வாஜிப் விளக்கம்

1,301 views
Skip to first unread message

ஹாஜா மைதீன் (இப்னு அஷ்ரஃப்)

unread,
Nov 26, 2009, 4:03:53 AM11/26/09
to fro...@googlegroups.com
வாஜிப் என்று குரான் ஹதீஸில் இருக்கிறதா? 

தயவுசெய்து விளக்கவும். 

பெருநாள் தொழுகை வாஜிப் என்பதற்கு குரான் ஹதீஸ் வழி நின்று விளக்கம் தரவும். 
--
அன்புடன்

அபு நிஹான் 


ஹாஜா மைதீன் (இப்னு அஷ்ரஃப்)

unread,
Nov 30, 2009, 12:04:45 AM11/30/09
to fro...@googlegroups.com
கீழ் உள்ள கேள்விக்கு பதில் இன்னும் வரவில்லை. எதிர்ப்பார்க்கிறேன்.

அன்புடன்

அபு நிஹான் 
--
அன்புடன்

ஹாஜா மைதீன் அஷ்ரப் அலி
துபாய், ஐக்கிய அரபு அமீரகம்

நமக்குள் இஸ்லாம்

unread,
Nov 30, 2009, 9:50:00 AM11/30/09
to fro...@googlegroups.com
ஸலாம்
 
இஸ்லாமிய அடிப்படையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். 
 
இது கட்டாயக் கடமை, இது சுன்னத், இது வாஜிப் என்றெல்லாம் இஸ்லாம் எந்த பட்டியலும் தயாரித்து நமக்கு கொடுக்கவில்லை.
 
நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் சுன்னத் என்று ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்தும் கருத்து வேறுபாடின்றி ஏற்றுக் கொண்டதை நாம் அறிவோம்.  ஆனால் ஃபர்ள், வாஜிபு என்னவென்பதை எதை வைத்து தீர்மானிப்பது?
 
ஒரு அமலுக்கு எந்த அளவு அழுத்தம் கொடுக்கப்படுகின்றதோ அதை பொருத்தே அது ஃபர்ளாக கருதப்படும். வாஜிபு கூட அப்படித்தான்.
 
பெருநாள் தொழுகையைப் பொருத்தவரை மாதவிடாய் பெண்கள் உட்பட வரசொல்லியுள்ளதும்,  உடை இல்லாதவர்கள் கூட இரவல் உடை வாங்கி உடுத்தி வர சொன்னதும் அந்தத் தொழுகையின் அழுத்தத்தை உணர்த்துகின்றது. அந்தத் தொழுகையை வாஜிபு என்று சொல்வதை விட ஃபர்ள் என்று சொல்லக் கூட வாய்ப்புள்ளது.
இது குறித்து மேலதிக விளக்கம் உள்ளவர்கள் இங்கு பதிக்கலாம்.

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe  

Ansari Thameem

unread,
Nov 30, 2009, 12:15:14 PM11/30/09
to fro...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ராஹ்மாநிர்ரஹீம்!
அஸ்ஸலாமு அலைக்கும்!
பர்ல், சுன்னத், வாஜிப் தயவு செய்து முவ்வேறு வித்தியாசங்களை தெரிந்தவர் யாராவது விளக்கம் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
 
பர்ல் என்பது கட்டாயக்கடமை அதாவது அதைச்செய்தே ஆகவேண்டும்.   
சுன்னத் என்பது............?
வாஜிப் என்பது.............?
விளக்கம் தேவை.
வஸ்ஸலாம்,
தஞ்சை தமீம் அன்சாரி


 
2009/11/30 நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to

muslim

unread,
Nov 30, 2009, 11:04:14 PM11/30/09
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

''வாஜிப்'' என்பதற்கான கூடுதல் விளக்கங்களை நபிமொழிகளிலிருந்து அறிந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.



2009/11/30 Ansari Thameem <rmb.a...@gmail.com>

ஹாஜா மைதீன் (இப்னு அஷ்ரஃப்)

unread,
Dec 6, 2009, 12:53:30 AM12/6/09
to fro...@googlegroups.com
பதில் அளித்தவர்களுக்கு நன்றிகள். 

சகோதரர் ஜி. என். அவர்கள் 

//ஒரு அமலுக்கு எந்த அளவு அழுத்தம் கொடுக்கப்படுகின்றதோ அதை பொருத்தே அது ஃபர்ளாக கருதப்படும். வாஜிபு கூட அப்படித்தான்.// என்று பதில் அளித்துள்ளார்கள். 

என்னுடைய கேள்வி? வாஜிப் என்ற வார்த்தை குரான், ஹதீஸில் இருக்கிறதா என்று அறிவதே. மேலும் பெருநாள் தொழுகை பற்றிய ஹதீஸில், பர்ளு தொழுகை என்றோ வாஜிப் தொழுகை என்றோ உள்ளதா என்பதை அறியத் தாருங்கள் சகோதரர்களே.

அன்புடன் 
அபு நிஹான்     
2009/11/30 நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>
ஸலாம்
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

muslim

unread,
Dec 7, 2009, 11:47:49 AM12/7/09
to fro...@googlegroups.com

''வாஜிப்'' என்ற பதம் கடமை, கட்டாயம், உறுதியாக, முடிவாக என பல வாசகங்களை அர்த்தப்படுத்தும் ஒரு சொல்லாக உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது ''மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே ஹஜ் செய்யுங்கள்'' என்றார்கள். அப்போது ஒரு மனிதர் ''அல்லாஹ்வின் தூதரே ஒவ்வோர் ஆண்டிலுமா?'' என்று கேட்டார் அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறு கேட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''நான் ஆம் என்று சொல்லி விட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடமையாகிவிடும். பின்னர் உங்களால் நிறைவேற்ற முடியாமலாகிவிடும்'' என்று கூறிவிட்டு... (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 2599)

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الرَّبِيعُ بْنُ مُسْلِمٍ الْقُرَشِيُّ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ زِيَادٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏خَطَبَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ أَيُّهَا النَّاسُ قَدْ ‏ ‏فَرَضَ اللَّهُ عَلَيْكُمْ الْحَجَّ فَحُجُّوا فَقَالَ رَجُلٌ أَكُلَّ عَامٍ يَا رَسُولَ اللَّهِ فَسَكَتَ حَتَّى قَالَهَا ثَلَاثًا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ قُلْتُ نَعَمْ لَوَجَبَتْ وَلَمَا اسْتَطَعْتُمْ ثُمَّ قَالَ ‏ ‏ذَرُونِي ‏ ‏مَا تَرَكْتُكُمْ فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَدَعُوه
 

மேல்கண்ட நபிமொழியில் வாஜிப் என்ற சொல்லை கடமையான செயலுக்கு சமமாக சொல்லப்பட்டுள்ளது. ஆயினும் கட்டாயமாகிவிடும், உறுதியாகிவிடும், முடிவாகிலிடும் என்ற வாசகங்களும் இங்கு பொருந்தும்.

நாங்கள் (முறை வைத்து) ஒட்டகங்கள் மேய்த்து வந்தோம். இந்நிலையில் எனது முறை வந்தபோது மாலை நேரத்தில் அவற்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலத்துக்குச் சென்றேன். (பிறகு திரும்பிவந்தேன்) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் ''ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை'' என்று கூறுவதை நான் கேட்டேன். (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 397)

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏رَبِيعَةَ يَعْنِي ابْنَ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُقْبَةَ بْنِ عَامِرٍ ‏ ‏ح ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏أَبُو عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏جُبَيْرِ بْنِ نُفَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عُقْبَةَ بْنِ عَامِرٍ ‏ ‏قَالَ ‏
كَانَتْ عَلَيْنَا رِعَايَةُ الْإِبِلِ فَجَاءَتْ نَوْبَتِي ‏ ‏فَرَوَّحْتُهَا ‏ ‏بِعَشِيٍّ فَأَدْرَكْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَائِمًا يُحَدِّثُ النَّاسَ فَأَدْرَكْتُ مِنْ قَوْلِهِ ‏ ‏مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ مُقْبِلٌ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ قَالَ فَقُلْتُ مَا أَجْوَدَ هَذِهِ فَإِذَا قَائِلٌ بَيْنَ يَدَيَّ يَقُولُ الَّتِي قَبْلَهَا أَجْوَدُ فَنَظَرْتُ فَإِذَا ‏ ‏عُمَرُ ‏ ‏قَالَ إِنِّي قَدْ رَأَيْتُكَ جِئْتَ ‏ ‏آنِفًا ‏ ‏قَالَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ ‏ ‏فَيُبْلِغُ ‏ ‏أَوْ فَيُسْبِغُ الْوَضُوءَ ثُمَّ يَقُولُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ ‏ ‏مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ‏ ‏إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ ‏
 

*******************************

(நபி (ஸல்) அவர்களைக் கடந்து) ஜனஸா ஒன்று கொண்டு செல்லப்பட்டது. அது குறித்து நல்லவிதமாகப் பேசப்பட்டது. இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் ''உறுதியாகிவிட்டது, உறுதியாகிவிட்டது, உறுதியாகிவிட்டது'' என்று கூறினார்கள். பின்னர் மற்றொரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அப்போதும் ''உறுதியாகிவிட்டது, உறுதியாகிவிட்டது, உறுதியாகிவிட்டது. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 1731)

 حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏
مُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرًا فَقَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ وَجَبَتْ وَجَبَتْ وَجَبَتْ وَمُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا شَرًّا فَقَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ وَجَبَتْ وَجَبَتْ وَجَبَتْ قَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏فِدًى لَكَ أَبِي وَأُمِّي مُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرٌ فَقُلْتَ وَجَبَتْ وَجَبَتْ وَجَبَتْ وَمُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا شَرٌّ فَقُلْتَ وَجَبَتْ وَجَبَتْ وَجَبَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ وَمَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا وَجَبَتْ لَهُ النَّارُ أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الْأَرْضِ أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الْأَرْضِ أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الْأَرْضِ ‏

******************************

''நான் உம்ராச் செய்ய முடிவு செய்துள்ளேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்'' என்றும்...

''நான் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்ய முடிவு செய்துள்ளேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்'' என்று  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நபிமொழிச் சுருக்கம். நூல்கள் - புகாரி 4185.  முஸ்லிம் 2368)

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏وَسَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ ‏
كَلَّمَا ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏حِينَ نَزَلَ ‏ ‏الْحَجَّاجُ ‏ ‏لِقِتَالِ ‏ ‏ابْنِ الزُّبَيْرِ ‏ ‏قَالَا لَا يَضُرُّكَ أَنْ لَا تَحُجَّ الْعَامَ فَإِنَّا ‏ ‏نَخْشَى أَنْ يَكُونَ بَيْنَ النَّاسِ قِتَالٌ يُحَالُ بَيْنَكَ وَبَيْنَ ‏ ‏الْبَيْتِ ‏ ‏قَالَ ‏ ‏فَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ فَعَلْتُ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَا مَعَهُ حِينَ حَالَتْ كُفَّارُ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏بَيْنَهُ وَبَيْنَ ‏ ‏الْبَيْتِ ‏ ‏أُشْهِدُكُمْ أَنِّي قَدْ ‏ ‏ أَوْجَبْتُ ‏ ‏عُمْرَةً فَانْطَلَقَ حَتَّى أَتَى ‏ ‏ذَا الْحُلَيْفَةِ ‏ ‏فَلَبَّى بِالْعُمْرَةِ ثُمَّ قَالَ إِنْ خُلِّيَ سَبِيلِي قَضَيْتُ عُمْرَتِي وَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ فَعَلْتُ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَا مَعَهُ ثُمَّ تَلَا ‏
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ ‏
ثُمَّ سَارَ حَتَّى إِذَا كَانَ بِظَهْرِ ‏ ‏الْبَيْدَاءِ ‏ ‏قَالَ مَا أَمْرُهُمَا إِلَّا وَاحِدٌ إِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَ الْعُمْرَةِ حِيلَ بَيْنِي وَبَيْنَ الْحَجِّ أُشْهِدُكُمْ أَنِّي قَدْ ‏ ‏ أَوْجَبْتُ ‏ ‏حَجَّةً مَعَ عُمْرَةٍ فَانْطَلَقَ حَتَّى ‏ ‏ابْتَاعَ ‏ ‏بِقُدَيْدٍ ‏ ‏هَدْيًا ‏ ‏ثُمَّ طَافَ لَهُمَا طَوَافًا وَاحِدًا ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ لَمْ يَحِلَّ مِنْهُمَا حَتَّى حَلَّ مِنْهُمَا بِحَجَّةٍ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏
 

********************************

அல்குர்ஆன் 22:36வது வசனத்தில் ''வஜபத்'' என்ற சொல் இடம் பெற்றுள்ளது

" فَإِذَا وَجَبَتْ جُنُوبهَا "

 



2009/11/30 Ansari Thameem <rmb.a...@gmail.com>

Ansari Thameem

unread,
Dec 7, 2009, 1:32:00 PM12/7/09
to fro...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ராஹ்மாநிர்ரஹீம்!
அஸ்ஸலாமு அலைக்கும்!
புனிதத்திருக்குர் ஆன் வசனம்  22:54
(ஆனால்) எவருக்குக்கல்வி ஞானம் அளிக்கப்பட்டிருக்கின்றதோ அவர்கள், நிச்சயமாக இ(வ்வேதமான)து    உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து அதன் மீது ஈமான் கொள்வதற்காகவும் (அவ்வாறு செய்தான், அதன் பயனாக) அவர்களுடைய இருதயங்கள் அவன் முன் முற்றிலும் வழிப்பட்டுப் பணிகின்றன; மேலும்: திடனாக அல்லாஹ் ஈமான் கொண்ட்டவர்களை நேரான வழியில் செலுத்துபவானாக இருக்கின்றான்.
 
பர்ல்       : கட்டாயக்கடமை அதாவது அதைச்செய்தே ஆகவேண்டும்.
 
சுன்னத் : கடைப்பிடிக்கப்பட  வேண்டியது...! அதே சமயம் விட்டுவிட்டாலும்... தவறில்லை.
     
வாஜிப்   :  மேற்கூறிய இரண்டுக்கும் இடைப்பட்ட நற்ச்செயல் என்றுதான் கொள்ளவேண்டும். 
 
வஜப்து எனும் வார்த்தை தங்களின் ஆய்வின் படி புனிதத்திருகுரானில் ஒரே முறை தான் வந்துள்ளது. அதுவும் ஸல்லல்லாஹு  அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்... நான் ஆம் என்று சொல்லிவிட்டால் அதனை (ஹஜ்ஜை) ஒவ்வொரு வருடமும் நீங்கள் நிறைவேற்ற வேண்டிவரும்
பின்னர் உங்களால் நிறைவேற்ற முடியாமலாகிவிடும்'' என்று கூறிவிட்டு...
என்ற மேற்கூறிய வசனத்திலிருந்து வாஜிப் என்பது... முடிந்தவர்கள் முடிந்தவரை நிறைவேற்றவேண்டும் என்ற முடிவுக்கு வர முடிகிறது.  எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்! 
இயலாதவர்கள் குர்பானியும் கொடுக்க முடியாது  ஹஜ்ஜுக்கும் போகமுடியாது.  அதனால் அவர்களை இறைவன் தண்டிப்பதில்லை.  ஹஜ் செய்வதை வாஜிப் என்பதால் இவ்வளவு விளக்குகிறேன்.  ஹஜ் செய்வதற்கு முதலில் உடல் ஆரோக்கியம் வேண்டும் பிறகு அதற்க்கான செலவுக்கு என பெரிய ஒரு தொகை வேண்டும் அதுவும் கடன் வாங்கக்கூடாது.  அது மாத்திரமல்ல ஏற்கனவே இருக்கும் கடனை அடைத்து விடவேணும் (மௌத் எந்த வினாடியிலும் ஏற்ப்படலாம்.  கடனுடன் மௌத்தானால் ஹஜ் கூடாது என்பதால்) அல்லது கடன் கொடுத்தவர் பரவாயில்லை போய் வாருங்கள் என அனுமதியளித்துவிட்டால்... கூடும்.  இப்படியிருக்க இயலாதவர்கள் ஹஜ் செய்யாமல் போனால்... அல்லாஹ் தண்டிப்பான் என எதிலும் ஆதாரம் இல்லை. எனவே தங்களின் ஆய்வையும் இஸ்லாமிய மார்க்க அனுமதிகளின் படியும் வாஜிப்  என்பது சுன்னத்திற்க்கும் மேலானது முடியாத பட்சத்தில் மட்டும் விட்டுவிட்டால் தவறில்லை என்பதும் தெளிவாகிறது.
என்னிலும் என் எழுத்திலும் தவறிருந்தால் மன்னித்து நல்லெண்ணங்களையும் நன்னெறியையும் நல்லறிவையும்  கொடுத்து  எல்லாம் வல்ல நாயன் என்னையும் என்னைப்போன்றே  அனைவரையும் மன்னித்து அருள் புரிவானாக ஆமீன்! 
வஸ்ஸலாம்,
தஞ்சை தமீம் அன்சாரி

2009/12/7 muslim <tomu...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages