விடுதலை புலிகள்

106 views
Skip to first unread message

razin rahman

unread,
May 18, 2009, 1:25:46 PM5/18/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு சகோதரர்களே,

இங்கே நான் விவாதிக்க,கருத்து பரிமாற்ற,எடுத்துக்கொண்ட விஷயம்,விடுதலை புலிகளைப் பற்றியது.
33 ஆண்டுகளாக,தமிழ் ஈழ  விடுதலைக்காக போராடிய ஒரு இயக்கம்,இன்று அதன் குறிக்கோளை அடையாமலே முடிவுக்கு வந்துள்ளது.

இன்று,விடுதலை புலிகளின்,சகாப்தம் முடிவுக்கு வந்த நாள்.தமிழ் ஈழ தலைவர் பிரபாகரன் வீர மரணம் எய்த நாள்.
விடுதலைப்புலிகளின் மீது,எனக்கு மாறாத அன்பும்,நல்ல மரியாதையும் உண்டு.அவர்களின்,வெற்றியை கண்டு,மகிழ்ச்சி அடைவேன்.அவர்கள் பின்னடைவு அடையும் போதெல்லாம் மிகுந்த வருத்தம் அடைவேன்,இன்றையதினம்,விடுதலை  புலிகளின்,அழிவு என்னை மாபெரும் துயருக்குள்ளாக்கி இருக்கிறது.

இங்கு என்னுடைய சந்தேகம் என்னவென்றால்,அடிப்படையில் நான் முஸ்லிமாக இருக்க,அவர்கள் மீது,இவ்வளவு அபிமானம் வைத்து இருப்பது,மார்க்கத்திற்கு உகந்ததா?
மற்றும்,விடுதலை புலிகள்,இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள்,அங்கு,பல இஸ்லாமியர்களை கொன்று அழித்தவர்கள்,என நான் கேள்விப் பட்டுஇருக்கிறேன்,
இந்த நிலையில்,என்னுடைய கவலை மார்க்க அடிப்படையில் சரியானது தானா?அல்லது அவர்களைப்பற்றி கவலை கொள்ளும் அளவுக்கு அவர்களின் தகுதி என்ன? என்பதை விபரம் அறிந்த சகோதரர்கள் இன்ஷா அல்லாஹ் எனக்கும் மற்றவர்களுக்கும்,விளக்குங்கள்.

மேலும்,அவர்களின்,கை எந்த அளவு இஸ்லாமியர்கள் மீது நீண்டு இருந்தது,இஸ்லாமியர்கள் பற்றி அவர்களின் எண்ணம் என்ன,என்பதை இன்ஷா அல்லாஹ் விளக்கவும்.
ஏனென்றால் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் மீது,அபிமானமும்,கவலையும் கொள்வது,மார்க்கத்திற்கு எதிரானது,என்பது எனக்கு தெரியும்,
பொதுவாக தமிழன் என்ற முறையிலும்,சக மக்கள் அங்கு இனப்படுகொலை செய்யப்படுவதில் இருந்து,விடிவு பெற போராடுபவர்கள் என்ற முறையிலும்,எனக்கு இந்த அபிப்பிராயம் அவர்கள் மீது.

இன்ஷா அல்லாஹ்,அல்லாஹ் அனைவருக்கும் மேலான அறிவை வழங்க போதுமானவன்.
--
Regards,
H.Razin Abdul Rahman,
Mechanical Engineer,
ETA
Dubai.

muslim

unread,
May 18, 2009, 3:27:09 PM5/18/09
to fro...@googlegroups.com

ஸலாம் 

விடுதலைப் புலிகள்!?

முப்பது ஆண்டுகள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலைப் புலிகளா? விடுதலைப் புலிகள் - முஸ்லிம்களைக் கொன்றார்கள் என்ற இன உணர்வு நமக்குத் தேவை இல்லை! முஸ்லிம்களையும் பொதுமக்களாகவே கணக்கிலெடுப்போம் - இவர்கள் கொடூரமாகக் கொன்ற தலைவர்கள், பொது மக்கள் கணக்கிலடங்குமா.

வல்லரசு மிரட்டலுக்கும், வல்லரசுக்கு வாலாட்டும் ஐ.ந. சபை சலசலப்புக்கு கொஞ்சமும் செவிசாய்க்காமல் உறுதியுடன் முப்பது ஆண்டுகால பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜபக்ஷே பாராட்டுக்குரியவர்.

இது குறித்து சகோதரர் அபூ சுமையா எழுதினால் சிறப்பாக இருக்கும். எழுதுவாரா...?



2009/5/18 razin rahman <razin...@gmail.com>

yoosuf lebbe bishrullah

unread,
May 18, 2009, 11:49:17 PM5/18/09
to fro...@googlegroups.com
 
 
சகோதரரே,
 
                    நீங்கள் இலங்கையில் அதிலும், வடக்கு அல்லது கிழக்குப் பகுதியில் பிறந்திருந்தால் இவ்வாறு பேசமாட்டீர்கள். இந்தியத் தமிழ் முஸ்லீம்களுக்கு; ஓர் இலங்கைத் தமிழ் முஸ்லீம், குறிப்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவன் என்றவகையில் அனுபவத்தின் மூலம் நான் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன், விடுதலைப் புலிகள் மட்டுமல்ல எந்தவொரு இலங்கைத் தமிழ் இயக்க-ங்களினதும் முஸ்லீம்கள் சம்மந்தமான கொள்கைகளில் எவ்வித வேறுபடும் இல்லை. அது பிரபாகரன் என்ன பத்மனாபா, டக்ளஸ், தமிழர் விடுதலைக்கூட்டணி, புளட், ஈரோஸ், கருணா அம்மான் உட்பட அனைவருக்கும் பொருந்தும். எனக்குத்தெரிந்த வரையில் விதிவிலக்குகள் இல்லை." இந்தியவில் தமிழ் முஸ்லீம்கள் அவர்களுக்குச் சார்பாகக் குரல் எழுப்பும் போதெல்லாம் எமது வேதைகள் இரட்டிபாகியது என்பதை நீங்கள் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
 
 
வஸ்ஸலாம்.
 
--- On Mon, 5/18/09, razin rahman <razin...@gmail.com> wrote:

Abusumaiya

unread,
May 19, 2009, 1:57:16 AM5/19/09
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ் ஸலாம் வரக்..

சகோதரர் முஸ்லிம் அவர்களே, சற்று வேலையில் உள்ளேன். இன்ஷா அல்லாக் இது தொடர்பான என் தரப்பு கருத்துகளை இன்று மாலை வைக்கின்றேன்.

மிக்க அன்புடன்
சகோ. அபூ சுமையா

2009/5/19 yoosuf lebbe bishrullah <bis...@yahoo.com>
--
அன்புடன்
சகோ. அபூ சுமையா.
*****************************************************
"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10)

கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன்

unread,
May 19, 2009, 5:11:28 AM5/19/09
to fro...@googlegroups.com
ஸலாம்.

சகோதரர் ரழீன் அப்துர் ரஹ்மான் அவர்களது போன்ற ஒரு கருத்தைத் தான்
நானும் முன்னர் கொண்டிருந்தேன். அது பற்றி, தஃவாப்பணியில் ஆர்வமிக்க இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு குழுமத்தில் எனது ஐயத்தைக் கேட்டேன்.
என் கேள்விக்கு உணர்வுப் பூர்வமான‌ அவர்களின் விளக்கங்கள் உண்மையிலேயே இதயத்தைப் பிசையச் செய்கின்றன.இத்துடன் இணைத்திருக்கிறேன்.
 
ஊடகங்களால் திரிக்கப்பட்ட செய்திகளையும்,
தமிழகத்தில் வீறு கொண்டு ஆர்ப்பரிக்கும் ஒருசிலரால்
ஒருதலைப்பட்சச் சார்பு செய்திகளையும் அவதானித்து வரும் நமக்கு,
திட்டமிட்டு மறைக்கப்பட்ட
உண்மையான அதன் மறுபக்கத் தோற்றத்தைக்
கூர்ந்து நோக்கும் போது வலிக்கிறது.
 
தமது சுயநல‌னுக்காக ‌
அனைவரையும் பகைத்துக் கொள்ளும்
புலிகளின் தவறான தலைமையின் வழிகாட்டுதலை
வன்மையாகக் கண்டிக்கும் தருணத்தில்,
 
அவர்களின் பகடைக்காய்களாகவும்
இரு பக்க மத்தளத்தில்
இடிபட்டு,
நொந்து
நூலாகி
கற்பிழந்து
உடைமை இழந்து
உயிர் துறக்கும்
முஸ்லிம்கள் உள்ளிட்ட அப்பாவிகளின் நிலை கண்டு
பரிதாபப் படத் தான் வேண்டும்.
அவ‌ர்க‌ளின் ம‌றுவாழ்வுச் சீர‌மைப்புக்கு உத‌விக்க‌ர‌ம் நீட்ட‌ வேண்டும்.


கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன்

"ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வக்கீல்; நிஃமல் மவ்லா வ நிஃமன் நஸீர்"

ilangai.pdf

Faisal

unread,
May 19, 2009, 10:51:32 AM5/19/09
to fro...@googlegroups.com
assalamualaikum
 
razin
 srilankavi appavi muslimgalai kondru kuvitha,prabakaran irrandadirka kavalai padukirigal.

2009/5/18 razin rahman <razin...@gmail.com>

Mohamed Nijam

unread,
May 19, 2009, 11:32:20 AM5/19/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் வபரகாதஹூ  
 
அன்பு சகோதரரே பிரபாகரன் வீரன் இல்லை. அவன் ஒரு கோழை. அவனுடைய சாவுக்காக தயவு செய்து வருத்த படாதிர்கள். இலங்கை முஸ்லிம் சகோதரர்கள் யாரவது உங்கள் அருகில் இருந்தால் அவர்களை கேட்டு பாருங்கள்.
 
பிறகு நான் கீழே கொடுத்துள்ள ஹதீஸை படித்து பாருங்கள் உங்களுக்கே உங்கள் மேல் கோபம் வரும். காரணம் நீங்கள் பிரபாகரன் மேல் வைத்து இருந்த அன்பு. நீங்கள் இது வரை உண்மை என்ன வென்று தெரியாமல் இருந்து இருக்கிறீர்கள்.
பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2448
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்
 
உங்கள் தெருவில் ஒரு ஏழை அல்லது அனாதை இறந்து விட்டால் அவர்களுக்காக இரண்டு சொட்டு கண்ணீர் விடுங்கள். ஆனால் பிரபாகரனுக்காக கண்ணீர் விட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
 
அன்புடன்

முஹமது நிஜாம்

அல்லாஹ்வே நீ கொடுத்ததை தடுப்பவர் யாரும் இல்லை;  நீ தடுத்ததை கொடுப்பவர் யாரும் இல்லை; எந்த செல்வந்தனையும் எந்த செல்வமும் உனது பிடியில் இருந்து விடுவிக்க இயலாது.

++

2009/5/19 Faisal <fais...@gmail.com>

Abusumaiya

unread,
May 19, 2009, 2:51:00 PM5/19/09
to fro...@googlegroups.com
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...

சகோதரர் ராஸின் அவர்கள் மனம் திறந்து தன் கருத்தை வைத்தது பாராட்டத்தக்கது. இது போன்ற (சரி, தவறு குறித்தக்) கருத்துப் பரிமாற்றங்கள் நம் சமுதாயத்திற்கு மிகுந்த பலனளிக்கக் கூடிய விஷயம்.

இங்கே கருத்துப் பகிர்ந்த பல சகோதரர்கள், புலிகள் குறித்த முஸ்லிமின் நிலைபாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கிட்டத்தட்ட தெளிவுபடுத்தி விட்டனர். இதில் கூடுதலாக கூறுவதற்கு எதுவும் இல்லை. இருப்பினும் சகோதரர் முஸ்லிம் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, புலிகள் குறித்தான என் சிறு கருத்தை இங்கு வைக்கின்றேன். தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். இது ஒரு கருத்தாய்வு மட்டுமே. யார் எழுதுவதும் முழுமையான தீர்வுகளோ முடிவுகளோ அல்ல. மஷூராவில் பரிமாறப்படும் பல கருத்துகள் நமக்குச் சிந்தனை தெளிவைத் தரும். அவ்வகையில் என் சிறு கருத்தை இங்கு வைக்கின்றேன்.

சகோதரர் ராஸின் அவர்களைப் போன்றே விடுதலைப் புலிகள் மீது அளப்பரிய மதிப்பும் அன்பும் கொண்ட பல முஸ்லிம் சகோதரர்கள் உண்டு. ஒரு காலத்தில் நானும் அந்தக் கூட்டத்தில் இருந்தவனே. அதிலும் சகோதரர் பிரபாகரன் மீது, எனக்கு அளவுகடந்த மதிப்பும் அன்பும் இருந்ததுண்டு. அவர் ஒரு வீர புருசர்; பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர் என்ற வகையில். புலிகளின் மீதான முஸ்லிம்களின் பாசத்திற்குக் காரணம், தமிழர்களின் சுயமரியாதைக்காகவும் உரிமைக்காகவும் அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டதாகும். அதே போன்று, இலங்கை தமிழ் முஸ்லிம்களைக்(உதா:காத்தான் குடி- மூதூர்) கருவறுத்த காரணத்தை எடுத்துக் கூறி, விடுதலைப் புலிகளை எதிர்க்கும் சகோதரர்களும் உண்டு.

ஒரு முஸ்லிமை பொறுத்தவரை எந்த ஒரு விஷயத்தையும் நீதியுடனும் நடுநிலைமையுடன் அணுகியே இறுதி நிலைபாட்டுக்கு வர வேண்டும் என இஸ்லாம் கற்றுத் தருகிறது.

அவ்வகையில், விடுதலை புலிகளைக் குறித்த ஒரு முஸ்லிமின் நிலைபாடும் இஸ்லாமிய அடிப்படையிலேயே அணுகப்பட வேண்டும்.

விடுதலை புலிகளின் 33 ஆண்டு கால போராட்ட வாழ்வை எடுத்துக் கொண்டால், அதனை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.

1. தமிழர்களின் சுய நிர்ணயம், உரிமை, சுதந்திரம் போன்றவற்றை முன்வைத்து விடுதலை புலிகளின் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட துவக்கக் காலம்.

2. அவர்களின் போராட்டம் வீரியம் அடைந்த இடைப்பட்டகாலம்.

3. தமிழ் ஈழம் ஒன்று அமைந்தால், அதில் இலங்கையின் எந்தெந்தப் பாகங்கள் உட்பட வேண்டும் என்று திட்டம் வகுத்திருந்தார்களோ அப்பகுதிகளில் சுமார் 80 சதவீதத்தைக் கையகப்படுத்திக் கோலோச்சிக் கொண்டிருந்த இந்த இறுதிகட்டம்.

இந்தத் துவக்கக் காலகட்டத்தில், விடுதலை புலிகளின் நிலைபாட்டை ஒரு சுதந்திரத்துக்கான புரட்சியை முன்னெடுக்கும் காலமாக வர்ணிக்கலாம். இஸ்லாத்தைப் பொறுத்தவரை, அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடுவதும் அவர்களின் உரிமைகளைப் பெற்றுத்தருவதற்காக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக களமிறங்குவதும் கடமையான விஷயங்களே. இந்த வகையில் விடுதலை புலிகளின் ஆரம்பம் என்பது, ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கப்பட வேண்டியதுமான விஷயம் என்பது என் கருத்து. அந்த வகையில், விடுதலை புலிகளுடன் இலங்கை தமிழ் முஸ்லிம்களும் ஆரம்பக்காலங்களில் இணைந்தே போராட்டக்களம் கண்டனர் என கருதுகிறேன்(நான் நேரில் ஆய்வு செய்யவோ, உறுதியாக அறியவோ செய்யாத வெறும் படிப்பறிவை மட்டும் வைத்து எழுதுவதால், இது போன்ற விஷயங்களில் அவற்றை என் கருத்தாக மட்டுமே வைக்கிறேன். ஒருவேளை உண்மை இதற்கு நேர்மாறாக இருக்கலாம்).

ஒரு அரசுக்கு எதிராக உரிமைக்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள், அரசின் தொடர்ந்த அடக்கு முறைகளின் காரணமாக அழிந்துப் போவதற்கும் வாய்ப்புண்டு; அதுவே வீரியமான போராட்டமாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. இங்கே விடுதலைப் புலிகளின் விஷயத்தில் இரண்டாவது விஷயம் நடந்தது. அவர்கள் தங்களின் போராட்டத்தை வீரியமான ஆயுதப் போராட்டமாக நடத்தத் துவங்கினர். இக்காலகட்டத்தில் இவர்களுக்குக் கொரில்லா முறையிலான தாக்குதல்களைக் கற்றுக் கொடுத்தவர்கள், தாலிபான்கள் என்றும் வாசித்ததாக நினைவு. அந்த அளவிற்கு அவர்களின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு முஸ்லிம்களின் ஆதரவு, ஆரம்பத்தில் இருந்தது என்று நான் கருதுகிறேன்.

போராட்டத்தை(ஜிஹாதை)க் கடமையாக விதிக்கும் இஸ்லாம், அதேப் போராட்டம் ஆயுதம் தாங்கியப் போராட்டமாக மாறும் போது, போர்களத்தில் கடைபிடிக்க பல்வேறு நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் முஸ்லிம்களுக்கு விதிக்கிறது.

இக்கட்டுப்பாடுகளில் மிக முக்கியமானவை:

"அப்பாவி மக்கள் கொல்லப்படக் கூடாது; வயோதிகர், நோயாளிகள், பெண்கள், குழந்தைகள் போன்றோரைப் பாதுகாக்க வேண்டும்; கைதிகளிடம் நீதமாக நடந்துக் கொள்ள வேண்டும்" என போராட்டம் ஆயுதம் தாங்கியதாக மாறுகின்ற வேளையில் ஏற்படும் உயிர்சேதங்களைக் கணக்கில் எடுத்து, மிகக் கவனமாக அநியாயமாக உயிர்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதிக்கிறது.

ஒரு போராட்டம் ஆயுதம் தாங்கியதாக மாறும் போது, அதில் பங்கு பெற்றிருக்கும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை இந்தக் கட்டுப்பாடுகள் மிக முக்கியமானது. இவற்றைப் பேணாதபட்சத்தில், அந்தப் போராட்டத்தை மட்டுமல்ல, அதில் பங்குபெற்றுள்ள முஸ்லிமின் செயல்களும் பாழ்பட்டு விடும்.

விடுதலை புலிகள், தங்களது போராட்டத்தை வீரியமாக முன்னெடுத்த வேளையில், இஸ்லாம் விதிக்கும் மனிதாபிமான கட்டுப்பாடுகள் அத்தனையையும் தகர்த்தெறுந்து எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி செயல்பட்டதாகவே அறிய முடிகிறது.

சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்தல், சிறு குழந்தைகளையும் கட்டாயப்படுத்தி போராட்டத்தில் இணைத்தல், அரசைச் செயலிழக்க வைக்க, மக்கள் கூடும் இடங்களில் கண்மூடித்தனமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்துதல், தற்கொலை தாக்குதல்கள் மூலம் கடல் கடந்தும் கொலைகளை அரங்கேற்றுதல், எதிரானவர்களை அழிக்கிறோம் என்ற பெயரில் ஒருவருக்கு வைக்கும் குறியில் பல அப்பாவிகள் கொல்லப்படுவதைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமை, தன்னை மட்டும் நிறுவனப்படுத்தும் நோக்கில், ஒரே கொள்கையில் போராடும் சக போராட்ட இயக்கங்களை அழித்தல் என, தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை புலிகளின் போராட்டம், தமிழ்நாடு முதலான சர்வதேச நாடுகளிலுள்ள தமிழ் உணர்வாளர்களின் அனைத்துவித உதவிகளின் மூலம் சிறிது சிறிதாக மோசமான தீவிரவாதமாக மாறியது.

தமிழ் மக்களின் உரிமைக்காக வீரியமாக போராடும் ஒரு இயக்கம் என்பதை மட்டுமே பார்த்து விடுதலைப் புலிகளுக்கு உதவிய பல நாட்டு ஆதரவாளர்களும் அவர்களின் இத்தகைய மனித உயிர்களுக்கு விலை வைக்காமல், ஏகாதிபத்திய அரசுகள் செய்யும் இன அழிப்புகளின் மற்றொரு வடிவமாக இவர்களே மாறிப் போனதைக் குறித்துப் பேசுவதற்கோ, அதனைக் கண்டிப்பதற்கோ, அவர்களின் போராட்டத்தைச் சரியான திசையில் வழிநடத்துவதற்கோ முன்வரவில்லை. இவர்களின் மக்களுக்கு எதிரான அனைத்துச் செயல்பாடுகளையும் உரிமைக்கான போராட்டத்தின் ஒரு பாகமாவே பார்த்து சர்வதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் வழங்கிய கண்மூடித்தனமான ஆதரவும் உதவிகளும் விடுதலை புலிகள், தங்களின் செய்கைகளில் உள்ள தவறுகளை உணர்ந்துக் கொள்வதற்கோ சுயபரிசோதனை செய்து கொள்வதற்கோ இடமளிக்கவில்லை.

புலிகளின் இத்தகைய கண்மூடித்தனமான செயல்பாடுகளால் அப்பாவி மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவதை உணர்ந்த பல இலங்கை அரசுகளும் புலிகளுக்கு எதிராக தற்போது முன்னெடுத்தக் கடுமையான இராணுவ நடவடிக்கைகளைப் போன்று தொடர்ச்சியான, புலிகளை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்குடனான ஒரு இராணுவ நடவடிக்கை எடுப்பதைத் தள்ளிப்போட்டன. இதனால், கிட்டத்தட்ட தாங்கள் எதிர்பார்த்த தமிழ் ஈழ நாட்டில் 80 சதவீதத்திலான இடங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் விடுதலை புலிகள் கொண்டு வந்தனர்.

விடுதலை புலிகளின் மனித உயிர்களுக்கு விலைகொடுக்காத, கண்மூடித்தனமான தாக்குதல்களை அவதானித்தப் பல முஸ்லிம் தலைவர்கள் சிறிது சிறிதாக புலிகளிடமிருந்து விலக ஆரம்பித்தனர்.

ஒரு அரசுக்கு எதிரான போராட்டம் என்பது, இறுதி வரை ஆயுதப் போராட்டமாகவே இருந்து ஆயுதப் போராட்டத்தின் வழியிலேயே அரசைப் பிடிப்பதோ அல்லது தாங்கள் நினைத்த உரிமைகளை நிலைநாட்டுவதோ எவ்வகையிலும் சாத்தியமில்லை என்பதை ஏனோ புலிகள் உணரவில்லை.

ஒரு அரசுக்கு எதிராகச் செய்யும் ஆயுதப் போராட்டம் என்பது, அரசை அசைத்துப் பார்க்க மட்டுமே பயன்படுமேயன்றி, அந்த அரசு பயந்துபோய் மொத்தமாக கீழிறங்கி வருவதற்கு எவ்வகையிலும் உதவாது. ஒரு அரசு முழுமையாக மாற்றியமைக்கப்படுவதற்கு மக்கள் போராட்டம் மட்டுமே ஒரே வழி.

எனவே ஆயுதம் ஏந்திப் போராடும் போராட்டங்கள், ஒரு காலகட்டத்தில் தங்களின் வல்லமையை அரசுகளுக்கு உணர்த்தப்பட்டுவிட்டதாக உணரும் நேரத்திலேயே, அரசியல் ரீதியாக பரிகாரம் தேடும் வழிகளிலும் மாற வேண்டியது முக்கியம்.

சுமார் 80 சதவிகித பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்ட புலிகள், உண்மையிலேயே தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தான் தங்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர் எனில், நார்வேயின் முன்னிலையில் அரசு இறங்கி வந்து பேசப்பட்ட பேச்சுவார்த்தையில் தங்கள் பக்கமிருந்தும் சிறு விட்டுக் கொடுப்பைச் செய்து, விடுதலை புலிகளின் தலைமையில் தனி மாநில அந்தஸ்தில் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகள் அங்கீகரிக்கப்படுவதற்குச் சம்மதித்த வேளையில் ராஜ தந்திர நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

அதை விடுத்து, இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் வசிக்கும் மக்களுக்கு தமிழீழம் என்ற தனி நாடு பிரித்துத் தருவது தான் ஒரே தீர்வு என்று நின்றது, எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்க முடியாததாகும்.(ஒரு அரசின் பக்கமிருந்து இதனைச் சிந்தித்துப் பார்த்தால், இந்த நியாயம் விளங்கும்).

இவ்விஷயத்தில் புலிகள் எடுத்த இந்த நிலைபாட்டை அப்படியே கண்மூடி ஆதரித்தத் தமிழக தலைவர்களின் இரட்டை நிலைபாட்டைக் கூட, புலிகள் புரிந்துக் கொள்ளாதது துரதிஷ்டவசமானது.

தமிழ்நாட்டில் கூட, திராவிடர் கழகங்களின் ஆரம்பகாலத்தில் "தனித் தமிழ்நாடு" என்ற ஒரு சுயநிர்ணய சிந்தனைப் போராட்டம் இருந்தது. அண்ணா முதல் கருணாநிதி வரை இந்தச் சிந்தனையில் ஊறியவர்களே. பழ. நெடுமாறன் இப்பொழுதும் இந்த எண்ணத்திலேயே இருப்பதும் கவனிக்கத்தக்கது.

தனி நாடு என்ற கொள்கை வெற்றிபெற வேண்டுமெனில், மக்கள் போராட்டம் மட்டுமே வேண்டும். அல்லாமல் ஆயுதப்போராட்டம் அல்ல. தமிழகத்தில் தனி தமிழ்நாடு என்பது மக்கள் போராட்டம் நடத்தாமல் சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்துக் கொண்ட, திராவிடர் கழகங்கள், தங்கள் போராட்டங்களை விடுத்து அரசியல் தீர்வு கண்டு, இன்று கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு தமிழகத்தில் முடங்கிக் கிடக்கின்றனர். இவர்கள் தான், இலங்கை என்ற நாட்டில், தமிழர்களுக்குத் தனி நாடு என்ற புலிகளின் கோரிக்கைக்குக் கொடி பிடிப்பவர்கள்! எத்தகைய இரட்டை நிலைபாடு இது! தன் சொந்த நாட்டில் சாத்தியப்படுத்த வக்கற்றவர்கள், மற்றொரு நாட்டில் ஆயுதம் ஏந்தும் குழுவுக்கு ஆதரவு கொடுத்து, "அப்படித்தான். செய் செய்" என்று தூண்டி விடுவது எத்தகைய கோழைத்தனம்!

இந்தத் தமிழகத் தலைவர்களின் இரட்டை நிலைபாட்டைப் புரிந்துக் கொள்ளாத பிரபாகரன், தன் செயல்பாட்டுக்கு உலக அளவில் அங்கீகாரம் உள்ளது என்றும் தனிநாட்டுக்காக தான் செய்யும் செயல்பாடுகள் எல்லாமே சரியானது தான் என்றும் கண்மூடித்தனமான நம்பிக்கையில் இருந்து விட்டார். சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு நாட்டுக்கு எதிராக, உரிமைக்காகப் போராடுபவர்கள், அதனை ஒரு நிலைக்குப் பின்னர் மக்கள் போராட்டமாக மாற்றி எடுக்க வேண்டும்; இல்லையேல் அழிவது உறுதி என்பதற்குப் புலிகள் ஒரு முன்மாதிரி.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு நாடு, தான் நினைத்தால் தன் நாட்டுக்குள் தீவிரவாதம் செய்யும் ஒரு குழுவை, அது எத்தகைய சக்திபெற்றதாக இருந்தாலும் தன் சக்தி அனைத்தையும் பிரயோகித்து அழிக்க நினைத்து விட்டால், அதனை உலகில் எந்த நாடும் எதிர்க்க முன்வராது என்ற சாதாரண அறிவைக் கூடப் பெறாத வகையிலேயே பிரபாகரன் ஒரு கற்பனை உலகில் சஞ்சரித்துள்ளார் என்பது இப்போது புரிகிறது.

புலிகளின் தமிழர்களுக்கான உரிமை போராட்டத்தில் ஈகோவும் அக்கிரமமும் நியாயமற்ற செயல்பாடுகளும் மலிவதைக் கண்டப் பல முஸ்லிம்கள் சிறிது சிறிதாக அவர்களை விட்டு விலகி, அரசியல் தீர்வுகளைப் பெறுவதைக் குறித்துச் சிந்திக்க ஆரம்பித்தனர். அதன் விளைவு, அப்துல் ஹக்கீம் போன்ற சிறந்த அமைச்சர்கள் வரை முஸ்லிம்களுக்கு இடையில் உருவாகும் நிலை உருவானது.

தங்களின் இலட்சியப்போராட்டத்திற்கு, முஸ்லிம்கள் தங்களை விட்டுப் பிரிந்தது மிகப் பெரிய தடை என்று தவறாக விளங்கிக் கொண்ட புலிகள், தங்களின் உரிமைப்போராட்டத்தின் ஒரு பாகமாக முஸ்லிம்களைக் கருவறுப்பதையும் ஆக்கிக் கொண்டனர். உதாரணம் காத்தான்குடி.

சொந்த வீடு, நிலம், சொந்தங்கள் இழந்து அகதிகளாக சுற்றுவதன் வலி உணர்ந்த புலிகள், தாங்கள் எந்தத் தமிழர்களுக்காகப் போராடினார்களோ அதே தமிழ் பேசும் இன்னொரு பிரிவு மக்களை அகதிகளாக அவர்களே சுற்ற வைத்ததிலிருந்து, அவர்களின் தமிழர்களுக்கான உரிமைபோராட்டம் என்ற தூய சிந்தனையில் கசடு நிறைந்து, உண்மையான நோக்கம் புதைக்கப்பட்டு விட்டது என்பதைப் பறைசாற்றி விட்டது.

(காத்தான் குடி சம்பங்களைக் குறித்த சில தகவல்கள் இணைப்பில் உள்ளது. படியுங்கள்).

எப்பொழுது தங்கள் ஆயுதப் போராட்டத்தில் அப்பாவிகள் கொல்லப்படுவதை ஒரு பொருட்டாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளாமல் செயல்பட ஆரம்பித்தார்களோ, அந்த நிமிடமே புலிகளின் மீதும் பிரபாகரன் மீதும் ஒரு முஸ்லிம் கொண்ட பாசமும் மதிப்பும் செத்து விட்டது.

இந்தக் காத்தான்குடி சம்பவங்கள், பிரபாகரன் மீது முஸ்லிம்கள் அதீத வெறுப்பு கொள்வதற்குக் காரணிகள் ஆயின.

ஈகோ மற்றும் தான் நினைப்பதே சரி என்ற கண்மூடித்தனமான எண்ணத்தில் திரியும் தலைவர்களுக்கும் பிரபாகரன் ஒரு படிப்பினையே. ஒரு கட்டத்தில் நார்வே முன்னிலையில் ஏற்பட இருந்த அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்ளவோ அவ்வகையில் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவோ சம்மதிக்காத பிரபாகரனை விட்டு, புலிகளில் கருணா போன்ற முக்கியப் பல தலைவர்கள் பிரிந்து சென்றதும் பிரபாகரனின் ஏகாதிபத்திய சிந்தனைக்கு உதாரணங்கள்!

ஏகாதிபத்தியத்தை, அடக்குமுறை அரசை எதிர்த்து உரிமைக்காகப் போராடும் ஒரு குழுவின் தலைவரே, தான் நினைத்த சுதந்திரம் கிடைப்பதற்கு  முன்னரே ஏகாதிபதியாகவும் அக்கிரமக்காரனாகவும் தன்னை எதிர்ப்பவர்களைக் கண்மூடித்தனமாக கொன்று அழிப்பவனாகவும் அப்பாவிகளின் உயிர்களை எடுப்பதில் எவ்விதக் கருணையும் காட்டாதவனாகவும் இருந்தால்..... அவன் கையில் அதிகாரம் கிடைக்கப்பெறின் எவ்வாறு இருக்கும்?

இந்த ஒரு காரணத்திற்காகவே பிரபாகரனின் அழிவை முஸ்லிம்களாகிய நாம் மனம் திறந்து வரவேற்கலாம்.

பிரபாகரனை, ஒரு இனத்துக்கான நீண்ட நெடிய போராட்டத்தை முன்னெடுத்த கதாநாயகனாகப் பார்க்கலாம் தான் - பிரபாகரனின் பாதை, மற்றொரு சர்வாதிகாரியின் பாதையாக மாறாமல் இருந்திருந்தால்!

சிங்கள அரசினால் எத்தனை உயிர்கள் அழிந்ததோ அதற்கு எவ்வகையிலும் சளைக்காத வகையில் பிரபாகரனாலும் ஆயிரக்கணக்கானஅப்பாவிகளின் உயிர்கள் சூறையாடப்பட்டுள்ளன.

அக்கிரமக்காரனை எதிர்ப்பதும் அக்கிரமங்களுக்கு எதிராக போராடுவதும் ஒரு முஸ்லிமின் கடமை என்ற வகையில், தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள இனவாதிகளின் அக்கிரமங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும் எதிர்ப்பதும் எப்படி சரியான செயலோ அதே போன்றே, அப்பாவிகளின் உயிர்களுக்கு எவ்வித மதிப்பும் கொடுக்காத கொடுங்கோலன் பிரபாகரனுக்கும் அவன் அடக்கியாண்ட புலிகளுக்கும் எதிராகக் குரல் உயர்த்த வேண்டியதும் போராடுவதும் ஒரு முஸ்லிமின் கட்டாயக் கடமையாகும்! இதில் அவன் மீது பாசமாவது; மதிப்பாவது; மண்ணாங்கட்டியாவது!

(இவை நான் வாசித்து அறிந்துக் கொண்டதை வைத்த என் தனிப்பட்ட நிலைபாடுகளே. இவற்றில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறேன்)


மிக்க அன்புடன்
சகோ. அபூ சுமையா.

2009/5/19 Mohamed Nijam <kbn...@gmail.com>

--
அன்புடன்
சகோ. அபூ சுமையா.
*****************************************************
"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10)
Document1.pdf
http___www.spur.asn.au_kattankudi_muslim_mosque_massare_by_ltte_1.pdf

நமக்குள் இஸ்லாம்

unread,
May 20, 2009, 12:06:47 AM5/20/09
to fro...@googlegroups.com
ஸலாம்
 
**இந்தத் துவக்கக் காலகட்டத்தில், விடுதலை புலிகளின் நிலைபாட்டை ஒரு சுதந்திரத்துக்கான புரட்சியை முன்னெடுக்கும் காலமாக வர்ணிக்கலாம். இஸ்லாத்தைப் பொறுத்தவரை, அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடுவதும் அவர்களின் உரிமைகளைப் பெற்றுத்தருவதற்காக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக களமிறங்குவதும் கடமையான விஷயங்களே. இந்த வகையில் விடுதலை புலிகளின் ஆரம்பம் என்பது, ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கப்பட வேண்டியதுமான விஷயம் என்பது என் கருத்து. அந்த வகையில், விடுதலை புலிகளுடன் இலங்கை தமிழ் முஸ்லிம்களும் ஆரம்பக்காலங்களில் இணைந்தே போராட்டக்களம் கண்டனர் என கருதுகிறேன்** சகோதரர் அபூசுமைய்யா.
 
விடுதலைப்புலிகளின் ஆரம்பத்தை உரிமைப் போராட்டாமாக எடுத்துக் கொள்ளவே முடியாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது. இலங்கை முஸ்லிம்கள் எந்த சந்தர்பத்திலும் "விரும்பி" விடுதலைப்புலிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராடியதாக நான் அறியவில்லை.  விடுதலைப்புலிகளின் துவக்கம் வெறும் இனவாத, மொழிவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்தது.  தமிழ்நாடும் அங்கு கவைக்குதவாத தமிழ்ஆர்வ ஆரசியல்வாதிகளும் இலங்கையில் ஒரு மொழிவாத வெறியை உருவாக்கி இருக்கலாம்.   இலங்கையின் சிங்கள அரசைப் பொருத்தவரை விடுதலைப்புலிகளின் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு முன்பு தமிழர்களை அரவணைத்து முடிந்த அளவு அவர்களுக்குரியவற்றை செய்தே வந்தது.
 
இலங்கையின் அரசியல் நிர்ணய சட்டத்தில் தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளும் வகுக்கப்பட்டே இருக்கின்றன. (இதுபற்றி அறிந்தவர்கள் விளக்கலாம்)  
 
விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பு மொழியை முன்னிருத்தி வளர துவங்கியபின் முஸ்லிம்கள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள துவங்கினர். பயங்கரவாத புலிகளின் அடக்குமுறைக்கு ஆளாயினர்.   1982 களுக்கு முன்பு வரை அதாவது ஜெயவர்தனேயின் ஆட்சிக்காலம் வரை இலங்கை அரசு முஸ்லிம்களை அரசியல் பிரதிநிதித்துவம் வாய்ந்தவர்களாகவே கருதி வந்தது. கல்வி, அரசியல் அதிகாரம், தொழில், மத உரிமை என்பதை அடிப்படை உரிமைகளாக்கி முஸ்லிம்களுக்கு வழங்கியது.  அரசின் நீதித்துவமான நடைமுறைக்கு நன்றிகடன் பட்ட முஸ்லிம்கள் அரசை எதிர்க்க வேண்டும் என்ற மொழிவாத போராட்டத்திற்கு உடன்படவில்லை.   எனவே மொழிவாத பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளுக்கு முஸ்லிம்கள் எதிரியாக ஆனார்கள்.
 
தமிழன் தமிழனுக்கு உதவவில்லையென்றால் தமிழ் பகுதியில் வாழ்வதற்கு தகுதியில்லை என்ற எழுதப்படாத சட்டத்தை தமக்கு தாமே வகுத்துக் கொண்டது அந்த பயங்கரவாத அமைப்பு.  அதன் விளைவு முஸ்லிம்கள் இலங்கையில் பயங்கரவாத அமைப்புகளின் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்கள்.   வீடு வாசல் தொழில் குடும்பம் என்று எல்லாவற்றையும் இழந்து இரவோடு இரவாக அகதிகளாக ஓடியவர்கள் ஏராளம்.  "சில மணித்தியாலங்களே உங்களுக்கான அவகாசம் அதற்குள் இடத்தை காலிபண்ணுங்கள்"  என்ற கட்டளையை பிறப்பித்து முஸ்லிம்களின் சொத்தையெல்லாம் அபகரித்து, அவர்களை கேவலப்படுத்த அவர்களின் கண்களுக்கு முன்னேயே "புனித வேதமான குர்ஆனை எரித்து" பெரும் கொடுமையை கட்டவிழ்த்து விட்டனர் விடுதலைப்புலிகள்.
 
பதிவுகளாக வந்தது காத்தான்குடி போன்ற ஒன்றிரண்டு மட்டும் தான். பதிவு செய்யப்படாத பயங்கரவாதம் ஓரளவு குஜராத்தை ஒத்ததாகவே இலங்கையில் நடந்துள்ளது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
 
விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை எந்த ஒரு முஸ்லிமும் "சுயநிர்ணயத்துக்கான தியாக அமைப்பு" என்று ஒப்புக் கொள்ளவே முடியாது.  அது இலங்கை அரசுக்கு எதிராக மொழிவாதத்தை முன்னெடுத்து கலகத்தை உருவாக்க துவங்கப்பட்ட ஒரு பயங்கவாத அமைப்பாகும்.
 
பிரபாகரன்,  பிரபாகரன் சார்ந்த அந்த அமைப்பின் முக்கியத் தலைவர்களின் மரணம் இலங்கையில் ஒரு நிரந்தர அமைதியை கொடுக்கும் என்று நம்புவோம், கொடுக்க வேண்டும் என்று பிரார்திப்போம்.

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com   

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe   

Abusumaiya

unread,
May 20, 2009, 12:50:03 AM5/20/09
to fro...@googlegroups.com
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்....
 
சகோதரர் ஜி.என் கூறியது உண்மையாக இருக்கலாம். இலங்கை அரசு, ஆரம்பத்தில் அனைவருக்கும் ஒரே சட்டத்தைத் தான் அமுல் படுத்தியது என்பதும் மொழி அடிப்படையிலான பிரிவினைவாதத்தையே புலிகள் முன் வைத்து தங்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர் என்பதும் தமிழ்மொழி பேசும் மக்கள் சிங்களர்களால் அடக்கி ஒடுக்கப்படவில்லை என்பதும் எனக்குப் புதிய தகவல்கள். 82 க்கு முந்தைய இலங்கையைப் படிக்க வேண்டும். என் பார்வைகள் அனைத்தும் புலிகளின் போராட்டக்காலத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது.
 
வெறும் பிரதேசவாதமே புலிகளின் துவக்கம் எனில், பிரிவினைவாதம் தான் நோக்கம் எனில், ஆரம்பப் புலிகளையும் ஒரு முஸ்லிமால் ஒருபோதும் அங்கீகரிக்க இயலாது தான்.

2009/5/20 நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>

MOHAMED ILYAS

unread,
May 20, 2009, 1:08:59 AM5/20/09
to fro...@googlegroups.com
03.08.1990 அன்று காத்தான் குடியில் இஷா தொழுகையை நிறைவேற்றிக்
கொண்டிருந்த நிலையில் தமிழீழ விடுதலை புலிகளால் அநியாயமாகக் கொலை
செய்யப்பட்ட எம் மண்ணின் மைந்தர்கள்.
“(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள்
ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி
வாங்கவில்லை. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ்
அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும்
துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை
உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு”.
85:8,9
சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த
நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என்
நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில்
பிரவேசிப்பாயாக” 89 - 27-30

2009/5/20 Abusumaiya <abusu...@gmail.com>:

--
By
Mohamed ilyas
Electrical Engineer
Doha - Qatar

5.bmp
untitled2.bmp
untitled3.bmp
untitled4.bmp
untitled6.bmp
untitled7.bmp
untitled9.bmp
untitled11.bmp
untitled78.bmp
22.bmp
33.bmp
44.bmp
55.bmp
66.bmp
111.bmp
untitled.bmp
untitled1.bmp

கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன்

unread,
May 20, 2009, 4:47:18 AM5/20/09
to fro...@googlegroups.com
அன்பின் சகோதரர் அபூ சுமய்யா அவர்களில் ஆழ்ந்த பார்வையுடன் கூடிய தெளிவான அலசல் உண்மையிலேயே வியக்க வைக்கிறது. மாஷா அல்லாஹ். "பண்புடன்" என்னும் தமிழ்க்குழுமத்தின் "நண்பன் ஷாஜி" எனும் ஷாஜஹான் அவர்களின் எழுத்தழகை என் கண்முன் கொண்டு வந்தது. மிகத் தீர்க்கமான ஆய்வு. சகோதரர் ஜி என் அவர்களின் விளக்கமும் அபூ சுமய்யா அவர்களின் ஆய்வை எமக்கு மேலும் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்தது.
 
விடுதலைப்புலிகள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவர்களின் தடம் புரண்ட களப்போரினை முன்னெடுத்த தவறான தலைமையின் விளைவாக மத்தளத்தின் இருபக்கமும் அடிபட்டு வாழ்வைப் பறி கொடுத்த அப்பாவிகளை [மத வேறுபாடின்றி] நாம் புரிந்துக் கொண்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வாழ்வாதாரங்களை வழங்கிட உலக நாடுகள் முன்வர வேண்டும்.
 
விடுதலைப் புலிகள் தவறானவர்கள் என்பதற்காக, ராஜ பக்ஷே ஹீரோ என்பதை எம் மனம் ஏற்க மறுக்கிறது. அவனும் கொடியவன் தான். சர்வதேச நீதிமன்றத்தில் நிற்க வைத்து விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டியவன் தான்.
 
 
அல்லாஹ் மிக அறிந்தவன்.

muslim

unread,
May 22, 2009, 11:13:43 PM5/22/09
to fro...@googlegroups.com

சகோதரர் அபூ சுமையா

கருத்துச் செறிவுள்ள ஆக்கம். பகிர்ந்தமைக்கு நன்றி.

திராவிடர் மற்றும் தமிழர்களாக இருந்தாலும் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை எனும் விஷக்கருத்துத் திட்டமிட்ட திணிக்கப்படுகின்றது. இது இலங்கையில் மட்டுமில்லை, தமிழகத்திலும் உண்டு. 


2009/5/19 Abusumaiya <abusu...@gmail.com>

razin rahman

unread,
May 23, 2009, 1:58:35 AM5/23/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ்,
விடுதலை புலிகள் பற்றிய,என்னுடைய உள்ளத்தில் எழுந்த பல்வேறு விதமான,கேள்விகளுக்கு,அல்லாஹ்,தங்களின் மூலமாக,தெளிவான விளக்கத்தை எனக்கும், என்னைப்போன்ற மற்ற சகோதரர்களுக்கும்,தந்துள்ளான்.     

இது விஷயமாக தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்ட,ஒவ்வொரு சகோதரரின் கருத்தும்,முக்கியத்துவம் வாய்ந்தது.நன்மையை நாடி,தங்களின் கருத்தை பகிர்ந்த சகோதரர்களுக்கு இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நற்க்கூலி வழங்குவானாக.

Regards,
H.Razin Abdul Rahman,
Mechanical Engineer,
ETA
Dubai.
--

Mohamed Lafeer

unread,
May 23, 2009, 6:19:03 AM5/23/09
to fro...@googlegroups.com


2009/5/18 razin rahman <razin...@gmail.com>

v];.vy;.vk;.yhgpH

m\;u/g; QhgfhHj;j itj;jparhiy

fy;Kid

,yq;if

23.05.2009

 

m];]yhK miyf;Fk;.

 

jhq;fs; tpLjiyg;Gypfs; kPJ kpfTk; md;G itj;jpUf;fpd;wPHfs; Mdhy; mtHfs; me;jsTf;F K];ypk;fis Nerpf;ftpy;iy khwhf gs;spthrypy; njhOJ nfhz;bUe;j 500 Nkw;gl;l K];ypk;  rNfhjuHfis fhj;jhd;Fbapy; gLnfhiy nra;jhHfs;. Aho;g;ghzj;jpy; G+HtPfkhf tho;e;J nfhz;bUe;j K];ypk; rNfhjuHfis ,uNthbuhf cLj;j cLg;Gld; ,yl;rf;fzf;fhd K];ypk; rNfhju rNfhjupfis ntspNaw;wpdhHfs;> K];ypk; rNfhjuHfis flj;jp nfhiy nra;jhHfs; ,g;gb K];ypk;fis mtHfspd; mbikahf khw;Wtjw;F Kaw;rp nra;jHfs;.  mtHfSf;F ,iwtd; nfhLj;j jz;lidjhd; mbNahL ,y;yhky; NghapUf;fpd;whHfs;.

 

t];]yhk;

 

v];.vy;.vk;.yhgpH

m\;u/g; QhgfhHj;j itj;jparhiy

fy;Kid

Reply all
Reply to author
Forward
0 new messages