கல்வி உதவி வேண்டி விண்ணப்பம்

152 views
Skip to first unread message

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

unread,
Jun 11, 2009, 1:53:32 AM6/11/09
to abdu...@rediffmail.com, abdul rehman, smmabu...@hotmail.com, fro...@googlegroups.com, abka...@gmail.com





பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

கல்வி உதவி வேண்டி விண்ணப்பம்

 

அனுப்புநர்:

எஸ். நூர் முஹம்மது (டைலர்),

197/ 4, மேலாண்ட வீதி,

சி.என். பாளையம் - 607102,

கடலூர் மாவட்டம்.

அலைபேசி எண்: (+91) 9786453164

 

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு...!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

நம் அனைவரின் அந்த ஓரிறைவனின் சாந்தியும், சமாதானமும் நிகழட்டுமாக! ஆமீன்!!

நலம்! நலமறிய ஆவல்!! நிற்க...

எஸ். நூர் முஹம்மது ஆகிய நான் கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் மற்றும் நடுவீரப்பட்டு அருகிலுள்ள சி.என்.பாளையம் என்ற கிராமத்தில் மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வருகின்றேன்.

அதே கிராமத்தில் பல்லாண்டுகளாக சொந்தமாக தையல் தொழிலையும் செய்து வருகின்றேன். நாளொன்றுக்கு வருமானம் ரூ. 50லிருந்து ரூ. 100 வரை மட்டுமே கிடைக்கும். விஷேச காலங்களில் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும். அல்லாஹ்வின் அருளால் இந்த குறைந்த வருமானத்தில் தான் என் மனைவி மக்களை காப்பாற்றி வருகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்...

என் பிள்ளைகளில் மூத்த மகள் யாஸ்மின் தற்போது திருச்சியிலுள்ள ஒரு மகளிர் கல்லூரியில் BCA படிப்பில் இரண்டாமாண்டு சேருவதற்கு தயாராக இருக்கிறார்.

இளைய மகள் சுமைய்யா தற்போது ப்ளஸ்2 முடித்து விட்டு அதே கல்லூரியில் B.Sc., (Nutrition & Dietetics) படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்து உள்ளார்.

மகனார் முஹம்மது அனஸ் தற்போது பத்தாவது முடித்து விட்டு மார்க்கக் கல்வியுடன் இணைந்த படிப்பை தொடர திட்டுமிட்டு உள்ளார்.

மகள்கள் இருவரையும் ப்ளஸ்2 வரையும், மகனாரை பத்தாவது வரையும் அல்லாஹ்வின் பேரருளால் மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்தேன்.

ஆனால், தற்போது மேலும் படிக்க வேண்டும் என்று பிள்ளைகள் விரும்புகிறார்கள். என் சூழ்நிலையில் அவர்களின் கனவை நிறைவேத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

காரணம், மூத்த மகள் யாஸ்மின் படிப்பு செலவுக்காக கடந்த வருடம் மட்டும் (கல்வி கட்டணம் சுமார் 11,000 - விடுதி கட்டணம் சுமார் 6,000 - உணவு கட்டணம் சுமார் 7,000 - கல்லூரியின் இதரச் செலவுகள் சுமார் 2,000 - பயணச் செலவு சுமார் 5,000 மற்றும் பிள்ளைக்குத் தேவையான செலவுகள் சுமார் 2,000 என) ஏறக்குறைய 33,000 ரூபாய் வரை செலவு செய்து படிக்க வைத்தேன்.

படிக்காத தலைமுறையில் பிறந்த என் பிள்ளைகள் படித்தவர்களாக, அடுத்தவருக்கு வழிகாட்டுபவராக திகழ வேண்டும் என்ற ஆசையிலும், என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், நாம் சிரமபட்டாலும் பரவாயில்லை, என் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும்தான் தெரிந்த நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி இந்த செலவுகளை செய்தேன்.

நான் கேட்ட பல ;டங்களில் எனக்கு எந்தவொரு உதவியும் கிடைக்க வில்லை. என் குடும்ப உறவினர்களும் வசதியானவர்களாக இல்லை. கல்லூரி மூலமாக கல்வி உதவித்தொகையும் கிடைக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் மூத்த மகள் யாஸ்மின் இரண்டாம் ஆண்டு படிப்புக்கு செல்ல வேண்டும். இளைய மகள் சுமைய்யா முதலாம் ஆண்டு படிப்பிற்கு செல்ல வேண்டும். இதற்காக குறைந்த பட்சம் இவ்வருடத்திற்கு மட்டும் எல்லா செலவுகளையும் சேர்த்து சுமார் 60,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது.

கடந்த வருடம் செய்த செலவின் கடனே இன்னும் முடிவடையாத சூழலில் இப்போது என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மேலும் கடன் வாங்க முடியாத நிலை.

தெரிந்த ஒருவர்தான் என் பிள்ளைகளுக்கு தேவையானதையெல்லாம் செய்கிறார். உன்னால் முடியும்போது கடனை திருப்பி கொடுக்கலாம் என்று சொல்லித்தான் செலவுகளை பார்த்துக் கொள் கிறார். மீண்டும் மீண்டும் அவரை தொல்லைப்படுத்த விரும்பவில்லை.

அதனால்தான்அல்லாஹ்விற்காகஎன் பெண் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை கவனத்தில் கொண்டு சகோதர சகோதரிகளான தாங்கள்

1.         தங்களால் முடிந்த உதவிகள் செய்திடுமாறு அல்லது

2.         கல்வி உதவித் தொகை கிடைக்குமிடங்களில் என் பிள்ளைகளின் பெயர்களை சேர்த்து விடுமாறு அல்லது

3.         தங்களுக்கு தெரிந்த அமைப்புகள், நண்பர்கள் ஆகியோரிடம் என் பிள்ளைகளின் நிலைகளை எடுத்துச் சொல்லி உதவி புரியுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

என் பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக வரக்கூடிய உதவிகள் அனைத்தையும் இன்ஷா அல்லாஹ் அதற்காக மட்டும்தான் பயன்படுத்துவேன் என்றும், அதன் சார்பாக வாங்கப்பட்ட கடன்களை மட்டும் தான் அடைப்பேன் என்றும், மேலதிக உதவிகள் வந்து விட்டால் அவற்றை என் பிள்ளைகள் போன்று கல்வி கற்க வசதியில்லாத பிள்ளைகளுக்கு அளித்து உதவி செய்வேன் என்றும் இந்த மடல் மூலம் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உறுதியளிக்கின்றேன்.

இந்த கோரிக்கை அல்லாஹ், ரசூலுக்காக தாங்கள் ஏற்று, என் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

எல்லா வல்ல அல்லாஹ் நற்காரியங்கள் பல செய்யும் தங்கள் அனைவருக்கும் இம்மை மறுமை இரண்டிலும் நற்பாக்கியங்களை வழங்க வேண்டும் எனவும் துஆ செய்கின்றேன்.

நன்றி. வஸ்ஸலாம்

இப்படிக்கு,

தங்களின் உதவிகளை அன்புடன் எதிர்பார்க்கும் சகோதரன்

எஸ். நூர் முஹம்மது (டைலர்)

 

 

என் வங்கி கணக்கு விபரங்கள் (Bank Account Details):

S. Noor Mohamed,

A/C # 6655,

Indian Overseas Bank,

Naduveerapattu Branch (280),

Cuddalore District,

Pin code - 607102





--
என்றும் மாறா அன்புடன்...

குவைத்திலிருந்து...

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
Help Request Letter - Noor.pdf

Mohamed Umar

unread,
Jun 11, 2009, 7:48:16 AM6/11/09
to fro...@googlegroups.com

Insha Allah, lets try for ur needs...
pillaigalai nandraaga padikka vaiyungal,
u contant local TNTJ, TMMK and other muslims organisations...
they wil help u....
insha allah, i wil inform my cousine in panruti, he wil come to u help u...
endrum anbudan,
k.m. ommar...
--- On Thu, 6/11/09, பரங்கிப்பேட்டை கலீல <abka...@gmail.com> wrote:

hasan ibnu

unread,
Jun 12, 2009, 5:36:34 AM6/12/09
to fro...@googlegroups.com
this group entirely diverted from its ORIGINAL AIM ...
PL FILTER ALL THESE MAILS.......
HOW MANY OF YOU , IN THIS GROUP , LEARNT ISLAM  BY WAY OF THIS  GROUP ??? OUR MUSLIMS ARE NEARING TO HELL FIRE ..BUT WE STILL DO NOTHING BUT ENGRAGING BEGGING ....
--
Be Yourself @ mail.com!
Choose From 200+ Email Addresses
Get a Free Account at www.mail.com!

jaffar sherif

unread,
Jun 13, 2009, 7:50:58 AM6/13/09
to fro...@googlegroups.com
STOP ALL THESE ARGUMENTS AND EXTEND ALL YOUR POSSIBLE HELP TOWARDS THE NEEDY PEOPLE



--- On Sat, 13/6/09, Sharafdeen Ahamed <sharafde...@yahoo.com> wrote:

From: Sharafdeen Ahamed <sharafde...@yahoo.com>
Subject: Re: Re: கல்வி உதவி வேண்டி விண்ணப்பம்
To: fro...@googlegroups.com
Date: Saturday, 13 June, 2009, 3:37 PM

salam,
 
We should thing always,' we are muslims', .helping a brother  is also a very important   part of  the islam..


From: abdul majeeth <beebar...@yahoo.com>
To: fro...@googlegroups.com
Sent: Saturday, June 13, 2009 6:42:36 AM
Subject: Fw: Re: கல்வி உதவி வேண்டி விண்ணப்பம்

இது மிகவும் ஒரு தவறான வாதமாக நான் கருதுகிறேன், இஸ்லாமை தெரிந்து கொள்வதற்காக மட்டும் உருவாக்கப்பட்ட இந்த குழுமத்தில் இது போன்ற உதவிகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதில் என்ன தவறை கண்டுபிடுத்து விட்டார் இந்த நண்பர் என்று புரியவில்லை. இஸ்லாத்திற்கெதிரான கருத்துகளாக அல்லது தேவையற்ற வீண் வாதங்களாக இருந்தால் நீங்கள் சொல்வது சரி ஆனால் ஒரு ஏழை சகோதரனுக்கு உதவிக்கரம் தருமாறு வேண்டிக்கொள்ளும் இந்த செயலில் எந்த தவறும் இல்லை, இதுவும் நமது மார்க்கம் வலியுறுத்தியுள்ள ஒரு விஷயம்தான். எனவே தயவுசெய்து ஒருவருடைய இயலாமையை begging என்றெல்லாம் விமர்சிக்க வேண்டாம்.

--- On Fri, 6/12/09, hasan ibnu <ibnuh...@mail.com> wrote:

Bollywood news, movie reviews, film trailers and more! Click here.

syed abu thahir

unread,
Jun 14, 2009, 12:50:35 PM6/14/09
to fro...@googlegroups.com
all muslims are brothers. Help your brother if you can. Otherwise shut the mouth. Understand deen very clearly.

2009/6/13 jaffar sherif <jaffar...@yahoo.com>

True Muslim

unread,
May 22, 2020, 7:38:21 AM5/22/20
to நமக்குள் இஸ்லாம்
assalamu allaikum
Reply all
Reply to author
Forward
0 new messages