குறை பிரசவத்தில் பிறந்தவுடன் இறந்துவிட்ட குழந்தைக்கு ஜனாஸா தொழுகை தொழ
வேண்டுமா? இப்படி இறந்த குழந்தைகளுக்கு அடக்கம் செய்வதுற்கு முன்பு பெயர்
சுட்டவேண்டுமா?
ஒரு பாவமும் செய்யாத ,அறியாத இந்த குழந்தைகளின் நிலை பற்றி குரான் ஹதீஸ்
மூலம் விளக்கவும்
.
ஹுசைன் அஹ்மத்
''வாகனத்தில் ஏறி ஜனாஸாவில் கலந்து கொள்பவர் ஜனாஸாவுக்குப் பின்னே வரவேண்டும். நடந்து செல்பவர் (முன்னாலோ பின்னாலோ) விரும்பியவாறு செல்லலாம். குழந்தைக்கும் தொழுகை நடத்தவேண்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் முகீரா பின் ஷுஃபா (ரலி) (நூல்கள் - திர்மிதீ 952 அஹ்மத் 17459 நஸயீ, இப்னுமாஜா)
நபி (ஸல்) அவர்களிடம் ஓர் அன்ஸாரி சிறுவர் (ஜனாஸா) கொண்டு வரப்பட்டது. அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல் - நஸயீ)
''ஸிக்த் எனும் (குறை மாத) விழு கட்டிகளுக்கும் தொழுகை நடத்தப்பட வேண்டும். பெற்றோரின் பாவமன்னிப்புக்காகவும், அவர்களுக்காகவும் பிரார்த்திக்க வேண்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் முகீரா பின் ஷுஃபா (ரலி) (நூல்கள் - அபூதாவுத் 2766 அஹ்மத் 17468)
சிறுவர்களுக்கும், விழு கட்டிகளுக்கு ஜனாஸா தொழவைக்க வேண்டும் என மேல்கண்ட அறிவிப்புகளிலிருந்து விளங்கலாம். நபி (ஸல்) அவர்கள் தமது மகனார் இப்ராஹீம், 18 மாத குழந்தையாக மரணித்தபோது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை.
நபி (ஸல்) அவர்களின் மகனார் இப்ராஹீம் பதினெட்டு மாதம் குழந்தையில் மரணித்தபோது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை. அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல்கள் - அஹ்மத் 25101 அபூதாவுத் 2772)
குழந்தைகளுக்கு ஜனாஸாத் தொழுகை கட்டாயமில்லை. தொழவைக்காமல் அடக்கம் செய்தாலும் குற்றமில்லை.
மேலும், இறந்த குழுந்தைக்கு அடக்கம் செய்வதற்கு முன் பெயர் சூட்டவேண்டும் என ஆதாரம் எதையும் நாமறிவில்லை. அறிந்தவர் பகிர்ந்து கொள்ளலாம்.
(அறியா பருவத்தில் மரணிக்கும் குழந்தைகளின் நிலை என்ன? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்)
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
கேள்வி:- ஒரு பாவமும் செய்யாத ,அறியாத இந்த குழந்தைகளின் நிலை பற்றி குரான் ஹதீஸ் மூலம் விளக்கவும்.
பதில்:-
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,.
ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 30:30)
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தையாகவே மண்ணில் பிறக்கின்றன! மனிதப் படைப்பில் அல்லாஹ் எந்த மாற்றமும் செய்வதில்லை.
உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்கு என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது" என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.) என்று உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) (நூல்கள் - புகாரி 3208, 3332, 6594, 7454. முஸ்லிம் 5145, திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா. அஹ்மத்)
இறைவனுக்கு இணைவைக்கும் தம்பதியர், இறைமறுப்பாளர் தம்பதியர், முஸ்லிம் தம்பதியர் எனத் தந்தையின் விந்தணு மூலம் தாயின் கருவறையில் உருவாகி பிறக்கவிருக்கும் குழந்தையின் படைப்பில் இறைவன் மாற்றங்கள் ஏற்படுத்துவதில்லை. குழந்தையின் பெற்றோர் எந்த மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் சரி, எல்லாக் குழந்தைகளும் இயற்கையில் பிறக்கின்றன!
விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவே ஆக்கிவிடுகின்றனர். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 1358, 1359, 1385, 6599. முஸ்லிம் 5166-5169. திர்மிதீ 2223)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப்போன்றே எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவது போல்,) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டும் திருப்பி,) யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர். இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டுப், பிறகு, 'எந்த இயற்கை(யான நெறி)யில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே நிலையான மார்க்கமாகும். அல்லாஹ்வின் படைப்பில், (அதாவது மார்க்கத்தில்) எத்தகைய மாற்றமும் கிடையாது' எனும் (திருக்குர்ஆன் 30:30 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 4775. முஸ்லிம் 5166)
இயற்கையில் பிறக்கும் குழந்தை, பெற்றோரின் வளர்ப்பினால் இயற்கை மார்க்கத்தை விட்டு மனிதன் உருவாக்கிக்கொண்ட பெற்றொரின் மதத்தைப் பின்பற்றுகின்றன. நல்லவை, தீயவை என சுயமாக சிந்தித்துத் தேர்வு செய்யும் அறிவு வளர்ச்சிப் பெறும் வரை பிறந்த குழந்தைகள் அறியாப் பருவத்தில் இயற்கை மார்க்கத்தில் இருக்கின்றன.
மூவருக்கு எழுதுகோல் உயர்த்தப்பட்டது என்ற அறிவிப்பின் அடிப்படையில் சிறுவர்களின் அமல்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தீயவைகளும் பதிவுசெய்யப்படுவதில்லை! குழந்தைகள் இயற்கையெனும் இஸ்லாம் மார்க்கத்தில் இருப்பதால் இறப்பெய்தும் அனைத்துக் குழந்தைகளும், அது இணைவைப்போர் குழந்கைளானாலும் அவர்கள் சொர்க்கத்துப் பூங்காவில் சேர்க்கப்படுகின்றனர். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பிலிருந்து விளங்கலாம்:
(வரும் நபிவழிச் செய்தி, நபி (ஸல்) அவர்கள் கண்ட கனவின் விளக்கம். நீண்ட நபிமொழியின் இறுதியின் சிறுபகுதி. நூல் - புகாரி 7047)
''அப்படியே நடங்கள் அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில் வசந்த காலத்தின் எல்லா வண்ணப் பூக்களும் காணப்பட்டன. அந்தப் பூங்காவிற்கு நடுவில் உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். வான் நோக்கி உயர்ந்திருந்தால் அவரின் தலையை என்னால் (எளிதில்) பார்க்க முடியவில்லை. அந்த மனிதரைச் சுற்றி நான் ஒருபோதும் கண்டிராத அளவிற்கு ஏராளமான சிறுவர்கள் இருந்தார்கள். நான் அவ்விருவரிடமும், 'இந்த (உயரமான) மனிதர் யார்? இந்தச் சிறுவர்கள் யார்?' என்று கேட்டேன்.....
....அந்தப் பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர்.
இதை நபி(ஸல்) அவர்கள் கூறியபோது முஸ்லிம்களில் சிலர், 'இறைத்தூதர் அவர்களே! இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா?)' என்று கேட்டனர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(ஆம்) இணைவைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம்' என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து என்னுடன் வந்த அவ்விருவரும் கூறுகையில்,) ஒரு பாதி அழகாகவும் மறுபாதி அசிங்கமாகவும் காட்சியளித்த மக்கள், நல்லறங்களுடன் தீமைகளையும் கலந்துவிட்டவர்களாவர்; (பின்னர்) அவர்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் (என்று கூறினர்).
நீதி செலுத்துவதை அதிகம் விரும்புகிற இறைவன் எந்த அநீதியான தீர்ப்பும் வழங்க மாட்டான். நியாயமான தீர்ப்பே வழங்குவான்.
யார் யார் சொர்க்கம் செல்வார்கள்? நரகம் செல்வார்கள்? என்று முடிவு செய்வது நமது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது.
தவறே செய்யாத ஒரு குழந்தையைக் கூட சொர்க்கவாசி என்று நாம் முடிவு செய்யக் கூடாது. இதை இறைவனுடைய அதிகாரத்திலேயே விட்டுவிட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
4813 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى عَنْ عَمَّتِهِ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ دُعِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَنَازَةِ صَبِيٍّ مِنْ الْأَنْصَارِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ طُوبَى لِهَذَا عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ لَمْ يَعْمَلْ السُّوءَ وَلَمْ يُدْرِكْهُ قَالَ أَوَ غَيْرَ ذَلِكَ يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ خَلَقَ لِلْجَنَّةِ أَهْلًا خَلَقَهُمْ لَهَا وَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ وَخَلَقَ لِلنَّارِ أَهْلًا خَلَقَهُمْ لَهَا وَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ زَكَرِيَّاءَ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى ح و حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ مَعْبَدٍ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حَفْصٍ ح و حَدَّثَنِي إِسْحَقُ بْنُ مَنْصُورٍ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ كِلَاهُمَا عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى بِإِسْنَادِ وَكِيعٍ نَحْوَ حَدِيثِهِ رواه مسلم
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்த போது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல் வாழ்த்துக்கள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக் குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை'' என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான்'' என்று கூறினார்கள்.
முஸ்லிம் 5175அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
அன்புச் சகோதரர் sulthan mydeen அவர்களுக்கு,
மறுப்பு என்று முஸ்லிம் நூலில் இடம்பெறும் 5175வது நபிமொழியைப் பதிவுசெய்துள்ளீர்கள். இந்த அறிவிப்பிலிந்து, இறந்த குழந்தை சொர்க்கவாசி என்று சொல்வது தவறு என்கிறீர்களா?
இஸ்லாமியப் பார்வையில் நீங்கள் பதிவுசெய்துள்ள ஹதீஸிற்கு விளக்கம் என்ன?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
3:10. நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது. இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்.
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், ''என்னுடைய ஆண் குழந்தைகள் இருவர் இறந்து விட்டனர். நாங்கள் இழந்துவிடும் குழந்தைகள் தொடர்பாக எங்கள் உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியொன்றை எனக்கு நீங்கள் அறிவிக்கக்கூடாதா?'' என்றுகேட்டேன்.
அபூஹுரைரா ருலி) அவர்கள் ''ஆம்'' என்று கூறிவிட்டு, ''குழந்தைகள் சொர்க்கத்திக் நுண்ணுயிர்கள் ஆவார். அக்குழந்தைகளில் ஒன்று தனது தந்தையை அல்லது பெற்றோரைச் சந்திக்கும்போது அவரது ஆடையை அல்லது அவரது கையைப் பிடித்துக்கொள்ளும். - (அபூஹஸ்ஸானே!) நான் உங்களுடைய இந்த ஆடையின் ஓரத்தைப் பிடித்திருப்பதைப் போன்று - பிறகு தன்னையும் தன் பெற்றோரையும் அல்லாஹ் சுவர்க்கத்திற்குள் நுழைவிக்கும்வரை விடாது அல்லது விலகாது. என்று சொன்னார்கள். அறிவிப்பவர் அபூஹஸ்ஸான் (ரஹ்) (நூல் - முஸ்லிம் 5132)
பருவ வயதை அடையுமுன் இறந்த குழந்தைகள் சொர்க்கத்தைச் சேர்ந்தே இருப்பார்கள். அல்லாஹ் அவர்களை சொர்க்கத்திலிருந்து வெயியேற்ற மாட்டான் என்பதை மேல்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்றுவிடுகின்றனர். எனவே, நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்துவிடுங்கள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்' என்றார்கள். அவ்வாறே (அந்த நாளில் அந்த இடத்தில்) பெண்கள் ஒன்று திரண்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள். பிறகு, 'உங்களில், தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாக, தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்து விடுகிற பெண்ணுக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள்' என்றார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலுமா?' என்று கேட்டார். இதை அந்தப் பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, 'ஆம் இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும் தான்' என்று நபி(ஸல்) அவர்கள் மும்முறை பதிலளித்தார்கள். அறிவிப்பவர் அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) (நூல்கள் - புகாரி 7310, முஸ்லிம் 5130)
ஒரு பெண்மணி தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், 'இவ்வாறு பல பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுகிறவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்" எனக் கூறினார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல்கள் - புகாரி 1418, 5995 முஸ்லிம் 5125)
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி தன் குழந்தையுடன் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! (உடல் நலமில்லாத) இந்தக் குழந்தைக்காகப் பிரார்த்தியுங்கள். (இதற்குமுன்) நான் மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டேன்'' என்று கூறினார். ''மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டாயா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண் ''ஆம்'' என்றார். ''நரக நெருப்பிலிருந்து (உன்னைக் காக்க) நீ பலமான வேலி அமைத்துக்கொண்டு விட்டாய்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் - முஸ்லிம் 5133, 5134)
இன்னும் இதுபோன்ற அறிவிப்புகள், குழந்தைகளால் சோதிக்கப்படும் பெற்றோருக்கும், குழந்தைப் பிராயத்தில் பிள்ளைகளை இழந்துவிடும் முஸ்லிம் அடியார்களுக்கும் ஆறுதலளிக்கும் வகையில் நற்செய்தியை இஸ்லாம் அறிவித்துள்ளன. அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் என்ற இணைவைத்தல் எனும் பெரும் பாவத்தையும், கொலை போன்ற, பிறருக்கு இழைத்த அநீதிகளையும் தவிர, தனக்குத் தானே அநீதி இழைத்துக்கொண்டு மரணித்தவரின் - குழந்தைப் பருவத்தில் மரணித்துவிட்ட பிள்ளைகளுக்காக பெற்றோரின் - சிறுபாவங்களை மறுமையில் அல்லாஹ் மன்னிக்கிறான். குழந்தையை இழந்து அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறு எதுவும் நிகழாது என இறைவழியில் பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் இருந்தோருக்கு மறுமையில் அக்குழந்தைகள் தமது பெற்றோரை நரகத்தை விட்டும் தடுக்கும் திரையாக மாறிவிடுகின்றனர்.
இணைவைத்தோரின் மரணித்த குழந்தைகள் சொர்க்கத்தில் இருந்தாலும், இஸ்லாம் மார்க்கத்தை நிராகரித்து, நிராகரித்த நிலையிலேயே மரணித்தோருக்கு மறுமையில் அவர்களின் குழந்தைகளால் பெற்றோரின் தண்டனையிலிருந்து எதையும் தடுத்திட முடியாது!
(அல்லாஹ் மிக அறிந்தவன் - தூய்மையானவன்)
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்த போது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல் வாழ்த்துக்கள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக் குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை'' என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான்'' என்று கூறினார்கள். (முஸ்லிம் 5175 )
மேல்கண்ட அறிவிப்பிற்கான விளக்கத்தை அடுத்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்