அகீகா சம்பந்தமாக ?

586 views
Skip to first unread message

Dalba

unread,
Jan 11, 2009, 2:24:46 AM1/11/09
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும்

அகீகா பற்றி விரிவான விளக்கம் வேண்டுகிறேன் .தயவு செய்து விளக்கவும்

நன்றி வஸ்ஸலாம் 
 
 
Dalba

ஹபீப்

unread,
Jan 12, 2009, 8:11:28 AM1/12/09
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதரர்களுக்கு நான் கீழ்வரும் விளக்கத்தை இந்த http://www.annajaath.com/?p=148=1 இணைத்தொடர்பில் எடுத்தேன். படித்துப்பார்த்ததில் ஆண்பிள்ளைகளுக்கு ஒரு ஆடு கொடுத்தால் கூட போதும் என்பதாகவும், குழந்தையின் பெற்றோர்கள்தான் தரவேண்டும் என்பதில்லை நெருங்கிய உறவினர்கள் கூட தரலாம் என்றும், குழந்தை பிறந்த ஏழாம் நாள் அல்லது பதிநான்காம் நாள் அல்லது இருபத்திஒன்றாம் நாள்களில் அகீகா கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது, அதற்கான ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை சரியான முறையில் ஆய்தறிந்து மார்கத்தில் ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் ஊர்ஜிதப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்...

கேள்வி: அகீகா கொடுப்பது அவசியமா? அதன் முறை என்ன? ஆஸம், சென்னை.
 
பதில்: "அகீகா" பற்றிய நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பொன்மொழிகளை அவர்கள் காலத்து நடைமுறையைப் பார்ப்போம்.
 
"ஆண் குழந்தைக்காக 'அகீகா' உண்டு. அவன் சார்பாக இரத்தத்தை ஒட்டுங்கள்" (நபிமொழி)
அறிவிப்பவர் : சல்மான் இப்னு ஆமிர் (ரழியல்லாஹு அன்ஹு)
நூல்கள் : புகாரி, அஹ்மத், அபுதாவூது, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா.
 
ஒவ்வொரு ஆண் குழந்தையும் 'அகீகா'வுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளான். அவன் சார்பாக ஏழாம் நாள் அறுத்துப் பலியிடவும்! அன்றே பெயர் வைக்கவும்! அவன் தலை(மயிரை) களையவும்! (நபிமொழி)
அறிவிப்பவர்: சமுரா ரழியல்லாஹு அன்ஹு
நூல்கள்: அஹ்மத், நஸயீ, அபூதாவூது, திர்மிதீ, இப்னுமாஜா ஹாகீம், பைஹகீ.
 
'ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள்' என்றும், 'பெண் குழந்தை சார்பாக ஒரு ஆடு' என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐபு ரழியல்லாஹு அன்ஹு
நூல்கள்: அஹ்மத், அபூதாவூது, நஸயீ

இந்த நபிமொழியில் 'விரும்பினால்' கொடுக்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் 'அகீகா' கட்டாயமான ஒன்றல்ல என்றும் உணரலாம். 'அகீகா' அரபு நாட்டில் வழக்கமாகவே நடந்து வந்த நடைமுறையாகும். இஸ்லாம் வந்தபின், அதை அங்கீகாரம் செய்தது. ஆனால், 'அகீகா'வின் பெயரால் நடந்த வேறு சில சடங்குகளை இஸ்லாம் ஒழித்தது.

நாங்கள் அறியாமைக் காலத்தில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் ஒரு ஆட்டை அறுத்து, குழந்தையின் தலைமயிரை நீக்கி, அந்த ஆட்டின் இரத்தத்தை குழந்தையின் தலையில் பூசிக் கொண்டிருந்தோம். அல்லாஹ் இஸ்லாத்தைத் தந்தபோது ஒரு ஆட்டை அறுப்போம், குழந்தையின் தலைமயிரை நீக்குவோம். தலையில் குங்குமப் பூவைப் பூசுவோம் என்று புரைதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்கள் : அஹ்மத், அபூதாவூது, நஸயீ.

இதற்கு முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களில் ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள் என்று குறிப்பிடப்பட்டதைப் பார்த்தோம். இந்த ஹதீஸில் ஒரு ஆட்டை ெகாடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஹதீஸிலிருந்து ஆண் குழந்தையின் சார்பாக ஒரு ஆடும் கொடுக்கலாம் என்று உணர முடிகின்றது. இரண்டு ஆடுகள் கொடுப்பது சிறப்புடையது என்பதை முன் சொன்ன ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. ஒரு ஆடும் கொடுக்கலாம் என்பதற்குப் பின் வரும் நபி வழியும் சரியான ஆதாரமாகின்றது.

"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு சார்பாக ஒவ்வொரு ஆடு "அகீகா" கொடுத்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு  நூல்கள்: அபூதாவூது, இப்னு ஹப்பான், ஹாகிம், பைஹகீ

இந்த நபிவழி ஒரு ஆடு கொடுக்கலாம் என்ற அனுமதியை உணர்த்துவதோடு, பெற்றவர்கள் தான் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை, மிக நெருங்கிய உறவினர்களும் கொடுக்கலாம் குறிப்பாக குழந்தையின் பாட்டனார் கொடுக்கலாம் என்பதையும் உணாத்துகின்றது. குழந்தையின் பெற்றோர் உயிருடன் இருக்கும் போதே பாட்டனார் கொடுக்கலாம் என்பதையும் இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது. ஹஸன்(ரழி) ஹுஸைன்(ரழி) இருவரின் பெற்றோர்கள் இருந்தபோதே அவர்களின் பாட்டனாராகிய நபி(ஸல்) அவர்கள் அகீகா கொடுத்துள்ளனர்.

"குழந்தை பிறந்த ஏழாம் நாள் அகீகா கொடுக்கப்பட வேண்டும்" என்பதை, இரண்டாவதாக நாம் குறிப்பிட்ட ஹதீஸ் குறிப்பிடுகின்றது. எனினும், பதினான்காம் நாள், இருபத்தி ஒன்றாம் நாளிலும் கொடுக்கலாம் என்று நபி(ஸல்) கூறியதாக "பைகஹீ" யில் ஹதீஸ் உள்ளது. ஏழாம் நாளிலோ கொடுக்கலாம். அது தவறி விட்டால் வேறு நாட்களில் கொடுக்க வேண்டும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

"நபியாக ஆக்கப்பட்ட பின் நபி(ஸல்) அவர்கள் தனக்காக 'அகீகா' கொடுத்தார்கள் என்று 'பைஹகீ'யில் இடம் பெற்றுள்ள ஹதீஸ், நிராகரிக்கப்பட்டதாகும். இதன் அறிவிப்பாளர்களில் அப்துல்லாஹ் இப்னு முஹர்ரர் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நிராகரிக்கப்படக் கூடியவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) கூறுகிறார்கள். இமாம் நவபீ அவர்கள் 'இது பொய்யான ஹதீஸாகும்" என்று 'ஷரஹுல் முஹத்தப்" நூலில் குறிப்பிடுகிறார்கள்.

ஆக மேற்கூறிய ஹதீஸ்களிலிருந்து ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள் கொடுப்பது சிறப்பு என்றும் - ஒரு ஆடு கொடுப்பது போதுமானது என்றும் - அது கட்டாயக் கடமையானதல்லவென்றும் 7,14,21 ஆகிய நாட்களில் கொடுக்க வேண்டும் என்றும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

அதன் மாமிசத்தை எப்படிபட பங்கிடப்பட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடாததாலும், ஸஹாபாக்கள் இதுபற்றி கேட்காததாலும், குர்பானி மாமிசம் பங்கிடப்படுவது போன்றே இதுவும் பங்கிடப்பட்டிருக்க வேண்டும் என்று அனுமானம் செய்யலாம்.

நமக்குள் இஸ்லாம்

unread,
Jan 14, 2009, 11:03:46 PM1/14/09
to fro...@googlegroups.com
ஸலாம்.
 
அகீகா சம்பந்தமாக சகோதரர் ஹபீப் கொடுத்துள்ள சுட்டியின் (சுட்டிக்கு நன்றி) விளக்கங்கள் போதுமானதாக இருந்தாலும் இன்னும் இரண்டு கருத்துக்களை நாம் கூற வேண்டியுள்ளது.
 
முதலாவது: 7ம் நாள் கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பே சரியாக உள்ளது. 14 - 21 ஆகிய நாட்களை குறிப்பிட்டு வரும் அறிவிப்பு ஆதாரப்பூர்வமானதாக இல்லை என்பதால் அந்த நாட்களை நாம் அகீகா நாட்களாக எடுத்து் கொள்ள முடியாது.
 
இரண்டாவது: அகீகா கொடுக்க வேண்டும் என்ற எண்ணமுள்ள ஒருவர் 7ம் நாள் அதை (தவிர்க்க முடியாமல்) கொடுக்கத் தவறினால் அவர் மற்ற நாட்களில் கொடுக்க முடியாதா என்பது பற்றி பார்க்க வேண்டும்.
 
பெயரிடுதல்
தலைமுடி இறக்குதல்
அகீகா கொடுத்தல்
கத்னா செய்தல்
 
இந்த நான்கு காரியங்களையும் ஏழாம் நாள் செய்ய வேண்டும் என்று அறிவிப்புகள் உள்ளன.  ஏழாம் நாளுக்கு பிறகு இவற்றை செய்தால் அவை சுன்னத்தாகாது என்று ஒரு சாரார் கூறி வருகின்றனர்.
 
இதில் கத்னா (ஆண்குழந்தை ஆண்குறியின் முன் தோலை நீக்குதல்) ஏழாம் நாள் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அந்த நாள் தவறினால் அந்தக் காரியத்தை செய்யக் கூடாது என்று முடிவு செய்ய முடியுமா?  கத்னா செய்வதென்பதே இஸ்லாமிய வழிமுறையாகும்.    வசதி வாய்ப்புகள் இருந்தால் 7ம் நாள் செய்தால்,  கத்னா செய்தல், ஏழாம் நாள் செய்தல் என்ற இரண்டு சுன்னாக்கள்  நிறைவேறும்.  ஏழாம் நாள் கழித்து செய்யும் போது கத்னா செய்வது சுன்னத்தாகவே அமையும். ஏழாம் நாள் என்ற சுன்னா மட்டும் விடுபடும் அவ்வளவுதான்.   அதே போன்றுதான் மற்றவற்றையும் புரிந்துக் கொள்ள வேண்டும். 
 
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com

JMBasha

unread,
Jan 15, 2009, 12:16:59 PM1/15/09
to fro...@googlegroups.com

 

 

அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்!

சகோதரர் நிஜாமுத்தீன்,

 

ஏழாம்நாளில் பெயரிடுதல், தலைமுடி இறக்குதல் மற்றும் அகீகா கொடுப்பதற்கு ஹதீஸ்அறிவிப்புகள் இருக்கின்றன என்பது சரி! ஆனால் ஏழாம் நாள் கத்னாவும் செய்யவேண்டும் என்று எங்கு இருக்கிறது? இருந்தால் அதற்கான ஹதீஸ் ஆதாரங்களை நீங்கள் தரவேண்டும்.

 

//வசதி வாய்ப்புகள் இருந்தால் 7ம் நாள் செய்தால்கத்னா செய்தல், ஏழாம் நாள் செய்தல் என்ற இரண்டு சுன்னாக்கள்  நிறைவேறும்.  ஏழாம் நாள் கழித்து செய்யும் போது கத்னா செய்வது சுன்னத்தாகவே அமையும். ஏழாம் நாள் என்ற சுன்னா மட்டும் விடுபடும் அவ்வளவுதான்.// 

 

ஏழாம் நாள் கத்னா செய்தால் அது சுன்னா என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறீர்கள்?

 

‘குரான் மற்றும் ஹதீஸ் வசனங்கள் எதுவும் கத்னா செய்வதற்கான காலக்கெடு எதையும் கூறாத நிலையில் கத்னாவை பற்றி மார்க்க அறிஞர்கள் கூறுவதாவது: கத்னா எப்பொழுது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் ஆனால் பருவம் அடையும் முன்பு சிறுவயதில் செய்துவிடுவது சிறந்தது என்கின்றனர்.

 

“There is no verse or Hadith state or specify the time of circumcision,Most scholars say that it (circumcision) can be done at any time but it is commendable in childhood before puberty.”

 

ஆதாரம்: See At- tamhid, majmu fatawa Sheikhul Islam, Al-Mughni.

 

அல்லாஹ் மிக அறிந்தவன்.

 

அன்புடன்,

சகோ. அபூஃபைஸல்

 


<span

M A RAHMAN

unread,
Jan 16, 2009, 10:46:52 AM1/16/09
to fro...@googlegroups.com

M A RAHMAN

unread,
Jan 16, 2009, 10:54:08 AM1/16/09
to fro...@googlegroups.com
ASSALAMUALAIKKUM                PENGALUKKU CHEIVINAI SEIYAPPATTULLATHU ENDRU SOLLI  AVARKAL VITHYASAMANA MURAYIL PESUVATHUM SEYALPADUVATHUM MIKA MIKA AACHARIYAMAHA ULLATHE  ITHUEPPADI ITHUPATRI THERINTHAVARKAL VILAKKAUM

ஜிஎன் PNO

unread,
Jan 16, 2009, 10:13:32 PM1/16/09
to fro...@googlegroups.com
ஸலாம்
 
என்ன அப்பாஸ் மத்தவங்களைப் போல நீங்களும் அமைதியாயிட்டீங்களா..?

--
ஜி என்
0508019759

இலகுவாக தமிழ் தட்ட,

http://www.google.com/transliterate/indic/Tamil
.................

ஜிஎன் PNO

unread,
Jan 16, 2009, 10:16:07 PM1/16/09
to fro...@googlegroups.com
தவறாக போஸ்ட்டாகி விட்டது மன்னிக்கவும்.

--
ஜி என்

நமக்குள் இஸ்லாம்

unread,
Jan 30, 2009, 5:56:14 AM1/30/09
to fro...@googlegroups.com
ஸலாம்
 
அகீகா பற்றிய கருத்தை வெளியிட்ட நாம் கத்னா ஏழாம் நாள் செய்வது பற்றிய தகவலையும் சொன்னோம்.   அதற்கு சகோதரர் jmbasha ஒரு கேள்வியை (தனி தலைப்பில்) வைத்துள்ளார் அந்தக் கேள்வி
 
""ஏழாம்நாளில் பெயரிடுதல், தலைமுடி இறக்குதல் மற்றும் அகீகா கொடுப்பதற்கு ஹதீஸ்அறிவிப்புகள் இருக்கின்றன என்பது சரி! ஆனால் ஏழாம் நாள் கத்னாவும் செய்யவேண்டும் என்று எங்கு இருக்கிறது? இருந்தால் அதற்கான ஹதீஸ் ஆதாரங்களை நீங்கள் தரவேண்டும்""
 
அந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். இந்த செய்தியின் தரம் பற்றி ஆய்ந்துக் கொண்டிருக்கிறோம். 

اختلف الفقهاء في وقت الختان، فقيل: حتى يبلغ الطفل، وقيل: إذا بلغ تسع سنين،
وقيل عشرًا، وقيل: متى كان يطيق ألم الختان.
والظاهر أنه لم يرد نص صريح صحيح من السنة بتحديد وقت للختان، وأنه متروك لولي
أمر الطفل بعد الولادة، صبيًا كان أو صبية، فقد ورد أن النبي صلى الله عليه وسلم ختن الحسن
والحسين رضي الله عنهما يوم السابع من ولادتيهما،
فيفوض أمر تحديد الوقت للولي
بمراعاة طاقة المختون ومصلحته الصحية.
وقد ذهب الشافعية والحنابلة إلى أن الوقت الذي يصير فيه الختان واجبًا هو، بعد
البلوغ، لأن الختان من أجل الطهارة، وهي لا تجب عليه قبله، وللشافعية في تعيين
وقت الاستحباب وجهان:
الأول: أنه يكون يوم السابع، ويحتسب يوم الولادة معه ؛ لحديث جابر رضي الله
عنه: «عَقَّ رسول الله صلى الله عليه وسلم عن الحسن والحسين وختنهما لسبعة أيام». (أخرجه
البيهقي).
والثاني- وهو ما عليه الأكثرون-: أنه اليوم السابع بعد يوم الولادة، وفي قول
الحنابلة والمالكية: أن المستحب ما بين العام السابع إلى العاشرة من عمره؛
لأنها السن التي يؤمر فيها بالصلاة

லிங்க்
இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக இருக்கும் பட்சத்தில் நம் கருத்து கூடுதல் வலிமைப் பெறும் என்பதை கவனத்தில் கொள்ளவும்்.

JMBasha

unread,
Jan 30, 2009, 9:09:39 AM1/30/09
to fro...@googlegroups.com

 

 

வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்...!

 

//இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக இருக்கும் பட்சத்தில் நம் கருத்து கூடுதல் வலிமைப் பெறும் என்பதை கவனத்தில் கொள்ளவும்//

 

உங்கள் கருத்து கூடுதல் வலிமை பெறுகிறதோ இல்லையோ இதுநாள் வரையில் பல சகோதரர்கள் அறிந்திராத ஏழாம் நாள் கத்னா செய்வது பற்றிய ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸை உஙகள் குழுமத்தில் சேர்ந்த பின் அறிந்துகொண்ட சந்தோஷம் நம்மில் பலருக்கும் கிடைக்கும்.

 

ஆய்வு வெற்றியடைய வாழ்த்துக்கள்!

 

சகோ. அபூஃபைஸல்

ரியாத், சவூதிஅரேபியா.

 


From: fro...@googlegroups.com [mailto:fro...@googlegroups.com] On Behalf Of ???????? ???????
Sent: Friday, January 30, 2009 1:56 PM
To: fro...@googlegroups.com
Subject: Re:
அகீகா சம்பந்தமாக ?

 

ஸலாம்


--~--~---------~--~----~------------~-------~--~----~
You received this message because you are subscribed to the Googl

Reply all
Reply to author
Forward
0 new messages