முஹர்ரம் 10ம் நாள் மகிழ்ச்சியா..? துயரமா...?

437 views
Skip to first unread message

நமக்குள் இஸ்லாம்

unread,
Dec 21, 2009, 10:00:11 AM12/21/09
to fro...@googlegroups.com
ஸலாம்
 

இஸ்லாமிய வரலாற்றில் நேர் எதிரான இரு சம்பவங்கள் ஒரே நாளில் நடந்துள்ளது நமது கவனத்திற்குரியது.

முஸ்லிம்களில் உள்ள ஷியா பிரிவினர் முஹர்ரம் மாதம் 10ம் நாள் மிகத் துக்ககரமான நாளாக ஆக்கிக்கொண்டு, அன்றைய தினம் தம்மைத்தாமே வருந்திக்கொள்ளக்கூடிய மிக மோசமான செயலில் இறங்குவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம், இதே நாளில்தான் நபி(ஸல்) அவர்களின் பேரரான ஹுசைன்(ரலி) அவர்கள் கர்பலாவில் நடந்த போரில் ஷஹீதாக்கப்படுகிறார்கள். அது மிக சோகமான ஒரு சம்பவம்தான். இந்நிகழ்ச்சி நடந்த இதே நாளில்தான் இதைவிட முக்கியமான ஒரு சம்பவம் நடக்கிறது. ஃபிர்அவ்ன் என்ற கொடியவனுக்கு எதிராக நபி மூஸா(அலை) அவர்கள் செய்த பிரச்சாரம் ஒரு முடிவுக்கு வந்து அவனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பனு இஸ்ரவேலர்களைக் கூட்டிக் கொண்டு எகிப்தை விட்டு வெளியேறுகிறார்கள். விபரம் அறிந்த ஃபிர்அவ்ன் தம் படையுடன் பின்தொடர்ந்து மூஸா(அலை) அவர்களை முற்றுகையிடுகிறான். அந்தச் சந்தர்ப்த்தில் உலகிலேயே மிகப் பெரிய அற்புதம் ஒன்று நிகழ்கிறது. கடல் இரண்டாகப் பிளந்து இரண்டு மலைகள் போல் எழுந்து நின்று விடுகின்றது. அந்த வழியே மூஸா(அலை) அவர்களுக்கு வழிவிட்ட அந்தக் கடல், ஃபிர்அவ்னும் அவனுடைய சேனைகளும் உள்ளே இறங்கியதும் அவர்களைச் சுருட்டி விழுங்கி விடுகிறது. இவை அனைத்தும் இறைவனின் ஏற்பாட்டின்படி நடக்கின்றன.

இந்த நாளைப் புகழந்து நன்றி செலுத்தும்விதமாக நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்து பிறரையும் நோன்பு நோற்கச் சொன்ன விவரம் புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. ஒரே நாளில் இந்த இரு நிகழ்ச்சிகளை எந்த அடிப்படையில் தீர்மானிப்பது?

இந்த இரண்டு சம்பவங்களில் அன்றைய நிகழ்வையும் இன்றைய நிகழ்ச்சிகளையும் அலசுகின்றது கட்டுரை.
 

முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது என்றாலே பல்வேறு அனர்த்தங்கள் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள மூடர்கள் பலரால் அரங்கேற்றப்படுவதை பார்க்கின்றோம். ரதம் போன்று ஒற்றை ஜரிகைகளாலும் வர்ணங்களாலும் அலங்கரித்து இறுதியில் அதை நதிகளில் போட்டு அழிப்பது இது போன்ற நிகழ்வுகளை "பஞ்சா" என்ற பெயரில் முஸ்லிம்களில் ஷியாக் கொள்கைக்காரர்கள் அனைத்து மாநிலங்களிலும் முழுவதும் செய்து வருகின்றனர்.

முஹர்ரம் மாதம் 10 ஆம் நாளை கோலாகலமாகக் கொண்டாடுவது ஷியாக்களின் வழக்கம். முஹர்ரம் பண்டிகை என்னும் பெயரில் ஷியா முஸ்லிம்கள் இப் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்;.

அன்றைய தினம் சில மூடர்கள் பக்திப் பரவசத்துடன் யாஅலி. யாஹுஸைன் எனன்ற கோஷத்துடன் தீயில் நடப்பதும், புலி வேஷம் போட்டு ஆடுவதும், என்று இன்னும் பல்வேறு அநாச்சாரங்களையும் அரங்கேற்றுகின்றனர்.
பஞ்சா என்பதற்கு பாரசீக மொழியில் ஐந்து என்று பொருள். நபி(ஸல்), அலி (ரலி), பாத்திமா (ரலி), ஹஸன்(ரலி), ஹூஸைன்(ரலி), ஆகிய ஐந்து பேருக்கும் தெய்வீகத் தன்மை இருப்பதாக நம்புவது ஷியாக்களின் கொள்கை. இதன் அடையாளமாகத் தான் பஞ்சா எடுக்கும் மாபாதகச் செயலை இந்த பஞ்சமா பாதகர்கள் செய்கிறார்கள்.

மும்பை, குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் மேலப்பாளையம், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஷியாக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. முஹர்ரம் பண்டிகை என்று அழைக்கப்படும் இப்பண்டிகையில்(?) ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலா போர்க்களத்தில் இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக இப்பண்டிகை(?) கொண்டாடப்பட்டு வருகிறது. முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் நடக்கும் அனாச்சாரங்கள் ரொம்ப அதிகம்.

முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல், ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது இந்துக்களின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது.

முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன், கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும்.
 

1) முஹம்மது (ஸல்) அவர்கள்,
2) அவர்களின் திருமகளார் பாத்திமா (ரலி),
3) அலி (ரலி),
4) ஹஸன் (ரலி),
5) ஹுஸைன் (ரலி)
என்று ஐந்து பேரைக் குறிப்பிடுவதே இந்த பஞ்சா எனும் கையாகும்.

உருது மற்றும் ஹிந்தியில் பாஞ்ச் என்றால் ஐந்து என்று எல்லோரும் அறிவோம். இதை அடிப்படையாகக் கொண்டே பஞ்சா என்ற பெயர் வந்தது.


இந்த இஸ்லாத்தைத் தகர்க்கும் அனாச்சாரங்களை கண்டிக்க வேண்டிய சில மார்க்க அறிஞர்கள், மௌலவிகள் கூட இந்த முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா நோன்பு என்ற தலைப்பில் ஹுஸைன் (ரலி)யின் கர்பலா போர்க்களத்தையும், சோக வரலாற்றையும் பேசி மக்களிடம் பாராட்டுகள் பெறுகிறார். நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கலீஃபாக்கள் ஆட்சி நடத்தினார்கள் அவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களின் இறந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவில்லை எனும் போது அவர்களது பேரர் என்ற காரணத்தினால் அவரை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்துவது வரம்பு மீறிய செயலாகும்.

குறிப்பாக இப் பஞ்சா ஊர்வலத்தில் மாரடித்தல் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது யா அலீ!, யா ஹுஸைன்! என்று அவர்கள் இறந்த தினத்தில் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது போன்றவற்றை முஸ்லிம்கள் செய்கிறார்கள்.

மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ஊர்வலங்களில் வன்முறை ஏற்பட்டு அரசாங்கம் இந்த பஞ்சா ஊர்வலத்தைத் தடை செய்துள்ளது. இதுபோன்ற செயல்களால் மதக்கலவரங்கள் ஏற்படுகின்றன

 

ஷியா பிரிவினர் செய்யும் இந்தக் காரியங்களில் எதுவொன்றும் இஸ்லாத்தை சார்ந்ததல்ல. போட்டோக்களில் காணப்படும் இந்த இரத்தக் காணிக்கை மடமையின் உச்சக்கட்டமாகும். மார்க்கம் பற்றிய சாதாரண அறிவுள்ளவர்களுக்கு கூட இந்த கொடுமை எல்லைக் கடந்த அறியாமை என்பது தெரியும். இந்தக் காரியங்களில் ஈடுபடுபவர்கள், இந்தக் காரியத்தை செய்யும் படி தூண்டுபவர்கள் படிப்பறிவற்ற, சிந்தனையற்ற, இஸ்லாமிய தெளிவற்ற, வரலாற்று ஆய்வற்ற மிகக் கீழான அடையாளங்களாவார்கள்.

....................................................................................................................................

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு - சிறப்பிப்பது எப்படி?

“முஹர்ரம்”

இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம்.முற்காலம் தொட்டு அரபிகள் இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். முஹர்ரம் என்னும் அரபிச் சொல்லிற்கு “விலக்கப்பட்டது” என்று பொருள்.

“சொற் பொருள்”

முஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம் இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர் சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது, தடுக்கப்பட்டது,என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால் அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

“புனித மாதங்கள்- அஷ்ஹுருல் ஹுரும்”

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை ஆகும். ( அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.

அல்லாஹ் புனிதமாக்கிய மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும். அதனை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் பேணுவது நம் கடமையாகும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ''அதில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் '' (9:36) புனிதம் மிக்க மஸ்ஜிதுல் ஹராமில் குற்றமிழைப்பது எவ்வளவு குற்றமோ அது போன்றே புனிதம் மிக்க மாதங்களில் தவறிழைப்பதும் பெரும் குற்றமாகும். எனவே மற்ற மாதங்களைக் காட்டிலும் அதிகமாகப் புனிதம் மிக்க மாதங்களைப் பேணுதல் அவசியம் ஆகும்.

''நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் சின்னங்களையோ புனிதம் மிக்க மாதங்களையோ (நீங்கள் தீங்கிழைக்கக) ஆகுமானதாக்கிக் கொள்ளாதீர்கள் '' (5:2)

அவர்கள் அறிவிக்கின்றார்கள், '' ரமளானுக்குப் பின் நோற்கும் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் '' ( முஸ்லிம், அஹ்மத்)

யூதர்கள் இந்த பத்தாம் நாளில் நோன்பு நோற்கும் வழக்க முடையவர்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது இப்பழக்த்தைக் கண்டதும் அதற்குரிய காரணத்தை அவர்களிடம் கேட்டனர். அதற்கு “நானே இறைவன்” எனக் கூறிய பிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் இறைவன் செங்கடலில் மூழ்கடித்ததும் நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் மக்களையும் காத்தருளியதும் அந்நாளில்தான் என்றும் அந்த நன்றியை நினைவுகூர மூஸா(அலை) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றனர் என்றும் அதனையே தாங்களும் பின்பற்றுவதாகவும் கூறினர். அதைக்கேட்ட முஹம்மத் (ஸல்), ”அவ்விதமாயின் நானும் என் மக்களும் தாம் உங்களையும்விட மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்” என்று கூறி அது முதல் தாங்களும் நோற்று தம் மக்களையும் அவ்வாறே நோன்பு நோற்குமாறும் பணித்தனர்.(புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

ஆஷ§ரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது , அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். (முஸ்லிம்)

அபூகதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: '' நபி(ஸல்) அவர்களிடம் ஆஷ§ரா நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், '' கடந்த ஒரு வருட பாவங்களுக்கு அது பரிகாரமாகும்'' என்று கூறினார்கள். (முஸ்லிம்)

ஹுஸைன்(ரலி) அவர்களை விட சிறந்தவர் இறைத்தூதர் மூஸா(அலை) அவர்கள். சிறப்பு அடிப்படையில் பார்ப்பதாக இருந்தாலும் ஹுசைன் அவர்களின் சம்பவத்தை விட மதிப்பு மிக்க மூஸா அவர்களை முன்னிருத்தி அவர்களை பாதுகாத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி நோன்பிருப்பதே சிறந்ததாகும்.

மூஸா என்ற இறைத்தூதர் மிகப் பெரும் அதிசயத்தால் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியான சம்பவமும், முஹம்மத்(ஸல்) அவர்களின் பேரப்பிள்ளை 'கர்பலா'வில் கொல்லப்பட்ட துக்க சம்பவமும் பல நூற்றாண்டு வித்தியாசத்தில் ஒரே நாளில் நடக்கின்றது.

துயரமான சம்பவம் நடந்ததால் அந்த நாளை துக்க நாளாக முடிவு செய்யலாமா..?

நாளுக்குச் சக்தி இருந்து அன்றைய தினம் நல்ல நாளாக இருந்தால் ஹுசைன்(ரலி) அவர்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த நாள் கெட்ட நாளாக இருந்தால் மூஸா(அலை) அவர்கள் தோல்வி அடைந்திருக்க வேண்டும். இது ஒன்றும் நடக்கவில்லை.

இறைவன் காலச்சக்கரத்தை தன் கையில் வைத்துக்கொண்டு, தான் நாடியவாறு சுழற்றுகிறான்;.

(இன்பம், துன்பம், சோதனை போன்ற) இத்தகைய காலங்களை மனிதர்களுக்கு மத்தியில் நாமே மாறி மாறி வரச் செய்கிறோம் - அல்குர்ஆன்: (3:140)

யாரை உயர்த்துவது, யாரைத் தாழ்த்துவது, யாருக்குக் கொடுப்பது, யாரை எடுப்பது என்று எல்லா விஷயங்களையும் தீர்மானிக்க,

ஒவ்வொரு நாளும் அவன் காரியத்திலே இருக்கிறான் - அல்குர்ஆன்: (55:29)

இத்தகைய கருத்தை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் குர்ஆனில் உள்ளன. இதையெல்லாம் நாம் உணர்ந்தால் காலத்தையோ, நேரத்தையோ குறைகூறி இறைவனின் கோபத்திற்குள்ளாக மாட்டோம்.

நாம் விரும்பாத, நமக்கு துன்பம் தரக்கூடிய செயல்கள் வாழ்க்கையில் ஏற்படத்தான் செய்யும். அப்போது அதற்கான காரணங்களை அலச வேண்டும். காரணம் நம் கட்டுப்பாட்டை மீறியதாக இருந்தால்,

(முஸ்லிம்களே..) நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், விளைச்சல்கள், உயிர்கள் ஆகியவற்றின் இழப்புகளால் சோதிப்போம். (காலத்தை சபிக்காமல்) பொறுமையை கைக்கொள்ளுவோருக்கு நன்மாராயம் உண்டு, (பொறுமையுடைய) வர்களுக்கு எந்த துன்பம் ஏற்பட்டாலும், நாங்கள் அல்லாஹ்விற்குரியவர்கள், நிச்சயமாக அவனிடமே திரும்பிச் செல்வோம் என்று கூறுவார்கள் நேர்வழி பெற்ற இவர்களுக்குத்தான் இறைவனின் நல்லாசியுண்டு - அல்குர்ஆன்: (2:155,156)

காலத்தைக் குறைகூறி, ஷைத்தானுக்கு துணைபோய், தனக்குத் தானே இழிவை ஏற்படுத்திக் கொள்ளாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும்.



--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe  

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Dec 22, 2009, 9:43:33 AM12/22/09
to fro...@googlegroups.com

முஹர்ரம் பண்டிகையும்

இணைவைப்பாளர்கள் கடைபிடிக்கும் அநாச்சாரங்களும்

முஹர்ரம் மாதம் வந்துவிட்டாலே ஏதோ வானமே இடிந்து தங்கள் தலைகளின் மீது விழுந்துவிட்டது போன்றும் வானில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் உதிர்ந்துவிட்டது போன்றும் ஒருவகையான சோகம்தான் பெரும்பாலும் இணைவைப்பு முஸ்லிம்கள் மத்தியில் வந்துவிடுகிறது. ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று காரணம் கேட்டால் முஹர்ரம் மாதம் மாபெரும் துக்ககரமான மாதம் என்றும் இந்த மாதத்தில்தான் நபிகளார் (ஸல்) அவர்களின் அருமைப் பேரப்பிள்ளைகளான ஹசேன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோர் கர்பலா போர்க்கல மைதானத்தில் வீரத்தியாகம் செய்தார்கள் என்றும் அதற்காகத்தான் தாங்கள் துக்கம் அணுசரிப்பதாகவும் கூறுகிறார்கள்.

 
இவர்களுடைய மூடநம்பிக்கை மற்றும்  அநாச்சாரங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. இது முழுக்க முழுக்க மார்க்க விரோதமான செயல்கள் மட்டுமல்லாது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே தகர்த்தெரியும் காரியங்களில் ஒன்றுமாகும். ஹசேன் மற்றும் ஹுசைன் (ரலி) ஷஹீதானார்கள் என்று              ஒருநாளை ஒதுக்கி அந்த நாளை மாபெரும் துக்க-நாளாக அனுசரித்து, நெஞ்சில் அடித்துக்கொண்டு ஒப்பாரிவிட்டு அழக் கூடிய தவறான கொள்கைவாதிகள் தங்களது கொள்கையின் மூலம் இஸ்லாத்தின் அடிப்படையே உடைக்கிறார்கள் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகள் உள்ளன இதோ உங்கள் பார்வைக்கு சில:

 


கீழ்கண்டவையெல்லாம் தியாகம் இல்லையா?

 

·                    இப்ராஹீம் (அலை) தம் அன்பு மனைவி ஹாஜர் (அலை) அவர்களை அல்லாஹ்வின் கட்டளைப்படி பாலைவனத்தில் பச்சிளங் குழந்தையுடன் தவிக்கவிட்டு சென்றார்களே இது தியாகமில்லையா?

 

·                    அல்லாஹ்வின் கட்டளைப்படி தம் அருமை மகனை அறுத்துப்பலியிட இப்ராஹீம் (அலை) முனைந்தார்களே இது தியாகமில்லையா?

 

·                    தந்தை இப்ராஹீம் (அலை) தம்மை அறுத்துப் பலியிட துணிந்ததும் அல்லாஹ்வுக்காக இஸ்மாயீல் (அலை) தன்னை அறுக்கப்படவும் ஒத்துக்கொண்டார்களே இது தியாகமில்லையா?

 

·                    தனது எஜமானனால் அனல் பறக்கும் பாலைவன மணலில் கட்டிப்போடப்பட்டும் அடிமை பிலால் (ரலி) ஏகன் ஏகன் என்று உறைத்தார்களே இது தியாகம் இல்லையா?

 

 

·                    நபிகளார் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றதற்காக 70க்கும் மேற்பட்ட சஹாபிய குடும்பங்கள் தங்கள் சொந்தபந்தங்களை விட்டும், சொத்து சுகங்களை உதறித்தள்ளியும் ஹிஜரத் செய்தார்களே இது தியாகம் இல்லையா?

 

·                    நபிகளார் (ஸல்) உயிரோடு இருந்த காலத்தில் நடைபெற்ற போர்க்களங்களில் சஹாபி ஷஹீதாக்கப்பட்டு கஃபன் துணி கூட போதாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டார்களே இது தியாகம் இல்லையா?

 

·                    மார்க்கத்தை பின்பற்றியதற்காக ஒரு சஹாபிய பெண்மணியின் மர்மஸ்தானத்தில் கயவர்கள் ஈட்டியை பாய்ச்சி கொன்றார்களே இது தியாகம் இல்லையா?

 

·                    எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு யுத்தத்தில் நபிகளாருக்கு வெட்டுக்காயம்பட்டு அவர் மரணம் அடைந்தவிட்டார் என்று வதந்தி பரப்பப்பட்டதே! இது தியாகம் இல்லையா?

 

 

துக்கம் அணுசரிப்பதாக இருந்தால் ஒரு நாள் போதுமா?

அவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது). அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்;. ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்;. அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்;. இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை) மீறி நடந்து கொண்டும் இருந்தது தான் (காரணமாகும்)

 

நபிகளாரின் பேரப்பிள்ளைகள் ஷஹீதாக்கப்பட்டதன் நினைவாக 1-நாளை துக்க நாளாக அணுசரிக்கிறார்கள் ஆனால் துக்கம் அணுசரிப்பதாக இருந்தால் நமக்கு 1 நாள் போதுமா? இல்லையே மாறாக நாம் வருடத்தின் 365 நாட்களும் துக்கம் அணுசரிக்க வேண்டுமே! நம்முடைய புனிதமான இந்த மார்க்கத்தை எத்திவைத்ததற்காக அநியாயமாக இறைத்தூதர்களான நபிமார்கள் கொல்லப் பட்டுள்ளார்களே! ஹசேன் ஹுசைனுக்கு (ரலி) ஆகியோருக் காக மட்டும் 1 நாள் துக்கநாள் என்றால் உலகம் படைக்கபட்பட்டது நாள் முதற்கொண்டு கொல்லப்பட்ட நபிமார்களுக்கும், சத்திய சஹாபாக்களுக்கும் என்று கணக்கு போட்டால் மொத்தமாக வருடத்தில் 365 நாட்களும் துக்கம் அணுசரிக்க வேண்டுமே! ஏன் இவர்கள் இதற்கு முன்வரு வதில்லை!

 

சகோதரர்களே சிந்தித்துப்பாருங்கள்! இவர்கள் ஹசேன் மற்றும் ஹுசைன் (ரலி)-யை மட்டும்தான் வீரத்தியாகிகள் என்று எடுத்துக்கொள்கிறார்கள் மாறாக உடமைகள் மற்றும் உயிர்த்தியாகம் செய்த எத்தனையோ நபிமார்கள், சத்திய சஹாபாக்கள் போன்றோருக்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கிறான் ஆனால் இந்த முட்டாள்வாதிகளோ ஹசேன் மற்றும் ஹுசைன் (ரலி)-யை தவிர யாருமே தியாகமே செய்யாதது போன்று காட்டிக்கொண்டு கபட நாடகம் ஆடுகிறார்கள்?

 

எனவே சகோதரர்களே இவர்கள் துக்கம் அணுசரிப்பதன் மூலம் இவர்கள் திருக்குர்ஆனை புரட்டுவதில்லை என்ற உண்மையும் பொன்னான நம் மார்க்கத்ததை இழிவுபடுத்துகிறார்கள் என்ற உண்மையும் அம்பல மாகிறதல்லவா!

 

இஸ்லாத்தில் நல்லநாள் கெட்ட நாள் உள்ளதா?

காலத்தைக் குறை கூறாதீர்கள்; காலம் நானாக இருக்கிறேன்”. என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

1400 ஆண்டு காலமாக ஒருநாளை துக்க தினமாக அணுசரித்து 1400 முறைக்கு மேல் அதுவும் வருடாவருடம் அல்லாஹ்வை குறை கூறுகிறார்களே இந்த செயல் ஒரு முஸ்லிமுக்கு தகுமா? அல்லாஹ்வை விட ஹசேன் ஹுசைன் சிறந்தவர்களா?

 

முஹர்ரம் மாத அநாச்சாரங்கள் பற்றி பார்ப்போமா!

10 நாள் மாமிசம் சாப்பிடாமல் இருப்பது

ஹசேன், ஹுசைன் (ரலி) ஷஹீதான நாளை துக்கமான நாளாக கருதி முஹர்ரம் மாதத்தில் முதல் 10 நாட்கள் மாமிசம் சாப்பிடமாட்டோம் என்பதை  கடைபிடிக்கிறார்களே அல்லாஹ் எந்த நாளிலாவது மாமிசம் உண்ணாதீர்கள் என்று கூறியிருக்கிறானா?

"நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்; (அதற்கு நன்றி செலுத்தாமல்) அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்; (அப்படி செய்வீர்களானால்) உங்கள் மீது என் கோபம் இறங்கி விடும்; மேலும், எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக வீழ்வான்.  (அல்குர்ஆன் 20:81)

 

பஞ்சா எடுப்பது (பஞ்சதெய்வ கொள்கை)

நீங்கள் பஞ்ச சீல கொள்கையை கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் பஞ்ச தெய்வ கொள்கையை கேள்விப்பட்டதுண்டா? இதோ அந்த பஞ்ச தெய்வக் கொள்கையை சற்று அறிந்துக்கொள்ளுங்கள்!

 

பஞ்சா என்பதற்கு பாரசீக மொழியில் ஐந்து என்று பொருள்.

1)     நபி (ஸல்)

2)     அலி (ரலி)

3)     ஃபாத்திமா(ரலி)

4)     ஹஸன்(ரலி)

5)     ஹூஸைன்(ரலி)

 

மேலே கூறப்பட்ட ஐந்து பேருக்கும் தெய்வீகத் தன்மை இருப்பதாக நம்புவது ஷியாக்களின் கொள்கையாகும் இதுதான் பஞ்சா என்பதற்கான உண்மை கருத்தாகும். பஞ்சா என்ற பஞ்சதெய்வ கொள்கையின் மூலம் இஸ்லாத்தின் முதல் கலிமாவாகிய ஓரிறைக் கொள்கையை வேறுக்கும் செயல்களில் ஈடுபடுவது கூடுமா? பஞ்சா விழா நடத்துபவரும் அந்த விழாவை ஆதரிப்பவர்களும் நரகத்திற்குத்தானே தங்களை ஆயத்தப் படுத்துகிறார்கள்!

 

 
மதுரமான ஷர்பத் தண்ணீர் மற்றும் பாத்திஹா சடங்கு

வீட்டில் உள்ள பாட்டிமார்கள் ஒரு பித்தளை தேக்சாவை எடுப்பார்கள் சுத்தமான நீரால் கழுவி நல்ல துணியால் உள்பக்கம் துடைத்துவிடுவார்கள் உடனே ஃபாத்திஹா ஓதி அந்த பித்தளை தேக்சாவிற்குள் சாம்பிராணி புகை போடுவார்கள் பிறகு அந்த தெய்வீக தேக்சாவை அப்படியே அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு பலவகையான பழங்களையும் கசகசவையும் விட்டு சுடச்சுட மதுரமான ஷர்பத் செய்வர்கள் சூடு ஆறும் முன் குடிப்பார்கள் இதற்கு முஹர்ரம் ஷர்பத் என்று பெயர். மற்றும் சிலர் பசும்பால் ஊற்றி அதில் சில வாசனை திரவியம் இட்டு ஆனந்தமாக குடித்து ரசிப்பார்கள் இந்த கேடு கெட்ட செயலும் இந்த நாளில் அரங்கேற்றப்படுகிறது!

 

 
இந்த முஹர்ரம் மாதத்தில் மட்டும் ஏன் இரத்தின் நிறத்தில் உள்ள ஷர்பத் செய்கிறீர்கள் என்று பாட்டிமார்களிடம் கேட்டால் அது ஹசேன் ஹுசைன் (ரலி) அவர்கள் சிந்திய இரத்தத்திற்கான அடையாளமாகும் இது தெய்வீக பானமாகும் என்பார்கள்.  இந்த ஷர்பத் முஹர்ரம் மாதத்தை தவிர வேறு எந்த மாதத்திலும் செய்யமாட்டார்கள்.

 

இதை தெளிவாக சிந்தித்துப் பார்த்தால் மாற்று மத்ததவர்களின் செயல்களை ஒத்திருக்கும் அவர்கள்தான் தங்கள் பண்டிகை நாட்களில் ஒருவகை போதை பானம் (மதுவை) குடிப்பார்கள் ஆனால் போதை பானத்திற்கு மார்கத்தில் நேரடியாக தடை உள்ளதே எனவேதான் இவர்கள் இனிப்பு பானம் செய்து குடிக்கிறார்கள் போலிருக்கிறது.

 

மார்பில் அடித்துக்கொள்வது

 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
மறுமை நாளையும் நம்பியுள்ள பெண், தன்னுடைய கணவனைத் தவிர வேறு யாருடைய மரணத்திற்கும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது; கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதங்களும் பத்து நாள்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்." உம்மு ஹபீபா(ரலி) அறிவித்தார்.
(புகாரி பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1281)

 

 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
(
துக்கத்தில்) கன்னங்களில்) அறைந்து கொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் கால அழைப்பை விடுப்பவனும் நம்மைச் சேர்ந்தவனல்லன். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

(புகாரி பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3519 )

 

இங்கு நபிகளார் கணவனை இழந்த பெண்ணைத் தவிர யாருக்கும் 3 நாட்களுக்கு மேல் துக்கம் அணுசரிக்கக்கூடாது என்று சூளுரைத்துவிட்டார்கள் ஆனால் நம்மவர்களோ 1400 ஆண்டுகளாக துக்கமும் மார்புகளில் அடித்துக்கொள்ளும் கேடுகெட்ட கொள்கையையும் பின்பற்றி கண்ணியமிக்க இறைத்தூதரை இழிவுபடுத்துகிறார்களே இது நம் மார்கத்திற்கு இழைக்கும் துரோகமில்லையா? இதன் மூலம் நபிகளாரின் அமுத மொழிகளை நயவஞ்சகமாக இந்த மனிதர்கள் புரக்கணிக்கிறார்கள் என்பது அம்பலமாக வில்லையா?

 

 

சிலம்பாட்டம், புலிவேஷம் போடுவது, குண்டம் மிதிப்பது

முஹர்ரம் வந்துவிட்டாலோ ஒருசாரார் சிலம்பை கையில் எடுத்துக்கொள்வார்கள் அதை மேலும் கீழுமாக சுற்றுவதும் அவற்றை கொண்டு தங்கள் வீரத்தை காட்டுவதும் வேடிக்கையாக இருக்கும் இப்படிப்பட்ட வீரர்கள் சமுதாயத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் பெண்கள் பின்னால் ஒழிந்துக்கொண்டு நிற்பார்கள் ஆனால் முஹர்ரம் மாதத்தில் மட்டும் வீரம் பொங்கி வழியும்.

 

மற்றொரு சாரார் உடலில் வர்ணசாயத்தால் புலி-வேஷம் போட்டுக்கொண்டு வீதி, வீதியாக சென்று பிச்சை எடுப்பார்கள்  இவ்வாறு செய்வதால் தங்கள் நேர்த்திக்கடன் நிறைவேறுகிறது என்பார்கள் (சாராயம் குடித்துக்கொண்டு ஆடுவதும் உண்டு)

 

இன்னுமொரு சாரார் தங்கள் பகுதியில் நீளமான குழி தோண்டி அதற்குள் விறகுகட்டைகளை வைத்து எரித்துவிட்டு அதனால் உருவான நெருப்புக்கறியின் மீது வெறும் கால்களால் நடந்து தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுவார்கள். சிந்தித்துப்பாருங்கள் சிலம்பாட்டம், புலியாட்டம், குண்டம் மிதிப்பது நபிகளார் காட்டிய வழிமுறையா?

எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 4:14)

 

 

முஹர்ரம் மாதம் மற்றும் திருமண சடங்குகள்

இந்த பொன்னான மாதத்தில் இணைவைப்பு மக்கள் யாரும் திருமணம் செய்துக்கொள்ளமாட்டார்கள் ஏன் என்று காரணம் கேட்டால் இந்த மாதத்தில் திருமணமாகும் மணப்பெண் வெகு விரைவில் விதவையாகிவிடுவாளாம்! (என்ன கேடு இது)!

 

முஹர்ரம் மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்திருந்தல் தங்கள் புதுமணத் தம்பதிகளை இந்த மாதத்தில் பிரித்துவிடுவார்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால் புதுமணப் பெண் தன் கணவனை இந்த மாதத்தில் கண்டால் அவன் இறந்துவிடுவானாம்! (என்ன கேடு இது!)

 

சிந்தித்துப்பாருங்கள் இந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் தூக்கி வீசி விடுவார்களா? வியாபாரத்தில் இலாபம் கொட்டினால் முழுவதுமாக தர்மம் செய்துவிடுவார்களா?

 

முடிவுரை

எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 4:14)

முஹர்ரம் மாத்தில் கடைபிடிக்கப்படுகின்ற மார்க்கம் அறிவுறுத்தாத செயல்கள் மற்றும் அநாச்சாரங்களை விட்டு விலகிடுங்கள் மரணம் எந்த வினடியும் நம்மை பதம் பார்த்துக்கொண்டிருக்கலாம் இன்றே விலகிடுங்கள் இந்த வினாடியே திருந்திவிடுங்கள் இது உங்கள் நலனுக்காகவே கூறப்படுகிறது இதற்கு மாற்றமாக புனிதமான முஹர்ரம் மாதத்தில் பேண வேண்டிய நல்ல அமல்களை செய்து சுவனத்திற்கான பாதைகளை எளிதாக்குங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!

 
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!
 
அல்ஹம்துலில்லாஹ்

2009/12/21 நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--
மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு
இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும்
நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள்
யார் என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம்
பேசியவர்கள்)மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள்.”
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்: அஹ்மது
Reply all
Reply to author
Forward
0 new messages