''அல்லாஹ்வின் தூதரே! நான் தலைமுடியை இறுக்கமாகப் பின்னிக்கெள்ளும் பெண் ஆவேன். கடமையான குளிப்பின்போது பின்னலை அவிழ்த்துவிட வேண்டுமா?'' என்று கேட்டேன் (நபிமொழிச் சுருக்கம் முஸ்லிம் 549. திர்மிதீ 98)
*****************
உடனே நாங்கள் (புறப்பட்டுச்) சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தன. நாங்கள் அந்த 'ரவ்ளத்து காக்' எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு ஒட்டகச் சிவிகையில் இருந்த அந்தப் பெண்ணைக் கண்டோம். (அவளிடம்) நாங்கள், 'கடிதத்தை வெளியே எடு!' என்று சொன்னோம். அதற்கு அவள், 'என்னிடம் கடிதம் ஏதுமில்லை' என்று பதிலளித்தாள். நாங்கள், 'ஒன்று, நீயாகக் கடிதத்தை எடுத்து(க் கொடுத்து)விடு! இல்லையேல், (உன்னைச் சோதனையிடுவதற்காக உன்னுடைய) ஆடையை நீ களைய வேண்டியிருக்கும்' என்று சொன்னோம். உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றோம். (நபிமொழிச் சுருக்கம் புகாரி 4890)
************************
அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள், 'அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்' எனக் கூறினார்கள். முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தங்களின் கீழாடையைத் தந்து, 'இதை அவரின் உடலில் சுற்றுங்கள்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பில், 'ஒற்றைப் படையாக (த் தண்ணீர் ஊற்றி)க் குறிப்பாட்டுங்கள். மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு முறை (தண்ணீர் ஊற்றுங்கள்) அவரின் வலப்புறத்திலிருந்தும் உளூச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும், 'நாங்கள் அவர்களுக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னினோம்" என உம்மு அதிய்யா(ரலி) கூறினார் என்றும் உள்ளது என அய்யூப் குறிப்பிடுகிறார். அறிவிப்பவர் உம்மு அதிய்யா (ரலி) (நூல்கள் - புகாரி 1254. இதன் கருத்து முஸ்லிம் 1712)
*********************
சடை பின்னிக்கொள்வது பற்றி கேள்வி இல்லை என்றாலும் நபி (ஸல்) அவர்கள் காலத்துப் பெண்கள் தலை முடியைப் பின்னி சடையிட்டிருந்தனர். என்பதற்கு எடுத்துக் காட்டாக இந்த ஆதாரங்கள்.
பெண்கள் கூந்தலை தமது வசதிப்படி பின்னலிட்டு சடையை மடித்துக்கொள்ளலாம். இதற்கு மார்க்க ரீதியாக எந்தத் தடையும் இல்லை.
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en