விவாகரத்து பெற்ற பிறகு அந்த பிரிந்த தம்பதியினர் மீண்டும் இணைந்து வாழா இஸ்லாமிய சட்டதிட்டத்தின்படி வழிகள் உள்ளனவா????

323 views
Skip to first unread message

MD.SAHURUDEEN AKBER

unread,
May 8, 2010, 4:04:26 AM5/8/10
to Namkkul islam


---------- Forwarded message ----------
From: MD.SAHURUDEEN AKBER <akbe...@gmail.com>
Date: May 6, 2010 11:06 AM
Subject:
To: Namkkul islam <fro...@googlegroups.com>

                                                                                                                     பிஸ்மில்லஹீர்  ரஹ்மானிர் ரஹீம்                          

 

  அன்பு சகோதரர்களுக்கு 

                            அஸ்ஸலாமுஅலைக்கும்

 

 

                             ஒரு தம்பதியினர் சில பிரச்சனைன் காரணமாக தங்கள் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டு  பிரிந்து வாழ்கிறார்கள் சில ஆண்டுகளுக்குப்பின் தங்கள் செய்த தவறை (விவாகரத்தை) உணர்ந்தும்   புரிந்தும்  பிள்ளைகளின் வருங்கால வாழ்க்கையை நினைத்தும் அந்த பிரிந்த தம்பதியினர் மீண்டும் தாங்கள் இணைந்து வாழா விரும்புகிறார்கள் இப்படி உள்ள சுழலில் அந்த இருவரும்  மீண்டும் ஒன்றாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இஸ்லாமிய  சட்டதிட்டத்தின்படி  வழிகள் உள்ளனவா????

இல்லை காலம் முழுவதும் பிரிந்துதான் வாழவேண்டுமா?????     

  குர்ரான் மற்றும் ஹதீத் அடிப்படைல் விளக்கம் தரவும் 

 

 

 

 

 

   குறிப்பு :-

       
                            ௧) விவாகரத்து பெற்ற பிறகு அந்த ஆண் வேறு ஒரு திருமணம் செய்து கொள்கிறான் ஆனால் அந்தப்பெண் வேறு மனம் செய்து கொள்ளவில்லை. அந்த பெண் தன் தவறை உணர்ந்து மீண்டும் தன் விவாகரத்து செய்த அந்த ஆண்மகனை  திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள் இப்படி  செய்து கொள்ள வழிமுறைகள் உள்ளத???

 

 

       ௨) அல்லது இருவருமே திருமணம் செய்து கொள்ளைவில்லை இப்படிப்பட்ட நிலையில் இந்த இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள மார்க்க முறைகள் உள்ளதா???

 

        ௩) குழந்தைகள் தன் தாய் மற்றும்   தந்தை உடன் சேர்ந்து வாழ விருமபுகிறார்கள் ஆகவேதான் இந்த வினாவை உங்கள் முன்

வைக்கிறேன். குழந்தைகள் முறையே ஆண் மற்றும் பெண் (௯ வயது ஆண் ௫ வயது பெண்).

 

 

        ௪) இல்லை அல்லாஹ்வால் வெறுக்கப்பட்ட காரியமான விவாகரத்தை செய்துவிட்ட காரணத்தினால் நான் மேல்  கோரிய முறைய ,, வழிகளில் இந்த இருவரும் மீண்டும் இணைந்து வாழவே முடியாத??? வாய்ப்புகளே கிடையாதா??? நல்ல ஒரு தெளிவான  விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.

 

 

          

        மனிதன் தவறுகள் செயக்குடியவனாகவே இருக்கிறான் அவ்வாறே இந்த தம்பதினரும் தவறு செய்துவிட்டார்கள். அல்லாஹ் அவர்களையும் நம்மையும் தவறான காரியத்தில் இருந்தும் பாவ காரியத்தில் இருந்தும் காப்பாற்றுவானாக ஆமின்.......

 

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

muslim

unread,
May 8, 2010, 11:40:05 PM5/8/10
to fro...@googlegroups.com

கேள்வி:-

பிஸ்மில்லஹீர் ரஹ்மானிர் ரஹீம்

அன்பு சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமுஅலைக்கும்

ஒரு தம்பதியினர் சில பிரச்சனைன் காரணமாக தங்கள் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டு பிரிந்து வாழ்கிறார்கள் சில ஆண்டுகளுக்குப்பின் தங்கள் செய்த தவறை (விவாகரத்தை) உணர்ந்தும் புரிந்தும் பிள்ளைகளின் வருங்கால வாழ்க்கையை நினைத்தும் அந்த பிரிந்த தம்பதியினர் மீண்டும் தாங்கள் இணைந்து வாழா விரும்புகிறார்கள் இப்படி உள்ள சுழலில் அந்த இருவரும் மீண்டும் ஒன்றாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இஸ்லாமிய சட்டதிட்டத்தின்படி வழிகள் உள்ளனவா???? இல்லை காலம் முழுவதும் பிரிந்துதான் வாழவேண்டுமா????? குரான் மற்றும் ஹதீத் அடிப்படையில் விளக்கம் தரவும்.

- MD.SAHURUDEEN AKBER

பதில்:-

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
 

ஆனால், அவர்கள் (தலாக்) விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு, கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு. ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும். ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 2:227, 228)

இஸ்லாமிய வழிகாட்டலின்படி, கணவன் மனைவியரிடையே பிரச்சனை ஏற்பட்டு, தம்பதியர் பிரிந்துவிடும் முடிவுடன் தலாக் - விவாகரத்து செய்துகொண்டு இத்தா - காத்திருப்புத் தவணை முடிந்த பின்னர் தம்பதியர் பிரிந்து விடுவர். இத்தா தவணைக் காலம் முடிந்து விட்டால் தம்பதியராய் வாழ்ந்தவர்கள் ஒருவர் மற்றவர் விருப்பத்தில் வற்புறுத்தல் போன்ற எந்தக் குறுக்கீடும் செய்தல் கூடாது. ஆனால் இவ்விருவரும் மனமொப்பி மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் இத்தாக் காலத்திற்குள் சேர்ந்துகொள்ளலாம். இத்தா தவணை முடிந்த பின்னரும் அது நீண்ட இடைவெளி காலமாக இருந்தாலும் மீண்டும் இவர்கள் முன்புபோல் தம்பதியராய் சேர்ந்து வாழலாம். அதற்கான நிபந்தனை: இத்தா தவணைக் காலம் முடிந்து விட்டதால் இவர்கள் மீண்டும் மண ஒப்பந்தம் செய்தல் வேண்டும். இதற்கான கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கவில்லை. பெண் மறுமணம் முடிக்காமல் இருக்கும் காலம் வரை இவர்கள் மறுமணம் செய்து மீண்டும் சேர்ந்து வாழ்வதில் எவ்விதத் தடையும் இல்லை!

இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும். (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:232)

அந்த (திருக்குர்ஆன் 02:232 வது) வசனம் என்னைக் குறித்தே அருளப்பட்டது: என்னுடைய ஒரு சகோதரி ஒருவருக்கு நான் மணமுடித்துக் கொடுத்திருந்தேன். அவளை அவர் விவாக விலக்குச் செய்துவிட்டார். அவளுடைய 'இத்தா'க் காலத் தவணை முடிந்தபோது, அவர் அவளை மீண்டும் பெண் கேட்டு வந்தார். அப்போது நான் அவரிடம், 'நான் (என் சகோதரியை) உங்களுக்கு மணமுடித்துக் கொடுத்து மஞ்சத்திலே உங்களை இருக்கச் செய்து கண்ணியப்படுத்தினேன். ஆனால், அவளை நீங்கள் விவாகரத்துச் செய்துவிட்டு, இப்போது (மீண்டும்) அவளை பெண் கேட்டு வந்துள்ளீர்கள். இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! இனி ஒருபோதும் அவள் உங்களிடம் திரும்பமாட்டாள்'' என்று சொன்னேன். அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார். என் சகோதரி அவரிடமே திரும்பச் சென்று வாழ விரும்பினாள். அப்போதுதான் அல்லாஹ், '...அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 02:232 வது) வசனத்தை அருளினான். எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இப்போது நான் (அல்லாஹ் கூறியபடியே) செய்கிறேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறிவிட்டு, மீண்டும் அவருக்கே என் சகோதரியை மணமுடித்து வைத்தேன். அறிவிப்பவர் மஅகில் இப்னு யஸார் (ரலி) (நூல் - புகாரி 5130)

இத்தாக் காலம் முடிந்த பின்னரும் பிரிந்த தம்பதியர் இணைய விரும்பினால், மறுமணம் முடித்து மீண்டும் சேர்ந்து வாழலாம். என குர்ஆன் 2:232 வசனத்திலிருந்து விளங்க முடிகிறது. இதை நடைமுறைப்படுத்திய நபிவழி அறிவிப்புகளும் உறுதிப்படுத்துகின்றன. இந்த சட்டம் முதலிரண்டு தலாக் - விவாகரத்துக்கு மட்டுமேப் பொருந்தும். மூன்றாவது முறை மனைவியைத் தலாக் சொல்லிவிட்டால் அதன் பின்னர் பிரிந்த தம்பதியர் விரும்பினாலும் மறுமணம் செய்துகொள்ள முடியாது என சட்டத்தை இஸ்லாம் மாற்றியமைத்து விடுகின்றது.

(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள் முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம். அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம். அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர, நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும். ஆகையால் அவற்றை மீறாதீர்கள். எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.

மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும். இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். (அல்குர்ஆன் 2:229, 230)

இங்கு கேள்வியில் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு மேல்கண்ட இறைமறை வசனங்களிலும், நபிவழி அறிவிப்பிலும் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. விவாகரத்துச் செய்து பிரிந்த தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் திருமணம் முடித்துக்கொண்டு சேர்ந்து வாழலாம். இவ்வாறு சேர்ந்து வாழ்வதற்கான கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை! மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான காரணிகள் எதுவும் தேவையில்லை! இருவரும் விரும்பினால் மண ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். இதை யாரும் தடுக்க முடியாது, தடுத்தல் கூடாது!

இந்த மறுமணம் ஒப்பந்தம் செய்தல் முதலிரண்டு முறை தலாக்கிற்கு மட்டுமேப் பொருந்தும். மூன்றாவது முறை தலாக் சொல்லிவிட்டால் தலாக் சொன்ன நிமிடத்திலிருந்து விவாகரத்து அமுலுக்கு வந்துவிடும். அதன் பின்னர் அந்தப் பெண் வேறொருவரை மணந்து அவருடன் வாழ்ந்து பின்னர் அவர் தலாக் சொல்லி, பின்னர் இத்தா தவணை முடிந்த பின்னரே முதல் கணவரை மணமுடித்துக் கொள்ள முடியும். இதுவே இறைவனின் வரம்புகள்!

எழுதியவற்றில் மேலும் சந்தேகம் இருப்பின் எழுதுங்கள்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்.)    



2010/5/8 MD.SAHURUDEEN AKBER <akbe...@gmail.com>

MD.SAHURUDEEN AKBER

unread,
May 9, 2010, 4:18:33 AM5/9/10
to fro...@googlegroups.com
    

                                             சகோதரர் அளித்த பதில் மிகவும் நன்று,ஆனால் ஒரு சிறு  சந்தேகம்

 

 

  அந்த ஆண் தன் மனைவி தன்னை பிரிந்து சென்ற ஒரு வருடமாக அவளை தன்னுடன் அழைத்துக்கொள்ள பல முறை முயர்ச்சி செய்தும் அந்த பெண்ணின் தாயின் தவறான அறிவுரையாலும்   வர்ப்புருத்துதலின் காரணமாகவும்  அவள்

திரும்ப வர மறுத்து விட்டால் பிறகு வேறு வழி இல்லாமல் அந்த ஆண் ஜமாத்திடம் அந்த பெண்ணை விவாகரத்து செய்வதாக கூர

ஜமாஅத் அந்த ஆணை நீ இந்த பெண்ணுக்கு இவ்வளவு பணம் தரவேண்டும் குழந்தைகள் பராமரிப்பர்க்கு நீ செய்து கொள்ளவேண்டும் என்று கூரி விட்டார்கள் (இதற்கு இடையில் ஜமாஅத் பலமுறை சேர்ந்து வாழாவைக்க முயர்ச்சி செய்தார்கள் அந்த பெண்ணின் தாயாரினால் எல்லா முயற்ச்சிகளும் பலன் அழிக்கவில்லை) அந்த ஆண் வேறு திருமணம் செய்து  கொண்டான் இரண்டு ஆண்டுகள் கழித்து 

அந்த பெண் நான் என் தாயின் காரணமாக தவறு செய்து விட்டேன். நான் என் தவறை உணர்ந்து விட்டேன் நான் மீண்டும் என்னை விவாகரத்து செய்த அந்த 

ஆண்மகனையே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்று  கூருகிறாள் இப்போது எவ்வாறு நடந்து   கொள்வது ?????? 

 

  

  சந்தேகங்கள்

 

       ௧) அந்த ஆண் கெடுத்தது முதல்தலாக்க அல்லது முழுவதும் முடிந்துவிட்டத?

           (கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த ஆண் மட்றும் பெண் சந்தித்துக்கொள்ளவும் இல்லை பேசிக்கொள்ளவும் இல்லை)

        ௨)  இப்போது அந்த பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மீண்டும் சேர்ந்து வாழா விரும்புகிறாள் அந்த ஆணும் தன்

               குழந்தைகளுக்காக இணக்கம் குருகிறான் மணந்துகொள்ள மார்க்கத்தில் இடம் உள்ளத???

         ௩) சில மார்க்க அறிக்கர்கள் சேல்லுவது இந்த தம்பதியினர் முறைப்படி விவாகரத்து பெட்று கொண்டதால் அந்த பிரிந்த தம்பதியனர்

                மீண்டும் இணைந்து வாழா முடியாது????

         ௪) அப்படி சேர்ந்து வாழ்வது என்றால் அந்த பெண்ணை வேறு ஒரு ஆணுக்கு திருமணம் செய்து விட்டு பிறகு அந்த ஆணிடம் இருந்து   விவாகரத்து பெற்ற பின்புதான் அந்த முதலாவது விவாகரத்து செய்த ஆணை திருமணம் செய்து கொள்ள முடியும் என்கிறார்கள் அது எப்படி???

        ௫) அவ்வாறு திருமணம் செய்வதருக்கு தற்காலியமாக அந்தபென்னிர்க்கு வேறு ஒரு ஆணை திருமணம் செய்து வைத்து பின்பு அவர்களுக்கு விவாகரத்து செய்துவிட்டு நான்கு மாதமும் பத்து நாளும் கழித்து மீண்டும் அந்த முதல் ஆணை திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறார்கள் இது மார்க்க அடிப்படைள் சாத்தியம்மா????

         ௬)  இல்லை அந்த இருவரும் மீண்டும் திருமணம் செய்துகொள்ள முடியாத???

 

 

முறையான விளக்கம் கிடைக்கும் பச்சத்தில் அந்த இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் வளமாக அமையும் இரண்டு தவறு செய்த உள்ளங்கள் தங்களை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்ப்கவும் அமையும் ஆகவே நல்ல ஒரு தெளிவான வெளக்கம் தருமாறு வினவுகிறேன்.

MD.SAHURUDEEN AKBER

unread,
May 11, 2010, 1:04:57 AM5/11/10
to Namkkul islam

muslim

unread,
May 11, 2010, 9:15:34 AM5/11/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்புச் சகோதரர் MD.SAHURUDEEN AKBER அவர்களுக்கு,

தலாக் என்பது வாழ்க்கையில் மூன்று சந்தர்ப்பங்களில் மூன்று முறை பயன்படுத்துவதாகும். மூன்று சந்தர்ப்பங்களில் மூன்று முறை சொல்லக்கூடிய தலாக்கை ஒரு சந்தர்ப்பத்தில் தலாக், தலாக், தலாக் என மூன்று முறை சொல்லிவிட்டால் அவற்றை முத்தலாக் எனக் கணக்கிட்டு மூன்று தலாக்கும் ஒரே நேரத்தில் முடிந்து விட்டது என தவறான புரிதல் இந்த சமுதாயத்தில் நிலவுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் முத்தலாக் ஒரு தலாக்காகவே (நடைமுறையில்) இருந்தது. பின்னர்  உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் ''நிதானமாகச் செயல்பட்டு (மீட்டுக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்று) வந்த ஒரு விஷயத்தில் மக்கள் (இப்போது) அவசரம் காட்டுகிறார்கள். எனவே அதை (முத்தலாக்கை) அவர்களுக்கெதிராக (மீட்டுக்கொள்ள இயலாதவாறு) நாம் செயல்படுத்தினால் என்ன? என்று கூறி அவ்வாறே அதைச் செயல்படுத்தினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல் - முஸ்லிம் 2932)

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரே நேரத்தில் முத்தலாக் என்று சொல்லி மனைவியை மணவிலக்குச் செய்தால் அது ஒரு தலாக்காகவே கணக்கிடப்பட்டது. தலாக் விஷயத்தில் மக்கள் அவசரப்பட்டு மலிவாக்கியதால் உமர் (ரலி) அவர்களின் முதல் இரண்டு ஆண்டுகள் ஆட்சிக்குப்பின் ஒரே நேரத்தில் தலாக், தலாக், தலாக் என முத்தலாக்காகச் சொன்னால் அது முத்தலாக்காகவே கணக்கிடப்படும் என உமர் (ரலி) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள். இவற்றையே இன்றும் சில ஊர் ஜமாஅத்தார்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால், இஸ்லாம் நபி (ஸல்) அவர்களின் காலத்துடன் முடிவுக்கு வந்து விட்டதால் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் சேர்க்கப்பட்ட சட்டங்கள் எதுவும் இஸ்லாம் என்ற வரையறைக்குள் வராது. எனவே ஒரு முஸ்லிமிற்கு அவற்றைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை!

அல்லாஹ் கட்டளையிடாத, ரஸுலல்லாஹ் நடைமுறைப்படுத்தாத இந்த ஒரே நேரத்தில் முத்தலாக் எனக் கூறி அதை மூன்று தலாக் எனக் கணக்கிடுவது மார்க்க ஆதாரமற்ற போலித்தனமான மனிதக் கருத்தாகும். மார்க்கத்திற்கு எதிரானக் கருத்தை மார்க்கம் என்ற பெயரில் சில ஊர் ஜமாஅத்தார்கள் நடைமுறைப்படுத்தி, இணக்கமான தம்பதியரை மீண்டும் இணையவிடாமல் தடைசெய்து வருகின்றனர். இவை உடைத்தெறிய வேண்டிய தடைகளாகும்.

முதல் தலாக்கை மூன்று தலாக்காகக் கணக்கிட்டு அந்தத் தம்பதியர் நிரந்தரமாக பிரிந்து விட்டனர் எனக் கூறி, அவர்கள் மீண்டும் சேர வேண்டுமானால் அந்தப் பெண்ணை வேறொருவருக்கு மணமுடித்து அவர் தலாக் சொல்லிய பின் மீண்டும் முதல் கணவரை அந்தப் பெண் மணந்து கொள்ளலாம் எனப் போலித்தனமான திருமணத்திற்கும் சில ஊர் ஜமாஅத்தார்கள் ஏற்பாடு செய்வார்கள். இவை போன்ற போலித் திருமணத்தையும், போலித் தலாக்கையும் இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிப்பதில்லை.

ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் துணைவியாரை ஒட்டுமொத்த மணவிலக்குச் செய்துவிட்டார்கள். அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் அவரை மணந்தார்கள். அப்போது அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் ரிஃபாஆ அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். என்னை அவர் மூன்று தலாக்குகளில் இறுதித் தலாக் சொல்லிவிட்டார். அவருக்குப் பிறகு என்னை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் மணந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! இரண்டாம் கணவரான) இவருக்கு ழூழூ(இனஉறுப்பு என்று) இருப்பதெல்லாம் இதோ இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றுதான்' என்று கூறி தம் முகத்திரையின் குஞ்சத்தைப் பிடித்துக் காட்டினார். (அப்போது) அபூபக்ர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள். காலித் இப்னு ஸயீத் இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் அந்த அறையின் வாசலில் அனுமதிக்காக (காத்துக்கொண்டு) அமர்ந்திருந்தார்கள். காலித் அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களை அழைத்து, 'அபூபக்ரே! இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முன்னிலையில் பகிரங்கமாக இப்படிப் பேசக்கூடாதென இவரை நீங்கள் கண்டிக்கக் கூடாதா?'  என்று கேட்கலானார்கள். (ஆனால்) இறைத்தூதர்(ஸல்) அவர்களோ புன்னகை செய்ததைவிடக் கூடுதலாக (வேறெதும்) செய்யவில்லை.

பிறகு நபி(ஸல்) அவர்கள் (அப்பெண்ணிடம்), 'நீ (முதல் கணவர்) ரிஃபாஆவிடமே திரும்பச் செல்ல விரும்புகிறாய் போலும், நீ (உன் இரண்டாம் கணவரான) இவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும், இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும் அது முடியாது' என்றார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல் - புகாரி 6084 மேலும் பார்க்க: புகாரி நூலில் பதிவு செய்யப்பட்ட 2639, 5317, 5260, 5792, ஆகிய அறிவிப்புகள்)

மனைவியை விவாகரத்துச் செய்வதற்கான முதலிரு தலாக் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திய பின் இத்தா தவணைக்குள் மனைவியை முறையாக மீட்டிக் கொள்ளலாம். இத்தா தவணை முடிந்த பின்னரும் அது எவ்வளவு கால இடைவெளியாக இருந்தாலும் விவாகரத்துச் செய்யப்பட்ட முதல் மனைவியை மீண்டும் மண ஒப்பந்தம் செய்து துணைவியாக ஏற்றுக்கொள்ளலாம்.

2:230வது குர்ஆன் வசனத்தின் கருத்துப்படி மீட்ட முடியாத மூன்றாவது தலாக் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினால்  அதன் பின்னர் இருவரும் வாழ்க்கையில் இணைய முடியாது. இணைய வேண்டுமானால் அதற்கான நிபந்தனையை மேல்கண்ட நபிவழி அறிவிப்பின் தடித்த எழுத்துக்களில் காணலாம்.

முதல் சந்தர்ப்பத்தில் சொல்லும் தலாக் மூன்றாவது சந்தர்ப்பமாகாது. ஊர் ஜமாஅத்தார்கள், அல்லது மார்க்க அறிஞர்கள் முதல் தலாக்கை மூன்றாவது தலாக்காகக் கணக்கிடுவதற்கு மார்க்கத்தில் ஆதாரமில்லை. இது போன்ற ஆதாரமற்ற சட்டங்களை புறக்கணித்து விடலாம். சம்பந்தப்பட்ட தம்பதியர் முதலிரண்டு தலாக் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இப்போது இணைய விரும்பினால் இருவரும் மீண்டும் மண ஒப்பந்தம் செய்து வாழ்க்கையில் இணைந்து கொள்ளலாம். 

தாய் மகளை மூளைச் சலவை செய்து மகளின் இல்லற வாழ்க்கையைப் பாழ்படுத்திய ஆய்வையெல்லாம் இங்குக் குறிப்படுவது அவசியமற்றது எனக் கருதுகிறோம்!

(அல்லாஹ் மிக அறிந்தவன்)   

2010/5/9 MD.SAHURUDEEN AKBER <akbe...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages