இஸ்லாமிய மார்க்க விநாடி வினா போட்டி

850 views
Skip to first unread message

hameed maricar

unread,
Dec 23, 2012, 12:03:59 AM12/23/12
to pnojamaath, pnoislamicjamaath, fro...@googlegroups.com
அன்பு சகோதரர்களுக்கு,
 
அஸ்ஸலாமு அலைக்கும் 

சமுதாய சீர்த்திருத்தத்தின் தளத்தில் நம்மை ஒன்றிணைத்த அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும். 

நாளைய சமுதாயம் குறித்த அக்கறையும் கவலையும் நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. 
இன்று தொழில்நுட்பம் விரல் சொடுக்கில் வந்து அறிவுகள் பொங்கி வழிவது போன்ற பிரமை நம்மை மயக்குகிறது. 
ஆனால் பத்துவருடங்களுக்கு முன் இருந்த மார்க்க விழிப்புணர்வும், தேடலும், ஆர்வமும் இப்போதைய இளம் தலைமுறையினரிடம் குறைந்தே காணப்படுகிறது என்பதை நாம் அனைவரும் உணருகிறோம். 

இதற்கு அவர்களை மட்டும் குற்றம் சொல்வதை விட, நமது கடமையை சிறிதளவாவது செய்ய முயற்சிப்பதே அறிவுடைமை. 

இன்றைய சிறார்களுக்கு அடிப்படை மார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடனும், அருகிப் போய்விட்ட வாசிப்பு பழக்கத்தினை அவர்களுக்கு மீட்டுத்தரும் ஆர்வத்துடனும் இஸ்லாமிய மார்க்க விநாடி வினா போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இணைப்பில் உள்ள நோட்டிஸ்சினை பார்வையிடவும்.

நன்றி.

ஹமீது மரைக்காயர் 

இஸ்லாமிய நூலகத்திற்காக... 
Picture 209.jpg

hameed maricar

unread,
Dec 31, 2012, 11:25:10 PM12/31/12
to pnojamaath, pnoislamicjamaath, fro...@googlegroups.com
அன்பு சகோதரர்களுக்கு 

அஸ்ஸலாமு அலைக்கும் 

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 30.12.2012 ஞாயிற்றுகிழமை அன்று ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி இஸ்லாமிய நூலகம் ( இல்ம் ) நடத்திய இஸ்லாமிய மார்க்க வினாடி வினா போட்டி நன்முறையில் நடைபெற்றது.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் சுமார் முன்னூறுக்கும் அதிகமானவர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் சரியான விடையை தெரிவு செய்யும் முறையில் எளிமையான ஐம்பது கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 

கேள்வித்தாள் உடனடியாக அங்கேயே ஒரு குழுவினரால் திருத்தப்பட்டு உடனடியாக அவை தொகுக்கப்பட்டு அதனடிப்படையில் பரிசுகளும் வழங்கப்பட்டன.  மாணவர்களின் ஆர்வத்திற்கேற்ப எளிய மொழி நடையிலான புத்தகங்களும் பேனாக்களும்  பரிசுகளாக வழங்கப்பட்டன. 

விடைத்தாள் திருத்தப்பட்ட நேர இடைவெளியில் இதுவரை இல்லாத ஒரு புதிய முயற்சியாக ப்ரொஜெக்டர் மூலம் இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகள் பற்றிய ஒரு எளிய ஆனால் சிறுவர்களின் கருத்தை கவரும் பிரசென்டேஷன் ஒன்றும்நடத்தப்பட்டது. கலந்தாய்வு  ( இன்டராக்ஷன் - Interaction ) முறையில் நடத்தப்பட்ட இந்த  பிரசென்டேஷன் மாணவர்களை ஆர்வத்துடன் கவனிக்க செய்தது. 
போட்டி காலை மற்றும் மதியம் இரண்டு செஷன்களாக நடத்தப்பட்டது.

இரண்டு முக்கிய குறிக்கோள்களுடன் இந்த போட்டி நடத்தப்பட்டது.

1. நூலகம் மற்றும் வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு 
2. அடிப்படை மார்க்க அறிவுகளை சிறார்களிடையே பரவலாக்குதல் மற்றும் பதித்தல் 

இந்த சிறு போட்டியின் வெற்றி என்பது மேற்கண்ட விஷயங்களை எந்தளவுக்கு அல்லாஹ் அவர்கள் மனங்களில் எடுபட வைத்தான் என்பதில் அடங்கியுள்ளது. 

எல்லா புகழும், நன்றியும், சமர்ப்பனங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே!  

இந்த போட்டிக்கு அனைத்து வகையிலும் பின்புலமாக இருந்த ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி முத்தவல்லி மற்றும் நிர்வாகிகளுக்கும், அதன் பேஷ் இமாம் அவர்களுக்கும், கேட்காமலேயே தானாக மனமுவந்து இந்த போட்டிக்கான தங்கள் பங்கு நிதியினை வழங்கிய சகோதரர் நஜீர் உபைதுல்லாஹ், சகோதரர் சிங்கபூர் கரீம், திண்ணை குழும சகோதரர்கள் குறிப்பாக ஹம்துன் அஷ்ரப், தமீம் பாய், 
ப்ரொஜெக்டர் தந்துதவிய தாஹா நானா, 

இந்த நிகழ்ச்சியின் செயல் மையமாக சுற்றி சுழன்ற ஜமீல், 

(மேற்சொன்ன அஷ்ரப், தமீம் ஆகியோரோடு ) விடைகளை மின்னல் வேகத்தில் திருத்தித் தந்த, மீடியா ஐகான் mypno எம்.ஜி. பக்ருதீன், நூருல் ஹசன், ஹிதாயத்துல்லாஹ், ஹமீது கவுஸ், ஹபீஜ், மற்றும் 

இஸ்லாமிய நூலகத்தின் நூலகர் முஹம்மத் ஹுசைன், அலாவுதீன், கபீர், இஷாக், ஜாபர், அப்துல்லாஹ், உதுமான், 

கலந்துகொண்ட மாணவ மாணவியர்களுக்கும் குறிப்பாக முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கும்,
பெண்கள் பிரிவை ( மாடி )  தானாக முன்வந்து கவனித்துக்கொண்ட சகோதரிக்கும், தண்ணீர் வழங்கிய (வாட்டர் பாக்கெட் கிடையாது - குடத்தில்) மண்டபத்திற்கு அடுத்த வீட்டுக்காரகளுக்கும் மற்றும் 

நோட்டிஸ் விநியோகிப்பதிளிருந்து கடைசியில் மண்டப பேன், லைட்டை ஆப் பண்ணுவது வரை உடனிருந்த அனைத்து சகோதரர்களுக்கும் (சிலர் யாரென்றே எனக்கு தெரியாது; நிகழ்ச்சி துவங்கும் போது வந்து முடியும் வரை கஷ்டப்பட்டுவிட்டு சொல்லிக்கொள்ளாமலே சென்றும் விட்டார்கள். அவர்களுக்கும் ) அல்லாஹ் அருள் புரிவானாக.        

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

( இத்தனை பேரை குறிப்பிட்டு நன்றி சொல்வதை, இறை திருப்திக்காக பங்களிப்பு செய்த இவர்கள் யாரும் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். 
ஆனால், ஒரு நிகழ்ச்சியின் வெற்றி என்பது எண்ணத்தளவிலும்  செயலளவிலும் இது போன்ற சகோதர்களின் பங்களிப்பில் நிகழ்கிறதே தவிர தனிப்பட்ட ஒரு மனிதரால் அல்ல என்பதை சொல்லிக்கொள்ள ஒரு சிறிய வாய்ப்பாக இதனை பயன்படுத்திக்கொள்கிறேன். ) 

( குறிப்பு : கலந்துக்கொண்ட மாற்றுமத சகோதர சகோதரிகளுக்கு தனிப்பட்ட முறையில் சில புத்தகங்களை இன்ஷா அல்லாஹ் அவர்களின் பள்ளிக்கே சென்று அவர்களின் பங்களிப்பிற்காக அனைவர் முன்னிலையிலும் ஹெட் மாஸ்டர் மூலம் வழங்க எண்ணியுள்ளோம். )

அல்லாஹ் நமது செயல்களை பொருந்திக்கொண்டு ஒன்றுபட்ட சமுதாயமாக நம்மை ஆக்கியருள்வானாக. 

அன்புடன் 
ஹமீது மரைக்காயர்  

Islamic Library of Mahmoodbandhar (ILM)

ஜாமிஆ மஸ்ஜித் மீராபள்ளி இஸ்லாமிய நூலகத்திற்காக...

இணைப்பு : கேட்கப்பட்ட கேள்வி-பதில்கள்   
( கேள்விகள் பற்றியும் அதறகான பிள்ளைகளின் பதில்கள் பற்றியும் --- அது ஒரு தனிக்கதை,  ஒரு புத்தகமே போட  வேண்டும். ) 
Picture 240.jpg
Picture 239.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages