பால் குடி உறவு முறை பற்றிய கேள்வி

2,028 views
Skip to first unread message

seenimohamed safeer

unread,
Sep 24, 2009, 12:27:08 AM9/24/09
to fro...@googlegroups.com
அஸ்லாமு அழைக்கும் 


அன்புள்ள சகோதரே எனக்கு தெரிஞ்ச ஒருவர் அவரது வாப்பாவின் சொந்த தங்கச்சின்( மாமி ) மகளை காதலித்து கொண்டிருக்கிறார் திருமணமும் செய்ய இருக்கிறார் பிரச்சினை என்னவென்றால் அவர் சிறுவயதாக இருக்கும் போது அவரது வாப்பாவின் சொந்த தங்கச்சி( மாமி ) இவருக்கு தாய் பால் கொடுத்திருக்கிறார் அப்படி இருக்கும் போது மனைவியாக போகும் அவனும் இவளும் ஒரே தாய்யில் பால் குடித்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் பால்குடி உறவு முறை தானே?இவர்கள் திருமணம் முடிக்கலாமா?குர்ஆன்,கதீஸ் இருந்து சரியான பதில் தரவும்.


Mohamed Aslam

unread,
Sep 24, 2009, 1:41:58 AM9/24/09
to fro...@googlegroups.com
இரத்த பந்தத்தால் ஏற்படும் உறவுகளில் திருமணம் செய்து கொள்ள எந்ததெந்த உறவு முறைகளெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளதோ, அதே திருமண உறவு முறைகள் பால்குடி உறவுகளிலும் இஸ்லாம் தடை செய்திருக்கிறது."உங்களுக்கு பாலூட்டிய செவிலித் தாய்மார்களையும்" (நீங்கள் மணப்பது விலக்கப்பட்டுள்ளது.)
திருமணம் செய்வதற்குத் தடை செய்யப்படும் இரத்த சம்பந்தப்பட்ட உறவுகள், பால்குடி உறவுகள் பற்றியும் முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள். என்றாலும், இஸ்லாத்தை விமர்சிக்கும் மேதகு நண்பர்களுக்கு இது பற்றி அரிச்சுவடி கூட தெரியாமல் விமர்சித்திருக்கிறார்கள். மணமுடிக்கத் தடை செய்யப்பட்ட உறவுகள் பற்றி மேலும் வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம், முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவார்கள் என்று திருக்குர்ஆன் (003:103, 049:010) வசனங்கள் கூறுகிறது.
இனம், நிறம், மொழி, நாடு என்று பகுப்பில்லாமல் முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மார்க்க சகோதரர்கள் என்று இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.இந்த சகோதரத்துவம் இரத்தம் பந்தம், அல்லது பால்குடி சம்பந்தமான உறவு முறைகள் அல்ல. ஒரே மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் உலக முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். இஸ்லாம் யார் யாருக்கிடையில் திருமண உறவை தடை செய்திருக்கிறதோ அந்த உறவுகள் தவிர, மார்க்க சகோதரர்கள் என்பது திருமணத்திற்கு ஒரு தடை இல்லை. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு பெண் கொடுப்பதோ, பெண் எடுப்பதோ தடை செய்யப்பட்டதல்ல. என்பதை புரிந்து கொண்டிருந்தால், அறியாமல் தவறாக விளங்கிய இரு நபிமொழிகளிலும் ஏற்படுத்திய முரண்பாடு அடிபட்டுப் போகும். நண்பர்கள் இரண்டு நபிமொழிகளை புரிவதில் இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த நபிமொழிகளைப் பார்ப்போம்.
நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) "நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்" என்று கூறினார்கள். (புகாரி, 5081)
நபி (ஸல்) அவர்கள், தமது தோழர் அபூ பக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களை பெண் கேட்கிறார்கள். மார்க்க ரீதியாக சகோதரர்களாகி விட்டதால் "நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!" என்று அபூ பக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அதாவது, நபி (ஸல்) அவர்களும், அபூ பக்ர் (ரலி) அவர்களும் மார்க்க சகோதரர்களாகி விட்டதால் தமது மகள் ஆயிஷாவை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டது என்று கருதியிருந்த அபூ பக்ர் (ரலி) அவர்கள் இங்கே தமது கருத்தைத் தெரிவிக்கிறார்.
நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள்" என்று கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள், அபூ பக்ர் (ரலி) அவர்கள் இருவருக்கும் இரத்த பந்த உறவு இல்லை. பால்குடி உறவும் இல்லை என்பதால் மார்க்க சகோதரர்கள் என்ற சகோதரத்துவம் திருமண உறவுக்குத் தடை இல்லை என்று அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கம் தருகிறார்கள். இதிலிருந்து ஒரு மார்க்க சட்ட விளக்கம் முஸ்லிம்களுக்குக் கிடைக்கிறது என்பது தனி விஷயம்.
இதற்கு முரணாக நண்பர்கள் வைக்கும் நபிமொழி.
நபி(ஸல்) அவர்களிடம் 'தாங்கள் ஹம்ஸா(ரலி) அவர்களின் புதல்வியை மணந்துகொள்ளக் கூடாதா?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'அவள் பால்குடி உறவு முறையினால் எனக்குச் சகோதரர் மகள் ஆவாள்" என்று கூறினார்கள. (புகாரி,5100)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இன்னொரு நபிமொழியிலிருந்து… நபி (ஸல்) அவர்கள், ஹம்ஸா (ரலி) அவர்களுடைய மகளின் விஷயத்தில், "அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்படவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த பந்தத்தின் காரணத்தால் எவையெல்லாம் ஹராம் (தடை செய்யப்பட்டதாக) ஆகுமோ அவையெல்லாம் (செவிலித் தாயிடம்) பால்குடிப்பதாலும் ஹராம் ஆகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள்" என்று கூறினார்கள். (புகாரி, 2645) புகாரி, 2645, 5100
இரு நபிமொழிகளில் இடம்பெறும் ஹம்ஸா பின் முத்தலிப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை என்ற வரலாறு தெரியாமல் பிதற்றியிருக்கிறார்கள். வரலாறு இதுதான்…"ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை ஆவார். இது இரத்த உறவு இதன்படி ஹம்ஸா (ரலி) அவர்களின் மகளை நபி (ஸல்) அவர்கள் மணப்பதில் தடையில்லை. எனினும் ஹம்ஸா (ரலி) அவர்களும், நபி (ஸல்) அவர்களும் ஒரே செவிலித் தாயிடம் சிறு வயதில் பால் அருந்தியுள்ளனர். அபூலஹபின் முன்னாள் அடிமைப் பெண்ணான ஸுவைபா (ரலி) அவர்களே அந்த செவிலித் தாய். இதன்படி நபி (ஸல்) அவர்களும் ஹம்ஸா (ரலி) அவர்களும் சகோதரர்கள் ஆவர். எனவே ஹம்ஸாவின் மகளை தாம் மணந்து கொள்ள முடியாது நபி (ஸல்) அவர்கள் விளக்கினார்கள். (உம்தத்துல் காரீ) பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, மக்களை மணமுடிப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது. இந்த உறவில் மணமுடிக்கும் இருவர் சிறு வயதில் ஒரு செவிலித் தாயிடம் பால்குடித்திருந்தால் இருவரும் சகோதரர், சகோதரியாகக் கருதப்படுவார்கள். அவர்களிடையே திருமணம் உறவு தடை செய்யப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு ஹம்ஸா (ரலி) அவர்கள் இரத்த பந்த உறவு முறையில் பெரிய தந்தை, அதனால் ஹம்ஸா (ரலி) அவர்களின் மகளை நபி (ஸல்) அவர்கள் மணமுடிப்பதில் தடையில்லை என்றாலும் ஹம்ஸா (ரலி) அவர்களும், நபி (ஸல்) அவர்களும் ஒரு செவித் தாயிடம் சிறு வயதில் பால்குடித்திருக்கிறார்கள் அதனால் இருவருக்கும் சகோதரர்கள். சகோதரரின் மகளை மணமுடிக்கக் கூடாது என்ற அடிப்படையில் பால்குடி சகோதரரின் மகளை மணமுடிப்பது ஆகுமானதல்ல. அபூ பக்ர் (ரலி) மார்க்க ரீதியாக, நபி (ஸல்) அவர்களுக்குச் சகோதரர் ஆவார்.ஹம்ஸா (ரலி) பால்குடி உறவு முறையில் நபி (ஸல்) அவர்களுக்குச் சகோதரர் ஆவார். என்று… நபிமொழிகளில் உள்ளதை உள்ளபடி விளங்கினாலே போதும், அபூ பக்ர் (ரலி) மகளை நபியவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.ஹம்ஸா (ரலி) மகளை நபியவர்கள் மணமுடிக்க விலக்கப்பட்டது.5081, 5100 இரு நபிமொழிகளும் முஸ்லிம் சமுதாயத்துக்கு இரு சட்ட விளக்கங்களை முன் வைக்கிறது. மற்றபடி ஏமாற்றுவது, மோசடி செய்வது இறைத்தூதர்களுக்கு அழகல்ல. நபி முஹம்மது அவர்களின் மீது இறைவன் சாந்தியை வழங்குவனாக!
palkudi.bmp

நமக்குள் இஸ்லாம்

unread,
Sep 24, 2009, 2:42:37 PM9/24/09
to fro...@googlegroups.com

ஸலாம்
 
கேள்விக்கு பதிலளிக்கும் சகோதரர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியவை.
 
1) பதிக்கப்படும் பதில்களுக்கு, அவை நேரடியாக சிந்தித்துத் தொகுக்கப்பட்டிருந்தாலும் சரி, பிற இடங்களிலிருந்து காப்பி, பேஸ்ட் செய்யப்பட்டிருந்தாலும் சரி அந்த பதில்களுக்கு பதித்தவரே முழு பொறுப்பாளர் ஆவார். பதில்களில் சந்தேகம் இருப்பின் நிர்வாகமும் சுட்டிக் காட்டி விளக்கம் கேட்கும் என்பதை அறியத் தருகிறோம்.
 
2) கேள்விகளை ஒன்றுக்கு பலமுறைப் படித்து முறையாக பதிலளிக்கவும். மேற்கண்ட "பால்குடி" கேள்விக்கு பொருத்தமில்லாத பதில் பதிக்கப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக் காட்டுகிறோம். (இந்த பதில் மாற்றுமத சகோதரர்களின் இஸ்லாத்திற்கெதிரான விமர்சனத்துக்காக கொடுக்கப்பட்ட பதிலாகும். இது எப்படி இந்தக் கேள்விக்கு சரியான பதிலாக அமையும் என்பதை பதிலை பதித்த சகோதரர் சிந்திக்கட்டும்.
 
3) பிற இணையங்களிலிருந்து பெறப்பட்ட பதில்களை இங்கு பதித்த பிறகு அவசியம் அந்த இணையத்தின் சுட்டியை இங்கு கொடுக்க வேண்டும்.  உதாரணமாக மேற்கண்ட பதில் "விமர்சன - விளக்கம்" என்ற வலைச்சுட்டியிலிருந்து எடுக்கப்பட்டதாகும். அதன் சுட்டி (லிங்க்) இதோ..
 
4) பதிலளிக்கிறோம் என்ற பெயரில் அவசரப்பட வேண்டாம். உலக மக்களுக்களை சென்றடையும் பதில்களாக இருப்பதால் நிதானமும், தெளிவான வழிகாட்டலும் அவசியமாகும்.  அவசரப்பதிவுகளில் தவறுகள் வரலாம்.
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com   

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe   

muslim

unread,
Sep 25, 2009, 7:14:26 AM9/25/09
to fro...@googlegroups.com

கேள்வி:-

//அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புள்ள சகோதரரே எனக்கு தெரிஞ்ச ஒருவர் அவரது வாப்பாவின் சொந்த தங்கச்சியின்( மாமி ) மகளை காதலித்து கொண்டிருக்கிறார் திருமணமும் செய்ய இருக்கிறார் பிரச்சினை என்னவென்றால் அவர் சிறுவயதாக இருக்கும் போது அவரது வாப்பாவின் சொந்த தங்கச்சி( மாமி ) இவருக்கு தாய் பால் கொடுத்திருக்கிறார் அப்படி இருக்கும் போது மனைவியாக போகும் அவனும் இவளும் ஒரே தாயிடம் பால் குடித்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் பால்குடி உறவு முறை தானே? இவர்கள் திருமணம் முடிக்கலாமா? குர்ஆன்,கதீஸ் இருந்து சரியான பதில் தரவும்.// - சீனி முஹம்மது சஃபீர்.
 
பதில்:-

வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்

தந்தையின் உடன் பிறந்த சகோதரி மாமி உறவாகும். மாமியின் மகள் மணமுடிக்க ஆகுமானவர்! ஆனால், பால்குடி குழந்தைப் பருவத்தில் மாமியிடம் தாய்ப் பால் அருந்திருந்தால் மாமியின் மகளுக்கு பால்குடி சகோதரர் ஆகிவிடுவதால் மாமியின் மகளை மணமுடிக்க விலக்கப்பட்டவராவார். பிறப்பால் ஏற்படும் இரத்த உறவும், பாலருந்தும் பருவத்தில் ஒரு பெண்ணிடம் தாய்ப் பால் அருந்துவதால் ஏற்படும் பால்குடி உறவும் திருமண உறவை ரத்து செய்து செய்துவிடும்.

நபிமொழிகள்

(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒருவர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களும், 'அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்றே நானும் நினைக்கிறேன்" என்று கூறினார்கள். நான், 'இன்னார் - என் பால்குடித் தந்தையின் சகோதரர் உயிருடன் இருந்தால் நான் திரையின்றி இருக்கும்போது என்னிடம் அவர் வரலாமா?' என்று கேட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஆம். (வரலாம்.) இரத்த உறவின் காரணத்தால் ஹராமாகிற அனைத்துமே பால்குடி உறவின் காரணத்தாலும் ஹராமாகி விடும்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் ஆயிஷா(ரலி) (நூல்கள் - புகாரி 2646, 3105, 5099. முஸ்லிம் 2853. இந்த ஹதீஸின் பிற்பகுதி கருத்து மட்டும் அலி (ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்டு திர்மிதீ 1156)

நபி(ஸல்) அவர்கள், ஹம்ஸா(ரலி) அவர்களின் மகளின் விஷயத்தில், 'அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த உறவால் எந்த உறவுகளெல்லாம் (மணமுடிக்கத் தகாத) விலக்கப்பட்ட உறவுகளாகுமோ அந்த உறவுகளெல்லாம் பால்குடி உறவாலும் விலக்கப்பட்டதாகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள் - புகாரி 2645. முஸ்லிம் 2864)

தாய்மார்கள் குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் நிரப்பமாக பாலூட்ட வேண்டும் என்று இறைவசனம் கூறுகிறது.

(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும் பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்

எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது¢ (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்¢ இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது. தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை¢ ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 2:33)

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம் அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.

(அல்குர்ஆன் 31:14)

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்.

அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: 'இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்¢ அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்' என்று கூறுவான்.
(அல்குர்ஆன் 46:15)

ஒரு குழந்தையின் பால்குடி பருவம் இரண்டு வயதிற்குள் இருக்க வேண்டும். இரண்டு வயதைக் கடந்த குழந்தைகள் தாய்மார்களிடம் பால் அருந்தினாலும் பால்குடி உறவு ஏற்படாது. குழந்தை பால்குடியை மறக்கச் செய்யும் வயது இரண்டு வருடங்கள் என்று இறைமறை மற்றும் நபிமொழிகளிலிருந்து விளங்க முடிகிறது. தாய்மார்களிடம் குழந்தைகள் பசிக்காகப் பால் அருந்தியிருக்க வேண்டும்.

(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஓர் ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறிவிட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், 'இவர் என் (பால்குடி) சகோதரர்'' என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளைப்பால் அருந்தியிருந்தால்) தான்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல் - புகாரி 2647, 5102. முஸ்லிம் 2884)

குழந்தை பால்குடி மறக்கும் பருவத்திற்கு (இரண்டு ஆண்டுகளுக்கு) முன்பு இரப்பை - வயிறு நிரம்பும் அளவுக்கு பால் குடித்திருந்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) (நூல் - திர்மிதீ 1162)

(ஒரு குழந்தை செவிவலித் தாயிடம்) ஒரு தடவையோ இரண்டு தடவைகளோ மட்டும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (அவ்விருக்குமிடையே) பால்குடி உறவு ஏற்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 2869. திர்மிதீ 1160. இதே கருத்தில் உம்மு ஃபள்ல் (ரலி) அவர்களின் அறிவிப்பு முஸ்லிம் 2871-2875)

பால்குடி உறவு ஏற்படுவது குழந்தை பால்குடி மறக்கும் இரண்டு வயதுக்கு முன்பு பால் அருந்தியிருக்க வேண்டும். அதுவும் குழந்தைக்குப் பசியேற்பட்டு இரைப்பை நிரம்ப பசியடங்கும் அளவுக்கு பால் அருந்தியிருக்க வேண்டும். குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக ஓரிரு முறை உறிஞ்சுவதும், வெறுமனே பால் கொடுப்பதாலும் பால்குடி உறவு ஏற்பட்டு விடாது! இதைக் குழந்தைக்குப் பால் கொடுத்த தாய்மார்களே உறுதிப்படுத்திட முடியும்.

'நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, 'நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்' என்றார். அதற்கு நான் 'நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே' என்று கூறினேன். உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?' என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாரத்துச் செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்"

அறிவிப்பவர் உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) (நூல் - புகாரி 88, 2052, 2640, 2659, 2660. திர்மதீ 1161)

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்தபோது ஒரு கிராமவாசி வந்து நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏற்கெனவே மனைவி இருக்கும் நிலையில் நான் மற்றொரு பெண்ணை மணந்து கொண்டேன். என்னுடைய முதல் மனைவி ''நான் உம்முடைய புதிய மனைவிக்கு ஒரு தடவையோ இரு தடவைகளோ பாலூட்டியிருக்கிறேன் (எனவே இந்தத் திருமணம் செல்லாது) என்று கூறுகிறார்'' எனத் தெரிவித்தார். அப்போது ''ஒரு தடவையோ இரு தடவைகளோ மட்டும் (உறிஞ்சிக் குடிக்கும் வகையில்) பாலூட்டுவதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்பட்டுவிடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் உம்மு ஃபள்ல் (ரலி) (நூல் - முஸ்லிம் 2870)

பால்குடி உறவுக்கான சட்டம் திருமண உறவை ரத்து செய்துவிடும் என்பதால் குழந்தைக்குப் பால் கொடுத்த தாய்மார்கள் பாலூட்டு இஸ்லாமிய சட்டங்களை அறிந்து தாம் குழந்தைக்குப் பாலூட்டியதை உள்ளபடி அறிவித்தல் வேண்டும். அவரின் வாக்கு மூலமே இறுதியானது. எனவே இதில் சம்பந்தப்பட்டவருக்கு பால்குடி தொடர்பான சரியான இஸ்லாமிய வழிகாட்டலை எடுத்துச் சொல்லிப் புரிய வைத்திட வேண்டும். சம்பந்தப்பட்ட பாலுட்டிய தாய் தவிர்த்து, பிறர் மற்றவரிடமிருந்து பெறும் செவி வழிச் செய்திகளைக் கேட்டு உறுதி இல்லாத இவ்விஷயத்தைப் பரப்புவதை தவித்துக்கொள்ள வேண்டும்!

பால்குடி உறவில் மணமுடிக்க விலக்கப்பட்டவர்கள்.

உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும். உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள். அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.

(அல்குர்ஆன் 4:23)
(
அல்லாஹ் மிக அறிந்தவன்)

 
2009/9/24 seenimohamed safeer <raja...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages