குத்தகை இஸ்லாத்தில் கூடுமா

334 views
Skip to first unread message

seenimohamed safeer

unread,
Sep 23, 2009, 3:07:39 AM9/23/09
to fro...@googlegroups.com
அஸ்லாமு அழைக்கும் 


எனிடம் ஒருநபர் வந்து அவரிடம் நெல் காணி இரண்டு ஏகர் உள்ளதாம் அதனை எடுத்து என்ன செய்யடுமாம்( உபயோகிகடுமாம்)அவருக்கு ஒரு லெச்சம் பணம் தேவை படுகிறதாம் அதனை(பணத்தை) எனிடம் இருந்து
அவர் தொழில் ஒன்று ஆரம்பிக்க போறாராம் இனி அவர் எப்போது என் பணத்தை திருப்பி தருகிறாரோ அப்போது அவரின் நெல் காணியை தந்தாள் போதுமாம் என்று சொல்கிறார் இதனை குத்தகை என்று என்னுடைய ஊரில் சொல்வார்கள் என்னுடைய கேள்வி இப்படி நான் பணம் கொடுத்து எடுத்து அந்த நெல் காணிய செய்வது இஸ்லாத்தில் கூடுமா தயவு செய்து எனக்கு குர்ஆன்,ஹதீஸ் இருந்து பதில் தரவும்



muslim

unread,
Sep 23, 2009, 5:30:54 AM9/23/09
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்

முதலில் குத்தகைக்கும்

, ஈட்டுக் கடனுக்கும் உள்ள வேறுபாடினை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குத்தகை என்பது ஒருவர் தமக்கு உரிமையான நிலத்தை இன்னொருவருக்கு பயிரிடக் கொடுத்து அதன் மொத்த விளைச்சலில் நிலத்தின் உரிமையாளருக்கு பாதி - அல்லது விரும்பிய ஒப்பந்தம் அடிப்படையில் - உழைத்தவருக்குப் பாதியும் எனப் பிரித்து பங்கு வைத்துக்கொள்வது குத்தகையாகும்!

ஈட்டுக் கடன் என்பது கடன் கொடுப்பவர் கடன் தொகைக்கு ஈடாக நிலம்

, வீடு, பொருள் போன்றவற்றை கடனுக்கு உத்தரவாதமாக கடன் பெறுபவரிடமிருந்து பெற்றுக்கொண்டு கடன் கொடுப்பதாகும். இது அடைமானம்.
குத்தகையை இஸ்லாம் அனுமதித்துள்ளது
.

நான் தாவூஸ்(ரஹ்) அவர்களிடம், '(விளைச்சலில் ஒரு பகுதியைப் பெற்றுக் கொண்டு) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நீங்கள்விட்டுவிட்டால் நன்றாயிருக்கும். ஏனென்றால், நபி(ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட வேண்டாமென்று மக்களைத் தடுத்தார்கள் என்று சிலர் எண்ணுகிறார்கள்" என்றேன். இதைக்கேட்ட தாவூஸ்(ரஹ்) (என்னிடம்) சொன்னார்கள்: அம்ரே! (என்னுடைய நிலத்தை அவர்களுக்குக் குத்தகைக்கு விடுவதால்) அவர்களுக்கு நிலத்தைக் கொடுத்து நான் உதவுகிறேன். ஏனெனில், 'நபி(ஸல்) அவர்கள் அதைத் தடை செய்யவில்லை. மாறாக, 'உங்களில் ஒருவர் தன் நிலத்தைக் குத்தகைக்குவிட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட குத்தகைத் தொகையை வாங்கிக் கொள்வதை விட, தன் சகோதரனுக்கு (இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் படி அதைக்) கொடுத்து விடுவது சிறந்ததாகும்' என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று மக்களில் பேரறிஞரான இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம் தெரிவித்தார்கள். (புகாரி, 2330)

நபி

(ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோது அந்தப் பகுதியில் உள்ள நிலங்கள் இஸ்லாமிய அரசுக்கு உரிமையானதாக ஆனது.. அப்போது கைபர் வாசிகளாகிய யூதர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நிபந்தனையின் பெயரில் நிலங்களை யூதர்களுக்கு அன்றைய இஸ்லாமிய அரசு குத்தகைக்கு விட்டது.

உமர் இப்னு கத்தாப்

(ரலி) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் ஹிஜாஸ் மாநிலத்திலிருந்து நாடு கடத்திவிட்டார்கள். இறைத்தூதர் கைபர் பிரதேசத்தை வெற்றி கொண்டபோது (அங்கிருந்த) யூதர்களை நாடு கடத்திட விரும்பினார்கள். (ஏனெனில்,) அந்தப் பிரசேத்தை வெற்றி கொண்டபோது அந்தப் பகுதியிலிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாம் விட்டிருந்தது. (அந்த நிலையில்) யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம், 'நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலில் 'பாதியைப் பெற்றுக் கொள்கிறோம். (மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்தி விடுகிறோம்)" என்று கேட்டுக் கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒப்புக் கொண்ட இந்த நிபந்தனையின் (நிலக் குத்தகை ஒப்பந்தத்தின்) அடிப்படையில் நாம் விரும்பும் வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம்" என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி), தம் ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை தைமா, அரீஹா, (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும் வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயிரிட்டு வரி செலுத்தி) வசித்து வந்தார்கள். (புகாரி 2338)

ஈட்டுப் பொருள்கள் பெற்றுக்கொண்டு கடன் கொடுப்பதை அடைமானம் என்று சொல்வார்கள்

. நபி (ஸல்) அவர்கள் தமது இரும்புக் கவசத்தை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்து கோதுமை வாங்கியுள்ளார்கள்.

முப்பது

'ஸாவு' வாற்கோதுமைக்குப் பகரமாகத் தம் இரும்புக் கவசத்தை யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்படடிருந்த நிலையில் நபி(ஸல) அவர்கள் இறந்தார்கள்.
(புகாரி 4467)

அடைமானத்தை கடனுக்குப் பிணைப்பொருள் என்று சொல்லலாம்

. வாங்கும் கடனுக்கு ஈடாக வீடு, நிலம், பொருள் என்று அடைமானப் பொருளைப் பெற்றவர் உபயோகப்படுத்துவது அவர் கொடுத்தத் தொகைக்கு மேலதிகமாகப் பெற்றுக்கொள்கிறார் என்ற வகையைச்சாரும் என்பதால் அடைமானப் பொருளை சொந்தமாக உபயோகித்து லாபம் பெறுவது வட்டியாகும் என்பதால் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒரு லட்சம் ரூபாய் கடனுக்குப் பிணையாக நிலத்தின் தற்காலிக உரிமையை அடைமானமாக கடன் கொடுப்பவர் பெற்றுக் கொள்ளலாம்

. கடன் பெற்றவர் பணத்தைத் திரும்பத் தரும்போது நிலத்தை மீண்டும் அவர் உரிமைக்குக் கொடுத்து விடவேண்டும். இதற்கிடையில் கடன் கொடுத்தவர் அந்த நிலத்தில் எதுவும் லாபம் ஈட்டினால் அது கொடுத்த கடனுக்கு வட்டி வாங்கியதாகும்

கடனுக்குப் பிணையாக ஆடு

, மாடு போன்ற உயிரினங்களும் அடைமானம் வைக்கலாம். அப்படி உயிரினங்கள் அடைமானம் வைக்கப்பட்டால் அதைப் பராமரிக்கும் பொறுப்பு அடைமானம் பெற்றவருக்கு உண்டு. பராமரிப்புச் செலவுக்குப் பகரமாக கால்நடைகளிலிருந்து பால், சாணம் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். உழவுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எழுதியவற்றில் மேலும் சந்தேகம் இருப்பின் எழுதவும்

.

(

அல்லாஹ் மிக அறிந்தவன்)

muslim

unread,
Sep 23, 2009, 1:27:56 PM9/23/09
to fro...@googlegroups.com

//அஸ்லாமு அழைக்கும்

அன்புள்ள சகோதரே நீங்கள் அளித்த பதிலில் எனக்கு சின்ன சந்தேசம் எனவேன்றல் என்னுடைய பணம் ஒரு லேட்சத்தை வாங்குபவர் எனது பணத்தை கொண்டு தொழில் செய்வதுகாகத்தான் அவர் வாங்குகின்றார் எனவே நான் கேட்பது என்ன வென்றால் நான் கடனாக கொடுக்கலே மாறாக எனது பணத்தை கொண்டு அவர் தொழில் செய்கிறார் அதேபோல அவர் மனம் விரும்பி  தந்த அவரது நெல் காணிய  நான் உபயோகிக்கலாமா? என்னுடைய பணத்தை கொண்டு அவர் தொழில் செய்து லாபம் பெறுகிறார் தானே அந்த லாபத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை  அதேபோல நானும் அவரின் நெட் காணிய உபயோகித்து அவருக்கு எந்த லாபம் மும் கொடுக்காமல் நான் மட்டும் லாபம்  அடைந்தால் அது வட்டியாகுமா? மேலும் எப்போது அவர் பணத்தை திருப்பி தருகிறாரோ அப்போது நான் அவரின் காணிய திருப்பி கொடுப்பேன் இது வட்டி யாகுமா?தயவு செய்து எனது கேள்விக்கு உடன் பதில் தரவும் உங்களின் பதிலுக்கு அப்புறம் தான் நான் அவருக்கு முடிவு சொல்வேன்// - சீனி முஹம்மது சஃபீர்.
 
பதில்:-

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்

அன்புச் சகோதரர் சீனி முஹம்மது சஃபீர் அவர்களே,

பணம் கொடுத்துத் திரும்பப் பெறுவதையே கடன் என்று சொல்லுவோம். இஸ்லாமும் அதையே கடன் என்று நிர்ணயித்துள்ளது. நீங்கள் தொழில் செய்யக் கொடுத்தாலும் தூரப் போடக் கொடுத்தாலும் அது கடன்தான். எனவே கடனுக்கு வேறு சாயம் பூசக்கூடாது.

எப்போது கொடுத்த பணத்தை திரும்பத் தரவேண்டும் என்று முடிவானதோ அது தெளிவான கடன். அந்தக் கடனுக்குப் பிணையாக அவர் உங்களிடம் நிலத்தை அடைமானம் வைக்கிறார். அவர் பணத்தைத் தந்து விட்டால் அவருடைய நிலத்தை நீங்கள் திரும்ப கொடுத்து விடவேண்டும் இதுதான் நிபந்தனை.

உங்களிடம் வாங்கிய ஒரு லட்சம் ரூபாயில் தொழில் நடத்துபவர் லாபம் அடைந்தால் அதில் உங்களுக்குப் பங்கில்லை என்பது போல் அவர் நஷடமடைந்தால் அதிலும் உங்களுக்குப் பங்கில்லை. அவர் நஷ்டமடைந்தாலும் உங்களுக்குச் சேர வேண்டிய ஒரு லட்சம் ரூபாயை அவர் உங்களுக்கு தந்து விடவேண்டும்.

லாபத்திலும் பங்கில்லை, நஷ்டத்திலும் பங்கில்லை என்றால் நீங்கள் கொடுப்பது கடன் என்பதை விளங்கி,  அடைமானம் கடனுக்கு இஸ்லாமில் என்ன சட்டமோ அதையே ஆதாரங்களுடன் எழுதியுள்ளோம்.

என் பணத்தில அவர் லாபம் அடைகிறார். அதனால் அவர் நிலத்தில் நான் லாபம் அடைவது நியாயம்தானே என்று வட்டிக்கு லாபம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டால் இஸ்லாமின் பார்வையில் அது வட்டி இல்லை என்றாகிவிடாது கவனத்தில் கொள்ளுங்கள்!  
 
***************  
 
(குறிப்பு: தனித் தனி இழையில் பதிவு செய்யாமல் ஒரு கேள்விக்கான சந்தேகங்களை ஒரே இழையில் பதிவு செய்யுங்கள் நன்றி! )
Reply all
Reply to author
Forward
0 new messages