கடன் வாங்குவது கொடுப்பது பற்றி....

1,159 views
Skip to first unread message

sahuban ali

unread,
Dec 10, 2009, 9:43:51 PM12/10/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
        
                                                            அன்புள்ள குழும சகோதர சகோதரிகளுக்கு    எனது கேள்வி என்னவென்றால் கடன் வாங்குவது கொடுப்பது பற்றி....
 
ஒருவர் மற்றொருவரிடம் ஒரு தொகையை  கடனாக வாங்குகிறார். ஆனால் அவரால் சொன்ன தேதிக்கு திருப்பி கொடுக்கமுடியவில்லை. பிறகு அவர் பணத்தை கொடுக்கும் நேரத்தில் கடனை கொடுத்தவர் அந்த ஊரில் இல்லை. உதாரணம் இவருக்கு தெரியாத இடத்திற்கு போய்விட்டார். ஆனால் இவர்  வாங்கிய கடனை கொடுத்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறார். இந்தக் கடனை இவர் எப்படி கொடுப்பது. அவருக்கு கொடுக்க முடியாமல் போனதற்கு மற்ற தான தர்மம் செய்யலாமா? அல்லது வேறு வழி இருக்கிறதா? இது பற்றி குரான், ஹதீஸ் அடிப்படயில் சகோதரர்கள்  எனக்கு விளக்கம் தரவும்.  தவறுகள்
 இருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)



அன்புடன்
ஷாபான் அலி
ETA துபாய்.

நமக்குள் இஸ்லாம்

unread,
Dec 11, 2009, 7:37:46 AM12/11/09
to fro...@googlegroups.com
ஸலாம்
 
எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 2387)
திரும்ப அடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் நிலையில் யாரிடமிருந்து கடன் பட்டோமோ அவர் இருக்கும் இடம் தெரியவில்லை என்றால் அவரிடமிருந்து பெற்றக் கடனை அவர் பெயரில் தர்மம் செய்து விடலாம். "அல்லாஹ்வே அதை திருப்பி செலுத்துவான்" என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
ஒருவர் கடன்படுகிறார் கடனை அடைகக்க வேண்டும் என்ற உறுதி அவரிடம் இருந்தும் உண்மையில் அவரால் அந்தகக் கடனை அடைக்க முடியவில்லை என்றால் அதை இறைவனிடம் முறையிட்டு அவனைப் பொறுப்புதாரியாக்கலாம். கடன் பட்டவரின் நிலையை சூழ்ந்தரியும் ரப்புல் ஆலமீன் ஏதோ ஒரு விதத்தில் அதை நிறைவு செய்வான்.
 
திரும்ப அடைக்க வேண்டியத் தொகை கைகளில் இருக்கும் நிலையில் கடன் கொடுத்தவர் எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலைத் தொடர்ந்தால் - முயற்சித்தும் முடியவில்லையென்றால் - வறுமையில் வாழும் அல்லது தேவையுள்ள அவரது வாரிசுகளுக்கு கொடுத்து விடலாம்.  அல்லது அவர் பெயரில் தர்மம் செய்து இறைவனை சாட்சியாக்கலாம்.
 
எப்படி இருப்பினும் அவரது தொகை அவர் பெயரில் அனுமதிக்கப்பட்ட வழியில் செலவிடப்பட வேண்டும் என்பதே சரியாகத் தெரிகின்றது.  (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe  

sahuban ali

unread,
Dec 15, 2009, 7:21:04 PM12/15/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்
 
அல்ஹம்துலில்லாஹ் நன்றி ஜிஎன் அவர்களே  நல்ல பதில்..

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Dec 17, 2009, 8:14:32 AM12/17/09
to fro...@googlegroups.com

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

அன்புள்ள சகோதரர் ஜி. என் அவர்களே!

வாலைக்கும் ஸலாம்!

 

 

//திரும்ப அடைக்க வேண்டியத் தொகை கைகளில் இருக்கும் நிலையில் கடன் கொடுத்தவர் எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலைத் தொடர்ந்தால் - முயற்சித்தும் முடியவில்லையென்றால் - வறுமையில் வாழும் அல்லது தேவையுள்ள அவரது வாரிசுகளுக்கு கொடுத்து விடலாம்.  அல்லது அவர் பெயரில் தர்மம் செய்து இறைவனை சாட்சியாக்கலாம் // GN//

 

மேற்கண்ட தங்களுடைய கருத்துக்கு குர்ஆன் அல்லது நபிவழியில் ஆதாரம் காட் இயலுமா?

 

 

வசதியாக வாழும்போது  ரஹீம் என்பவர் ரஹ்மான் என்பருக்கு ரூபாய் 50,000 கடன் தருகிறார் பிறகு ஏதோ இறைவன் விதித்த விதிப்படி அவசர அவசரமாக ரஹீம் சொந்த ஊரை விட்டு வேறு ஒரு ஊருக்கு செல்ல நேருகிறது. வருடங்கள் 20 கழிகின்றன வசதியாக வாழ்ந்துவந்த ரஹீம் காலச்சுழற்சியால் வயதான காலத்தில் மனைவி மக்களுடன் உணவுத்தட்டுப்பாட்டிற்காக அல்லல்பட்டு வருமையில் வாடுகிறார் இப்படிப்பட்ட நிலையில் ரஹீம் ரஹ்மானுக்கு கடனாக கொடுத்த 50,000 ரூபாய் நினைவுக்கு வருகிறது  உடனே ரஹ்மானை அணுகி கடன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்கிறார் ஆனால் கடன் வாங்கிய ரஹ்மான்  நீங்கள் இல்லை என்று எண்ணிக்கொண்டேன் கடந்த வாரம் தான் ஒரு மார்க்க அறிஞர் கூறிய அறிவுரைப்படி  உங்களிடமிருந்து கடனாக பெற்ற 50,000 ரூபாயை உங்கள் பெயரால் தர்மம் செய்துவிட்டேன் என்னிடம் பணம் இல்லை என்று பதில் அளித்தால் கடன் கொடுத்து ஏழையாகி தற்போது உணவுக்கு போராடும் ரஹீம் என்ன செய்வார்?

 


நபிகளாரின் அணுகுமுறையை காணுங்கள்

தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. 'இவர் கடனாளியா?' என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கேட்டபோது. நபித்தோழர்கள் 'இல்லை!" என்றனர். அவருக்கு நபிصلى الله عليه وسلم அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது 'இவர் கடனாளியா?' என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் 'ஆம்!" என்றனர். நபி صلى الله عليه وسلم அவர்கள் 'அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்!" என்றார்கள். அப்போது அபூ கதாதா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு!" என்று கூறியதும் அவருக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நூல்;புஹாரி,எண் 2295

 
 

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, 'இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்பத் தேடுவதற்குக் காரணம் என்ன?' என்று கேட்டதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள், 'மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள். நூல்; புஹாரி,எண் 2397

 

 
குறிப்பு

கடனை பெற்றுக்கொண்டவர் ஏழையாகி போகும் நிலையில் அவர்மீது பரிதாபப்பட்டு கடன் கொடுத்தவர் கொடுத்த கடனை முழுவதுமாகவோ, பகுதியாகவோ தள்ளுபடி செய்யும் உரிமை உள்ளது என்பதை நபிமொழிகள் உணர்த்துகின்றன. இப்படிப்பட்ட செயல் சுவனத்திற்கு இட்டுச்செல்லும், ஆனால் காணாமல் போன கடன்தாரர் மீண்டும் தோன்றி கடன் பெற்றவரிடம் கொடுத்த கடனை கேட்க அதற்கு கடனை பெற்றுக்கொண்டவர் நான் உங்கள் பணத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழித்து விட்டேன் தரமுடியாது என்று கூற அதிகாரம் உள்ளதா? பதில் தரவும். தங்களால் இதற்கு ஆதாரம் தரமுடியவில்லை எனில் தங்கள் கொடுத்த முந்திய பதிலுக்கு தாங்கள் பொறுப் பேற்றுக்கொள்வீர்களா?

 
நபிகளார் கடன் பட்டு மரணித்தாலும் கடன் பெற்றவரிடம் தன்னுடைய சொந்த அமானிதத்தை அடைமான விட்டுச்சென்றார்? கடனுடன் செல்லவில்லை நினைவிருக்கட்டும்! 

2009/12/16 sahuban ali <mohamm...@gmail.com>
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--
மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு
இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும்
நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள்
யார் என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம்
பேசியவர்கள்)மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள்.”
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்: அஹ்மது

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Dec 17, 2009, 8:57:05 AM12/17/09
to fro...@googlegroups.com

கடனை அமைக்க தங்கத்தை எடுத்து வைப்பது!

 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

உஹுது மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என் மீது மூன்று நாள்கள் கழிவது கூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 2389)

 

 

கடன் கொடுத்தவர் கடுமையாக பேச அதிகாரம்

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார். அப்போது, அவர் சற்று கடுமையான வார்த்தைகளைப் பேசினார். இதைக் கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு" என்று கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  (புகாரி 2401)

 
 
தந்தையின் கடனுக்கு!
 
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

என் தந்தையார் உஹுதுப் போரின்போது, அவரின் மீது கடன் இருந்த நிலையில் (ஷஹீதாகக்) கொல்லப்பட்டுவிட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபி(ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்துவிட்டனர். எனவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபி(ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, 'நாம் உன்னிடம் காலையில் வருவோம்" என்று கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) பிரார்த்தித்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாகிவிட்டன.  (புகாரி 2395)

 

 

 

கடன் கொடுத்தவர் கடன் தொகைக்கு மேல் அதிகமாக கேட்க உரிமை கிடையாது!

 

ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர், தான் இறந்த பிறகு தன்னுடைய ஓர் அடிமை விடுதலையாகிக் கொள்ளட்டும் என்று கூறியிருந்தார். நபி(ஸல்) அவர்கள் (அந்த அடிமையைக் காட்டி), 'இவரை யார் என்னிடத்திலிருந்து வாங்கிக் கொள்வது?' என்று கேட்டார்கள். நுஐம் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவ்வடிமையை வாங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமைக்கான விலையை வாங்கி அந்த அடிமையின் எஜமானிடம் கொடுத்துவிட்டார்கள். ஒரு குறிப்பிட்ட தவணையில் திருப்பிச் செலுத்தும்படி கூறி கடன் கொடுப்பதில் தவறில்லை; கடனாளி கடன் கொடுத்தவருக்கு அவர் கொடுதத திர்ஹம்களை விட உயர்தரமானதைக் கொடுத்தாலும் சரியே! ஆனால் கடன்காரர், அவ்விதம் திருப்பிச் செலுத்தும்போது உயர் தரமானதைத் தரவேண்டு மென்று (கடனாளிக்கு) நிபந்தனையிட்டுக் கூடாது" என்று இப்னு உமர்(ரலி) கூறினார். (புகாரி 2403)

 

 
குறிப்பு

கடன் கொடுத்தவர் வரவே மாட்டார் என்பதை எவ்வாறு தீர்மானிப்பீர்கள்! ஒருவர் வரவேமாட்டார் என்று முன்கூட்டியே தீர்மானித்து முடிவெடுக்க நமக்கு அதிகாரம் உள்ளதா?
 
நபி யூனுஸ் (அலை) அவர்கள் தன்னுடைய சமுதாயம் எச்சரிக்கையை கண்டும் திருந்தமாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டுதானே கோபப்பட்டு சென்றார் ஆனால் மக்களோ யூனுஸ் (அலை) சென்றவுடன் திருந்தினார்களே! ஒரு நபியாக இருந்தாலும் தான் எண்ணியதை உறுதிபடுத்தாத போது மனிதர்களாகிய நாம் எவ்வாறு ஒருவர் வரமாட்டார் என்று எண்ணலாம்!
 
அல்லாஹ் தான் நாடியதை நிறைவேற்றக்கூடியவன்!  நபியால் கூட தான் நாடியதையோ எண்ணியதையோ நிறைவேற்ற முடியாது என்பதற்கு ஆதாரங்களாக யூனுஸ் நபியின் வரலாறும் நூஹ் நபியின் வரலாறும் குர்ஆனில் உள்ளதே!
 
 

 
2009/12/17 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Dec 17, 2009, 8:58:12 AM12/17/09
to fro...@googlegroups.com

கடனை அடைக்க தங்கத்தை எடுத்து வைப்பது!

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Dec 17, 2009, 9:25:03 AM12/17/09
to fro...@googlegroups.com
வாலைக்கும் ஸலாம் சகோதரர் ஜி.என்
 
தொந்தரவுக்கு மன்னிக்கவும்!
 
வேலைசெய்து முடித்து மறந்தவிட்டு சென்ற கூலியை வெகுநாட்களுக்கு பின்னர் திரும்பப்பெற்ற மாபெரும் உண்மை! இதைப் பற்றிய மிக நீ்ண்ட ஹதீஸ்!
 
 
 
 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 

உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் 'நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!" என்று தமக்குள் கூறினர்.


 

அவர்களில் ஒருவர் 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!

 

 

மற்றொருவர், 'இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, 'முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!" என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமேவிட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.

 

 

மூன்றாமவர், 'இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!" என்று கூறினார். 'நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!" என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!" என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!" என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். 'இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!" என அப்துல்லாஹ்வின் உமர்(ரலி) அறிவித்தார்.  (புகாரி 2272)

 

 

சகோதரர் ஜி.என் அவர்களே

மேற்கண்ட இந்த நபிமொழியில் உள்ள 3வது நபரின் செயலுக்கு என்ன அர்த்தம்! கீழே கொடுத்துள்ளதை மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள்

 

மூன்றாமவர், 'இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!" என்று கூறினார். 'நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!" என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!" என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!" என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார்.

 

 

குறிப்பு

சாதாரண தினக்கூலியை மறதியாக விட்டுச்சென்றாலே அதை எடுத்து அமானிதமாக பாதுகாக்க மார்க்கம் வலியுறுத்தும் போது

 

கண்டிப்பாக தருவேன் என்று வாக்குறுதியளித்து பெற்ற கடன் தொகையை எவ்வாறு அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பீர்கள்!

 

சகோதரர் ஜி.என் இப்போது இதை கூலிக்கான சட்டம் இது கடனுக்கு பொருந்தாது என்று கூறுவீரா!

நமக்குள் இஸ்லாம்

unread,
Dec 19, 2009, 11:33:04 PM12/19/09
to fro...@googlegroups.com
ஸலாம்
 
அன்புச் சகோதரர் சிராஜ் அவர்களுக்கு,
 
கடன் பெற்ற ஒருவர் அதை உரியவரிடம் திரும்ப கொடுக்கத் தேவையில்லை.  இறைவனின் பாதையில் செலவு செய்து விட்டால் போதும் என்று நாம் எழுதியது போல நீங்கள் மாற்று ஆதாரங்களை விவரித்துள்ளீர்கள்.  நீங்கள் எடுத்துக் காட்டிய எந்த ஆதாரத்திலும் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை.  அவை விவாதத்திற்குரியதும் அல்ல.
 
கேள்வி என்னவென்றால்  "ஒருவரிடம் கடன் படுகிறோம் அதை திரும்ப கொடுக்க நினைக்கும் போது அவர் கிடைக்கவில்லை. இருக்கும் இடமும் தெரியவில்லை. காலங்கள் கடக்கின்றன.  இருக்கிறாரா இறந்து விட்டாரா என்று கூட தெரியவில்லை.   திரும்ப வருவார் என்ற நம்பிக்கை இருப்பின் எவ்வளவு காலத்திற்கு வேண்டமானாலும் பொருத்திருக்கலாம். (நீங்கள் குறிப்பிட்ட நீண்ட ஹதீஸ் இதைத்தான் கூறுகின்றது)
 
நம்பிக்கை இழந்த நிலையில், மரணித்திருப்பாரோ என்ற சந்தேகம் வலுப் பெறும் நிலையில் என்ன செய்வது என்பதற்கு ஆதாரம் கொடுங்கள் தொடரலாம் இன்ஷா அல்லாஹ்

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Dec 22, 2009, 9:36:43 AM12/22/09
to fro...@googlegroups.com

என் கண்ணியமிக்க மார்க்க அறிஞரே!

வாலைக்கும் ஸலாம் (வரஹ்)

 
 GN எழுதியது

கடன் பெற்ற ஒருவர் அதை உரியவரிடம் திரும்ப கொடுக்கத் தேவையில்லை.  இறைவனின் பாதையில் செலவு செய்து விட்டால் போதும் என்று நாம் எழுதியது போல நீங்கள் மாற்று ஆதாரங்களை விவரித்துள்ளீர்கள் /

 
 

சகோதரர் ஜி.என் அவர்களே தாங்கள் என்னை தவறாக புரிந்துக்கொண்டுள்ளீர்கள்! நான் நானாக ஒன்றை உருவாக்கி கூறவில்லையே! மறுபடியும் கீழ்கண்ட தங்கள் வாசகங்களை படித்துப்பாருங்கள் இதில் உள்ள கடைசி வரியை நினைவு கூறுங்கள் அதற்கு ஆதாரம் தாருங்கள் என்றுதான் நான் கூறுகிறேன்!

 

திரும்ப அடைக்க வேண்டியத் தொகை கைகளில் இருக்கும் நிலையில் கடன் கொடுத்தவர் எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலைத் தொடர்ந்தால் - முயற்சித்தும் முடியவில்லையென்றால் - வறுமையில் வாழும் அல்லது தேவையுள்ள அவரது வாரிசுகளுக்கு கொடுத்து விடலாம்.  அல்லது அவர் பெயரில் தர்மம் செய்து இறைவனை சாட்சியாக்கலாம் // GN எழுதியது

 

 

நான் சாதாரண மனிதன் மார்க்க அறிவு இல்லாதவன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆனால் தாங்கள் மார்க்க அறிஞராக இருக்கிறீர்கள் மார்க்கத் தீர்ப்போ அல்லது கருத்தோ வெளியிடுவதற்கு முன் அதற்கான ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும் எனவேதான் நான் அந்த இறுதி வாசகத்திற்கு ஆதாரம் தருமாறு கேட்கிறேன் நம்முடைய மார்க்கம் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்த பொன்னான மார்க்கமல்லவா அதனால்தான் மார்க்க அறிவை கேட்கிறேன்! ஆனால் தாங்கள் ஆதாரம் தராமலும் மேலும் தங்கள் வாசகத்திற்கு பொறுப்பை ஏற்காமலும் கீழ்கண்டவாறு  கூறுகிறீர்களே!

 
 
GN எழுதியது

நம்பிக்கை இழந்த நிலையில், மரணித்திருப்பாரோ என்ற சந்தேகம் வலுப் பெறும் நிலையில் என்ன செய்வது என்பதற்கு ஆதாரம் கொடுங்கள் தொடரலாம் இன்ஷா அல்லாஹ் //

 

 

குறிப்பு

நான் முதலில் கேட்டுக்கொண்டபடி தாங்கள் அந்த இறுதி வாசகத்திற்கு ஆதாரம் தாருங்கள் மற்றும் தங்கள் வாசகத்திற்கு தார்மீக பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளுங்கள் பின்னர் நம் தேடலை தொடரலாம்! உங்கள் மீது நான் குறை கூறவுமில்லை என் மீது நீங்கள் குறை கூறவுமில்லை எனவே முதலில் கேள்விக்கு பதில் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையாக நம் கருத்துக்களை தொடரலாம்!

 

2009/12/20 நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

நமக்குள் இஸ்லாம்

unread,
Dec 22, 2009, 9:46:39 PM12/22/09
to fro...@googlegroups.com

ஸலாம்
 
நாம் ஆதாரமின்றி எழுதவில்லை. நாம் பதித்த முதல் பதிலில் "எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான்". என்ற ஹதீஸை வெளியிட்டோம்.
 
அல்லாஹ்வே திருப்பி செலுத்துவான் என்ற வாசக அடிப்படையிலேயே 'அவர் பெயரில் தர்மம் செய்து இறைவனை சாட்சியாக்கலாம்". அதை அல்லாஹ் அவருக்கு சேர்த்து விடுவான் என்ற ககருத்தில் எழுதினோம்.
 
இதை தெளிவாகவே நமது பதிலி்ல் குறிப்பிட்டுள்ளோம்.
Reply all
Reply to author
Forward
0 new messages