//ஒற்றைச் சொல்லில் ஸலாம் சொல்லலாமா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
சகோதரர் நிஜாமுத்தீன் அவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (10 நன்மைகள்)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (20 நன்மைகள்)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு (30 நன்மைகள்)
என்ற நிலையில் ''ஸலாம்" என்ற வார்த்தைக்கு மட்டும் எத்தனை நன்மைகள் என்று தெரிந்தால் மற்றவர்களும் அதை பயன்படுத்தலாமே. மேலும் முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு ஸலாம் சொல்லலாமா? அல்லது அவர்கள் ஸலாம் கூறினால் பதிலாவது சொல்லலாமா?
அன்புடன்,
சகோ. அபூஃபைஸல்
ரியாத், சவூதி அரேபியா
........................
பொதுவாக ஸலாமை பொருத்தவரை நாம்,
அஸ்ஸலாமு அலைக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு
என்று மூன்று விதங்களில் சொல்லி பழகி விட்டதால் நாம் எழுதிய "ஸலாம்" என்ற ஒற்றைச் சொல் நெருடலாகவும், சிலருக்கு ஆச்சரியமாகவும் கூட இருக்கலாம்.
ஆனால் நாம் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பதை புரிய வைப்பது கடமை என்பதால் இந்த விளக்கத்தை அளிக்கிறோம்.
முஹம்மத்(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த ஸலாமை சொல்வது போன்றே குர்ஆனில் இறைவன் சுட்டிக் காட்டியுள்ள ஸலாமையும் நாம் பயன்படுத்தலாம். அதுவும் ஸலாமை பரப்பியதாகவே அமையும்.
"அஸ்ஸலாமு அலைக்கும்" போன்று "ஸலாமுன் அலைக்கும்" என்றும் "ஸலாம்" என்றும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் இஸ்லாம் சொல்லக் கூடிய ஸலாமின் உள்ளே அடங்கி விடும்.
ஸலாம்
َلَقَدْ جَاءتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُـشْرَى قَالُواْ سَلاَمًا قَالَ سَلاَمٌ فَمَا لَبِثَ أَن جَاء بِعِجْلٍ حَنِيذٍ
நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்றாஹீமுக்கு நற்செய்தியுடன் வந்து 'ஸலாம்' என்றார்கள். (அவரும்) "ஸலாம்" என்றார் (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை. 11:69 - 51:25
இப்ராஹீம் (அலை) அவர்களை சந்தித்த வானவர்கள் 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் "ஸலாம்" என்ற ஒரு வார்த்தையை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள். பதிலுக்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் "ஸலாம்" என்ற ஒரு வார்த்தையையே பதிலாக்கியுள்ளார்கள் என்பதை இறைவன் சுட்டிக் காட்டுகிறான். (இப்படி சொல்வது தவறென்று எந்த இடத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை) எனவே குர்ஆனின் வழிகாட்டல் அடிப்படையில் "ஸலாம்" என்ற வார்த்தையை மட்டும் கூட பயன்படுத்தலாம் என்பதை விளங்கலாம்.
திருக்குர்ஆனில் ஸலாம் என்ற வார்த்தையே அதிகமான இடங்களில் (முகமனுக்காக) பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் இங்கு கூடுதலாக நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
.........................
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஸலாம் என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் அது முழுமையான ஸலாம் சொன்ன பரக்கத் கிடைக்கும். மேலும், மாற்று மத சகோதரர்கள் ஸலாம் சொன்னால் நாம் பதில் சொல்வது கூடும். அதுபோல நாமும் அவர்களுக்கு ஸலாம் கூறலாம். அல்லாஹ் அஃலம்.
முஹம்மது இக்பால் - ஷார்ஜா,யு.ஏ.இ
.........................
ஸலாமுன் அலைக்கும்.
நாம் செய்யும் எல்லா அமல்களுக்கும் அதற்காக சொல்லப்பட்டுள்ள நன்மைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு செய்தால் "இத்துனை நன்மை" "இவ்வளவு நன்மை" என்று சொல்லப்படாமல் குறிப்பிடப்பட்டுள்ள அமல்களை நாம் செய்யாமல் இருந்து விட முடியுமா..?
நீங்கள் குறிப்பிட்டுள்ளப்படி ஸலாம் சொல்வதால் என்ன நன்மைகள் கிடைக்குமோ அந்த நன்மைகளோ அல்லது சற்று குறைவாகவோ "ஸலாம்" என்ற ஒற்றை வார்த்தையிலும் நிச்சயம் கிடைக்கும். ஏனெனில் இது இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டப்பட்டுள்ள வார்த்தையாகும்.
குர்ஆனோடு ஒப்பிடும் போது ஹதீஸ்களில் சில விதிவிலக்கு, அல்லது மாற்று வியாக்யானங்கள் கொடுக்கலாமே தவிர ஹதீஸ்களோடு ஒப்பிட்டு குர்ஆன் வசனங்களுக்கு விதிவிலக்கோ - வியாக்யானங்களோ கொடுக்க முடியாது.
எனவே குர்ஆனில் ஒரு கட்டளை ஒரு தூண்டுதல் வந்துள்ள போது ஹதீ்ஸ்களை ஒப்பு நோக்கி குர்ஆன் வசனங்களை சற்று பின்னுக்கு தள்ளும் போக்கு கடுகளவும் நம்மிடம் வந்து விடக் கூடாது.
குர்ஆனில் "ஸலாம்" என்ற ஒற்றை வார்த்தையில் இறைவன் வழிகாட்டியுள்ளான் என்றால், "அதற்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்..?" என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டு இருப்பது முறையல்ல. அது இறைவனின் வழிகாட்டல் இறைவன் நன்மை கொடுப்பான் என்ற நம்பிக்கை வந்து விட வேண்டும்.
10, 20, 30 நன்மைகள் என்று ஹதீஸ்களில் வழிகாட்டுதல் உள்ளதால் அவ்வாறும் கூறிக் கொள்ளலாம்.
மாற்றாருக்கு ஸலாம்.
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்லக் கூடாது என்ற எந்த தடையையும் நம்மால் பார்க்க முடியவில்லை. இறைவனின் படைப்பில் அனைவரும் "ஸலாமி"ற்குரியவர்கள், ஸலாமை விரும்புபவர்கள் என்பதால் அவர்களுக்கு நாம் ஸலாம் சொல்லலாம்.
மக்களே ஸலாத்தை பரப்புங்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் அனைவருக்கும் ஸலாம் சொல்லுங்கள் போன்ற ஆர்வமூட்டியுள்ள ஹதீஸ்கள் பிறருக்கு ஸலாம் சொல்வதை அனுமதித்தே வந்துள்ளது.
மாற்று மத சகோதரர்களின் ஸலாமுக்கு பதில்
وَإِذَا حُيِّيْتُم بِتَحِيَّةٍ فَحَيُّواْ بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا
உங்களுக்கு ஸலாம் (வாழ்த்து) கூறப்பட்டால் அதைவிட அழகானதை அல்லது அதையே பதிலாக்குங்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் கணெக்கெடுப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:86)
"உங்களுக்கு ஸலாம் கூறப்பட்டால்.." என்ற சொற்பதம் சொல்லப்படும் வார்த்தையைத்தான் கவனிக்க சொல்கின்றதே தவிர சொல்லும் ஆட்களையல்ல. எனவே நமக்கு யார் ஸலாம் சொன்னாலும் அவர்களுக்கு அதைவிட சிறந்த வார்த்தையை அல்லது அதையே பதிலாக சொல்லலாம்.
இணைவைப்பவர்களுக்கு முந்திக் கொண்டு ஸலாம் சொல்லாதீர்கள் என்று சில அறிவிப்புகள் உள்ளன. அவற்றை பொது அறிவிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் நம் ஸலாத்துக்கு முறையான பதில் கொடுக்காமல் ஸலாத்தை மாற்றி கூறும் செயலை சில யூதர்கள் செய்தார்கள் அது போன்றவர்களை கருத்தில் கொண்டே அந்த அறிவிப்புகள் வந்துள்ள என்று விளங்குவதே சரியாகத் தெரிகின்றது. (அல்லாஹ் அனைத்தையும் நுணுக்கமாக அறிந்தவன் என்று நம்புகிறோம்)
......................
ஸலாத்தின் சிறப்பு குறித்து இன்னும் சில அறிவிப்புகள் உள்ளன அவற்றையும் அறிந்துக் கொள்வோம்.
(وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ)
என் உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் முஃமின்களாகும் வரை சொர்க்கத்தில் நுழையமாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்ளும் வரை முஃமின்களாக முடியாது. உங்களுக்குள் நேசத்தை வளர்க்கும் ஒன்றை நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் உங்களுக்கிடையில் ஸலாத்தைப் பரப்புங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்.
( . . . يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَصِلُوا الْأَرْحَامَ وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ )
மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வணங்கிக் கொண்டிருங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் -ரலி, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத், ஹாகிம்.
(عن شريح بن هاني عن أبيه أنه قال: يا رسول الله أخبرني بشيء يوجب لي الجنة؟ قال : عليك بحسن الكلام وبذل السلام)
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சொர்க்கத்தை நிச்சயமாகப் பெற்றுத் தரும் ஒன்றை அறிவியுங்கள்! என ஹானீ (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நல்ல வார்த்தைகளைப் பேசு! ஸலாத்தைப் பரப்பு! என்றார்கள். ஷுரைஹ் இப்னு ஹானீ -ரலி, இப்னுஹிப்பான், ஹாகிம்.
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)//
.....ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்) அவர்களே ,
நீங்கள் .கீழ் .வைத்த்துள்ள ஹதீஸ்கள் (அதாவது ) .................உங்களுக்குள் நேசத்தை வளர்க்கும் ஒன்றை நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் உங்களுக்கிடையில் ஸலாத்தைப் பரப்புங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.,.........
.....................................மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து ................
............................. நல்ல வார்த்தைகளைப் பேசு! ஸலாத்தைப் பரப்பு! ...................... போன்றவை இப்போது. நிறையவே .முஸ்லிம்களால் அமுல் நடத்தப்ப் ..படுகிறது...... சலாம் ..சொல்வது .. ஒரு.. பேஷன் .என்ற்றவ்ளவுக்கு வந்து விட்டது. ஆனால் சமுதாயத்தை பாருங்கள் .. எந்தளவு
இஸ்லாத்தை விட்டு அதன் தூய்மையான இலட்ச்சியத்தை விட்டு வேறு எங்கோ போய்விட்டுள்ளது....சண்டையும் அடிதடியும் பொறாமையும் குழப்பமும் முஸ்லிம்களால் தான் உருவாக்கப்படுகிறது........... எனவே என்னுடைய கடும் சிந்தனை க்குப்பிறகு , னெனக்கு விளங்க்குவது......ரஸுலுல்லாஹ் , சும்மா கண்ட கண்ட இடத்தில் எல்லாம் , சலாம் கூறு சுவர்க்கம் போகலாம் , என்று கூறியிருக்க மாட்டார்கள் ........மாறாக, சலாம் , என்ற , அரபிக் சொல்லுக்கு , மிக தெளிவான பொருளான , அமைதி , சமாதானம் , என்ற , இவைகளை மக்களிடேயே பரப்புங்கள் , நீங்கள் சுவர்க்கம் போவீர்கள் என்றுதான் கூறியிருப்பார்கள்.......... என்னில் இது , சலாம் எனும் சமாதானத் தை மக்களிடேயே பரப்புவது பெரும் கஷ்டம் , .இதுக்கு பொறுமை தியாகம் ஈமான் , தேவை..... இதை நிறைவேற்றும் பொது நிச்சயம் இறைவன் சுவர்க்கம் தருவான்....... சும்மா சலாம் , சலாம் என்று ஆட்களை பார்த்து கூறுவதால் , இஸ்லாத்தின் உன்னதமான கொள்கையான , சமாதானமும் அமைதியும் சமுதாயத்தில் எப்படி நிலை நாட்டப்படும்........??????
சொல்லுங்கள் ......விளக்குங்கள்.......
IBNU HASSAN
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹீ ஜி,நிஜாமுதின் அவர்களுக்கும் மற்றும் அனைத்தும் முஸ்லிம் சகோதரர்களுக்கும்,
அளவற்ற அருளானலும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாவின் திருப்பெயர் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்,
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்(33:56)
அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலாமுஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராகீம இன்னக்க ஹமீதுன் மஜீத்
//முஹம்மத்(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த ஸலாமை சொல்வது போன்றே குர்ஆனில் இறைவன் சுட்டிக் காட்டியுள்ள ஸலாமையும் நாம் பயன்படுத்தலாம். அதுவும் ஸலாமை பரப்பியதாகவே அமையும்.
"அஸ்ஸலாமு அலைக்கும்" போன்று "ஸலாமுன் அலைக்கும்" என்றும் "ஸலாம்" என்றும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் இஸ்லாம் சொல்லக் கூடிய ஸலாமின் உள்ளே அடங்கி விடும்.//
இது உங்க சொந்த கூற்று ..நீங்களா நன்மைகளை பிரித்து அறிய கூடியவர்களா.. நபி(ஸல்) இது போல் மூன்றும் கூறலாம் என்ற ஒரு நபிமொழியை முன்னிருத்திவைத்து விட்டு உங்களிடைய கருத்துகளை பதிவு செய்யுங்கள்.. நீங்களா ஒரு விளக்கம் அளித்தால் அது ஏற்று கொள்ள முடியாது, அல்லாவுக்கு பயந்து கருத்து பதிவு செய்யுங்கள்,
அவர்(நபி(ஸல்)) தம் இச்சைபடி எதையும் பேசுவதில்லை.அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட்தேயன்றி வேறில்லை.மிக்க வல்லமுடையவர் ஜிப்ரில்(அலை) அவர்களிக்கு கற்று கொடுத்தார்கள்(53:3,4,5)
மேலும் (நபியுடைய) இதயம் கண்டதை பற்றி பொய்யுரைக்கவில்லை ஆயினும் அவர் கண்டவற்றின் மீது நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?(53:11,12).
அல்லா அறிவிக்காமல் நபி(ஸல்) அவர்கள் எதையும் சுயமாக அறிவிக்கவில்லை. அதனால் இங்கு அல்லா கற்று தந்தது நபி(ஸல்) கற்று தந்தது என பிரித்து பேச வேண்டாம்..இப்படி சொல்வது நபி(ஸல்) அவர்களின் இட்டு கட்டக்கூடியவையாகும். இப்படி சொல்வது மிகப்பெரிய பாவமாகும். அல்லாவிடமும், ரஸீல்(ஸல்) அவர்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள்.
//மாற்றாருக்கு ஸலாம்.
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்லக் கூடாது என்ற எந்த தடையையும் நம்மால் பார்க்க முடியவில்லை. இறைவனின் படைப்பில் அனைவரும் "ஸலாமி"ற்குரியவர்கள், ஸலாமை விரும்புபவர்கள் என்பதால் அவர்களுக்கு நாம் ஸலாம் சொல்லலாம்.
மக்களே ஸலாத்தை பரப்புங்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் அனைவருக்கும் ஸலாம் சொல்லுங்கள் போன்ற ஆர்வமூட்டியுள்ள ஹதீஸ்கள் பிறருக்கு ஸலாம் சொல்வதை அனுமதித்தே வந்துள்ளது.
மாற்று மத சகோதரர்களின் ஸலாமுக்கு பதில்
وَإِذَا حُيِّيْتُم بِتَحِيَّةٍ فَحَيُّواْ بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا
உங்களுக்கு ஸலாம் (வாழ்த்து) கூறப்பட்டால் அதைவிட அழகானதை அல்லது அதையே பதிலாக்குங்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் கணெக்கெடுப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:86)
"உங்களுக்கு ஸலாம் கூறப்பட்டால்.." என்ற சொற்பதம் சொல்லப்படும் வார்த்தையைத்தான் கவனிக்க சொல்கின்றதே தவிர சொல்லும் ஆட்களையல்ல. எனவே நமக்கு யார் ஸலாம் சொன்னாலும் அவர்களுக்கு அதைவிட சிறந்த வார்த்தையை அல்லது அதையே பதிலாக சொல்லலாம்.
இணைவைப்பவர்களுக்கு முந்திக் கொண்டு ஸலாம் சொல்லாதீர்கள் என்று சில அறிவிப்புகள் உள்ளன. அவற்றை பொது அறிவிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் நம் ஸலாத்துக்கு முறையான பதில் கொடுக்காமல் ஸலாத்தை மாற்றி கூறும் செயலை சில யூதர்கள் செய்தார்கள் அது போன்றவர்களை கருத்தில் கொண்டே அந்த அறிவிப்புகள் வந்துள்ள என்று விளங்குவதே சரியாகத் தெரிகின்றது. (அல்லாஹ் அனைத்தையும் நுணுக்கமாக அறிந்தவன் என்று நம்புகிறோம்)
......................//
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்(உங்களுடன் பகைமை பாராட்டும்) யுதர்களும்,கிருத்துவர்களும், நீங்கள் முதலில் ஸலாம் கூறாதீர்கள் (எதிரிகளான) அவர்களை நீங்கள் சந்திக்க நேரிட்டால் பாதையின் ஓரத்தில் விட்டுவிட்டு செல்லுங்கள் என அபூஹீரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்( முஸ்லிம்,திர்மதி,அபூதாவுத்,முஸ்னத் அஹ்மத்)
வேதக்காரர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் 'வ அலைக்கும்' அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(புஹாரி)
நபி(ஸல்) அவர்கள் பொதுவாக வேதக்காரர்களுக்கு ஸலாம் சொன்னால் வாஅலைக்கும் என்று கூறுங்கள் என்று தான் கூறு இருக்கிறார்கள். இங்கு சிலர் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடவில்லை.
இங்கு முதலில் ஸலாம் சொன்னால் என்று பயன்படுத்திவிட்டு அது எவ்வாறு கூறினார்கள் என அடுத்த செய்திகளில் காணமுடிகிறாது. உங்கள் கூற்றுபடி பார்த்தால் ஸலாம் என்று சொன்னால் அதே வார்த்தையான ஸலாம் என்று தான் பயன் படுத்திருக்கே வேண்டும் அதற்கு பதிலும் நபி(ஸல்) அவர்களும் ஸலாம் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் நபி(ஸல்) அவர்கள் வா அலைக்கும் மட்டும் தான் சொன்னார்கள். ஆனால் ஸலாம் என்றால் அஸ்ஸலாமு அலைக்கும் என்று தான் அர்த்தம் தவிற. ஸலாம் என்றால் ஸலாம் என்ற அர்த்தம் கிடையாது. அஸ்ஸாமு அலைக்கும் என்று சிலர் யூதர்கள் ஸலாம் சொல்கிறார்கள் அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் பதில் வா அலைக்கும் என்று சொல்ல சொன்னார்கள்..
வேதக் கொடுக்கப்பட்டவர்களுக்கு(தவ்ராத்,இன்சில்,ஜபூர்) அதாவது அல்லாவை ஏற்று நபி(ஸல்) அவர்களை ஏற்க மறந்தவர்கள். நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்கு வா அலைக்கும் என்று தான் பதில் அளிக்க சொன்னார்கள்..
//உங்களுக்கு ஸலாம் (வாழ்த்து) கூறப்பட்டால் அதைவிட அழகானதை அல்லது அதையே பதிலாக்குங்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் கணெக்கெடுப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:86)//
இவ்வசனத்திற்கு உங்களுடைய விளக்கம்:
//உங்களுக்கு ஸலாம் கூறப்பட்டால்.." என்ற சொற்பதம் சொல்லப்படும் வார்த்தையைத்தான் கவனிக்க சொல்கின்றதே தவிர சொல்லும் ஆட்களையல்ல. எனவே நமக்கு யார் ஸலாம் சொன்னாலும் அவர்களுக்கு அதைவிட சிறந்த வார்த்தையை அல்லது அதையே பதிலாக சொல்லலாம்//
இவ்வசனத்திற்கு நபி(ஸல்) அவர்களின் விளக்கம்:
சல்மான் அல் பாரிசி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் யாரஸுலல்லா எனறு ஸலாம்(முகமன்) கூறினார், அதற்கு வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹம்மத்துல்லாஹ் என்று பதில் கூறினார்கள். பின்னர் மற்றொருவர் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் யாரஸுலல்லா வரஹம்மத்துல்லா என்று முகமன் கூறினார், நபி(ஸல்) அவர்கள் வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹம்மத்துல்லாஹி வபரகாத்துஹீ என்று பதில் கூறினார்கள் (இருவரின் முகமனை கேட்டுவிட்ட) மற்றொருவர் வந்தார், அவர் அஸ்ஸலாமு அலைக்க யாரஸீலல்லா வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹீ என்று முகமன் கூறினார். அதற்கு வ அலைக்க என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அப்போது அந்த மனிதர் அல்லாவின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணிமாகட்டும். இன்ன மனிதரும் இன்ன மனிதரும் உங்களிடம் வந்து ஸலாம் கூறும் போது நீங்கள் எனக்கூறினதை விட அதிகமான அதிகமான வார்த்தைகளை கொண்டு அவர்களுக்கும் பதில் கூறினீர்கள் என்ன காரணம் என்று வினவினார், அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதிகமாக கூறுவதற்கு எதையும் விட்டு வைக்க வில்லையே( எல்லா வார்த்தைகளையும் நீங்கள் கூறிவிட்டீர்கள்) உங்கலூக்கு ஸலாம்(முகமன்) கூறப்பட்டால் அதைவிடச் சிறந்த முறையில் பதில் ஸலாம் (முகமன்) அல்லது அதையே யே திருப்பி கூறுங்கள்(4:86) என்று அல்லா குறிப்பிட்டுள்ளான் எனவே நீங்கள் கூறியதயே நாம் உங்களுக்கு பதிலாக கூறிவிட்டோம் என்று சொன்னார்கள்( குரான் தஃப்சீர் தபரி(ரஹ்), குரான் தஃப்சீர் இப்னு கதீர்(ரஹ்), மற்றும் தப்ரானி)
உங்களுடைய கருத்தை இங்கு எடுத்து கொள்ள முடியாது.. நமது அருமை நாயகம் முகம்மது நபி(ஸல்) அவர்களின் விளக்கம் மட்டுமே இங்கு எடுத்து செயல் படுத்துவது கட்டாய கடமையாகும் முடியும்.
அல்லாவின் வசனத்திற்கு அவர்கள் மட்டுமே விளக்கம் அளிக்க கூடியமே தவிற உங்களுடைய சுய சிந்தனையால் சொல்லபடக்கூடிய கருத்துகள் எடுத்து செயல் படுத்த முடியாது... அதனால் ஸலாம் என்றால் அஸ்ஸலாமு அலைக்கும் என்பது தான் நபி(ஸல்) அவர்கள் அழகாக கற்று கொடுத்து இருக்கிறார்கள். அதனால் இங்கு வரும் சகோதரர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லுமாறு கேட்டு கொள்கிறேன்..அது தான் நபி(ஸல்) அவர்களின் வழியாகும்..
மேலும் மிகவும் கவனிக்க வேண்டியவை:
ஸலாம் என்றால் அஸ்ஸலாமு அலைக்கும் என்று நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி:
அல்லா குரானில்:
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது)(அல்-குர்-ஆன்24:27)
நபி(ஸல்) அவர்களின் சத்திய வார்த்தைகள்:
ஒருவர் ஒரு வீட்டில் நுழையும் முன் 'அஸ்ஸலாமு அலைக்கும்' என அனுமதி கோரட்டும்.அருமை மகனே! நீ உனது குடும்பத்தினரிடம் சென்றால் ஸலாம் கூறு? அது உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் பரக்கத்தாக அமையும் என அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள் (திர்மிதீ)
அல்லா ஸலாம் சொல்லி அனுமதி கேளுங்கள்.. அல்லாவின் வசனத்திற்கு நபி(ஸல்) அவர்களும், சகபாக்கள்(ரலி) அவர்களும் தான் விளக்கம் அளிக்க முடியும் தவிர வேற யாரும் அதற்கு விளக்கம் கொடுத்தால் அது ஏற்று கொள்ள முடியாது.
மேலும்
நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருக்கும்போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, நான் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார். (அவர் அனுமதி கேட்ட முறை சரியில்லை என்பதற்காக) நபி(ஸல்) அவர்கள் தம் பணியாளரிடம், நீ சென்று அனுமதி கேட்கும் முறையை அவருக்குச் சொல்லிக்கொடு (அதாவது) 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்கும்படிச்சொல் என்று கூறினார்கள். இதைச் செவிமடுத்த அம்மனிதர், 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்க, அவர் உள்ளே வந்தார்" என ரிப்யீ இப்னு ஹிராஷ் (ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாூத்)
முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
''நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து. 'ஸலாம்' கூறாமல், அவர்கள் இருந்த அறையில் நுழைந்துவிட்டேன். நீ திரும்பச் சென்று, 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்டுவிட்டு, பின்னர் உள்ளே வா என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்" என கில்தா இப்னு ஹன்பல் (ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: அஹ்மது, அபூதாூது மற்றும் திர்மிதீ)
ஸலாம் கூறாமல் என்று சொன்ன சகாபி(ரலி) அவர்கள் மறுபடியும் ஸலாம் என்ற வார்த்தையை சொல்லி செல்லவில்லை.. அந்த சகாபி(ரலி) அவர்கள் பயன் படுத்திய வார்த்தை அஸ்ஸலாமு அலைக்கும் என்று தான். எனவே ஆனால் ஸலாம் என்றால் அஸ்ஸலாமு அலைக்கும் என்று தான் அர்த்தம் தவிற. ஸலாம் என்றால் ஸலாம் என்ற அர்த்தம் கிடையாது.
நபி(ஸல்) (குரானே) காட்டி தந்த வழி:
''நபி(ஸல்) அவர்கள் ஒரு சமுகத்தாரின் (வீட்டு) வாசலுக்கு வந்தால், வாசலுக்கு நேராக நின்று அனுமதி பெறாமல், வாசலுக்கு வலப்புறமோ, இடப்புறமோ ஒதுங்கி நின்று, 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சொல்வார்கள்"" என அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் (ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாூத்)
//ஸலாத்தின் சிறப்பு குறித்து இன்னும் சில அறிவிப்புகள் உள்ளன அவற்றையும் அறிந்துக் கொள்வோம்.
(وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ)
என் உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் முஃமின்களாகும் வரை சொர்க்கத்தில் நுழையமாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்ளும் வரை முஃமின்களாக முடியாது. உங்களுக்குள் நேசத்தை வளர்க்கும் ஒன்றை நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் உங்களுக்கிடையில் ஸலாத்தைப் பரப்புங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்.
( . . . يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَصِلُوا الْأَرْحَامَ وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ )
மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வணங்கிக் கொண்டிருங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் -ரலி, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத், ஹாகிம்.
(عن شريح بن هاني عن أبيه أنه قال: يا رسول الله أخبرني بشيء يوجب لي الجنة؟ قال : عليك بحسن الكلام وبذل السلام)
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சொர்க்கத்தை நிச்சயமாகப் பெற்றுத் தரும் ஒன்றை அறிவியுங்கள்! என ஹானீ (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நல்ல வார்த்தைகளைப் பேசு! ஸலாத்தைப் பரப்பு! என்றார்கள். ஷுரைஹ் இப்னு ஹானீ -ரலி, இப்னுஹிப்பான், ஹாகிம்.
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)//
ஸலாம் என்று ஹதிஸ் களில் வரும் வார்த்தை, ஆனால் அதனால் ஸலாம் என்று வருவதால் ஸலாம் என்று சொல்வது கூடாது என மேலே கூறப்பட்டுள்ளது. ஸலாம் என்றால் அஸ்ஸலாமு அலைக்கும் என்று தான் அர்த்தம் என்று நபி(ஸல்) அறிவித்துள்ளார்கள்.ஸலாம் என்று மட்டும் வந்துள்ள ஹதிஸ்களும் உள்ளன் அதையும் கீழே இடம்பெற்றுள்ளது.. அதை நபி(ஸல்) அவர்களின் விளக்கம் முன்பு இடம் பெற்றுள்ளது..
''இரவில்நபி(ஸல்) தம் வீட்டிற்குத் திரும்பி வரும்போது, தூங்குபவர்கள் எழுந்துவிடாத முறையிலும் விழித்திருப்பவர்களுக்காக(மட்டும்) கேட்கும்படியாகவும் 'ஸலாம்" கூறுவார்கள்" என மிக்தாத் (ரலி)அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம்)
''ஒரு மனிதன் தன் வீட்டிற்குள் நுழையும்போது, யா அல்லாஹ்! நல்ல முறையில் நுழைவதையும் நல்ல முறையில் வெளியேறுவதையும் உன்னிடம் வேண்டுகிறேன். இறைவா! உன் திருப்பெயர் கொண்டே நுழைகிறோம். உன் திருப்பெயர் கொண்டே வெளியேறுகிறோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம் என்று கூறிவிட்டுப் பிறகு தன் வீட்டில் உள்ளவர்களுக்கு 'ஸலாம்" கூறட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ மாலிக்கில் அஷ்அரி (ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவுத்)
மேல் பதியவாகியுள்ள ஹதிஸ்களில் ஸலாம் என்று இடம் பெற்றுள்ளது.. அதனால் அது ஸலாம் என்றால் ஸலாம் கிடையாது. மாறாக அஸ்ஸலாமு அலைக்கும் என மற்றொரு வழிகளில் முழுமையான ஹதிஸ்களில் தெளிவாக வந்துள்ளது. அது ஸலாம் என்றால் அஸ்ஸலாமு அலைக்கும் தான்.. அது தான் நபி(ஸல்)மொழியும்.
செய்திகளில் சிறந்தது, அல்லாஹ்வின் வேதமாகும் வழிகளில் சிறந்தது இந்த முஹம்மதின் வழியாகும்.என்று நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்கள் (இம்அம் முஸ்லிம்(ரஹ்), இமாம் இப்னுமாஜா(ரஹ்))
//நாம் செய்யும் எல்லா அமல்களுக்கும் அதற்காக சொல்லப்பட்டுள்ள நன்மைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு செய்தால் "இத்துனை நன்மை" "இவ்வளவு நன்மை" என்று சொல்லப்படாமல் குறிப்பிடப்பட்டுள்ள அமல்களை நாம் செய்யாமல் இருந்து விட முடியுமா..?
நீங்கள் குறிப்பிட்டுள்ளப்படி ஸலாம் சொல்வதால் என்ன நன்மைகள் கிடைக்குமோ அந்த நன்மைகளோ அல்லது சற்று குறைவாகவோ "ஸலாம்" என்ற ஒற்றை வார்த்தையிலும் நிச்சயம் கிடைக்கும். ஏனெனில் இது இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டப்பட்டுள்ள வார்த்தையாகும்.
குர்ஆனோடு ஒப்பிடும் போது ஹதீஸ்களில் சில விதிவிலக்கு, அல்லது மாற்று வியாக்யானங்கள் கொடுக்கலாமே தவிர ஹதீஸ்களோடு ஒப்பிட்டு குர்ஆன் வசனங்களுக்கு விதிவிலக்கோ - வியாக்யானங்களோ கொடுக்க முடியாது.
எனவே குர்ஆனில் ஒரு கட்டளை ஒரு தூண்டுதல் வந்துள்ள போது ஹதீ்ஸ்களை ஒப்பு நோக்கி குர்ஆன் வசனங்களை சற்று பின்னுக்கு தள்ளும் போக்கு கடுகளவும் நம்மிடம் வந்து விடக் கூடாது.
குர்ஆனில் "ஸலாம்" என்ற ஒற்றை வார்த்தையில் இறைவன் வழிகாட்டியுள்ளான் என்றால், "அதற்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்..?" என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டு இருப்பது முறையல்ல. அது இறைவனின் வழிகாட்டல் இறைவன் நன்மை கொடுப்பான் என்ற நம்பிக்கை வந்து விட வேண்டும்.
10, 20, 30 நன்மைகள் என்று ஹதீஸ்களில் வழிகாட்டுதல் உள்ளதால் அவ்வாறும் கூறிக் கொள்ளலாம்.//
நாம் செய்யக் கூடிய அனைத்து அமல்களும் உயிரைவிட மேலான கண்மனி நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி காண்பித்து விட்டார்கள். இதற்கு இதற்கு இவ்வளவு நன்மைகளில் அளவை அறிந்தவர்களும் அவர்கள் தான் அல்லா அனைத்து இபாதத் எப்படி செய்ய வெண்டும் அதற்குரிய நன்மையின் அளவையும் சொல்லி கொடுத்து விட்டான்.
''நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் (இறைவனின் அருள், சாந்தி உங்களுக்கு உண்டாகட்டும்!) என்று சொன்னார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். அவர் அமர்ந்தார், நபி(ஸல்) அவர்கள், பத்து (நன்மைகள்) என்றனர். பின்பு மற்றொருவர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி என்றார் அதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். அவரும் உட்கார்ந்துவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் இருபது (நன்மைகள்) என்றார்கள். மேலும் ஒருவர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு (அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் பாக்கியமும் உங்கள் மீது உண்டாகட்டும்!) என்றார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். அவரும் அமர்ந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் முப்பது (நன்மைகள்) என்றார்கள்"" என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவிக்கிறார்கள். ( திர்மிதீ, நஸயி மற்றும் அபூதாவுத்)
நபி(ஸல்) நன்மை அளவை நிர்ணயத்து கூறுகிறார்கள்.ஆனால் தாங்கள் அதிகமான நன்மைகள் கிடைக்கும், அல்லது சற்று குறைவாக கிடைக்கும் என்று நீங்கள் நன்மை அளவை நிர்ணியம் செய்கிறீர்களா? உங்களுக்கு அல்லாவிடம் இருந்து செய்தி ஏதும் வந்ததது போல் சொல்கிறீர்கள்.. உங்கள்டைய சுய கருத்துகளை பதிக்க வேண்டாம்??.. குரான், ஹதிஸ் என்று சொல்லி விட்டு நீங்களா ஒர் செய்தியை அள்ளி வீசியிருக்கிறீர்கள்போல் தோன்றுகிறது .. நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்.. நபி(ஸல்) அவர்களை விட நன்மை பற்றி அதிகம் அறிந்தவர்களா நீங்கள்?
இறைவன் புறத்திலிருந்து வந்தாலும் அது நபி(ஸல்) அவர்களின் காட்டி தந்த முறையாக(சொல்,செயல், அங்கீகாரம்) தான் இருக்க வேண்டும், அவர் தான் உலகத்தாரின் நமது வழிகாட்டி. அவர் தான் நமது உயிர்.
//குர்ஆனில் "ஸலாம்" என்ற ஒற்றை வார்த்தையில் இறைவன் வழிகாட்டியுள்ளான் என்றால், "அதற்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்..?" என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டு இருப்பது முறையல்ல. அது இறைவனின் வழிகாட்டல் இறைவன் நன்மை கொடுப்பான் என்ற நம்பிக்கை வந்து விட வேண்டும்//
அல்லாவின் ரஸீல்(ஸல்) அவர்கள் மார்க்கத்தை கற்று தந்திருக்கும் போது.. அதைஎடுத்து கொள்ளாமால் நீங்கள் மார்க்கத்தை கற்று கொடுக்கிறீர்களா? அல்லாவின் ரஸீல்(ஸல்) அவர்கள் அவர்கள் 10,20,30 என வரிசை படுத்தும் போது அதற்கு இணையாக நீங்கள் இறைவன் நன்மை கொடுப்பான் என நாங்கள் உங்கள் வார்த்தைக்கு நாங்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமா? அல்லாவின் ரஸீல்(ஸல்) அவர்களின் வார்தையை விட உங்களின் வார்த்தை உறுதியானதா?நபி(ஸல்) அவர்களின் வார்த்தைக்கு நம்பிக்கை வைக்கமால் உங்களின் வார்த்தைக்கும் நாங்கள் நம்பிக்கை வைப்பதா? நிச்சியமாக இதற்கு நீங்கள் பதில் கொடுத்து ஆக வேண்டும்..
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்(33:56)
நபி தோழாகள் நபி (ஸல்) அவர்களிடம் எப்படி ஸலவாத் கூறவேணடும் என கேட்டபோது, பின் வரும் ஸலவாத்தை ஓதிக்காட்டினார்கள்.
அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலாமுஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராகீம இன்னக்க ஹமீதுன் மஜீத்
என்னை கஅப் இப்னுஉஜ்ரா(ரலி) சந்தித்து, 'நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஓர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம், அதை எனக்கு வழங்குங்கள்" என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், 'நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'தங்களின் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும் சலவாத்து சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்) ஏனெனில், தங்களுக்கு நாங்கள் ஸலாம் சொல்வது எப்படி என்று அல்லாஹ் எங்களக்கு (தஷஹ்ஹுதில்) கற்றுக் கொடுத்திருக்கிறான்" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்தைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய்' என்று சொல்லுங்கள்" என பதிலளித்தார்கள் என அப்துர் ரஹ்மான்இப்னுஅபீ லைலா(ரஹ்) அறிவிக்கிறார்கள்(புகாரி)
அல்லா ஸலாவத்து கூறுங்கள் என்று சொல்லும் போது நபி(ஸல்) அவர்கள் தான் விளக்கம் அளிக்க முடியும்று..இதனால் ஸலாவாத் சொல்லி என்றால் ஸலாவாத்து என்றாகாது.. அதற்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி கற்று கொடுத்து உள்ளார்களோ அது போல் தான் கூறமுடியும். அது போல் தான் ஸலாமும்.. நாம் நபி(ஸல்) அவர்களின் உம்மத்.. அவர்கள் எப்படி கற்று தந்தார்களோ அது போல் செய்வது தான் நபி(ஸல்) அவர்களின் வழியை பின் பற்ற கூடியதாகும். உதரணமாக
செய்திகளில் சிறந்தது, அல்லாஹ்வின் வேதமாகும் வழிகளில் சிறந்தது இந்த முஹம்மதின்(ஸல்) வழியாகும்.என்று நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்கள் (இமாம் முஸ்லிம்(ரஹ்), இமாம் இப்னுமாஜா(ரஹ்))
சகோதரரே அல்லா ஒரு செய்தியை அறிவிக்கினறான் என்றால் அதற்கு வழிக்காட்டி நபி(ஸல்) அவர்கள் தான் சொல்லி தர வேண்டும்.. அல்லா ஒரு செய்தி அறிவிக்கின்றான் என்றால் நேரடியாக அது எடுத்து செயல் படுத்த முடியாது. முகம்மது(ஸல்) அவர்களின் வழி அதை பற்றி விளக்கம் கொடுத்திற்கும் பொழுது அதை தான் எடுத்து செயல் பட வேண்டும்.. உதரணமாக ஈமான் கொள்ளுங்கள், தொழுகுங்கள், நோன்பு வையுங்கள்,ஜகாத் கொடுத்து வாருங்கள், ஹஜ் செய்யுங்கள் என்று அல்லா சொல்கின்றான்.. நபி(ஸல்) அவர்களின் வழி இல்லாமல் எப்படி செய்வீர்கள், அது போல் தான் ஸலாம் அல்லா ஸலாம் கூறினான் என்றால் அதற்கு நபி(ஸல்) அவர்கள் தான் சொல்ல முடியும் எப்படி சொன்னார்கள் என்று.. அதற்கு பதிலும் எப்படி சொல்ல வேண்டும் அவர்களால் மட்டுமே விளக்கம் அளிக்கமே முடியுமே தவிர உங்களுடைய சுயவிளங்கங்கள் எல்லாம் தயவு செய்து அறிவிக்காதிர்கள்.. ஒரு குரான் விசயத்தை நேரடியாக எடுத்து கொள்ளமால் நபி(ஸல்) அவர்கள் எப்படி கற்று கொடுத்தார்களோ அது போல் தான் எடுத்து கொள்ள வேண்டு என்பது ஒவ்வொரு முஸ்லிம்க்கும், முஃமினுக்கு கட்டாய கடமையாகும்.
மேலும்
தொழுது முடிந்ததும் ஸலாம் கூறுங்கள்
நபி(ஸல்) அவர்கள் தங்களது தொழுகையில் ஸலாம் கொடுத்து முடிந்ததும் அஸ்தஃக்பிருல்லா எனக் மும்முறை கூறுபவர்களாக இருந்தனர் என தவ்பான்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(முஸ்லிம் ஹதிஸின் சுருக்கம்)
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுவோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுக்கும்போது நாங்களும் ஸலாம் கொடுப்போம் என இத்பான்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
ஸஜ்தா ஸஹ்வில் ஸலாம்
நபி(ஸல்) அவர்கள் நடு இருப்பு (உட்காரமல்) மறதியாக எழுந்து விட்டார்கள். அதைக் கண்ட நபித் தோழர்களும் எழுந்துவிட்டனர். தொழுகையை முடித்துக் கொண்டு(இருப்பில் இருந்தாவாறு) ஸலாம் கூறுவார்கள் என எதிர் பார்த்தோம், ஆனால் நபி(ஸல்) அவர்கள் இருந்தாவறே ஸலாம் கூறுமுன் அல்லாஹ் அக்பர் எனக்கூறி, இரு ஸஜ்தாகளை செய்தப்பின் ஸலாம் கூறினார்கள் என அபூஹீரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நஸயி) அப்துல்லாபின் புஹைனா(ரலி) அவர்களின் வழியாக முஸ்லிம், புகாரி, நஸயி, இப்னுமஜா ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது.
நிச்சியமாக நபி(ஸல்) அவர்கள் ளுஹரை ஐந்து ரக்கத தொழவைத்துவிட்டார்கள்,இருந்தவர்கள் நீங்கள் ஐந்து ரக்கத் தொழுதுவிட்டனர் எனக் கூறினார்கள், அதனைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் இருந்தாவாரே ஸலாமுக்கு பிறகு இரு ஸஜ்தாக்களை செய்தனர். என அப்துல்லாபின் மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,(திர்மதி)
மேலும் கவனிக்க வேண்டியவை
மேல் உள்ள நபி மொழி வெளிப்படையாக ஸலாம் என்று வந்துள்ளது , அதனால் நீங்கள் ஸலாம் என்று சொல்லி வலப்பக்கமும், இடப்பக்கமும் திரும்புவீர்கள், சிந்தியுங்கள் அருமை சகோதரரே
தொழுகையில் இருப்பில் ஸலாம் எவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கற்று கொடுத்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லா எனக் கூறி வலப்புறமும்,இடது புறமும் ஸலாம் கொடுப்பவர்களாக இருந்தார்கள் என அப்துல்லா பின் மஸ்வூத்(ரலி)அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் எனக் கூறி வலப் பக்கம் ஸலாம் கூறுகின்ற பொழுது அவர்களின் வலப்பக்கம் வெண்மையாக காணப்படும் அளவிற்கு திரும்புவார்கள். இடப்பக்கம் கூறி ஸலாம் கூறுகின்ற போது இடது கண்ணத்தின் வெண்மை காணப்படும் அளவிற்கு திரும்புவார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், இது போன்றே அப்துல்லா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(அபுதாவுது, நஸயி)
நபி(ஸல்) அவர்கள் அவரது தொடையின் மீது வைத்து கொண்டு அவரது சகோதரருக்கு அவரது வலது பக்கத்திலும்,இடது பக்கத்திலும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லா எனக்கூறி ஸலாம் கூறுவது அவருக்கு போதாதா எனக் கூறினார்கள் என ஜாபிர் பின் ஸமுரா(ரலி) அறிவிக்கிறார்கள் ( அபுதாவுத்,நஸயி)
நபி(ஸல்) அவர்கள் தங்களது தொழுகையில் ஸலாம் கொடுத்து முடிந்ததும் அஸ்தஃக்பிருல்லா எனக் மும்முறை கூறுபவர்களாக இருந்தனர் என தவ்பான்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(முஸ்லிம் ஹதிஸின் சுருக்கம்)
//
َقَدْ جَاءتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُـشْرَى قَالُواْ سَلاَمًا قَالَ سَلاَمٌ فَمَا لَبِثَ أَن جَاء بِعِجْلٍ حَنِيذٍ
நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்றாஹீமுக்கு நற்செய்தியுடன் வந்து 'ஸலாம்' என்றார்கள். (அவரும்) "ஸலாம்" என்றார் (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை. 11:69 - 51:25//
அல்லா எவ்வாறு ஸலாம் கூறினான்.வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் எப்படி ஸலாத்தை எடுத்துரைத்தார்கள்:
ஒரு முறை வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் வீட்டிற்கு வருகை தந்த போது, நபி(ஸல்) அவர்களுடைய அன்பு மனைவி கதீஜா(ரலி) அவர்கள் அங்கு இருந்தார்கள்.ஜிப்ரீல்(அலை) அவர்கள், "அல்லாஹ் கதீஜா(ரலி) அவர்களுக்கு ஸலாம் அனுப்பியுள்ளான்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஓ! கதீஜாவே, அல்லாஹ் உமக்கு ஸலாம்(கூறி)அனுப்பியுள்ளான்". அதற்கு அன்னை கதீஜா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வே 'அஸ் ஸலாம்' ஆவான். மேலும் உங்கள் மீதும் (ஜிப்ரீல்(அலை)) ஸலாம்(சாந்தி) உண்டாகட்டும்); மேலும் அல்லாஹ்வின் தூதரே, தங்கள் மீதும் ஸலாம் (சாந்தி) உண்டாகட்டும்". (ஹதீஸ்: புகாரி)
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களை (களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்” என்று சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும் – உங்களின் மீது சாந்தி பொழியட்டும்” என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், ‘உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்” என்று பதில் கூறினார்கள். ‘இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)’ என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள். எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்(புஹாரி,முஸ்லிம்)
மேல் உள்ள நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் அல்லாவும் அஸ்ஸலாமு அலைக்கும் என்று தான் கூறியுள்ளான் என நபி(ஸல்) அவர்கள் விளக்கம் அளித்துவிட்டார்கள்.. இதை விட தெளிவான ஒரு ஆதாரம் வேண்டுமா சொல்லுங்கள் சகோதரரே!!!
மேலும் பதில் எவ்வாறு பதில் கூற வேண்டும் எனவும் ஹதிஸ்களில் காணமுடிகிறது.. அல்லாவுக்கு ஆயிசா(ரலி) அவர்கள் எப்படி பதில் அளித்தார்கள் என்பதையும் உற்று கவனியுங்கள்.
(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'ஆயிஷா! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்' என்றார்கள். நான், 'வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி' (அவரின் மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும் பொழியட்டும்) என்று (பதில் சலாம்) சொல்லிவிட்டு, 'நாங்கள் பார்க்காதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சொன்னேன். ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பில், 'வ பரகாத்துஹு' (இறைவன் வழங்கும் சுபிட்சமும்) என்று (கூடுதலாக) ஆயிஷா(ரலி) கூறினார் எனக் காணப்படுகிறது.
இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.(புகாரி)
இதில் ஸலாம் உரைக்கிரார்கள் என்று இடம் பெற்றுள்ளது. அது எப்படி கூறினார்கள் என ஆதம் (அலை)அவர்களின் வழியாக நாம் பார்த்தோம். இப்பொழுது ஜிப்ரில்(அலை) அவர்களுக்கு ஆயிசா(ரலி) அவர்கள் பதிலுக்கு ஸலாம் என்று கூறவில்லை. 'வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி' என்றே பதிலுரைத்தார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியார் மினல் முஃமினீன வல் முஸ்லிமீன்! வ இன்னா இன்ஷா அல்லாஹூ பிக்கும் லாஹிகூன். நஸ்அலுல்லாஹ லனா வலக்கும் அல் ஆஃபியா”(முஸ்லிம்)
மலையும், மரங்களும் ஸலாம் எவ்வாறு கூறுகின்றது:
நான் ஒரு மலை அடிவாரத்தில் சென்று கொண்டிருந்தேன். மலையும் மரங்களும் அல்லாஹ்வின் தூதரே(ஸல்) அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூரின.
அறிவிப்பவர்:அனஸ்(ரலி) நூல்:முஸ்லிம்
மேலும் ஸலாத்திற்கான விளக்கங்கள்.. சகாபாக்கள்(ரலி) எவ்வாறு அல்லாவுக்கும் வானவர்களுக்கும் ஸலாம் எவ்வாறு கூறினார்கள்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களைப் பின்பற்றித்) தொழும்போது 'அஸ்ஸலாமு அலல்லாஹி கப்ல இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, அஸ்ஸலாமு அலா மீகாயீல, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வ ஃபுலானின்' (அடியார்களுக்கு முன் அல்லாஹ்வுக்கு முகமன் உண்டாகட்டும். (வானவர்) ஜிப்ரீல் மீது சாந்தி உண்டாகட்டும். இன்னார் இன்னார் மீது சாந்தி உண்டாகட்டும்) என்ற கூறிவந்தோம். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கித் திரும்பி, 'நிச்சயமாக அல்லாஹ்வே 'ஸலாம்' (சாந்தியளிப்பவன்) ஆக இருக்கிறான். எனவே, உங்களில் ஒருவர் தொழுகையின் இருப்பில் இருக்கும்போது 'அத்தஹிய்யாத்து லில்லாஹி, வஸ்ஸலவாத்து, வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன' (சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினாலே வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் சலாம் கூறினார்கள் என அமையும். 'அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதி கூறுகிறேன்) என்றும் கூறட்டும். பிறகு, தாம் நாடிய பிரார்த்தனையை ஓதிக்கொள்ளலாம்' என்றார்கள்.அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்கள் (புகாரி)
அப்துல்லா பின் உமர்(ரலி) அவர்களின் அல்லாவின் தூதருக்கு கூறும் ஸலாம் முறை:
அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) ‘அஸ்ஸலாமு அலைக்க யாரஸுலுல்லாஹ்! அஸ்ஸலாமு அலைக்க யாஅபா பக்ர் அஸ்ஸலாமு அலைக்க யாஅபீ என்று கூறிவிட்டு உடனே திரும்பி விடுவார்கள். (மாலிக் முஆத்தா)
நபி(ஸல்) அவர்களின் கடித்தத்தில் ஸலாம் எவ்வாறு இருந்தது.
அபூ சுஃப்யான்(ரலி) அறிவித்தார்.
நான் ஷாம் நாட்டில் வியாபாரம் செய்வதற்காகச் சென்றிருந்த குறைஷியர் சிலருடன் இருந்தபோது (அந்நாட்டு மன்னர்) ஹெராக்ளியஸ் என்னை அழைத்து வரும்படி ஆளனுப்பினார். எனவே, அவரிடம் நாங்கள் சென்றோம். பிறகு, அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டுவரச் சொன்னார். அப்போது அது வாசிக்கப்பட்டது. அதில் (பின்வருமாறு) எழுதப்பட்டிருந்தது:
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்...) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமான முஹம்மத் ரோம பைஸாந்திய மன்னர் ஹெராக்ளியஸிற்கு எழுதிக் கொண்டது. அஸ்ஸலாமு அலா மனித் தபஅல் ஹுதா. (நேர்வழியைப் பின்தொடர்ந்தோருக்குச் சாந்தி உண்டாகட்டும்.) பின்னர்...
இதன்மூலம் மாற்றுமதத்வருக்கும் கடித்தத்தில் அஸ்ஸலாம் அலைக்கும் கூறுலாம்,
ஆனால் வேதகொடுக்கப்பட்டவர் ஸலாம் கூறினால் பதில் வா அலைக்கும் என்றே கூறுங்கள்.. ஆனால் மாற்று மதத்தவருக்கு ஸலாம் கூறினால் பதில் எவ்வாறு கூறும் விசயத்தில் கருத்து வேறுபாடு உள்ளதால் அதைப்பற்றி ஞானம் இல்லை.
கப்ருக்குள் இருப்பவர்களை நோக்கி ஸலாம் கூறூம் முறை பற்றி நபி(ஸல்) அவர்களின் கற்றிகொடுத்தவிதம்:
முஸ்லிம், மூமின்களான கப்றுவாசிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களை வந்தடைகிறோம். எங்களையும், உங்களையும் அல்லாஹ் மன்னித்தருள்வானாக! எங்களுடையவும், உங்களுடையவும் நம் எல்லோரின் பிழைகளைப் பொறுத்தருள அவனைப் பிரார்த்திக்கிறோம். இறைவா! இவர்களுடைய கூலிகளை நீ இல்லாமலாக்கி விடாதே! இவர்களுக்குப் பிறகு நீ எங்களை பித்னாவில் ஆழ்த்தி விடாதே! எங்களையும், இவர்களையும் நீ மன்னித்தருள்வாயாக!
இறுதியாக அல்லாவும், நபி(ஸல்) அவர்களும் மிஃராஜ் இரவில் பேசி கொள்ளும் போது அல்லாவும், நபி(ஸல்) அவர்களும் ஸலாத்தை எவ்வாறு கூறினார்கள்
இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இரண்டு கைகளுக்கிடையே என் கை இருந்த நிலையில், குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) தஷஹ்ஹு(த் எனும் அத்தஹிய்யாத்)தை எனக்கு அவர்கள் கற்றுத்தந்தார்கள். (அது பின்வருமாறு:) அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்; அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹுவ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு (அனைத்துக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் நிலவட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதும் சாந்தி நிலவட்டுமாக! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெருவமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்).
நபி(ஸல்) அவர்கள் எங்களிடையே (உயிரோடு) இருந்தவரை இவ்வாறு ('அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு' - நபியே உங்களின் மீது சாந்தி நிலவட்டும் என்று முன்னிலைப்படுத்தி) சொல்லிவந்தோம். அவர்கள் (உயிர்) கைப்பற்றப்பட்டபோது நாங்கள் 'அஸ்ஸலாமு அலந் நபிய்யி' (நபி(ஸல்) அவர்களின் மீது சாந்தி நிலவட்டும்) என்று (படர்க்கையாகக்) கூறலானோம்
அஸ்ஸலாமு அலைக்கும் ஜி. நிஜாமூதின் மற்றும் அனைத்து முஸ்லிம் சகோததர்களுக்கும்
நான் பதித்த கருத்துகளுக்கு இன்னும் நீங்கள் விளக்கம் அளிக்கவில்லை.. அதனால் என்னுடைய கருத்துகளுக்கு பதில் அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.. நீங்கள் இன்னமும் ஸலாம் என்ற வார்த்தையை உபயோகம் படுத்தி வருவதால் தான் மட்டுமே நான் உங்களிடம் கேட்கின்றேன்..
நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தை பின்பற்றாமல் குரான் மட்டும் போதும் என்று சொல்லும் சகோதரர்கள் போல் சொல்வது போல் உள்ளது என்று தெரிவித்து கொள்கின்றேன்..