்.

''அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மின் அதாபி ஜஹன்னம்...'' என்கிற துஆவை தொழுகையில் இறுதி அமர்வில் பிரர்த்திக்க வேண்டும். தொழுகையை முடித்து, மற்ற நேரங்களில் இப்பிரார்த்தனையைக் கோரலாமா? என்று கேட்டால், அல்லாஹ்விடம் நம் தேவைகளைக் கேட்பதுவே பிரார்த்தனையாகும். அதனால் எல்லா நேரத்திலும் துஆச் செய்யலாம்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்) 


 
2013/11/18 Mohamed Aslam <indiaa...@gmail.com>

--
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "நமக்குள் இஸ்லாம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to fromgn+un...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

MOHAMHED ITHREES

unread,
Nov 19, 2013, 11:08:06 AM11/19/13
to fro...@googlegroups.com, ithrees...@yahoo.com

Mohamed Aslam

unread,
Nov 27, 2013, 1:58:47 AM11/27/13
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹும்ம இன்னி அவுதுபிக்க மின் அசாபில் கப்ரி. வ அவுதுபிக்க மின் பித்னதில் மஸி தஜ்ஜால், அவுதுபிக்க மின் பித்னதில் மஹ்ய வல் மமாத்,
அல்லாஹும்ம இன்னி அவுதுபிக்க மினல் மஹ்சமி வல் மக்ரம்.

இந்த துவா ஆதாரமாநதா? விளக்கவும்


2013/11/19 MOHAMHED ITHREES <haati...@gmail.com>



--
Thanks With Regards,

A.M.Aslam

muslim

unread,
Nov 29, 2013, 1:29:42 AM11/29/13
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்.

உங்களில் ஒருவர் (தொழுகையில்) அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும்போது நான்கு விஷயங்களிலிருந்து
அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். (அவை) ''அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபி ஜஹன்னம, வ மின் அதாபில் கப்ரி, வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, வ மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர் - அபூஹுரைரா (ரலி) நூல்கள் - புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபீதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ)
 

(பொருள்: இறைவா, உன்னிடம் நான் நரகத்தின் வேதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும், மஸீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் "அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபில் கப்றி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜாலி, வ அஊது பிக மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் மஃஸமி வல்மஃக்ரம்"

என்று பிரார்த்திப்பார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ''தாங்கள் கடன்படுவதிலிருந்து (இவ்வளவு) அதிகமாகப் பாதுகாப்புக் கோரக் காரணம் என்ன?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான், வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர் - ஆயிஷா (ரலி) நூல்கள் - புகாரி 832, முஸ்லிம் 1031, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்)

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்)

தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் ஓதப்படும் மேற்கண்ட பிரார்த்தனைகள் ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள். இரு விதமான பிராத்தனைகளில் எதையும் ஓதிக் கொள்ளலாம்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)



2013/11/27 Mohamed Aslam <indiaa...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages