இசை ஒரு அழிவுச் சுரங்கம்!

1,123 views
Skip to first unread message

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Nov 21, 2009, 3:34:35 AM11/21/09
to நமக்குள் இஸ்லாம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இசை என்பதன் விளக்கம் என்ன?
இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள்.

கட்டுரை தொடரும்.... (இன்ஷா அல்லாஹ்)

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Nov 21, 2009, 3:40:28 AM11/21/09
to நமக்குள் இஸ்லாம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

இசை என்பதன் விளக்கம் என்ன?

இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். வடமொழியில் நாதம் என அழைப்பர். இந்த நாதம் இருவகைப்படும் 1) ஆகத நாதம், 2) அனாகத நாதம்.

 

 
ஆகத நாதம்

மனிதனது முயற்சியால் வேண்டுமென்றே உருவாக்கப் படுவதற்கு ஆகத நாதம் என்று பொருள் இவை இசைக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படுவதை குறிக்கும்.

 

 
அனாகத நாதம்

மனிதனது முயற்சியில்லாமல் இயற்கையாக கேட்கப்படும் நாதம் அனாகத நாதம் என்று கூறுவர் அதாவது கடல் அலைகளின் ஓசை, தேனிக்களின் ரிங்காரம், வண்டுகளின் ஓசை, மரங்களில் காற்றின் உராய்வினால் எழும் ஓசை போன்றவற்றை கருதலாம்.

 

 
இசை திருமறைக்கு எதிரானதாக இருக்கிறது!

இசையினால் உள்ளம் அமைதியுறும் என்று பெரும்பாலும் மக்களால் நம்பப்படுகிறது அதைப்பற்றி அறிய திருமறையை புரட்டிப்பார்த்தால் கீழ்கண்ட இறைவசனமே நம் முன் வருகிறது! இசையால் உள்ளம் அமைதி பெறும் என்று கூறுவோரின் வாதம் அல்லாஹ்வின் திருமறைக்கு மாற்றமாக உள்ளது!

 

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (13:28)

 

 

இசை மனிதனை சீரழிக்கும் விதங்களை ஆய்வோம்!

இசை என்னும் கலை மனிதன் மற்றும் உயிரினங்களை தன்னில் இசைய வைப்பதாகவும் மேலும் தன்னுடைய ஸ்வரங்களின் மூலம் வசப்படுத்தி பணியவைப்பதாகவும் பெரும்பாலம் நம்பப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இசைக்கு அடிமையாகாதவர்கள் யாருமில்லை என்றே கூறலாம் காரணம் அந்த அளவுக்கு அது தனி இடம் பிடித்துவிட்டது. உதாரணமாக செல்போன் முதல் தொலைக் காட்சிப் பெட்டி வரை அனைத்திலும் இசைதான் முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால் இசையால் தீமைகளே அதிகம் குறிப்பாக இளைய தலைமுறையினரை சீரழிக்கும் ஆயுதம் இசை என்று கூறினால் அது மிகையாகாது.

 
 

இசையினால் மனிதன் எவ்வாறு சீரழிகிறான்?

 

மனிதன் இசையை கேட்கும் போது அவனை அறியாமலேயே ஒருவிதமான மதி மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறான், அதன் தாக்கத்தால் தன்னை அறியாமலேயே உதடுகளை அசைத்து பாட ஆரம்பிக் கின்றான், உடலை அசைத்து ஆடவும் ஆரம்பிக்கிறான். உடனே அந்த இசையை யாராவது நிறுத்தினால் மன உலைச்சல் ஏற்பட்டு அவர்கள் மீது கோபம் கொள்கிறான். தட்டிக் கேட்டால் உன் வேலை யைப்பார் என்று அதட்டுவதும், ஆத்திரப்பட்டு உதைப்பதும் இன்றைய இளைஞர்களிடம் அன்றாட பண்பாக மாறிவிட்டது. இவைகளும் ஷைத்தானின் தூண்டுதல் களாகும்! இசையை ரசிப்பவர்கள் குடிபோதையில் இருப்பவர் களுடைய மனோ நிலையை பெற்றுவிட்டார்களோ என்று கூட சில நேரம் எண்ணத் தோன்றிவிடுகிறது அந்த அளவுக்கு அது மனிதனை குறிப்பாக இளைஞர்களை சீரழிக்கிறது. மனித இனத்தை சீரழிப்பவன் யார் ஷைத்தான் தானே.

 

விசுவாசம்கொண்டோரே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள், எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை மானக் கேடானதைக் கொண்டும் வெறுக்கப்பட்டதைக் கொண்டும் நிச்சயமாக (ஷைத்தானாகிய) அவன் ஏவுவான்.... (அல்குர்ஆன் 24:21)

 

சகோதரர்களே! இந்த திருமறை வசனத்தை சற்று கூர்ந்து கவனித்துப்பாருங்கள் ஷைத்தான் மானக் கேடானதையும் வெறுக்கப்பட்டதையும் ஏவுவான் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்க இசை இன்றைக்கு நன்மையையா ஏவுகிறது? இல்லையே!

 

 
ஷைத்தானின் முதல் பொக்கிஷமே இசைதான்!

இன்றைய இளைஞர்கள் சினிமா, டான்ஸ், கூத்து கும்மாளம் என்று செல்வதற்கு எது மூலகாரணமாக இருக்கிறது இசைதானே! அந்த இசையைக் கொண்டுதானே பல்வேறு பாவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இசையில் மயங்கிய இளைஞர்களும், கல்லூரி மாணவிகளும் எத்தனை எத்தனை பொய்கள் சொல்லி, வீட்டில் உள்ள பணத்தை களவாடி, பெற்றோரை துண்புறுத்தி பணம் பெற்று இறுதியாக கிடைத்த பணத்தைக்கொண்டு சினிமா, டான்ஸ் கிளப்புகள், கூத்தாட்டம், மயிலாட்டம் என்று சீரழிவது. இப்படிப்பட்ட இடங்களுக்கு செல்வதால் ஆண், பெண் என்ற பாகுபாடுகளை மறந்து கண்டவர்களுடன் தகாத உறவுகளைக் கொண்டு கெட்டு சின்னாபின்னமாகி செல்கின்றனர். அப்படிப்பட்ட இசையை நாம் ஆதரிக்கலாமா? இதோ ஷைத்தானைப் பற்றிய நபிமொழி!

 

ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றான். மனிதனை மானக்கேடான செயல்களில் அழைத்துச் செல்லும் பாதைகளில் அன்னியப் பெண்ணுடன் தனிமையிலாக்குவதும் ஒன்று. இதனால்தான் மார்க்கம் இப்பாதையை அடைக்கிறது.
நபி(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள். (அன்னியப்) பெண்ணுடன் தனித்திருப்பவனுடன் மூன்றாம் நபராக நிச்சயமாக ஷைத்தான் இருப்பான். (அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: அஹமத்) 
 
 

இசையினால் ஏற்படும் உடல் பாதிப்புகள்

இசையைக் கேட்பதால் மனம் நிம்மதியடையுமா? என்றால் நிச்சயம் இல்லை. மாறாக இசையைக் கேட்பதால் நரம்புகள் பாதிப்படைதல், தூக்கமின்மை, அமைதியின்மை ஆகியவை தான் ஏற்படுகின்றன.

இசை கேட்கும் போது மனித உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கின்றது என்பதை சமீபத்தில் ஓர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அட்ரினலின் என்ற ஹார்மோன் பொதுவாக ஏதாவது மன இறுக்கம் ஏற்படும் போதோ அல்லது சாதாரண நிலைகளிலோ சிறிதளவு தான் உற்பத்தியாகின்றது.

இசை கேட்கும் போது அட்ரினலின் தொடர்ந்து உற்பத்தியா கின்றது. அட்ரினலின் அதிகமாக உற்பத்தியாவதால் மனித உடலில் ஒரு பரபரப்பும், அமைதியின்மை, தூக்கமின்மை போன்றவையும் ஏற்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இதனால் மேலும் பல தீமைகள் ஏற்படுகின்றன.

 

இங்கிலாந்து மருத்துவர் எம்மா ஹாரிசன் கருத்துப்படி

சுமார் 2700 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக சத்தத்துடன் இசை கேட்பவர்களில் 80 விழுக்காட்டினருக்கு காதுகளில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

 

 
இசைக்காக ஹெட்போன் (HEADPHONE) அதன் பாதிப்புகள்


செல்போன், எஃப்.எம். ரேடியோ அல்லது இதர உபகரணங்களைக் கொண்டு ஏதாவது இசையை ரசித்துக் கொண்டே படுப்பது, நடப்பது, வாகனம் ஓட்டுவது இன்று அன்றாட வாடிக்கையாகிவிட்டது. இதனால் அதிக டெசிபல் அல்லது நிறுத்தாமல் (Non stop) பாடிக் கொண்டிருக்கும் ரேடியோ அதிர்வலைகளால் காது நரம்புகளுக்கு நல்லதல்ல என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் காது கேட்கும் திறன் மெதுவாகப் பாதிக்கப்படக் கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஒலி அலைகளை உருவாக்கக்கூடிய உட்புற காதில் அடங்கிய ஸ்பைரல் கேவிட்டியான கோச்லியா (Cochlea) ஹெட்ஃபோன் ஒலியை தாங்கக்கூடியதாகும். இந்த கோச்லியாவிற்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் காது கேட்கும் திறன் பாதிக்கப்படும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.


ஹெட்போனை அதிகளவில் பயன்படுத்துவதால் தூக்கம் கெடுதல், தலைவலி, காதுவலி போன்றவை சாதாரணமாக ஏற்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

 

அருகில் உள்ளவர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் பாதிப்பு

இசை மயக்கத்தால் அதிகமாக சவுண்டு வைப்பது அண்டை வீட்டாருக்கும் ஏன் நம் வீட்டாருக்கும் மன உலைச்சல், மன அமைதியின்மை, படிப்பில் கவனம் செலுத்த முடியாமை, இரைச்சல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த இசையை ரசிப்பவர்கள் இதை கவனிப்பதில்லை கவனித்தாலும் அதை வேண்டுமென்றே செய்கின்றனர்.

 

அண்டை வீட்டார் பற்றிய நபிமொழி

 'இறைவன் மீது ஆணையாக!

அவன் இறைநம்பிக்கையில்லாதவன்! ' என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! எவன் இறைநம்பிக்கையில்லாதவன்?' என்று வினவப்பட்டது. 'எவனுடைய அண்டை வீட்டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்!' என்று பதிலளித்தார்கள் அண்ணலார்.

அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்

 

மார்க்கப் பணிகளில் பாதிப்பு

·                    இன்று இசை செல்போன்களில் இடம் பெறுகிறது இதனால் தொழுகையில் நிற்கும் பொது செல்போனில் ஒளிக்கும் பாப் இசை, ஆபாச சினிமா பாடல் டியுன்கள் தொழுகின்ற தொழுகையாளிக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகிறது!

 

·                    பாங்கு சப்தம் கேட்கும் போது அதற்கு பதில் அளிப்பது நமது கடமையாகும் ஆனால் இந்த பாங்கு சப்தத்தை கேட்கவிடாமல் தடுக்கும் ஒரு சாதனமாக இசை இருக்கிறது

 

·                    ஒரு மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் போது அந்த வழியாக செல்லும் கார், பேருந்து போன்ற வாகனத்தில் இசை இசைக்கப்பட்டால் மக்கள் திசை திருப்பப்படுகிறார்கள்.

 

முடிவுரை

இசைக்கு நீங்கள் இசைந்தால் இசை உங்களை அடிமை யாக்கிவிடும்! சகோதரர்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது இசைக்கு அடிமையாக விரும்புகிறீர்களா? என்பது இளைஞர் விருப்பம்!

 

மதுபானத்தைப் போன்று இசையினால் நன்மை குறைவாக இருந்தாலும் 80% தீமைகளே அதிகமாக உள்ளது. அல்லாஹ் திருமறையில் கூறுவது போல் அவற்றில் சில பலன்கள் இருந்தாலும் அதனால் ஏற்படும் பாவம் பலனைவிட பெரிது அப்படிப்பட்ட கீழ்கண்ட இறைவசனத்தை படித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வரவும்.

 

நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும் ''அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது'' (நபியே! ''தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்'' என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; ''(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்'' என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு இறைவன் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான். (அல் குர்ஆன் 2 : 219)
 
 
என்னுடைய கருத்தில் தவறு தென்பட்டால் மன்னிக்கவும் தெளிவாக எடுத்துக்கூறுவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை! நான் இசையை வெறுக்கிறேன்! வெறுப்பவர்களும் வெறுக்கிறார்கள்!
 
 
அல்ஹம்துலில்லாஹ்

 
2009/11/21 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>



--
சகோதரர்களே! நான் ஆலிம் என்ற மார்க்க அறிஞன் அல்ல!  மார்க்கத்தை எத்திவைப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிய பொறுப்பாகிறது எனவே என்னுடைய கருத்துக்களில் தவறோ? பிழையோ கண்டால் உடனே மார்க்க அறிஞர்களின் மேலான பார்வைக்கு வைத்துவிடவும அவர்கள் அளிக்கும பதில் திருமறை ஹதீஸ்களின் அடிப்படையில் இருந்தால் ஏற்றுக்கொள்ளவும் -  இது உங்கள் பொறுப்பாகிறது!
திருமறை+நபிவழி (ஹதீஸ்) ஒன்றே மறுமை வெற்றிக்கான வழி மறந்துவிடவேண்டாம்!

Salem Bushra

unread,
Nov 21, 2009, 11:39:48 AM11/21/09
to fro...@googlegroups.com, salem...@yahoo.com

இசை' இஸ்லாமிய பார்வையில்!

முஸ்லிம்

அப்டேட் 26-01-08

உலகெங்கும் வியாபித்துள்ள காற்றைப் போல இசையும் ஆகிவிட்டது. இசையின்றி பாடலில்லை என்ற நிலைமாறி இசையின்றி செய்தியுமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எங்கும் இசை, எதிலும் இசை என்று எல்லாவற்றிலும் இசை திணிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் உம்மத்தில் அது குறித்த ஆய்வுகளும் சர்ச்சைகளும் பல வருடங்களாக நடந்துக் கொண்டிருக்கின்றன.

இசை ஹராம் என்ற பெருவாரியான மார்க்கத் தீர்ப்புகளுக்கு மத்தியில் 'அவசரப்பட்டு அத்தகைய முடிவுக்கு வருவது சரியல்ல அதை ஹராம் என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை' என்ற எதிர் தரப்பு வாதங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இருதரப்பு வாதங்களையும் நிதானமாக அலசிய பிறகு நமக்கு கிடைத்தத் தெளிவை உங்கள் முன் வைக்கிறோம். இதில் குறைப்பாடுகள் - தவறுகள் இருப்பின் இக்கட்டுரையை தொகுக்கும் 'முஸ்லிமாகிய' நானே முழு பொறுப்பாகும்.

இசை ஹராம் என்பதற்கு ஒரு சாராரால் குர்ஆனிலிருந்து மூன்று வசனங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அந்த மூன்று வசனங்களும் இசையை ஹராமாக்குகிறதா என்பதை முதலில் பார்ப்போம்.

முதல் ஆதாரம்:

அவர்களிலிருந்து (வழி தவறச் செய்ய) நீ சக்தி பெற்றிருக்கின்றவர்களை உன் கூப்பாட்டைக் கொண்டு வழி தவறச் செய். உன்னுடைய குதிரைப்படைகளையும், காலாட் படைகளையும் அவர்கள் மீது ஏவி விடு. (அவர்களுடைய) செல்வங்களிலும், பிள்ளைகளிலும் நீ கூட்டாகவும் இருந்து கொள். இன்னும் (பொய்யானவற்றைக் கொண்டு) அவர்களுக்கு வாக்களித்து விடு. ஏமாற்றத்தைத் தவிர, வேறு எதையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை என்றும் (இறைவனாகிய) அவன் கூறினான் (அல் குர்ஆன் 17:64).

தாபியீன்களின் காலத்திற்குப் பின் வந்த குர்ஆன் விரிவுரையாளர்களாகிய முஜாஹித் என்பவரும், அத்தஹாக் என்பவரும் மேற்கண்ட வசனம் பற்றிக் கூறும் பொழுது, ஷைத்தானானவன் தன்னுடைய குரலைக் கொண்டு இசையாலும், பாடல்களாலும் மற்றும் வேடிக்கை விநோதங்களாலும் மனிதர்களை குதூகலிக்கச் செய்கின்றான் என விரிவுரை தந்துள்ளனர். (தஃப்ஸீர் இப்னு கதீர்)

எந்த ஒரு சப்தம் அல்லாஹ்விற்கு கீழ்ப்படிதலை விட்டும் அவனைத் தடுக்கின்றதோ அத்தகைய சப்த ஒலிகளைப் பற்றித் தான் மேற்கொண்ட வசனம் குறிப்பிடுகின்றது என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (இப்னு கதீர்)

இந்த வசனம், அது எந்த வகையான, எத்தகைய சப்தம், எத்தகைய கூப்பாடு எனக் குறிப்பிட்டுக் கூறவில்லையாயினும், எந்த சப்தம் இறை அழைப்பாக இல்லையோ, எந்த சப்தம் இறைவனுக்கு கீழ்ப்படிய அழைப்பு விடுக்கும்படி இல்லையோ அத்தகைய சப்தத்தைத் தான் மேற்கண்ட வசனம் குறிப்பிடுகின்றது என்று அத்தபரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (தஃப்ஸீர் தப்ரி)

நாம்:

இந்த வசனத்தில் இசைப் பற்றி நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த ஒரு குறிப்பும் கிடைக்கவில்லை. அந்த வசனத்தின் கருத்தோட்டங்களை ஊன்றி கவனிக்கும் போது பொதுவாக எந்தக் காரியங்களெல்லாம் இறைச் சிந்தனையிலிருந்து நம் கவனத்தை திசை திருப்புகிறதோ அந்தக் காரியங்கள் அனைத்திலும் ஷெய்த்தானின் பங்கு தீவிரமாக இடம் பெறும் வாய்ப்புள்ளது என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. பிள்ளைகளும் செல்வங்களும் கூட இந்த வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதை எடுத்துக் காட்டி பிள்ளைகளும் செல்வங்களும் ஹராம் என்று யாரும் வாதிப்பதில்லை. அதே சமயம் அவைகளில் மூழ்கி இறைச் சிந்தனையை மறந்து விடக் கூடாது என்றே நாம் விளங்குவோம் பிறருக்கு விளக்குவோம்.

இதே அடிப்படையில் இசையையும் இங்கு சுட்டிக் காட்டப்படலாமே தவிர இந்த வசனம் இசையைத் தான் குறிக்கிறது என்று கூற முடியாது.

இரண்டாம் ஆதாரம்:

இச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா? (இதனைப் பொருட்படுத்தாது) நீங்கள் சிரிக்கிறீர்கள்;. நீங்கள் அழுவதுமில்லை. (இதனைப் பற்றி) நீங்கள் அலட்சியமுடையோராகவும் இருக்கின்றீர்கள். ஆகவே, நீங்கள் இறைவனுக்கு சிரம்பணியுங்கள். (அவனையே) வணங்குங்கள். (அல் குர்ஆன் 53:59-60-61-62)

இங்கே நமது ஆதாரத்துக்குத் தேவையான வசனம் 61 ம் அதில் வரக் கூடிய 'வஅன்தும் சாமிதூன்' என்ற சொல் மட்டுமே. இதில் வந்துள்ள சொல்லாகிய (சாமிதூன்) என்ற சொல் மட்டுமே நமது ஆய்வுக்குரியது. இங்கு சாமிதூன் என்ற சொல்லுக்கு மூலச் சொல்லான சமதா என்பதற்கு, அரபி மொழி இலக்கண மற்றும் மொழியியலாளர்கள் பல்வேறு பொருள்களைத் தந்துள்ளார்கள். அதை வைத்துத் தான் குர்ஆன் மொழி பெயர்ப்பாளர்கள், வெவ்வேறான பல மொழி பெயர்ப்புக்களை, தமது மொழி பெயர்ப்புக் குர்ஆன் - களிலே பயன்படுத்தி இருக்கின்றார்கள்.

இங்கே, இமாம் அல் குர்தூபி அவர்கள் மொழி வழக்கிலே பல்வேறு விதமாகக் கையாளப்படும் பொருள்களைக் கீழே தருகின்றார்கள் :-

சாமிதூன் என்பதன் மூலச் சொல்லாகிய சமதா என்பது, ஒருவன் பெருமை கொண்டு தன் தலையை உயர்த்துதல் என்ற பொருளைத் தரக் கூடியது.

வினைச் சொல்லாக இருக்கும் பொழுது, பெயர்ச்சி சொல்லாகிய சமூத் என்ற சொல், ஓய்வாக இருத்தல் அல்லது பொழுதை வீணாகக் கழித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் அந்த வினையைப் புரிபவருக்கு (சாமித்) என்றாகி, யார் தன் பொழுதை வீணான முறையில் இசை இசைப்பதிலும் அல்லது இது போன்ற செயல்களிலும் விளையாட்டுத்தனமாத் திரிகின்றார்களோ அவர்களைக் குறிக்கும். அதே போல பெண்பாலில் இச் செயலைப் புரிபவளுக்கு அஸ்மிதினா (உனது பாடலைக் கொண்டு எங்களை உற்சாகப்படுத்து) என்ற பொருளைத் தரக் கூடியது.

இருப்பினும், சாமித் என்பது, ஒருவன் தற்பெருமை கொண்டு, கர்வம் கொண்டு தலையை உயர்த்தித் திரிதில் என்று மிகப் பழைய அரபி அகராதியாகிய அஸ்-ஸிஹாஹ் - ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமதா எனும் சொல்லுக்கு அசைவற்று இருத்தல், வீணாக சோம்பி இருத்தல் என்ற பொருளையும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அல் ஜமாயிலி அஹ்காமில் குர்ஆனில் அல்-மஹ்தவி என்பவரால், சமதா என்ற சொல்லுக்கு கீழ்க்காணும் முறையிலும் பொருள் தரப்பட்டுள்ளது. அதாவது, ஒருவனைக் கேலி மற்றும் வீணானவற்றைக் கொண்டு வழிபிறழச் செய்தல் ஆகும்.

இறுதியாக முப்ரித் என்பவர், சாமிதூன் என்பதற்கு , சாமிதூன் என்றால் காமிதூன் அதாவது அசைவற்றிருத்தல் அமைதி ஆகிய பொருளைக் குறிக்கும் என்கிறார்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது, சாமிதூன் என்பது எங்கெல்லாம் திருமறை ஓதப்படுகின்றதோ, அப்படி ஓதப்படும் திருமறை வசனங்களை பிறர் செவியேற்காத வண்ணம் ஆடியும், பாடியும் கூச்சலிட்டு விளையாடியும் கெடுதல் செய்வார்களே முஷ்ரிக்குகள், அவர்களது இந்தப் பழக்கத்தைத் தான் குறிக்கும் என்கிறார்கள். (தப்ஸீர் குர்தூபி)

மேற்கண்ட அர்த்தம் தான் எமன் மக்களாலும் கையாளப்படுகின்றது.

மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இதற்கு இரண்டாவதாக ஒரு பொருளையும் தருகின்றார்கள் :-

அதாவது, தமது வேலையை (பிரச்னைகளை) எளிதாக்கிக் கொள்வதற்காக விளையாட்டிலும், பொழுது போக்கிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களைக் குறிக்கும் என்று கூறியுள்ளார்கள். இதே கருத்தை தாபியீன்களாகிய இக்ரிமா அவர்களும் மற்றும் அத்தஹாக் அவர்களும் ஆமோதித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், மூன்றாவதாக இந்த கீழ்க்காணும் விளக்கத்தையும் தந்துள்ளார்கள். ஆதாவது, ஒருவன் தற்பெருமை கொண்டு தலையைத் தூக்கித் திரிவதைக் குறிக்கும்.

கதாதா அவர்கள், சாமிதூன் என்பது கவனமின்மையைக் குறிக்கும் என்றும், இது முஷ்ரிக்கீன்களின் பழக்கமாகும் என்றும் கூறியுள்ளார்கள். மேலும், முஜாஹித் என்பவர் கடுமையான கோபம் அல்லது ஆத்திரம் என்றும் பொருள்படும் எனக் கூறியுள்ளார்.

ஆக, சாமிதூன் என்ற சொல்லானது இரைந்து பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், தமது நேரங்களை வீணான வகையில் கழித்துத், தற்பெருமை கொண்டு தலையை உயர்த்திக் கொண்டு திரிபவர்களையும், அல்லது இறைமறையையும் அதன் வசனங்களையும் பிறர் காதில் விழா வண்ணம் இறை அழைப்பைத் தடை செய்யும் நோக்குடன் மூர்க்கத்தனமாக, கோபங் கொண்டு, ஆவேசத்துடன் திரிபவர்களையும் குறிக்கக் கூடிய பொருளைத் தெளிவான முறையில் தந்து நிற்கிறது. மேற்கண்ட செயல்முறையானது இஸ்லாத்திற்கு விரோதமான, மாறுபாடான அதன் மேல் அவர்களது கவனமின்மையையும் குறிக்கக் கூடிய ஒரு கருத்துச் செறிவைத் தந்து நிற்கிறது.

நாம்:

சாமிதூன் என்ற சொல்லுக்கு, கருத்து வழக்கில் பலவாறான பொருள்கள் கூறப்பட்டாலும், இசையைத் தடை செய்தவற்குண்டான நேரடியான பொருளைத் தந்து விடவில்லை. எனவே, இந்த ஒரு வசனத்தை மட்டும் வைத்து நாம் இசைக்கு எதிரான தடைக்கான ஆதாரமாக முன் வைக்க முடியாது.

மொழி செரிவு மிக்கவர்கள் சில பதங்களுக்கு பற்பல அர்த்தங்கள் கொடுத்தாலும் ஒரு வசனத்துடைய மேல் - கீழ் தொடர்ச்சி அந்த வசனம் எந்த அர்த்தத்தில் வந்துள்ளது என்பதை புரிந்துக் கொள்வதற்கு பெரும் பங்காற்றும். எனவே இந்த வசனத் தொடர்களைப் பார்ப்போம்.

வரவேண்டிய நேரம் நெருங்கி விட்டது (57) அல்லாஹ்வையன்றி அதை வெளிபடுத்துபவர் எவருமில்லை (58) இந்த செய்திப் பற்றியா நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள் (59) உங்களுக்கு அழுகை வருவதில்லை சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள் (60) அலட்சியப்படுத்துகிறீர்கள் (61) இறைவனுக்கே சிரம் பணிந்து வணங்குங்கள் (62)

இந்த வசனத் தொடர்கள் பளிச் சென்று மறுமை நிகழ்வைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கின்றன. மறுமை உண்டா என்று கேலியாக ஆச்சரியப்பட்டு, அது குறித்து சிந்தித்து உள்ளங்களைப் பக்குவப்படுத்தாமல் சிரித்து கும்மாலமடித்துக் கொண்டு, மறுமை சிந்தனையையே அலட்சியப்படுத்தி விட்டு வாழும் மக்களை சுட்டிக்காட்டி, இறைவனை மறவாதீர்கள் அவனையே வணங்குங்கள் என்ற கருத்தை முன் வைக்கிறது. இதில் இசைக்கு எதிரான தடை எங்கும் தென்படவில்லை.

இசைக் கலக்காத அலட்சியங்கள், சிரிப்பு கும்மாலங்கள் இவைகளை இந்த வசனம் அங்கீகரிக்கவில்லை. இசைக்கும் போதோ அல்லது இசையாலோ ஏற்படும் உல்லாச உணர்வுகள் இசை இல்லாத பற்பல நேரங்களிலும் - நிகழ்வுகளிலும் ஏற்படத்தான் செய்யும். மறுமை சிந்தனையை மறக்கடிக்கும் அல்லது நினைவூட்டப்பட்டாலும் அலட்சியப்படுத்தும் ஒரு மனஇயலைத் தான் இந்த வசனம் சுட்டிக் காட்டிக் கண்டிக்கிறதே தவிர இசையை ஹராம் என்று சொல்லவில்லை. 'அன்தும் சாமிதூன்' 'நீங்கள் அலட்சியப்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறீர்கள்' என்பதில் 'சாமிதூன்' என்ற பதம் மறுமையை அலட்சியப்படுத்தும் எந்த நபரையும், அவர் செய்யும் எத்தகைய காரியத்தையும் சுட்டிக் காட்டக் கூடிய ஒரு பதமாகும்.

மறுமை சிந்தனையுள்ளவர்கள் சிரிக்கவேக் கூடாது. அழுதுக் கொண்டே இருக்க வேண்டும். உலகப் பற்றிலிருந்து விடுபட்டு மௌனிகளாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும். ஆசாபாசங்கள் மனக் கிளர்ச்சிகள் அறவேக் கூடாது என்றெல்லாம் இந்த வசனம் சொல்வதாக புரிந்துக் கொள்ளக் கூடாது. மனித இயல்பிலிருந்து மாறுபடாமல் அனுமதிக்கப்பட்ட விதத்தில் உலகை அனுபவிப்பதற்கான எந்த தடையும் இந்த வசனத்தில் இல்லை. நாம் செய்யும் எந்தக் காரியமும் மறுமைப் பற்றிய சிந்தனையையும் அச்சத்தையும் நம் மனதிலிருந்து எடுத்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையையே முன் வைக்கிறது. எனவே இசை தடைசெய்யப்பட்டது தான் என்பதற்கு இந்த வசனத்தைப் போதிய ஆதாரமாக முன் வைக்க முடியாது.

மூன்றாம் ஆதாரம்:

இறைவனின் பாதையை கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை திசை திருப்புவதற்காக அறிவின்றி வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோரும் மனிதர்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இழிவு படுத்தும் வேதனையுண்டு (அல் குர்ஆன் 31:6)

மூலத்திலுள்ள சொற்றொடர் 'லஹ்வல் ஹதீஸ்' ஆகும். இது மனிதனை முழுக்க முழுக்க தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு பிறவற்றை மறக்கச் செய்து விடும் விஷயம் எனப் பொருள்படும். குறைஷிகளின் அனைத்து எதிர் முயற்சிகளின் இடையேயும் நபி (ஸல்) அவர்களுடைய அழைப்புப் பணி தடைபடாமல் அதன் விளைவுகள் தொடர்ந்த போது, குறைஷிகள் ஈரானிலிருந்தும் மற்றும் இஸ்ஃபந்தியாரின் கதைகளை வரவழைத்து கதை சொல்லும் படலத்தைத் தொடங்கினார்கள். பாட்டுப்பாடும் அடிமைப் பெண்களையும் ஏற்பாடு செய்தார்கள். மக்கள் இவற்றில் மூழ்கி நபியவர்களின் பேச்சைக் கேட்காமலிருக்க வேண்டும் என்பதற்காக! (இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட், குர்ஆன் தமிழாக்கம், விளக்கவுரை பழைய பதிப்பு குறிப்பு 2. சூரா லுக்மான:06 வது வசனம்)

மேற்கண்ட வசனமானது, யார் ஏக இறையோனாகிய அல்லாஹ்வின் தூதைச் செவிமடுக்காமல், தங்களை வீண் கேளிக்கைகளில் மன மயக்கத்தை ஏற்படுத்துபவைகளில் ஈடுபடுத்திக் கொண்டும், நேரான பாதையினின்றும் விலகி தூரமான தீய வழிகளை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றார்களே அவர்களைப் பற்றித் தான் இறைவன் மேற்கண்ட வசனம் மூலம் விளக்குகின்றான்.

மேற்கண்ட நமது ஆய்வுக்கு உட்பட்ட சொல்லாகிய 'லஹ்வல் ஹதீஸ்' பற்றி இப்னு ஜரீன் அத்தபரி அவர்கள் தனது ஜாமிஉல் பயானில் குறிப்பிடும் போது, மேற்கண்ட சொல்லுக்கு குர்ஆன் விரிவுரையாளர்கள் பலவாறாகப் பொருள் கொண்டுள்ளார்கள். அந்த சொல் பற்றிய அவர்களது விளக்கம் மூன்று வித பிரிவுகளில் நின்று அறிவுரை பகர்கின்றது.

பாடுவதும் அதைக் கேட்பதும்

பாடுவதைத் தொழிலாகக் கொண்ட ஆண், பெண்ணை விலைக்கு வாங்குதல்

வீணாகப் பொழுதைப் போக்குவதற்காக (இசை)க் கருவிகளை வாங்குதல்.

மேற்கண்ட மூன்று விளக்கங்களும் குறிப்பில் எதை உணர்த்துகின்றதென்றால், வீணாக, வெறுக்கத்தக்கவைகளானவற்றையும், அதற்கான சாதனங்களையும் விலைக்கு வாங்கி, தங்களது பொருளையும், நேரத்தையும் அதில் வீணடித்தல்| குறிப்பாக இசையிலும், பாடலிலும் ஈடுபடுதலைத் தான் குறிக்கின்றது.

மேற்கண்ட விளக்கத்தை ஒட்டியே நபித் தோழர்களாகிய, இப்னு மஸ்ஊது (ரலி), ஜாபிர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர்களது கருத்தும் அமைந்திருந்தது. மேற்கண்ட சொல்பற்றி இவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட பொழுது, எவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது பாடுவதையே குறிக்கும் என்றார்கள். மேலும், மேற்கண்ட தன்னுடைய நிலையை உறுதிப்படுத்துவதற்காக மூன்று முறை அதன் மேல் உறுதியிட்டுக் கூறி இருக்கின்றார்கள். (பைஹகி - இப்னு முன்திர்)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது, பாடுவதும் மற்றும் அதைப் போன்றதையும் குறிக்கும் என்றார்கள். (ஜாமிவுல் பயான்)

மேற்கண்ட வசனங்களிலிருந்து பாடுவதையும் இசைப்பதையும் தான் அந்த வசனம் சுட்டிக் காட்டுகின்றன என்பது விளங்குகிறது.

மேலும் இரண்டாது நிலை விளக்கமாக கீழ்க்கண்ட விளக்கவுரை அமைந்துள்ளது :

ஏந்த ஒரு உரையாடல் அல்லது பேச்சு இறை நிராகரிப்பின் பக்கம் மக்களை அழைக்கின்றதோ அல்லது இறை நிராகரிப்புக் கொள்கையைப் பெற்றிருக்கிறதோ அவற்றைக் குறிக்கக் கூடியது 'லஹ்வல் ஹதீஸ்' என்ற சொல் என நபித் தோழர்களுக்கு அடுத்த திருமறை விரிவுரையாளர்களான, அத்தஹாக் அப்துர் ரஹ்மான் பின் ஜைத் பின் அஸ்லம் ஆகியோர் கூறி இருக்கின்றார்கள். (இப்னு கதீர் - தப்ரி)

மூன்றாவது நிலை விளக்கம் :

யார் தங்களது கெட்ட பேச்சுக்கள் அல்லது தவறான பேச்சுக்கள் மற்றும் செயல் மூலம் மக்களை அல்லாஹ்வின் வழியினின்றும் அவனை வணங்குவதனின்றும், அவனை நினைவு கூர்வதிலிருந்தும் மக்களை வழி பிறழச் செய்து கொண்டிருக்கின்றார்களோ, அத்தகைய இயல்புகளைப் பெற்றிருப்பவரை இந்த 'லஹ்வல் ஹதீஸ்' எனும் சொல் குறிக்கும்.

உதாரணமாக ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவதாக, இமாம் ஆலாஸி அவர்கள் கீழ்க்கண்ட கூற்றைக் கூறுகின்றார்கள். யார் தங்களது இரவு நேரங்களை வீண் பேச்சுக்களிலும், கேளிக்கைகளிலும், சிரிப்பு மூட்டும் செயல்களிலும், கற்பனைக் கதை சொல்வதிலும், பாட்டுப் பாடுவதிலும் இன்னும் இது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு ஒருவனை அல்லாஹ்வை வணங்குவதினின்றும் அவனை நினைவு கூர்வதிலும் இருந்து மேற்கண்ட மற்றும் இது போன்ற செயல்களில் ஈடுபடுமாறு செய்கின்றானோ அத்தகைய அனைத்து செயல்களையும் அந்தச் சொல் குறிப்பிடுகின்றது. (ரூஹூல் மஆனி)

இமாம் இப்னு ஜைத் அவர்கள் மேற்கண்ட வசனத்தைக் குறிப்பிட்டு, இந்த வசனம் இறை நிராகரிப்பாளர்களையே, அவர்களின் தன்மைகளையே நோக்கி உரையாடுகின்றது என்பதை நீங்கள் அறியவில்லையா!? எனக் கூறி அதைக் கீழ்க்காணும் வசனம் மூலம் உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள்.

சத்தியத்தை நிராகரிக்கும் இவர்கள் கூறுகின்றார்கள் : இந்தக் குர்ஆனை அறவே செவியேற்காதீர்கள். இது ஓதப்பட்டால், அதற்கு இடையூறு செய்யுங்கள்|இதன் மூலம் நீங்கள் வென்று விடலாம். (41:26)

மேற்கண்ட வசனம், குர்ஆனிய வசனம் ஓதப்படும் போது, அதை செவியேற்கா வண்ணம் தங்களது கூச்சல், கூப்பாடுகள் மூலம், குர்ஆனைச் செவியுறுவதனின்றும் பிறரை வழி கெடுக்கும் இணை வைப்பாளர்களைத் தான் குறிக்கிறது. ஏனவே, இந்த வசனம் முஸ்லிம்களைக் குறிப்பதல்ல என்கிறார் இமாம் ஜைத் என்பவர். (தப்ரி - குர்தூபி)

அத்தபரி அவர்கள் இது பற்றிக் குறிப்பிடும் போது, மேற்கண்ட 'லஹ்வல் ஹதீஸ்' சொல்லின் சரியான அர்த்தம் எது எனில், எந்த ஒரு பேச்சு அல்லாஹ்வின் நினைவினின்றும் ஒருவனைத் தடுக்கின்றதோ, அத்தகைய பேச்சு இறைவனாலும், அவனது தூதர் முஹம்மது (ஸல்)அவர்களாலும் தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இதில் சில பேச்சுக்களுக்கு விதி விலக்கு உண்டு.

மேற்கண்ட அத்தபரி அவர்களின் கருத்துக்களிலிருந்து ஒரு சரியான தடைக்கு ஆதாரமான இல்லாமல், பாடலையும், இணை வைப்பையும் பொதுவான குறிப்பில் உணர்த்தி நிற்கின்றது.

மேற்கண்ட வசனம் இசைக்கும், பாடலுக்கும் எதிரான, பல்வேறு மொழிபெயர்ப்புக்களினுடனே, தற்செயல் விளக்கமாகத் தான் அதற்கான தடையைப் பெற்றுள்ளத தவிர, ஈமானிய நெஞ்சம் முழுமையான ஆதாரத்தைக் குர்ஆனின் ஒளியில் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதை உணர முடிகின்றது. ஏனெனில், நாம் இன்னும் நேரடியான தடையைக் கண்டு பிடிக்கவில்லை. ஒரு மறைமுக தற்செயல் விளக்கத்தைத் தான் பெற்றுள்ளோம்.எனவே, மேலும் நாம் தெளிவு பெற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகளை நாட வேண்டிய அவசிய அவசரத்தில் உள்ளோம்.

நாம்:

'சாமிதூன்' என்றப் பதத்தை எப்படி இசைக்கான நேரடித் தடையாக எடுத்துக் காட்ட முடியவில்லையோ அதே போன்று தான் 'லஹ்வல் ஹதீஸ்' என்ற பதமும். இதையும் இசைக்கான நேரடித் தடையாக எடுத்துக் காட்ட முடியாது. ஏனெனில் இசைக்கு எதிரான கருத்தில் உள்ள அனேக பெரும் அறிஞர்கள் கூட இந்த பதம் நேரடியாக இசையைத் தான் குறிக்கிறது என்று எங்கும் குறிப்பிடவில்லை. பற்பல அர்த்தங்களை முன் வைக்கும் போது இசையின் தாக்கமும் அதில் அடங்குவதால் அதையும் இணைத்துக் கூறியுள்ளார்களேத் தவிர இசையைத் தடைசெய்வதுதான் இந்த வசனத்தின் நோக்கம் என்ற கருத்தை யாரும் முன் வைக்கவில்லை என்பதை மேற்கண்ட அறிஞர்களின் கருத்துக்களை மீண்டும் ஒரு முறை படிக்கும் போது புரிந்துக் கொள்ளலாம்.

