|
இந்த தொடுப்பில் சென்று பாருங்கள். இன்ஷா அல்லாஹ் உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். --- On Wed, 4/15/09, K. SAMSUDEEN <samsuden....@gmail.com> wrote: |
கேள்விகள்:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹுமத்துல்லாஹி வபரக்காத்துஹு
1.பர்ழான தொழுகையில் ஜமாத்தை தவறவிட்டு விட்டால் தனியாக தொழும்பொழுது சஜ்தாவில் நீண்ட நேரம் துஆ கேட்கலாமா?
2.எந்த தொழுகையையும் தொழுது முடித்து விட்டு பிறகு துஆ கேட்பதற்காக தக்பீர் சொல்லாமல் சஜ்தாவில் நீண்ட நேரம் துஆ கேட்கலாமா?
குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும்.
ஜஸாக்கக்குமுல்லாஹ் ஹைரன்.
சம்சுத்தீன்.
பதில்கள்:-
வ அலைக்கும் ஸலாம் வரஹ்
அன்பின் சகோதரர் சம்சுத்தீன்
எல்லாம் வல்ல இறைவனுக்கு முற்றாக பணிவதைக் குறிப்படுவதே ஸஜ்தா எனும் சிரவணக்கமாகும். உயர்ந்தோனுக்கு நிகராக எவருமில்லை என்று உளமாற ஒப்புக்கொண்டு தமது நெற்றியை நிலத்தில் வைத்து இறைவா! இதோ உனக்கு முழுமையாகக் கட்டுப்படுகிறேன் என்று செயல் வடிவம் கொடுப்பதே ஸஜ்தாவாகும்.
பல அலுவலுக்கும் செல்லவிருக்கும் பின்பற்றித் தொழுபவர்களைக் கருத்தில் கொண்டு இமாம் கூட்டுத் தொழகையை நீட்டித் தொழவைக்க வேண்டாம் என்று தடை உள்ளது. தனித்துத் தொழுபவர் தமது விருப்பம் போல் தொழுகையை நீட்டிக்கொள்ளலாம். அதில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவர் ஸஜ்தா நிலையில் நேரம் எடுத்துக்கொள்ளலாம்.
நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் ஒரு ஸஜ்தாவை உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் நீட்டுவார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். முஅத்தின் (ஃபஜர்) தொழுகைக்கு (அழைக்க) அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்திருப்பார்கள். என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம்பெற்றுள்ளது. என்று நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கும் செய்தி முஸ்லிம் அபூதாவூத் நஸயீ நூல்களில் இடம்பெற்றுள்ளது.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஓர் அடியான் தன்னுடைய இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலை ஸஜ்தாவில் இருக்கும் போதே ஆகும். ஆகையால் அந்நிலையில் அல்லாஹ்விடம் அதிகமாக துவா செய்து தமது தேவைகளை கேளுங்கள். என்று நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கும் செய்தி முஸ்லிம் அபூதாவூத் நஸயீ நூல்களில் இடம்பெற்றுள்ளது.
ஸஜ்தா நிலையே இறைவனோடு நெருக்கமான நிலையாகும். ஸஜ்தா நிலையே தமது தேவைகளை அதிகமாக இறைவனிடம் கேட்கும் சரியான நிலையாாகும் என்று நபிவழிச் செய்திகள் ஆர்வமூட்டுகின்றன. தனித்து தொழும் பொழுது ஸஜ்தாவில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு நீங்கள் விரும்பிதைக்கேட்டு துஆச் செய்யலாம்.
தொழுகைக்கு வெளியேயும் ஸஜ்தா செய்து இறைவனைப் புகழ்ந்து கண்ணியப்படுத்தலாம். நபி முஸா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்றபோது மூஸா (அலை) அவர்களுக்கு எதிராக, ஃபிர்அவ்னின் சார்பாக சூனியக்காரர்கள் களமிறங்கினர். பின்னர் அல்லாஹ்வின் கட்டளையால் மூஸா (அலை) அவர்கள் வென்றபோது
சூனியக்காரர்கள் (இறைவனுக்கு) ஸஜ்தாச் செய்தனர். மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நம்பிக்கை கொண்டோம் என்றனர். (அல்குர்ஆன் 26:46-48)
நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள். அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 32:15)
(அதற்கு தாவூது) 'உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்சயமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார். நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர். ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர, இத்தகையவர் சிலரே' என்று கூறினார். இதற்குள் 'நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்' என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக் குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார். (அல்குர்ஆன் 38:24)
தொழுகைக்கு வெளியிலும் ஸஜ்தா எனும் சிரவணக்கத்தில் விழுந்து உயர்ந்தோன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவும் மன்னிப்புக் கோரவும் மேற்கண்ட இறைவசனங்கள் ஆதாரமாக உள்ளன.
எழுதியவற்றில் சந்தேகமிருந்தால் எழுதுங்கள்
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
குறிப்பு:- அன்பின் குழும சகோதர சகோதரிகளுக்கு குழுமத்தில் கேட்கப்படும் மார்க்க சம்பந்தமான சந்தேகங்கள் கவனத்தில் கொள்ளப்படும். ஒருபோதும் புறக்கணிக்கப்படாது. பதில் எழுத சற்றுத் தாமதம் ஆகலாம் பொறுத்துக்கொள்ளுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்
நபி(ஸல்) அவர்கள் பர்ளு தொழுகையில் ஸஜ்தாவில் ஸீப்ஹான ரப்பியல் அ.'.லா,ஸீப்ஹான ரப்பியல் அ.'.லா,ஸீப்ஹான ரப்பியல் அ.'.லா, என கூறக்கூடியவர்களாக இருந்தார்கள் என ஹீதைபா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: நஸயி
பர்ளு தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் ஸீப்ஹான ரப்பியல் அ.'.லா என்ற துஆவை ஒதினார்கள்.. அதனால் நாமும் அதன்படியே ஒதுவது தான் சரியானது..
இதை தவிர நபி(ஸல்) ஸீப்ஹீ தொழுகையில் குனூத்து என்ற துஆவை ஒதினார்கள் என்று அபூஹீரைரா(ரலி) வாய்லாக அறிவிப்பு வருகிறது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேலும் ஒரு ஹதீஸ் கீழ் வருமாறு:
ரஸுலுல்லாஹ் அவர்கள் ஒருவருக்கு சார்பாகவோ அல்லது எதிராகவோ பிரார்த்தனை செய்ய விரும்பினால் ருகூஉக்குப் பின்னால் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்.(நூல்: அஹ்மத், புகாரி)
உங்களில் ஒருவர் ஸுஜுதில் இருக்கும் நிலையில்தான், தனது இறைவனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். எனவே, அதில் பிரார்த்தனைகளை அதிகரித்துக் கொள்ளுங்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்:-முஸ்லிம். நபியவர்கள் ஸுஜுதில் ஓதிய துஆக்கள், பல ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. நாமும் அவற்றை ஓதுவதே சாலச் சிறந்ததாகும்
நபி(ஸல்) அவர்கள் பர்ளு அல்லாத தொழுகையில் தொழும்போது அல்லாஹீம்ம லக ஸஜத்து, வபிக ஆமந்து, வலக அஸ்லம்த்து,வ அன் த்த ரப்பீ ஸஜத வஜ்ஹீ லில்லதீ KH கலக்கஹீ வஸவ்வரஹீ, வ ஷக்க வஸவ்வஹீ,வஷக்க ஸம் அஹீ வபஸரஹீ தவாரக்கல்லாஹீ அஹ்ஸனுல் காலிக்கீன் என்று ஸஜ்தாவில் ஓதகூடியவர்களாக இருந்தார்கள் என ஜாபர் பின் அப்துல்லா(ரலி) மற்றும் அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: நஸயி
நபி(ஸல்) அவர்களை ஓர் இரவில் படுக்கையில் காணது தேடினேன், அவர்கள் தங்களது ,மற்ற மனைவிரிடத்தில் சென்றிருப்பார்களோ என் எண்ணி தடவி பார்க்க ஆரம்பித்தேன் அப்போது ருகூஉவிலும் மற்றும் ஸீஜீதில் இருந்தவர்களாக ஸீப்ஹான கல்லாஹீம்ம வபிஹம்திக்க லாயிலாஹ இல்லா அன்த்த என்ற துஆவை ஒதி கொண்டிருந்தார்கள் என ஆயிசா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நூல்: நஸயி
அல்லாஹீம்மஜ்அல் Fபீ கல்பீ நூரன், வஜ்அல் Fபீ ஸம்ஈ நூரன், வஜ்அல் Fபீ பஸரி நூரன், வஜ்அல் மின் தஹத்தி நூரன், வஜ் அல்மின் .'.பவ்க்கீ நூரன், வஅன்யமீனீ நூரன், வஅன் யஸாரி நூரன், வஜ் அல் அமாமி நூரன் வஜ்அல் KH கல்.'.பீ நூரன், வஅ.'.ளிம்லீ நூரன் என்ற தூஆவை தமது சிறிய தாயார் வீட்டில் தங்கியிருந்த போது இரவு தொழுகையில் ஸஜ்தாவில் நபி(ஸல்) அவர்கள் ஓதினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். நூல் முஸ்லிம், நஸயி.
ஓர் இரவில் நபி(ஸல்) அவர்கள் காணவில்லை, அவர்களை ஸஜ்தா செய்த நிலையில் , அவர்கள் இரண்டு பாதங்களும் கிபுலாவின் திசையில் இருக்க கண்ட போது அஊது பிரிளாக்க மின் ஸகத்திக. வஅஊது பி முஆபாத்திக்க மின் உகூபத்திக, வஅஊதுபிக்க மின்க்க, லா உஹ்ஸீ தனா அன் அலைக்க. அன்த்த கமா அத்னைத்த அலா நப்ஸிக்க என அயிசா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் முஸ்லிம், இப்னு அபீஷைபா, நஸயி
நபியவர்கள் தமக்கு மகிழ்வூட்டும் ஒரு நிகழ்ச்சி இடம் பெற்றாலும் ஒரு சுப செய்தி கூறப்பெற்றாலும் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பான் வேண்டி ஸுஜுதில் விழுபவர்களாய் இருந்தார்கள் என அபூபக்கர் (ரலி) அறிவிக்கிறார். நூல் : அபூதாவூத், இப்னுமாஜா , திர்மிதி
'மக்களே! நபித்துவத்தின் நற்செய்திகளிலிருந்து ஒரு மஸ்லிம் காண்கின்ற அல்லது அவருக்குக் காட்டப்படுகின்ற நல்ல (உண்மையான) கனவுகளைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை. அறிந்து கொள்ளுங்கள், ருகூவு அல்லது ஸஜ்தாச் செய்துகொண்டிருக்கையில் குர்ஆன் (வசங்களை) ஓத வேண்டாமென்று நான் தடை விதிக்கப்பெற்றுள்ளளேன். ருகூவில் வலிவும் மாண்புமிகு இறைவனை மகிமைப் படுத்துங்கள். ஸஜ்தாவில் முனைந்து பிராத்தியுங்கள். உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். - முஸ்லிம் 824
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ سُحَيْمٍ عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ
كَشَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السِّتَارَةَ وَالنَّاسُ صُفُوفٌ خَلْفَ أَبِي بَكْرٍ فَقَالَ أَيُّهَا النَّاسُ إِنَّهُ لَمْ يَبْقَ مِنْ مُبَشِّرَاتِ النُّبُوَّةِ إِلَّا الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الْمُسْلِمُ أَوْ تُرَى لَهُ أَلَا وَإِنِّي نُهِيتُ أَنْ أَقْرَأَ الْقُرْآنَ رَاكِعًا أَوْ سَاجِدًا فَأَمَّا الرُّكُوعُ فَعَظِّمُوا فِيهِ الرَّبَّ عَزَّ وَجَلَّ وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ فَقَمِنٌ أَنْ يُسْتَجَابَ لَكُمْ
''ஓர் அடியார் ஸஜ்தாவிலிருக்கும்போது தன் இறைவனிடம் மிக நெருக்கமாக இருக்கிறார். எனவே (ஸஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - முஸ்லிம் 832
و حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ وَعَمْرُو بْنُ سَوَّادٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ أَنَّهُ سَمِعَ أَبَا صَالِحٍ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ فَأَكْثِرُوا الدُّعَاءَ
தொழுகையில் ஸஜ்தா நிலையில் பல்வேறு பிரார்த்தனைகளை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றையும் ஓதிக்கொள்ளலாம். மேற்கண்ட நபிமொழிகளில் ''உங்கள் பிரார்த்தனை'' என்றும், ''அதிகமாகப் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் நமக்கென விரும்பியதைக் கேட்கலாம் என்றும் விளங்க முடிகிறது.
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
/அஸ்ஸலாமு அலைக்கும் வரஹுமத்துல்லாஹி வபரக்காத்துஹு
சகோதரர்களே, நான் கேட்ட சந்தேகத்திற்கு அழகான முறையில் பதில் தந்துள்ளீர்கள். அல்ஹம்துலில்லாஹ்! ஆனால் இன்னும் முழுமையான பதில் வரவில்லை என நினக்கிறேன். ஏனென்றால் நான் கேட்ட 2-வது கேள்வியில்,
2.எந்த தொழுகையையும் தொழுது முடித்து விட்டு பிறகு துஆ கேட்பதற்காக தக்பீர் சொல்லாமல் சஜ்தாவில் நீன்ட நேரம் துஆ கேட்கலாமா? என்று கேட்டிருந்தேன்.
நான் எதற்காக இந்த கேள்வியை கேட்கின்றேன் என்றால் சில பேர் தக்பீர் சொல்லி தான் ஸஜ்தா செய்ய வேண்டும் என்கின்றனர். எனவே இன்னும் சரியான, தெளிவான, ஆழமான பதில் வரும் என எதிர்பார்க்கிறேன். இன்ஷா அல்லாஹ் என்னுடைய சந்தேகத்தையும், என்னிடம் கேட்டவர்களின் சந்தேகத்தையும் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.// - சம்சுத்தீன்
வ அலைக்கும் ஸலாம் வரஹ்,
அன்பின் சகோதரர் சம்சுத்தீன்,
தொழுகைக்கு வெளியே ஸஜ்தா செய்ய அல்குர்ஆன் வசனங்களை சான்றாக வைத்திருந்தோம். ''அல்லாஹு அக்பர்'' என்று கூறியே ஸஜ்தா செய்ய வேண்டும் என்று சான்றுகள் எதுவும் இல்லை - இருப்பதாக நாம் அறியவில்லை. குர்ஆனில் ஸஜ்தா வசனங்களை ஓதும்போது செய்யும் ஸஜ்தாவுக்கும் ''அல்லாஹு அக்பர்'' என்று கூற வேண்டும் என்று அறிவிப்புகளில் காணமுடியவில்லை.
எனவே,
//சில பேர் தக்பீர் சொல்லி தான் ஸஜ்தா செய்ய வேண்டும் என்கின்றனர்.// - சம்சுத்தீன்.
தொழுகைக்கு வெளியே ஸஜ்தா செய்தால் தக்பீர் சொல்லியே ஸஜ்தா செய்ய வேண்டும் எனக் கூறுபவர்களிடம் அதற்கான நபிமொழி ஆதாரத்தைக் கேளுங்கள். கிடைத்தால் குழுமத்தில் பதிவுசெய்யுங்கள்.