வானங்கள், பூமி மற்றும் மனிதகுலப் படைப்பு!

閲覧: 4,099 回
最初の未読メッセージにスキップ

muslim

未読、
2010/03/22 16:46:132010/03/22
To: fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

''உங்களில் யார் அழகிய செயலுடையவர் என்பதை சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். அவனது அர்ஷு நீரின் மீது இருந்தது. நீங்கள் மரணத்தின் பின் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள். என (நபியே) நீர் கூறுவீராக!'' 'இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை' என நிராகரித்தோர் கூறுவர். (அல்குர்ஆன் 11:7)

''(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அர்ஷு (சிம்மாசனம்) தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் - நபிமொழிச் சுருக்கம்: புகாரி 3191)

இறை வழியில் முயன்று, சோதனை எனும் தேர்வில் மனிதன் வெற்றி பெறவேண்டும். மனிதன் உள்பட உயிரினங்கள் வாழ்வதற்குத் தகுதியான சூழ்நிலையைக் கட்டமைக்க, அனைத்துப் படைப்புகளும் அதற்கான சிறந்த முன்னேற்பாடாகும்.

அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்களாகும். (அல்குர்ஆன் 9:36)

வானங்களும், பூமியும் இதர அமைப்புகளும் படைக்கப்பட்டு ஆண்டு, மாதம், கிழமை, இரவு, பகல் என கால நேரம் நிர்ணயிக்கப்பட்டு, இயங்கிக்கொண்டிருந்த பின்னர் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்.

அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான். இன்னும், அவன் மனிதனின்
படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான்.
(அல்குர்ஆன் 32:7)

(நபியே! நினைவு கூர்வீராக!) 'நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்' என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்,

'நானே அவரைவிட மேலானவன். (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய். ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்' என்று (இப்லீஸ்) கூறினான். (அல்குர்ஆன் 38:71, 76)

''அல்லாஹ் ஆதமை ஒரு பிடி மண்ணிலிருந்து படைத்தான். பூமியின் எல்லாப் பகுதியிலிருந்தும் அதை எடுத்தான். பூமியின் தரத்திற்கேற்ப ஆதமுடைய மக்கள் உருவானார்கள். இதனால் தான் சிவப்பு நிறமுடையவர், வெண்மை நிறமுடையவர், கருப்பு நிறமுடையவர் இவற்றுக்கு இடைப்பட்ட நிறத்தவர், நளினமானவர், திடமானவர், கெட்டவர் மற்றும் நல்லவர் உருவாயினர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) (நூல்கள் - திர்மிதீ 2879, அபூதாவூத், அஹ்மத், ஹாகீம், பைஹகீ)

வெள்ளிக்கிழமை

''சூரியன் உதிக்கும் நாள்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்று தான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள். அன்று தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்று தான் யுக முடிவு நிகழும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 1548 )

''சூரியன் உதிக்கும் நாள்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறந்ததாகும். அதில் தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதில் தான் சொர்க்கத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். அதில்தான் அங்கிருந்து இறக்கப்பட்டார்கள். அதில் ஒரு நேரம் உள்ளது. தொழக்கூடிய எந்த முஸ்லிமாவது அந்த நேரத்தை அடைந்து அந்த நேரத்தில் அல்லாஹ்விடம் எதையாவது கேட்டால் அல்லாஹ் அவருக்கு அதைக் கொடுக்காமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - திர்மிதீ 453, அபூதாவூத், நஸயீ, முஅத்தா)

முதல் மனிதரும், முதல் நபியும், ஒட்டுமொத்த மனித இனத் தந்தையுமாகிய ஆதம் (அலை) அவர்கள் வெள்ளிக்கிழமை படைக்கப்பட்டார்கள். என்று நபிவழிச் செய்திகள் அறிவிக்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், திங்கள்கிழமை நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டது. ''அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன். அதில் தான் எனக்குக் குர்ஆன் அருளப்பட்டது'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூகத்தாதா அல்அன்ஸாரி (ரலி) நூல் - முஸ்லிம் 2153. அன்றுதான் ''நான் நபியாக நியமிக்கப்பட்டேன்'' என்ற விபரம், முஸ்லிம் 2152 வது ஹதீஸில் இடம்பெற்றுள்ளன.)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிறந்த நாள், நபியாக நியமிக்கப்பட்ட நாள், குர்ஆன் அருளப்பட்ட நாள். இம்மூன்று நிகழ்வுகளும் வெவ்வேறு தினங்களில் நிகழ்ந்தன என்றாலும், அவை மூன்று திங்கள்கிழமைகளில் நிகழ்ந்துள்ளன. இந்த நபிவழிச் செய்தியை எவ்வாறு விளங்குகிறோமோ அது போன்றே:

ஆதம் (அலை) அவர்கள் வெள்ளிக்கிழமை படைக்கப்பட்டார்கள். வெள்ளிக்கிழமை சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டார்கள். வெள்ளிக்கிழமை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இவை மூன்று வெள்ளிக்கிழமைகளில் நிகழ்ந்த வெவ்வேறான நிகழ்வாகும். இதே வெள்ளிக்கிழமையில் நிகழவிருக்கும் முக்கிய யுக முடிவுப் பற்றியும் நபிமொழியில் சொல்லப்படுகிறது. நடந்த, நடக்கவிருக்கும் சம்பவங்கள் நான்கு வெள்ளிக்கிழமைகளில் நிகழ்ந்தவை எனப் புரிந்துகொள்ள உதவுகின்றன!

வானங்களையும், பூமியையும் அல்லாஹ் ஆறு நாள்களில் படைத்ததை, அறிவியல் ஆய்வில் அவற்றை ஆறு காலகட்டங்களாக விளங்கினாலும், ஆதம் (அலை) அவர்களின் படைப்பு அந்த ஆறு நாள்களுக்குள் கட்டுப்படாது!

''அல்லாஹ் ஆதமை ஒரு பிடி மண்ணிலிருந்து படைத்தான். பூமியின் எல்லாப் பகுதியிலிருந்தும் அதை எடுத்தான்'' என்ற நபிமொழியின் கருத்துப்படி الْأَرْضِ   பூமி ஏற்கெனவே படைக்கப்பட்டுவிட்டது. ஆதம் வெள்ளிக்கிழமை படைக்கப்பட்டார் என்ற நபிமொழியின் கருத்து எல்லாப் படைப்புகளும் படைக்கப்பட்டு இயக்கப்பட்ட பின்னரே ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)

மாற்றுக் கருத்துடைய சகோதரர்கள் பகிர்ந்துகொள்ளலாம்.

ibnuh...@mail.com

未読、
2010/03/22 23:21:022010/03/22
To: fro...@googlegroups.com
ஆம் , உண்மையே........... 
சகோ....சிராஜ்... ஒரு ஒரு ஹதீஸ் இனால்  குழப்பத்தில் உள்ளார்...... ......
 
 
>>>>>> 
வானங்களையும் , பூமியையும் அல்லாஹ் ஆறு நாள்களில் படைத்ததை, அறிவியல் ஆய்வில் அவற்றை ஆறு காலகட்டங்களாக விளங்கினாலும்,. <<<<<<

யவ்ம் என்பது..........
PHASE or  PERIOD  OF TIME  தான் என்பதில்  எந்த  குழப்பமும் இல்லை...........
மீண்டும் எழுதுகின்றேன்...

Aero Travels

未読、
2010/03/23 3:45:332010/03/23
To: fro...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்

சகோதரர் முஸ்லீம் அவர்கள் கூறிய படி
// இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிறந்த நாள், நபியாக நியமிக்கப்பட்ட நாள், குர்ஆன் அருளப்பட்ட நாள். இம்மூன்று நிகழ்வுகளும் வெவ்வேறு தினங்களில் நிகழ்ந்தன என்றாலும், அவை மூன்று திங்கள்கிழமைகளில் நிகழ்ந்துள்ளன. இந்த நபிவழிச் செய்தியை எவ்வாறு விளங்குகிறோமோ அது போன்றே //

நபி(ஸல்) அவர்கள் பிறந்தது திங்கள் கிழமை என்பது தனி நாள்,  அதே சமயம் நாற்பதாவது வயதில்  நபியாக நியமிக்கப்பட்டதும், குர்ஆன் அருளப்பட்டதும் ஒரே திங்கள்கிழமை தானே?  அது இரண்டும் ஒரு நாளில் நடந்ததாக புரிய வாய்ப்புள்ளது  தானே? 



அதே போல்
وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِنْ لُغُوبٍ

நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை. 50:38

இந்த வசனத்தின் அடிப்படையில் தொடர்ச்சியாக எல்லாவற்றையும் அல்லாஹ் படைத்ததாகவும், அதனால் அவனுக்கு எத்தகைய களைப்பும் எற்படவில்லை என்று அல்லாஹ் கூறுவதிலிருந்தே ஆறு நாட்களில் தொடர்ச்சியாக படைத்தாக விளங்க முடியும் தானே?

//''அல்லாஹ் ஆதமை ஒரு பிடி மண்ணிலிருந்து படைத்தான். பூமியின் எல்லாப் பகுதியிலிருந்தும் அதை எடுத்தான்''//
பூமியின் எல்லா பகுதியிலிருந்தும் மண்ணை எடுக்க அல்லாஹ்விற்கு அதிக நேரம் தேவைப்படும்  என்று நமது சிந்தனை சொல்வதால்,  தொடர்ச்சியாக அல்லாஹ் ஆறு நாட்களில் படைக்கவில்லை என கூறுவருகிறீர்களா?

//ஆதம் (அலை) அவர்கள் வெள்ளிக்கிழமை படைக்கப்பட்டார்கள். வெள்ளிக்கிழமை சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டார்கள். வெள்ளிக்கிழமை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இவை மூன்று வெள்ளிக்கிழமைகளில் நிகழ்ந்த வெவ்வேறான நிகழ்வாகும். இதே வெள்ளிக்கிழமையில் நிகழவிருக்கும் முக்கிய யுக முடிவுப் பற்றியும் நபிமொழியில் சொல்லப்படுகிறது. நடந்த, நடக்கவிருக்கும் சம்பவங்கள் நான்கு வெள்ளிக்கிழமைகளில் நிகழ்ந்தவை எனப் புரிந்துகொள்ள உதவுகின்றன! //
ஆதம் அலை அவர்களை படைத்த அதே நாளில் அல்லாஹ் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாக புரிந்தால் தவறில்லை தானே?   வெளியேற்றபட்டது வேறொரு வெள்ளிக்கிழமையில் நடந்ததாக புரிய முடிகிறது.  மேலும் யுக முடிவு நாளும் வேறொரு வெள்ளிக்கிழமையில் தான் நடைபெறும் என்பதை நம்மால் இன்று  தெளிவாக புரிய முடிகிறது.மேற்கண்ட குர்ஆன் 50:38 வசனத்திலிருந்து  தொடர்ச்சியாக ஆறு நாட்களில் படைத்ததாகத்தானே விளங்க முடிகிறது. என்னுடைய புரிதலுக்கு எதிராக எந்த ஒரு குர்ஆன் வசனமும் இல்லை என நினைக்கிறேன்.


மேலும்

//''உங்களில் யார் அழகிய செயலுடையவர் என்பதை சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். அவனது அர்ஷு நீரின் மீது இருந்தது. நீங்கள் மரணத்தின் பின் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள். என (நபியே) நீர் கூறுவீராக!'' 'இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை' என நிராகரித்தோர் கூறுவர். (அல்குர்ஆன் 11:7)

''(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அர்ஷு (சிம்மாசனம்) தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் - நபிமொழிச் சுருக்கம்: புகாரி 3191) //

மேல் உள்ள 11:7 வசனத்தில் அல்லாஹ்வுடைய அர்ஷ்  தண்ணீரின்  மீது இருந்ததாக கூறுகிறது. அந்த வசனமோ அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த பின்பு தான் அல்லாஹ்வுடைய அர்ஷ் நீரின் மீது இருந்தது என தெளிவாக்குகிறது. 

அந்த வசனத்திற்கு சான்றாக  நீங்கள் பதிந்துள்ள ஹதீஸில் அல்லாஹ் இருந்தான். வேறெந்த பொருளும் இருக்கவில்லை.  அவனுடைய அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. பிறகு பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான் அதன் பின் வானங்கள் பூமியை படைத்தான் என உள்ளது.  

பூமியுடன் சேர்ந்தது தானே தண்ணீர் எனும் படைப்பு? அல்லாஹ்வை தவிர  வேறெந்த பொருளும் இருக்காத போது தண்ணீர் மட்டும் எப்படி இருக்க முடியும்? அதுவும் ஒரு பொருள் தானே?  அதன் பின் வானங்கள் பூமியை படைத்தான் என கூறினால் அது எப்படி சரியாகும்?

மேலும் அல்லாஹ் தன் திருமறையில்
فَقَضَاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ فِي يَوْمَيْنِ وَأَوْحَى فِي كُلِّ سَمَاءٍ أَمْرَهَا وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَحِفْظًا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ

ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம் இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம் இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும். (41:12)

وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِنْ فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِلسَّائِلِينَ
அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான் அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான் இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான் (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்). (41:10)

இங்கு அதன் மேலிருந்து எல்லா தேவைகளையும் சீராக நிர்ணயித்தான என உள்ளது இந்த வசனத்தில் வரும் مِنْ فَوْقِهَا  எதை குறிக்கிறது ?  

தெளிவுபடுத்தவும்.

இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி






2010/3/23 <ibnuh...@mail.com>

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
 
To unsubscribe from this group, send email to fromgn+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

muslim

未読、
2010/03/23 6:52:262010/03/23
To: fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்

அன்புச் சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களே ஏனிந்த தடுமாற்றம்?

''உங்களில் யார் அழகிய செயலுடையவர் என்பதை சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். அவனது அர்ஷு நீரின் மீது இருந்தது. நீங்கள் மரணத்தின் பின் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள். என (நபியே) நீர் கூறுவீராக!'' 'இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை' என நிராகரித்தோர் கூறுவர். (அல்குர்ஆன் 11:7)

وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۗ وَلَئِن قُلْتَ إِنَّكُم مَّبْعُوثُونَ مِن بَعْدِ الْمَوْتِ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِنْ هَـٰذَا إِلَّا سِحْرٌ مُّبِينٌ

''வ கான அர்ஷுஹு அலல் மாயி - அவனது அர்ஷு நீரின் மீது இருந்தது''

''வ கான'' என்ற சொல்லுடன் துவக்கினால் அது ஏற்கெனவே இருந்தது என்பதையே குறிக்கும். வானங்கள், பூமியைப் படைப்பதற்கு முன்பே அல்லாஹ்வின் அர்ஷு இருந்தது. அது தண்ணீரின் மீது இருந்தது.

நபி(ஸல்) அவர்கள், '(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான் அவனுக்கு முன் (அவனைத் தவிர வேறு) எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப் பெற்ற பலகையில் (பிரபஞ்சத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்' என்றார்கள். (நபிமொழிச் சுருக்கம்: நூல் - புகாரி தமிழ் 7418. மூலம் 6868
 

حَدَّثَنَا ‏ ‏عَبْدَانُ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏أَبُو حَمْزَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏جَامِعِ بْنِ شَدَّادٍ ‏ ‏عَنْ ‏ ‏صَفْوَانَ بْنِ مُحْرِزٍ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏قَالَ ‏
‏إِنِّي عِنْدَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذْ جَاءَهُ قَوْمٌ مِنْ ‏ ‏بَنِي تَمِيمٍ ‏ ‏فَقَالَ اقْبَلُوا الْبُشْرَى يَا ‏ ‏بَنِي تَمِيمٍ ‏ ‏قَالُوا بَشَّرْتَنَا فَأَعْطِنَا فَدَخَلَ نَاسٌ مِنْ ‏ ‏أَهْلِ ‏ ‏الْيَمَنِ ‏ ‏فَقَالَ اقْبَلُوا الْبُشْرَى يَا ‏ ‏أَهْلَ ‏ ‏الْيَمَنِ ‏ ‏إِذْ لَمْ يَقْبَلْهَا ‏ ‏بَنُو تَمِيمٍ ‏ ‏قَالُوا قَبِلْنَا جِئْنَاكَ لِنَتَفَقَّهَ فِي الدِّينِ وَلِنَسْأَلَكَ عَنْ أَوَّلِ هَذَا الْأَمْرِ مَا كَانَ قَالَ ‏ ‏كَانَ اللَّهُ وَلَمْ يَكُنْ شَيْءٌ قَبْلَهُ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ ثُمَّ خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ وَكَتَبَ فِي الذِّكْرِ كُلَّ شَيْءٍ ثُمَّ أَتَانِي رَجُلٌ فَقَالَ يَا ‏ ‏عِمْرَانُ ‏ ‏أَدْرِكْ نَاقَتَكَ فَقَدْ ذَهَبَتْ فَانْطَلَقْتُ أَطْلُبُهَا فَإِذَا السَّرَابُ يَنْقَطِعُ دُونَهَا وَايْمُ اللَّهِ لَوَدِدْتُ أَنَّهَا قَدْ ذَهَبَتْ وَلَمْ أَقُمْ

وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ ثُمَّ خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ  

''அவனது அர்ஷு தண்ணீரின் மீது இருந்தது. ثُمَّ  - பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான்''

''அவனே மகத்தான அர்ஷின் இரட்சகன்'' (அல்குர்ஆன் 9:129)

தொடர்ந்து மற்ற விபரங்களையும் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

 
2010/3/23 Aero Travels <eru...@gmail.com>

Aero Travels

未読、
2010/03/23 9:18:242010/03/23
To: fro...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 

அன்புச் சகோதரர் முஸ்லீம் அவர்களுக்கு, 
ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளும் வரை வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படத்தானே செய்யும்.   அதனால் தான் சிந்தனையால் எழும் கேள்விகளுக்கு அல்லாஹ்வின் இறக்கிய கல்வி ஞானத்தை கொண்டு  இந்த குழுமம், தெளிவான பதில் அளித்து தடுமாற்றம் நீங்க சிறப்பாக பாடுபட்டுவருகிறது. அல்ஹம்துலில்லாஹ். 

நீங்கள்  கூறுவது  போல்

// ''வ கான'' என்ற சொல்லுடன் துவக்கினால் அது ஏற்கெனவே இருந்தது என்பதையே குறிக்கும் //
وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ

"அவனது அர்ஷ் நீரின் மீது இருந்த நிலையிலே உங்களில் யார் அழகிய செயலுடையவர் என்பதை சோதிப்பதற்காக அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான்" என மொழிபெயர்க்க முடியுமா?

அந்த வசனத்திலோ வானத்தையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் என இறந்த காலத்தில் கூறப்பட்டுள்ளது.  அதன் பிறகு அவனுடைய அர்ஷ் நீரின் மீது இருந்தது என கூறப்படுவதால் தான் நீங்கள் சொல்லும் விளக்கம் சரியாக புரியவில்லை.  மேலும் அல்லாஹ்வுடைய அர்ஷ்ஷை இருந்ததை பற்றி நான் கேட்கவில்லை. வானத்தையும் பூமியையும் படைப்பதற்கு முன் நீர் இருந்ததை பற்றி தான் இங்கு கேட்கிறேன். 

இதே போல் வேறு இடங்களில் குர்ஆனில்  இந்த வார்த்தை வந்திருந்தால் அதை கொண்டு தெளிவுபடுத்தனால் நன்றாக இருக்கும். ஹதிஸை அதன் பின் ஆய்வு செய்வோம்.

மற்றவை உங்கள் விளக்கத்திற்கு பின்

இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி


2010/3/23 muslim <tomu...@gmail.com>

ibnuh...@mail.com

未読、
2010/03/23 14:08:352010/03/23
To: fro...@googlegroups.com
 சலாம்.........
தப்லீக் பயானில் , கூறினார்.......
.. மூன்று நாள் , நாப்பது நாள்  போவதெல்லாம் அல்லாஹ்வின் பாதையில்......... இப்படி போக நினைத்தால் பல தடைகள் வருவதாக இறைவன்  குரானில் கூறுகின்றான்..........   இவை எல்லாம்  வந்தாலும்  நாம் போக வேண்டும். மக்காவிலிருந்து ஒரு சஹாபி  எல்லா சொத்துகளையும் விட்டு விட்டே அல்லாஹ்வின் பாதையில் போனார்...... ... மேலும்,  ரசூலுல்லாஹ் ,  ஒரு போருக்கு , ஒரு ஜமாஅத   அனுப்பும்போது ...................என பல விசயங்களை சொன்னார்...........

  அந்த காலத்திலும் தூதர் அவர்கள்,  இப்ப இருக்கும் தப்லீக் கூட்டத்தினர் போன்று தான் அன்றும்  ஜமாஅத் கள்  ALLAAHஹ்வின் பாதையில் அனுப்பிக் கொண்டிருந்தார்கள் , என்ற  ஒரு  தோற்றத்தை  ஏற்ற்படுத்தி இப்பவும் பயான் செய்கின்றனர்..   கேட்பவர்களும்  எந்த ஒரு சலனமுமின்றி கேட்கின்றனர்..........
இது எந்த வகையில் சரி ??  கருத்துக்களை பதியுங்கள்...........

Syed Omer S. Maricar

未読、
2010/03/24 4:15:582010/03/24
To: fro...@googlegroups.com
வ அலைக்கும் சலாம்,
நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரே பதில் :
 
"நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குரான்  3:104 )"
 
"தப்லிக்" என்றால் பிறருக்கு அழைப்பு கொடுப்பது . " ஜமாஅத்" என்றால் கூட்டம்.
அதாவது " அழைப்பு கொடுக்கும் கூட்டம் " என்பது பொருள்.
 
நீங்கள் சொன்னது போல் 40 நாள் அல்லது 3 நாள் செல்பவர்கள் , அல்லாஹ் மேல கூறியது போல்
"நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயமாக" ( பிற முஸ்லிம் சகோதரர்களை அழைத்து பள்ளியின் பக்கம் தொடர்புடயவர்களாய் , 5  வேலை விடாமல் தொழுகவும் , நபியின் சிறு சுன்னத்தையும் விடாமல் பேணவும் ) இருக்கிறார்கள்.
 
ஆதலால் ,  தப்லிக் ஜமாத்தும்  ஒரு "நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயமாக" இருக்கிறது. ஆனால் எந்த வழி நேர் வழி என்று அல்லாஹ் மட்டுமே  அறிந்தவன். அதனால் தான் நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் 5 வேலை தொழுகையிலும் குறைந்தபச்சம் 17 தடவை " யா அல்லாஹ் என்னை நேர் வழியில் செலுத்துவாயாக " என்று சூராஹ் பாத்திஹாவில் அல்லாவிடம் கேட்கிறோம். கடைசி வரையிலும் யாருமே அறிய முடியாது எந்த வழி நேர் வழி என்று , அல்லாஹ்வை தவிர.
நபி (ஸல்) கூறுகிறார்கள், என்னுடைய உம்மத்தில் 73 பிரிவுகள் பிரியும். அதில் ஒரு கூட்டம் மட்டுமே சொர்க்கத்தில் நுழையும், அந்த கூட்டம்  எது வென்றால், அதுவே " அல்லாஹ்வின் கட்டளையான குரானையும் , எனது வழி முறையான சுன்னத்தையும் பேணும் கூட்டம்" .
 
அதனால் பிற ஜாமத்தை குறை கூறுவதை விட்டு விட்டு , முடிந்தால் நீங்களும் "நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயத்தில் " இணைந்து ஈருலகிலும் வெற்றி பெற்றோராரை இருக்க முயற்சி செய்யுங்கள்.
 
அல்லாஹ்வே போதுமானவன் .
வஸ்ஸலாம்,
உமர்.
 
2010/3/23 <ibnuh...@mail.com>

--

muslim

未読、
2010/03/24 6:04:122010/03/24
To: fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புச் சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களுக்கு

அல்லாஹ் வானங்கள், மற்றும் பூமியைப் படைப்பதற்கு முன் அவனது அர்ஷு தண்ணீர் மீது இருந்தது என்பதை ஹதீஸின் துணையுடன் எழுதியிருந்தேன். அல்லாஹ் வானங்கள், பூமியைப் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். அவனது அர்ஷு தண்ணீரின் மீது இருந்தது. என்ற நபிவழிச் செய்தியும் இதற்கு வலுசேர்ப்பதால் இதனடிப்படையில் 11:7வது வசனத்திற்கு நம் தரப்புக் கருத்தைப் பதிவு செய்திருந்தேன். 

ஆனால், நாம் எழுதிய 11:7வது வசனத்தின் தமிழாக்கத்தை நீங்கள் தவறு என்கிறீர்கள் என்று கருதுகிறேன். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக எழுதினால் திருத்திக்கொள்ளலாம்.

மற்றவை உங்கள் கருத்துக்குப் பின்,

Aero Travels

未読、
2010/03/24 7:27:182010/03/24
To: fro...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
 
அன்புச் சகோதரர் முஸ்லீம் அவர்களுக்கு,
 
ஒரு விஷயத்தை நான் என்னுடைய கேள்விகளால் ஆய்வு செய்து கொள்வது என்னுடைய வழக்கம்.  நாம் அரபி ஞானம் பெற்றவன் கிடையாது என்பதை நீங்கள் அறிந்ததே. 
 
குர்ஆன் ஹதீஸ் இரண்டையும் நாம் அறிவைக்கொண்டு சிந்திப்பது தவறு என்று கூறினால் நான் எந்த கேள்விகளையும் இங்கு வைக்க மாட்டேன். 
 
இஸ்லாம் என்பது குறிப்பிட்ட சில விஷயங்களை மனதால் நம்பி (ஈமான் கொண்டு) மற்ற அனைத்து விஷயங்களை அறிவால்  சிந்தித்து பின்பற்ற சொல்கின்ற மார்க்கம்,
 
எனவே நம்மால் முடிந்தவரை இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து பிறருக்கும் முடிந்தவரை பிரச்சாரம் செய்ய முயற்சி செய்யும் நிலையில் தான் நமது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். 
 
//  நபி(ஸல்) அவர்கள், '(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான் அவனுக்கு முன் (அவனைத் தவிர வேறு) எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப் பெற்ற பலகையில் (பிரபஞ்சத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்' என்றார்கள். (நபிமொழிச் சுருக்கம்: நூல் - புகாரி தமிழ் 7418. மூலம் 6868) //
 
 
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு குர்ஆன் வசனத்திற்கு நாம் விளக்கம் கொடுக்க வேண்டுமா? அல்லது குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் நாம் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கொடுக்க வேண்டுமா?
 
இந்த ஹதீஸின்  வாசகம் இந்த ஹதீஸிலேயே முரண்படுவது போல் தெரிகிறது.  ஏன் என்றால் அல்லாஹ் மட்டுமே இருந்தான் அவனுக்கு முன் எந்த பொருளும் இருக்கவில்லை. 
 
மேலும் தண்ணீரும் படைக்கப்பட்ட பொருளாகவே கருத முடியும்.  அது எந்த பொருளும் இல்லாத நிலையில் தண்ணீர் இருந்தாக கூறுவது அறிவிற்கு பொருந்தவில்லை.   எனவே தான் கேள்வி எழுப்பினேன்.  
 
மேலும் அந்த வசனத்தை நான் கூறியுள்ள படி மொழிபெயர்ப்பு செய்ய முடியுமா?  விபரம் தரவும். 
 
"அவனது அர்ஷ் நீரின் மீது இருந்த நிலையிலே உங்களில் யார் அழகிய செயலுடையவர் என்பதை சோதிப்பதற்காக அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான்" என மொழிபெயர்க்க முடியுமா?
 
இதல்லாமல் நான் வேறு எந்த உள்நோக்கத்துடனும் என் கேள்விகளை கேட்கவில்லை.  தவறு சரி என்பது மொழி புலமையுள்ளவர்கள் தெளிவுபடுத்த வேண்டிய விஷயமாகும்.  எந்த விஷயத்தையும் ஆய்வு செய்தால் தானே சரி தவறு என்பது புரிய முடியும். நான் விளங்கிக் கொள்வதற்காகவே கேள்விகளை எழுப்புகிறேன்.
 
முடிந்தவரை என் கேள்விகளுக்கு பதில் தந்தால் நான் விளங்கிக் கொள்ள வசதியாக இருக்கும்.
 
அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள் செய்ய பிரார்த்திக்கும் உங்கள் அன்புச்சகோதரன்
இப்படிக்கு
 
சிராஜ் ஏர்வாடி
 


 
2010/3/24 muslim <tomu...@gmail.com>

muslim

未読、
2010/03/24 13:19:092010/03/24
To: fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

அன்புச் சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களுக்கு, உங்கள் கருத்துகளுக்கு நன்றி! குர்ஆன், சுன்னாவை சிந்தித்து விளங்கவேண்டும் என்று நீங்கள் கூறுவது சரியே.

அல்லாஹ் நித்திய ஜீவன், அவன் என்றும் நிலைத்திருப்பவன். ஆதியில் அல்லாஹ் இருந்தான் அவனைத் தவிர வேறு எந்தப் பொருளும் இல்லை என்பதை சமீபத்திய நிகழ்வாகக் கொள்ளாமல், சிந்தனைக்கு எட்டாத பல யுக ஆண்டுகள் காலம் பின்னோக்கிய விஷயங்களாகக் கொள்ளவேண்டும்.

ஆதியில் அல்லாஹ் மட்டும் தனித்திருந்தான். பின்னர் தண்ணீரைப் படைத்து, தனக்கென அர்ஷைப் படைத்து அதைத் தண்ணீர் மீது அமைத்துக் கொண்டான். அவன் தனித்திருந்தான் என்பதும், பின்னர் அரியணையை தண்ணீர் மீது அமைத்துக்கொண்டான் என்பதும் எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று முரண்பாடானதல்ல!

11:7வது வசனத்தில் இடம்பெறும் ''அல்லாஹ்வின் அர்ஷு தண்ணீர் மீது இருந்தது'' என்பது குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ''தண்ணீர் எதன் மீது இருந்தது?'' என்று கேட்டபோது ''தண்ணீர் வளி மண்டலத்தின் மேற்பகுதியில் இருந்தது'' என்று பதில் கூறினார். இது இப்னு கஃதீர் விளக்கவுரையில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இவற்றை நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கவில்லை என்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும், அல்லாஹ் நாடினால் தண்ணீரைப் படைத்து அதை எங்கு வேண்டுமானாலும் அவன் வைத்திருப்பான். அதற்கு அவன் ஆற்றலுள்ளவன்.

''அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைப்பதற்கு ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அர்ஷு தண்ணீரின் மேல் இருந்தது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அல்ஆஸ் (ரலி) (நூல் - முஸ்லிம் 5160)

நபி(ஸல்) அவர்கள், '(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான் அவனுக்கு முன் (அவனைத் தவிர வேறு) எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப் பெற்ற பலகையில் (பிரபஞ்சத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்' என்றார்கள். (நபிமொழிச் சுருக்கம்: நூல் - புகாரி தமிழ் 7418. மூலம் 6868)

புகாரி நூலில் இடம்பெற்ற மேல்கண்ட அறிவிப்பில் அவனுக்கு முன் எந்தப் பொருளும் இருக்கவில்லை. எல்லாமே அல்லாஹ் படைத்தவையே. என்றப் பொருளைத் தருகின்றது. அதில் தண்ணீரை முதல் படைப்பாக்கினான் பின்னர் அரியணை, எழுதுகோல், எழுத்துப் பலகை என படைப்புகள் தொடர்கின்றன. இதுவும் வானங்கள், பூமியைப் படைத்து மனித இனத்தையும் மற்ற உயிரினங்களையும் படைக்கும் திட்டத்தின் அம்சங்களாகும்.

''நிச்சயமாக உங்களது இரட்சகனாகிய அல்லாஹ்தான் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாள்களில் படைத்து பின்னர் (தனது தகுதிக்கேற்றவாறு) அர்ஷின் மீது அமர்ந்தான். அவன் இரவைப் பகலால் மூடுகிறான். அது (இரவாகிய) அதை வேகமாகத் தொடர்கிறது.  சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் தனது கட்டளைக்கு வசப்படுத்தப்பட்டவைகாளக(ப் படைத்துள்ளான்) அறிந்து கொள்ளுங்கள்! படைத்தலும் கட்டளையிடுதலும் அவனுக்கே உரியனவாகும். அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் அருள்வளமிக்கவன்'' (அல்குர்ஆன் 7:54)

வானங்கள், பூமியைப் படைப்பதற்கு முன் அல்லாஹ்வின் அர்ஷு இருந்ததாகவே இந்த வசனத்திலிருந்து விளங்க முடிகிறது. அர்ஷில் நிலைகொண்டு கட்டளையால் இப்பேரண்டத்தை இயக்கிக்கொண்டிருக்கிறான்.

//"அவனது அர்ஷ் நீரின் மீது இருந்த நிலையிலே உங்களில் யார் அழகிய செயலுடையவர் என்பதை சோதிப்பதற்காக அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான்" என மொழிபெயர்க்க முடியுமா?//

இந்தக் கேள்விக்கு மொழிப் புலமையுள்ளவர்கள் விளக்கமளிப்பார்கள்!


2010/3/24 Aero Travels <eru...@gmail.com>

ibnuh...@mail.com

未読、
2010/03/24 12:25:282010/03/24
To: fro...@googlegroups.com
சலாம்,
brother, Syed Omer S. Maricar,,

நீங்கள் எழுதியது..
..>>>>பிற ஜமாஅத்தை  குறை கூறுவதை விட்டு விட்டு......<<<<<<<
நான் எங்கே குறை கூறி உள்ளேன்..... ஒரு வரி காட்ட முடியுமா.......?

சகோதரர், முதலில்  நான் என்ன எழுதி , என்ன கேட்டுள்ளேன் என்பதை , தெளிவாக விளங்கி விட்டு , பின் பதில் எழுதுவதை ஆரம்பியுங்கள்.............
இஷ்டத்துக்கு,  குற்றம் சுமத்தி பாவத்தை  அள்ளிக் கட்ட வேண்டாம்.....  நான் இவர்களின் தப்லீக்  bayaan   பற்றிய கருத்தை இங்கு குழும சகோதரர்களுடன் கேட்டுள்ளேன். ...அவ்வளவுதான்.......
மேலும்,,
 நீனகள் >>>>>கடைசி வரையிலும் யாருமே அறிய முடியாது எந்த வழி நேர் வழி என்று , அல்லாஹ்வை தவிர /////////.
நபி அவர்கள் கூறுகிறார்கள், என்னுடைய உம்மத்தில் 73 பிரிவுகள் பிரியும். அதில் ஒரு கூட்டம் மட்டுமே சொர்க்கத்தில் நுழையும், அந்த கூட்டம்  எது வென்றால், அதுவே " அல்லாஹ்வின் கட்டளையான குரானையும் , எனது வழி முறையான சுன்னத்தையும் பேணும் கூட்டம்" <<<<

இங்கு , யாரும் அறிய முடியாது நேர்வழி என்று எழுதுகிறீர்கள்... பின் , ஒரு கூட்டம்  சுவர்க்கம் போகும் , ஏனெனில் அது நேர்வழியில் உள்ளதால், என்பதை எழுதுகின்றீர்கள்....... ஏன் இந்த  முரண்பாடு ??
கடைசி வரையிலும் யாருமே அறிய முடியாது எந்த வழி நேர் வழி என்று , அல்லாஹ்வை தவிர என்பதற்கு உங்களிடம் உள்ள ஆதாரம் என்ன ??????????????
தெளிவாக்குங்கள்...... 


 
全員に返信
投稿者に返信
転送
新着メール 0 件