வீணாணவற்றை விட்டு விலகி இருப்பது இறை நம்பிக்கையாளர்களின் பண்பாக குர்ஆனின் பல இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 'வீணாணவை என்பது இசையாகவோ - பாடலாகவோ - கதையாகவோ - விளையாட்டாகவோ - குடும்பமாகவோ - நண்பர்களாகவோ - செல்வமாகவோ - தொழிலாகவோ - இன்னப் பிற காரியங்களாகவோ இருக்கலாம்.

இறைவனை நினைவுக் கூறும் விதத்தில் இசைக் கலந்திருந்தால் அது ஹராமா, அல்லது இறை நம்பிக்கையும் மறுமை சிந்தனையும் நிறைந்த ஒருவன் இசைக் கேட்டால் அவன் ஹராத்தில் விழுந்தவனாகி விடுவானா என்பது பற்றியெல்லாம் எந்த அறிஞரும் கருத்தை மேற்கண்ட வசனங்களை விளக்கும் போது முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இசைக்கு எதிரான கருத்துள்ள அனைவருமே 'அது இறைவனை மறக்க செய்து விடும்' என்ற அச்சத்தையே முன்னிலைப் படுத்தியுள்ளார்கள். எல்லாவித இசைக்கும் இது பொருந்துமா என்ற சிந்தனைக்குள் யாரும் நுழையவில்லை.

உதாரணமாக, (உதாணத்திற்காகத்தான்)

'இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை முடுவதில்லை.'

'அல்லாஹ்வை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடிவரும் அந்த வல்லோனை நினைத்திருந்தால்

நல்ல வாழ்க்கையும் தேடி வரும்.'

'அருள் மழைப் பொழிவாய் ரஹ்மானே... ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே.. '

போன்ற பாடல்களில் இசைக் கலந்துள்ளது. இதை கேட்பதால் கேட்கும் இறை நம்பிக்கையாளன் இறைவனை மறந்து அல்லது இறைவனை கேலி கூத்தாக எடுத்துக் கொண்டு உலகியலில் மூழ்கி விடுவானா..

தொலைக் காட்சியில் - வானொலியில் செய்தி கேட்கும் - பார்க்கும் ஒருவனுக்கு இசை என்பதை தவிர்க்கவே முடியாது என்பதை ஆரம்பக் கால அறிஞர்களால் விளங்கிக் கொள்ள முடியாமல் போயிருந்தாலும் இன்றைக்கு அனைவரும் அறிவர். இந் நிலையில் செய்தியை கேட்கும் - பார்க்கும் ஒருவன் அத்தகைய இசையால் மதியிழந்து - இறைவனை மறந்து போய்விட வாய்ப்புள்ளது என்று மேற்கண்ட வசனங்களை ஆதாரம் காட்டி கருத்துக்களை யாராவது வெளியிட முடியுமா.. போன்ற கேள்விகள் இங்கு பிறக்கத்தான் செய்கின்றன.

இறைவனை மறக்கடிக்கும் எல்லாக் காரியங்களுக்கும் அந்த வசனங்களைப் பொதுவாக பொருத்திக் காட்டாமல் இசைக்கு மட்டும் பொருத்திக் காட்டுவத சரியாகப்படவில்லை. ஏனெனில் அந்த வசனங்களில் நேரடியாக அந்த கருத்துக்கள் இடம் பெற்றிருக்கவில்லை.

 
 
அஸ்ஸலாம் அலைக்கும்,
சகோதரர் மன்னிக்கவேண்டும். உங்கள் பதிவை படித்த உடன் நான் படித்தது எனக்கு நினைவிக்கு வந்தது அதை உங்களுக்கு அணிபயுள்ளேன் ,
இது நம் இஸ்லாம்  இணையதளத்தில்  உள்ளது.
தயவு செய்து தவறாக எடுத்து கொள்ளவேண்டாம் ,இதற்கும் நிங்கள் விளக்கம் தரவேண்டும்
இப்படிக்கு
அன்ப்புள்ள
சலீம்
மதினா 
மதினா  பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்

இசை என்பதன் விளக்கம் என்ன?

Salem Bushra

unread,
Nov 21, 2009, 11:40:38 AM11/21/09
to fro...@googlegroups.com, salem...@yahoo.com

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Nov 23, 2009, 5:15:10 AM11/23/09
to fro...@googlegroups.com

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்புள்ள சகோதர! சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

இசையைப் பற்றி என்னுடைய அறிவுக்குட்பட்டு விளக்கம் கொடுத்தேன் ஆனால் நம் சகோதரர்கள் 'இசை' இஸ்லாமிய பார்வையில்! முஸ்லிம் என்ற தலைப்பை முன் வைத்து இதற்கும் பதில் அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். எனவே அந்த தலைப்பை படித்து பார்க்கும் போது சகோதரர் முஸ்லிம் என்பவர் அரபு இலக்கண நயமுடன் பதில் கொடுத்திருந்தார்! அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள் ஆனால் அந்த பதிவில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் தங்கள் அனைவரின் முன் வைக்கின்றேன்.  இசை பற்றிய ஒரு பதிவுக்கு என்னுடைய கருத்தே தவிர அந்த சகோதரரின் மனதை புண்படுத்தும் எண்ணம் என் உள்ளத்தில் சிறிதளவும் இல்லை! நம்முடைய இந்த குழுமத்தின் வளைத்தலத்தில் இசை பற்றிய கட்டுரை உள்ளது எனவே அதற்கு விமர்சனமாக இந்த பதிலை பதிக்கிறேன் அனைவரும் மன்னித்துக்கொள்ளவும்!

 

'இசை' இஸ்லாமிய பார்வையில்! முஸ்லிம்

 

உலகெங்கும் வியாபித்துள்ள காற்றைப் போல இசையும் ஆகிவிட்டது. இசையின்றி பாடலில்லை என்ற நிலைமாறி இசையின்றி செய்தியுமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எங்கும் இசை, எதிலும் இசை என்று எல்லாவற்றிலும் இசை திணிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் உம்மத்தில் அது குறித்த ஆய்வுகளும் சர்ச்சைகளும் பல வருடங்களாக நடந்துக் கொண்டிருக்கின்றன.

 

பதில்

'இசை' இஸ்லாமிய பார்வையில் கட்டுரையின் ஆசிரியர் முஸ்லிம் என்ற சகோதரர் அறிவிக்கும் மேற்கண்ட வாசகம் உண்மையே ஆம் இன்று இசை காற்றாக மாறி வளம் வருகிறது ஏன் காற்றில் மிதந்து வருகிறது என்று கூறினாலும் சந்தேகப்பட முடியாது!

 

இசையின்றி செய்தியுமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது என்று கூறியிருப்பதும் உண்மையே, இன்றைக்க பார்க்கிறோம் அனைத்து செய்தி ஊடகங்களிலும் இசைதான் முதலில் வருகிறது பின்னர்தான் செய்திகள் வாசிக்கப்படுகின்றன இதை மறுப்பதற்கு இல்லை!

 

'இசை' இஸ்லாமிய பார்வையில்! முஸ்லிம்

 

இசை ஹராம் என்ற பெருவாரியான மார்க்கத் தீர்ப்புகளுக்கு மத்தியில் 'அவசரப்பட்டு அத்தகைய முடிவுக்கு வருவது சரியல்ல அதை ஹராம் என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை' என்ற எதிர் தரப்பு வாதங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

 

பதில்

இன்று இசை ஹராம் என்று பெருவாரியான மாக்கத்தீர்ப்புகள் வந்துள்ளதாக சகோதரர் அறிவிக்கின்றார்கள் அப்படியிருக்க அந்த பெருவாரியான மார்க்கத் தீர்ப்புகளை ஏற்று  இசையை ஏற்கலாம் என்று கூறும் சிறுபாண்மை வகுப்புகளை புறக்கணிக்கலாமே இதற்கு மார்க்கத்தில் குர்ஆன் மற்றும் ஹதீஸ் படி ஆதாரம் உள்ளதே! இதோ

 

திருக்குர்ஆன்

"நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்)து}தருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும்,இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்)  து}தரிடமும்ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாகஇருக்கும்." (4:59)

 

ஹதீஸ்

அஸஸ்(ரலி) அறிவித்ததாக அஹ்மத் குறிப்பிடுகிறார்கள்.

நபிகளார்(ஸல்) கூறுகிறார்கள் : "அல்லாஹ்விற்கு கட்டுப்படாதோர்க்கு கட்டுப்படுதல் இல்லை."

 

இசையை ஆதரிப்பவர்கள் இசையினால் உருவாகும் இன்னல் களை உணர்வதில்லையெ அப்படியிருக்க அவர்கள் அல்லாஹ் வுக்கு கட்டுப்படுகிறார்களா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது எனவே இசையை அதரிப்பபவர்களுக்கு கட்டுப்படுதல் இல்லை என்பது தெளிவாக புரிகிறதே!

 

'இசை' இஸ்லாமிய பார்வையில்! முஸ்லிம்

 

இசைக்கு எதிரான கருத்துள்ள அனைவருமே 'அது இறைவனை மறக்க செய்து விடும்' என்ற அச்சத்தையே முன்னிலைப் படுத்தியுள்ளார்கள். எல்லாவித இசைக்கும் இது பொருந்துமா என்ற சிந்தனைக்குள் யாரும் நுழையவில்லை.


உதாரணமாக, (உதாரணத்திற்காகத்தான்)


'
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை முடுவதில்லை.'


'
அல்லாஹ்வை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடிவரும் அந்த வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்.'


