கற்பக விருட்சம் விருது பெற்றார் கலீல் பாகவீ
கிருஷ்ணகிரி கற்பக விருட்சம் மாத இதழின்
5ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சாதனையார்களுக்கு விருது வழங்கும் விழாவில் கற்பக விருட்சம் சாதனையார் விருது
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீக்கு வழங்கப்பட்டது.
கற்பக விருட்சம் மாத இதழின்
5ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சாதனையார்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (05.01.2020)
மாலை கிருஷ்ணகிரி மீனாட்சி மஹாலில் நடைபெற்றது. இதில் இளம் எழுத்தாளர்கள்,
சாதனையாளர்கள்,
கவிஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கு கற்பக விருட்சம் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கப்பட்டன.
குவைத்திலும்,
தமிழகத்திலும் சமூக,
சமய,கல்வி,மொழி,
கலை,
இலக்கிய,
ஊடக,
அரசியல் அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டுவரும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ அவர்களுக்கு "பல்துறைகளில்
பண்பாடு,
கலாச்சாரம்,
வாழ்வியல்,
மக்கள் சமூக சேவையில் முழுமையாக ஈடுபடுத்தி தொண்டாற்றியமைக்காக கற்பக விருட்சம் விருது" வழங்கப்பட்டது. ஏற்கனவே பல்வேறு விருதுகள் பெற்றவர் இவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவரின்
சார்பாக இவரின் அண்ணன் மகன் மவ்லவீ ஏ.என் முஹம்மது அபூபக்கர் சித்தீக் ஸதக்கீ விருதினை பெற்றுக் கொண்டார். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!
இவ்விழாவில் வாணியம்பாடி பேராசிரியர் கவிமாமணி தி.மு. அப்துல் காதர்,
சொல்லின் செல்வர் ஆவடி குமார் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் பங்கேற்று சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து விருதினை வழங்கிய கற்பக விருட்சம்
ஆசிரியர் திரு முனிபாபு உள்ளிட்ட விழாக்குழுவினருக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்.
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
+965 9787 2482