நபிமொழி

2 views
Skip to first unread message

Mohamed Aslam

unread,
Nov 12, 2009, 12:53:32 AM11/12/09
to fro...@googlegroups.com



அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
 
'நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள்! (பொருளை வாங்கும் எண்ணமில்லாமல்)  பொருளின் விலையை ஏற்றி விடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் கோபப்படாதீர்கள். புறக்கணிக்காதீர்கள். குறை பேசிக் கொள்ளாதீர்கள். உங்களில் ஒருவர், இன்னொருவார் வாங்கும் பொருளை விலை பேச வேண்டாம். நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களாக சகோதரர்களாக ஆகி விடுங்கள். ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான்.
அவனுக்கு இவன் அநீதம் செய்யமாட்டான். அவனை இழிவுபடுத்திடமாட்டான். அவனுக்கு உதவி செய்வதை விட்டு விடமாட்டான். இறையச்சம் இங்கே உள்ளது'' என்று கூறி தன் நெஞ்சை மூன்று முறை சுட்டிக் காட்டிய நபி(ஸல்) அவர்கள், ''ஒருவனின் தீமையை கணக்கிடுவதில் முஸ்லிமான தன் சகோதரனை இழிவுபடுத்துவதும் அமையும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இன்னொரு முஸ்லிம் மீது அவனது ரத்தம், அவனது சொத்து,
அவனது கண்ணியம் விலக்கப்பட்டதாகும்'' என்றும்   நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)             (ரியாளுஸ்ஸாலிஹீன்: 235)
 
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
 
 ''தனக்கு விரும்பியதை தன் சகோதரனுக்கும் விரும்பும் வரை உங்களில் ஒருவர் இறைவிசுவாசியாக ஆக மாட்டார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 236)
 
அனஸ் (ரலி)  அறிவிக்கின்றார்கள்:
 
'உன் சகோதரன் அநீதம் இழைப்பவனாயினும், அல்லது அநீதம் செய்யப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவி செய் என்று நபி(ஸல்) கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அநீதம் செய்யப்பட்டவனுக்கு நான் உதவி செய்வேன். அநீதம் இழைப்பவனாக இருந்தால் அவனுக்கு எப்படி உதவுவேன்? ஏன்று ஒருவர் கேட்டார். ''அநீதம் செய்வதிலிருந்து அவரை நீக்கு! அதுவே அவருக்கு உதவி செய்வதாகும் என்று  நபி(ஸல்)
கூறினார்கள்.(புகாரி)                              (ரியாளுஸ்ஸாலிஹீன்: 237)
 
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: புகாரி,முஸ்லிம்)
 
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''







Reply all
Reply to author
Forward
0 new messages