பேங்க் இல் வேலை பார்பது ஹராமா ? ஹலாலா ?

464 views
Skip to first unread message

hakeem

unread,
Oct 21, 2010, 1:04:25 PM10/21/10
to நமக்குள் இஸ்லாம்
பேங்க் இல் வட்டி கட்டுவதும் வாங்குவது ஹராம் என்று ஓரளவு மக்களுக்கு
தெரியும் ....ஆனால் பலருக்கு பேங்க் இல் வேலை பார்பது ஹராமா ? ஹலாலா ?
என்ற விஷயத்தில் சர்ச்சை...... சிலர் ஹராம் என்கின்றனர் சிலர் ஹலால்
என்கின்றனர் .....இதற்கு இஸ்லாத்தின் உண்மை நிலை என்ன என்பதை குழும
சகோதர்கள் இதை பற்றி தெரிந்தவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் தெளிவு
படுத்தவும்.....

hakeem

unread,
Oct 22, 2010, 6:28:25 AM10/22/10
to நமக்குள் இஸ்லாம்
வங்கியில் வேலை செய்வது:

'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு
எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி),
நூல்: முஸ்லிம்)

hakeem

unread,
Oct 22, 2010, 6:31:29 AM10/22/10
to நமக்குள் இஸ்லாம்
வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்காகக் கணக்கு
எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள்
சபித்துள்ளார்கள். இன்னும் அவர்கள் அனைவரும் குற்றத்தில் சமமானவர்கள்
என்றார்கள்.

அறிவிப்பவர் ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்

வட்டி கொடுப்பவன் கொடுத்தால் தான் வட்டி வாங்குபவன் அதை வாங்குவான். எனவே
வட்டி வாங்குபவன், வட்டி கொடுப் பவன் ஆகிய இருவருமே குற்றவாளிகள் என
இஸ்லாம் கூறுகிறது. எழுதுபவன் சாட்சியானவர்கள் ஆகியோர் இவர்கள் செய்யும்
குற்றத்திற்குத் துணை போனதால் அவர்களையும் இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில்
ஏற்றுகிறது. மேலும் தெரிந்து கொண்டே அக்குற்றத்தைச் செய்வதால் அனைவரும்
குற்றத்தில் சமம் என்றும் தீர்ப்பளிக்கின்றது இஸ்லாம். எனவே வட்டி
வாங்கக் கூடாது என்பது மட்டுமல்லாமல் வட்டிக்காக எவ்விதத்திலும் துணையும்
நிற்கலாகாது என்பதையும் மனதில் அழமாகப் பதித்திட வேண்டும்.

இன்று வங்கிகளில் வேலை செய்யும் முஸ்லிம்களைப் பார்க் கின்றோம். அவர்கள்
இச்சட்டத்தைப் பற்றி நினைப்பது கூட இல்லை போலும். எனவேதான் அவர்கள்
அவ்வேலையைச் செய்து அழிவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய உலகில்
வட்டியில்லா வங்கிகள் ஓரிரு இடங்களைத் தவிர்த்து எங்கும் இல்லை. எனவே
வட்டி முறையைக் கொண்டு இயங்கும் வங்கிகளில் வேலை பார்ப்பதை இஸ்லாம் தடை
செய்கிறது. எங்கேனும் வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்காத வங்கிகள்
இருக்குமானால் அதில் வேலை செய்யலாம். இஸ்லாம் அதைத் தடுக்கவில்லை. வட்டி
முறையில் இயங்கும் வங்கிகளில் வேலை பார்க்கும் உயர் அதிகாரி முதல்
வட்டித் தொடர்பான வேலை செய்யும் அனைவரும் குற்றத்தில் சமமானவர்கள் தான்.
எனவே வட்டி முறையில் இயங்கும் வங்கிகளில் எவ்விதப்பணியும் மேற்கொள்ளக்
கூடாது என்பது இஸ்லாமியச் சட்டமாகும்.

Haja Mydheen Ashraf Ali

unread,
Oct 25, 2010, 1:31:48 AM10/25/10
to fro...@googlegroups.com
நன்றி சகோதரர் ஹக்கீம் அவர்களே,

ஒரு சந்தேகம், வங்கியில் ஒருவர் ஆஃபிஸ் பாயாக வேலை செய்தால், அதுவும் குற்றமா? அல்லது ரிசப்சனிஸ்டாக வேலை செய்தால் அதுவும் குற்றமா? அல்லது வங்கியில் துப்புரவுத் தொழிலில் வேலை செய்தால் அதுவும் குற்றமா? அல்லது வங்கியில் teller என்ற பதவியில் வேலை செய்தால் குற்றமா? அல்லது வங்கியில் watchman வேலை செய்தால் குற்றமா? அல்லது வங்கியில் வட்டியில் நீங்கள் சொன்ன காரியங்களில் (அதாவது வட்டி வாங்குதல், கொடுத்தல், கணக்கு எழுதுதல், சாட்சி) ஆகிய வேலைகளில் ஈடுபடாமல் வேலை செய்தால் குற்றமா? தயவு செய்து குர்ஆன், ஹதீஸ் படி விளக்கவும். சகோதரர் முஸ்லீம் அவர்களையும், ஏர்வாடி சிராஜ் அவர்களையும் இதற்கு விளக்கம் சொல்லுமாறு அழைக்கிறேன்.

தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்.

தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.

தோழமையுடன் 
அபு நிஹான்

Best regards,

Haja Mydheen Ashraf Ali
Dubai - U.A.E.

Contact me: Google Talk/ hajamydheen Skype/ hajamydheen MSN/ hajamydheen Y! messenger/ hajam...@yahoo.co.uk


2010/10/22 hakeem <hakk...@gmail.com>

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--



hakeem

unread,
Oct 25, 2010, 8:53:23 PM10/25/10
to நமக்குள் இஸ்லாம்
வங்கியில் எந்த வேலை பார்த்தாலும் ஹராம் அதற்கு இந்த ஹதீஸ் ஒன்றே
போதும் ...

'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு
எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி),

நூல்: முஸ்லிம்)

வங்கியில் வரக்கூடிய அனைத்துமே வட்டி அங்கு வேலை பார்ப்பவர்கள்
பெறக்கூடிய வூதியமும் வட்டி இல் இருந்து வருவதால் இது ஹராம் மான
செயல் .....

மேலும் விளக்கங்களுக்கு இந்த வீடியோ வை பார்க்கவும்
http://makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=219:01-may-09&catid=37:wealth&directory=94

Haja Mydheen Ashraf Ali

unread,
Oct 26, 2010, 12:18:46 PM10/26/10
to fro...@googlegroups.com
//அங்கு வேலை பார்ப்பவர்கள்

பெறக்கூடிய வூதியமும் வட்டி இல் இருந்து வருவதால்
இது ஹராம் மான
செயல்
.....//

மேலே உள்ளதற்கு நேரடியாக குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்தை தரவும்.

உதாரணத்திற்கு mnc நிறுவணம் என்று சொல்லகூடிய பன்னாட்டு நிறுவணத்தில் எல்லா transaction னும் lc எனப்படும் வங்கி கடனில் தான் அதிகமான நிறுவணங்கள் இயங்குகின்றன. நீங்கள் சொல்வது போல் பார்த்தால் எல்லா நிறுவணங்களும் வட்டி வாங்கி தான் வியாபாரம் செய்கின்றனர். அப்போது அந்த நிறுவணங்கள் கொடுக்கும் சம்பளமும் ஹராம் என்று சொல்ல முடியுமா? 

விளக்கம் தாருங்கள் சகோதரர் ஹக்கீம் அவர்களே

தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்

தோழமையுடன்

அபு நிஹான்


2010/10/26 hakeem <hakk...@gmail.com>

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--



Haja Mydheen Ashraf Ali

unread,
Oct 27, 2010, 2:20:13 AM10/27/10
to fro...@googlegroups.com
சகோதரர் ஹக்கோம் அவர்களுக்கு,

வங்கியில் எந்த வேலை பார்த்தாலும் ஹராம் அதற்கு இந்த ஹதீஸ் ஒன்றே
போதும் ...

   'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு
எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி),
நூல்: முஸ்லிம்)

மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸில் ஐந்து நபர்களை அல்லாஹ் சபிக்கிறான்.

1. வட்டி வாங்குபவன்
2. வட்டி கொடுப்பவன்
3. அதற்காக கணக்கு எழுதுபவன்
4. சாட்சியம் கூறும் இருவர்

இதில் வங்கியில் வேலை செய்யும் அல்லது வட்டி கடையில் வேலை செய்யும் அனைவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்றோ அல்லது அங்கு வேலை செய்வது (எந்த வேலை செய்தாலும்) தடுக்கப்பட்டுள்ளது என்றோ கூறப்படவில்லை. அல்லாஹ் நன்கு அறிந்தவன். 

சற்று விளக்கமாக கூற வேண்டுமென்றால், மனிதர்களாகிய நாம் தவறு செய்யவில்லை என்றால், பிறர் ஸ்ய்யும் தவறுகளுக்கு அல்லாஹ் நம்மை கேள்வி கேட்பதில்லை. உதாரணத்திற்கு ஒருவர் வங்கியில் fd (fixed deposit) இல் பணத்தை போட்டு வட்டியில் தன்னுடைய குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறார், (அல்லது) அவர் வட்டிக்கு தன்னுடைய பணத்தை மற்றவர்களிடம் கொடுத்து அதன் மூலம் வருmம் வட்டி வருமானத்தை வைத்து தன்னுடைய குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொண்டால், அவரிடத்தில் சாதாரண வீட்டு வேலை செய்வது ஹராமா? அல்லது அவர் வீட்டில் ஏதேனும் சில்லரை வேலைகள், பெயிண்ட் அடிப்பது, தச்சு வேலைகள் செய்வது, வீடு கட்டுவது போன்ற வேலைகளை செய்வது கூடாது என்று யாரேனும் கூற முடியுமா? இங்கு உதாரணத்திற்கு வங்கி என்பதை வட்டிக்கு விடுபவர்கள் என்று மாற்றி இருக்கிறேன்.

வங்கிக்கு என்று பிரத்தியோகமாக எந்த தனிச் சட்டமும் இல்லை. அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

சகோதரர் ஹக்கீம் அனுப்பிய சுட்டியிலும், சகோதரர் சமுசுத்தீன் காஸிமி அவர்கள் ஆரம்பிக்கும் போதே, வகியில் வேலை செய்வதே ஹராம் எனும்போது என்று ஆரம்பிகிறார். வங்கியில் வேலை செய்வதே ஹராம் என்று சகோதரர் சம்சுத்தீன் காஸிமி எதை வைத்து சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை. 
  
சகோதரர்கள் இதற்கு விளக்கம் அளியுங்கள். தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்கிறேன்.

சகோதரர் ஜி.என், முஸ்லீம் இதற்கு உதவுங்கள்.

குறிப்பு: மேலே சொன்ன விளக்கப்படி வங்கியில் மேல் சொன்ன ஐந்து நபர்கள் தவிர அனைவரும் வேலை செய்வது தவறில்லை என்பதே  நாம் புரிந்து கொண்டது, உதாரணத்திற்கு, (cashier, security, office boy).

தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.

தோழமையுடன்

அபு நிஹான்

Best regards,

Haja Mydheen Ashraf Ali
Dubai - U.A.E.

Contact me: Google Talk/ hajamydheen Skype/ hajamydheen MSN/ hajamydheen Y! messenger/ hajam...@yahoo.co.uk


2010/10/26 Haja Mydheen Ashraf Ali <hajam...@gmail.com>



--



ibnuh...@mail.com

unread,
Oct 27, 2010, 2:34:14 AM10/27/10
to fro...@googlegroups.com
 SALAAM TO ALL BROTHERS......

வங்கி  எனும் சொல்லுக்கே கருத்து ..... வட்டிக்கடை....என்பதே......
. (பார்க்கவும் .....லிப்கோ இங்கிலீஷ் தமிழ் DICTIONARY   )

ஒரு சில பணக்கார வெறியர்கள் சேர்ந்து  வங்கி எனும் பெயரில் ஒரு நிறுவனம் துவங்கி அதை கவர்ச்சியாக , AC வசதியுடன்  சகல  வசதிகளும்  செய்து , நல்ல   சம்பளம் கொடுத்து அதற்குரிய வேலை கொடுத்து  வட்டி  க்கு பணம் கொடுத்து  உழைக்கும் நிருவனமே வங்கி - BANK  என்று ஆங்கிலத்தில் சொல்வர்...........


சுருக்கமாக  வங்கி என வரும் எல்லா இடங்களிலும் ,,,,,,,   வட்டிகடை என போட்டு வாசித்து பாருங்கள்......  அருவருப்பு வரும்....... இறைவனின் பயம் வரும்.....

... உதாரணத்துக்கு........
 .   .இந்தியன் வங்கி.............. இந்தியன்  வட்டிகடை.....
   
     HSBI வங்கி ................ஹோண்காங் சங்கை வட்டிக்கடை....

    உலக வங்கி................. உலக வட்டிகடை..
...... .ETC........ETC..........ETC......
..
இதே மாதிரி ,  வட்டிக்கு பணம் கொடுத்து உழைப்பவர்கள்  உருவாக்கியுள்ள நிறுவனங்கள் தான்........ FINANCE COMPANY .....  இவை அனைத்துமே வட்டி தொழிலே........ வட்டி இல்லை எனில்  இவர்களுக்கு வருவாயே இல்லை.......

அழகிய ஆடம்பர  ஆபீஸ்  கட்டிடத்தில்  , கோர்ட்  சூட் , டை  அணிந்து  வேலை செய்வது எல்லாம்  இப்போ  கவுரமாகி விட்டது........ அதுவும் முஸ்லிம்களே இதில்  ஈடுபடுவது  மகா பயங்கரம்..... அறிந்த பலர்  இதை விட்டு விட்டு வேறு தொழில் , சம்பளம் குறைவு எனிலும்  தேடி கொண்டுள்ளனர்......  பலரோ... வட்டியும் வியாபாரம் போன்று, கமிஷன் தொழில்தான் என கூறிக்கொண்டு ஹராம்  உழைப்பில் வாழ்வை கழிக்கின்றனர்....நேரமின்மையால்..ஒரு தெளிவுக்காக சுருக்கமாக எழுதியுள்ளேன்......
.  
 

Haja Mydheen Ashraf Ali

unread,
Nov 1, 2010, 4:15:31 AM11/1/10
to fro...@googlegroups.com
சகோதரர் இப்னு ஹஸன் அவர்களுக்கும், மற்ற சகோதரர்களுக்கும்,

 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு
எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி),
நூல்: முஸ்லிம்)

இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஐந்து நபர்களும் செய்யும் தொழில் (வேலை செய்வது) ஹராம் என்று எல்லோராலும் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து நபர்கள் தவிர்த்து,

அதாவது 
1. வட்டி கொடுப்பவர் / வட்டி வாங்குபவர் (இரண்டுமே வங்கிகள் செய்யும்)
2. கணக்கு எழுதுபவர் (வங்கியில் வேலை செய்பவர்)
3. இரண்டு சாட்சிகள்

மேல் கூறப்பட்ட 5 நபர்கள் தவிர்த்து வங்கியில் வேலை செய்யும் cashier (teller), ஆஃபிஸ் பாய், துப்புரவுத் தொழிலாளி, வாட்ச்மேன் இவர்கள் வங்கியில் வேலை செய்தாலும் ஹராமா? அப்படி ஹராம என்றால் குர்ஆன், ஹதீஸில் இருந்து ஆதாரத்தை கூறுங்கள். 

வங்கி என்ற சொல்லுகே வட்டிக் கடை என்று பொருள்படுவதால் வங்கியில் வேலை செய்யும் அனைத்து வேலையும் ஹராம் என்று சொல்ல் முடியாது.

தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.

தோழமையுடன்

அபு நிஹான் 



Best regards,

Haja Mydheen Ashraf Ali
Dubai - U.A.E.

Contact me: Google Talk/ hajamydheen Skype/ hajamydheen MSN/ hajamydheen Y! messenger/ hajam...@yahoo.co.uk


2010/10/27 <ibnuh...@mail.com>
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--



Reply all
Reply to author
Forward
0 new messages