அருமை சகோதரர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.
நாம் தொழும் கடமையான ஐவேளை தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைகளில், நாம் தொழ வேண்டிய முன் மற்றும் பின் சுன்னத்
தொழுகைகள் எத்தனை ரக்அத்கள் என்பதை ஆதார ஹதீஸ்களுடன்
தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக.
இப்படிக்கு,
மஞ்சை H.J.சாதிக்,
துபை.
|
இந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களை சொல்கிறது.
தொழாதவர் ஜும்ஆ உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் தொழுது விட்டுத்தான் அமர வேண்டும் என்பது முதல் விஷயம்.
தொழுது விட்டிருந்தால் தொழாமல் அமர்ந்து கொள்ளலாம் என்பது இரண்டாவது விஷயம்.
அதாவது உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டு இருக்கும் போது சுன்னத் இரண்டு ரக்அத்துக்களை முன்னரே தொழுது விட்டிருந்தால் நேரடியாக சென்று அமர்ந்து கொள்ளலாம்.
இக்கருத்தை இப்னுமாஜாவில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு ஹதீஸ் கூடுதல் விபரங்களோடு விளக்குகிறது.
நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்ஃபானி (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், 'நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?' என்று கேட்க, அவர் 'இல்லை' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'அப்படியாயின் நீர் இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுது கொள்வீராக' என்றார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா 1114)
'நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?' என்ற வாசகம் பள்ளியல்லாத மற்ற இடங்களிலும் தொழும் தொழுகையை குறிப்பதை கவனிக்கலாம்.
இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தால் பள்ளியின் காணிக்கைத் தொழுகை முக்கியத்துவம் பெறாது. உரையை கேட்பதில் கவனம் செலுத்த வேண்டும், அதுவே முக்கியத்துவம் பெறும்.
மற்ற தொழுகைகளுக்கு முன் சுன்னத் பாங்கிற்கு பின்பு தான் தொழ வேண்டும். ஆனால் ஜும்ஆவின் முன் சுன்னத்தின் நேரம் பாங்கிற்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றது. அதற்கான ஆதாரம். இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது வீட்டில் ஜும்ஆவுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை நீட்டித் தொழுபவர்களாகவும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு தொழுதிருப்பதாகவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: நாஃபிஉ (ரலி), நூல்கள்: அபூதாவூது 1123, இப்னு ஹிப்பான்)
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
தொழாதவர் ஜும்ஆ உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் தொழுது விட்டுத்தான் அமர வேண்டும் என்பது முதல் விஷயம்.
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டு காட்டித்தந்த கடமையல்லாத தொழுகைக்கு சுன்னத் தொழுகை என்று கூறப்படும். இவ்வகைத் தொழுகையில் கடமையான ஐவேளைத் தொழுகைக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நபி (ஸல்) தொழுது காட்டியுள்ளார்கள்.
இவ்வாறு காட்டிய தொழுகைகளும் மற்ற கடமையில்லா தொழுகைகளும் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே கூடுதல் நன்மையை பெற்றுத் தரும். மக்களே! உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள். கடமையான தொழுகையை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ர), நூல்கள் : புகாரீ (731), முஸ்ம் (1432) சுன்னத்தான, உபரியான தொழுகைகள் இரண்டிண்டாகத் தொழவேண்டும். நான்கு ரக்அத் தொழ வேண்டுமானால் இரண்டு ரக்அத்தில் ஸலாம் கூறிவிடவேண்டும். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுது ஸலாம் கொடுக்க வேண்டும். ''இரவிலும் பகலும் தொழக்கூடிய (கடமையல்லாத) தொழுகைகள் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தான் இருக்க வேண்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ர), நூல்: திர்மிதீ (543), அபூதாவூத் (1103),இப்னுமாஜா (1312),அஹமத் (4560), தாரமீ (1422) பஜ்ர் தொழுகையின் சுன்னத் ஐவேளைத் தொழுகையில் பின்னணியில் தொழுப்படும் தொழுகையில் பஜ்ருடைய முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்திற்கு நபி (ஸல்) அவர்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். ''நபி (ஸல்) அவர்கள் உபரியான தொழுகையில் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களுக்கு முயற்சி எடுத்ததைப் போல் வேறு எதற்கும் எடுக்க மாட்டார்கள்.'' அறிவிப்பவர்: ஆயிஷா (ர), நூல்: புகாரீ (1163), முஸ்ம் (1312) ஃபஜ்ருக்கு முன் சுன்னத் தொழாமல் கடமையான பர்லுத் தொழுகையை நிறைவேற்றி விட்டால் பின்னர் அதனை நிறைவேற்றிக் கொள்ளலாம். ''இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் ஒருவரை ஸுப்ஹுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், ''ஸுப்ஹுத் தொழுகை இரண்டு ரக்அத்கள்'' என்று சொன்னார்கள். அதற்கவர், ''ஸுப்ஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்களைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்'' என்று பதிலளித்ததும் நபி (ஸல்) அவர்கள் மவுனமாகி விட்டார்கள்.'' அறிவிப்பவர்: கைஸ் பின் அம்ர் (ர), நூல்: திர்மிதீ (387) சுப்ஹýத் தொழுகை தொழுது விட்டால் சூரியன் உதிக்கும் வரை எந்த உபரியான தொழுகைகளையும் தொழக் கூடாது. சுபுஹ் தொழுகைக்குப் பின் சூரியன் உதிக்கும் வரை தொழுவதற்கும் அஸர் தொழுகைக்குப் பின் சூரியன் மறையும் வரை தொழுவதற்கும் நபி(ஸல்) நடை செய்தார்கள். அறிவிப்பவர்: உமர்(ர), நூல்: புகாரி (581),முஸ்ம் (1503) லுஹர் சுன்னத் லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு அல்லது நான்கு பின்னர் இரண்டு அல்லது நான்கு ரக்அத்கள் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர் : இப்னு உமர் (ர), நூல்கள் : புகாரீ (937), முஸ்ம் (1322) லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் சுப்ஹýக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டுவிடாதே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர) நூல்: புகாரீ (1182),நஸயீ (1736),அபூதாவூத் (1062), அஹ்மத் (23204) ''யார் லுஹருக்கு முன்பு நான்கு ரக்அத்களும், பின்பு நான்கு ரக்அத்களும் தொழுவாரோ அவருக்கு நரகத்தை இறைவன் தடுத்து விடுகிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ர), நூல்: திர்மிதீ (392) 1201நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் லுஹர் தொழுகைக்கு முன்னர் நான்கு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர் : ஆயிஷா (ர), நூல் : முஸ்ம் (1323) அஸர் தொழுகை சுன்னத் அஸருடைய சுன்னத் அஸருடைய முன் சுன்னத் இரண்டு அல்லது நான்கு ரக்அத்களாகும். ''ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு என்று மூன்று முறை கூறினார்கள். (மூன்றாம் முறை) விரும்பியவர்கள் தொழலாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ர), நூல்கள்: புகாரீ (624),முஸ்ம் (1522) மஃரிப் தொழுகையின் சுன்னத் மஃரிப் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் ஆகும். மஃரிபிற்கு முன்னர் தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு மூன்றாவது முறை விரும்பியவர் தொழட்டும் என்றார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ர), நூல்: புகாரீ (1183), அபூதாவூத் (1089),அஹ்மத் (19643) நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ர), நூல் : இப்னுஹிப்பான் (1588) முஅத்தின் பாங்கு சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் (தொழுகைக்கு) வருவதற்கு முன் நபித் தோழர்கள் (ஸýன்னத் தொழுவதற்காக) தூண்களை நோக்கி விரைவார்கள். இவ்வாறே பாங்கிற்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக நேரம்) இல்லாமருந்தும் மஃரிபுக்கும் முன் இரண்டு ரக்அத் தொழுவார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ர), நூல் : புகாரீ (625),நஸயீ (675), ''நபி (ஸல்) அவர்கள் மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்.'' (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர்: இப்னு உமர் (ர), நூல்: புகாரீ (937) இஷா தொழுகையின் சுன்னத் இஷாத் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் அல்லது நான்கு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் ஆகும். ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு என்று மூன்று முறை கூறினார்கள். (மூன்றாம் முறை) விரும்பியவர்கள் தொழலாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ர), நூல்கள்: புகாரீ (624),முஸ்ம் (1522) ''நபி (ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவராக இருந்தார்கள்.'' (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர்: இப்னு உமர் (ர), நூல்:புகாரீ (937) |
|
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டு காட்டித்தந்த கடமையல்லாத தொழுகைக்கு சுன்னத் தொழுகை என்று கூறப்படும். இவ்வகைத் தொழுகையில் கடமையான ஐவேளைத் தொழுகைக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நபி (ஸல்) தொழுது காட்டியுள்ளார்கள். |
''நபி (ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவராக இருந்தார்கள்.'' (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர்: இப்னு உமர் (ர), நூல்:புகாரீ (937) |
|
--- On Tue, 1/26/10, shoaib jamaludeen <shoa...@gmail.com> wrote: |
|
ஒவ்வொரு நாளின் கடமையான தொழுகைக்கு முன்பும், பின்பும் சுன்னத்தான தொழுகைகளையும் பேணி தொழுது வந்தால், அதற்கென அல்லாஹ் மறுமையில் மகத்தான கூலி வழங்குகிறான்.
ஒரு முஸ்லிமான அடியார் ஒவ்வொரு நாளும் கடமையான தொழுகைகள், தவிர கூடுதலாக பன்னிரண்டு ரக்அத்கள் தொழுதால் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை எழுப்புகிறான். அல்லது அவருக்காகச் சொர்க்கத்தில் ஓர் இல்லம் எழுப்பப்படுகிறது. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உம்மு ஹபீபா (ரலி) (நூல் - முஸ்லிம் 1321)
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவித்து, ''இதை நான் செவியுற்றதன் பிறகு அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை (தவறாமல்) தொழுது வருகிறேன். என்றும் கூறினார்கள்.
சுப்ஹு தொழுகையின் பின் சுன்னத்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ''லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள். மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) (நூல்கள் - திர்மிதீ 400. முஸ்லிம் நூலில் நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்களும் லுஹருக்குப் பின்பு ரக்அத்களும் தொழுதார்கள் என இடம்பெற்றுள்ளது. - முஸ்லிம் 1323
லுஹ்ர் தொழுகையின் முன் பின் சுன்னத்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களையும் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் தொழுதிருக்கிறேன். மக்ரிப், இஷா (உடைய ஸுன்னத்) தொழுகைககைள அவர்களின் வீட்டில் தொழுதிருக்கிறேன். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல் - புகாரி 1172. முஸ்லிம் 1322)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ''லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள். மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். ஃபஜருக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) (நூல்கள் - திர்மிதீ 400. முஸ்லிம் நூலில் நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்களும் லுஹருக்குப் பின்பு ரக்அத்களும் தொழுதார்கள் என இடம்பெற்றுள்ளது. - முஸ்லிம் 1323 )
அஸர் தொழுகையின் முன் சுன்னத்.
நபி (ஸல்) அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மூஃமீன்கள், முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை (இரண்டிரண்டாக) பிரிப்பார்கள். அறிவிப்பவர் அலி (ரலி) (நூல் - திர்மிதீ 394)
மஹ்ரிப் தொழுகையின் பின் சுன்னத்.
மக்ரிபுக்குப் பின்னுள்ள இரண்டு ரக்அத்களை நபி (ஸல்) அவர்களின் வீட்டில் அவர்களுடன் நான் தொழுதுள்ளேன். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல்கள் - திர்மிதீ 397)
நான் நபி(ஸல்) அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களையும் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் தொழுதிருக்கிறேன். மக்ரிப், இஷா (உடைய ஸுன்னத்) தொழுகைககைள அவர்களின் வீட்டில் தொழுதிருக்கிறேன். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல் - புகாரி 1172. முஸ்லிம் 1322)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ''லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள். மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். ஃபஜருக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) (நூல்கள் - திர்மிதீ 400. முஸ்லிம் நூலில் நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்களும் லுஹருக்குப் பின்பு ரக்அத்களும் தொழுதார்கள் என இடம்பெற்றுள்ளது. - முஸ்லிம் 1323
இஷாத் தொழுகையின் பின் சுன்னத்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களையும் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் தொழுதிருக்கிறேன். மக்ரிப், இஷா (உடைய ஸுன்னத்) தொழுகைககைள அவர்களின் வீட்டில் தொழுதிருக்கிறேன். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல் - புகாரி 1172. முஸ்லிம் 1322)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ''லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள். மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) (நூல்கள் - திர்மிதீ 400. முஸ்லிம் நூலில் நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்களும் லுஹருக்குப் பின்பு ரக்அத்களும் தொழுதார்கள் என இடம்பெற்றுள்ளது. - முஸ்லிம் 1323 )
கடமையான தொழுகையைத் தவிர மேலதிகமாக தொழும் சுன்னத்தான தொழுகைகள் லுஹ்ர் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்கள். லுஹ்ர் தொழுகைக்குப் பின்பு இரண்டு ரக்அத்கள். என அறிவிக்கப்ட்டுள்ளது. முஸ்லிமில் இடம்பெறும் அன்னை ஆயிஷாவின் அறிவிப்பில் நான்கு ரக்அத்கள் என கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அஸ்ர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்கள் என அலி (ரலி) அவர்களின் அறிவிப்பிலிருந்து விளங்கலாம்.
மக்ரிப், இஷாத் தொழுகைக்களுக்குப் பின் சுன்னத்தும், பஜ்ர் தொழுகைக்கு முன் சுன்னத்தும் இரண்டிரண்டு ரக்அத்கள் என அறிய முடிகிறது. நாம் ஆரம்பத்தில் பதிவு செய்துள்ள அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் அறிவிப்பில், ஒவ்வொரு நாளும் கடமையான தொழுகைகள் தவிர சுன்னத்தான தொழுகைகளின் ரக்அத்கள் பன்னிரண்டு எனக் கூறப்பட்டுள்ளது!
முறையே,
லுஹ்ருக்கு முன் இரண்டு, பின் இரண்டு என நான்கு ரக்அத்கள்!
அஸருக்கு முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள்!
மக்ரிபுக்குப் பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள்!
இஷாவுக்குப் பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள்!
இவை நீங்கலாக லுஹ்ர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்களும் லுஹ்ர் தொழுகைக்குப் பின் நான்கு ரக்அத்களும், அஸர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதையும் பின்பற்றிக் கொள்ளலாம்!
ஜும்ஆத் தொழுகைக்குப் பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள் எனவும் அறிவிப்புகளிலிருந்து விளங்கலாம்!
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
//சுப்ஹு தொழுகையின் பின் சுன்னத்.//
சுப்ஹு தொழுகையின் பின் சுன்னத் என்பதை சுப்ஹு தொழுகையின் முன் சுன்னத் எனத் திருத்தம் செய்து வாசிக்கவும்.
2010/1/27 muslim <tomu...@gmail.com>
கேள்விகள் அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பான குழுமச் சகோதரர்களுக்கு
கேள்வி1. நபி(ஸல்) அவர்கள் திருமண ஒப்பந்தத்தின் போது குத்பா (உரை)
நிகழ்த்தியுள்ளார்களா?
கேள்வி2. முதல் கேள்விக்கு ஆதாரம் இருந்தால், நபி(ஸல்) அவர்கள் எந்த
நபித்தோழரின் திருமண ஒப்பந்தத்தின் போது குத்பா(உரை) நிகழ்த்தினார்கள்?
கேள்வி3.திருமண ஒப்பந்தத்தின் போது குத்பா உரை நிகழ்த்த வேண்டும் என்பது
கட்டாயமாக இருந்தால் நிக்காஹ் நடக்கும் முன் குத்பா(உரை) நடத்த வேண்டுமா?
அல்லது நிக்காஹ் நடந்து முடிந்த பின் குத்பா(உரை) நிகழ்த்த வேண்டுமா?
குறிப்பு: திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் மூலம் பதில்
தரவும். தாங்கள் பதில் அளிக்கும் எல்லா தலைப்புகளின் கீழ் குறிப்பிடும்
ஹதீஸ்களின் அறிப்பாளர் வரிசையையும் சேர்த்து பதிலளித்தால் அதன் தரத்தை
பரீசீலனை செய்ய வசதியாக இருக்கும். அல்லது அரபி டெக்ஸ்டை பேஸ்ட்
செய்துவிட்டால் கூட போதுமானது.
சிராஜ் ஏர்வாடி
பதில்கள்:- வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்
தொழுகையில் ஓதவேண்டிய தஷஹ்ஹுதையும் பிற தேவைகளின் பொழுது ஓதவேண்டிய தஷஹ்ஹுதையும் நபி (ஸல் அவர்கள் எங்களுக்குக் கற்றுத் தந்தார்கள்.
தொழுகையில் தஷஹ்ஹுத் ''அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலாவது வத்தையிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு'' என்றும்,
தேவைகளின் போது ''அல்ஹம்துலில்லாஹி நஸ்தயீனுஹு வநஸ்தஃபிருஹு வநவூது பில்லாஹி மின்ஷுருரி அன்புஸினா வஸய்யிஆதி அஃமாலினா, மன்யஹ்திஹில்லாஹுஃபலா முளில்ல லஹ், வமன்யுள்லில் ஃபலா ஹாதிய லஹ் வஅஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு'' என்றும் மேலும் மூன்று வசனங்களையும் ஓதுவார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) (நூல் - திர்மிதீ 1023 நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா)
மூன்று வசனங்கள் 3:102, 4:1, 33:70 ஆகியவை என்று ஸுஃப்யான் ஸவ்ரீ விளக்கமளிக்கிறார்கள்.
3:102 நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்¢ மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
4:1 மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்¢ அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
33:70 ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
தொழுகையில் அத்தஹிய்யாத்தில் ஓதுவதன் பொருள்:
''எல்லாவித கண்ணியமும் தொழுகைகளும் நல்லறங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது ஸலாமும், இறையருளும், பரக்கத்தும் ஏற்படட்டுமாக. மேலும் எங்கள் மீதும் ஏனைய நல்லடியார்கள் மீதும் ஸலாம் உண்டாகட்டுமாக. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. என்று நான் உறுதியாக நம்புகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.''
பிற தேவைகளில் ஓதவேண்டிய தஷஹ்ஹுதின் பொருள்:
நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியது! அவனிடமே உதவி தேடுகிறோம், பாவமன்னிப்பு தேடுகிறோம். எங்கள் உள்ளங்களின் தீங்குகளை விட்டும், தீய செயல்களை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறோம்! எவருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவனை வழிகெடுப்போர் யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிதவறச் செய்தானோ அவனுக்கு நேர்வழி காட்டுவோன் இல்லை.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. என்று நான் உறுதியாக நம்புகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْثَرُ بْنُ الْقَاسِمِ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ
عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّشَهُّدَ فِي الصَّلَاةِ وَالتَّشَهُّدَ فِي الْحَاجَةِ قَالَ التَّشَهُّدُ فِي الصَّلَاةِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَالتَّشَهُّدُ فِي الْحَاجَةِ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا فَمَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَيَقْرَأُ ثَلَاثَ آيَاتٍ
قَالَ عَبْثَرٌ فَفَسَّرَهُ لَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ
திருமண நிகழ்வுகளில் மட்டுமின்றி, எல்லா நிகழ்ச்சிகளிலும் உரையாற்றும் மேற்கண்ட உறுதி மொழியை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். திருமணத்தின் போது இந்த குத்பாவைக் கண்டிப்பாக ஓதவேண்டும் என்று இல்லை! குத்பா நிகழ்த்தவில்லை என்றாலும் திருமணம் நிறைவேறிவிடும்.
''நான் நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் முத்தலிப் மகளார் உமாமாவை மணமுடித்துக் கேட்டேன். அவர்கள் குத்பா ஓதாமல் எனக்கு அவரை மணமுடித்து வைத்தார்கள்.'' அறிவிப்பவர் பனூ ஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த நபித்தோழர். (நூல் - அபூதாவூத் 1810)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ الْعَلَاءِ ابْنَ أَخِي شُعَيْبٍ الرَّازِيِّ عَنْ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ عَنْ رَجُلٍ مِنْ بَنِي سُلَيْمٍ قَالَ
خَطَبْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمَامَةَ بِنْتَ عَبْدِ الْمُطَّلِبِ فَأَنْكَحَنِي مِنْ غَيْرِ أَنْ يَتَشَهَّدَ
திருமண ஒப்பந்தத்திற்கு குத்பா - உரை அவசியம் என்ற நிபந்தனை இல்லை. குத்பா நிகழ்த்தினாலும் இல்லையென்றாலும் மண ஒப்பந்தம் நிறைவேறும் என்பதால், திருமணத்திற்கு முன்போ, பின்னரோ வசதியைப் பொறுத்து குத்பாவை - உரையை நிகழ்த்திக்கொள்ளலாம்.
இது நபிவழிச் செய்திகளிலிருந்து விளங்கிய எமது தனிப்பட்டக் கருத்தாகும்.
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
அன்புடன், muslim
நபித்தோழரின் பெயர்: அப்பாத் பின் ஷய்பான்
--
--
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மஸ்ஜிதுந் நபவி தொழுவதற்கான பள்ளியாக மட்டும் இருக்கவில்லை. இஸ்லாமிய அரசின் திட்டங்களைக் கலந்து ஆலோசிக்கும் அரசு சபையாகவும் இருந்தது. அன்னிய நாட்டுத் தூதர்களை வரவேற்று அவர்களுடன் தூதுச் செய்தியைப் பகிர்ந்து கொள்ளவும், குற்றவாளிகளைக் கைது செய்து கட்டி வைக்கும் சிறைக்கூடாமாகவும் நபியவர்களின் பள்ளி விளங்கியது.
''திருமணம் முடிப்பது நபிமார்களின் சுன்னத்'' பள்ளிவாசலில் திருமணம் நடத்தக்கூடாது என்று எந்த நிபந்தனையும் இல்லை. தொழுகைக்கு இடையூறாக இருத்தல் கூடாது!
இஸ்லாமியத் திருமண முறை அரபுக் கலாச்சாரத்துக்கு மட்டும் உரியதல்ல. ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் மணமுடிக்க வழிகாட்டும் ஒப்பந்த முறையாகும். மண ஒப்பந்தம் நிறைவேற மணமகன், மணமகள் சார்பாக பொறுப்பாளர், மஹர் கொடுக்கல் வாங்கலுக்காக இருசாட்சிகள் இவைபோதும். மண ஒப்பந்தத்தை எங்கும் நிறைவேற்றலாம். பள்ளியிலும் நிகழ்த்தலாம்.
இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணாக நடத்தப்படும் வரதட்சணைத் திருமணம் எங்கு நடந்தாலும் எதிர்க்கப்பட வேண்டும். என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வரதட்சணை எதிர்க்கப்பட வேண்டுமே தவிர திருமணம் எதிர்ப்புக்குரியதல்ல!
''குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் பரகத் நிறைந்ததாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
--
வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் இரு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் எந்த அளவுக்கு பள்ளி நிர்வாகி சம்பந்தப்படுகிறார் என்று விளங்கவில்லை. ஒரு பேச்சுக்கு அவருக்கும் சம்பந்தம் உள்ளது என்று வைத்துக்கொண்டாலும். வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் இணவைக்கும் கொடி குற்றமாகுமா?
இங்கு அல்குர்ஆன் 9:17,18 வசனங்களை பள்ளி நிர்வாகிக்குச் சொல்லியிருப்பது சற்றும் பொருத்தமாக இல்லை!