மும்பையில் இரட்டை விருதுகள் பெற்றார் குவைத் வாழ் தமிழர்

2 views
Skip to first unread message

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
Jul 20, 2019, 4:45:00 AM7/20/19
to Kuwait Committe
மும்பையில் இரட்டை விருதுகள் பெற்றார் குவைத் வாழ் தமிழர்

உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து சாதனை படைத்து வரும் சாதனையாளர்களுக்கும், பொதுச்சேவை செய்து வரும் தமிழ்ச் சங்கங்கள், நிறுவனங்களுக்கும் விருது வழங்கும் விழா மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை வாஷி தமிழ்ச் சங்க அரங்கத்தில் ஐ.நா. சபை வாழ்த்துப் பெற்ற மக்கள் சந்திப்பு வார பத்திரிகை சார்பில் நடைப்பெற்றது. இந்த விழாவில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச்செயலாளருக்கு சேவைச் சுடர் மற்றும் பவர் ஆஃப் மும்பை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விழாவிற்கு மக்கள் சந்திப்பு வார பத்திரிகை ஆசிரியர் ஏ. ஹாலிது தலைமை தாங்கினார். முன்னதாக நாசிக் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவரும் மக்கள் சந்திப்பு நிருபர்களான கண்ணன், சுப்பையா ஆகியோர் அதிர்ஷ்ட புறா மேடையை திறந்து வைத்தனர். சிறப்பு தலைமை விருந்தினராக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தலைமை விருந்தினர்களாக நாசிக் தமிழ்ச் சங்கத் தலைவர் இராமமூர்த்தி, வாஷி தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகி கண்ணன், ஜப்பான் தமிழ் பண்பலை தொகுப்பாளர் அழகு லட்சுமி, வாஷி கர்நாடக சங்கத்தின் செயலாளர் சுஜாதா ராவ், மலாடு தமிழர் நல சங்கத் தலைவர் லெ. பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து சாதனை படைத்து வரும் சாதனையாளர்களுக்கும், பொதுச்சேவை செய்து வரும் தமிழ்ச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் சேவைச் சுடர் மற்றும் பவர் ஆஃப் மும்பை விருதுகள் வழங்கப்பட்டன.

குவைத்தில் பல்வேறு சமூகப்பணிகளை செய்து வரும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ அவர்களுக்கு இவ்விழாவில் "சேவைச் சுடர்" மற்றும் "பவர் ஆஃப் மும்பை" விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இது குறித்து பரங்கிப்பேட்டை அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ  கூறுகையில், "இந்த விருதினை குவைத் இஸ்லாமிய தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என் பொதுநலப்பணிகளில் தோள் கொடுத்து என்னுடன் இணைந்து பணியாற்றி வரும் தோழர்களுக்கும் மற்றும் தமிழகத்திலும், குவைத்திலும் பல்வேறு பொறுப்புகளை எனக்கு வழங்கியுள்ள சமூக, சமய, மொழி, கலை, இலக்கிய, ஊடக, அரசியல் அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் நன்றியுடன் உரித்தாக்குகிறேன்" என தெரிவித்தார்.

இவ்விழாவில் வாஷி தமிழ்ச் சங்க பிரதிநிதிகள், நாசிக் தமிழ்ச் சங்க பிரதிநிதிகள், கன்னடா சங்க பிரதிநிதிகள், அன்னை இல்லம் பிரதிநிதிகள் உட்பட பல சமூக தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

https://www.facebook.com/khaleelbaaqavi/posts/10220343761011024
https://www.facebook.com/khaleelbaaqavee/posts/1459532630853246

செய்தி & படங்கள்:
அய்மான்,
குவைத் தமிழ்ச் செய்தி ஊடகம் (TNBK),
+965 6664 1434 / +91 999 410 6594 (WhatsApp)
tnb...@gmail.com

Mumbai Award 2019 4.jpg
Mumbai Award 2019 1.jpg
Mumbai Award 2019 5.jpg
Mumbai Award 2019 3.jpg
Mumbai Award 2019 2.jpg
Mumbai Award 2019 7.jpg
Mumbai Award 2019 6.jpg
Mumbai Award 2019.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages