குவைத்தில் நடைபெற்ற 15ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்!

4 views
Skip to first unread message

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
Dec 18, 2019, 1:26:02 AM12/18/19
to கலீல் பாகவீ
குவைத்தில் நடைபெற்ற 15ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்!

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), வெள்ளிக்கிழமை (13/12/2019) பகல் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு குவைத், ஜாபிரிய்யா பகுதியில் அமைந்துள்ள மத்திய இரத்த வங்கியில் "உதிரம் கொடுப்போம்...! உயிரைக் காப்போம்...!!" மாபெரும் 15வது ஆண்டு இரத்த தான முகாமை ஏற்பாடு செய்திருந்தது. இந்த முகாம் பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது.

இதில் தமிழ் பேசும் சகோதர, சகோதரிகள் மட்டுமல்லாமல் குவைத் நாட்டு சகோதரர்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்துக் கொண்டனர். இரத்த வங்கி பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமை பார்வையிட்டு தமிழ் பேசும் மக்களின் உயிர்காக்கும் இந்த மனித நேய பணியை பாராட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். முகாமில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று 70க்கும் அதிகமானோர் இரத்த தானம் செய்தனர்.  இரத்த தானம் செய்தவர்களுக்கு சிறப்புச் சான்றிதழ்கள், பழங்கள், தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

இரத்த தானம் நடத்துவதின் நோக்கத்தை பற்றி சங்க நிர்வாகிகள் கூறும் போது, 'யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்' என்ற இறை வசனத்தை நடைமுறைப்படுத்தி, முஸ்லிம்கள் மனித நேயத்தை நேசிக்ககூடியவர்கள், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனின் நற்கூலியை மட்டும் எதிர்பார்ப்பவர்கள் என்பதால் இந்தப் பணியை பதினைந்து வருடங்களாக தொடர்ந்து செய்து வருவதாக கூறினர்.

இந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர். வருகை தந்தவர்களுக்கு பகலுணவு  மற்றும் தேநீர் வழங்கப்பட்டன.

மேலதிக புகைப்படங்களுக்கு... https://facebook.com/pg/q8tic/photos/?tab=album&album_id=3339900766083735&ref=bookmarks&mt_nav=1

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
+965 9787 2482

FB_IMG_1576521329465.jpg
FB_IMG_1576521337660.jpg
FB_IMG_1576521267073.jpg
FB_IMG_1576521357268.jpg
FB_IMG_1576521281700.jpg
FB_IMG_1576521352232.jpg
IMG-20191213-WA0078.jpg
IMG-20191213-WA0087.jpg
IMG-20191213-WA0169.jpg
FB_IMG_1576521221861.jpg
FB_IMG_1576521313779.jpg
FB_IMG_1576521304912.jpg
FB_IMG_1576521258055.jpg
FB_IMG_1576521421896.jpg
FB_IMG_1576521363586.jpg
FB_IMG_1576521415417.jpg
FB_IMG_1576521399541.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages