| Message moderation | |
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
கட்டுரை எழுதுவதற்காக ஆயிரம் தடவைக்கும் மேலாக ''தலாக்'' என்று எழுதியிருப்போம். அதுபோல் குர்ஆனை ஓதுபவர்கள் தலாக் என்ற சொல்லை பல தடவைகள் ஓதியிருப்பார்கள். பிரச்சாரம் செய்யும் மேடைப் பேச்சாளர்களும் பல நூறு தடவை தலாக் என்ற வார்த்தையைப் பேசியிருப்பார்கள். இவர்களின் மனைவிமார்களின் கதி என்னாவாது!
சாதாரணமாக மனைவிக்கு கடிதம் எழுதும்போது அல்லது sms அனுப்பும்போது பொதுவாக தலாக் என்று எழுதினாலெல்லாம் தலாக் ஆகிவிடாது!
//மனைவி இருக்கும்போதே ,ஒருவர் உனக்கு மனைவி இருக்கின்றாளா என்று கேட்டால், தனக்கு மனைவி இல்லை என்று கூறினாலும் தலாக் ஆகிவிடும்.//
எகிப்து மன்னனிடம் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது மனைவி சாராவுடன் சென்றபோது சாராவைத் தமது சகோதரி என்று கூறுகிறார். அப்பவும் தலாக் நிகழவில்லை. பின்னர் கணவன் மனைவியாக சேர்ந்தே வாழ்ந்தனர்.
//ரசூலுல்லாஹ் அவர்கள் , ஒரு பெண்ணை மணமுடிக்க போனபோது , அப்பெண் தான் மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்த நிலையிலும், " நான் உங்களை கண்டு பயப்படுகிறேன் " என்று தூதர் அவர்களை பார்த்து கூறினால்...உடனே தூதர் அவர்கள் , இந்த பெண் தன்னை விரும்பவில்லை என அறிந்து, அவ்விடத்திலேயே தலாக் கூறி விட்டார்கள்.......( ஆதாரம் எதுவும் கூறவில்லை )//
இந்தச் செய்தி மட்டும் ஓரளவு உண்மை. இது குறித்து புகாரி நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன! (அதுவும் சர்ச்சைக்குள்ளானது)
மற்றவைக்கு அவரிடமே ஆதாரம் கேட்கவேண்டும்.
| அஸ்ஸலாமு அலைக்கும் திருமணமே செய்யாத ஒருவரை தலாக் சொல்ல முடியுமா?
இன்னாரை திருமணம் செய்ய விருப்பமில்லை என்று சொல்லலாம், ஆனால் திருமணமே முடிக்காத போது எப்படி சொல்ல முடியும்?
தலாக் என்பதற்கே விலக்குதல் / விலகுதல் என்று தானே பொருள், இணையவே இல்லை என்கின்ற போது எப்படி விலகுவது?
கேள்வியில் தவறு இருந்தால் அல்லாஹ் மன்னிப்பானாக!
அறிந்தவர்கள் விளக்கவும் --- On Sat, 17/4/10, muslim <tomu...@gmail.com> wrote: |
| அஸ்ஸலாமு அலைக்கும் |
//ரசூலுல்லாஹ் அவர்கள் , ஒரு பெண்ணை மணமுடிக்க போனபோது , அப்பெண் தான் மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்த நிலையிலும், " நான் உங்களை கண்டு பயப்படுகிறேன் " என்று தூதர் அவர்களை பார்த்து கூறினால்...உடனே தூதர் அவர்கள் , இந்த பெண் தன்னை விரும்பவில்லை என அறிந்து, அவ்விடத்திலேயே தலாக் கூறி விட்டார்கள்.......( ஆதாரம் எதுவும் கூறவில்லை )// |
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
திருமணம் செய்யாமல் தலாக் இல்லை! மணமுடித்தவரைத்தான் தலாக் சொல்ல முடியும்!
//ரசூலுல்லாஹ் அவர்கள் , ஒரு பெண்ணை மணமுடிக்க போனபோது , அப்பெண் தான் மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்த நிலையிலும், " நான் உங்களை கண்டு பயப்படுகிறேன் " என்று தூதர் அவர்களை பார்த்து கூறினால்...உடனே தூதர் அவர்கள் , இந்த பெண் தன்னை விரும்பவில்லை என அறிந்து, அவ்விடத்திலேயே தலாக் கூறி விட்டார்கள்.......( ஆதாரம் எதுவும் கூறவில்லை )//
மேலேக் குறிப்பிட்டுள்ள சம்பவம் தவறான செய்தியாகும். ''ரஸுலல்லாஹ் அவர்கள் ஒரு பெண்ணை மணமுடிக்க போனபோது'' என்று எழுதியிருப்பது பயானில் சொல்லப்பட்டதா? அல்லது கேட்டு விளங்கியதில் பிழையுள்ளதா? என்று தெரியவில்லை. ஆனால் இதையொட்டிய சம்பவம் புகாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணை மணமுடித்து அவருடன் தம்பத்திய உறவுக்காக நெருங்கியபோது அப்பெண் மறுத்துவிட்டார். 'உங்களிடத்திலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' எனக் கூறினார் என்று அறிவிப்புகளில் உள்ளன. இதனால் அப்பெண்ணை அவரது குடும்பத்தாருடன் சேர்த்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இமாம் புகாரி அவர்கள், இந்த சம்பத்தை தலாக் பாடத்தில் பதிவுசெய்துள்ளார்.
அறிவிப்புகள்:
பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5254
அப்துர்ரஹ்மான் இப்னு அல் அவ்ஸாயீ(ரஹ்) அறிவித்தார்
நான் முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸ¤ஹரீ(ரஹ்) அவர்களிடம், '(நபி(ஸல்) அவர்களிடம்) 'நான் தங்களிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று அவர்களின் துணைவியரில் யார் கூறியது?' எனக் கேட்டேன். அதற்கு ஸ¤ஹ்ரீ(ரஹ்) ஆயிஷா(ரலி) எடுத்துரைத்தபடி உர்வா(ரஹ்) அறிவித்த (பின்வரும்) ஹதீஸைக் கூறினார்கள்.
அல்ஜவ்ன் குலத்துப் பெண் ஒருவரை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (திருமணத்திற்குப் பின் தாம்பத்திய உறவிற்காக) உள்ளே அனுப்பியபோது அவரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நெருங்கினார்கள். அப்போது அவர், 'உங்களிடத்திலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'மகத்துவமிக்க (இறை)வனிடம் நீ பாதுகாப்புக் கோரிவிட்டாய்! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றுவிடு!' என்று கூறிவிட்டார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
***********************************
பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255
அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்.
***************************************
பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5256
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), அபூ உசைத்(ரலி) ஆகியோர் கூறினார்கள்
நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அளித்திடுமாறும் அபூ உசைத்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
...இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நபி (ஸல்) அவர்களுக்கு மொத்தம் எத்தனை மனைவிகள்.
விளக்கம் அளிக்கவும்.
இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி