சுலைமான்(سليمان) நபி [தாவூது நபியின்] மகனாவார்கள். அவர்கள் இறைவனிடம்
ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அது 'எவரும் அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை
எனக்கு நீ வழங்குவாயாக!' என்பது தான் அந்த கோரிக்கை.
அதன்படி அல்லாஹ் அவருக்கு மிகப்பெரும் அரசாங்கத்தை வழங்கினான்.
பளிங்குகளிலான மாளிகையை அமைத்து வாழ்ந்தார்கள்.
அவர்கள் மனிதர்களை கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும் ஜின்களையும்
பறவைகளையும் கட்டுப்படுத்தக் கூடியவர்களாவும் இருந்தார்கள். [பறவைகளின்
மொழியை] அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்.
மேலும் காற்றையும் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான். அந்தக் காற்று
அவர்களைச் சுமந்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு கொண்டு செல்லும்.
கட்டிடங்களை கட்டும் ஜின்களையும் முத்துக் குளிக்கும் ஜின்களையும்
அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.
click to continue ===>> http://www.hakkem.blogspot.com