அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உலகில் எங்காவது ஓர் இடத்தில் மட்டுமே கிரகணம் ஏற்படும். உலகம் முழுமைக்கும் நிகழும் ஒரு நிகழ்ச்சியை, உலகின் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கும் வேறொரு நிகழ்ச்சியுடன் ஒப்பிடக்கூடாது. எடுத்துக்காட்டாக:
தொலைகாட்சியில் மையத்தைக் கொண்டு செல்லும் காட்சி, வானொலியில் பாங்கொலி கேட்பது. இவையெல்லாம் உலகில் பல இடங்களில் ஒவ்வொரு நிமிட நேரமும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இது போன்ற கேள்விகள் நாமும் கேட்கலாம்.
அயல் நாட்டுக்கு வேலைக்குச் சென்ற கணவரின் ஜனஸாவை, இந்தியாவில் இருக்கும் அவரது மனைவி தொலைக்காட்சியில் பார்க்கிறார். கணவர் இறந்து விட்டார் என்று உறுதிப்படுத்துகின்றது தொலைக்காட்சி செய்தி. இப்போது அந்தப் பெண் இத்தா இருக்கலாமா?
ரமளான் மாதம் கடமையான நோன்பிருக்கும் ஒருவர் அஸர் நேரத்தில் வேறொரு நாட்டில் நோன்பு திறப்பதைத் தொலைக்காட்சியில் பார்க்கிறார். இப்போது இவரும் நோன்பு திறக்கலாமா?
இப்படி விடை தேடும் வினாக்களை எழுதிக்கொண்டே போகலாம். வானொலியில் பாங்கொலி கேட்பது ஒருபுறம் இருக்கட்டும். நாம் வசிக்கும் இடங்களில் நம்மைச் சுற்றியுள்ள பல பள்ளிகளிலிருந்தும் ஒரு நேரத் தொழுகைக்கான பாங்கொலியை மறுபடியும், மறுபடியும் கேட்கிறோம். அல்லது ஒரே நேரத்தில் பல பாங்கொலி கேட்கிறோம். எல்லா பாங்குக்கும் பதில் சொல்ல வேண்டுமா? இதற்கு நபிவழியில் ஆதாரம் தாருங்களேன்!
பூமியில் அமைக்கப்பட்டுள்ளது ஒரு கஅபா. ஹஜ்ஜுக்கான அழைப்பு, அந்த இறையில்லம் சென்று வலம் வந்தால் தான் இபாதத் நிறைவேறும். தொலைக்காட்சிப் பெட்டிகள் எல்லாம் கஅபா என்று எண்ணிக்கொண்டால் உலகில் எத்தனை கோடி தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளனவோ அத்தனையும் கஅபாக்கள் என்கிறீர்களா?
கேள்வி:-
கிரகணம் ஏற்பட்டு விட்டது என்று நேரடியாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகிறது. கிரகணம் ஏற்பட்ட இடத்திற்குச் சென்று தான் கிரகணத் தொழுகையைத் தொழவேண்டும் என்று இஸ்லாம் சட்டம் இயற்றவில்லை. உலகிற்கெல்லாம் ஒரே நேரத்தில் ஒரு கிரகணம்தான் ஏற்படும் ''எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்'' (2:185) என்ற தலைப் பிறைக்குச் சொல்லும் சட்டமும் கிரகணத்துக்குப் பொருத்த முடியாது. நாடு நாடாய் சுற்றிவர கிரகணம் தேய்ந்து வளரும் பிறையல்ல. கிரகணம் ஏற்படும் நேரத்தில் எங்கு ஏற்படுகிறதோ அங்கேயே ஏற்பட்டு முடிந்துவிடும். (இறைவன் நாடினால் நீடிக்கும்) உலகிற்கெல்லாம் அந்த ஒரு கிரகணம் தான். இது வெறும் அனுமானம் அல்ல. உறுதிப்படுத்தப்பட்ட அறிவியல் உண்மை. என்பதை சகோதரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கிரகணம் குறித்து இஸ்லாம்.
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது. இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். (அல்குர்ஆன் 36:38)
சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது. இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (அல்குர்ஆன் 3640)
சூரியனும் சந்திரனும் விதிக்கப்பட்ட வரையரையிலிருந்து விலகிச் செல்லாமல் இறைவன் எவ்வாறு அமைத்துள்ளானோ அந்த அமைப்பிலேயே சுழலுகின்றன. சுழற்சியின் வரையரையில் சூரியனும் சந்திரனும் குறிப்பிட்ட ஒரு காலத்தில் நேர் கோட்டில் வருவதையே கிரகணம் என்கிறோம். இந்த நேரத்தில் இந்த இடத்தில் சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் சந்திக்கும் என்பதை இறைவன் திட்டமிட்டு அமைத்திருக்கின்றான் என்றால் அதை அறிவியல் துல்லியமாகக் கண்டுக் கணித்து விட்டது. அதனுடைய தாக்கம் தான் சமீபத்திய கிரகணத்தைத் திருவிழா போல் ஆவலுடன் காத்திருந்து மக்கள் கண்டுக் களித்தனர். இன்னும் சிலர் ''நான் கிட்டத்தில் போய் பார்க்கப் போகிறேன்'' என்று தொலைநோக்கிக் கருவியை எடுத்துக்கொண்டு வானூர்தியில் பறந்து சென்றும் பார்த்தனர். திருவிழா ஸ்பெஷல் என்பது போல் எதிர்காலத்தில் கிரகண ஸ்பெஷல் என்று கிரகணம் ஏற்பட்டுள்ளதை அருகில் சென்றுப் பார்க்க வானூர்திகள் முன்பதிவுகள் செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நபிமொழிகள்
"சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகள். எவருடைய மரணத்திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. மாறாக அதன் மூலம் அல்லாஹ் தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்'. (புகாரி 1048)
சூரியனும் சந்திரனும் இறைவனின் இரு அத்தாட்சிகள் என்றும் கிரகணம் ஏற்படுவது இறைவனின் எச்சரிக்கையாகும் எனவும் நபிமொழித் தெளிவுப்படுத்தி, கிரகணம் ஏற்படுவது அபாயம் எனவும் ஹதீஸ் எச்சிரிக்கிறது. ''அடியார்களை எச்சரிக்கிறான்'' என்றால் கிரகணம் ஏற்பட்ட இடத்தில் கிரகணத்தைப் பார்த்தவர்கள் மட்டுமே அல்லாஹ்வின் அடியார்கள் என்று பொருள் கொள்வதா! உலகில் உள்ள அனைவருமே அல்லாஹ்வின் அடியார்கள் என்று பொருள் கொள்வதா? (மாற்றுக் கருத்துடையோர் இங்கு சரியான விளக்கம் தரக் கடமைப்பட்டுள்ளனர்)
கிரகணத்தில் அபாயம் உள்ளது என்றால் கிரகணம் நிகழ்ந்த இடத்தினர் மட்டும் பாதிக்கப்படுவார்கள் என்றில்லை. உலக மாந்தர் அனைவருமே அந்த அபாயத்துக்கு உட்படுவார்கள். ஏனெனில் உலகிற்கெல்லாம் ஒரு சூரியன் ஒரு சந்திரன் அவைப் பாதிக்கப்பட்டால் உலகமே ஸ்தம்பித்துவிடும்.
எச்சரிக்கை
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தோம். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 1040)
சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும் பிரார்த்திக்கவும் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள். (புகாரி, 1059)
கிரகணம் ஏற்படுவது திடுக்குறும் அளவுக்கு ஆபத்தானது. எங்கு கிரகணம் ஏற்பட்டாலும், கிரகணம் ஏற்பட்டு விட்டது என்று உறுதி செய்யப்பட்டால் கிரகணத்திலிருந்து பாதுகாப்புப் பெறத் தொழவேண்டும், அல்லாஹ்வை நினைவுகூர வேண்டும், பிராத்திக்க வேண்டும், பாவமன்னிப்பும் தேட வேண்டும். அதுவும் விரைந்து செய்ய வேண்டும். கிரகணத்தால் ஏற்படும் அபாயம் உலகிற்கு பொதுவானது. என்பதால் கிரகணத் தொழுகையும் உலகிற்குப் பொதுவானது. தொலைக்காட்சியில் கிரகணம் ஏற்பட்டதை நேரடியாகப் பார்த்து கிரகணம் நிகழ்வை உலகமே உறுதிப்படுத்தியது. இதன் பிறகும் தான் வசிக்கும் இடத்தில் கிரகணம் ஏற்படவில்லை. அதனால் கிரகணத்தால் எனக்கு எந்த அபாயமும் இல்லை. நான் கிரகணத் தொழுகைத் தொழவேண்டியதில்லை, இறைவனை நினைவுகூர வேண்டியதில்லை. பிரார்த்திக்க வேண்டியதில்லை. பாவமன்னிப்புத் தேடவேண்டியதில்லை என்று கூறுபவர் மேற்கண்ட நபிமொழிகளுக்கு உரிய விளக்கங்கள் தரவேண்டும்.
கேள்வி:-
//விஞ்ஞானத்தின் மூலம் கிரகணம் ஏற்படுவதாக முன்கூட்டியே கணித்து சொல்லப்பட்டு விட்டால் உலகம் முழுவதும் கிரகண தொழுகையை தொழ வேண்டுமா அல்லது கிரகணம் ஏற்பட்ட இடத்தில் மட்டும் தொழுதால் போதுமா ?// - Ajmal S
பதில்:-
உலகில் எங்கு கிரகணம் ஏற்பட்டாலும் உலகம் முழுவதும் கிரகணத் தொழுகைத் தொழவேண்டும் என்பதே நமது நிலைபாடு. கூடாது என்பவர்கள் குர்ஆன், சுன்னாவின் ஆதாரங்களைக்கொண்டு நிறுவினால் எவ்வித ஆட்சேபணையின்றி ஏற்றுக்கொள்வோம்.
கேள்வி:-
//கிரகணத்தை தொலைகாட்சியில் கண்டவர்கள் மட்டும் தொழ வேண்டுமா? கண்டதை கேட்டவர்களும் தொழ வேண்டுமா? கூட்டாக கிரகணத்தொழுகை நடத்த வேண்டுமா? தனியாய் (தொலைக்காட்சியில் கண்டவர் மட்டும்) தொழலாமா?// - S.S. அலாவுத்தீன்
பதில்:-
உங்கள் கேள்விக்கான மற்ற விளக்கங்கள் மேலே சொல்லப்பட்டுள்ளது. கிரகணத் தொழுகைக்கு மக்கள் அழைக்கப்பட்டு நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையைக் கூட்டாக நடத்தியிருக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது. (புகாரி, 1045)
கிரகணத் தொழுகைத் தொழவாருங்கள் என மக்கள் அழைக்கப்பட்டு, நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றியுள்ளார்கள். (பார்க்க மேற்குறிப்பிட்டுள்ள புகாரி 1040வது ஹதீஸ்)
குறிப்பு:- தொலைக்காட்சியில் ஜனாஸாவைக் காட்டினால் அதற்கு எழுந்து நிற்க வேண்டுமா? வானொலியில் கேட்கும் பாங்கொலிக்கு பதிலளித்து பிரார்த்திக்க வேண்டுமா? போன்ற கேள்விகளுக்கு மேலதிக விளக்கம் தேவையெனில் தனித்தனி இழையில் பதிவு செய்யுங்கள். இந்த இழையில் கிரகணம் தொடர்பான விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்
அன்புச் சகோதரர் அலாவுத்தீன் அவர்களுக்கு,
கடமையான அமல்களை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்து இல்லை!
சுன்னத்தான அமல்களைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்று சொன்னால் உங்களைச் சிரமத்திற்குள்ளாக்கியதற்கும், சுன்னத்தான அமல்கள் விரும்பினால் செய்யுங்கள், விரும்பினால் விட்டுவிடுங்கள் என்று சொன்னால் அது உங்கள் ஆர்வத்தைக் குறைத்து நீங்கள் பெற வேண்டிய நன்மைகளை அலட்சிப்படுத்தியதற்கும் சொன்னவர் பொறுப்பேற்க வேண்டும்.
அன்பான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
சூரிய கிரகணம் சம்மந்தப்பட்ட விஷயத்தில் என்னுடைய ஆய்வை தங்கள் முன்
சமர்ப்பிக்கிறேன். இந்த கருத்து சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்வும்.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பூமியின் சுழற்சி, காலங்கள் மாறுவது,
பற்றி தமிழில் தெளிவாக அறிய கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.
http://www.islamkalvi.com/portal/?p=3721
சூரிய கிரகணம் சந்திர கிரகணம் இரண்டும் அல்லாஹ்வின் மாபெரும்
அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.
நபி(ஸல்) வாழ்க்கையில் சூரிய கிரகணத்திற்கு மட்டும் தான் தொழுகை
நடத்தியுள்ளார்கள் என பல ஹதீஸ்கள் வருகிறது. சந்திர கிரகணத்திற்கு நபி
(ஸல்) தொழுகை நடத்தியதாக எந்த குறிப்பும் இது வரை எனக்கு
கிடைக்கவில்லை. குறிப்பு கிடைதத்தால் எனக்கு தந்து உதவவும்.
சூரியனினால் ஏற்படும் ஒளியை அடிப்படையாக வைத்து நாம் நேரங்களை
குறிக்கிறோம். வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என சேர்ந்து நாட்களாக
மாறுகின்றன.
அதே சூரியனில் இருந்த ஒளியை பெற்று நாட்களுக்கு தேதியை அறிவிப்பது
சந்திரனின் மன்ஸில்கள். மன்ஸில்களுக்கான வெளிச்சம் ஏற்படுவது சூரிய
ஒளியின் மூலமாகத்தான்.
மேலும் சூரியனின் ஒளியால் நமக்கு பூமியில் ஏற்படும் வெளிச்சங்களையும்,
நிழல்களின் அளவுகளையும் வைத்து ஒவ்வொரு நாட்களின் ஐவேளை தொழுகைகளையும்
தொழுது வருகிறோம்.
சூரியனில் இருந்து ஏற்படும் ஒளியின் மூலமாகவும் சந்திரன் பூமியை சுற்றி
வருவதன் மூலமாகவும் சந்திரனுக்கு (அஹில்லா) பல படித்தரங்கள்
ஏற்படுகிறது.
நாட்களுக்கு அதாவது குறிப்பிட்ட கிழமைக்கு (உதாரணம் வெள்ளிக்கிழமை 1
ரமளான், சனிக்கிழமை 2 ரமளான்) தேதியை குறிப்பதும் சந்திரனுக்கு ஒரு
பணியாக அல்லாஹ் ஆக்கியுள்ளான்.
தற்போது நம் முன் உள்ள கேள்வி சூரிய கிரகண தொழுகை பற்றியது?
தொழுகை நேரம் என்பது உதாரணமாக ஆஸ்திரிலேயா வில் ஃபஜ்ர் தொழுது சுமார்
ஐந்தரை மணி நேரம் கழித்து இந்தியாவில் நாம் ஃபஜ்ர் தொழுகை தொழுவோம்.
நாம் தொழுது இரண்டரை மணிநேரம் கழித்து சவூதியில் ஃபஜ்ர் தொழுகை
நடைபெறும். சவூதியில் இருந்து மூன்று மணிநேரம் கழித்து ஆப்பிரிகா
நாடுகளில் ஃபஜ்ர் தொழுகை நடைபெறும்.
ஒரு நாளின் தொழுகையை முழுவதுமாக தொழுது முடித்திருந்தாலும்
முடித்திருக்காவிட்டாலும், சந்திரன் சம்மந்தப்பட்ட நாளுக்கு தேதியை
அறிவித்துவிடும்.
மேலும் அல்லாஹ் தன் திருமறையில் தொழுகை நேரங்குறிக்கப்பட்ட கடமையாக
உள்ளது என கூறுகின்றான்.
"நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த
இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும்
அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள். பின்னர் நீங்கள் அமைதியான நிலைக்கு
வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக
குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு
விதியாக்கப் பெற்றுள்ளது. 4:103"
கடமையான தொழுகைகளுக்கு நேரம் குறித்துள்ளார்கள்.
நாம் பெருநாள் தொழுகைகள் தொழுகிறோம் அதற்கு நபி(ஸல்) நேரம்
குறித்துள்ளார்கள்.
அது போல் கிரகணத்திற்கு அது ஏற்படுவதிலிருந்து விலகும் வரை என்ற நேரம்
குறிக்கப்பட்டுள்ளதை நாம் மறக்கக் கூடாது.
இதன் அடிப்படையில் கிரகணத்தொழுகைக்காக குறிக்கப்பட்ட நேரம் அது
ஏற்படுவதிலிருந்து விலகுவதாகும். அந்த நிகழ்வு உலகின் எந்த பகுதியில்
ஏற்படுகிறதோ அவாகள் மட்டும் தான் அந்த தொழுகையை தொழ வேண்டும்.
தொழுகையுடன் கிரகணத்தை சம்மந்தப்படுத்தி இஸ்லாம் கூறுவதால் கிரகணம்
நடைபெறாத பகுதிகளில் உள்ள மக்கள் கிரகணத் தொழுகை தொழவேண்டிய
அவசியமில்லை. கிரகணம் நடைபெறாத இடங்கள் இரவு நேர பகுதிகளில்
இருக்கும். . சூரிய கிரகணம் பகலில் தான் எற்படும். சூரிய கிரகணத்
தொழுகை என்பதே ஃபஜ்ர் நேரத்திலிருந்து மஃரிப் நேரத்திற்குள் ஏற்படும்
ஒரு நிகழ்வு தான்.
சந்திர கிரகணம் என்பது மஃரிப் நேரத்திலிருந்து ஃபஜ்ர் நேரத்திற்குள்
ஏற்படும் நிகழ்வு தான். அதுவும் எல்லாபகுதிகளுக்கும் கிரகணம்
ஏற்படாது. சந்திரனை பார்க்க முடியாத பகலில் உள்ள பகுதிகளும்
இருக்கும்.
சூரியன் சந்திரன் பூமி நேர் கோட்டிற்கு வரும் நிகழ்வு நடைபெற்றதும்
சந்திரன் புதிய மாதத்தின் சுற்றை ஆரம்பிக்கும். அந்த சமயத்தில்
சூரியனிலிருந்து வரும் ஒளி பூமியில் படவிடாமல் சந்திரனால்
தடுக்கப்படும். அந்த நிகழ்வு ஏற்படும் பகுதிகளுக்கு மட்டும் கிரகணத்
தொழுகை நடத்தினால் போதுமானது.
சூரியனில் இருந்து சந்திரனுக்கு செல்லும் ஒளியை, பூமி குறுக்கே வந்து
மறைக்கும் நிகழ்வு தான் சந்திர கிரகணம் எனப்படும்.
சூரிய கிரகணம் சந்திர மாதத்தின் கடைசி நாளில் தான் நடைபெறும்.
சந்திர கிரகணம் சந்திர மாதத்தின் பெளர்ணமி (நடு பகுதியில்) தினத்தில்
தான் ஏற்படும்.
மேலும் இதில் முக்கியமாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்
இன்னொன்று உள்ளது.
அது மேகமூட்டத்தினால் சூரியன் மறைந்து கிரகணம் நடைபெறும் பகுதிகளில் கூட
பார்க்க முடியாத நிலை ஏற்பட்டால், அவர்கள் தற்போது கிரகணம் கண்ணுக்கு
தெரியாவிட்டாலும் அந்த . தொழுகையை தொழுதாக வேண்டும். மேகத்திற்குள்
சூரிய கிரகணம் நடைபெறுகிறது என்ற உண்மை தெரிந்த பின்னும் அதை
செயல்படுத்தாமல் விட்டால் அது சரியாகாது என்பது என் கருத்து. தற்போது
மேகமூட்டமாக இருந்தாலும் நாம் கடமையான தொழுகையை தொழுதுதான் ஆகிறோம்
அதற்கு எந்த கணக்கை கொண்டு தொழுகை நேரங்களை குறித்து வைத்துள்ளோமோ
அதே கணக்கின் அடிப்படையில் தான் கிரகணத் தொழுகைகளின் நேரங்கள்
குறிக்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
மேலும் சூரிய கிரகணம் எந்த எந்த பகுதியில் எத்தனை மணியிலிருந்து எத்தனை
மணிவரை ஏற்படும் என்ற கணக்கை நாம் தற்போது முன் கூட்டியே அறிந்து கொள்ள
முடியும் என்பது அறிவியல் உண்மை. அதை நாம் வெறும் கண்களால் பார்க்க
முடியுமா முடியாதா என்பது உறுதியற்ற நிலை.
தற்போது கிரகணத்தை கண்ணால் பார்க்காதீர்கள் அது உங்கள் கண்பார்வையை
பறித்து விடும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அதனால் தான் என்னவோ
அல்லாஹ் தன் தூதர் மூலம் கிரகண நேரத்தில் தொழுகையை கடமையாக்கிவிட்டானோ?
என நான் கருதுகிறேன். அல்லாஹ்வே அனைத்து நுடபங்களையும் அறிந்தவன்.
எனவே கிரகணம் நடைபெறும் பகுதிகளில் மட்டும் தொழுகை நடத்தினால்
போதுமானது என்பது என் கருத்தாக பதிவு செய்கிறேன். தவறுகள் இருந்தால்
அழகிய முறையில் சுட்டிக்காட்டுங்கள்.
இப்படிக்கு
உங்கள் அன்புச்சகோதரன்
சிராஜ் ஏர்வாடி.
On Aug 22, 12:24 am, muslim <tomus...@gmail.com> wrote:
> வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்
>
> அன்புச் சகோதரர் அலாவுத்தீன் அவர்களுக்கு,
>
> கடமையான அமல்களை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்து இல்லை!
>
> சுன்னத்தான அமல்களைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்று சொன்னால் உங்களைச்
> சிரமத்திற்குள்ளாக்கியதற்கும், சுன்னத்தான அமல்கள் விரும்பினால் செய்யுங்கள்,
> விரும்பினால் விட்டுவிடுங்கள் என்று சொன்னால் அது உங்கள் ஆர்வத்தைக் குறைத்து
> நீங்கள் பெற வேண்டிய நன்மைகளை அலட்சிப்படுத்தியதற்கும் சொன்னவர் பொறுப்பேற்க
> வேண்டும்.
> எனவே உங்கள் சந்தர்ப்பம் சூழ்நிலையை மனதில் கொண்டு சுன்னத்தான அமல்களைச்
> செய்ய முடியுமா என்பது உங்கள் விருப்பத்திற்குரியது அதை நீங்கள் மட்டும்
> சுயமாகத் தீர்மானிக்கலாமே!
>
> சுன்னத்தான அமல்கள் விடுபட்டால் தண்டனை எதுவுமில்லை. நன்மைகள் பேரிழப்பாகும்.
>
> நீங்கள் புரிந்துகொள்ள இதே மாதிரியான வேறொரு கேள்வி -
> பதிலை மேலெழுப்பியுள்ளேன் அதையும் படித்துக்
> கொள்ளுங்கள்.
>
> 2009/8/21 Alauddeen Shaikh <alaudde...@gmail.com>
>
>
>
> > அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
> > கிரகணத்தொழுகை கட்டாயக்கடமையா? இதை ஒரு சுன்னதாக நிறைவேற்றியதால் நன்மை
> > என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆயினும் தொழாமல் விடுவதால் அல்லாஹ் குற்றம்
> > பிடித்து மறுமையில் தண்டனை தருவானா? விளக்கவும்.
>
> > S.S. அலாவுத்தீன்.
>
> > 2009/8/18 muslim <tomus...@gmail.com>
>
> > அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
>
> >> உலகில் எங்காவது ஓர் இடத்தில் மட்டுமே கிரகணம் ஏற்படும். உலகம் முழுமைக்கும்
> >> நிகழும் ஒரு நிகழ்ச்சியை, உலகின் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கும்
> >> வேறொரு நிகழ்ச்சியுடன் ஒப்பிடக்கூடாது. எடுத்துக்காட்டாக:
>
> >> தொலைகாட்சியில் மையத்தைக் கொண்டு செல்லும் காட்சி, வானொலியில் பாங்கொலி
> >> கேட்பது. இவையெல்லாம் உலகில் பல இடங்களில் ஒவ்வொரு நிமிட நேரமும்
> >> ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இது போன்ற கேள்விகள் நாமும் கேட்கலாம்.
>
> >> அயல் நாட்டுக்கு வேலைக்குச் சென்ற கணவரின் ஜனஸாவை, இந்தியாவில் இருக்கும்
> >> அவரது மனைவி தொலைக்காட்சியில் பார்க்கிறார். கணவர் இறந்து விட்டார் என்று
> >> உறுதிப்படுத்துகின்றது தொலைக்காட்சி செய்தி. இப்போது அந்தப் பெண் இத்தா
> >> இருக்கலாமா?
>
> >> ரமளான் மாதம் கடமையான நோன்பிருக்கும் ஒருவர் அஸர் நேரத்தில் வேறொரு நாட்டில்
> >> நோன்பு திறப்பதைத் தொலைக்காட்சியில் பார்க்கிறார். இப்போது இவரும் நோன்பு
> >> திறக்கலாமா?
>
> >> இப்படி விடை தேடும் வினாக்களை எழுதிக்கொண்டே போகலாம். வானொலியில் பாங்கொலி
> >> கேட்பது ஒருபுறம் இருக்கட்டும். நாம் வசிக்கும் இடங்களில் நம்மைச் சுற்றியுள்ள
> >> பல பள்ளிகளிலிருந்தும் ஒரு நேரத் தொழுகைக்கான பாங்கொலியை மறுபடியும்,
> >> மறுபடியும் கேட்கிறோம். அல்லது ஒரே நேரத்தில் பல பாங்கொலி கேட்கிறோம். எல்லா
> >> பாங்குக்கும் பதில் சொல்ல வேண்டுமா? இதற்கு நபிவழியில் ஆதாரம் தாருங்களேன்!
>
> >> பூமியில் அமைக்கப்பட்டுள்ளது ஒரு கஅபா. ஹஜ்ஜுக்கான அழைப்பு, அந்த இறையில்லம்
> >> சென்று வலம் வந்தால் தான் இபாதத் நிறைவேறும். தொலைக்காட்சிப் பெட்டிகள் எல்லாம்
> >> கஅபா என்று எண்ணிக்கொண்டால் உலகில் எத்தனை கோடி தொலைக்காட்சிப் பெட்டிகள்
> >> உள்ளனவோ அத்தனையும் கஅபாக்கள் என்கிறீர்களா?
>
> >> *கேள்வி:-*
> >> //உதாரணமாக இன்று கனடாவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை நாம் தொலைக்காட்சி என்ற
> >> விஞ்ஞான கண்டுபிடிப்பின் மூலம் நேரடியாக கண்டு கொண்டு இருக்கிறோம்.// - Ajmal S
>
> >> *************
>
> >> கிரகணம் ஏற்பட்டு விட்டது என்று நேரடியாக தொலைக்காட்சியில்
> >> காண்பிக்கப்படுகிறது. கிரகணம் ஏற்பட்ட இடத்திற்குச் சென்று தான் கிரகணத்
> >> தொழுகையைத் தொழவேண்டும் என்று இஸ்லாம் சட்டம் இயற்றவில்லை. உலகிற்கெல்லாம் ஒரே
> >> நேரத்தில் ஒரு கிரகணம்தான் ஏற்படும் *''எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர்
> >> அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்'' *(2:185) என்ற தலைப் பிறைக்குச் சொல்லும்
> >> சட்டமும் கிரகணத்துக்குப் பொருத்த முடியாது. நாடு நாடாய் சுற்றிவர கிரகணம்
> >> தேய்ந்து வளரும் பிறையல்ல. கிரகணம் ஏற்படும் நேரத்தில் எங்கு ஏற்படுகிறதோ
> >> அங்கேயே ஏற்பட்டு முடிந்துவிடும். (இறைவன் நாடினால் நீடிக்கும்) உலகிற்கெல்லாம்
> >> அந்த ஒரு கிரகணம் தான். இது வெறும் அனுமானம் அல்ல. உறுதிப்படுத்தப்பட்ட
> >> அறிவியல் உண்மை. என்பதை சகோதரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
>
> >> *கிரகணம் குறித்து இஸ்லாம்.*
>
> >> *இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று
> >> கொண்டிருக்கிறது. இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய
> >> (இறை)வன் விதித்ததாகும்.* (அல்குர்ஆன் 36:38)
>
> >> *சூரியன் சந்திரனை
>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
இதனால் தான் நபி(ஸல்) கிரகணத்தின் போது பயந்தார்கள். கிரகணம் ஏற்படும் நாளில் தான் மேற்கண்ட வசனத்தில் உள்ளபடி சந்திரன் ஒளியிழந்து சூரியன் முன்னே தோன்றும் என்பதையும், அதே போல் கிரகணம் நடக்கும் நாளின் மூலமாக தான் கியாம நாள் ஏற்படும் என்ற அறிவியல் நபி(ஸல்) தெரிந்து வைத்திருந்ததும் மேலும் ந்ம்மை சிந்திக்கவைக்கிறது.
சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூறவும் பிரார்த்திக்கவும் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள். (புகாரி, 1059)
சூரிய கிரகணம் என்பது மாத முடிவை துல்லியமாக நமக்கு காட்டுகிறது என்பதை வி்ட உலக முடிவு நாள் என்பது கிரகணம் ஏற்படும் ஒரு நாளில் தான் வரும் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
இதற்கு கீழுள்ள ஹதீஸ்தான் நமக்கு கிரகணத்திற்கான தொழுகை நேரத்தை சுட்டிக்காட்டுகிறது. கிரகணம் ஆரம்பித்ததில் இருந்து அது விலகும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள் என்பதை தெரிவிக்கிறது.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தோம். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 1040)
மேலும் கீழ் குறிப்பிடப்படும் வசனத்தில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு நேரங்குறிக்கப்பட்ட கடமை என உள்ளளதாலும், இதில் கடமையான தொழுகைகளுக்கு என்று குறிப்படாமல் பொதுவாக எல்லா தொழுகைகளுமே நேரங்குறிக்கபட்ட தொழுகையாகத்தான் இருக்கும் என இவ்வசனத்ததில் இருந்து புரிய முடிகிறது.
நம்முடைய தூதர் உங்களுக்குக் ஏவியதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எதை விட்டு அவர் உங்களைத் தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். அல்குர் ஆன் 59:7
அல்லாஹ் குர்ஆனில் நாம் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களில் நாம் தூதுருடைய நடவடிக்கையையும் அனுமதியை பார்ப்போம். அச்சமயத்தில் தூதர் ஏவாத ஒன்றை நாம் மார்க்கத்தில் உள்ளது என்று கூற முடியுமா? அவர் தடுக்காத ஒன்றை மக்களிடம் சென்று தடுக்க முடியுமா?
இவை தான் என் ஆய்வில் இருந்து எனக்கு புலப்பட்டவைகள். எனவே இதில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும். சரியாக இருந்தால் உங்கள் ஆய்வை பரீசீலனை செய்து ஏற்றுக்கொளளலாம்.
இப்படிக்கு
அன்புடன்
சிராஜ் ஏர்வாடி
சகோதரர் ஜி.என் அவர்களுக்கு ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்”
என்னிடம் கிரகணத்தொழுகை பற்றிய கேள்விக்கு ஆதாரப்புர்வ விளக்கம்
கேட்டிருந்தீர்கள் நான் உம்மிதான் எனினும் என் அறிவுக்கு எட்டியதை தங்கள்
முன் சமர்பிக்கின்றேன்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கிரகணத் தொழுகை
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள்
அப்போது தொழுதார்கள். அத்தொழுகையில் பகரா அத்தியாயம் ஓதுமளவுக்கு
நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள்.
(ருகூவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை
விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது
முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது.
பிறகு ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல்
நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச்
செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட
நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக
இருந்தது.
பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல்
நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச்
செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ஸஜ்தாச்
செய்தார்கள்.
கிரகணம் விலகிய நிலையில் தொழுது முடித்தார்கள்.
(முடித்ததும்) 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு
அத்தாட்சிகளாகும். எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ அவற்றிற்குக்
கிரகணம் பிடிப்பதில்லை. எனவே கிரகணத்தை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவு
கூருங்கள். என்று நபி(ஸல) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள்
'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் எதையோ பிடிக்க முயன்று பிறகு பின்
வாங்கியது போல் நாங்கள் கண்டோமே ( அது ஏன்?)' என்று கேட்டார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் சொர்க்கத்தைப் பார்த்தேன். அதன் ஒரு
குலையைப் பிடிக்க முயன்றேன். அதை நான் பிடித்திருந்தால் இந்த உலகம்
உள்ளளவும் நீங்கள் அதை உண்பீர்கள். மேலும் நரகத்தையும் கண்டேன். அதை விட
மோசமான காட்சியை ஒருபோதும் நான் கண்டதில்லை. மேலும் நரகவாசிகளில்
பெண்களையே அதிகமாகக் கண்டேன்' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே!
அது ஏன்? என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'பெண்கள் நிராகரிப்பதன் காரணத்தினால்' என்று
விடையளித்தனர். 'அல்லாஹ்வையோ நிராகரிக்கிறார்கள்' என்று
கேட்கப்பட்டதற்குக் 'கணவனை நிராகரிக்கிறார்கள்; காலமெல்லாம் ஒருத்திக்கு
நீ உதவிகள் செய்து உன்னிடம் ஏதேனும் ஒரு குறையைக் கண்டால் உன்னிடம் எந்த
நன்மையையும் நான் காணவில்லை என்று கூறி விடுவாள்' என்று
விடையளித்தார்கள். Volume 1 – Book 16
எனது சொந்த கருத்துக்கள் !
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள்
அப்போது தொழுதார்கள். நாமும் சூரிய கிரணகனத் தொழுகையை தொழ வேண்டும்
என்பது உறுதியாகிறது!
கிரகணம் விலகிய நிலையில் தொழுது முடித்தார்கள். நாமும் கிரணகனம்
விலகும் வரை தொழ வேண்டும் என்பது உறுதியாக தெரிகிறது!
இன்று அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது உண்மைதான்! அந்த அறிவியல்
வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் திருமறையின் பல்வேறு வசனங்கள் உள்ளன.
இதை நான் மறுக்கவில்லை! நான் இதை மறுத்தால் மார்க்கத்திற்கு முரணாக
நடந்துக் கொண்டிருந்தால் நான் பாவியாகவிடுவேன், மாறாக எனனுடைய வாதம்
என்னவெனில் அறிவுப்புர்வமாக விளக்கம் தேவை என்பது தான்! ஒரு வசனத்தை
முன்வைத்து விட்டு இதுதான் உண்மை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு
பதிலாக இவ்வாறு உள்ளது இதற்கு இவ்வாறு முடிவெடுக்கலாம் என்று பதில்
கூறினால் சாலச்சிறந்ததாக இருக்கும்!
எனது கேள்விகள் என்னவெனில்
கேள்வி எண் 1
சமீபத்தில் நேர்ந்த சூரிய கிரகணம் இந்தியாவில் முழுமையாய்த் தெரிந்த
அளவு மற்ற நாடுகளில் தெரியாமல் குறைவாகவே கிரகணம் தெரிந்தது.
அப்படியானால் தொழுகை ஒரு இடத்தில் நீட்டியும் ஒரு இடத்தில் சுருக்கியும்
தொழ வேண்டுமா?
கேள்வி எண் 2
அமெரிக்காவில் பகலில் சூரிய கிரணகனம் தென்படுகிறது அமெரிக்க முஸ்லிம்கள்
கிரகணத் தொழுகையை தொழுகின்றனர் அதே வேளையில் இந்தியாவில் நல்லிரவு நேரம்
இப்போது இப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வாறு தொழுவது!
கேள்வி எண் 3
இன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவில் சூரிய கிரகணம் தெரிந்து நபிகளார்
வாழ்நத மக்கா மற்றும் மதீனாவில் சூரிய கிரகணம் தென்படவில்லை எனில் மக்கா
மற்றும் மதினாவில் கிரகணத் தொழுகை நடைபெறுகிறதா?
கேள்வி எண் 4
சூரிய கிரகணம் ஒவ்வொறு பகுதியிலும் இத்தனை விநாடிகள் தான் நடைபெறும்
என்று விஞ்ஞானிகளால் முன் கூட்டியே அறிக்கை விடப்படுகிறது அப்படியானால்
கிரகணத் தொழுகையை முன் கூட்டியே இத்தனை ரக்காத்துக்கள் என்று
தீர்மாணிக்கலாமா?
கேள்வி எண் 5
நபிகள் (ஸல்) அவர்கள் கிரகணம் விலகிய நிலையில் தொழுது முடித்தார்கள்
என்று கூறப்படுகிறது அப்படியானால் இன்று நாம் நம்பகுதியில் தெரியும்
சூரியகிரகணத் தொழுகையை அது விலகும் வரை தொழலாம் என்பது உறுதியான தகவல்
தான் ஆனால் தாங்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் எத்திவைக்கும்போது
இந்தியாவில் கிரகணம் தெரியவில்லை அமெரிக்காவில் தெரிகிறது என்று
வைத்துக்கொள்வோம் அமெரிக்காவை பார்த்து நாம் தொழுதுகொண்டிருக்கிறோம்
என்றால் கிரகணம் படிப்படியாக மற்ற நகரங்களுக்கு நகரும் எனவே விஞ்ஞான
அடிப்படையில் கிரகணம் புமியை விட்டு விலகும் வரை தொழுதுக்கொண்டே
இருக்கவேண்டுமா?
முடிவுரை
சகோதரரே! மீண்டும் மீண்டும் நான் இந்த குழுமத்தில் தெரிவிப்பது
என்னவெனில் மார்க்கத்தை நான் குறைவாகவே பெற்றுள்ளேன் நான் கூறும்
கருத்துக்கள் என்னுடைய சொந்தக்கருத்துக்களே நான் இங்கு விதண்டாவதாம்
செய்ய வரவில்லை மாறாக இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துக்கொள்ளவே
வந்துள்ளேன்! நான் கூறிய கருத்துக்களுக்கு நானே
பொறுப்பேற்றுக்கொள்கிறேன்!
நான் என்னுடைய கருத்துக்கள் மூலம் யாரையும் நிர்பந்திக்கவோ? எந்த
யாரையும் குஷிபடுத்தவோ நாடவில்லை அல்லது நான் கூறுவதுதான் உண்மை என்று
ஆணவத்திலும் இல்லை (இதை அல்லாஹ் நன்கறிவான்) மாறாக மார்க்கத்தை
காலப்போக்கில் எவ்வாறு அறிந்துக்கொள்வது என்பது தான் என் சந்தேகம்
அதனால்தான் சில கேள்விகள் இங்கு எழுப்பினேன்.
அந்த கேள்விகளால் நான் இந்த கூகுல் குழுமத்தில் பெற்ற கூலி என்ன தெரியுமா?
முட்டாள்!
Shame! Shame!
வார்த்தைகளால் விளையாடாதே! அல்லாஹ்வுக்கு பயந்துக்கொள்! என்றுதான்!
என் அருமைச் சகேதரர்களே!
நபிகளார் இந்த சகோதரர்களைப் போன்றுதான் நடந்துக் கொண்டார்களா? இதோ
கீழ்கண்டவைகளை படியுங்கள்!
கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ, ஏசுபவராகவோ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்கவில்லை. (ஒருவரைக்) கண்டிக்கும்
போது கூட "அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும்''
என்றே கூறுவார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ர-), நூல்: புகாரி (6046)
திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை ஆராய்ந்தால் அது கடலின் ஆழம் வரை
இருக்கும் எனவே எந்த ஒரு சொல் செயல் மற்றும் நடைமுறையாக இருந்தாலும் அது
திருமறை மற்றும் நபிவழியில் தான் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!
அதனால்தான் நான் சில கோபமூட்டும் கேள்விகளை கேட்டிருந்தேன்! நான் கேட்ட
கேள்விகளின் விதம் தவறாக இருக்கலாம் ஆனால் என்னுடைய நோக்கம் மக்கள்
வழிகெடக்கூடாது என்பதற்காகவே!
காரணம் நாம் அரபியர்களல்ல மாறாக தமிழ் பேசக்கூடிய மக்கள் நம்
மூதாதையர்களை வழிகெடுக்க (இணைவைப்பு) கூட்டம் தவறான பாதையை காட்டியது
இன்றுவரை அதன் தாக்கம் நம்மைவிட்டு விலகவில்லை மேலும் இந்த கூட்டத்தின்
மூலம் நம்முடைய மறைந்த மூதாதையர்கள் வழிகெட்டு இன்று கப்ரு வேதனையில்
இருப்பார்களோ என்ற ஐயமும் ஏக்கமும்தான்! யார் என்ன சொன்னாலும் அதை
கேட்டுக்கொண்டு போவதற்கு நாம் என்ன பொதி சுமக்கும் கழுதைகளா? இல்லையே!
மாறாக சிந்திக்கும் ஆற்றல் பெற்ற முஸ்லிம்கள்தானே!
இங்குள்ள மார்க்க அறிஞர்கள் நாம் கூறுவதுதான் உண்மை என்று கூறுகின்றனர்
சரி! மார்க்கம் என்பது ஒருசாராருக்கு மட்டும்தான் சொந்தமானதா?
மார்க்கத்தில் பல்வேறு ஆலிம்களும் உலமாக்களும் அமைப்புகளும் உள்ளனவே
உங்கள் கருத்துக்களை மக்கள் முன் சமர்ப்பிக்கப்படும் முன் நீங்கள் தீர
ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வராமல் சர்வ சாதாரணமாக மக்களின் முன்
வைக்கிறீர்களே இதைத்தான் நான் எதிர்க்கிறேன்!
மார்க்கத்தில் விஞ்ஞான ரீதியில் முடிவெடுக்க அனைத்து ஜமாஅத் மற்றும்
அனைத்து இஸ்லாமிய நாடுகளின் ஒருமித்த கருத்துக்கு வராமல் நாம்
கூறுவதுதான் உண்மை! நாம் தான் இஸ்லாத்தை எல்லோரை விட மிக அறிந்தவர்கள்
என்று எண்ணிக்கொள்வது எனக்கு வேதனையளிக்கிறது!
சிந்தியுங்கள் சகோதரரே!
நபித்துவம் வருதற்கு முன் நபிகளார் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத் என்ற
அந்த கல்லை காபாவில் நிர்மாணிக்கும்போதும் கூட்டாக இணைந்துதானே அதை
நிர்மாணித்தார்கள் அவர் நாடியிருந்தால் நான்தான் இங்குள்ளவர்களின் அமீன்
எனவே நான்தான் அந்த ஹஜருல் அஸ்வத் கல்லை நிறுவுவேன் என்று கூறவில்லையே!
பொதுவாக கலந்து பேசிதானே ஒரு முடிவுக்கு வந்தார்கள்! இந்த குரைஷிகளிடம்
இருந்த ஒற்றுமைகூட இன்றைய முஸ்லிம்கள் மத்தியில் இல்லை எனில் நாம்
முஸ்லிம்கள் என்று கூறுவதற்கே அர்த்தமில்லையே!
இந்த வழிமுறையை பின்பற்றி விஞ்ஞான ரீதியில் எடுக்கும் முடிவுகளுக்கு
யாராவது தலைமைதாங்கி அனைத்து ஜமாஅத்தினரையும் வரசொல்லி அழைப்பு
விடுத்திருக்கிறீர்களா? அல்லது தன்னிச்சையாக முடிவெடுக்கிறீர்களா?
சகோதரர் ஜி.என் அவர்களுக்கு இந்த குழுமத்தை நிர்வகிக்கும் நிர்வாகிகள்
ஒருபோதும் குறை கூறும், திட்டும் சகோதரர்களுக்கு அறிவுரைகூட
கூறமாட்டார்களா?
ஒவ்வொருவருக்கும் கண்ணியம் உள்ளது அதை ஒருவரை ஒருவர் மதித்தால்தான் நாம்
முஸ்லிம்கள் இதுகூடவா சொல்லித்தரவேண்டும் இந்த குழும நண்பர்களுக்கு!
முதலில் மார்க்க அறிஞர்களை திட்டுவது, உலமாக்களை குறிப்பாக தமிழகத்தில்
உள்ள ததஜம-ன் அறிஞர் பெருமக்களை திட்டி வசை பாடுவததென்றால் இந்த
குழுமத்தில் உள்ள சிலருக்கோ சர்க்கரை பொங்கள் சாப்பிட்ட மாதிரிதான்!
பிறகு இந்த கூகுல் குழுமத்தில் உள்ளவர்களை கேலி கிண்டல் செய்வது,
திட்டுவது, என்னையும் திட்டித்தீர்த்தார்கள்! இறுதியாக தற்போது சகோதரர்
முஹம்மது அப்பாஸ் அவர்களை சாடுகிறர்கள்! திட்டுவாங்குவது என்பது ஒன்றும்
புதிதல்ல மார்க்த்திற்காக எத்தனையோ மக்கள் மடிந்துள்ளனர் இதை காணும் போது
ஆவேசம் கொண்ட நம் மனம் அமைதியுறுகிறது! பரவாயில்லை திட்டுங்கள்!
திட்டுங்கள்! அல்லாஹ் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்
ஏனெனில் அவன் அல்பஷீர்!
உணர்ந்துக்கொள்ளுங்கள் சகோதரர்களோ நன்மையோ தீமையோ ஒவ்வொன்றையும்
எடுத்தெழுதும் வானவர்கள் நம் அருகில்தான் உள்ளனர்! நமது ஏடுகள் நம் முன்
வைக்கப்படும்போது தான் ஒவ்வொருவரும் தாம் செய்த செயலுக்கு
கைசேதப்படுவார்கள்! இதை மட்டும் மறந்துவிடாதீர்கள்!
நானும் ஜமாஅத் ஒற்றுமைக்கு விமர்சனம் செய்திருந்தேன் ஆனால் தனி மனிதனை
சுட்டிக்காட்டி கேவலமான முறையில் அல்லாமல் எச்சரிக்கையாகவே
எழுதியிருந்தேன்!
இந்த குழும நிர்வாகிகள் யாராவது எப்படியாவது பேசிக்கொள்ளட்டும் நமக்கேன்
வம்பு என்று மவுனம் சாதிப்பது ஏன்? ஏசுவதும் பேசுவதும் அன்றாட
நடவடிக்கையாகிவட்டது இந்த குழுமத்தில் ஏன் இந்த அவல நிலை! இதற்கு
முடிவேதும் கிடையாதா?
இங்கு குர்ஆன் ஹதீஸ்களை விரும்புபவர் கை ஓங்கியிருக்கவில்லை மாறாக
விஞ்ஞானத்தை நம்புபவர்களது கைதான் ஓங்கியிருக்கிறது! கீழ்கண்ட நபிமொழியை
அறிந்துக்கொள்ளுங்கள் இக்குழும சகோதரர்களே!
எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியில் உள்ளதையும் இரண்டு தொடைகளுக்கு
மத்தியில் உள்ளதையும் சரியாகப் பயன்படுத்தப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ
அவருக்குச் சொர்க்கத்திற்கு நான் பொறுப் பேற்று கொள்கின்றேன் என்பது நபி
மொழியாகும். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்
இந்த கடிதத்திற்கும் விமர்சனங்கள் வரும்! திட்டுக்கள் வரும் என
எதிர்பார்க்கிறேன்! வரட்டும் விமர்சனங்கள் திட்டுக்கள் அல்லாஹ்
இருக்கிறான் எனக்கேது பயம்! அல்லாஹு அக்பர்!
அல்ஹம்துலில்லாஹ்,
அன்புடன்
சிராஜ்
2009/8/25 AERO TRAVELS <eru...@gmail.com>:
--
மார்க்க ஒற்றுமைக்கு அல்லாஹ்வின் அழகிய அழைப்பு
நூஹுககு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன்
மார்க்கமாகியிருக்கிறான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம்
அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம்
உபதேசித்ததும் என்னவென்றால் “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை
நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே- இணைவைப்போரை
நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெறும்
சுமையாகத் தெரிகிறது – தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால்
தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்- (அவன்) முன்னோக்குபவரை அவன் தன்பால்
நேர்வழி காட்டுகிறான் (உலகப்பொதுமறை திருக்குர்ஆன் 42-13)
அன்பின் குழும சகோதரர்களுக்கு,
பதிவுக்கு தொடர்பில்லாத விஷயங்களை இங்கு எழுத வேண்டாம். குழுமத்தின் குறைகளை நிர்வாகிக்குத் தெரிவிப்பதெனில் தனிமடல் அல்லது தனிப்பதிவில் தெரிவிக்கலாம். சகோதரர் சிராஜ் பதிவு குறித்த வாதங்கள் மற்றும் கேள்விகள் தவிர மற்றதை தனி இழையில் பதிவு செய்யவும் நன்றி!
ஆரோக்கியமான கருத்துக்களமாக அமையட்டும்.
நபிமொழிச் சான்றுகளிலிருந்து எட்டிய சிந்தனைக் கருத்துகளையே பதிவு செய்திருந்தோம். சூரியன் நேரங்காட்டியாகவும் பிறை நாள், மற்றும் மாதம் காட்டியாகவும் இருப்பதால் பிறை பற்றிய விவாதத்தோடு கிரகணம் தொடர்பான கருத்துகள் பொருத்தமாக இருக்காது என்று எண்ணியே கிரகணம் பதிவைத் தனி இழையில் பதிவு செய்ய வேண்டியிருந்தது.
இங்கும் பிறை பற்றி இல்லாமல் கிரகணம் பற்றிய கருத்துகளை மட்டும் பகிர்ந்து கொள்வது சரி எனத் தோன்றுகிறது. ஏனெனில் கிரகணம் நேரங்காட்டியோ, நாள்காட்டியோ அல்ல. குறிப்பிட்ட தொழுகையின் நேரங்களை அறிவிக்கும் சூரியனாகவும் இல்லை. கிரகணம் ஏற்படும்போது அது விலகும் வரைத் தொழவேண்டும் என்றே நபிமொழிகளிலிருந்து விளங்குகிறோம். மற்றபடி மன்ஸில், அஹில்லா என்ற படித்தரங்கள் எதுவும் கிரகணத்துக்கு இல்லை.
சூரியன், சந்திரன், கிரகணம்.
இறைமறை 75:8வது வசனத்தில் وَخَسَفَ الْقَمَرُ சந்திர கிரகணத்திற்கு இறைவன் கூறிய வார்த்தையை لَا يَخْسِفَانِ சூரிய கிரகணத்துக்கும் நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். நபித்தோழர்கள் மற்றும் அறிவிப்பாளர்களும் குர்ஆனில் சந்திர கிரகணத்துக்குப் பயன்படுத்திய வாசகத்தை يَوْمَ خَسَفَتْ الشَّمْسُ சூரிய கிரகணத்திற்கும் பயன்படுத்தியுள்ளனர்.
சூரிய கிரகணத்திற்காக நபி (ஸல்) தொழுதிருக்கிறார்கள். சந்திர கிரகணத்திற்காக தொழுததாக அறிவிப்பு எதுவும் நாம் அறியவில்லை. எனினும் சந்திர கிரகணத்துக்காகவும் தொழ வேண்டும் என்று நபிமொழிகளில் ஏவல் உள்ளது. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் இரண்டுமே கிரகணம் தான் என்பதில் நம்மில் மாற்றுக் கருத்து இல்லை.
சூரிய கிரகணம் பகலில் ஏற்படும். சந்திர கிரகணம் இரவில் ஏற்படும் என்பது சரியே. ஆனால் கிரகணம் ஏற்பட்டால் தொழுங்கள் என்பது பொதுவான விதியாக உள்ளது. சூரிய கிரகணத் தொழுகையை பகலில் தொழலாம். சந்திர கிரகணத் தொழுகையை இரவில் தொழலாம். எனவே கிரகணம் ஏற்பட்டால் கிரகணத் தொழுகையை பகலிலும் தொழலாம், இரவிலும் தொழலாம். என்பதை நபிமொழிகளிலிருந்து விளங்க முடிகிறது. கிரகணத் தொழுகையைத் தொழுவதற்குக் கிரகணம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதே நிபந்தனை. இதுதான் கிரகணத் தொழுகைக்கானக் குறிப்பிட்ட நேரம்.
கிரகணம் ஏற்பட்டுள்ளது என உறுதியாக செவி வழித் தகவல், தொலைக்காட்சி வழிக் காட்சித் தகவலாக அறிந்தால் (தொழக்கூடாத நேரமாக இருந்தால் தவிர) கிரகணத் தொழுகை தொழ வேண்டும் என்பதே நபிமொழிகளின் தூண்டுதலாகவுள்ளது.
//மேலும் பகலில் நடைபெறும் நிகழ்விற்கு இரவில் நடுநிசியில் தூங்கிக்கொண்டிருப்போரை எப்படி நாம் தொழ சொல்லமுடியும். குர்ஆனிலோ ஹதீஸிலோ நாம் செய்யும் செயலுக்கு ஒரு ஆதாரமாவது இருக்க வேண்டாமா?// - சிராஜ் ஏர்வாடி.
துங்குபவரை எழுப்பித் தொழச் சொல்ல முடியுமா? என்றில்லாமல் இந்த நாளில், இந்த நேரத்தில் கிரகணம் ஏற்படும் என்று அறிவியல் உறுதிபடுத்திவிட்டது என்பதால் அது இரவு, பகல் எந்த நேரமாக இருந்தாலும் அதை எதிர்பார்த்து கிரகணம் பிடித்ததை உறுதி செய்தபின் உலகில் எந்த மூலையில் உள்ளவரும் கிரகணத் தொழுகையைத் தொழலாம் இது நபிவழிக்கு மாற்றமாக இல்லை.
மாற்றமெனில் தகுந்த ஆதாரங்களுடன் தெரியப்படுத்துங்கள்.
சகோ,
சிராஜ், salaam, .,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் சிராஜ் ஏர்வாடி அவர்களே தாங்கள் என்னுடைய கருத்தை ஓரளவு
புரிந்துக்கொண்டுள்ளீர்கள் என்று எண்ணுகிறேன்! பிறை மற்றும் கிரகணகனத்
தொழுகை ஒன்றும் தீராத பிரச்சினையள்ள காரணம் ஹிஜிரி ஆண்டை
ஒழுங்குபடுத்தியது நபிகளார் (ஸல்) அல்ல மாறாக உத்தம சஹாபிகள் என்னுடைய
இந்த பதிலை சற்று கூர்ந்து கவனிக்கவும்!
சகோதரர் சிராஜ் ஏர்வாடி அவர்களின் பதிவு
//நீங்கள் சொல்வது போல் "நபி(ஸல்) கூறியதற்கு என்ன ஆதாரத்தை
மேற்கொள்காட்டுகிறீர்கள்". ஒருமித்த கருத்துக்கு வராமல் மக்களிடம்
கூறக்கூடாது என்பதற்கு என்ன ஆதாரம் தெளிவுபடுத்தினால் நாம் அனைவரும் அந்த
முடிவுக்கு வரமுடியும் //
சிராஜ் அப்துல்லாஹ்வின் பதில்
சகோதரர் சிராஜ் ஏர்வாடி அவர்களே கலந்தாலோசனை பற்றி நபிகளார் கூறியதைவிட
அல்லாஹ் நபிகளாருக்கு கூறியதை நினைவு கூறுங்கள். இதோ அல்லாஹ்வின் திருமறை
வசனம்
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக)
நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின
சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும்
ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்தி
விடுவீராக அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக தவிர, சகல
காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி)
நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பு ஏற்படுத்துவீராக!
- நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பு ஏற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் 3: 159)
நபிகளாரின் மரணத்திற்கு பின் உமர்[ரலி] அவர்களின் ஹிஜிரி ஆலோசனை
ஹிஜ்ரிஆண்டு உருவான வரலாறு
நபி[ஸல்]அவர்கள் காலத்தில் ஹிஜ்ரி ஆண்டு நடைமுறையில்
இருக்கவில்லை.நபி[ஸல்]அவர்களின் மறைவுக்கு பின் இரண்டாவது அமீராக
பொறுப்பேற்ற சொர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட
உமர்[ரலி]அவர்கள், நமக்கென ஒரு நாள்காட்டி அவசியமென கருதி ஏனைய
சகாபாக்களோடு ஆலோசனை செய்தார்கள். எந்த நாளை முன் வைத்து நாம் ஆண்டை
உருவாக்குவது என்ற விவாதத்தில்,
ரசூல்[ஸல்] பிறந்த நாளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் உருவாக்கலாம்
என்று ஒருசாராரும்,
ரசூல்[ஸல்]நபியாக்கப்பட்ட நாளை முன்வைத்து உருவாக்கலாம் என்று ஒரு சாராரும்,
இஸ்லாத்திற்காக நடைபெற்ற முதல் தியாகப்பயனமான அபிசீனியா ஹிஜ்ரத் நாளை
முன்வைத்து உருவாக்கலாம் என்று ஒருசாராரும்,
ரசூல்[ஸல்]அவர்கள் மதீனா ஹிஜ்ரத் நாளை முன்வைத்து ஒருசாராரும் கருத்து
கூற இறுதியாக நபியவர்களின் மதீனா ஹிஜ்ரத் நாளை மய்யமாக கொண்டு உமர்[ரலி]
அவர்கள் ஹிஜ்ரி ஆண்டை உருவாக்கினார்கள். அன்றைய சகாபாக்கள் தொட்டு இன்றைய
முஸ்லீம் உலகம்வரை இதை அங்கீகரித்து வந்துள்ளது.
பாங்கு ஓதுவதற்கும் தொழுகைகும் நடந்த ஆலோசனை
603. அனஸ்(ரலி) அறிவித்தார்.
(தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்த போது) சிலர் நெருபபை
மூட்டுவோம் என்றனர். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம் என்றனர்.
அவையெல்லாம் யூத, கிறித்தவ கலாச்சாரம் என்று (சிலரால் மறுத்துக்)
கூறப்பட்டது. அப்போது பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தை
ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால்(ரலி) ஏவப்பட்டார்கள். Volume:1
Book:10 (ஆதார நூல் புகாரி)
604. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு
அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு
செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர்.
அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு
சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே
என்றனர். அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக்
கூடாதா?' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து
தொழுகைக்காக அழையும்" என்று நபி(ஸல்) கூறினார்கள். Volume:1 Book:10
(ஆதார நூல் புகாரி)
மார்க்க விஷயத்தில் பிணங்கி்க் கொண்டால்
“நீங்கள் ஏதேனுமொரு விவகாரத்தில் பிணங்கிக் கொண்டால், அதனை அல்லாஹ்வின்
பாலும் அவனுடைய ரஸுலின் பாலும் மீட்டி விடுங்கள். நீங்கள் அல்லாஹ்வையும்
மறுமை நாளையும் நம்புகின்றவர்களாக இருந்தால் (அவ்வாறு செய்யத் தவற
மாட்டீர்கள்) இதுவே மிகச் சிறந்ததும், மிக்க அழகான முடிவுமாகும்”
(திருமறை குர்ஆன் 4:59).
சர்ச்சைகளின் போது யார் நீதிபதியாக இருக்கவேண்டும்
“(நபியே!) உமது இறைவனின் மீது சத்தியமாக (மூமின்களாகிய) அவர்கள்
தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து, நீர்
செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியுமின்றி
அங்கீகரித்து முற்றிலும் வழிபடாத வரையில் அவர்கள் (உண்மை) மூமின்களாக ஆக
மாட்டார்கள்” (திருமறை குர்ஆன் 4:65).
நான் இங்கு அடிக்கடி அனைத்து ஜமாஅத்தினரையும் உலமாக்களையும்
கலந்தாலோசியுங்கள் என்று சொல்வதற்கு ஒரு காரணமுண்டு அதாவது இது நமது
சொந்த அமைப்பு அல்ல! மாறாக அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏற்படுத்திய
அமைப்பு இதில் நாம் ஒருசாரார் மட்டும் ஏதாவது ஒன்றை கூறி குழப்பத்தை
ஏற்படுத்தினால் யாருக்கு நஷ்டம் இதை பின்பற்றக்கூடிய மக்களுக்குத்தான்!
நாம் இன்று இருப்போம் நாளை மரணிப்போம் ஆனால் நம் சந்ததிகள் நம்மால்
வழிகெடக்கூடாது என்பதே என் நோக்கம். சகோதரர்களே மீண்டும் மீண்டும் நான்
கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் சுயநலம் வேண்டாம் நம் சமுதாயம்
சீரழிந்துவிடும் பொதுநலத்தை கருத்தாக வைத்து ஆலோசைனைகளை மேற்கொள்ளுங்கள்!
எந்த முடிவாக இருந்தாலும் பொதுவான முடிவுக்கு வாருங்கள்! பொதுவான
முடிவுக்கு வரவேண்டுமெனில் அனைத்து ஜமாஅத்துக்கள் ம்றறும் உலமாக்களின்
ஆலோசனைகளும் தேவைப்படும்! இதற்கான அழைப்புகளை விடுங்கள்! வருவோர்
வரட்டும்!
சகோதரர்களே! அலசி ஆராய்ந்து பாருங்கள் சில உண்மைகள் இங்கு உள்ளன!
இன்றைய உம்மத்தின் சர்ச்சைகளுக்கு அல்லாஹ் எதையோ சொல்ல வருகிறான்!
இதில் ஏதோ உண்மை மறைந்திருக்கிறது! அல்லாஹ் தான் நன்கறிவான் நாம்
அறியமாட்டோம்! (சுப்ஹானல்லாஹ்-அல்லாஹ் தூயவன்
அன்புடன்
சிராஜ் அப்துல்லாஹ்
2009/8/26 AERO TRAVELS <eru...@gmail.com>:
--
April 29, 2009, 9:37 am
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! முஸ்லிம்கள் இன்று உலகில் அதிக அளவிவிலான எண்ணிக்கையில் இருந்தும் மிகவும் வலிமை குன்றியவர்களாக இருப்பதற்கு முக்கியமான ஒரே காரணம் நாம் இறைவனுடைய மற்றும் அவனுடைய தூதருடைய வழிகாட்டுதல்களை மறந்து விட்டு நமக்கு நாமே ஏறுப்படுத்திக் கொண்ட பிரிவுகள், கொள்கைகள், இயக்கங்கள், கட்சிகள் இவைகளின் பெயரால் நாம் அழைக்கப்படுவதை பெருமையாகக் கருதுவதேயாகும்.
உலகளவில் முஸ்லிம்கள் இழந்த கண்ணியத்தையும், வலிமையையும் திரும்பப் பெறுவதற்கு இஸ்லாமியர்களாகிய நாம் பாடுபட்டு உழைக்க வேண்டும். அதற்காக செய்ய வேண்டிய முதல் பணி என்னவெனில் மேற்கூறிய பல்வேறு பிரிவுகளின் கீழ் செல்வதை விட்டுவிட்டு இறைவன் மற்றும் அவனுடைய தூதரின் வழிகாட்டுதலை பின்பற்றியவர்களாக பல்வேறு குழுக்களாக, பிரிவுகளாக, இயக்கங்களாக, கட்சிகளாக பிரிந்து கிடக்கும் நமது இஸ்லாமிய சகோதரர்களை ‘முஸ்லிம்கள்’ என்ற அடிப்படையில் ஒற்றுமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்” (அல்-குர்ஆன் 22:77-78)
இன்று நம்மிடையே காணப்படும் பல்வேறு பிரிவுகளும், இயக்கங்களும், அமைப்புகளும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டவைகளாகும். இந்தப் பிரிவுகளின் அடிப்படையில் சிலர் தம்மை தவ்ஹீதுவாதி என்றும், சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்தவன் என்றும், அல்லது குறிப்பிட்ட ஒரு அமைப்பைச் சேர்ந்தவன் என்றும் மேலும் இதுபோல பலபிரிவுகளின் அல்லது இயக்கங்களின் பெயர்களிலும் தம்மை அழைப்பதில் பெருமைபட்டுக் கொள்கின்றனர். இவ்வாறு மார்க்கத்தில் தங்களுக்குள் பிரிவை உண்டு பண்ணியவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் மட்டுமே சரியான பாதையில் இருப்பதாகவும் மற்ற பிரிவை அல்லது இயக்கத்தைச்ச் சேர்ந்தவர்கள் தவறான பாதையில் இருப்பதாகவும் எண்ணிக் கொண்டு ஒருவருக்கொருவர் வசைபாடிக் கொண்டிருக்கின்றனர்.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மையில் நம்புகின்ற ஒருவர் இவ்வித பிரிவுகளில் பெருமை கொள்வதை விட்டு விட்டு இறைவன் நமக்கு சூட்டிய பெயராகிய “முஸ்லிம்கள்” என்று கூறிக்கொள்வதையே விரும்ப வேண்டும். அந்த அடிப்படையில் மட்டுமே பிரிந்து சின்னாபின்னமாகியிருக்கும் முஸ்லிம்களை ஒன்று சேர்க்க முடியும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
“இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்’ (என்றும் கூறினோம்). ஆனால், அச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்” (அல்-குர்ஆன் 23:52-53)
ஒரு உண்மையான முஃமின், அல்லாஹ்வை மட்டுமே அழைத்து, பிரார்த்தித்து வணங்க வேண்டும் என்பதையும் அவனுக்கு யாதொரு இணை வைக்கக் கூடாது என்றும், அவனுடைய இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களையே பின்பற்றி வாழ வேண்டும் என்பதையும் அனைத்து மத்ஹப்களும் வலியுறுத்துவதை நாம் அறியலாம். எனவே ஒருவர் உண்மையில் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனின் தூதரின் வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்றுவதில் உறுதி கொண்டிருந்தால் அவரைப் பொறுத்தவரை எந்த மத்ஹபும், குர்ஆன் மற்றும் நபிவழியைப் பின்பற்றுவதில் அவருக்கு தடையாக இருக்காது.
எனவே எனதருமை இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! நாம் ஒவ்வொருவரும் இஸ்லாத்தின் மிக மிக முக்கியமான அகீதா அடிப்படையிலான வேறுபாட்டைத் தவிர்த்து குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை புரிந்துக் கொள்வதில் ஏற்பட்டிருக்கின்ற சிறு சிறு கருத்து வேறுபாடுகளுக்காக பிரிந்து விடாமல், சிந்தித்து செயல்பட்டு, நாம் அனைவரும் ‘முஸ்லிம்கள்’ என்ற அடிப்படையில் ஒன்று சேர முயற்சிக்க வேண்டும். அப்பொழுது இன்ஷா அல்லாஹ் நாம் இழந்த கண்ணியத்தையும் வலிமையையும் மீண்டும் பெறலாம்.
அல்லாஹ் அதற்குரிய ஆற்றல்களை நமக்குத் தந்தருள்வானாகவும்.
சகோரரே தங்களது பதில் உண்மையிலும் உண்மை! சுப்ஹானல்லாஹ் தங்களுக்கு
அல்லாஹ் மிக்க சிந்திக்கும் ஆற்றலை வழங்கி அருள்புரிவானாக!
நம் முஸ்லிம்கள் அனைவரையும் ஒரு குடையின்கீழ் சோ்த்து வைப்பானாக! இந்த
புனித ரமலான் மாதத்தில் நாம் ஒவ்வொருவரும் இது போன்ற துவாவை அல்லாஹ்விடம்
கேட்கவேண்டும் நம்மில் யாருடைய துவாவாது ஏற்றுக்கொள்ளப்படும் (இன்ஷா
அல்லாஹ்)!
அல்லாஹ் அதற்குரிய ஆற்றல்களை நமக்குத் தந்தருள்வானாகவும்.
நாம் இன்று பிரிந்து கிடந்தாலும் வரப்போகும் நம் சந்ததிகளாவது
ஒன்றுபடட்டும்! நம்முடைய இந்த முயற்சி பலனளிக்க அல்லாஹ்விடம் அழுது
பிரார்த்திப்போமாக! ஆமீன்
அன்புடன்
சிராஜ்
2009/8/26 Mohamed hussain Fazly <faz...@yahoo.com>:
சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூறவும் பிரார்த்திக்கவும் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள். (புகாரி, 1059)
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தோம். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 1040)
மேலும் பகலில் நடைபெறம் நிகழ்விற்கு இரவில் நடுநிசியில் தூங்கிக்கொண்டிருப்போரை எப்படி நாம் தொழ சொல்லமுடியும். குர்ஆனிலோ ஹதீஸிலோ நாம் செய்யும் செயலுக்கு ஒரு ஆதாரமாவது இருக்க வேண்டாமா?
என் ஆய்வில் இருந்து எனக்கு புலப்பட்டவைகள். எனவே இதில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும். சரியாக இருந்தால் உங்கள் ஆய்வை பரீசீலனை செய்து ஏற்றுக்கொளளலாம்.இப்படிக்கு
அன்புடன்
சிராஜ் ஏர்வாடி
//கிரகணம் ஏற்பட்டுள்ளது என உறுதியாக செவி வழித் தகவல், தொலைக்காட்சி வழிக் காட்சித் தகவலாக அறிந்தால் (தொழக்கூடாத நேரமாக இருந்தால் தவிர) கிரகணத் தொழுகை தொழ வேண்டும் என்பதே நபிமொழிகளின் தூண்டுதலாகவுள்ளது.// - muslim
தொழக்கூடாத நேரமாக இருந்தால் தவிர என்று அடைப்புக் குறிக்குள் நாம் சொன்னது வலுவாக இருக்காது. தொழக்கூடாத நேரங்களில் தொழவேண்டாம் என்ற தடை, தொழக்கூடாத நேரங்களைத் தேர்ந்தெடுத்துத்துத் தொழக்கூடாது என்பதையே வலியுறுத்துகிறது.
தொழக்கூடாத நேரத்தில் கிரகணம் ஏற்பட்டால் அதற்காக கிரகணத் தொழுகையைத் தொழக்கூடாது என்று சொல்ல முடியாது. ''கிரகணம் ஏற்பட்டால் தொழுங்கள்'' என்பது பொதுவான விதியாக இருப்பதால் கிரகணம் பிடித்ததற்காக எந்த நேரத்திலும் தொழலாம் என்பதே சரியாகும். ''தொழக்கூடாத நேரங்களைத் தவிர'' என்று நாம் கூறியதில் மாற்றுக் கருத்து இருப்பின் ஆட்சேபணை இல்லை! இது ஒரு தகவலுக்காக.