பெண்கள் கால்களை மறைக்க வேண்டுமா?

321 views
Skip to first unread message

hamee

unread,
Feb 6, 2010, 1:36:26 AM2/6/10
to நமக்குள் இஸ்லாம்
அஸ்ஸலாமு அலைக்கும்,

அரபு நாடுகளில் பெண்கள் தரைஐ கூட்டும் அளவிற்கு பர்தா அணிகிறார்கள்.
அவர்களிடம கேட்டால் நாம் கால்களை மறைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
(நான் ஒரு ஹதீஸில் தரயில் இழுபடுமாறு உடை அணிவதை இறைவன் வெறுக்கிறான்
என்று படித்த ஞாபகம் தெளுவு படுத்தவும் ) தொழுகையிலும் கால்கள் மறைக்க
வேண்டுமா? socks போன்று நாம் ஏதாவது அணிந்து கொண்டு தான் தொழுக
வேண்டுமா? விளக்கம் தரவும்!

muslim

unread,
Feb 6, 2010, 11:08:39 AM2/6/10
to fro...@googlegroups.com

''ஆடையை (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல்கள் - புகாரி 5783, 5791. முஸ்லிம் 4233. திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, முஅத்தா)

"தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டு செல்கிறவனை அல்லாஹ் மறுமையில் ஏறிட்டும் பார்க்க மாட்டான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி), 'நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கி விடுகிறது" என்று கூறினார்கள். அதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் அதைத் தற்பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே" என்று கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல் - புகாரி 3665)

பெருமைக்காக தரையில் இழுத்துச் செல்லும்படி ஆடை அணியக்கூடாது. என்றே நபி (ஸல்) அவர்கள் தடைசெய்கிறார்கள். தற்பெருமை எண்ணமின்றி தானாக ஆடை சரிந்து தரையில் இழுபடுமானால் அது குற்றமில்லை! இது குறித்து மேலதிகமாக ''முஸ்லிம் பெண் முகம் மறைத்தல்'' என்ற இழையில் ஆடை சம்பந்தமாக பதிவு செய்யவிருக்கும் விளக்கத்தைப் படியுங்கள்!

பெண்கள் பாதங்களை மறைத்திட வேண்டும்.

''யார் தமது ஆடையை பெருமைக்காக தரையில் படுமாறு அணிகிறாரோ அவரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க பார்க்க மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, ''பெண்கள் தங்கள் கீழாடைகளை எப்படி அணிவது?'' என்று உம்முஸலாமா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு, ''ஒரு ஜான் இறக்கிக்கொள்ளலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அப்படியானால் அவர்கள் பாதம் வெளிப்படுமே'' என்று உம்முஸலமா (ரலி அவர்கள் கேட்டார்கள். ''அப்படியானால் ஒரு முழம் இறக்கிக் கொள்ளலாம் அதைவிட அதிகமாகக் கூடாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல்கள் - திர்மிதீ, நஸயீ)

பெண்கள் பொது இடங்களுக்கு வரும் சந்தர்ப்பத்தில் பாதங்களை மறைத்திட வேண்டும். ஆடை தரையில் படும்படி அணிந்தால் தான் பாதங்கள் வெளிப்படாது என்பதால் பெண்கள் தரையில் படும்படி ஆடை அணியலாம். காலுறை அணிந்தும் பாதங்களை மறைத்துக் கொள்ளலாம்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)

2010/2/6 hamee <hameet...@gmail.com>

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

hameetha begum

unread,
Feb 7, 2010, 3:29:13 AM2/7/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் ,
 
மிகவும் நன்றி ! அல்லா கிருபை செய்வானாக!
 
தொழுகும் பொழுதும் பெண்கள் கால்களை மறைக்க வேண்டுமா?
 
விளக்கம் தரவும்!


2010/2/6 muslim <tomu...@gmail.com>

ibnuh...@mail.com

unread,
Feb 7, 2010, 9:21:38 PM2/7/10
to fro...@googlegroups.com
SALAAM .....
சகோ, முஸ்லிம், அவர்களுக்கு,
 
பாதத்தையும் மறைக்கணும் என்று நீங்கள் இந்த ஹதீஸ்
படி கூருகின்றீக்கள்....
>>>>>>பெண்கள் பாதங்களை மறைத்திட வேண்டும்.
''யார் தமது ஆடையை பெருமைக்காக தரையில் படுமாறு அணிகிறாரோ அவரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க பார்க்க மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, ''பெண்கள் தங்கள்  கீழாடைகளை எப்படி அணிவது?'' என்று உம்முஸலாமா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு, ''ஒரு ஜான் இறக்கிக்கொள்ளலாம்'' என்று நபி   அவர் கள்  கூறினார்கள். ''அப்படியானால் அவர்கள் பாதம் வெளிப்படுமே'' என்று உம்முஸலமா  அவர்கள் கேட்டார்கள். ''அப்படியானால் ஒரு முழம் இறக்கிக் கொள்ளலாம் அதைவிட அதிகமாகக் கூடாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்<<<<<
இங்கு  கேள்வி என்னவெனில், .....
ஒரு ஜான் ஒரு முழம் இறக்கணும்  எனில்,  6 , 7 ம , நூற்றாண்டுகளில்,     பெண்கள் காலில் எதுவரை , உடை அணிந்திருந்தார்கள் .?
ஒரு மனிதன் ஆணோ பெண்ணோ, கரண்டை காலில் இருந்து , ஒரு சான் இறக்கி உடுத்தாலே நடந்து போக முடியாது.... தடக்கி விழுந்து விடுவான் .ஒரு முழம் இறக்கினால் எப்படி நடக்க முடியும்....  ?? மேலும், இப்படி போகும்போது, வீதியில் உள்ள நஜீச்கள்,  குப்பைகள் எல்லாம் வாரி இழுத்து கொண்டு போக வேண்டி  வருமே, பலபேர் மத்தியில்  நடந்து அவர்கள் மேல் இடறி விழ வேண்டி வருமே...இந்த ஹதீஸ் இன் படி பதில்  கொஞ்சமும் லாஜிக் , நடை முறைசாத்தியம்   இல்லையே....... 
 
மேலும்....... 24 ;31  படி,.....அதில் இருந்து சாதரணமாக , அவசியமாக தெரிவதை தவிர , என்று இறைவன் கூறும்போது, அதில் பாதம் (foot )  சேர்ந்து விடும் அல்லவா?
இறைவன் , பெண்களின் சில அங்கங்களை மறைக்க சொன்ன ஒரே ஒரு காரணம்........ ஒழுக்கம் MODESTY பேணுவது என்ற அடிப்படய்ல்தான் என்பது , அந்த வசனங்களை ஆழமாக சிந்திக்கும்போது விளங்குகின் றது... அதனால்தான் மார்பு பகுதியை மூட சொல்கின் றான்.. ...
இந்த கட்டளை வரும்போது...மற்ற முக்கிய கவர்ச்சியான அனைத்தும் கவுரவமாக பெண்கள் மூடி இருந்தததை வரலாறுகள் தெளிவாக்குகின்றன. ஏன் தலை, முகம் கூட , தன உயர் குல அந்தஸ்தை காட்ட. பெண்கள் மூடி உள்ளனர்...  இதன் அடிப்படையில், அந்த நேரம், கால் பாதங்கள், கைகள், முகம் இவை சாதரணமாக வெளியில் தெரிந்தே அவர்கள் உடை அணிந்தனர்...... இந்த கால கட்டத்தில்தான் இந்த வசனம் இறங்கியுள் ளதே .....எனவே 
இந்த வசனம் இறங்கும்போது , பெண்களின் அங்கங்களில் சாதரணமாக தெரிந்துள்ளதை இங்கு இறைவன் குறிப்பிடுகின்றான் என்பது தெளிவாகின்றதே....
 
தெளிவாக்குங்கள்..........மேலும் நீங்கள் எழுதியது..
.>>>>>காலுறை அணிந்தும் பாதங்களை மறைத்துக் கொள்ளலாம்<<<<.
பொதுவாக பெண்கள் உடை பத்வா கொடுப்ப வர்கள் , ..... பெண்கள் ஒருபோதும் உடலை ஒட்டியவாறு  எந்த உடுப்பும் அணியக்கூடாது ..... என்றே தீர்ப்பு கூறுகின்றனர்.....
அப்படி எனில்....... கால் பாதம் என்பது ஒரு உடல் அங்கம்.... அதை மட்டும் எப்படி சொக்ஸ் கொண்டு இறுக்கமாக , ஒட்டியபடி அணிய முடியும்??
இதே மாதிரி, ஹிஜாப் என்று அணிபவர்கள் கூட , தலை மண்டை ஓடு தெரியுமோ என கூறுமளவுக்கு தலையை ஒட்டியபடி மிக இறுக்கமாக மூடி கட்டுகின்றார்களே....  இதை யார் அனுமதித்தது??
 
ஆய்வில் தவறு இருப்பின்  தெளிவாக்குங்கள்..........
 
 
 

muslim

unread,
Feb 7, 2010, 11:09:13 PM2/7/10
to fro...@googlegroups.com

//கரண்டை காலில் இருந்து , ஒரு சான் இறக்கி உடுத்தாலே நடந்து போக முடியாது.... தடக்கி விழுந்து விடுவான் .ஒரு முழம் இறக்கினால் எப்படி நடக்க முடியும்.... ??//

கரண்டைக் காலிலிருந்து... என்ற விளக்கம் எதிலிருந்து பெற்றீர்கள்?

2010/2/8 <ibnuh...@mail.com>
--

hameetha begum

unread,
Feb 8, 2010, 1:34:41 AM2/8/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்,
 
சகோதரர் இப்னு ஹசன் சொல்வது போல் உடை தரையில்  பட்டு நஜிசாகி விட்டால் வெளியே செல்லும் பொழுது தொழுவது சிரமாமிகின்றது.. தெளிவாக விளக்கம் தந்தால் அனைவருக்கும் நன்மையாக இருக்கும்.


2010/2/8 muslim <tomu...@gmail.com>

Aero Travels

unread,
Feb 8, 2010, 2:49:45 AM2/8/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்
>>>>>>பெண்கள் பாதங்களை மறைத்திட வேண்டும்.
''யார் தமது ஆடையை பெருமைக்காக தரையில் படுமாறு அணிகிறாரோ அவரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க பார்க்க மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, ''பெண்கள் தங்கள்  கீழாடைகளை எப்படி அணிவது?'' என்று உம்முஸலாமா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு, ''ஒரு ஜான் இறக்கிக்கொள்ளலாம்'' என்று நபி   அவர் கள்  கூறினார்கள். ''அப்படியானால் அவர்கள் பாதம் வெளிப்படுமே'' என்று உம்முஸலமா  அவர்கள் கேட்டார்கள். ''அப்படியானால் ஒரு முழம் இறக்கிக் கொள்ளலாம் அதைவிட அதிகமாகக் கூடாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்<<<<<


மேற்கண்ட ஹதீஸை வைத்து விளங்கும் சமயத்தில் நபியவர்களின் காலத்தில் உள்ள பெண்கள் முட்டுகால்வரை மறைத்துதான் உடை அணிந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.  எனவே தான் நபியவர்கள் ஒரு ஜான் அளவிற்கோள ஒரு முழம் அளவிற்கோ இறக்கிக்கொள்ளட்டும் என கூறுகிறார்கள்.  அதை தான் சகோதரர் இப்னு ஹஸன் அவர்கள் புரியாமல் கரண்டை கால்களுக்கு கீழ் ஒரு ஜான் இறக்கினால் தடுக்கிவிழ வேண்டுமே என தவறாக புரிந்துள்ளார்கள்.  எனவே கால் பாதங்களை மறைப்பது என்பது இந்த ஹதீஸின் மூலம் உறுதிப்படுத்த முடியாது என்பது புரியமுடிகிறது.

மேலும் இங்கு பாதம் என மொழி பெயர்க்கப்ட்டுள்ளது கால்கள் என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது. மேலும் அதற்கு மேல் கூடாது என்பது ஒரு ஜான் அளவிற்கு இறக்கிய பின் கால்கள் தெரிந்தாலும் பரவாயில்லை என்பதைத்தான் இந்த ஹதீஸ் விளக்குகிறது.

இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி

muslim

unread,
Feb 8, 2010, 5:46:20 AM2/8/10
to fro...@googlegroups.com

''நான் கீழாடையை நீளமாக அணிந்துள்ள பெண்ணாக இருக்கிறேன். அசுத்தமான இடங்களில் நான் நடந்து வருகிறேன்'' என்று உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் கேட்டேன். ''அசுத்தமான இடங்களை அடுத்து வருகின்ற (சுத்தமான) இடம் அந்த அசுத்தத்தை தூய்மைப்படுத்திவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு ஸலாமா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் அடிமைப் பெண். (நூல்கள். அபூதாவுத் 326. திர்மிதீ 133. அஹ்மத். இப்னுமாஜா)

பள்ளிக்குச் செல்லும் நமது தெரு அசுத்தமாக உள்ளது, மழை பெய்து விட்டால் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'தெருவின் அசுத்தமான பகுதியை அடுத்து சுத்தமான பகுதி இருக்கிறதா இல்லையா?' என்று கேட்டார்கள். 'ஏனில்லை' என்று அவர் பதில் சொன்னார். 'ஒன்று மற்றதை சரிசெய்து விடும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் பனி அப்து அஸ்ஹல் குலத்தைச் சேர்ந்த பெண்மணி. (நூல் - அபூதாவூத் 327)

செருப்பணிந்து கொண்டு ஒருவர் அசுத்தமான இடத்தை கடக்க நேர்ந்தால் மண் அதை சுத்தப்படுத்திவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் - அபூதாவுத் 328)

இதேக் கருத்து அன்னை ஆயிஷா (ரலி) அவர்களாலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழாடை அசுத்தமான இடங்களில் பட்டு, பின்னர் தூய்மையான இடங்களில் படும்போது ஆடை தூய்மையாகிவிடும். மண் தூய்மைப்படுத்தக்கூடியது என்று வேறு அறிவிப்புகள் உள்ளன.


2010/2/8 hameetha begum <hameet...@gmail.com>

muslim

unread,
Feb 8, 2010, 5:57:33 AM2/8/10
to fro...@googlegroups.com

கீழாடையை ஒரு ஜான், பின்னர் ஒரு முழம் இறக்கிக்கொள்ளலாம் என்பது கால்களுடன் பாதங்களும் மறைக்கப்பட வேண்டும் என்பதையே முக்கியத்துவப்படுத்துகிறது.

கேள்வியின் நோக்கம் பாதங்களும் மறைக்கப்பட வேண்டும் என்பதுதான்.

''அதைவிட அதிகமாகக் கூடாது'' என்பது மிகவும் நீளமாக தரையில் இழுத்துக்கொண்டு நடக்காமல் நடுநிலையாக இருக்கவேண்டும் எனபதையேக் குறிப்பிடுகின்றது என்பது எமது புரிதல்!


2010/2/8 Aero Travels <eru...@gmail.com>

ibnuh...@mail.com

unread,
Feb 8, 2010, 12:48:13 PM2/8/10
to fro...@googlegroups.com
 
சகோ, முஸ்லிம் அவர்கள்,...
... நீங்கள்தான் இந்த ஹதீஸ் முன்வைத்துள்ளீர்கள்.... எனவே நீங்கள் தான் சொல்ல வேண்டும்.....அந்த காலத்தில், அதுவும் மதீனாவில்,  கால்களின் எந்தளவு வரை  ,பெண்கள் உடுத்தார்கள் என்று..... அதன் பின்தான், சாண், 
முழம் இறக்குவதை பற்றி ஆராய வேண்டும்..    இங்கு,   நினைவில் வைக்க வேண்டியது., மதீனாவில் அஹ்லுல் கிதாப் பெண்களும்  ஒழுக்கத்தில்   உயர்ந்த அன்னை மர்யம் அவர்களை பின்பற்றிய பெண்களும்  வாழந்தார்கள் ..இந்த பெணகள் எவ்வளவு  ஒழுக்கமாக உடுத்தார்கள் இவர்களுட னேயே மற்று பெண்களும் வாழ்ந்தார்கள் என்பதை  கருத்தில் கொண்டு  தெளிவாக்குங்கள்......
 
அதே நேரம் சிராஜ் ஏர்வாடி கூறுகிறார்.... >>>>நபியவர்களின் காலத்தில் உள்ள பெண்கள் முட்டுகால்வரை மறைத்துதான் உடை அணிந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது<<<<<
 
அதாவது பெண்கள் ,  பாவாடை SKIRT  ,அணிந்துள்ளார்கள்   .....இப்படி மதீனாவில் பெண்கள் முழங்காலுக்கு கீழ் தன  கால்களின் அழகு தெரிய  உடை உடுத்தார்கள் என்பதை கற்பனை பண்ணவே முடியாதுள்ளது....... . சகோ, சிராஜ் , இதற்கு , இந்த ஹதீஸ் ஐ விட்டு ,  எதாவது ஒரு வரலாற்று ஆதாரம் தந்தால் தொடர்ந்த ஆய்வுக்கு உதவியாக இருக்கும்......
 
இது அராபிய பெண்கள், 06 , 07   நூன்றாண்டு....  File:PLATE8CX.jpg
 
பைசாந்திய  பெண்கள் 06 நூன்றாண்டு  ......
4.jpg (281774 bytes)
சுமார் 450  வருசங்கள் முன்னர் , கிறிஸ்தவ பெண்கள் உடை.......
 

 ஒரு மனிதனின் முழங்க்காளுக்கும் , கரண்டைககும் இடையில் உள்ள நீளம் அவரவரின் கை சாணின் 02  மடங்கே.......
 அப்படி எனில், சகோ..சிராஜ் சொல்வது போல் , அன்று பெண்கள் , SKIRT பாவாடை   ( இது பொதுவாக பெண்கள் முழங்கால்  வரையே உடுப்பார்கள்.. இது 20ம நூற்றாண்டின்  கடைசி பகுதியில் உருவான கெட்ட கலாச்சார பெண்களின் உடுப்பு என்பதையும்  கருத்தில் கொள்ள வேண்டும். )  அணிந்துள்ளார்கள் .. இது உண்மையானால் , ( வரலாற்று ஆதாரம் தேவை ).,
 
ஒரு சான் இறக்கினால், காலின் நடுப்பகுதியில் இருந்து மற்றவை தெரியும்.. ஆனால் இங்கு , அவர்,  ஹதீஸில் , சாண்இறக்கினால் பாதம் தெரியுமே ..என்று கூறுகிறார்.  , ஆனால் , உண்மையில் , ஒரு முழம் இறக்கினால்தான் பாதம் தெரியும்....,
மறுதலையாக் முழங்காலுக்கு ஒரு சாண் கீழ்  அளவுள்ள தூரத்தில் உடுத்திருந்தா  ஒரு சான் இறக்கினால் பாதம் தெரியும் என்று கூறலாம்.. ஒரு முழம் இறக்கினால் , நடக்கவே முடியாது..... 
எனவே.., இந்த ஹதீஸ்களின் கருத்து தெளிவில்லை... இது தெளிவாக விளங்க., அன்று பெண்கள் எந்தளவு நீளமாக ,உடுத்திருந்தார்கள் என்பது நிரூபிக்கப்பட வேண்டும்..
 பெண்கள் பாதம் மூடணும் என்றால்.  தெளிவாக விளக்குங்கள்....
 
 
 
 
 
Reply all
Reply to author
Forward
0 new messages