ஒலிபரப்புமாறு கேட்டுக்கொள்ளுங்கள்.

63 views
Skip to first unread message

mohammed tnch

unread,
Jan 12, 2010, 5:09:35 AM1/12/10
to fro...@googlegroups.com

என் அன்பிற்கினிய சகோதரர்களே !

மேலும் அதே லிங்கிற்குச் சென்று இந்நிகழ்ச்சியை ஸடார் விஜய் டிவியில் ஒலிபரப்புமாறு கேட்டுக்கொள்ளுங்கள்.
 

razin rahman

unread,
Jan 12, 2010, 5:20:31 AM1/12/10
to fro...@googlegroups.com
ம்ம் எதத்தான் அரசியல் ஆக்குவது என்ற வெவஸ்தையே இலலை...இவர்களுக்கு,,,,

இன்ஷா அல்லாஹ் இது ஒளிபரப்ப பட்டால் பயனுடயதாகவே இருக்கும்....
அறிவுடையவர்கள் சிந்தித்து புறிந்து கொள்வார்கள்....

அறிவற்றவர்கள்,ஆடைகலைய துடிக்கும் வக்கிரர்கள்,அன்னியனை கவர நினைக்கும் பெண்கள்,எப்போதும் அதை எதிர்த்து வெற்று கோஷங்களை எழுப்பிக் கொண்டுதான் இருப்பார்கள்...இது எல்லா கால கட்டங்களிலும் இருக்கத்தான் செய்யும்...இவர்களை நாம் கணக்கில் எடுத்து கொள்ள தேவை இல்லை....

இதுவே tntj உறுப்பினர்களை விவாத்திற்கு அழைத்து இருந்தால் அவர்கள்...அதே டீவீக்கு முழு ஆதரவு தந்து,இது போன்ற நிகழ்ச்சி ஒளிபரப்பியதற்கு,நன்றி தெரிவித்து இருப்பார்கள்....

இது நிதர்சனமே....

இன்ஷா அல்லாஹ் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்ப பட வேண்டும்...


அன்புடன்
ரஜின் அப்துல் ரஹ்மான்.
http://sunmarkam.blogspot.com

Feroz Khan

unread,
Jan 12, 2010, 5:25:03 AM1/12/10
to fro...@googlegroups.com
கேவலமாக இல்லை. ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பு முன்னரே அதை பற்றி முழுமையாய் அறியாமல் எதிர்ப்பு தெரிவித்தால் அல்லது சுயநலத்துக்காக செய்தால், எப்படி இஸ்லாம் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படும்?
 
உண்மையிலேயே இது தான் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
 


 
2010/1/12 razin rahman <razin...@gmail.com>
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--
Brother in Faith
Mohamed Ferozkhan

mohamed ismail

unread,
Jan 12, 2010, 7:40:25 AM1/12/10
to fro...@googlegroups.com
விஜய் டிவி முற்றுகை வாபஸ்

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதைக் கொச்சைப்படுத்தி ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்புவதாக விஜய் டிவி அறிவித்திருந்தது.
பெயர் தாங்கி முஸ்லிம் பெண் ஒருத்தி புர்காவைக் கொச்சைப்படுத்துவது போல் விளம்பரமும் செய்யப்பட்டது.

இந்தச் செய்தி தவ்ஹீத் ஜ்மாஅத் கவனத்துக்கு வந்த உ
டன் விஜய் டிவிக்கு விவாதத்துக்கு அழைப்பு கொடுத்தும் நிகழ்ச்சியை நிறுத்தக் கோரியும் கடிதம் கொடுக்கப்பட்டது. சென்னை காவல் துறை ஆணயருக்கும் நிகழ்சியைத் தடுத்து நிறுத்தி விஜய் டிவி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. வெள்ளிக் கிழமை முற்றுகைப் போராத்துக்கும் முறைப்படி அனுமதி கோரப்பட்டது.

இதன் பின்னர் விஜய் டிவி நிர்வாகம் தவ்ஹீத் ஜமாஅத் தலைமையைத் தொடர்பு கொண்டு அந்த நிகழ்ச்சியை நிறுத்திவிட்டதாகவும் அது குறித்த் விளம்பரத்தையும் உடனே நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை வழங்குகிறோம். அதில் உங்களூக்கு ஆட்சாஎபனையான பகுதிகள் இருந்தால் தெரிவியுங்கள். அதை நீக்கி விட்டு ஒளீபரப்புகிறோம் என்றும் விஜய் டிவி நிர்வாகம் கூறியது.

எனவே முற்றுகைப் போராட்டம் கைவிடப்படுவதாக மாநிலத் தலைமை அறிவித்துள்ளது
பார்க்க மேலும் பார்க்க.
 
பர்தா குறித்து யார் யார் கருத்து தெரிவிக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு அதைக் கெடுத்து விட்டதாக விஷமிகள் வழக்கம் போல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டனர்.

யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. விஜய் டிவியில் நீயா நானா என்ற நிகழ்ச்சியின் விளம்பரம் காட்டப்பட்டது. அதில் முஸ்லிம் பெண்கள் புர்காவைக் கண்டிப்பது போலவும் அருவருப்பாக விமர்சிப்பது போலவும் காட்டப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கியது என்பதை முதலில் பதிவு செய்து கொள்கிறோம்.

அடுத்ததாக கலந்து கொள்பவர்கள் யார் என்று தெரிந்திருந்தாலும் நாம் அதை எதிர்க்கவே செய்திருப்போம். ஏனெனில் நீயா நானா என்ற நிகழ்ச்சி எப்படி நடக்கிறது என்பது நமக்குத் தெரியும்.
அது அறிவு ஜீவிகளின் வாதங்களைக் கொண்டது அல்ல. சில முஸ்லிம் பெண்கள் புர்காவை எதிர்த்தும் சில முஸ்லிம்கள் ஆதரித்தும் கூறுகின்ற கருத்து இடம் பெறும்.இரண்டுக்கும் பொதுவாக கோபிநாத் விளக்கெண்ணை விளக்கம் கூறி முடிப்பார்.
 
இதுவும் சரிதான் அதுவும் சரிதான் என்று அற்புதமான தீர்ப்பை அளிப்பார். சிறப்பு அழைப்பாளருக்கு மூன்று நிமிடம் அளிப்பார்கள். அவர்கள் முகம் காட்ட முடியுமே தவிர உருப்படியாக ஒரு கருத்தையும் கூற முடியாது.

நம்மைப் பொருத்தவரை ஒரு விஷயம் சரியா தவறா என்பது அறிவுப் பூர்வமாக விவாதிக்கப்பட வேண்டுமே தவிர மார்க்கம் அறியாதவர்களை வைத்து ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது.

இதில் நடுவராக நம்மை அழைத்தாலும் நாம் அதை ஏற்க மாட்டோம். பர்தா ஒரு அடிமைத் தனம் என்று மார்க்கம் அறியாத எடுபட்டதுகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையே நாம் புறக்கணித்து வருகிறோம்.

கள்ளு குடிக்கலாமா கூடாதா என்று விவாதிக்க விரும்பினால் அது குறித்த் அறிவுடையவர்களை வைத்து விவாதம் நடத்த வேண்டும்.

ஒரு பக்கம் குடிகாரர்களையும் இன்னொரு பக்கம் குடிக்காதவர்களையும் உக்கார வைத்து குடிப்பது எங்கள் உரிமை என்று பேச வைத்தால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

அந்த நிகழ்ச்சியினால் ஒரு பைசா பிரயோஜனமும் இருக்காது. மாறாக இஸ்லாத்தின் புனிதங்களைப் பாமரர்களும் விவாதப் பொருளாக்கலாம் என்ற ஒரே முடிவு தான் அத்னால் ஏற்பட்டிருக்கும்.

உண்மையை உரத்துச் சொல்லாமல் அதுவும் சரி இதுவும் சரி என்று பட்டி மன்ற ரேஞ்சில் நடக்கும் இது போன்ற சதி வலையில் யாருமே விழக் கூடாது என்று கூறிக் கொள்கிறோம்.

http://www.onlinepj.com/vimarsanangal/vijay_tv/

2010/1/12 Feroz Khan <five...@gmail.com>



--
IsmA

mohammed tnch

unread,
Jan 12, 2010, 7:52:33 AM1/12/10
to fro...@googlegroups.com

பயனுள்ள ஒரு நிகழ்ச்சியை தங்ளது கடும் முயற்சியால் நிறுத்திவிட்ட ததஜ சகோரர்களே!

அல்லாஹ் உங்களுடைய பாவங்களையும் எங்களுடைய பாவங்களையும் மன்னித்தருள்வானாக

ஆமீன் !!!

2010/1/12 mohamed ismail <mohamed...@gmail.com>

Ajmal S

unread,
Jan 12, 2010, 7:54:02 AM1/12/10
to fro...@googlegroups.com
அல்ஹம்துலில்லாஹ்!

2010/1/12 mohammed tnch <mohamm...@gmail.com>



--
Thanks & Regards,
 ..Ajmal...

mohammed tnch

unread,
Jan 12, 2010, 7:57:10 AM1/12/10
to fro...@googlegroups.com

சகோதரர் அஜ்மல் அவர்களே !

நீங்கள் எந்த கருத்திற்காக அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ?
 
தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்

2010/1/12 Ajmal S <kan...@gmail.com>

mohamed ismail

unread,
Jan 12, 2010, 7:58:15 AM1/12/10
to fro...@googlegroups.com
 
சகோதரரே! என்னை பொறுத்த வரை இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பாமல் இருக்க எடுத்த முயற்சிகள் நல்லதற்கே. நான் இந்த மெயிலில் அனுப்பியுள்ள லிங்கில் சென்று படித்து பாருங்கள். இந்துக்களின் தாலி பற்றிய விவாதத்தில் எந்த அளவுக்கு அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக விஜய் டி. வி செயல்பட்டு இருக்கிறது என்று. அதற்காக தாலி என்பது சரியானது என்று சொல்லவில்லை. இந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் தன தாலியையே கழற்றி கொடுத்துவிட்டார். இந்துக்களுக்கே இந்த நிகழ்ச்சியில் இந்த நிலை என்றால், முஸ்லிம்களுக்கு சொல்லவா வேண்டும்? ஒரு வேளை நீங்கள் விருப்பபடுவது போல் புர்கா பற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்பினால் நிகழ்ச்சியின் போதே எதிர் அணி பெண்களில் சிலர் புர்காவை கழற்றிவிட்டால் என்ன ஆவது? இதை பார்க்கும் நம் முஸ்லிம் பெண்களும், இதே போல செய்ய மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?
 
மனித இயல்பு எப்படி பட்டதென்றால் கெட்ட விஷயங்களை தான் சட்டென்று பிடித்து கொள்ளும். உங்களுக்கே தெரியும் ஷைத்தான் மனிதனின் நாடி நரம்புகளிலெல்லாம் ஊடுருகிறான் என்று.  அதனால் இந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது நல்லதற்கே.
 
http://www.tamilhindu.com/2009/11/tele-medias-degrading-hindu-religious-feelings/

2010/1/12 Ajmal S <kan...@gmail.com>



--
IsmA

mohammed tnch

unread,
Jan 12, 2010, 8:02:14 AM1/12/10
to fro...@googlegroups.com
எந்த நிகழ்ச்சியும் முன்னரே வீடியோ எடுக்கப்பட்டுவிடும். ஆகையால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால அந்நிகழ்ச்சி ஒலிபரப்பக்கூடாதென, நிகழ்ச்சியில் பங்குகொண்ட தமுமுக சகோதரர்களே கூறியிருப்பார்கள்.

2010/1/12 mohamed ismail <mohamed...@gmail.com>

mohamed ismail

unread,
Jan 12, 2010, 8:05:12 AM1/12/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்.....

2010/1/12 mohammed tnch <mohamm...@gmail.com>



--
IsmA

Ajmal S

unread,
Jan 12, 2010, 8:09:35 AM1/12/10
to fro...@googlegroups.com
கீழே உள்ள வாசகத்தின் அடிப்படையில் விஜய் டீவீ நிகழ்ச்சி    நிறுத்தப்பட்டு
 இருந்தால் அல்ஹம்துலில்லாஹ்
 
விஜய் டிவியில் நீயா நானா என்ற நிகழ்ச்சியின் விளம்பரம் காட்டப்பட்டது. அதில் முஸ்லிம் பெண்கள் புர்காவைக் கண்டிப்பது போலவும் அருவருப்பாக விமர்சிப்பது போலவும் காட்டப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கியது
 
ஏனென்றால் மாற்று மத பெண்களையும் இஸ்லாமிய பெண்களையும்  வைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டு இருந்தால் அது ஒரு விவாதமாக இருக்கும். மாறாக இரண்டு பக்கமும் நம் சகோதரிகளை வைத்து நிகழ்ச்சி நடத்துவது நமக்குள் சண்டையிட்டு கொள்வதற்கே. 
 
ஏனெனில் இஸ்லாத்தில் பெண்களே விரும்பாத புர்காவை அணியுமாறு இஸ்லாமிய சட்டம் கட்டுபடுத்துகிறது,இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது என்பதற்காகவே இம்மாதியான நிகச்சி நடத்தபடுகிறது.
2010/1/12 mohammed tnch <mohamm...@gmail.com>

Yusuf Riyas Ahamed

unread,
Jan 12, 2010, 10:28:40 AM1/12/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்
 
அடிப்படையில்   நீயா நானா நிகழ்ச்சியில் இரு தரப்பாரும் முஸ்லிம்களாக இருக்கிறார்கள் . நம்பிகையான பெண்களுக்கு ஹிஜாப் கடமையாக விதிக்கப்பட்டுள்ளது . கடமையான ஒன்றை முஸ்லிம் பெண்கள் விவாதிப்பது என்பது தவறான முன்உதாரணமாகிவிடும் . என்ன தான் அறிவுபூர்வமாக விவாதித்தாலும் மார்க்கம் விளங்காதவர்கள் பெண்உரிமை என்ற பெயரில் கூப்பாடு போடுவார்கள்.   இந்த நிகழ்ச்சயில்  இல்லாவிட்டாலும் வருங்காலத்தில் மற்றவர்களுக்கு வழி மொழிந்ததாக ஆகிவிட கூடும் . இது போல விவாதங்களை  தமிழக மீடியாக்களில்  அனுமதிக்க கூடாது   

இந்த பிரச்சனையை இயக்கம் கண் கொண்டு பார்க்காமல் குரான் ஹதிஸ் ஒளியில் பார்க்க அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக . நம்  ஒவ்வொருவருக்கும் மற்றவரை நல்லெண்ணம் கொண்டு பார்க்க செய்வானாக . நம் ஒருவருக்கு ஒருவர் கண்ணியமாக கலந்துரையாட செய்வானாக .நம் பிரச்சனைக்கு  ஒரு காபிரை நடுவராக ஆக்கிவிடாமல் செய்வானாக .

அன்புடன் 
யூசுப் ரியாஸ் 
 


2010/1/12 Ajmal S <kan...@gmail.com>

Abufaisal

unread,
Jan 12, 2010, 11:16:40 AM1/12/10
to fro...@googlegroups.com

வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்..!

 

சகோதரர் சொல்வது போல் மார்க்கம் கடமை ஆக்கியிருக்கும் ஒரு விஷயத்தில் முஸ்லிம்களே அதை கேலிகூத்தாக்கும் வகையில் எதிர்மறையான கருத்துக்களை கூறுவது அதை ஆவணப்படுத்துவது போல் அமைந்து விடும், மேலும் வருங்கால சந்ததியினருக்கு அது ஒரு விவாதப்பொருளாக ஆகிவிடும் பிறகு ஷைத்தானின் விளையாட்டு பெண் அடிமைத்தனம் என்ற பெயரில் ஆரம்பித்துவிடும் என்பதும் நாம் அறியாத ஒன்றல்ல. எனவே இது போன்ற விவாதங்களை நடத்துவதை விட புர்கா அணிவதன் சந்தேகங்களை பிறர் கேள்விகளாக கேட்டு அதற்கு மார்க்க அறிஞர்கள் சிறப்பான விளக்கமளிப்பதும் அதன் நன்மைகளை எடுத்தறிவிப்பதுமே அனைத்து சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்.

எதற்கெடுத்தாலும் இயக்கம் இயக்கம் என்று பேசிக்கொண்டிருக்காமல் நிகழும் தவறுகளை அதன் சரியான கோணத்தில் அது ஏற்படுத்தபோகும் நன்மை தீமைகளை அறிந்து அதை களைய முயற்சிக்கவேண்டும். அந்த வகையில் இந்த ஒளிபரப்பை தடுத்து நிறுத்தியவர்களை பாராட்டத்தான் வேண்டும் இதை அவர்கள் காழ்ப்புணர்ச்சி இன்றி “நீயா நானா என்ற போட்டி இல்லாமல் உண்மையாகவே இந்த காரணத்துக்காகத்தான் செய்தார்கள் என்றிருந்தால்...! ஜஸாக்கல்லாஹு க்ஹைரன்.

 

அல்லாஹ் மிக அறிந்தவன்.

 

 

அன்புடன் – அபூஃபைஸல்

ரியாத், சவூதிஅரேபியா

Feroz Khan

unread,
Jan 12, 2010, 11:29:22 PM1/12/10
to fro...@googlegroups.com
அன்பு சகோதரர்களே
 
பர்தா தேவையில்லை என்று சொல்பவர்களின் வாதங்கள் தமிழ் பேசும்  அனைவரும் அறிந்ததே. ஆனால் பர்தா ஏன் தேவை என்பது தான் தமிழ் கூறும் நல்லுலகில் இன்னும் சொல்லப்படவில்லை.
 
நாம் நடத்தும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்றும் மானுட வசந்தம் நிகழ்ச்சிகள் எல்லா தரப்பாலும் பார்க்கப்படுவதில்லை. எனவே விஜய் டிவியில் நிகழ்ச்சி வந்திருந்தால் அது ஓர் உண்மையான தஃவா ஆக ஆகியிருக்கும்.
 
ஒவ்வோர் கதவை தட்டி செய்யப்படும் தஃவாவை விட ஓரே நேரத்தில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மாஸ் தஃவா நடந்திருக்கும். பர்தா வேண்டாம் என்று வாதிட்ட முஸ்லீம்களும் கூட உண்மையை உணர்ந்திருக்க முடியும்.
 
நிகழ்ச்சியின் சிடியை வாங்கி பார்த்து ஒளிபரப்ப முடியுமென்றால் அதையாவது செய்திருக்கலாம். ஆனால் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பும் முன்னே முழுமையாய் தெரியாமல் எதிர்ப்பு தெரிவிப்பது இஸ்லாம் சம்பந்தமான அறிவு சார் நிகழ்ச்சிகள் பொது ஊடகங்களில் நடப்பதை கேள்விக்குறியாக்கியுள்ளது.
 
வாளால் இஸ்லாம் பரப்பப்பட்ட்து என்று ஒரு குழு வாதிட்டால் கூட அதை எதிர்த்து இல்லை என்று வாதிட்டு உண்மையை உரைக்க ஒரு சந்தர்ப்பமாக எடுத்து கொள்ள வேண்டும். அன்றைய மக்கத்து வீதிகளில் இஸ்லாம் ஒரு விவாதப் பொருளாக இருந்த போது தான் அது வேகமாக பரவியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்

2010/1/12 Abufaisal <abufaisa...@gmail.com>

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Jan 13, 2010, 3:35:33 AM1/13/10
to fro...@googlegroups.com
salaam to all!
 

ஹிஜாப் பற்றி இரு முஸ்லிம் பெண்மணிகளின் மத்தியில் விவாதமா? இது தேவையா? இதை கண்டு ரசிக்க உங்களுக்கு எவ்வாறு மனம் வருகிறது? இஸ்லாத்தை கேலியும் கூத்தாகவும் ஆக்க சிலர் முயற்சிக்கிறார்கள்!

ஹிஜாப் தேவையா இல்லையா  என்று நீயா நானா என்று விவாதம் நடக்குமாம் அதில் நம்மவர்கள் கலந்து கொண்டு நீதியை நிலை போதிப்பர்ர்கலாம்! இது போன்ற விவாதங்களை நபிகளார் அனுமதிதுள்ளர்களா? மார்க்கத்தை எத்தி வைக்க ஹிஜாப்- கேவலபடுவது உங்களுக்கு ருசிகரமாக உள்ளதாஎன்ன இதுஎங்கே செல்கிறீர்கள்? சகோதரர்களே வரம்பு மீறதீர்கள்!

அல்லாஹ்வின் வார்த்தைகள்

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்-வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ்  அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று(நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன் 49:16)

  

நபி மொழி

என் வழிமுறையை புறக்கணித்தவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரழி) ஆதாரம்: முஸ்லிம்.

 

*நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, "இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?" என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.
(2:26)*

Note:
நீயா நானா விவாதம் எவ்வாறு உள்ளது என்றால் (இவ்வாறு கூறுவதற்கு மன்னிக்கணும் - என்னை நீக்கினாலும் பரவ இல்லை

ஒருவன் பெற்ற தாய் பத்தினி என்பானாம் அதற்கு மற்றவன் இல்லை இல்லை என்பானாம்! இது போன்று உள்ளது உங்கள் டிவி ஹிஜாப் விவாதம்!

இவ்வாறு கூறுவதற்கு மன்னிக்கணும்
இவ்வாறு கூறுவதற்கு மன்னிக்கணும்
இவ்வாறு கூறுவதற்கு மன்னிக்கணும்

I just heard about Hijaab orguments!  Because of my existing problem I have replied short words furgive me! This TV orguments is very very shame to one musims! Furgive all my brothers! I never expected your words from your heart!  Beware of Allah!
மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு
இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும்
நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள்
யார் என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம்
பேசியவர்கள்)மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள்.”
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்: அஹ்மது

Abufaisal

unread,
Jan 13, 2010, 9:57:10 AM1/13/10
to fro...@googlegroups.com

//இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்றும் மானுட வசந்தம் நிகழ்ச்சிகள் எல்லா தரப்பாலும் பார்க்கப்படுவதில்லை. எனவே விஜய் டிவியில் நிகழ்ச்சி வந்திருந்தால் அது ஓர் உண்மையான தஃவா ஆக ஆகியிருக்கும்//

 

இந்நிகழ்சிகள் அனைத்தும் மாற்றுமத சகோதரர்களின் கேள்விகளுக்கு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சியாகும் ஆனால் இதுவோ இருதரப்பும் முஸ்லிம்கள். ஒரு தரப்பு முஸ்லிம் பெண்கள் அவர்கள் தரப்பு வலுபெற எதை வேண்டுமானாலும் பேசுவார்கள் உதாரணத்திற்கு பெண்ணடிமைதனம், ஆண்களின் கட்டாயம், இவ்வளவு ஏன் இது இறைவனின் இட்ட கட்டளை என்பதை மறந்தும் பலவாறு பேச முடியும் இவையெல்லாம் இஸ்லாத்தையே கேலி கூத்தாக்கும் பிரச்சனைகளாகிவிடும், ஏற்கனவே களியக்காவிளையில் விவாதம் நடத்தி கேவலப்பட்டது போல் ஆகிவிடும். பிரச்சனை என்று வரும்போது அவரவர் தமது தரப்பை வெற்றி பெற செய்யவே விரும்புவர் தாம் பேசுவது தவறுதான் அதில் உண்மையில்லை என்ற போதிலும், உதாரணம் களியக்கவிளையில் ஜமாலி பேசிய பேச்சை கேட்டிருப்பவர்கள் அறிவார்கள்.

மேலும் இதனால் நன்மையான செய்திகளை விட தேவையில்லாத செய்திகளே மக்களை விரைவாக சென்றடையும் ஏற்கனவே கேலிக்குள்ளாகப்படும் பர்தா முறையை இன்னும் கேலி செய்ய நாமே வழிவகுத்து கொடுப்பதுபோல் ஆகிவிடும். புர்காவுக்கு எதிரான கருத்துக்கள் அனைத்து மக்களின் மனதில் வேறுன்றிவிடும். இதை நாம் ஒரு காஃபிரின் முன்னிலையில் விவாதிப்பது என்பது.......? அதில் இறுதியாக அவன் ஒரு முடிவை அறிவிப்பானாம். அல்லாஹ் விதித்த கட்டளையை ஒரு காஃபிரின் இறுதி முடிவில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திலா நாம் இருக்கிறோம்.

 

//வாளால் இஸ்லாம் பரப்பப்பட்ட்து என்று ஒரு குழு வாதிட்டால் கூட அதை எதிர்த்து இல்லை என்று வாதிட்டு உண்மையை உரைக்க ஒரு சந்தர்ப்பமாக எடுத்து கொள்ள வேண்டும். அன்றைய மக்கத்து வீதிகளில் இஸ்லாம் ஒரு விவாதப் பொருளாக இருந்த போது தான் அது வேகமாக பரவியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்//

 

அன்று மக்காவில் இஸ்லாம் விவாத பொருளாக இருந்தது எப்படி என்று சகோதரர் விளக்க வேண்டும். இந்த நிகழ்சியை போல சகாபாக்கள் இரு பிரிவாக உட்கார்ந்து இஸ்லாத்தின் குறைகளை ஒருவரும் நிறைகளை மற்றொருவரும் விவாதம் செய்தார்களா?

 

மாற்று மத சகோதர சகோதரிகளால் புர்கா பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பதிலளிக்கும் நிகழ்சியாக இருந்தால் வரவேற்கலாம் என்பது என் கருத்து. இத்தோடு இது முடிந்து விடப்போவதில்லை மாற்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இக்குறைகளை நீக்கி மேலும் சிறப்பாக திட்டமிட்டு செய்யலாமே!

 

 

அன்புடன் – அபூஃபைஸல்

ரியாத்,

 

ismail ismail

unread,
Jan 13, 2010, 10:12:33 AM1/13/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும்  சகோதரர் சிராஜ் அப்துல்லா அவர்களே எந்த குறிப்பிட்ட ஒருவருடைய பெயரையும் பயன் படுத்தாதிர்கள்   களியக்காவில் இரண்டுதரப்புமே இஸ்லாத்திற்கு கண்ணிய குறைவை ஏற்ப்படித்தினார்கள்  

ismail ismail

unread,
Jan 13, 2010, 10:18:24 AM1/13/10
to fro...@googlegroups.com
மன்னிக்கவும் சிராஜ் அப்துல்லா அவர்களே பெயர் மாறிவிட்டது 
அஸ்ஸலாமு அழைக்கும்  சகோதரர்அபு பைசல்  அவர்களே எந்த குறிப்பிட்ட ஒருவருடைய பெயரையும் பயன் படுத்தாதிர்கள்   களியக்காவில் இரண்டுதரப்புமே இஸ்லாத்திற்கு கண்ணிய குறைவை ஏற்ப்படித்தினார்கள்  

Abufaisal

unread,
Jan 13, 2010, 10:33:28 AM1/13/10
to fro...@googlegroups.com

சகோதரரே! நான் குறை சொல்வதற்காக அவர் பெயரை குறிப்பிடவில்லை அந்நிகழ்ச்சி தொடங்கியது முதல் இறுதிவரை நடந்த கூத்தை பல மாற்றுமத நண்பர்களுடன்  காண நேர்ந்ததால் ஏற்பட்ட கசப்பான அனுபவம்! அஸ்தக்ஃபிருல்லாஹ்

 

 

அன்புடன் - அபூஃபைஸல்

 

From: fro...@googlegroups.com [mailto:fro...@googlegroups.com] On Behalf Of ismail ismail
Sent: Wednesday, January 13, 2010 6:18 PM
To: fro...@googlegroups.com
Subject: Re:
ஒலிபரப்புமாறு கேட்டுக்கொள்ளுங்கள்.

 

மன்னிக்கவும் சிராஜ் அப்துல்லா அவர்களே பெயர் மாறிவிட்டது 

Seyed

unread,
Jan 13, 2010, 11:04:29 AM1/13/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும்  சகோதரர்களே! 
சகோதரர் சிராஜ் அப்துல்லாஹ,abu faizal ஆகியோர்களின் கூற்று சரியானதே, ஹிஜாப் பற்றிய தெளிவை ஏற்படுத்துவது வேறு ஒரு அந்நிய மததவனிடம் தீர்ப்பு சொல்லுமாறு எமது இஸ்லாமிய கடமையை விவாதிப்பது அவ்வளவு நல்லதாக இருக்காது

2010/1/13 ismail ismail <ismail...@gmail.com>
அஸ்ஸலாமு அழைக்கும்  சகோதரர் சிராஜ் அப்துல்லா அவர்களே எந்த குறிப்பிட்ட ஒருவருடைய பெயரையும் பயன் படுத்தாதிர்கள்   களியக்காவில் இரண்டுதரப்புமே இஸ்லாத்திற்கு கண்ணிய குறைவை ஏற்ப்படித்தினார்கள்  

சாதிக் அலி

unread,
Jan 13, 2010, 11:07:36 AM1/13/10
to fro...@googlegroups.com
அன்புச் சகோதரர் பெரோஜ்கான்,

விஜய் டிவியில் நீயா நானா நிகழ்சியில் இரு தரப்பிலும் உள்ள விவாதம் செய்பவர்கள் மற்றும் நடுவராக இருந்து தீர்ப்பு சொல்பவர் இவர்கள் எல்லோரும் இஸ்லாமிய ஹதீஸ், குர் ஆன் சட்டம் தெரிந்தவர்களா? என்பதை யோசித்துப் பாருங்கள். 

பர்தா என்பது இஸ்லாத்தின் ஆணிவேர்.. அதை விவாதப் பொருளாக்க இவர்கள் யார்? இதனாலெல்லாம் இஸ்லாத்தை வளர்க்கமுடியும் என்று கருதுகிறீர்களா?

ஒருவர் சொல்கிறார்.. இது ஒரு தாவாவாம். எது தாவா... இஸ்லாத்தை மேடையில் கேலிசெய்வது தாவாவா? இஸ்லாத்தில் இருக்கும் நாதாரிகளில் சில அரைவேக்காடுகள் பர்தா வேண்டாமென்று சொல்லும். அவர்கள் வேண்டுமானால் இஸ்லாதை விட்டு வெளியேரட்டும்... அதனால் இங்கே என்னக் குறை.

தவ்ஹீத் ஜமாஅத் செய்த்தது ... உண்மையில் பீ சபீலில்லாஹ்வாகும்... 



2010/1/13 Feroz Khan <five...@gmail.com>



--
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

        sade...@gmail.com
-----------  அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

Abufaisal

unread,
Jan 13, 2010, 4:05:12 PM1/13/10
to fro...@googlegroups.com

சகோதரர் சாதிக் வார்த்தைகளின் கடுமையை சற்று குறைத்து கொள்ளலாம் இப்படி சொல்வதால் நீங்கள் சொல்ல வந்த விடயமே அடிபட்டுபோகும்!

 

எவ்வித உள்நோக்கமும் இன்றி இதை செய்திருக்கும் இயக்கங்கள் பராட்டுக்குரியவை ஆகும், இது போன்றே அனைத்து காரியங்களிலும் அனைத்து இயக்கங்களையும் ஒன்று சேர்க்க அல்லாஹ்விடம் துஆ செய்தவனாக...!

 

 

அன்புடன் - அபூஃபைஸல்

 

Feroz Khan

unread,
Jan 13, 2010, 11:45:26 PM1/13/10
to fro...@googlegroups.com
அன்பு சகோதரர்களே
 
அஸ்ஸலாமு அலைக்கும்
 
முஸ்லீம்களில் ஒரு கூட்டத்தினர் புர்காவை பற்றி கேவலமாக பேசுவார்கள், அதனால் இதை தடை செய்ய வேண்டும் என்று கோருவோர்களே, அவர்கள் என்ன பேசினாலும் மாற்று மதத்தினருக்கு தெரியாத ஒன்றை பேசிட போவதில்லை. ஆனால் புர்கா ஏன் வேண்டும் என்று அங்குள்ள ஆலிமாக்களும் அறிஞர்களும் பேசுவது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கு போகுமே ? இது தஃவா இல்லையா
 
முஸ்லீம்களில் ஒரு கூட்டம் இறைவனை தவிர இறைநேசர்களிடமும் பிராத்தனை செய்யலாம் எனும் போது ததஜ அவர்களுக்கெதிராக விவாதம் நடத்தியது. ஆனால் முஸ்லீம்களில் ஒரு கூட்டம் புர்கா வேண்டாம் என்று சொல்லும் போது அவர்களுக்கு எதிராக முஸ்லீம்கள் (தமுமுக / இதஜ) விவாதம் செய்யும் போது சரியில்லை என்று சொன்னால் எப்படி ? இன்னும் கேட்டால் இச்செய்தி ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் சென்றிருக்கும்
 
கோபிநாத்தின் தீர்ப்பை யாரும் ஏற்றுக் கொள்ளூவதில்லை. ஏற்று கொள்ளவும் சொல்லவில்லை. விஷயம் என்னவென்றால் அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்லாத்தை எடுத்துரைத்திருக்கலாம் (பர்தாவின் அவசியத்தை சொல்வதன் மூலம்).  ஆனால் இரு முஸ்லீம் அமைப்புகள் அல்லாஹ்வின் பள்ளியில் தொழுவதற்கு யாருக்கு உரிமையிருக்கிறது என்று குரான் சுன்னா அடிப்படையில் தங்களுக்குள் விவாதித்து தீர்ப்பை ஏற்று கொள்ள தெரியாமல் காபிரின் தீர்ப்பை ஏற்று கொண்டதை என்னவென்பது?

2010/1/14 Abufaisal <abufaisa...@gmail.com>

ஹாஜா மைதீன் (இப்னு அஷ்ரஃப்)

unread,
Jan 14, 2010, 7:08:01 AM1/14/10
to fro...@googlegroups.com
"அவர்கள் என்ன பேசினாலும் மாற்று மதத்தினருக்கு தெரியாத ஒன்றை பேசிட போவதில்லை."

 யார் சொன்னது, மாற்று மத நண்பர்களுக்கு தெரியாத ஒன்றை அவர்கள் பேசுவார்கள் என்று. பெண்ணுரிமை பற்றி பேசினால் மட்டுமே அவர்கள் மாற்று மத நண்பர்களுக்கு தெரியாத விஷயத்தை பேசுகிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் ஒரு   சகோதரி சொல்கிறார் "எனக்கு புர்கா போடுவது பிடிக்கவில்லை, விட்டில் சொல்வதால் போட்டுக் கொள்கிறேன்" என்று ரொம்ப கேவலாமாக சொல்கிறார். "நியா நானா" நிகழ்ச்சியில் தாலி தேவையா இல்லையா என்று ஒரு தலைப்பில் மாற்று மத சகோதரி தாலியை கழற்றி கொடுத்து விட்டார். 

வேண்டுமென்றால் புர்கா தேவையா இல்லையா என்று ஒரு விவாதம் ஏற்பாஉ செய்து மாற்று மத நண்பர்கள் மத்தியில் விவாதம் எந்த அமைப்பு செய்ஹாலும் அது வரவேற்கத் தக்கது. இந்த சம்பவத்தை வைத்து கூட அரசியல் செய்கிறார்கள் என்று நினைக்கும் போது மனம் மிகவும் வருந்துகிறது.

இஸ்லாத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் கூட இயக்க ரேதியாக தான் குரல் கொடுப்போம் என்று சொல்லுபவர்களை பார்க்கின்ற போது மிகவம் மனம் வேதனை  அடைகிறது. நான் எந்த அமைப்பையும் செரதாவன். நான் யாருக்காகவும் பரிந்து பேசவில்லை. அந்த நிகழ்ச்சியின் விளம்பரம் வந்ததையே நம்மால் பொறுக்க முடியவில்லையே, முற்றிலும் அது ஒளிபரப்பபட்டிருந்தால் என்ன நடக்கும் என்று அல்லாஹ்விற்கு தான் தெரியும்.  

அன்புடன் 

அபு நிஹான் 

2010/1/14 Feroz Khan <five...@gmail.com>

Yusuf Riyas Ahamed

unread,
Jan 14, 2010, 7:13:59 AM1/14/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும்
இவ்வாறான விவாதங்கள் மற்ற மீடியாக்களில் நடந்துள்ளது . சில மாதங்களுக்கு முன்னால்  பீபீசி வேர்ல்ட்ல்(BBC World News) கத்தார் தலைநகரமாம் தோஹாவில் இருந்து சிறப்பாக ஒளிபரப்பான  தோஹா டீபேட்ஸ்(Doha Debates) என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது .

அதில் "இந்த மன்றம் முஸ்லிம் பெண்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் எவரை வேண்டும்மென்றாலும்   திருமணம் முடிக்கலாம் என்ற சுதந்திரத்தோடு இருக்க வேண்டும் என்று நம்புகிறது " என்ற தலைப்பில் விவாதம் நடத்தி ஒடேடுபு நடத்தியது .
பார்க்க http://www.thedohadebates.com/debates/debate.asp?d=50&s=5&mode=transcript

இந்த நிகழ்ச்சியில் பேச்சாளர்கள் எல்லாம் முஸ்லிம்கள்.  ஒன்றும் அறியா முஸ்லிம்கள் அல்ல படித்து பட்டம் பெற்று சமூக சேவையில் இருப்பவர்கள் . அவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத்தான் பேசுகிறார்கள்  அனால் அவர்கள் தலையில் முக்காடு இல்லை. 
மார்க்கத்தில் கட்டாயம் இல்லை.ஆகவே  தொழுவ , நோன்பு பிடிக்க, ஹஜ்ஜுக்கு  போக கட்டாயம் இல்லை என்கிறார் தாடி வைத்த ஒருவர்.
பெண்களுக்கு தனது கணவர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் அனுமதிக்கணும் என்று நுணுக்கமாக ஆராயத் தொடங்கி விட்டார்கள் . அவளுடைய உணர்வுக்கு மதிபளிகனும் என்று பட்டியல் நீலுகிறது.

இதில் தலைப்பிற்கு எதிராக யாசிர் காத்ரி போன்ற தலைசிறந்த மார்க்க அறிஞர்கள் பங்கெடுத்தார்கள் .இதற்கு நடுவராக இருந்த மாற்று மதத்தவர் துல்லியமாக சூடானில் சர்ச்சையான ஒரு பத்வாவை(யூத கிறிஸ்தவர்களை மணக்கலாம்) சொல்லி யாசிர் காத்ரியை வினவுகிறார். 

இதில் என்ன வென்றால் கடைசியில் பார்வையாளர்களுக்கு ஒட்டெடுப்பு நடத்தினார்கள் . முக்கால்வாசி பேர் அரபு முஸ்லிம்கள் . அதில் தலைப்புக்கு சாதகமாக பெருவாரியாக 62% பெற்று விமர்சையாக ஒரு கூத்து  அரங்கேறியது.

ஏன் இவ்வளவு நுணுக்கமாக பொது ஊடகங்களில்  மார்க்க சட்டத்தை விவாதம் செய்து குழப்ப வேண்டும் ?

பெண்கள் மீது ஊடகங்கள் கண் வைத்து இருபது அனைவரும் அறிந்ததே. அதை மனதிற் கொண்டு இஸ்லாத்தின்  கடமையான விசயங்களை விவாதிப்பதை அனுமதித்து வழி விட்டுவிட கூடாது  என்பது என் கருத்து.
மாற்று  மதத்தினருக்கு தங்கள் உடலை மறைப்பது எவ்வளவு சிறந்தது என்பது தெரியும். முதலில் கலிமாவை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி எடுக்க  வேண்டும் என்பதுதான் என் கருத்து.

இயக்கத்திற்காக பார்க்காமல் இதில் நம் குடும்பம் , சமுகம் நலன் அடங்கி உள்ளதை சகோதரர்கள்  கவனிக்க வேண்டும்.
இயக்கத்திற்காக பார்க்காமல் நாம் அனைவரும் இஸ்லாத்திற்காக உழைக்க அல்லாஹ் அருள்புரிவானாக


P.S  :  நிகாப் தேவையா தேவை இல்லையா என்ற ரேஞ்சில் முக்காடு  போடாத பெண்கள் வீறுகொண்டு எழுந்து பிக்ஹு சட்டத்தை பீ பீ சி இல் பேசியதை பார்க்க .

2010/1/14 Feroz Khan <five...@gmail.com>

Yusuf Riyas Ahamed

unread,
Jan 14, 2010, 7:18:50 AM1/14/10
to fro...@googlegroups.com

P.S  :  நிகாப் தேவையா தேவை இல்லையா என்ற ரேஞ்சில் முக்காடு  போடாத பெண்கள் வீறுகொண்டு எழுந்து பிக்ஹு சட்டத்தை பீ பீ சி இல் பேசியதை பார்க்க

 
 
 
2010/1/14 Yusuf Riyas Ahamed <riyasa...@gmail.com>

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Jan 18, 2010, 4:51:57 AM1/18/10
to fro...@googlegroups.com

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

ஹிஜாப் அணிவது பற்றி இரு முஸ்லிம் பெண்களுக்கிடையில் நீயா? நானா? விஜய் டிவி விவாதம்

 

ஹிஜாப்

இஸ்லாம் பெண்களுக்கு அருளியுள்ள மாபெரும் பொக்கிஷங்களில் ஹிஜாப் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது மேலும் இந்த தனிச் சிறப்பு ஒழுக்கமுள்ள பெண்களை கண்ணியப்படுத்தும் விதமாகவும் அவர்களை மற்ற மதத்து பெண்களிடமிருந்து இனம் பிரித்து காட்டும் விதமாகவும் வல்ல ரஹ்மானால் கடமையாக்கப்பட்ட ஒன்றாகும். ஹிஜாப் ஒரு பெண்ணின் உடல் அங்கங்களை மறைப்பதால் அவளுடைய கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சந்தேகப் பார்வையிலிருந்து தப்பிக்க வழிகாட்டுகிறது.
 

 

பெண் என்ன கண்காட்சிப் பொருளா?

ஒரு பெண் தான் அணிந்திருக்கும் ஆபரணங்களையோ, வேலைப்பாடுமிக்க விலை உயர்ந்த உடையையோ அண்ணிய ஆடவர்களும் ஏன் மற்ற மற்ற (மாற்றுமத) பெண்களும் பார்வையிடாதவண்ண்ம் தடுக்கிறது இதன்மூலம் வழிப்பறிக்கொள்ளை, ஜேப்படி திருடர்-திருடியர்களிடமிருந்து தற்காக்கும் ஒரு கேடயமாக இந்த ஹிஜாப் அமைகிறது,

 

உள்ளதை உள்ளவாறு கூறுவதாக இருந்தால் மனைவியை இஸ்லாம் விளைநிலமாக வர்ணித்துள்ளது அந்த விளைநிலத்தினை பாதுகாக்க நாம் வேலிபோட்டு மற்ற மிருகங்களின் அட்டகாசத்தை எவ்வாறு தடுக்க முடியுமோ அவ்வாறுதான் இந்த ஹிஜாப் ஒரு பெண்ணிற்கு வேலியாக அமைந்து மனித மிருகங்கள் அவளை அண்டாமல் இருக்க துணை நிற்கிறது.

 

 
ஹிஜாப்-ன் சிறப்பு

ஹிஜாப் என்ற உண்ணதமான ஆடையை தக்வா ஆடை என்றும் வர்ணிப்பதுண்டு அதாவது இறையச்சம் கொண்ட ஆடை என்று பொருள்படும். ஒரு பெண் இறையச்சம் கொண்டவளா? இல்லையா என்பதை வெளிப்படையாக அறிந்துக்கொள்ளவும் இந்த கண்ணியமிக்க ஹிஜாப் அமைகிறது எனவே தான் அல்லாஹ் அதன் தனிச் சிறப்பையும் பெண்களின் ஒழுக்கத்தைப் பற்றியும் திருமறைக் குர்ஆனில் அந்நிஷா என்ற அத்தியாயத்தையே இறக்கியுள்ளான் அதில் எண்ணற்ற கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் அருளியுள்ளான்!

 

 
இஸ்லாமிய பெண்களின் நீயா, நானா? போட்டியை ஏன் தடுக்கிறோம்!

 

தொட்டிலில் அமைதியாக உறங்கும் குழந்தையை கில்லிவிட்டு வேடிக்கை பார்க்கும் வித்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள் இந்த வித்தையை மாற்று மதத்தவர்கள் தொலைக்காட்சிகள் வாயிலாக அரங்கேற்குகிறார்கள் நேற்றுவரை முஸ்லிம்களை வைத்து முஸ்லிம்களுக்கு எதிராக போர் தொடுத்து தீவிரவாதிகள் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் தற்போது இதில் சலிப்படைந்தனர் போலிருக்கிறது எனவேதான் இன்று மார்க்கத்தை சீர்குலைக்க ஹிஜாப் போன்ற விவாதங்களை பி.பி.சி மற்றும் விஜய் டி.வி.க்களில் அதுவும் முஸ்லிம் பெண்களின் மத்தியில் நடத்தி தீன்குலப் பெண்களே ஹிஜாப் பற்றி விமர்சிக்கவைத்து மகிழ்கின்றனர். அதற்கு நம் அமைப்புகள் துணைநிற்கின்றனர். (இப்போதாவது உணர முடிகிறதா உங்களால்???)

 

 

 
நீயா, நானா? போட்டியை இவ்வாறு நடத்துங்களேன்!

நீயா நானா டிவி. நிகழ்ச்சி மூலம் ஹிஜாப் பற்றி உண்மையை பரப்பத் துடிக்கும் என் சமுதாய செம்மல்களே, கொள்கைச் சகோதரர்களே உங்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஆர்வம் இருந்தால் கீழ்கண்டவாறு நடத்துங்கள் தலைப்பை நானே எடுத்துக்கொடுத்து ரசிக்கிறேன்

 

  1. உங்கள் தலைவர் உண்மையாளரா? உண்மைக்கு மாற்றமானவரா?

 

  1. உங்கள் பேராசிரியர் படித்து பட்டம் வாங்கினாரா? பிட் அடித்து பட்டம் வாங்கினாரா?

 

  1. உங்கள் இயக்கம் மக்களுக்கு நன்மை செய்யும் இயக்கமா? மக்களை சுரண்ட பிறந்த இயக்கமா?

 

உங்கள் நீயா, நானா ஹிஜாப் விவாதத்தில் இரு முஸ்லிம் பெண்களைதானே முன் நிறுத்துகிறீர்கள் அதையே பின்பற்றி நான் மேலே குறிப்பிட்ட தலைப்புகளுக்கு உங்கள் இயக்கத் தலைவரை நடுவராக நிறுத்துங்கள், ஒரு அணியில் உங்கள் தலைமை அமைப்பினரையும் மற்றொரு அமைப்பில் உங்கள் தொண்டர்களையும் நிறுத்துங்கள் வேடிக்கை பார்ப்போம்! உங்கள் இயக்க கூத்துக்களை நாமும் கண்டு ரசிப்போம்!

 

சகோதரர்களே உங்கள் தலைவர் அல்லது அமைப்பின் பெயரால் நீயா நானா டி.வி. விவாதம் நடத்தினால் உங்கள் தலைவருக்கோ, அமைப்பிற்கோ அவமானம் வந்துவிடும் அதனால் நீங்கள் இது போன்ற தலைப்புகளை ஏற்கமாட்டீர்கள் ஆனால் இஸ்லாத்தின் பெயருக்குத்தானே அவமானம் வருகிறது நமக்கென்ன என்றுதானே நிகழ்ச்சியை காணத் துடிக்கிறீர்கள்!! உங்களுக்கு ஒரு நியாயம் உங்கள் தலைவருக்கு ஒரு நியாயம், உங்கள் மார்க்கத்திற்கு ஒரு நியாயமா? இப்படிப்பட்ட மனிதர்களை அல்லாஹ் நேசிப்பானா? உங்கள் உள்ளத்தில் கேள்வி கேட்டுப்பாருங்கள்!

 

 
நீயா, நானா? ஹிஜாப் நிகழ்ச்சியை தடுத்தது குற்றமா?

சனிக்கிழமை மீன் பிடிக்கக்கூடாது என்று ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் கட்டளை பிறப்பித்தான் ஆனால் அந்த சமுதாயம் வரம்பு மீறி மீன் பிடித்தது! இதை தடுக்க ஒரு கூட்டமும், வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமும், அதை தடைசெய்யாதீர்கள் என்று ஒரு கூட்டமும் நின்றது! இறுதியாக தடுத்த கூட்டத்தை விட்டுவிட்டு மற்ற இரு கூட்டத்தையும் அல்லாஹ் குரங்குகளாக மாற்றினான் என்ற செய்தி திருமறையில் உள்ளது! ஆம் இது ஒருவருடைய மானத்தை காக்கும் சட்டமல்ல மாறாக மக்கள் அல்லாஹ்வின் சட்டத்தை மீறுகிறார்களா என்று அறிந்துக்கொள்ள வகுக்கப்பட்ட சட்டமாகும்!

 

ஹிஜாப் ஒரு பெண்ணின் கண்ணியத்தை காக்கும் என்று அல்லாஹ் சட்டம் விதிக்க அந்த சட்டத்தை மீறி அதை கேலிக்கூத்தாக்கி உங்களுக்குள் போட்டா போட்டி நடத்துவீர்கள் அதை தடுத்தால் குற்றம் என்கிறீர்களா? அப்படியானால் அறிந்துக்கொள்ளுங்கள் மீன் பிடித்த சமுதாயத்திற்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் ஏற்படலாம் ஏன் அல்லாஹ் இதை செய்ய சக்தி பெறவில்லை என்று என்கிறீர்களா? (சமீபத்திய ஹைட்டி தீவு நிலநடுக்கத்தில் மரணித்த இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை சிந்தித்துப்பாருங்கள்!)

 

 
எது தாஃவா!

தாஃவா என்பது இஸ்லாமிய அழைப்புப் பணியாகும் இதன் மூலம் இஸ்லாத்தை கண்ணியமிக்க வழியில் இஸ்லாமியர்கள் மற்றும் மாற்றுமதத்தவர்கள் முன் எத்திவைக்கும் செயல் நடைபெறுகிறது மாறாக இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை இழிவுபடுத்தி மார்க்கத்தை பரப்பும் செயலல்ல! நபிகளார் (ஸல்) பல்வேறு நாட்டு அரசர்களை நேர்மையான முறையில் அழைப்பு விடுத்தாரே தவிர மார்க்கத்தை மோசமாக வர்ணித்து அழைப்பு விடுக்கவில்லை அப்படி ஒரு ஆதாரம் இருந்தாலும் எடுத்துக்காட்டவும்!

 

உதாரணமாக உங்கள் தெருவில் மலஜலம் நிறைந்த கழிவரை இருப்பதாக வைத்துக்கொள்வோம் அங்குள்ள மக்களை பார்த்து கழிவரையில் கைகளை நுழைக்காதீர்கள் என்று கூறினால் மக்கள் உணர்ந்துக்கொள்வார்களா? அல்லது கழிவரையில் கைகளை விட்டு இவ்வாறு நுழைத்தால் மலஜலம் ஒட்டிக்கொள்ளும் எனவே கூறினால் மக்கள் உணர்வார்களா?

 

 
 
பெண்களை கண்ணியப்படுத்தும் இஸ்லாம்!

·                    பிறக்கும் குழந்தை ஆனோ பெண்ணோ என்பதை தீர்மாணிக்கும் அதிகாரம் இறைவனிடமே உள்ளது

 

·                    இறைவனின் அருளால் பெண் குழந்தை பிறந்துவிட்டால் அதை வெறுக்கக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

 

·                    பிறந்த பெண் குழந்தையை கொல்லக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது

 

·                    பெண் குழந்தையை சீரும் சிறப்புமாக, நல்ல ஒழுக்கமுள்ள குழந்தையாக வளர்க்க இஸ்லாம் கூறுகிறது

 

·                    பெண் குழந்தையை அது பருவமடைந்தவுடன் அதற்கான தக்வா உடையை (ஹிஜாப்)அணிவிக்க இஸ்லாம் கூறுகிறது

 

·                    பெண் தனது திருமணை வயதை அடைந்துவிட்டால் தனக்கு மார்க்கப்பற்றுள்ள சிறந்த ஆண்மகனை தேர்ந் தெடுக்கும் உரிமையை இஸ்லாம் வழங்குகிறது

 

·                    ஒரு பெண் தன்னுடைய கணவனால் துண்பத்திற் குள்ளானாலோ அல்லது தவறான முறையில் வழிநடத்தப்பட்டாலோ அவனை விட்டுப் பிரிய இஸ்லாம் உரிமை வழங்குகிறது!

 

·                    கணவனை நோக்கி மனைவிக்கு கண்ணியப்படுத்து மேலும் அவள் வாயில் ஊட்டும் ஒரு கவல உணவைக்கொண்டும் சுவனத்திற்கு வழி தேடிக்கொள் என்று இஸ்லாம் நன்மாறாயங்கூறுகிறது!

 

·                    பெற்ற தாயை பழிக்காதீர்கள் என்றும் தாயின் காலடியில் சுவனம் உள்ளதாகவும் இஸ்லாம் கூறுகிறது!

 

·                    மார்க்கத்தை ஏற்காத தாய் தன்னை நாடி வந்தாலும் புகழிடம் அளிக்க இஸ்லாம் வழிகாட்டுகிறது!

 

·                    கணவன் தனது ஆனாதிக்கத்தின் மூலம் மணைவியை சிறமப்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிடட காலத்திற்கு மேல் அவளை இல்லறத்தை விட்டு ஒதுக்கிவிடக்கூடாது என்றும் இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது.

 

·                    ஒரு பெண் மணவிலக்கு பெற்றாலோ அல்லது விதவையானாலோ அவள் தன்னுடைய இத்தா தவணையை முழுமையாக்கிய பின் தான் விரும்பும் மார்க்கப்பற்றுள்ள ஆண்மகனை தேர்ந்தெடுக்கலாம் என்று இஸ்லாம் முன்வந்து கண்ணியமிக்க உரிமைகளை வழங்குகிறது (சுப்ஹானல்லாஹ்)

 

·                    உலகிலேயே முதல் முதலாக இஸ்லாம் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கியது!

 

 

ஹிஜாப் பற்றி விவாதிக்கும் பெண்கள் நிலையும் தீர்வும்!

ஹிஜாப் என்ற புனிதத்தை தர்காவாதிகளும், தப்லிக்வாதிகளும், தவ்ஹீத்வாதிகளும், ஏன் 5 கடவுள் கொள்கையை கொண்ட ஷியாவாதிகளும் மதிக்கின்றனர் இவர்களுக்கு மத்தியில் ஹிஜாப் அணியலாமா, கூடாதா என்று கருத்துவேறுபாடுகள் கிடையாதே அவ்வாறு இருக்க கேடுகெட்ட கொள்கை கொண்ட ஒரு சில முஸ்லிம் பெண்களுக்காக விவாதம் நடத்துவதா? அல்லாஹ் வகுத்த சட்டத்தை மீறி இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என்று வாதிட வருகிறார்களா அப்படியெனில் அறிந்துக்கொள்ளுங்கள்

 

1)        அந்த பெண்கள் ஹிஜாப் விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அறிவுரை கூற நினைக்கின்றனர் என்று அர்த்தம்! (அல்லாஹ் மன்னிப்பானாக!)

 

2)        அந்த பெண்கள் ஹிஜாப் விஷயத்தில் அல்லாஹ்வுடைய திருமறையை புறக்கணிக்கிறார்கள் என்று அர்த்தம்!

 

3)        அந்த பெண்கள் நபிகளாரின் சட்டத்தை மீறி நடக்கிறார்கள் மேலும் நபிகளாரை இந்த உலகில் அவமதிக்கிறார்கள் என்று அர்த்தம்!

 

4)        அந்த பெண்கள் அன்னை ஆயிஷா (ரலி) ஃபாத்திமா (ரலி) மற்றும் கண்ணியமிக்க சஹாபிய பெண்மணிகளை கேவலப்படுத்துகிறார்கள் என்றுதான் அர்த்தம்!

 

5)        இறுதியாக இப்பெண்கள் நாளை மாற்று மத ஆடவனுடன் ஏன் உறவு கொள்ளகூடாது என்று கேள்வி கேட்க நீங்கள் (அதாவது உங்கள் அமைப்பு) வழிவகை செய்கிறீர்கள் என்று அர்த்தம்!

 

 

இதோ தீர்வு இதை அலசிப்பார்த்து முடிவெடுக்கவும்!

 

·                    அல்லாஹ்வை மதிக்காத,

·                    நபிகளாரை மதிக்காத,

·                    திருமறை மற்றும் ஹதீஸ்களை மதிக்காத, சத்திய சஹாபிய பெண்மணிகளை மதிக்காத, ஏன் மாற்றுமத அரைகுறை நிர்வாண வாழ்க்கை விரும்பி ஹிஜாப் அணிய மறுக்கும் மற்றும் ஹிஜாப் விவாதத்தில் ஈடுபடும் பெண்களை ஒட்டுமொத்த ஜமாஅத்துகளும் ஒன்று கூடி ஃபத்வா கொடுக்கவும், இப்படிப்பட்ட பெண்களை மணக்கமாட்டோம், அவர்களை ஆதரிக்கும் மக்களையும் புறக்கணிப்போம் என்று அறைகூவல் விடவும்! கேடுகெட்ட பெண்கள் அப்போதாவது திருந்துகிறார்களா என்று பார்ப்போம்.

 

விவாதம் நடத்துவதாக இருந்தால் மாற்றுமதத்தவர்களிடம் விவாதம் நடத்துங்கள், கேடுகெட்ட இப்பெண்களிடம் விவாதம் நடத்துவதாக இருந்தால் அதை டி.வியின் முன் அல்ல மாறாக முஸ்லிம் பொதுமக்கள் முன் மேடை மீது நின்று விவாதித்து ஃபத்வா கொடுக்கவும் அப்போதுதான் கேடுகெட்ட கொள்கையுடைய பெண்களிடம் பயம் ஏற்படும்!

 

 

குறிப்பு

நான் உங்கள் இயக்கத்தையோ, பேராசிரியரையோ, குறை கூறுவதாகவும், கேளி கிண்டல் செய்வதாகவும் எண்ணாதீர்கள் நான் அப்படிப்பட்டவன் அல்ல அது எனக்குத் தேவையுமல்ல மாறாக என்னுடைய மார்க்கத்தை கேலி கிண்டல் செய்தால் நம் மார்க்கச் சகோதரர்களுக்கும், எனக்கும் எவ்வாறு வலி உணரப்பட்டதோ அவ்வாறு உங்களுக்கும் வலி உணரப்பட வேண்டும் நன்மை தீமை புரிய வேண்டும் என்ற துடிப்புதான் இந்த கட்டுரையை உருவாக்க முனைப்பு காட்டியது! இயக்கவாதிகள் என்னை மன்னிக்கவும்! உங்கள் கொள்கை சகோதரைப் போன்று ஒரு அமைப்பின் இணையதளத்தை வெளியிட்டு பிறகு அவர்களை நம்பி நான் மோசம் போனேன் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன் என்று வாய்கூசாமல் பிதற்றுவதற்காக இங்கு மன்னிப்பு கோரவில்லை! மாறாக உண்மையை மனம்விட்டு உறைத்துவிட்டுத்தான் மன்னிப்பு கோருகிறேன் இனியாவது பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன் என்று நாடகமாடாமல் மன்னிப்பு கேட்பதற்கும் மரியாதையை கடைபிடிக்கவும் மாறாக தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்!

 

பொய்யாக மன்னிப்பு கேட்டு மக்களை ஏமாற்றலாம் ஆனால் அல்லாஹ்வை ஏமாற்ற முடியாது என்பதை அறிந்துக் கொள்ளவும்! அல்லாஹ் அல்பஷீர்-ஆக உள்ளான்!

 

அல்ஹம்துலில்லாஹ்!

 

அன்புடன்

சிராஜ்அப்துல்லாஹ்

என்னுடைய பணியிட மாறுதல் காரணமாக விரைவாக கருத்துக்களை பதிய முடியவில்லை நிலைமை சீரடைந்தவுடன் விரைவில் பழைய படி கருத்துக்கள் தொடரும் (இன்ஷா அல்லாஹ்)! எழுத்துப்பிழையிருந்தால் மன்னிக்கவும்!

Reply all
Reply to author
Forward
0 new messages