அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு சகோதரர்களே,
நம்மில் சிலர் உம்ரா செய்வதற்கு சென்றால், ஒரே பிரயாணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உம்ரா செய்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு உம்ராவை முடித்த பிறகு ஹரம் ஷெரீபுக்கு அருகில் இருக்கும் மஸ்ஜித் ஆயிஷாவிற்கு சென்று மறுபடியும் இஹ்ராம் அணிந்து இரண்டாவது உம்ரா செய்கிறார்கள். இதுபோல அவர்களால் எத்தனை முடியுமோ அத்தனை உம்ரா செய்கிறார்கள்.
இது போல ஒரே பிரயாணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உம்ரா செய்வதற்கு அனுமதி உண்டா, நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இது போல சஹாபாக்கள் செய்திருக்கிறார்களா என்பதை அறிந்தவர்கள் தயவு செய்து விளக்கவும்.
வஸ்ஸலாம்,
அலி அப்பாஸ்,
சிங்கை.
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en