'
அருள் மழைப் பொழிவாய் ரஹ்மானே... ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே.. '


போன்ற பாடல்களில் இசைக் கலந்துள்ளது இதை கேட்பதால் கேட்கும் இறை நம்பிக்கையாளன் இறைவனை மறந்து அல்லது இறைவனை கேலி கூத்தாக எடுத்துக் கொண்டு உலகியலில் மூழ்கி விடுவானா..

 

பதில்

முஸ்லிம் என்ற அந்த சகோதரர் நாகூர் EM ஹனீஃபா-வின் பாடலை முன் மொழிகிறார். அந்த பாடல்களுக்கு நாமே இஸ்லாமிய சாயம் பூசுகிறோம் (ஆனால் இஸ்லாம் இவ்வாறு நமக்கு கூறியதா?), மாற்றுமதத்தவர்கள் நாகூர் EM ஹனீஃபா-வின் பாடல்களை கேட்டால் அவைகளை அல்லா பாடல் என்கிறார்கள் அல்லாஹ்வுக்கு என்று தனியாக பாடல்கள் உள்ளனவா?

 

இதோ நாகூர் EM ஹனீஃபா-வின் பாடல்களால் குடும்பங்களில் ஏற்பட்ட சீரழிவைப் பாருங்கள்!

15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் சில முஸ்லிம்களின் வீடுகளில் சுன்னத் (கத்னா) விருந்து, அல்லது திருமணம் என்று வந்துவிட்டால் உடனே அவர்கள் தங்கள் வீடுகளில் பந்தல் போட்டு நாகூர் EM ஹனீஃபா-வின் பாடல் இசைகளை கேட்பார்கள் அன்றைய தினம் வயதில் மூத்தவர்களுக்கோ இப்பாடல்களின் மீது அலாதி பிரியம், ஆனால் சிறுவர்களுக்கோ வயிற்றெறிச்சல் வந்துவிடும காரணம் ரஜினி, கமலின் சினிமா பாடல் போடமாட்டார்கள். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது சிறுவர்கள் பெரியவர்களானார்கள் அன்று மூத்தவர்களாக இருந்தவர்கள் கிழடுகளாக மாறினார்கள் எனவே அதிகாரம் கைமாறி போனது எனவே இப்போது இவர்களின் விஷேங்களில் பந்தல் போட்டு பாடுவதோ நாகூர் EM ஹனீஃபா பாடல்கள் அல்ல கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போய்.......??? என்ற சினிமா பாடல்கள்தான். அன்றைக்கே நாம் நாகூர் EM ஹனீஃபா-வின் பாடல்களுக்கு தடை விதித்திருந்தால் இன்று நம் இளம் வாலிபர்களிடம் இந்த சீரழிவு வந்திருக்குமா?

 

கவிபாடும் கவிஞர்களின் தரம்

ஆனால் இந்த நாகூர் EM ஹனீஃபா அல்லாஹ்வை புகழ்ந்து பாடும் அதே வேளையில் தி.மு.க கட்சியையும் அதன் தற்போதைய தலைவரான திரு. மு. கருணாநிதியையும் புகழ்து பாடியிருக்கிறார் இது போன்ற இரண்டுங்கெட்டான் கவிஞர்களை இசைக்காக ஆதாரமாக எடுப்பதற்கு அர்த்தமே இல்லை. இதோ கவிபாடும் கவிஞர்களைப் பற்றி வன்மையாக கண்டிக்கும் பற்றி திருமறை வசனங்கள்

இன்னும் கவிஞர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?   இன்னும் நிச்சயமாக, நாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள்.

ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 26:224,227)

'இசை' இஸ்லாமிய பார்வையில்! முஸ்லிம்

 

தொலைக் காட்சியில் - வானொலியில் செய்தி கேட்கும் - பார்க்கும் ஒருவனுக்கு இசை என்பதை தவிர்க்கவே முடியாது என்பதை ஆரம்பக் கால அறிஞர்களால் விளங்கிக் கொள்ள முடியாமல் போயிருந்தாலும் இன்றைக்கு அனைவரும் அறிவர்.

 

 

இந்நிலையில் செய்தியை கேட்கும் பார்க்கும் ஒருவன் அத்தகைய இசையால் மதியிழந்து இறைவனை மறந்து போய்விட வாய்ப்புள்ளது என்று மேற்கண்ட வசனங்களை ஆதாரம் காட்டி கருத்துக்களை யாராவது வெளியிட முடியுமா போன்ற கேள்விகள் இங்கு பிறக்கத்தான் செய்கின்றன.

பதில்

சகோதரரின் மேற்கண்ட கருத்து ஏற்புடையதல்ல! காரணம் இசையால் மதியிழந்து விபச்சாரம் வரை இன்றைய தலைமுறையினர் செல்கின்றனர். நான் முஸ்லிம்களை மட்டும் கூறவில்லை மாறாக அனைத்து சாதி, சமய மக்களையும்தான் குறிப்பிடுகிறேன். ஆம் அனைவரும் நம் இறுதி நபியின் உம்மத்துதானே! நமது நபி உலகத்திற்கெல்லாம் நபியாயிற்றே திருமறையோ உலகப் பொதுமறையாயிற்றே!

 

மேலும் சகோதரர் கூறுவது போன்று மேற்கண்ட திருமறை வசனங்களை வைத்து இசையை எதிர்க்க ஆதாரம் காட்ட இயலாது ஆனால் மனிதனுக்கு அறிவை அல்லாஹ் கொடுத்துள்ளான் அதைக்கொண்டு சிந்திக்க சொல்கிறான் அப்படியிருக்க நாம் இன்றைக்கு கண்கூடாக காண்கிறோம் இசை விபச்சாரத்திற்கு வழிகாட்டுகிறது இதை நாம் உணர்கிறோம் ஆனால் இப்படிப்பட்ட கேடு விழைவிக்கும் ஒன்றை தவிர்க்க வேண்டுமே தவிர திருமறையை காட்டுங்கள் என்று கூறுவது முறையல்ல! ஆனால் அல்லாஹ்வின் அருளைப் பாருங்கள் திருமறையில் இசைக்கு நேரடியாக தடை இல்லையென்றாலும் மனித சமுதாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றவற்றை எவ்வாறு அணுக வேண்டும் என்று ஒரு முத்தான வசனம் உள்ளது எனவே திருமறை உலக அழிவுநாள் வரை வரக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கூறும் உண்ணத வேதம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை! இதோ தீய வழிகளில் இருந்து மக்களை காப்பாற்ற அல்லாஹ்வின் ஒரு அறிவுரை

 

நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும் ''அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது'' (நபியே! ''தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்'' என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; ''(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்'' என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு இறைவன் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான். (அல் குர்ஆன் 2 : 219)

'இசை' இஸ்லாமிய பார்வையில்! முஸ்லிம்

 

அவர்களிலிருந்து (வழி தவறச் செய்ய) நீ சக்தி பெற்றிருக்கின்றவர்களை உன் கூப்பாட்டைக் கொண்டு வழி தவறச் செய். உன்னுடைய குதிரைப்படைகளையும், காலாட் படைகளையும் அவர்கள் மீது ஏவி விடு. (அவர்களுடைய) செல்வங்களிலும், பிள்ளைகளிலும் நீ கூட்டாகவும் இருந்து கொள். இன்னும் (பொய்யானவற்றைக் கொண்டு) அவர்களுக்கு வாக்களித்து விடு. ஏமாற்றத்தைத் தவிர, வேறு எதையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை என்றும் (இறைவனாகிய) அவன் கூறினான் (அல் குர்ஆன் 17:64).

 

பதில்

மேற்கண்ட இறை வசனத்தை முழுவதுமாக படிக்க வேண்டும் எனவே கீழே அதற்கான முன் பின் வசனங்களை தொகுத்துள்ளேன் கவனமாக படித்துப் பார்க்கவும்

இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் ஆதமுக்க நீங்கள் ஸுஜுது செய்யுங்கள் என்று கூறிய போது இப்லீஸைத் தவிர அவர்கள் ஸுஜுது செய்தார்கள், அவனோ களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜுது செய்ய வேண்டும்? என்று கூறினான். (அல்குர்ஆன் 17-61)

எனக்கு மேலாக கண்ணியப்படுத்தி இவரைப் பார்த்தாயா? நீ எனக்கு கியாம நாள்வரை அவகாசம் கொடுத்தால், நாம் இவருடைய சந்ததிகளில் சிலரைத் தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்என்று (இப்லீஸ் கூறினான் (அல்குர்ஆன் 17-62)

நீ போய் விடு! அவர்களில் உன்னைப் பின்பற்றுபவர் இருந்தால் நிச்சயமாக நரகம் தான் உங்கள் கூலியில் நிறப்பமான கூலியாக இருக்கும்! (அல்குர்ஆன் 17-63)

இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ அவர்களை உம் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய். உன்னுடைய குதிரைப்படையையும், காலாட் படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய், அவர்களுடைய செல்வங்களிலும், பிள்ளைகளிலும் நீ கூட்டாக இருந்து கொள். அவர்களுக்கு (ப் பொய்யான) வாக்குறுதிகளையும் கொடு! (என்றும் அல்லாஹ் கூறினான்) ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை (அல் குர்ஆன் 17:64).

நிச்சயமாக (மூமிஃனான) என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை (என்றும் அல்லாஹ் கூறினான், நபியெ அந்த என் நல்லடியார்களைக்) காத்துக் கொள்ள உம்முடைய இறைவன் போதுமானவன். (அல் குர்ஆன் 17-65)

குறிப்பு

குதிரைப் படை என்று அல்லாஹ் இந்த திருமறை வசனத்தில் கூறுகிறான் காரணம் குதிரையின் வேகம் அந்த அளவுடையது! ஆனால் இன்று நாம் குதிரைப்படையை வைத்து போரிட முடியாது எனவே குதிரையின் வேகத்தை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவேதான் இன்று விஞ்ஞானத்தில் குதிரையின் வேகத்தை மின்சாரத்திற்கு  HORSE POWER (HP) என்று வர்ணிக்கிறார்கள்!. அப்படி எடுத்துக்கொண்டால் இசைக்கு தடை உள்ளதை உணர முடியும் அதாவது இந்த HP மின்சார விசையின் மூலம் பாடல் இசைக்கும் மின்சாதனப்பொட்டியை குறிப்பதாக நாம் கருதலாமே! தவறு இல்லையே!

'இசை' இஸ்லாமிய பார்வையில்! முஸ்லிம்

 

இச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா? (இதனைப் பொருட்படுத்தாது) நீங்கள் சிரிக்கிறீர்கள்;. நீங்கள் அழுவதுமில்லை. (இதனைப் பற்றி) நீங்கள் அலட்சியமுடையோராகவும் இருக்கின்றீர்கள். ஆகவே, நீங்கள் இறைவனுக்கு சிரம்பணியுங்கள். (அவனையே) வணங்குங்கள். (அல் குர்ஆன் 53:59-60-61-62)

 

பதில்

இந்த இறைவசனத்திற்கு பதில்

சகோதரர்களே மேற்கண்ட இறை வசனத்தை முழுவதுமாக படிக்க வேண்டுமெனில் அதன் முழு சூராவையும் படிக்க வேண்டும் அதாவது திருக்குர்ஆன் அத்தியாயம் 53 சூரத்துந் நஜ்ம் (நட்சத்திரம்).

 

மேலும் இந்த திருமறை வசனத்தை ஆராயும் போது அது ருக்கூ 3ல் அடங்கியுள்ளது அதன் அந்த ருக்கூவின் முதல் பகுதி வசனங்கள் 4 வகையான சிந்தனையை தூண்டுகிறது

 

1)      நபியை ஏற்காத மக்களை குறிக்கிறது,

 

2)      மேலும் மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள அருளைப் பற்றி சிந்திக்க தூண்டுகிறது!

 

3)      அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி சிந்திக்க தூண்டுகிறது!

 

4)      இறுதியாக இடம் பெறும் மேற்கண்ட இறை வசனம் லூத் நபியின் சமுதாயத்தவர்களுக்கு ஏற்பட்ட கதியை பற்றி எச்சரிக்கிறது. மேலும் இந்த லூத் நபியின் சமுதாயத்தின் ஆண்கள் தமது இல்லற வாழ்க்கையை அழகான ஆண்களைக் கொண்டே நடத்தி வந்ததையும் இந்த கொடிய செயல்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை பற்றியும் நினைவுபடுத்த உணர்த்துகிறது!

'இசை' இஸ்லாமிய பார்வையில்! முஸ்லிம்

 

இறைவனின் பாதையை கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை திசை திருப்புவதற்காக அறிவின்றி வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோரும் மனிதர்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இழிவு படுத்தும் வேதனையுண்டு (அல் குர்ஆன் 31:6)

 

பதில்

இந்த இறைவசனத்திற்கு பதில்

சகோதரர்களே மேற்கண்ட இறை வசனம் திருமறையின் அத்தியாயம் 31, சூரா லுக்மான்-ல் உள்ளதாகும்.  அதாவது ஒவ்வொரு தகப்பனும் தன் பிள்ளைகளுக்கு  எவ்வாறு அறிவுரை கூற வேண்டும் என்பதை லுக்மான் (அலை) அவர்களை முன்னுதாரனமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை சித்தரிக்கும் விதமாக உள்ள அழகான சூரா ஆகும்.  இந்த திருமறை வசனத்தின் முன்பின் வசனங்களின் கருத்துக்களாவன:

A)முதல் 3 வசனங்கள் திருக்குர்ஆனின் மகத்துவத்தைப் பற்றியும்.

B)4 மற்றும் 5 வது வசனங்கள் முறையே மூமின்களின் குணத்தை பற்றியும்

C) 6 மற்றும் 7 வசனங்கள் தீய குணங்களைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறது.

முடிவுரை

என்னுடைய அறிவுக்கு எட்டியவரை இசையைப் பற்றி அனைத்து ஏகத்துவ ஜமாஅத்துக்களும் ஒருமித்த கருத்தே கொண்டுள்ளன. எனவே ஒருமித்த கருத்துக்கு நாம் முன்னுரிமை கொடுத்து குர்ஆன் ஹதீஸ்களை பின்பற்றலாமே இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பின்பற்ற அல்லாஹ்வின் அழகிய அறிவுரை!

 

"உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மைநீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம்மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள்நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்."(4:65)

 

அல்ஹம்துலில்லாஹ்

2009/11/21 Salem Bushra <salem...@yahoo.com>


--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

ibnuh...@mail.com

unread,
Nov 23, 2009, 7:32:08 AM11/23/09
to fro...@googlegroups.com
சகோ சிராஜ்,
அவர்களே.....
உங்கள் பதில் சற்றும்  பொருத்தமில்லை...   உங்கள் பதில் சம்பந்தமில்லாமல் ,  ஒரு ஆய்வு ரீதியாக இல்லாமல் உள்ளது சகோதரரே.....  ......
இசையை பற்றி  ஆராய சொன்னால்   ,  அதை பாடிய ஒரு தனி நபரைப் பற்றி விமர்சித்து உள்ளீர்கள்...   இது நமக்கு நமது தலைப்புக்கு தேவை இல்லாதது....
நீங்கள் முயற்சி செய்யுங்கள்.... தெளிவு வரும் வரை.......... 
        .  மேலும்  நீன்கள்   கூறியது போல் ,       இசையைப் பற்றி அனைத்து ஏகத்துவ ஜமாஅத்துக்களும் ஒருமித்த கருத்தே கொண்டுள்ளன.  , என்பது தவறு..........  நாமே ஏகத்துவ ஜமாத்தில் தான்  இருந்து  இந்த இசையை பற்றி ஆய்வு செய்கிறோம்.......   ஹராம் என்று கூற 
நேரடி தெளிவான   ஆதாரமில்லை என்று  கூறுகிறோம்.... 
அப்படி எனில் எப்படி நீங்கள்        இசையைப் பற்றி அனைத்து ஏகத்துவ ஜமாஅத்துக்களும் ஒருமித்த கருத்தே கொண்டுள்ளன. , என்று கூறுவீர்கள்..........
 QURAAN ,  வசனங்களை  விளக்கும் பொது  மிக கண்டிப்பாக அவற்றின் அறிவு இருக்க வேண்டும்....... இல்லை எனில் ,  தொடர்பு இல்லாமல் நாம்  விளக்கம் கொடுத்து பெரும் பாவம் செய்த  பயங்கர குற்றத்திற்கு ஆளகிவிடுவோம்....   ஆயினும்  நீங்கள் முயன்று தேடுங்கள்......... சிந்தனையை தட்டுங்கள்...... 
 
இசை  சம்பந்தப்பட்ட ஹதீஸ்களின் தரத்தை ஆயுங்கள்....... உண்மை பிறக்க இறைவன் நமக்கு உதவி  செய்வான்...
  இதன் முன் நான்நான் அனுப்பி வைத்த கேள்விக்கும்  பதில் தர முயலுங்கள்.
எனது தவறுகளையும் சிட்டி காட்ட மறக்க வேண்டாம்.....

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Nov 24, 2009, 9:45:46 AM11/24/09
to fro...@googlegroups.com
ஸலாம்!
 
சகோதரர்களே!

இசை பற்றிய சகோதரர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில் இங்கு பதிக்கிறேன்! ஆங்கிலத்தில் உள்ளது மன்னிக்கவும்!
 
எனக்கு ஆங்கில புலமை குறைவுதான் எனவே இதற்கான தமிழாக்கம் இருந்தால் அதை தாங்கள் பதிக்கலாம்! மொழிபெயர்ப்பு செய்யலாம்!
 

Dr. Zakir Naik's View on Music in Islam

 

PROHIBITION OF MUSIC IS RECORDED IN MANY AUTHENTIC AHADITH.



Narrated Abu Malik Al-Ashari:

"The Messenger (pbuh) of Allah (SWT) said, "Some people of my Ummah will drink wine, calling it by other than its real name, merriment will be made for them through the playing of musical instruments and the singing of lady singers. Allah will cleave the earth under them and turn others into monkeys and swines. [Ibn Ma'jah Vol.5 Hadith No.4020]


Narrated Abu Amir or Abu Malik Al Ashari that he heard the Prophet saying, "From among my followers there will be some people who will consider illegal sexual intercourse, the wearing of silk, the drinking of alcoholic drinks and the use of musical instruments, as lawful. And there will be some people who will stay near the side of a mountain and in the evening their shepherd will come to them with their sheep and ask them for something, but they will say to him, 'Return to us tomorrow.' Allah will destroy them during the night and will let the mountain fall on them, and He will transform the rest of them into monkeys and pigs and they will remain so till the Day of Resurrection." [Sahih Al-Bukhari Vol.7 Hadith No.5590]


However, there are some Ahadith which indicate that it is permissible to beat the daff i.e. the tambourine (which is open on one side and covered on the other).


Narrated Urwa on the authority of Aisha

on the days of Mina, (11th, 12th, and 13th of Dhul-Hijjah) Abu Bakr came to her while two young girls were beating the tambourine (daff) and the Prophet was lying covered with his clothes. Abu Bakr scolded them. The Prophet uncovered his face and said to Abu Bakr, "Leave them, for these days are the days of 'Id and the days of Mina." [Sahih Al-Bukhari Vol.2 Hadith No.987]


Narrated Ar Rabi (the daughter of Muawwidh bin Afra):

After the consummation of my marriage, the Prophet came and sat on my bed as far from me as you are sitting now, and our little girls started beating the tambourines (daff) and reciting elegiac verses mourning my father, who had been killed in the battle of Badr. One of them said, among us is a Prophet who knows what will happen tomorrow. On that the Prophet said, Leave this (saying) and keep on saying the verses which you had been saying before. [Sahih Al-Bukhari Vol.7 Hadith No.5147]


Therefore from the above evidence it is concluded that the use of musical instruments in general is forbidden in Islam, with the exception of the 'Daff'.


Music usually intoxicates a person and takes one away from the path of Allah (swt). Music engages a persons mind and takes him/her away from the remembrance of his/her Creator and from realizing and focusing his/her attention on the purpose of his/her creation. In musical songs, most of the times the listeners even appreciate illogical, incorrect and blasphemous matter and content. A person will realize this when he starts pondering over the meaning of many Hindi and English songs, lyrics and ghazals. Here we find that it is because of music that the persons mind is intoxicated and the person deviates from the straight path. And Allah Knows the Best.


2009/11/23 <ibnuh...@mail.com>

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

ibnuh...@mail.com

unread,
Nov 24, 2009, 10:14:42 AM11/24/09
to fro...@googlegroups.com

INSHA ALLAAH , பதில்  பதிக்கிறேன்!

-----Original Message-----
From: சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Tue, Nov 24, 2009 8:15 pm
Subject: Re: இசை ஒரு அழிவுச் சுரங்கம்!

ஸலாம்!
 
சகோதரர்களே!

இசை பற்றிய சகோதரர் ஜாகிர் நாயக் அவர்களின்  இங்கு ஆங்கிலத்தில் உள்ளது மன்னிக்கவும்!

ibnuh...@mail.com

unread,
Nov 26, 2009, 6:48:08 AM11/26/09
to fro...@googlegroups.com
  SALAAM TO ,
ABU FAISAL,,

PLEASE TRANSLATE THE UNDERNEATH  ARTICLE ,   INTO TAM
IL.........

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Nov 27, 2009, 1:18:17 AM11/27/09
to fro...@googlegroups.com

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 
இசை பற்றிய சகோதரர் ஜாகிர் நாயக் அவர்களின்  ஆங்கிலத்தில் உள்ள கட்டுரையை குழுமத்தில் நானே முன்வைத்தேன்! எனக்கு ஆங்கில புலமை குறைவுதான் இருந்தாலும் சகோதரர்கள் சிரமமப்படுவார்கள் என்று எண்ணி எனக்கு தெரிந்த ஓரளவு அறிவைக்கொண்டு ஓரளவு மொழி பெயர்த்துள்ளேன்.
 
இதில் உள்ள ஹதீதுகள் அப்படியே இணையதளத்தில் இருந்து கட், காபி, பேஸ்டு செய்தது அதை மொழிபெயர்க்க முடியவில்லை ஆனால் ஹதீதுகள் அல்லாத பொதுவான ஆங்கில வாசகங்களை தமிழாக்கம் செய்துள்ளேன். இதில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ளவும் செய்யலாம்!
 
 
தமிழாக்கம்

 இஸ்லாத்தில் இசை பற்றிய டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கண்ணோட்டம்

 

பல்வேறு ஆதாரப்புர்வ ஹதீதுகளில் இசைக்கு தடைகள் உள்ளன

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

(வரும் நாளில்) எனது உம்மத்தவர்கள் மது அருந்துவார்கள். ஆதன் உண்மையான பெயரைக் காட்டிலும் அதை வேறு ஒரு பெயரால் அழைப்பார்கள். இசைக் கருவிகளை இசைத்தும், பெண் பாடகர்கள் கொண்டு பாட்டும் பாடுவதுமான கேளிக்கைகளை தமக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள். அல்லாஹ் அவர்களின் காலடியில் பூமியைப் பிளந்து (அதில் அவர்களை புகச் செய்து விடுவான். மற்றவர்கள் குரங்குகாளகவும், பன்றிகளாகவும் மாற்றி விடுவான். (இப்னு மாஜா - கிதாபுல் ஃபிதன்)

 

 

நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மதுஇசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகைள இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.
நூல்: புகாரி 5590

 

ஆனால் சில ஹதீதுகளில் தஃப் (கொட்டு) இசைப்பதற்கு அனுமதிகப் பட்டுள்ளது போன்று குறிப்புகள் உள்ளன. (அதாவது ஒரு புறம் மூடப்பட்டும் மறுபுறம் திறந்த நிலையிலும் இருக்கும்) தாம்புரைன் (படம் இணைக்கப்பட்டுள்ளது)

                                            

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

என் அருகே இரண்டு சிறுமியர் 'தஃப்' எனும் 'கொட்டு' அடித்துக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் ஆடையால் போர்த்திக் கொண்டிருந்தனர். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து அவ்விருவரையும் விரட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் முகத்தைவிட்டும் ஆடையை விலக்கி 'அபூ பக்ரே! அவ்விருவரையும்விட்டு விடுவீராக! ஏனெனில் இவை பெருநாள்களாகும்" என்று கூறினார்கள். அந்த நாள்கள் மினவின் நாள்களாக (10,11,12,13) அமைந்திருந்தன.  (புகாரி 987)

 

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) (காலித் இப்னு ஃதக்வான்(ரஹ்) அவர்களிடம்) கூறினார்

எனக்குக் கல்யாணம் நடந்த நாள் (காலை) நபி(ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்தார்கள். (அங்கு) சில (முஸ்லிம்) சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட எம் முன்னோரைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒரு சிறுமி, 'எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்'' என்று கூறினாள். உடனே, நபி(ஸல்) அவர்கள், '(இப்படிச் சொல்லாதே!) இதைவிட்டுவிட்டு முன்பு நீ சொல்லிக்கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்!'' என்று கூறினார்கள்.  

(புகாரி 5147)

 

இதன்மூலம் மேற்கண்ட ஆதாரத்தின்படி தஃப் இசைக்கருவியைத் தவிர மற்ற பொதுவான இசை கருவிகளுக்கு இஸ்லாத்தில் தடை உள்ளது போன்ற முடிவு கிடைக்கிறது!

 

இசை பொதுவாக ஒரு மனிதனை மயக்கி அல்லாஹ்வின் பாதையிலிருந்து விலக்குகிறது.  மேலும் இசையானது ஆண் அல்லது பெண்ணுடைய மூளையில் (சிந்திக்கும் ஆற்றல்) இடம் பிடித்து தன்னை படைத்த படைப்பாளனையும் தாம் எதற்காக படைக்கப்பட்டோம் என்ற நினைவையும் மரக்கடிக்க விடுகிறது.  இசையுடன் கூடிய பாடல்களை ரசிக்கும் மக்கள் அதன் மூலம் உருவாகும் அர்த்தமற்ற, தவறான, மார்க்கத்திற்கு முரணான கருததுக்களையும் வரவேற்கின்றனர் எனவே இது போன்ற ஆங்கில, இந்தி பாடல் வரிகளையும், கஜல்களையும் ரசிக்கக்கூடியவர் அதில் உள்ள தவறுகளை உணர வேண்டும். எனவே தான் இசை ஒரு மனிதனது மூளையை வசப்படுத்தி அவனை நேரான பாதையிலிருந்து தடம்புரளச் செய்கிறது என்பதாக கூறுகிறோம். அல்லாஹ் மிக அறிந்தவன்!

 

 
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
tamburine.JPG

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Nov 27, 2009, 1:35:51 AM11/27/09
to fro...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 
இசை பற்றிய இந்த மொழிபெயர்ப்பில் தவறுகள் தென்பட்டால் தயங்காமல் சுட்டிக்காட்டவும் இன்ஷா அல்லாஹ் சரியான மொழிபெயர்ப்பை பதிக்கலாம்.  இசை பற்றிய சகோதரர்களின் ஆய்வுகள் தொடரட்டும் இது நமக்கு நல்ல முடிவையும் இது வரை அறியாத பல செய்திகளையும் நம் முன்னே கொண்டுவரலாம்!
 
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்ட போதுமானவன்!  


 
2009/11/27 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>

ibnuh...@mail.com

unread,
Nov 27, 2009, 8:25:12 AM11/27/09
to fro...@googlegroups.com
SALAAM .... 
 சகோ, சிராஜ் அப்துல்லா  
 இசை  ஹராமா ??  இந்த தலைப்பிலே பதில் பதியுங்கள்.
ஜாகிர் நாயக் , மதங்களின் ஒப்பீட்டு  ஆய்வு , ஆராச்சியில் .   ஒரு  சிறந்த  அறிஞர் 
HE IS  A SCHOLAR  IN COMPARATIVE RELIGIONS........
இதில் அவர் புலமை பெற்றுள்ளார்....  அவ்வளவுதான்........
  இஸ்லாமிய அறிஞர் எனும் நிலைக்கு அவர் இன்னும் வரவில்லை.....
 HE IS NOT  A SCHOLAR IN  ISLAM ,   அவர் இந்த இஸ்லாமிய ஆய்விலும் மிக விரைவில்  இறங்குவார் என்று நம்புகின்றோம்.........   
அவரை  தொடர்பு கொள்ள பல முறை முயற்ச்சித்தேன்......  போனில்  சாத்தியமில்லை என அவர் ஆபீஸ் நிர்வாகம் சொன்னார்கள்....    நேரடியாக bombay வர கூறினார்கள்....  இன்சாஹ்  ALLAAH  சந்திக்கும்போது  இவை பற்றி பேசுவோம்....நாயக் , மெயல்களுக்கு பதில்  விரைவில்  அனுப்புவதில்லை....  ஏனெனில் ஒரு நாளைக்கு  சுமார் 500 மெயல்களுக்கு  மேல் வருகின்றன  என்று கூறினார்கள்.....
மேலும், மற்ற சகோதரர்கள்  இசை பற்றிய  ஆய்வில்  பங்கு பற்றுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.....
ஆய்வு தொடரட்டும்........

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Dec 3, 2009, 11:43:19 PM12/3/09
to fro...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 
இசை பற்றிய மொழிபெயர்ப்பில் தஃப் பற்றிய இசைக்கருவியைின் புகைப்படைத்தை இணைத்திருந்தேன் அது தவறு என்று ஒரு சகோதரர் அறிவுறுத்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்
 
மேலும் அந்த சகோதரரே! தஃப் பற்றிய படத்தை கொடுத்து உதவியுள்ளார் அதையும் இங்கு அட்டாச் செய்கிறேன் எது உண்மையான இசைக்கருவி என்பதை சகோதரர்கள் அறிவுறுத்தவும் அல்லது தஃப் என்று வேறு இசைக்கருவி இருந்தாலும் புகைப்படத்தை அட்டாச்செய்து அதைப் பற்றிய அறிவை நம் சகோதரர்கள் வளர்த்துக்கொள்ள வழி வகை செய்யலாம்!
 
சுட்டிக்காட்டிய சகோதரருக்க நன்றிகள் பல! ஜஜாகல்லாஹ் கைரன்
தஃப்.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages