--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது. ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 21:23)
நபி ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என பைபிள் கூறுகிறது. நபி ஈஸா (அலை) அவர்கள் கொல்லப்படவில்லை, சிலுவையில் அறையப்படவில்லை என அல்குர்ஆன் கூறுகிறது. இரண்டு செய்திகளின் நம்பகத்தன்மையில் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளன.
ஈஸா (அலை) அவர்களின் பிறப்பின் அற்புதம் குறித்தும் இரு வேதங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளன. பாலின சேர்க்கையின்றி இறைவனின் அத்தாட்சியாக நபி ஈஸா பிறந்தார். தொட்டில் பருவத்தில் பேசினார். என்றெல்லாம் ஈஸா நபியின் பிறப்பின் அற்புதங்கள் பற்றி குர்ஆன் கூறுகிறது. முடிவில் - இறுதி நாளின் அத்தாட்சியாக ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் திரும்பப் பூமிக்கு வரவிருக்கிறார் என்பதையும் குர்ஆன், சுன்னா சுட்டிக் காட்டியுள்ளது.
ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு, யூதர்கள் அவரைக் கொலை செய்ய முயலும்போது இறைவன் அவரைக் கைப்பற்றித் தன்னளவில் உயர்த்திக்கொண்டது, இன்னும் அவர் உயிருடன் வாழ்வது, இறுதி நாளின் சமீபத்தில் மீண்டும் பூமிக்கு இறங்கி வந்து வாழ்ந்து மரணிப்பது. இவையெல்லாம் இறைத்தன்மைக்கு மட்டும் உரிய தனிச் செயலாகும். இதற்கான காரணங்கள் என்ன? என்று அவனை யாரும் கேள்வி கேட்க முடியாது!
ஈஸா நபி வானுலகுக்கு உயர்த்தப்பட்டது ஏன்? என்று கிறிஸ்தவர்கள் கேட்பதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும். நபி ஈஸா இறைமகன் என்று அவர்களில் ஒருசாரார் நம்புவதால் மகனைக் காப்பாற்றி இறைவன் தன்னளவில் உயர்த்திக்கொண்டான் என்பதை நிறுவிட இது போன்ற சம்பங்களை சான்றாகக் காட்டுவர். குர்ஆன் மீது நம்பிக்கை கொள்ளாதவர் ஈஸா இறைமகன் என்பதற்கு குர்ஆனிலிருந்து சான்றுகள் தந்தால் அது எவ்வாறு இருக்கும் என்பதை படிப்பவர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுவோம்.
மேலும், ஈஸா நபியின் பிறப்பு மற்றும் வரலாற்றின் காரணம் இன்னதென்றுக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றாலும், நபி ஈஸா (அலை) அவர்களை யூதர்கள் கொன்றுவிட்டனர் என்று சொல்லிவந்தது அப்பட்டமான பொய் என்று குர்ஆன் மறுக்கிறது. இது குறித்து வலைப்பதிவில் சகோதரர்கள் எழுதிய ஒரு பதிவு, அடுத்த அஞ்சலில்!
நபி ஈஸா (அலை) அவர்களின் மரணம்.
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
அன்புச் சகோதரர் இப்னு ஹஸன் அவர்களுக்கு,
அல்குர்ஆன் 19:57வது வசனத்திற்கு நீங்கள் கொடுக்கும் பொருள் தவறானது. சரியான மொழிபெயர்ப்பு:
19:57வது வசனத்தில் ''மகானன்'' என்ற சொல் இடத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல பயன்படுவதுபோல் இலக்கியத்துடன் அந்தஸ்தின் படித் தரங்களுக்கும் குறிப்பிட்டுச் சொல்லலாம். ''அவருக்கென்ன உயர்ந்த இடத்தில் இருக்கிறார்'' என்று ஒருவரைப் பற்றிச் சொன்னால் உயரமான இடத்தில் இருக்கிறார் என்று பொருள் கொள்வதுபோல் அந்தஸ்து, செல்வாக்கு எனும் உயர்ந்த நிலையில் இருக்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.
4:158வது வசனத்தில் ''மகானன்'' என்ற சொல் இடம்பெறாமல், ''அல்லாஹு இலைஹி'' என்ற சொல்லாளப்பட்டிருப்பதால் ''அல்லாஹ் தன் வசம் அவரை உயர்த்திக்கொண்டான்'' - ''Allah raised him (jesus) up unto Himself''
வரும் ஹதீஸைப் பாருங்கள்:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ لِلصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى تَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ ثُمَّ كَبَّرَ فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ فَعَلَ مِثْلَ ذَلِكَ وَإِذَا رَفَعَ مِنْ الرُّكُوعِ فَعَلَ مِثْلَ ذَلِكَ وَلَا يَفْعَلُهُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنْ السُّجُودِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தம்மிரு கைகளையும் தம் தோள்களுக்கு நேராக இருக்கும் வகையில் உயர்த்திய பின் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறுவார்கள். ருகூவுச் செய்ய விரும்பும்போதும், ருகூவிலிருந்து நிமிரும்போதும் அவ்வாறு செய்வார்கள். ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும்போது அவ்வாறு செய்யமாட்டார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல் - முஸ்லிம் 639)
''ரஃபஅ'' என்ற சொல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன. தொழுகையில் கைகளை உயர்த்தவும், ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தவும் என ரஃபஅ என்ற சொல்லுடன் உருவகமாகச் சுட்டுப் பெயர் இணைந்தால் அது உயர்த்தப்பட்டது எனப் பொருள்படும்!
--
நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈசாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன், அவரை மண்ணால் மண்ணால் படைத்து பின் அதற்க்கு (மனிதனாக) "ஆகுக" என்று கூறினான், அவர் அவ்வாறு ஆகிவிட்டார்.( 3 : 59 )
மேலே குறிபிட்டுள்ள வசனத்தின் படி, தந்தையும் தாயும் இல்லாமல் ஆதமை படைக்க அல்லாஹ்வினால் முடியும் என்பதை தெளிவாக அறியலாம். அதை போல ஹவ்வா வையும் எந்த ஒரு பெண்ணின் துணையின்றி ஒரு ஆணிலிருந்து அதாவது ஆதமிலிருந்து படைத்தான். நாம் ஒன்றை மட்டும் நம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு மட்டும் அதிசியம் அல்லே, இந்த உலகத்தில் படைக்க படுகின்ற ஒவ்வொரு உயிரினகளும் அதிசியம்தான். யாரை எப்படி படைக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகின்றானோ அவர்களை அப்படியே படைகின்றான். இது அல்லாஹ்வின் உரிமை இதில் நாம் தலைவிடுவதர்க்கு எந்தவிதத்திலும் உரிமைலில்லை.
(மேலும், மாறியமை நோக்கி) மலக்குகள் "மரியமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உங்களுக்கு (ஒரு குழந்தையை அளிக்க ) நற்செய்தி கூறுகின்றான்" என்றும் அதன் பெயர் மஸிஹ் ஈஸா இப்னு மர்யம்" என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க சிறப்பிற்குரிய வராகவும் (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்" என்றும் கூறினார்கள். அன்றி அவர் தொட்டிலில் (குலதையாக) இருக்கும் பொழுது (தன் தாயின் பரிசுத்தத் தன்மையைப்பற்றியு)ம். (தன் நபித்துவத்தைப்பற்றி) வாலிபத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர நல்லோளுக்கம்முடையோரில் உள்ளவராகவும் இருப்பார் (என்றும் கூறினார்கள்). (அதற்கு மரியம்) " என் இரட்சகனே! எந்த ஒரு மனிதருமே என்னை தீண்டாதிர்க்க எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாகமுடியும்? என்று கூறினார். (அதற்கு)" இவ்வாறே அல்லாஹ் தான் நாடியதைப் படைகின்றான். அவன் ஒரு பொருளை (படைக்க) நாடினால் அதனை 'ஆகுக' என அவன் கூறியவுடனே அது ஆகிவிடும்" என்று கூறினான். (3 : 45 - 49 )
மேலே உள்ள வசனத்திலிருந்து தெளிவாக ஒரு விசயத்தை புரிந்து கொள்ள முடியும் அதாவது அல்லாஹ் ஒரு காரியத்தை செய்ய நாடினால் "ஆகுக" என்ற ஒரு வார்த்தைதான் அது ஆகிவிடும். அதுமட்டும் அல்லாமல் அல்லாஹ் படைத்திருக்கும் முறையை சற்று சிந்தித்து பார்த்தல் அல்லாஹ்வின் வல்லமை நமக்கு புரியும். அதாவது முதன் முதலில் அல்லாஹ் முதல் மனிதரான ஆதமை தாய் தந்தை துணையின்றி படைதான் அதாவது ஆண், பெண் துணையின்றி மண்ணிலிருந்து படைத்தான். அடுத்து ஒரு பெண்ணை, பெண்ணின் துணையின்றி வெறும் ஆணிளிருந்து மட்டும் படைதான் அவர்தான் ஹவ்வா (அலை) . அடுத்ததாக ஏனைய மனிதர்களை ஒரு ஜோடி ஆண் பெண்ணிலிருந்து படைதான். கடைசியாக ஈஸா(அலை) அவர்களை ஒரு ஆணின் துணையின்றி ஒரு பெண்ணிலிருந்து படைதான்.
ஆகா அல்லாஹ் தன்னுடைய ஆற்றலை தனேகே உரிய பாணியில் இந்த மனித சமுதாயத்திற்கு வெளிப்படுத்தியுள்ளான். இவை அனைத்துமே அதிசியம்தான்.
அடுத்து, ஈஸா (அலை)மட்டும் வானுலகம் உயர்தப்பட்டமை ஏன் ? ஏன் ஏனைய நபிமார்களை அல்லாஹ் உயர்த்தவில்லை ? கரணம் என்ன ?
இதற்க்கு எனக்கு தெரிந்த விளக்கம்..
இன்னும் அல்லாஹ்வுடைய தூதர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ்யை, நிச்சயமாக நாங்கள் கொலை செய்து விட்டோம் என்று அவர்கள் கூறியதின் காரணமாகவும் (அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான் ) அவரை அவர்கள் கொல்லவும்மில்லை, அவரை சிலுவையில் அறையவும்மில்லை, அனினும் அவர்களுக்கு (ஈஸாவின் தோற்றத்தை பெற்ற) ஒருவனை ஒப்பாக்(கிக் காண்பிக்)கப்பட்டது. நிச்சயமாக இ(வ்விஷயத்)தில், கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றார்களே அத்தகையோர், அதுபற்றி சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத்தவிர, அதில் அவர்களுக்கு உண்மையான அறிவு (ஆதாரம்) கிடையாது. மேலும் உறுதியாக அவர்கள் அவரை கொலைசெய்யவே இல்லை. மாறாக, அல்லாஹ் அவரைத்தன் அளவில் உயர்த்திக்கொண்டான். இன்னும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாக, தீர்கமான அறிவுடையவனாக இருகின்றான். வேதத்தையுடையவர்களிலிருந்து எவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக, திட்டமாக அவரை விசுவாசிக்காமல் இருப்பதில்லை. இன்னும் மறுமை நாளில் அவர்களுக்கு அவர் பாதகமான சாட்சியாளராக இருப்பார். (4 : 157 - 159 )
மேலும் (ஈஸாவை நிராகரித்த) அவர்கள், அவரைக் கொலை செய்யச்) சதிசெய்தார்கள். (அனினும் அல்லாஹ் அவரை இரட்சித்துகொண்டு, தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செதுவிடும்படி) அல்லாஹ்வும், (அவர்களுக்கு) சதி செய்துவிட்டான். இன்னும் அல்லாஹ், சதிசெய்பவர்களி(ன் சதியை முறியடித்துக் கூளிகொடுப்பவர்களி)ல் மிகச்சிறந்தவன்.(3 : 54 )
(ஈசாவை நோக்கி) " ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மை கைப்பற்றிக் கொள்பவனாகவும், உம்மை என்னளவில் உயர்த்திகொள்பவனாகவும், நிராகரிப்போரி(ன் அவதூறி)லிருந்து உம்மை பரிசுத்தமாகிவைபவனாகவும், உம்மை பின்பற்றுவோரை, நிராகரிப்போர்மீது மறுமை நாள் வரையில் மேலாக ஆக்குபவனாகவும் இருக்கின்றேன். அதன் பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. அப்போது அதில் நீங்கள் மாருப்பட்டவர்களாக இருந்திர்களோ அதில் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்' என்று அல்லாஹ் கூறியதை (நினைவு கூர்விராக!) (3 : 55 )
ஆக அல்லாஹ் ஈஸா(அலை) அவர்களை தன் அளவில் உயர்த்தியதற்கு காரணம் மேலே உள்ள வசனங்களிலிருந்து விளங்கி கொள்ளலாம்.
பெரும்பான்மையான கிறிஸ்துவர்கள் இறை வசனத்தை ஏற்றுகொள்ள மாட்டார்கள் காரணம் குர்ஆன்னை இறைவேதமாக நினைப்பதில்லை அவர்களுடைய வேத புத்தகமே போதும் என்றும் கூறுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுடைய வேத புத்தகத்திலிருந்தே ஈஸா (அலை) அவர்கள் மேலே உயர்த்தப்பட்டதற்கு ஒரு சில வசனங்களை நாம் காட்டலாம்.
லூக்கா 22 : 39 - பின்பு அவர் புறப்பட்டு வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள்.
லூக்கா 22 : 40 - அவ்விடத்தில் சேர்ந்தபொழுது, அவர் அவர்களை நோக்கி நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுகள் என்று சொல்லி,
லூக்கா 22 : 41 அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு.
லூக்கா 22 : 42 - பிதாவே, உமக்கு சித்தமானால் இந்த பாத்திரம் என்னைவிட்டு நீங்கும் படி செய்யும். ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜபம் பண்ணினார்.
லூக்கா 22 : 43 - அபொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரை பலப்டுதினான்.
லூக்கா 22 : 44 - அவர் மிகவும் வியாகுலப்பட்டு அதிக ஊக்கதோடே ஜெபம்பண்ணினார், அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
மத்தேயு 7 : 8 - ஏனென்றால் ,கேட்கின்றவன் எவனும் பெற்றுக்கொல்லுகின்றான், தேடுகின்றவன் கண்டடைகின்றான், தட்டுகின்றவனுக்கு திறக்கப்படும்.
மத்தேயு 7 : 9 - உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தை கேட்கின்ற தன் மகனுக்கு கல்லை கொடுப்பானா?
மத்தேயு 7 : 10 - மீனை கேட்டால் அவனுக்கு பாம்பை கொடுப்பானா?
மத்தேயு 7 : 11 - ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகதிலிருகின்ற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளிக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
ஆக சாதாரன மனிதர்களுக்கே கேட்பதை கொடுக்கின்ற இறைவன் தன்னுடைய தூதர்களின் பிராத்தனையை ஏற்றுகொள்ள போதுமானவன்.
யூதர்களை பொறுத்தவரை ஒரு மனிதனக்கு கேவலமாக, கொடூரமாக தண்டனை கொடுக்கவேண்டும் என்றால் அவனை சிலுவையில் அறைந்து, அவர்களின் மறைவிடங்கள் தெரியும்படி ஒரு சிறு துண்டை ஆடையாக அணிவித்தோ அல்லது அதுகூட இல்லாமல் சிலுவையில் அறைந்து மெது மெதுவாக சாகும் படி செய்வார்கள். இதை யூதர்களின் வரலாற்று குறிப்பில் காணலாம்.
இந்த விளக்கம் தங்களுடைய நண்பருக்கு அளிக்க போதுமானதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வர்ஹ)
மன்னிக்கவும்.. எதோ காரணத்தால் முழு மெசேஜ் பதியவில்லை. விடு பட்டதை தொடர்ந்து இங்கே பதிகின்றேன்.
அடுத்து, ஈஸா (அலை)மட்டும் வானுலகம் உயர்தப்பட்டமை ஏன் ? ஏன் ஏனைய நபிமார்களை அல்லாஹ் உயர்த்தவில்லை ? கரணம் என்ன ?
இதற்க்கு எனக்கு தெரிந்த விளக்கம்..
இன்னும் அல்லாஹ்வுடைய தூதர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ்யை, நிச்சயமாக நாங்கள் கொலை செய்து விட்டோம் என்று அவர்கள் கூறியதின் காரணமாகவும் (அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான் ) அவரை அவர்கள் கொல்லவும்மில்லை, அவரை சிலுவையில் அறையவும்மில்லை, அனினும் அவர்களுக்கு (ஈஸாவின் தோற்றத்தை பெற்ற) ஒருவனை ஒப்பாக்(கிக் காண்பிக்)கப்பட்டது. நிச்சயமாக இ(வ்விஷயத்)தில், கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றார்களே அத்தகையோர், அதுபற்றி சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத்தவிர, அதில் அவர்களுக்கு உண்மையான அறிவு (ஆதாரம்) கிடையாது. மேலும் உறுதியாக அவர்கள் அவரை கொலைசெய்யவே இல்லை. மாறாக, அல்லாஹ் அவரைத்தன் அளவில் உயர்த்திக்கொண்டான். இன்னும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாக, தீர்கமான அறிவுடையவனாக இருகின்றான். வேதத்தையுடையவர்களிலிருந்து எவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக, திட்டமாக அவரை விசுவாசிக்காமல் இருப்பதில்லை. இன்னும் மறுமை நாளில் அவர்களுக்கு அவர் பாதகமான சாட்சியாளராக இருப்பார். (4 : 157 - 159 )
மேலும் (ஈஸாவை நிராகரித்த) அவர்கள், அவரைக் கொலை செய்யச்) சதிசெய்தார்கள். (அனினும் அல்லாஹ் அவரை இரட்சித்துகொண்டு, தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செதுவிடும்படி) அல்லாஹ்வும், (அவர்களுக்கு) சதி செய்துவிட்டான். இன்னும் அல்லாஹ், சதிசெய்பவர்களி(ன் சதியை முறியடித்துக் கூளிகொடுப்பவர்களி)ல் மிகச்சிறந்தவன்.(3 : 54 )
(ஈசாவை நோக்கி) " ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மை கைப்பற்றிக் கொள்பவனாகவும், உம்மை என்னளவில் உயர்த்திகொள்பவனாகவும், நிராகரிப்போரி(ன் அவதூறி)லிருந்து உம்மை பரிசுத்தமாகிவைபவனாகவும், உம்மை பின்பற்றுவோரை, நிராகரிப்போர்மீது மறுமை நாள் வரையில் மேலாக ஆக்குபவனாகவும் இருக்கின்றேன். அதன் பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. அப்போது அதில் நீங்கள் மாருப்பட்டவர்களாக இருந்திர்களோ அதில் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்' என்று அல்லாஹ் கூறியதை (நினைவு கூர்விராக!) (3 : 55 )
ஆக அல்லாஹ் ஈஸா(அலை) அவர்களை தன் அளவில் உயர்த்தியதற்கு காரணம் மேலே உள்ள வசனங்களிலிருந்து விளங்கிகொள்ளலாம்.
பெரும்பான்மையான கிறிஸ்துவர்கள் இறை வசனத்தை ஏற்றுகொள்ள மாட்டார்கள் காரணம் குர்ஆன்னை இறைவேதமாக நினைப்பதில்லை அவர்களுடைய வேத புத்தகமே போதும் என்றும் கூறுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுடைய வேத புத்தகத்திலிருந்தே ஈஸா (அலை) அவர்கள் மேலே உயர்த்தப்பட்டதற்கு ஒரு சில வசனங்களை நாம் காட்டலாம்.
லூக்கா 22 : 39 - பின்பு அவர் புறப்பட்டு வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள்.
லூக்கா 22 : 40 - அவ்விடத்தில் சேர்ந்தபொழுது, அவர் அவர்களை நோக்கி நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜபம்பண்ணுகள் என்று சொல்லி,
லூக்கா 22 : 41 அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு.
லூக்கா 22 : 42 - பிதாவே, உமக்கு சித்தமானால் இந்த பாத்திரம் என்னைவிட்டு நீங்கும் படி செய்யும். ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜபம் பண்ணினார்.
லூக்கா 22 : 43 - அபொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரை பலப்டுதினான்.
லூக்கா 22 : 44 - அவர் மிகவும் வியாகுலப்பட்டு அதிக ஊக்கதோடே ஜெபம்பண்ணினார், அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
மேலே குறிபிட்டுள வேதகாமம் வசனத்தின் படி ஈஸா (அலை) அவர்கள் தனுடைய இறைவனிடத்திலே தன்னை காக்கும் படி அழுது அழுது மன்றாடியுளார்கள். எந்த அளவிற்கு என்றால் தன்னுடைய ஒவ்வொரு வேர்வை துளியும் இரத்த துளிகளாக தரையிலே விழும் அளவிற்கு வேண்டியிள்ளார். கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் , தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும் என்று மத்தேயுலே கூறியுள்ளபடி, அவருடைய பிராத்தனையை அங்கீகரித்துக்கொண்டு அவரை தனளவிலே உயர்திகொண்டான்.
பார்க்க.. மத்தேயு 7 : 7 - கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும்.
மத்தேயு 7 : 8 - ஏனென்றால் ,கேட்கின்றவன் எவனும் பெற்றுக்கொல்லுகின்றான் , தேடுகின்றவன் கண்டடைகின்றான், தட்டுகின்றவனுக்கு திறக்கப்படும்.
மத்தேயு 7 : 9 - உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தை கேட்கின்ற தன் மகனுக்கு கல்லை கொடுப்பானா?
மத்தேயு 7 : 10 - மீனை கேட்டால் அவனுக்கு பாம்பை கொடுப்பானா?
மத்தேயு 7 : 11 - ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகதிலிருகின்ற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளிக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
ஆக சாதாரன மனிதர்களுக்கே கேட்பதை கொடுக்கின்ற இறைவன் தன்னுடைய தூதர்களின் பிராத்தனையை ஏற்றுகொள்ள போதுமானவன்.
யூதர்களை பொறுத்தவரை ஒரு மனிதனக்கு கேவலமாக கொடூரமாக தண்டனை கொடுக்கவேண்டும் என்றால் அவனை சிலுவையில் அறைந்து, அவர்களின் மறைவிடங்கள் தெரியும்படி ஒரு சிறு துண்டை ஆடையாக அணிவித்தோ அல்லது அதுகூட இல்லாமல் சிலுவையில் அறைந்து மெது மெதுவாக சாகும் படி செய்வார்கள். இதை யூதர்களின் வரலாற்று குறிப்பில் காணலாம்.
எந்த இறைவன் இப்ராஹீம் (அலை) அவர்களை நெருப்பு குன்றதிளிருந்து பாதுகாதானோ, எந்த இறைவன் மூஸா(அலை) மற்றும் அவர்களின் சமூகத்தாரை கடலை பிளக்க செய்து பாதுக்காத்தானோ, அதே இறைவன் தான் நபி ஈஸா(அலை) அவர்களை கேவலமான, கொடூரமான கொலையிளிருந்தும் காப்பாற்றினான்.
-சலாம்-
ASIF
அஸ்ஸலாமு அலைக்கும் (வர்ஹ)
மன்னிக்கவும்.. விடு பட்டதை தொடர்ந்து இங்கே பதிகின்றேன்.
மத்தேயு 7 : 10 - மீனை கேட்டால் அவனுக்கு பாம்பை கொடுப்பானா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
அன்புச் சகோதரர் இப்னு ஹஸன் அவர்களுக்கு,
''நான் பிறந்த தினத்திலும், மரணிக்கும் தினத்திலும், உயிருடன் எழுப்பப்படும் தினத்திலும் என் மீது சாந்தி உண்டாகட்டும்!'' (அல்குர்ஆன் 19:33)
وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا
ஈஸா (அலை) அவர்கள் தொட்டில் குழந்தைப் பருவத்தில் பேசிய மேல்கண்ட பிரார்த்தனைப் போன்று, யஹ்யா எனும் பெயர் கொண்ட புதல்வரைப் பற்றி நற்செய்தியை ஸக்கரிய்யா (அலை) அவர்களுக்கு அறிக்கும்போதும், யஹ்யா (அலை) அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் வசனங்களின் வரிசையில் (பார்க்க: 19:1-14வரை) அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
''அவர் பிறந்த தினத்திலும், மரணிக்கும் தினத்திலும், உயிருடன் எழுப்பப்படும் தினத்திலும் அவர் மீது சாந்தி இருக்கும்'' (அல்குர்ஆன் 19:15)
وَسَلَامٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا
1, பிறந்த நாள். 2, இறக்கும் நாள். 3, மீண்டும், உயிர் பெற்று எழும் நாள்.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவருக்கு, இம்மூன்று நாள்களும் வாழ்க்கையில் மிக முக்கியமானவை!
1) தாயின் கருவறையிலிருந்து புதிய உலகுக்கு முதல்முதலில் பிரவேசிக்கும் நாளில், ஷைத்தானின் தீங்குகளிலிருந்து பாதுகாப்பு வேண்டும். 2) பின்னர், இறக்கும் நாளில் கப்ர் எனும் புதிய உலகை முதல்முதலில் சந்திக்கும் நாளில், மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்பு வேண்டும். 3) மீண்டும் உயிர் பெற்று மறுமை எனும் புதிய உலகை முதல் முதலில் சந்திக்கும் நாளில், மறுமையின் வேதனையிலிருந்து பாதுகாப்பு வேண்டும். ஆக, இம்மூன்று முக்கிய நாள்களில் அனைவருக்கும் இறைவனின் சாந்தி வேண்டும்!
''So Peace on him the day he was born, the day that he dies, and the day that he will be raised up to life (again)!'' (19:15)
"So Peace is on me the day I was born, the day that I die, and the day that I shall be raised up to life (again)!" (19:33)
''இறந்த'' என்பது கடந்த காலத்தைக் குறிப்பிடும். உயிருடன் இருப்பவர் ''நான் இறக்கும் நாளில் என் மீது சாந்தியை ஏற்படுத்துவாயாக'' என்றால் இது நிகழ்கால வினையாகும்! நபி ஈஸா குழந்தையாக இருக்கும்போது அவர் வார்த்தை வழியாக -19:33வது- வசனத்தை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான். இனி எதிர்காலத்தில் அவர் மரணிக்க இருக்கிறார். அதனால், 'நான் ''இறக்கும்'' நாளில்' என எதிர்கால வினை கொள்வதே இங்குப் பொறுத்தமாகும்!
''இறைவா! நான் இறந்த நாளில் எனக்கு சாந்தியை ஏற்படுத்துவாயாக'' என்று கேட்பது, நான் இறந்த பின் கேட்பதுபோல் உள்ளது. இது சாத்தியமே இல்லை! ''இறைவா! நான் இறக்கும் நாளில் எனக்கு சாந்தியை அருள்வாயாக!'' என்று கேட்பது, இனிமேல் இறக்கவிருக்கிறேன் என்பதைச் சுட்டுகிறது. மரணித்திற்குப் பின் பார்க்க, கேட்க, பேச, செயல்பட முடியாது!
(குழுமத்தில் தமிழ் ஆசான்கள் இருந்தால் உதவுங்கள்)
--
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்
நபி(ஸல்) அவர்கள் தொழுகையைத் ஆரம்பிக்கும் போதும் ருகூவுக்காகத் தக்பீர் கூறும் போதும் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தம் தோள்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து உயரும்போது 'ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறுவார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இவ்வாறு செய்ய மாட்டார்கள். அறிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் - புகாரி 735)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தம்மிரு கைகளையும் தம் தோள்களுக்கு நேராக இருக்கும் வகையில் உயர்த்திய பின் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறுவார்கள். ருகூவுச் செய்ய விரும்பும்போதும், ருகூவிலிருந்து நிமிரும்போதும் அவ்வாறு செய்வார்கள். ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும்போது அவ்வாறு செய்யமாட்டார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல் - முஸ்லிம் 639)
தொழுகையில் கைகளை உயர்த்தும் கருத்தில், மேல்கண்ட நபிவழி அறிவிப்புகள் பல நபித்தோழர்கள் வழியாக அறிவித்து திர்மிதீ, நஸயீ, அபூதாவுத், அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தொழுகையில் எந்தெந்த நிலைகளில் கைகளை உயர்த்த வேண்டும் என்பதை விளக்கவதோடு, ஒவ்வொரு நிலைக்குச் செல்லும்போதும் ''அல்லாஹு அக்பர்'' என்று தக்பீர் கூறவேண்டும் என்கிற அம்சத்தையும் இணைத்து, தக்பீர் கூறும் எல்லா நிலைகளிலும் கைகளை உயர்த்தக்கூடாது என்பதற்கும் மேல்கண்ட அறிவிப்புகளிலிருந்து விளக்கம் கிடைக்கிறது.
தொழுகையின் துவக்கத்தில் கைகளை உயர்த்திய பின் ஆரம்ப தக்பீர் கூறவேண்டும். பின்னர், அடுத்த நிலை ருகூவுக்குச் செல்லும் முன், கைகளை உயர்த்தி தக்பீர் கூறி ருகூவுக்குச் செல்லவேண்டும். பிறகு ருகூவிலிருந்து நிமிர்ந்து, கைகளை உயர்த்தி 'ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறவேண்டும். ஆக தொழுகையில் இந்த மூன்று நிலைகளுக்குச் செல்லும்போது கைகளை உயர்த்தி, தக்பீரும் கூறவேண்டும்.
To unsubscribe from this group, send email to fromgn+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்
''நபி (ஸல்) அவர்கள் தொழுததுபோல் நான் உங்களுக்குத் தொழுது காட்டுகிறேன்'' என்று கூறி இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தொழுது காட்டினார். அத்தொழுகையில் முதல் தடவையில் தவிர தமது கைகளை உயர்த்தவில்லை! அறிவிப்பவர் அல்கமா (ரஹ்) (நூல் - திர்மிதீ 238)
மேல்கண்ட அறிவிப்பு ஹஸன் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று திர்மிதீ இமாம் குறிப்பிடுகிறார். மேலும் இந்த அறிவிப்பு குறித்து நீண்ட விமர்சனங்கள் உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் துவக்கத்திலும், ருகூவுச் செய்யும்போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போதும் தம் இரு தோள்களுக்கு நேராக வரும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள். இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் உயர்த்த மாட்டார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல் - திர்மிதீ 237)
''கைகளை உயர்த்துவது பற்றிய ஹதீஸ் நிரூபணமாகியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் முதல் தடவை தவிர கைகளை உயர்த்த மாட்டார்கள் என்று இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் நிரூபணமாகவில்லை. என்று அப்துல்லாஹ் பின் அல் முபாரக் குறிப்பிட்டார்'' என்று மேல்கண்ட அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கும் கைகளை உயர்த்துவது சம்பந்தமான ஹதீஸின் குறிப்பில் திர்மிதீ இமாம் பதிவுசெய்துள்ளார்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் துவக்கத்தில் மட்டும் கைகளை உயர்த்தினார்கள் என்று வரும் அறிவிப்பு பலமானதாக இல்லை!
وَمَكَرُواْ وَمَكَرَ اللّهُ وَاللّهُ خَيْرُ الْمَاكِرِينَ
(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான்;. தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். (3:54)
இந்த வசனத்தில் யூதர்கள் ஈஸாவைக் கொல்ல சதி செய்தார்கள் என்று இறைவன் கூறுகிறான். கொலை செய்வதற்காக ஈஸாவை பிடித்தும் விடுகிறார்கள். (யூதர்களின் வாதப்படி சிலுவையிலும் அறையப்படுகிறார்கள்.)
சிலுவையில் அறையப்பட்டது ஈஸாவின் சாயலுக்கு ஒப்பான ஒருவன் என்றால் நிச்சயம் யூதர்களின் சதி வெற்றியடைந்து விடுகின்றது. ஏனெனில் அவர்கள் ஈஸா சாயலில் உள்ள (அவர்கள் பார்வையில் அவன்தான் ஈஸா)வையே சிலுவையில் அறைந்துக் கொள்கிறார்கள். ஈஸாவை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள் சிலுவையில் அறைந்துக் கொண்று விட்டார்கள். அதாவது அவர்கள் என்ன சதி செய்தார்களோ அந்த சதி நிறைவேறி விட்டது. அல்லாஹ்வும் சதி செய்தான் என்பதற்கு எந்த வித வலுவும் இல்லாமல் போய் விடுகின்து. (அதாவது ஈஸாவின் சாயலில் ஒருவன் ஒப்பாக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வி்ன் சதிக்கு எந்த வித அர்த்தமும் இல்லை. உருவ அமைப்பில் ஈஸாவாக இருக்கும் ஒருவரை கொல்வதே யூதர்களின் திட்டம் அவர்களின் திட்டம் நிறைவேறி விட்டது. பிறகு அல்லாஹ்வின் சதி என்பது இங்கு எவ்வாறு நடந்தது என்பதை புரிய முடியவில்லை.
ஈஸாவின் சாயலை ஒருவனுக்கு கொடுத்து விட்டு ஈஸாவை அல்லாஹ் உயர்த்தி இருந்தால் அதனால் யூதர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அவர்களின் தேடி வந்த ஈஸா (அதாவது ஒப்பாக்கப்பட்டவர்) கிடைத்து விட்டார். இப்படி நடந்திருந்தால் அந்தக் காலத்திலிருந்த யூதர்களுக்கு அல்லாஹ்வின் சதி என்னவென்று விளங்காமலே போயிருக்கும்.
எனவே شُبِّهَ لَهُمْ (ஷுப்பிஹ லஹும்) என்பதற்கு ஈஸாவைப் போன்று ஒருவன் ஒப்பாக்கப்பட்டான் என்று பொருள் கொள்ளவே முடியாது.
மட்டுமின்றி அவ்வாறு பொருள் கொள்ளக் கூடாது என்பதை அந்த வசனத்தின் பிற்பகுதி நமக்கு உணர்த்துகின்றது.
وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُواْ فِيهِ لَفِي شَكٍّ مِّنْهُ
இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது.
ஈஸாவின் தோற்றத்தில் உள்ள ஒருவரை அவர்கள் சிலுவையில் அறைந்திருந்தால் பிறகு அவர்களுக்கு சந்தேகம் வர வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். ஆனால் அல்லாஹ் இங்கு யூதர்கள் சந்தேகத்தில் இருந்ததாக சொல்கிறான். அவர்கள் சந்தேகப்படும் படியான ஒரு சம்பவம் தான் அன்றைக்கு நிகழ்ந்ததே தவிர ஈஸா உருவ அமைப்பு உள்ள யாரையும் அவர்கள் சிலுவையில் அறையவில்லை என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும்.
தாய் தந்தை மற்றும் தாய் வழிச் சகோதரர்கள், தந்தை வழிச் சகோதரர்களின் சாயலும், உருவ ஒற்றுமையும் பிள்ளைகளிடம் ஏற்படும்.
****************************
''இவ்வாறு (பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம்) ஏற்படுமா?'' என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''ஆம் பிறகு எப்படி (தாயின்) சாயல் ஏற்படுகிறது? ஆணின் நீர் (விந்து) வெள்ளை நிறத்தில் கெட்டியானதாய் இருக்கும். பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறத்தில் இளகலானதாய் இருக்கும். இவ்விரு (வரின்) நீரில் எது மோலோங்கி விடுகிறதோ, அல்லது முந்திக்கொண்டு விடுகிறதோ அந்தச் சாயலில்தான் குழந்தை பிறக்கிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 521)
أَنَّهَا سَأَلَتْ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْمَرْأَةِ تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَتْ ذَلِكِ الْمَرْأَةُ فَلْتَغْتَسِلْ فَقَالَتْ أُمُّ سُلَيْمٍ وَاسْتَحْيَيْتُ مِنْ ذَلِكَ قَالَتْ وَهَلْ يَكُونُ هَذَا فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ فَمِنْ أَيْنَ يَكُونُ الشَّبَهُ إِنَّ مَاءَ الرَّجُلِ غَلِيظٌ أَبْيَضُ وَمَاءَ الْمَرْأَةِ رَقِيقٌ أَصْفَرُ فَمِنْ أَيِّهِمَا عَلَا أَوْ سَبَقَ يَكُونُ مِنْهُ الشَّبَهُ
******************
''உனது கை மண்ணைக் கவ்வட்டும்! பிறகு எப்படி அவளது சாயலில் குழந்தை பிறக்கிறது?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 523)
و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ
جَاءَتْ أَمُّ سُلَيْمٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي مِنْ الْحَقِّ فَهَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا احْتَلَمَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ إِذَا رَأَتْ الْمَاءَ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ وَتَحْتَلِمُ الْمَرْأَةُ فَقَالَ تَرِبَتْ يَدَاكِ فَبِمَ يُشْبِهُهَا وَلَدُهَا
************************
...''அவரை விட்டுவிடு! (தாய்க்கும் சேய்க்குமிடையே) இதை முன்னிட்டு உருவ ஒற்றுமை ஏற்படுகிறது. பெண்ணுடைய நீர் (கருமுட்டை) ஆணுடைய நீரை (விந்தணுவை) விட மேலோங்கி விட்டால் குழந்தை தன் தாயின் சகோதரர்களது சாயலில் பிறக்கிறது. ஆணுடைய நீர் பெண்ணுடைய நீரைவிட மேலோங்கி விட்டால் அது தன் தந்தையின் சகோதரர்களது சாயலில் பிறக்கிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 524)
َأَنَّ امْرَأَةً قَالَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ تَغْتَسِلُ الْمَرْأَةُ إِذَا احْتَلَمَتْ وَأَبْصَرَتْ الْمَاءَ فَقَالَ نَعَمْ فَقَالَتْ لَهَا عَائِشَةُ تَرِبَتْ يَدَاكِ وَأُلَّتْ قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعِيهَا وَهَلْ يَكُونُ الشَّبَهُ إِلَّا مِنْ قِبَلِ ذَلِكِ إِذَا عَلَا مَاؤُهَا مَاءَ الرَّجُلِ أَشْبَهَ الْوَلَدُ أَخْوَالَهُ وَإِذَا عَلَا مَاءُ الرَّجُلِ مَاءَهَا أَشْبَهَ أَعْمَامَه
********************
தாய் தந்தை வழி இரத்த உறவில்லாமலும், ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் போல் மிக நெருக்கமான சாயலில் - தோற்றத்தில் - இருப்பதும் இயல்பு:
.''அங்கு மர்யமின் மைந்தர் ஈஸா அவர்களும் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் மனிதர்களிலேயே உர்வா பின் மஸ்வூத் அஸ்ஸகஃபி அவர்களுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள்.
**********************
நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே தஜ்ஜாலை நினைவுகூர்ந்தார்கள் ...
4:157வது வசனத்தில் இடம்பெற்றுள்ள ''ஷுப்பஹு'' என்பதற்கு ''சாயல் - உருவ ஒற்றுமை'' என்பதைத் தவிர வேறு பொருள் கொள்ளாமல், இந்த வசனத்தில் கூறப்படும் மற்ற விபரங்களையும் இதற்கு முரண்படாமலும் விளங்க வேண்டும்.
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
--
அன்புச் சகோதரர் இப்னு ஹஸன் அவர்களுக்கு
ஈஸா (அலை) அவர்கள் வானுலகுக்கு உயர்த்தப்பட்ட 4:157வது வசனம் தொடர்பாக இப்னு கஃதீர் விளக்கவுரையில் சொல்லப்பட்டு, நீங்கள் இங்கு எழுதியுள்ள ஆதாரங்கள் யாவும் நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளில் பதிவு செய்யப்பட்டதல்ல! என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
மேலும், நபி ஈஸா (அலை) அவர்களின் சாயலை ஒரு நிரபராதிக்கு ஏற்படுத்தி அவரை ஆட்சியாளர்களின் பார்வையில் குற்றவாளியாக்கி தண்டனைக்குள்ளாக்குவது இறை நியதிக்கு எதிரானது. இறைத் தன்மைக்கும் மாற்றமானது!