வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்
இயக்கம் சார்ந்த, இயக்கம் சாராத, இன்னும் இயக்க அனுதாபிகள் என பலர் இக்குழுமத்தில் உறுப்பினராக உள்ளனர். இயக்கம் சாரா இக்குழுமத்தை இயக்க விளம்பரத்துக்கு பயன்படுத்துவது கலகத்தை ஏற்படுத்திவிடும். எனவே இயக்க விளம்பரத்தை குழுமத்தில் அனுமதிக்க முடியாது!
இட ஒதுக்கீடு கேட்டு //இஸ்லாமிய மக்களுக்கு போராடுவது தவறா// எனக் கேட்டிருப்பது வெறும் சப்பைக் கட்டு. ஏனெனில், எல்லா இயக்கங்களும் ''முஸ்லிம் மக்களுக்காகவேப் போராடுகிறோம்'' என்றே மக்களிடையே அறிவிக்கின்றன.
எனவே, உறுப்பினர்கள் குழுமக் கட்டுப்பாடு கருதி இயக்கம் சார்பாக நடைபெறும் பேரணி, மாநாடு, போராட்டம், முற்றுகை போன்ற இயக்க விளம்பரப் பதிவுகளை தவிர்க்கவும்.
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்
அன்புச் சகோதரர் Ajmal S அவர்களுக்கு, உங்கள் மின்னஞ்சல் முகவரியை மட்டுறுத்தலுக்கு உட்படுத்தும்போது கவனக்குறைவினால் மாடரேட்டரில் உங்கள் மின்னஞ்சல் சேர்க்கப்பட்டுவிட்டது. பின்னர் தவறு அறிந்து, நீக்கப்பட்டு மட்டுறுத்தப்பட்டது. இதற்கு உள் நோக்கம் எதுவுமில்லை! பிழைக்கு பொறுத்துக்கொள்ளவும்.
| அஸ்ஸலாமு அலைக்கும் |
குரான் ஹதீஸ் ஒளியில் இந்த இயக்கங்களோடு சேர்ந்து மார்க்க பிரசாரம் செய்யலாமா? |
சகோதரர் Roshan
எந்த இயக்கம் என்று நீங்கள் சொன்னால் என்னை போல் தெரியாத சகோதரர்கள் தெரிந்து கொள்ளுவார்கள்.
--- On Mon, 6/28/10, Khaja Fakrudeen <mikf...@gmail.com> wrote: |
--- On Tue, 6/29/10, Abdullah Abdulsalam <abdulla...@yahoo.com> wrote: |
--
அஸ்ஸலாமு அலைக்கும் |
சகோதரர் ரோஷன் நீங்கள் எழிதியது புரியம்மால் தான் கேட்டிகின்றேன் கொஞ்சம் சொல்லுங்கள் |
|
.தாங்கள் தற்பொழுது எந்த பிரிவை சேர்ந்தவர் ?
|
நான் உங்களை போல் தனி தனி மனிதனை துக்கி பிடித்து பின்னால் சொல்லகூடியவான் இல்லை குர் ஆன் ஹதிஸை மட்டும் பின் பர்றகூடியவான். நான் மீண்டும் கேட்டுகின்றேன் குரான் ஹதீஸ் ஒளியில் இந்த இயக்கங்களோடு சேர்ந்து மார்க்க பிரசாரம் செய்யலாமா? நீங்கள் குறிபிட்டது எந்த இயக்கம் என்று சொன்னால் தான் அடுத்து நானும் பின் பற்றுவேன். --- On Tue, 6/29/10, Roshan Rosheen <roshan...@yahoo.com> wrote: |
|
அஸ்ஸலாமு அழைக்கும்
|
சகோதரர் அஜ்மல் அவர்கள் சொல்வது நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்திற்கு அனைத்திலும் இட ஒதிக்கீடு தேவை
என்ற கருத்திற்காக மாநாடு அழைப்பு சொல்கிறார் இதில் என்ன தவறு உள்ளது . இஸ்லாமிய மக்களுக்கு போராடுவது
|
தவறா. எதில் என்ன குறை கண்டு விட்டீர்கள் விளக்கம் தரவும் . |
வருகின்ற தேர்தலில் பேரம் பேசுவதற்கு மாநாடு இது அனைவரும் அறிவார். பி ஜே அமைப்பில் யார் வெளியேரினாலும் அவர்கள் மாநாடு நடத்துவது வழக்கம் என்னை பொருத்தவரைக்கும் ஓட்டும் மொத்தம் முஸ்லிம்களுக்கு நடத்தப்படும் மாநாடு இல்லை --- On Tue, 6/29/10, Syed AbdusSalam Ibrahim <ksasi...@gmail.com> wrote: |
|
ஆசை கூடாது என்று கூறிய புத்தருக்கு ஆசை வெறுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சிலையை வணங்க கூடாது என்று கூறிய புத்தரையே கடவுள் ஆகிவிட்டார்கள். அதே போல ஹனபி ஷாபி என்ற பிரிவினையை தடுப்போம் என்று ஒரு பிரிவை உண்டாக்கி, நான்கு மத்ஹபை தடுப்போம் என்று சொன்னவர்கள் நாற்பது ஆக பிரிண்டுள்ளதுள்ளர்களே, இது தான் பிரிவினையை தடுப்பதா என்பதை சிந்தனையில் கொள்ளுங்கள். பிரிவினையை தடுப்போம் என்று கூறிய கூட்டம் நாறிக்கொண்டு இருக்கின்றது. தரிகா வின் பெயராலோ, மத்ஹபின் பெயராலோ, நாங்கள் சண்டை போட்டு கொள்ளவில்லை, கடையநல்லூரில் பள்ளிவாசல் மூடல், இணையதளங்களில் அருவெறுப்பான தகவல் பரிமாற்றங்கள், பணத்திற்காக சண்டை என்று ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டு, இது தான் மார்க்கமா, சஹாபாக்களை திட்டுவது, நபிகளார் கூறிய ஹதீஸை கூட பின் பற்ற மாட்டோம் என்ற நிலை தான் மார்க்கம் போதிக்கும் லட்சணமா, நிறுத்தி கொள்ளுங்கள், இது பொது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கூட்டமைப்பு, எந்த இயக்கத்தின் கடித போக்குவரத்தோ விளம்பரமோ, கூடாது,
அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
அன்பின் குழும உறுப்பினர்களுக்கு,
குழுமத்தில் தனி மனிதத் தாக்குதல் வேண்டாம். இயக்கப் பெயரைச் சுட்டிக் காட்டி விமர்சிக்கவும் வேண்டாம். வரம்பு மீறாமல் ஆரோக்கியமான கருத்துகளை எழுதுங்கள்!
சகோதரர் ஹாஜா மைதீன் அவர்கள் ஹைலைட் செய்துள்ள ''உடல் சுத்தமில்லாதவர் குர்ஆனை ஓதக் கூடாது'' என்ற சகோதரர் syed abdussalam ibrahim அவர்களின் கருத்துக்கு தேவையான மார்க்க ஆதாரங்களை எழுதவும்!
''ஸஹாபாக்களைத் திட்டுவது,'' இதற்கும் சான்றுகளை எழுதவும்!
உறுப்பினர்கள் நிதானம் இழக்க வேண்டாம்.
சகோதரர் அஜ்மல் அவர்கள் சொல்வது நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்திற்கு அனைத்திலும் இட ஒதிக்கீடு தேவைஎன்ற கருத்திற்காக மாநாடு அழைப்பு சொல்கிறார் இதில் என்ன தவறு உள்ளது . இஸ்லாமிய மக்களுக்கு போராடுவது
தவறா. எதில் என்ன குறை கண்டு விட்டீர்கள் விளக்கம் தரவும் .
முஹம்மத் ரபிக்சவுதி அரேபியா .
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
சகோதரர் அப்துஸ் ஸலாம்
இது தான் மார்க்கமா, சஹாபாக்களை திட்டுவது, நபிகளார் கூறிய ஹதீஸை கூட பின் பற்ற மாட்டோம் என்ற நிலை தான் மார்க்கம் போதிக்கும் லட்சணமா, நிறுத்தி கொள்ளுங்கள்,
நபிகளார் கூறிய எந்த ஹதீஸை மறுத்தார்கள் என்று கூற முடியுமா? அதை மறுக்க இயலாது என்பதற்கு ஆதாரத்தையும் தரவும்.உடல் சுத்தம் இல்லாவிட்டால் குரானை ஓதலாம் என்று கூறுவது தான் தூய வடிவில் இஸ்லாம் கூறும் லட்சணமா,உடல் சுத்தம் இல்லாவிட்டால் குர்ஆனை ஓதக் கூடாது என்பதற்கு ஆதாரம் இருந்தால் அனுப்பவும். அப்படி இல்லாமல் அவர்கள் கூறுவது தவறு, இவர்கள் கூறுவது தவறு என்று கூற வேண்டாம்.
மார்க்கத்தில் என்ன இருக்கிறதோ அதை பின்பற்றினாலே போதும், தேவையில்லாமல் நாமாக உருவாக்க இது நாம் படைத்த மார்க்கம் அல்ல. எவனெல்லாம் எதுவெல்லாம் சொல்கிறானோ, எவனுக்கு எதுவெல்லாம் தோன்றுகின்றதோ அதுவெல்லாம் மார்க்கமாக ஆக்கி இந்த ஆலிம்கள் அல்லாஹ்விடம் மோத தயாரகின்றார்கள். ஊருக்கு ஒரு முறை என்று இருக்கிறது. உணவு பழக்க வழக்கங்கள், உடை, பேச்சு மற்றும் அனைத்திலும். ஆனால் ஊருக்கு ஒரு மார்க்கம் என்று நமது இந்தியாவில் (குறிப்பாக) பின்பற்றப்பட்டு வருகின்றது. சில சட்டங்கள் ஏறுக்கு மாறாக ஊருக்கு ஊர் வித்தியாசப் படும். இந்த வித்தியாசங்களை கொண்டு வந்தவர்கள் யார்? ஏன் இப்படி செய்தார்கள். அப்படி செய்தால் ஏன் மக்கள் அவர்கள் (ஆலிம்கள்) சொல்லுவதையே வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள். திரும்ப கேள்வி கேட்க வேண்டும். ஏன் இந்த சட்டத்தை சொல்கிறீர்கள், இது குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருக்கின்றதே என்று கேட்க வேண்டும்.
”வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர
(யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு
இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!” என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் ”நாங்கள் முஸ் ம்கள் என்பதற்கு நீங்களே
சாட்சிகளாக இருங்கள்!” எனக் கூறி
விடுங்கள்!
என்ற 3:64 வசனத்தை ரோமாபுரி மன்னர் ஹெர்குலிசுக்கு நபி
(ஸல்) அவர்கள் எழுதியுள்ளார்கள். (பார்க்க புகாரி எண் 7 மற்றும் 4553)
மாற்று மதத்தவர்களும் இவ்வசனங்களைப் படித்துத் திருந்த வேண்டும் என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் வசனத்தை
எழுதி அனுப்பினார்கள். தூய்மையற்றவர்கள் குர்ஆனை தொடக் கூடாது, ஓதக் கூடாது என்றிருக்குமானால் நபி (ஸல்) அவர்கள் ஹெர்குலிஸ் மன்னருக்கு எழுதி அனுப்பியிருக்க மாட்டார்கள்.
சரி இந்த வித்தியாசம் தேவை இல்லை என்று வைத்து கொள்வோம்
இந்த வித்தியாசத்திற்கு என்ன வழி? இது எப்படி உருவானது என்று கேட்டால் நான் என்ன சொன்னேனோ அதியே நீங்களும் சொல்லுகிறீர்கள். நான் தான் இந்த வித்தியாசம் தேவையில்லை என்று சொன்னேன். அது எப்படி உருவானது என்று கேட்டேன்.. உங்களிடம் பல கேள்விகளுக்கு கேள்வியே விடையாக இருக்கிறது.
ஒரு பிரிவு பிறை பார்த்து நோன்பு நோற்க சொல்கிறது, மற்றொன்று சவுதியில் பார்த்தால் போதும் என்கிறது, ஒரு பிரிவு தற்கொலை செய்து கொண்டால் ஜனாசா தொழுகை உண்டு என்கிறது, மற்றொன்று தற்கொலை செய்து கொண்டால் ஜனாசா தொழுகை இல்லை என்று சொல்கிறது. கொடுத்த பொருளுக்கு ஜகாத் வாழ்நாளில் ஒரு முறை என்று ஒரு கூட்டம் கூறுகிறது, வருடம் தோறும் தரவேண்டும் என்று மற்றொன்று கூறுகிறது, அல்லாஹ்வின் (ஒரே )மார்க்கமான இதில் இதில் எப்பிடி இடை செறுகள் செய்தீர்கள். உங்களுக்கு அதிகாரம் தந்தது யார் .
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண்மணி தொழுவதற்காகப் புறப்பட்டார். அவரை ஒரு ஆண் கண்டு போர்வையால் போர்த்தி அவரைக் கற்பழித்து விட்டார். அவள் சப்தமிட்டதும் அவன் ஓடி விட்டான். வேறொரு ஆடவர் அவளருகே வந்தார் இந்த மனிதன் என்னைக் கெடுத்துவிட்டான் என்று அப்பெண் கூறினாள். முஹாஜிர்களில் ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்ற அப்பெண் ”இந்த மனிதன் என்னைக் கெடுத்து விட்டான்” என்ற கூறினார். யார் அவளைக் கெடுத்ததாக அப்பெண் அடையாளம் காட்டினாளோ அவரைப் பிடித்து வந்தனர். ”அவன்தான்” என்று அப்பெண் அடையாளம் காட்டினாள். நபி (ஸல்) அவர்களிடம் அவர் கொண்டு வரப்பட்டு கல்லெறியுமாறு உத்தரவிடப்பட்டதும் அப்பெண்ணை உண்மையிலேயே கெடுத்தவர் எழுந்து ”அல்லாஹ்வின் தூதரே நான்தான் அவளைக் கெடுத்தவன்” என்று கூறினார்.
”வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர
(யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு
இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!” என்று கூறுவீராக! அவர்கள்
புறக்கணித்தால் ”நாங்கள் முஸ் ம்கள் என்பதற்கு நீங்களே
சாட்சிகளாக இருங்கள்!” எனக் கூறி
விடுங்கள்!
என்ற 3:64 வசனத்தை ரோமாபுரி மன்னர் ஹெர்குலிசுக்கு நபி
(ஸல்) அவர்கள் எழுதியுள்ளார்கள். (பார்க்க புகாரி எண் 7 மற்றும் 4553)
மாற்று மதத்தவர்களும் இவ்வசனங்களைப் படித்துத் திருந்த வேண்டும் என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் வசனத்தை
எழுதி அனுப்பினார்கள். தூய்மையற்றவர்கள் குர்ஆனை தொடக் கூடாது, ஓதக் கூடாது என்றிருக்குமானால் நபி (ஸல்) அவர்கள் ஹெர்குலிஸ் மன்னருக்கு எழுதி அனுப்பியிருக்க மாட்டார்கள்.
ஹகீம் இப்னு ஹிஜாம் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிய சமயம் என்னிடம் கூறினார்கள். நீங்கள் தூய்மையாக இருக்கும் போதுதான் குர்ஆனைத் தொடவேண்டும்.
நூற்கள்: ஹாகிம்- எண்: 6066, தாரகுத்னீ - எண்: 386,
தப்ரானி(கபீர்)- எண்:3067
இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் வரிசை நம்பகத்தன்மை வாய்ந்ததென்று இமாம் ஹாகிம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் தொடர் அழகியதென்று இமாம் ஹாஜிம் கூறுகின்ற கருத்தை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி தனது தல்கீஸ் ஹபீர் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
தல்கீஸ் ஹபீர் 1-131
அறிவிப்பாளர்- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
நூற்கள்: தாரகுத்னீ - எண்: 383, பைஹகீ/377 தப்ரானி
(கபீர்)- எண்:13049, தப்ரானி(ஸஙீர்)- எண்:1160
இந்த ஹதீதின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள்.
நூல்; மஜ்மவு ஜவாயித் 1-276
உத்மான் இப்னு அபில் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள்கூறுகிறார்கள்; நாங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்தோம்.எங்களில் குர்ஆனை நன்கு ஓதக்கூடியவனாக நானிருந்தேன். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் சொன்னார்கள்; நீர் சிறுவராக இருப்பினும் உம் கூட்டத்தினருக்கு தலைவராக உம்மை நியமிக்கிறேன். நீர் தூய்மையானவராக இருக்கும் போது தான் குர்ஆனைத் தொடவேண்டும்.
நூல்: தப்ரானி (கபீர்)- எண்: 8255
இந்த ஹதீதின் அறிவிப்பாளர் தொடரில் வருகின்ற இஸ்மாயில் இப்னு ராஃபிஃ என்பவர் பலவீனமானவர் என யஹ்யா இப்னு மயீன் தெரிவித்தாலும் இமாம்
புகாரி அவர்கள் அவரை நம்பகமானவர் என உரைக்கிறார்கள்.
நூல்: மஜ்மவு ஜவாயித் 1-277
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ரு இப்னு ஹஜ்ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு இருந்தது: ‘தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும்.’
அறிவிப்பாளர்- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹுஅன்ஹு
நூற்கள்: முஅத்தா-எண்:466, தாரமீ- எண்:2195, பைஹகீ- எண்:376,
இமாம் தாரகுத்னீ அவர்களின் கூற்று:-
இதன் அறிவிப்பாளர்கள் நம்பகத்தன்மையுள்ளவர்கள்.
இமாம் பஙவீ அவர்களின் கூற்று:-
இந்த ஹதீஃதின் நிலைபற்றி இமாம் அஹமத் இப்னுஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் வினவப்பட்ட போது, இது ஆதாரபூர்வமானது என்றே கருதுகிறேன் என பதிலளித்த இமாம் அவர்கள் மேலும் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை எழுதினார்கள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.
நூற்கள்- திப்யான்1-409 , இர்வாவுல் ஙலீல்1-161
இமாம் யஃகூப் இப்னு சுப்யான் அவர்களின் கூற்று:-
எனக்கு தெரிந்த இதைவிட சிறந்த கடிதம் எதுவுமில்லை. ஏனென்றால், நபித்தோழர்களும் மற்றும் தாபியீன்களும் தங்களுது சொந்த யூகங்ளைப் புறந்தள்ளிவிட்டு குர்ஆனைத் தொடுவதற்கு சுத்தம் அவசியம் என்ற நிலைப் பாட்டிலேயே இருந்தனர்.
நூல்: திப்யான் ஃபீ அக்ஸாமில் குர்ஆன்- பக்கம்:144
இமாம் ஹாகிம் அவர்களின் கூற்று:-
இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதிய இக்கடிதம் ஆதாரபூர்வமானது என்று உமர் இப்னு அப்தில் அஜிஸ் அவர்களும் ஜூஹ்ரீ
அவர்களும் சாட்சி பகர்ந்துள்ளனர்.
நூல்: ஹாகிம்: 1-397
இமாம் இப்னு அப்திர் பர்ர் அவர்களின் கூற்று:-
இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அம்ரு இப்னு ஹஜ்ம் அவர்களுக்கு இக்கடிதத்தை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஏற்று அமல்படுத்தியுள்ளார்கள்.மேலும்,தொடர் வரிசையுள்ள ஒரு வழித் தொடர் ஹதீஃத்தைவிட கடிதம் சம்பந்தப்பட்ட இந்த ஹதீஃத் பிரபல்யமடைந்ததாகவும் மிகவும் ஏற்கத்தக்கதாகவும் அவ்வ்றிஞர்களிடம் கருதப்பட்டது.
நூல்: இஸ்திஃத்கார் 8-10
சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்ட இப்னு
தைமியாவின் கூற்று:-
இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதிய இக்கடிதம் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் பிரபல்யமுள்ளதாகும்.
நூல்: ஷரஹுல் உம்தா 1-382
ஒரு
பிரிவு பிறை பார்த்து நோன்பு நோற்க சொல்கிறது, மற்றொன்று சவுதியில்
பார்த்தால் போதும் என்கிறது, ஒரு பிரிவு தற்கொலை செய்து கொண்டால் ஜனாசா
தொழுகை உண்டு என்கிறது, மற்றொன்று தற்கொலை செய்து கொண்டால் ஜனாசா தொழுகை
இல்லை என்று சொல்கிறது. கொடுத்த பொருளுக்கு ஜகாத் வாழ்நாளில் ஒரு முறை
என்று ஒரு கூட்டம் கூறுகிறது, வருடம் தோறும் தரவேண்டும் என்று மற்றொன்று
கூறுகிறது, அல்லாஹ்வின் (ஒரே )மார்க்கமான இதில் இதில் எப்பிடி இடை செறுகள் செய்தீர்கள். உங்களுக்கு அதிகாரம் தந்தது யார் .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புச் சகோதரர் Syed AbdusSalam Ibrahim அவர்களுக்கு
குர்ஆன் ஒலியாகவே அருளப்பட்டது. எனவே குர்ஆனை ஓதுவதுதான் இபாதத் - வணக்கம். குர்ஆனைத் தொடுவது இபாதத் இல்லை!
குர்ஆனை எவ்வளவு அதிகமாக ஓதுகிறோமோ அதுவே நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்! குர்ஆனை எத்தனை முறைத் தொட்டாலும், தொடுவது நன்மை இல்லை!
ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும், இங்கு பதிவு செய்துள்ள ஹதீஸ்களில் தூய்மையின்றி குர்ஆனைத் தொடவேண்டாம் என்றே அறிவிப்புகள் உள்ளன. தூய்மையின்றி குர்ஆனை ஓதக் கூடாது என்பதை நிறுவிட எந்த ஆதாரமும் எழுதவில்லை. தூய்மையின்றி குர்ஆனை ஓதக் கூடாது என்பதற்கும் ஆதாரங்களை எழுதவும்!
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆன் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னரே குர்ஆன் வசனங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு முழுக் குர்ஆனாகத் தொகுக்கப்பட்டது. எனவே, ''தூய்மையாக இருக்கும் போதுதான் குர்ஆனைத் தொடவேண்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது குர்ஆனின் ஒரு வசனம் அல்லது சில வசனங்களுக்குப் பொருந்துமா? முழுக் குர்ஆனுக்கும் பொருந்துமா?
சகோதரர் விளக்கம் தரவும்!
ஏகத்துவம் ஜூலை2010
தலையங்கம்
பரிகசிக்கப்படும் பால்குடிச் சட்டம்
சவூதிப் பெண்கள் நீண்ட நாட்களாக இதர வளைகுடா நாடுகளைப் போன்று கார் ஓட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அதற்கு அங்குள்ள ஆலிம்களில் ஒரு சாரார் கூடாது என்று மறுத்து வருகின்றனர். அது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
1. ஹிஜாபைக் களைந்து விடும். கார் ஓட்டும் போது முகத்தைக் காட்ட வேண்டும். இது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் பிறப்பிடம் ஆகும்.
2. பெண்களிடம் வெட்கம் எடுபட்டு விடும்.
3. அடிக்கடி பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவர்.
4. பெண்களிடம் பிடிவாதம் தலைதூக்கும். வீட்டை விட்டு அற்பக் காரணங்களுக்காகக் கூட வெளியேறி விடுவார்கள்.
5. சிக்னல், பெட்ரோல் பங்க், சோதனைச் சாவடி போன்றவற்றில் நிற்பது, விபத்து, போக்குவரத்து விதி மீறலுக்காக காவல்துறையினரிடம் மாட்டுதல் போன்ற நிலை ஏற்படும்.
6. சாலைகளில் நெருக்கடி மேலும் அதிகமாகும்.
7. விலைவாசி உயர்வு, கடன் போன்ற சுமைகள் அதிகரிக்கும்.
8. ஆண்களிடம் உள்ள நிதானம், தூர நோக்கு பெண்களிடம் இருக்காது. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கும்.
9. பெண்களின் குற்றங்கள் அதிகரிப்பதால் அவர்களைக் கண்காணிக்க பெண் காவல் துறை உருவாக்க வேண்டும். பெண் காவலர்களும் முகத்தைக் காட்டியாக வேண்டும்.
10. பெண்களுக்கென்று கார் ஒர்க் ஷாப், வாடகைக் கார் மையம் போன்றவை அமைக்க வேண்டும். இதற்கென பணிப் பெண்களை நியமிக்க வேண்டும். பெண்கள் வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தால் குழப்பங்கள் தோன்ற ஆரம்பித்து விடும். மேற்கத்திய நாடுகளைப் போன்று வீட்டு நலம், குழந்தைகள் நலம் அனைத்தும் பாழாகி விடும்.
11. கணவன் அல்லது பெற்றோர் இருக்கும் போதே தவறுகள் நடக்கின்றன. அதுவும் ஒழுக்கமிக்க பெண்களுக்கே இவ்வாறு நடக்கின்றது. ஒழுக்கக்கேடான பெண்ணாக இருந்து அவள் வெளியே புறப்பட்டால் அதைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
12. தூரமான இடங்களில் கார் பழுதாகி விட்டால் பெண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
13. ஒரு பெண், திருமணம் முடிக்கத் தடையான ஆண் துணையின்றி பயணம் மேற்கொள்வது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு எதிரானது.
இவை அனைத்தும் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கினால் ஏற்படும் குழப்பங்கள் என்று சவூதி மார்க்க அறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துக்களாகும்.
இதற்கு இவர்கள் தரும் தீர்வு, வெளிநாடுகளிலிருந்து ஓட்டுனர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும் என்பது தான்.
அவ்வாறு அமர்த்துகின்ற போது இதை விட அதிகமான பெரும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அந்த டிரைவர்கள், பெண்களைத் தனியாகவே அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. சதாவும் நெருங்கிப் பழக வேண்டியுள்ளது. குடும்பத்தினர் அனைவருடனும் டிரைவர் சர்வ சாதாரணமாகக் கலக்க வேண்டியுள்ளது.
இதற்குத் தீர்வு என்ன?
அந்த டிரைவர்களுக்குத் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுத்து விட வேண்டும் என்று அண்மையில் ஒரு சவூதி மார்க்க அறிஞர் தீர்ப்பளித்திருக்கின்றார்.
சவூதியின் மூத்த அறிஞர்கள் குழு உறுப்பினரும் மன்னரின் ஆலோசகருமான ஷேக் அப்துல் முஹ்சின் பின் நாசர் அல் உபைக் கான் என்பவர் தான் இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
இதற்கு ஆதாரமாக முஸ்லிம் நூலில் இடம் பெறும் ஸாலிமுடைய ஹதீஸை உபைக் கான் கொண்டு வந்திருக்கிறார். (இந்த ஹதீஸ் குறித்த விளக்கத்தைத் தனிக் கட்டுரையில் காண்க!)
இப்படி ஒரு மார்க்கத் தீர்ப்பு வெளியான மாத்திரத்தில், சவூதியிலும் இதர இஸ்லாமிய நாடுகளிலும் இதற்குப் பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பி விட்டன.
இந்தப் பால்குடிச் சட்டம் பரிகாசத்திற்கும், பழிப்பிற்கும் உள்ளாகியிருக்கின்றது. இந்தச் சட்டம் கேள்விக்குரியதாகவும்,கேலிக்குரியதாகவும் மாறியிருக்கின்றது.
பச்சை மழலைகளின் பசி உணர்வைத் தீர்க்கின்ற பால்குடிச் சட்டம், பருவ வயதை அடைந்தவரின் பாலுணர்வுக்குப் பாதை மாற்றப்படுகின்றது என்ற அபாயத்தைப் பாமர மக்கள் இன்று புரியத் துவங்கியிருக்கிறார்கள்.
தாடி வைத்த டிரைவர்கள், தாய்மார்களிடம் பால் கொடுக்குமாறு கேட்கும் கேலிச் சித்திரங்கள் இணைய தளங்களில் வெளியாகின்றன.
சவூதி மற்றும் அரபகத்திலுள்ள பெண்கள் கொதித்துப் போயுள்ளனர். இது தொடர்பாக கல்ஃப் நியூஸ் மற்றும் சில அரபு மொழிப் பத்திரிகைகளில் அப்பெண்கள் அளித்துள்ள பேட்டிகள் இதோ:
"இந்த மார்க்கத் தீர்ப்பு கிண்டலும் கேலிக்கூத்துமாகும். எங்கள் மார்பகங்களை வெளிநாட்டு ஓட்டுனர்களுக்கு அளிக்க வேண்டுமாம்; இது தான் எங்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பா?'' என்று ஃபாத்திமா அஷ்ஷம்மாரி என்ற பெண் குமுறுகின்றார்.
தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு சவூதிப் பெண்மணி, "கார் ஓட்டுவதை இஸ்லாம் எனக்குத் தடை செய்து விட்டு, எனது மார்பகத்தை அந்நியரிடம் பகிர்ந்து கொள்வதற்கு மட்டும் அனுமதிக்கிறதோ?'' என்று கேள்வி எழுப்புகின்றார்.
"எனக்குப் பிறந்த, வயதுக்கு வந்த என் சொந்தப் பிள்ளைகளுக்கு நான் பால் கொடுக்காத போது பிற நாட்டு ஆடவர்களுக்கு நான் பால் கொடுக்க வேண்டுமோ? இது என்ன பைத்தியக்காரத்தனம்?'' என்று அவர் மேலும் கேட்கின்றார்.
"வீட்டில் பணி புரியும் பணிப் பெண்கள், எங்கள் கணவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு இந்த ஃபத்வா பொருந்துமா?இவ்வாறு பால் கொடுப்பதன் மூலம் அனைவருமே சகோதர, சகோதரிகளாக ஆகிவிடலாம் அல்லவா?'' இது இன்னொரு பெண் எழுப்புகின்ற வித்தியாசமான கேள்வி!
ஒரு பெண் ஆசிரியையிடம் அவரது டிரைவர், "எனக்குப் பால் புகட்டுங்கள்' என்று கேட்கின்றார். ஆசிரியை தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியதும், "நான் உங்கள் மகனாக விரும்புகிறேன்' என்று அந்த ஓட்டுனர் பதிலளித்து சாமாளிக்கிறார்.
இவ்வாறு தன் மனைவி சந்தித்த ஒரு மோசமான அனுபவத்தை அவரது கணவர் ஹமீத் அலீ தெரிவிக்கின்றார்.
"தாய்மார்கள் ஓட்டுனர்களுக்குத் தங்கள் கணவன் முன்னிலையில் பாலூட்ட வேண்டுமா? அல்லது தனியாகப் பாலூட்ட வேண்டுமா? ஓட்டுனருக்குப் பாலூட்டும் போது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் கணவன் நுழைந்து விட்டால் கணவனின் கோரத் தாக்குதலிலிருந்து மனைவியை யார் காப்பாற்றுவார்?'' என்று சவூதிப் பெண் எழுத்தாளர் ஒருவர் குத்தலாகக் கேள்விகளைத் தொடுக்கின்றார்.
06.06.2010 மற்றும் 20.06.2010 ஆகிய தேதிகளில் வெளியான அரபுப் பத்திரிகைகளில் மேற்கண்ட பேட்டிகள் வெளியாகியுள்ளன.
அந்த அளவுக்கு இந்த மார்க்கத் தீர்ப்பு படு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்தச் சமயத்தில் தான் ஸாலிமின் ஹதீஸ் பற்றிய பார்வைகள் கண்ணோட்டங்கள், கருத்தோட்டங்கள் வெளியாகத் துவங்கியுள்ளன. இந்தச் சட்டத்தை மனதளவில் ஏற்றுக் கொள்ள முடியாத சவூதி மார்க்க அறிஞர்கள், இந்த ஹதீஸ் அபூஹுதைபாவின் மனைவி ஸஹ்லாவுக்கு மட்டும் உரிய தனிச் சட்டம் என்று குறிப்பிடுகின்றனர்.
ஷைக் அப்துல்லாஹ் பின் பாஸ், ஷைக் ஸாலிஹ் பின் பவ்ஸான் போன்ற அறிஞர்கள் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இது தொடர்பாக மற்றொரு கருத்தும் வெளியாகியுள்ளது.
"ஸாலிமின் ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகியிருக்கின்றது. எனினும், அறிவிப்பாளர் வரிசை சரியாக அமைந்த ஒவ்வொரு ஹதீசும் அதன் கருத்து சரியாக அமைந்தது என்று எடுத்துக் கொள்ள முடியாது''
இவ்வாறு சவூத் பின் அப்துல்லாஹ் அல் குனைஸான் என்ற அறிஞர் இந்த ஹதீஸ் பற்றித் தெரிவிக்கின்றார்.
இந்த நிலைப்பாட்டைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் கொண்டிருக்கின்றது. பி.ஜே. என்ற ஒரு தனி மனிதரின் மீது கொண்ட வெறுப்பு காரணமாக நமது நிலைப்பாட்டைக் குறை கூறும் ஸலபிகள், உமரிகள், மதனிகள் போன்றோர் அரபு நாட்டு மார்க்க அறிஞர்களின் இந்த நிலைப்பாட்டில் குறை காண்பார்களா? இந்த மார்க்க அறிஞர்களுடன் விவாதம் செய்வார்களா? இவர்களுக்கு எதிராக இணைய தளத்திலும், பத்திரிகைகளிலும், பிரச்சாரங்களிலும் போர்க்கொடி தூக்குவார்களா? ஒருபோதும் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அரபு நாட்டு அறிஞர்கள்.
பி.ஜே. சொன்னால் தான் தப்பு. அரபு நாட்டுக்காரன் சொன்னால் தப்பில்லை என்பது தான் இவர்களது கொள்கை. இவர்கள் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் ஹதீஸின் கருத்து குர்ஆனுடன் மோதாமல் இருக்க வேண்டும் என்ற நமது நிலைப்பாட்டை அறிவித்ததால் தான் இந்த ஜமாஅத் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஹதீஸை மறுப்பவர்கள் என்ற முத்திரையும் இதன் மீது குத்தப்படுகின்றது. இதற்கெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் அஞ்சப் போவதில்லை.
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே.
அல்குர்ஆன் 35:28
அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சும் இந்த ஜமாஅத் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஒரு போதும் அஞ்சாது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
பால்குடிச் சட்டம் குறித்த ஸாலிம் ஹதீஸ் தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே ஏகத்துவம் இதழில் வெளியான ஆய்வின் சுருக்கத்தை இந்தச் சமயத்தில் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் தனித் தலைப்பில் வாசகர்களின் பார்வைக்குத் தருகிறோம்.
பருவ வயதினருக்குப் பால் புகட்டுதல்
(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூ ஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன்''என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூ ஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "நீ அவருக்குப் பால் கொடுத்து விடு'' என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் "அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே! அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்?'' என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு "அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 2878
சஹ்லா (ரலி), அவரது கணவர் அபூ ஹுதைஃபா மற்றும் வளர்ப்பு மகன் சாலிம் ஆகிய மூவரும் நெருக்கடியான ஒரே வீட்டில் இருப்பதாகவும் சஹ்லா அவர்கள் முறையாக ஆடை அணியாமல் இருக்கும் போது சாலிம் வரக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் சஹ்லா (ரலி) அவர்கள் முறையிட்டதாக வேறு அறிவிப்புக்களில் வந்துள்ளது.
"பால்குடி உறவு ஏற்படுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை; பருவ வயதை அடைந்த ஆணுக்கு ஒரு பெண் பால் புகட்டினாலும் அந்தப் பெண் அந்த ஆணுக்குத் தாயாக மாறி விடுவாள்' என்ற கருத்தை இந்த ஹதீஸ் தருகிறது.
இந்த ஹதீஸ் குர்ஆனுக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரண்படுவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.
குர்ஆனுடன் முரண்படுகிறது
பால்குடிச் சட்டத்திற்கு, குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடத்தை எல்லையாக அல்லாஹ் நிர்ணயிக்கிறான். இந்த எல்லையைத் தாண்டிய ஒருவர் பால் குடிப்பதால் பால்குடி உறவு ஏற்படாது என்று பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
1. பாலூட்டுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். (அல்குர்ஆன் 2:233)
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர்ஆன் 31:14)
அவனை (மனிதனை) அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். (அல்குர்ஆன் 46:15)
மனிதனை மனித வடிவில் தாய் 6 மாதங்கள் சுமக்கிறாள். அவனுக்குப் பால் புகட்டியது 24 மாதங்கள். அதாவது இரு வருடம். இந்த 6 மாதத்தையும் 24 மாதத்தையும் சேர்த்து 30 மாதங்கள் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
பால்குடியின் காலம் இரண்டு வருடங்கள் தான் என்று மேலுள்ள வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கும் போது, பருவ வயதை அடைந்த சாலிமிற்குப் பால் புகட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் எப்படிச் சொல்லியிருப்பார்கள்?
2. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:30)
ஒரு ஆண் அன்னியப் பெண்ணைப் பார்ப்பதை இஸ்லாம் தடை செய்கிறது. ஆனால் இந்தச் சம்பவத்தில் சஹ்லா (ரலி) அவர்களிடத்தில் சாலிம் பால் குடித்ததாக வந்துள்ளது. பார்ப்பதைக் காட்டிலும் பெண்ணுடைய மறைவிடத்தில் ஆணுடைய வாய் உரசுவது என்பது பன்மடங்கு ஆபாசமானது; அபத்தமானது.
மொத்தத்தில் இஸ்லாமிய ஒழுக்க விதிகளைத் தகர்த்தெறியும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. இதற்குப் பிறகும் சாலிமுடைய சம்பவத்தை உண்மை என்று நம்பினால் மேற்கண்ட வசனம் கூறும் ஒழுங்கு முறையைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வழிவகை செய்தார்கள் என்று நம்ப வேண்டிய நிலை வரும்.
இன்று உலகத்தில் எந்த மதத்தினரும் கடைப் பிடிக்காத ஓர் அற்புதமான வழிமுறையான பர்தாவை இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். பெண்கள் மார்பகத்தை மறைக்க வேண்டும் என்பது இறைக் கட்டளை.
வீட்டுக்கு அதிகமாக வருபவர்களுக்குப் பால் புகட்டி விட்டால் பர்தாவைப் பேண வேண்டிய அவசியம் இல்லை என்று இந்தச் சம்பவம் கூறுகிறது. பர்தா என்ற அழகிய நெறியை ஒழிப்பதற்கு இஸ்லாமிய எதிரிகளால் உருவாக்கப்பட்டதாகத் தான் இச்செய்தி இருக்க முடியும்.
தாயின் பிரிவைத் தாங்காமல் இருப்பதற்கு சாலிம் (ரலி) அவர்கள் ஒன்றும் பச்சிளங்குழந்தை இல்லை. ஆண்கள் விளங்கிக் கொள்ளும் விஷயங்களை விளங்கி, பருவ வயதை அடைந்து, திருமணம் முடித்தவர். இவரால் சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்லாமல் இருக்க முடியாதா?
குர்ஆன் கூறும் அனைத்து விதிகளையும் தளர்த்துவதற்கு அப்படியென்ன நிர்ப்பந்தம் சாலிம் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது? சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே ஒரு தனி வீட்டை உருவாக்கி முறையான அடிப்படையிலே வாழ்ந்திருக்கலாம் அல்லவா?
ஒரு பெண் நம்மிடத்தில் இது போன்ற பிரச்சனையைக் கொண்டு வந்தால் அப்பெண்ணிற்கு, பார்தாவைக் கடைப்பிடிக்கும் படி கூறுவோமே தவிர, ஒரு போதும் அந்த ஆணுக்குப் பால் புகட்டும் படி கூற மாட்டோம். நாம் கூட செய்யாத ஒரு மோசச் செயலை நபியவர்கள் செய்தார்கள் என்று கூறுவது நபி (ஸல்) அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவதாக உள்ளது.
3. அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும் உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:5)
தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் சொந்தக் குழந்தையாக ஆக முடியாது. மாறாக அவர்களைக் கொள்கைச் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அந்நிய ஆணிடத்தில் பேண வேண்டிய வழிமுறைகளை வளர்ப்புப் பிள்ளைகளிடத்திலும் பேண வேண்டும். இக்கருத்தையே இந்த வசனம் கூறுகிறது.
ஆனால் சாலிமுடைய சம்பவம் குர்ஆனுடைய இந்த வசனத்திற்கு எதிராக வளர்ப்புப் பிள்ளையை சொந்தப் பிள்ளையாக மாற்றுவதற்கான தந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறது. அல்லாஹ்வுடைய சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு மாற்று வழியைச் சொல்லித் தருகிறது. இதனால் தான் சாலிமுடைய சம்பவத்தைச் சிலர் சுட்டிக் காட்டி, "ஹராமான ஒன்றை ஹலால் ஆக்குவதற்கான தந்திரங்களைச் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான்' என்று கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்ததே தவிர குர்ஆனில் உள்ள சட்டங்களைத் தளர்த்துவதற்காக அவர்கள் ஒரு போதும் முயற்சித்ததே இல்லை. மேலுள்ள வசனத்தில் இறைவன் கற்றுத் தருகின்ற ஒழுங்கு முறையைச் சீர்குலைத்து அதற்கு மாற்றமான வேறொரு வழியை இச்சம்பவம் கற்றுத் தருவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
மகன் தாயிடத்தில் சாதாரணமாக வந்து செல்வதைப் போல் ஒரு அன்னிய ஆண், அன்னியப் பெண்ணிடம் வந்து போவதற்கான வழியை இந்த ஹதீஸ் கற்றுத் தருகிறது. குர்ஆனுக்கு எதிரான இந்த வழியை நாம் திறந்து விட்டால் இதுவே விபச்சாரம் பெருகுவதற்குக் காரணமாக அமைந்து விடும்.
பருவ வயதை அடைந்த ஆண், பெண்ணிடத்தில் பால் குடித்து விடுவதால் அப்பெண் மீது அவனுக்கோ, அல்லது அவன் மீது அப்பெண்ணுக்கோ ஆசை ஏற்படாது என்று அறிவுள்ளவர்கள் கூற மாட்டார்கள். இந்த வழி ஒழுக்கமுள்ள இளைஞர்களை விபச்சாரத்தின் பால் தள்ளுகின்ற மோசமான வழி.
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் மோதுகிறது
மேலே நாம் எடுத்துக் காட்டிய பல்வேறு குர்ஆன் வசனங்களுடன் இந்த ஹதீஸ் மோதுவதுடன் மட்டுமல்ல! ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களுக்கும் முரணாக அமைந்துள்ளது.
பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் பால்குடி உறவு 2 வருடத்திற்குள் தான் ஏற்படும். அதற்குப் பிறகு குடித்தால் பால்குடி உறவு ஏற்படாது என்ற கருத்தைக் கூறுகின்றன.
1. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஒரு ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறி விட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், "இவர் என் (பால்குடி) சகோதரர்'' என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில் பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளை பால் அருந்தியிருந்தால்) தான்''என்று சொன்னார்கள். (நூல்: புகாரி 5102)
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பசியைப் போக்குவதற்குத் தாயின் பாலே உதவும். இவ்வயதைக் கடந்து விட்ட குழந்தைகள் பால் அல்லாத வேறு உணவுகளை உட்கொள்ளும் நிலையை அடைந்து விடுகின்றன. எனவே பசிக்காகப் பாலருந்தும் பருவம் இரண்டு வருடங்கள் தான்.
தன்னுடைய மனைவியின் அருகில் ஓர் ஆண் அமர்ந்திருப்பதைக் கண்டு நபி (ஸல்) அவர்கள் கோபமடைகிறார்கள். அவர் ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடிச் சகோதரர் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்ன போதும், "உங்கள் பால்குடிச் சகோதரர் யார் என்பதை ஆராய்ந்து பாருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தையைக் கவனிக்க வேண்டும்.
நாம் பால் குடித்த தாயிடம் ஒருவர் பால் குடித்து விடுவதால் அவர் நமது சகோதரனாக ஆகி விட முடியாது. அவர் எப்போது பால் குடித்தார்? இரண்டு வருடத்திற்குள் அவர் குடித்தாரா? அல்லது அதற்குப் பிறகு குடித்தாரா? என்று உற்று நோக்க வேண்டும். இரண்டு வருடத்திற்குள் அவர் குடித்திருந்தால் அவர் நம் சகோதரர். இதற்குப் பிறகு அருந்தியிருந்தால், அல்லது ஒரு சில மிடறுகளைக் குடித்திருப்பதால் அவர் நமது பால்குடிச் சகோதரராக ஆக மாட்டார்.
இந்த வித்தியாசத்தைப் பார்க்காமல் பால் குடித்து விட்டார் என்பதற்காக அவரை நம் சகோதரர் என்று எண்ணி சகோதரனிடத்தில் நடந்து கொள்வதைப் போல் அவரிடத்தில் நடந்து கொள்ளக் கூடாது. இதையே நபி (ஸல்) அவர்கள் தனது மனைவிக்குக் கூறி எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் படி கூறுகிறார்கள்.
2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பால் புகட்டுவது இரண்டு வருடத்திற்குள்ளாகத் தான் இருக்க வேண்டும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தாரகுத்னீ, பாகம்: 10, பக்: 152
3. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்குப் பால் புகட்டுவதினாலேயே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (இவ்வாறு) பால் புகட்டுவது பால்குடிக் காலம் 2 வருடம் (முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: திர்மிதி 1072
இரண்டு வருடத்திற்குள் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்பதை இந்த ஹதீஸ் வெளிப்படையாகத் தெரிவிக்கிறது.
மேற்குறிப்பிட்ட குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் சாலிமுடைய சம்பவம் முரண்படுவதால் இந்தச் சம்பவம் உண்மையல்ல என்றே ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும்.
--
”வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது;அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும்,உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!” என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் ”நாங்கள் முஸ் ம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!”எனக் கூறி விடுங்கள்!
என்ற 3:64 வசனத்தை ரோமாபுரி மன்னர் ஹெர்குலிசுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதியுள்ளார்கள். (பார்க்க புகாரி எண் 7 மற்றும் 4553)
மாற்று மதத்தவர்களும் இவ்வசனங்களைப் படித்துத் திருந்த வேண்டும் என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் வசனத்தை எழுதி அனுப்பினார்கள். தூய்மையற்றவர்கள் குர்ஆனை தொடக் கூடாது, ஓதக் கூடாது என்றிருக்குமானால் நபி (ஸல்) அவர்கள் ஹெர்குலிஸ் மன்னருக்கு எழுதி அனுப்பியிருக்க மாட்டார்கள்.
இதில் சுத்தம் இல்லாவிட்டால், குரானை தொடலாம், ஓதலாம் என்று எங்கு இருகின்றது, அது கடிதம் தான், கடிதத்திற்கு அந்த சட்டம் இல்லை,
நபி (ஸல்) அவர்கள் ஒரு மாற்று மதத்தவருக்கு குர்ஆன் வசனத்தை எழுதி அனுப்புகிறார்கள். அதற்கு என்ன அர்த்தம்? அந்த நபர் அந்த வசனத்தை படித்து திருந்த வேண்டும் என்பதே. ஆனால் அந்த நபர் அந்த கடிதத்தை தொடும் முன், படிக்கும் முன் நம் மார்க்க முறைப்படி சுத்தமாக இருப்பாரா? என்று யாருக்கும் தெரியாது. ஆகவே இந்த ஒரு ஹதீஸே திருக்குரானை சுத்தமில்லாமல் தொடலாம் என்பதற்கும், சுத்தமில்லாமல் ஓதலாம் என்பதற்கும் ஆதாரமாக எடுக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு சகோ முஸ்லீம் அனுப்பிய மின்னஞ்சலை படித்து பார்க்கவும். கடிதத்தில் வேறு விஷயம் எழுதி இருந்தால் கடிதத்திற்கு வேறு சட்டம் என்று சொல்லலாம். ஆனால் கடிதத்தில் இருப்பது குர்ஆன் வசனம். ஆகவே நாம் இதை குர்ஆனை சுத்தமில்லாமல் ஓதலாம் என்பதற்கு ஆதாரமாக எடுக்கலாம்.
உங்களில் கொள்கைகளில் ஒன்றில் உங்களுக்கு ஞானம் இல்லை என்பது உண்மை.
இஸ்லாம் என்னுடைய கொள்கை. நான் அதில் என்றைக்குமே மாணவன். எனக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்று கூறுவதை நான் ஒத்துக் கொள்வேன், கண்ணியக் குறைவாகவோ, கேவலமாகவோ எண்ண மாட்டேன். ஆனால் அதை பற்றி அறிந்திட முயற்சி செய்வேன்.
இந்த குழுமத்தில் நீங்கள் மேற்கூறிய ஹதீஸை விளக்கலாம். என்னை போன்ற நிறைய நபர்கள் தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்.
இப்படி பலமான ஹதீசையும் பின்பற்றுவதில் தெளிவு இல்லாமல் இருந்தால் எப்பிடி பட்ட ஹதீஸை பின் பற்றுவீர்கள்,
நான் நீங்கள் கூறிய ஹதீஸைத்தான் பின்பற்றுகிறேன் என்று எப்போது உங்களிடம் சொன்னேன். நான் யாரையும் எந்த இயக்கத்தையும், எந்த இமாமையும், எந்த மத்ஹபையும் பின்பற்றவில்லை. ஆகவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று யார் சொன்னார்களோ (தவ்ஹீத் ஜமாத்) அவர்களிடம் கேட்க வேண்டியதை என்னிடம் கேட்கிறீர்கள்.
மேலே பிக்ஹு (ஆய்வு) கூடாது என்றவர், பின்னால் ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் இருந்து முரண்பாட்டை காணலாம், குரான் ஹதீஸ் நேரிடையாக பின்பற்ற வேண்டும் என்றால் ஒரு தீர்ப்பு தானே இருக்க வேண்டும். இதில் எது சரி என்று படுகிறதோ அதை ஏற்று கொள்ளுங்கள் என்று சொல்வது முறை இல்லை.
தவறுதலுக்கு மன்னிக்கவும். பிக்ஹு என்று சொன்னது நீங்கள் பின்பற்றும் மத்ஹப் கிதாபுகளையே. குர்ஆன் ஹதீஸை வைத்து செய்யப்படும் ஆய்வை அல்ல. விபரங்களுக்கு சகோ ரோஷன் அவர்களின் மின்னஞ்சலை இனைத்துள்ளேன்.
சகோ ரோஷன் சொன்னது: பிக்ஹு என்று அவர் கூறியது உங்கள் மத்ஹபு சட்ட கிதாபுகளைதான் குரான் ஹதீஸில் கூறப்பட்ட இஜ்திஹாதை அல்ல.குரான் ஹதீஸை நேரிடையாக பின்பற்றினால் ஒரு தீர்ப்பு தான் இருக்கவேண்டும் என்று சொல்வது ஏற்புடய்யதாக இல்லை ஏனென்று சொன்னால். நீங்கள் ஏற்றிருக்கும் இமாம்களிடத்திலும் ஏராளமான கருத்து முரண்பாடுகள் உள்ளது
மேலும் பாத்திஹா வை கிண்டல் செய்து எழுதிஉள்ளார், அவருக்கு வேண்டுமானால் கிண்டலாக தெரியலாம், ஆனால் பாத்திஹா என்பது குரானில் உள்ள முதல் சூரா வை ஓதுவது என்று பொருள் ஆகும், அதை ஓத கூடாது என்று கூறுகின்றரா? அப்படியானால், உங்களின் வீடியோக்களின் ஆரம்பத்திலும் இந்த சூரா ஒதப்படுகிறதே அதற்கு ஆதாரம் என்ன? மேலும் அது பித்அத் என்று வேறு கூறி உள்ளார், குரானின் அத்தியாயம் ஓதுவதற்கு இவர் பித்அத்து என்று கூறுவார் போலும்
இறந்தவுடன் ஆரம்பித்த பாத்திஹா என்னும் இபாதத்
இது நான் எழுதிய மின்னஞ்சலில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றாக கவனிக்க வேண்டும் பாத்திஹா என்னும் இபாதத் என்று எழுதி இருக்கிறேன். எப்படி அந்த இபாதத் உண்டானது. அது ஏன் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லை. பாத்திஹா சூரா ஓதினால் நன்மை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதை மறுப்பவன் முஸ்லீம் இல்லை. நான் அந்து சூராவை மறுக்கவில்லை. ஆனால் நீங்கள் பாத்திஹா என்னும் இபாதத்தை செய்து அதன் பிறகு வரும் கூட்டு துஆவையும் ஓதுகிறீர்கள். அதற்கு என்ன ஆதாரம். எங்கு இருந்து இந்த இபாதத்கள் முளைத்தன. இதற்கும் குர்ஆன், ஹதீஸிர்கும் என்ன சம்பந்தம். இமாம்கள் (நான்கு இமாம்கள் இல்லை) என்ன சொன்னாலும் அது மார்க்கம் ஆகிவிடுமா. ஒரு விருந்து நடக்கிறது. அதில் விருந்து முடிந்தவுடன் கூட்டு துஆ இமாம் ஓதுகிறார். அதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டால் சாப்பாடிற்கு பிறகு ஓதும் துஆவை உதாரணம் காட்டுவீர்களா? 7 வருடம் படித்து விட்டு வந்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா? யாரும் அதை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாதா? கேட்டால் தப்பா? குர்ஆன், ஹதீஸ் இல்லாமல் யார் எந்த சொந்த விஷயத்தை சொன்னாலும் ஏற்க மாட்டோம்.
ஏன் பாத்திஹா என்னும் இபாதத்தில் ஊருக்கு ஊர் மாற்றம் இருக்கிறது என்று கேட்டேன். விளக்கம் தரவும். பாத்திஹா என்னும் இபாததிற்கு ஆதாரம் தரவும். பாத்திஹா சூராவிற்கு அல்ல.
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விஷயத்திற்கு பாத்திஹா என்னும் இபாதத் ஒதினால் கூட இபாதத் என்று இமாம்கள் (நான்கு இமாம்கள் அல்ல) விளக்கம் கூறுவார்கள். ஆனால் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத விஷயத்திற்கெல்லாம் பாத்திஹா என்னும் இபாதத்தை ஓதுகிறார்கள். அது தான் வேதனையாக இருக்கிறது. மாலைக்கும், திருமணத்திற்கும், இஸ்லாத்தில் சம்பந்தமே இல்லை. ஆனால் மாலை போடும் போது பாத்திஹா என்னும் கூட்டு துஆ ஓதுகிறார்கள். இது உதாரணமே. இன்னும் நிறைய இருக்கிறது. விளக்கம் தரவும்.
குரானில் உள்ள ஒரு சூரா வை ஓதுவதற்கு குர்ஆனுக்கும், ஹதீசுக்கும் சம்பத்தமே இல்லையே என்று கூறுகின்றீர்களே, நியாயமா இது,
நான் சொல்லாததை நீங்கள் கூறுகிறீர்கள். பாத்திஹா சூராவை ஓதுவதை நான் தவறு என்று கூறவேயில்லை. பாத்திஹா மற்றும் அதை தொடர்ந்து வரும் கூட்டு துஆவைத்தான் நான் கூறினேன். நான் கூறிய பாத்திஹா மற்றும் அதை தொடர்ந்து வரும் கூட்டு துஆவிற்கு இபாதத் என்று ஆதாரம் தரவும். இபாதத்தை முடிவு செய்யும் உரிமை யாருக்கு உள்ளது என்பது பற்றி விளக்கம் தரவும்.
இம்ரானா விஷயத்தில் தாருல் உலூம் தேவ்பந்த் எந்தவிதமான தீர்ப்பும் வழங்கவில்லை என்று மறுத்துள்ளது. ஆகவே இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன். ஆனால் அப்படி அவர்கள் (தாருல் உலூம் உல்மாக்கள்) தீர்ப்பு வழங்கி இருந்தால் அது கடுமையாக கண்டிக்கத்த்க்காது என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன். உண்மை என்ன என்பதை அல்லாஹ்வே மிகவும் அறிவான்.
பார்க்க : http://www.islamkalvi.com/portal/?p=115
நீங்களே கேள்வியை கேட்டு பதிலையும் சொல்லி விட்டீர்கள். குர்ஆனிலும், ஹதீஸிலும் நேரடியாக ஒரு விஷயம் விளக்காமல் இருந்தால் குர்ஆன், ஹதீஸின் உதவி கொண்டு தான் நாம் முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் கூறிய ஹதீஸில் அந்த பெண்மனி நபி(ஸல்) அவர்கள் இல்லாவிட்டால் தான் அபுபக்கர் (ரலி) அவர்களிடம் கேட்க சொல்லியிருக்கிறார்கள். அபுபக்கர் அவர்களும் அவருடைய சொந்த கருத்தை மார்க்கத்தில் புகுத்த மட்டார்கள், புகுத்தவும் முடியாது. ஜகாத் கொடுப்பதில் நேரடியாக விளக்கம் குர்ஆன், ஹதீஸில் இருந்தால் அதை நாம் நேரடியாக பின்பற்றலாம். நேரடியாக இல்லாத போது நாம் குர்ஆன், ஹதீஸின் உதவி கொண்டு ஆராய்ந்து முடிவு எடுக்கலாம்.
தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும். இதை நான் உங்கள் மேல் உள்ள காழ்ப்புனர்ச்சியின் பேரில் எழுதவில்லை. எனக்கும் உங்களுக்கும் தெளிவு கிடைக்கும் என்ற நோக்கே தவிர வேறில்லை.
தோழமையுடன்
அபு நிஹான்
இது பொது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கூட்டமைப்பு
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en