பொருள்: பரங்கிப்பேட்டையையும், சுற்று வட்டாரத்தையும் காப்பாற்ற...

30 views
Skip to first unread message

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
May 25, 2021, 1:54:45 AM5/25/21
to thiruma...@gmail.com, chandra...@gmail.com


குவைத் 20/05/2021

பெறுநர்:      மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,

 தலைமைச் செயலகம், தமிழ்நாடு.

 

அனுப்புநர்: பரங்கிப்பேட்டை அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ

பொதுச் செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

தலைவர், குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA)

கவுரவத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), பரங்கிப்பேட்டை

 +965 9787 2482 | +91 999 410 6594 | abka...@gmail.com | abka...@yahoo.com

 

நகல்:

·         மாவட்ட ஆட்சியர் அவர்கள், கடலூர் மாவட்டம்

·         மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறை, தமிழ்நாடு அரசு

·         திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, தமிழ்நாடு அரசு

·         சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாடு துறை, தமிழ்நாடு அரசு

·         பேரிடர் மேலாண்மைத் துறை, தமிழ்நாடு அரசு

·         ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு அரசு

·         சமூக நலத் துறை, தமிழ்நாடு அரசு

·         சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை, தமிழ்நாடு அரசு

·         இணை இயக்குநர், சுகாதார துறை, கடலூர்

·         துணை இயக்கநர், சுகாதாரப் பணிகள், கடலுர்

·         திட்ட இயக்குநர் / கூடுதல் இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கடலூர்

·         பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், கடலூர்

·         சட்டமன்ற உறுப்பினர், சிதம்பரம் தொகுதி

·         பாராளுமன்ற உறுப்பினர், சிதம்பரம் தொகுதி

·         வட்டாட்சியர், புவனகிரி வட்டம்

·         செயல் அலுவலா், பரங்கிப்பேட்டை பேரூராட்சி

·         தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை, பரங்கிப்பேட்டை

·         தலைவர், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்

 

பொருள்: பரங்கிப்பேட்டையையும், சுற்று வட்டாரத்தையும் காப்பாற்ற...

 

மதிப்பிற்குரிய ஐயா,

 

ந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸின் உருமாற்றம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உலக சுகாதார மையமும் கவலை தெரிவித்துள்ளது. மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல்களுக்கு இடையே மத்திய,  மாநில அரசுகள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

புதிதாக கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறையாமல் இருப்பது வேதனையளிக்கிறது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளை தமிழ்நாடு எதிர்கொண்டு வருகிறது.

அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கொரேனாவால் பாதிக்கப்படுபவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் சிகிச்சை அதிகம் தேவைப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை வேண்டி மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அங்கும் அவர்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது.

பொதுமக்கள் கொரோனா வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்காமல் இருப்பதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதில் கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுக்கா, பரங்கிப்பேட்டை பேரூராட்சியும், அதன் சுற்று வட்டாரமும் விதிவிலக்கல்ல.

எனவே,

·         அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சிறப்புக் குழுக்களை அமைத்து ஊர் முழுவதும் உஷார் படுத்தப்பட வேண்டும்.

·         அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் உதவியுடன் வீடு வீடாக மீண்டும் பரிசோதனை, கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். முழு வீச்சில் அதற்கான பணிகள் நடத்தப்பட வேண்டும். அங்கு மக்களுக்கு முகக்கவசங்கள், கையுறைகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்

·         தடுப்பூசி செலுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சிதம்பரம் தொகுதி சட்டமன்ற,  பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்களையும் இணைத்து உருவாக்கப்படும் சிறப்புக் குழுக்கள் அதை கண்காணிக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

·         கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் ரெம்டெசிவர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய மருந்துகள், ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர் மற்றும் படுக்கைகள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.

·         பரங்கிப்பேட்டையிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகளை அதிகரிக்கும் வகையில் தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை வளாகங்கள் ஆகியவற்றை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற வேண்டும். குறிப்பாக பரங்கிப்பேட்டை அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயராய்வு மைய மாணவ, மாணவியர் விடுதிகள், அகரம் சேவாமந்திர் பள்ளி விடுதிகள், சி.முட்லூர் கலைக்கல்லூரி விடுதிகள், புயல் பாதுகாப்பு தங்குமிடம், அனைத்து மத வணக்க வழிபாட்டுத் தலங்கள் உட்பட பரங்கிப்பேட்டைக்கு அருகிலுள்ள அனைத்து கல்வி வளாகங்களையும் பயன்படுத்த வேண்டும்.

·         கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சித்த, யூனானி மருத்துவ முறையும் கையாளப்பட்டு, சித்த, யூனானி மருத்துவமனைகளை விரிவாக்கம் செய்திடும் வகையில் பரங்கிப்பேட்டையில் சித்த, யூனானி மருத்துவமனை திறக்க வேண்டும்.

·         முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். ஊரடங்கு காலங்களில் பொதுவெளியில் ஊர் சுற்றும் அனைவரையும் பிடித்து காவல்துறையினர் கடுமையாக தண்டனை கொடுக்க வேண்டும்.

·         கடந்த பதினைந்து நாட்களாக பரங்கிப்பேட்டையிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளன. அவை இயற்கை மரணமா? கொரோனா மரணமா? என சரியான தகவல் இல்லாமல் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே, இது குறித்தும் அரசு சரியான நடவடிக்கை எடுத்து மக்களின் அச்சத்தை களைய வேண்டும்.

எனவே, இந்த பெருந்தொற்றை விரட்டியடிப்பதற்கு தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவோம் என்ற உறுதிமொழியுடன் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மேற்கண்ட எங்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றி மக்களை காப்பாற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். நன்றி.

வெளிநாடு வாழ் பரங்கிப்பேட்டை மக்களின் சார்பாக....

அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ

"என்.கே.என். மன்ஜில்", 13/15, ஆற்றங்கரைக் கிழக்குத் தெரு,

பரங்கிப்பேட்டை -608502, கடலூர் மாவட்டம்.

 


--------------------------------------
கருத்து முரண்பாடுகளை களைவோம்! களமிறங்கி செயலாற்ற ஒன்றிணைவோம்!!
சமூகப் பிணிகளை நீக்குவதே நம் சமூகப் பணிகளாக இருக்கட்டும்!!!

குவைத்திலிருந்து...
ங்கிப்பேட்டை கலீல் பாகவீ

அலைபேசி  / வாட்ஸ்அப் / வைபர் /  டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ  : (+965) 9787 2482
முகநூல் (Facebook): 
http://www.facebook.com/khaleelbaaqavee
ட்விட்டர்
 (Twitter): 
https://twitter.com/abkaleel
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic 

யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group

நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live

ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) : www.youtube.com/user/Ktic12
பரங்கிப்பேட்டையையும் சுற்று வட்டாரத்தையும் காப்பாற்ற.._.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages