குற்றவியல் தண்டனை - விபச்சாரம்.

1,676 views
Skip to first unread message

muslim

unread,
Oct 21, 2010, 4:20:02 PM10/21/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

மாயிஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் சம்பவத்தில் விபச்சாரம் புரிந்த இருவரும் தண்டிக்கப்பட்டுள்ளனர்! பார்க்க: 

ஹராமென்றால் இழிவானதா?

இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நீலகண்டன் - http://arvindneela.blogspot.com/2006/12/blog-post_20.html - சொல்கிறார், ''ஹராம்'' என்றால் ''இழிவானது'' என்று.

கணவனுள்ள பெண்களும் - ''ஹுர்ரிமத் அலைக்கும்''... - (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளார்கள். 004:024)

எப்படியிருக்கிறதென்று பாருங்கள்? ஏற்கெனவே ஒருவனுக்கு மனைவியாக இருப்பவள் இன்னொருவனைத் திருமணம் செய்து அவனுக்குப் பிள்ளையும் பெற்றாளாம். (இன்னும் மூவரைக் கட்டிக் கொண்டால் சுத்தமாக இருக்கும்) ஒருவனுக்கு மனைவியாய் இருப்பவள் அவனிடமிருந்து விவாகரத்துப் பெறாமல் வேறொருவனை மணமுடிக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. இதில் பிற மதங்கள் என்ன சொல்கின்றன என்பது தெரியவில்லை. இந்திய சட்டமும் இதைத் தடை செய்கிறது என்றே கருதுகிறேன்.

''ஹராம்'' என்பதற்கு நீலகண்டன் அவர்களின் விளக்கவுரை...

//இப்போது இன்னொரு விசயத்தை பார்ப்போம். பெற்றவர் தவறு செய்ததாகவே வைத்துக்கொள்வோம். பிறந்த குழந்தை என்ன செய்யும்? இந்த நவீன உலகில் திருமண பந்தத்தில் பிறந்தாலும் மத நெறிக்கு வெளியே பிறந்ததால் பச்சிளம் குழந்தையை பாவ பிறவி எனக் கூறும் கொடுங்கோரர்களை என்ன என்று சொல்ல? இதுதான் பகுத்தறிவா?
இந்த பகுத்தறிவான பதில் வெளிவந்தது 'முஸ்லீம் முரசு' இதழில் (மார்ச் 1989) இந்த பகுத்தறிவு பெட்டகத்தின் அட்டையை அலங்கரித்த 'பகுத்தறிவு' யார் தெரியுமா?//


ஹராம் என்றால் பாவப் பிறவி, இழிபிறவி என்று தமக்குத் தோன்றியதை அடுக்கிக் கொண்டே போகிறார் நீலகண்டன். ஹராம் என்றால் விலக்கப்பட்டது, தடைசெய்யப்பட்டது, கூடாத உறவு, தகாத உறவு. என்றே பொருள். இஸ்லாமிய வழக்கில் இறைவன் அனுமதிக்காததை ''ஹராம்'' என்று சொல்லப்படும்.

''ஹுர்ரிம அலைக்கும்'' உங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும். (003:050)

ஹராம் என்றால் இழிவானது எனப் பொருள் என்றால் ஹராமாக்கப்பட்ட ஒன்றை, இங்கு மீண்டும் இறைவன் அனுமதிக்க மாட்டான். ஹராம் என்பது தடை செய்யப்பட்டவை, இறைவனால் தடை செய்யப்பட்டவற்றிலிருந்து முஸ்லிம்கள் விலகிக்கொள்ள வேண்டும்.

''ஹுர்ரிமத் அலைக்கும்'' - தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை - உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. (005:003) இதே வசனத்தில், ஹராமாக்கப்பட்டவைகளை - நிர்ப்பந்த நிலையில் பாவம் செய்யும் எண்ணமில்லாமல் - புசித்தால் அவர் மீது குற்றமில்லை என்றும் இறைவன் கூறுகிறான்.

விபச்சாரத்தில் பிறந்த குழந்தையின் நிலைப்பாடு.

ஒரு பெண் 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக நான் (தகாத உறவினால்) கர்ப்பமுற்றுள்ளேன்' என்று கூறினார்.

''இல்லை நீ சென்று குழந்தை பெற்றெடு' (பிறகு திரும்பி வா) என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

குழந்தை பெற்றெடுத்த பின் அந்தப் பெண் ஒரு துணியில் குழந்தை எடுத்துக்கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'இது நான் பெற்றெடுத்த குழந்தை' என்று கூறினார்.

''நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டு! பால்குடி மறந்தபின் திரும்பி வா'' என்றார்கள்.
பால்குடி மறக்கடித்த பின் அப்பெண் அச்சிறுவனுடன் வந்தார். அவனது கையில் ரொட்டித் துண்டு ஒன்று இருந்தது. அப்பெண் 'அல்லாஹ்வின் தூதரே இவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது உணவு உட்கொள்கிறான்' என்று கூறினார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள்.
(முஸ்லிம், நபிமொழியின் சுருக்கம்)

ஒன்றிரண்டு நபிமொழிகளை எடுத்துக்காட்டி, அதோடு //பாகிஸ்தானில் மத சட்டத்தின் படி 'தவறான' உறவில் பிறந்த குழந்தையும் கல்லால் அடித்து கொல்லப்பட்டது குறித்து படித்த ஞாபகம்.// என்று எழுதி விட்டால் ''இஸ்லாம் தவறான உறவில் பிறந்த குழந்தையைக்கூடவாக் கொல்லச் சொல்கிறது'' என்று படிப்பவர்கள் இமைகளை விரிக்கமாட்டார்களா? போகட்டும்.

விபச்சாரத்தின் மூலம் கர்ப்பமடைந்த பெண் - அவர் குழந்தை பெறும் காலம்வரை, குழந்தை பெற்று அந்தக் குழந்தைத் தாய் பால் குடிக்கும் காலம் வரை, பின் பால்குடி மறக்கடிக்கப்பட்டு ரொட்டியை உணவாக உண்ணும் வரை - அந்தப் பெண்ணுக்கு தண்டனை காலம் தள்ளி வைக்கப்படுகிறது. பின் அச்சிறுவனைப் பராமரிக்கும் பொறுப்பு வேறொருவரிடம் ஒப்படைக்கப்பட்டு, விபச்சாரம் செய்த பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இவ்வளவும், இஸ்லாம் தடை செய்த விபச்சாரத்தைச் செய்தவர்கள் தகாத உறவு கொண்டவர்கள் என்றாலும், தகாத உறவில் - ஹராமான உறவில் பிறந்த குழந்தை எந்தப் பாவமும் செய்யவில்லை, தாகாத உறவால் விபச்சாரம் செய்தவர்களுக்காக அந்த உறவில் பிறந்த குழந்தை பொறுப்பாளியாகாது என்பதனால் இஸ்லாம் அந்தக் குழந்தையின் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறது என்பதை விளங்கலாம். ஆனாலும் நீலகண்டன் அவர்கள் இஸ்லாத்தின் மீது வலிய தமது இட்டுக் கட்டலைத் திணித்திருக்கிறார்.

//அவள் பெற்ற குழந்தையும் ஹராமான பிறப்பே.//

விபச்சாரத்தில் பிறந்த குழந்தை, இஸ்லாம் தடை செய்துள்ள தகாத உறவில் பிறந்த குழந்தை என்று முஸ்லிம் முரசு சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. தகாத உறவில் பிறந்த குழந்தையை இஸ்லாம் இழிபடுத்துவதாகத் தவறாக விளங்கிக் கொண்டு இஸ்லாத்தை விமர்சத்திருப்பதுதான் அபத்தம்.

அதே அபத்தத்தோடு பெரியாரையும் சாடியிருப்பது பேரபத்தம். மேல்ஜாதி, கீழ்ஜாதி, தீண்டத்தகாதவன் எனும் தீண்டாமையை ஒழித்த ஒரே மார்க்கம், இஸ்லாம் மார்க்கம் என்று பெரியார் மட்டுமல்ல, அன்றும் இன்றும் நாளையும் யார் சொல்லியிருந்தாலும், சொன்னாலும் அதற்குப் பொருத்தமான - தீண்டாமை இல்லாத மார்க்கம் இஸ்லாம் என்பதில் நேர்மையானவர்களிடையே மாற்றுக் கருத்து இருக்கவா முடியும்?

நீலகண்டன் அவர்கள் எதிலோ உள்ள ஆத்திரத்தை நிதானமிழந்து இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்...

//"தமிழ் மக்களுக்கு இஸ்லாமே பொருத்தமானது" கூறியவர் ஈவேரா (24-2-1935) 1980களிலும் 2000களிலுமே இப்படி என்றால் 1930களில் இந்த கும்பல் எப்படி இருந்திருக்க வேண்டும். அவர்களிடம் போய் இளித்தபடி ஈவேரா இப்படி அறிக்கை விட்டிருந்தால் அந்த ஆள் எப்படிப்பட்ட நயவஞ்சக பசப்பு வார்த்தை ஆசாமியாக இருந்திருக்க வேண்டும்! இப்படிப்பட்ட போலி பகுத்தறிவு ஆசாமி, சுயமரியாதை இல்லாத காட்டுமிராண்டி நயவஞ்சக முட்டாளை, 'பெண் விடுதலை போராளி' என்று சொன்னால், தெரியாமல்தான் கேட்கிறேன்...பெண் ஏன் அடிமையாக மாட்டாள்?//

பொருத்தமில்லாத வசவு மொழிகள்.

அன்புடன்,
அபூ முஹை

Posted by அபூ முஹை at 9:47 AM

12 comments:

 

tamilreber said...

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள்.

------------------------------
கல்லெறி என்றால் கல்லெறிந்து கொல்லுவதா?
இது போன்ற தண்டனைகள் இன்னும் சில நாடுகளில் இஸ்லாமிய சட்டத்தின் பெயரால்
நிறைவேற்றப்படுகின்றனவே. இது நியாயமா? இப்படித் தண்டிப்பது நாகரிகமானதா?
அந்தப் பெண்ணை மன்னித்து விட்டிருந்தால் ஒரு குழந்தை தாயின்றி தவித்திருக்காது.
பால்குடி மறந்த பின் தாய் தேவையில்லையா- என்ன குரூரமான நீதி இது

Thu Dec 21, 10:24:00 AM

 

tamilreber said...

ஒருவனுக்கு மனைவியாய் இருப்பவள் அவனிடமிருந்து விவாகரத்துப் பெறாமல் வேறொருவனை மணமுடிக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது
*********************************
ஆனால் ஆண்கள் மட்டும் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.கணவன் மனைவியிடம் அனுமதி பெறாமலும் திருமணம் செய்து கொள்ளலாம். இதுதானே இஸ்லாத்தின் 'நீதி'.

Thu Dec 21, 10:29:00 AM

 

சுல்தான் said...

(அபூமுஹை.பொருத்தமாயிருந்தமால் மட்டும் அனுமதிக்கவும்)

தமிழ்ரிபெர்,
இஸ்லாமியத் தண்டனைகள் கடுமையாகத் தோன்றலாம். ஆனால் அதில்தான் தவறிலிருந்து தப்பிக்க வழியிருக்கிறது. இது போன்ற தகாத உறவுக் குற்றங்கள் மலிந்து விட்டிருப்பதால் அது உங்களுக்கு கடினமான தண்டனையாகத் தோன்றுகிறது. இவை மலிந்ததற்கு காரணமே இது மாதிரிச் சட்டங்கள் அமுல் படுத்தப் படாததல்தான் என்பது என் கருத்து.

அந்த நிலைமைக்கு ஆக்கப்பட்டு வளர்நதுள்ள வாலிபனிடம் கேளுங்கள். உங்களுகக்கு இந்த நிலை வரக் காரணமாயிருந்த உங்களைப் பெற்றெடுத்த தந்தையை என்ன செய்வீர்கள் என்று. இஸ்லாம் பாதிக்கப்பட்டவனின் திசையிலிருந்து பார்க்கச் செய்கிறது.

தகாத உறவுக்கான தண்டனையை உறுதி செய்ய கடினமான சட்ட திட்டங்கள் உண்டு. குறைந்த பட்சம் நேரில் பார்த்த மூன்று சாட்சிகள் அது உண்மையில் உடலுறவுதான் என்பதை பார்த்ததாக தெளிவான சாட்சியம் அளித்தல் அவசியம். சாட்சிகள் தவறென்று அறியப்பட்டால் அவர்களுக்கு கசையடி (சாட்டையடி) தண்டனை நிறைவேற்றப்படும். தகாத உறவுக்கு தெளிவான மூன்று சாட்சிகள் கிடைப்பதே மிகவும் அரிது. அவர்கள் தவறென்று நிரூபிக்கப்படும் வாய்ப்பை அறிந்து அவர்கள் சாட்சியம் அளிக்க முன் வர வேண்டும். ஆகையால் மிக மிக குறைந்த அளவே இத்தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்பு உண்டு. இந்த மிக மிக குறைந்த அளவிலான தண்டணையே தவறு செய்ய நினைப்பவர்களை நேர்வழி செலுத்தப் போதுமானதாகும்.

குறிப்பாக இந்த இஸ்லாமியச் சட்டம் வந்ததும் அந்தப் பெண் மீது யாரும் குற்றம் சுமத்தவில்லை அவரே முன்வந்து அந்த தண்டணையை ஏற்றார். நபிகளார் 'உனக்கு பைத்தியமா திரும்பிச் செல்' என்கின்றனர். அந்தப் பெண் திரும்ப வலியுறுத்தவும், குழந்தை பெற்றதும் வரச் சொல்கின்றனர். அந்தப் பெண் குழந்தை பெற்ற பின் வந்து தண்டணையை நிறைவேற்ற வலியுறுத்தும் போது, குழந்தைக்கு பால்குடி மறந்ததும் வரச் சொல்கின்றனர். இது போல் தப்பிக்க எத்தனையோ வழியிருந்தும் தப்பிக்க நினைக்காமல், இறைவனை தூய்மையாக சந்திக்க என்ற நினைவில் அந்தப் பெண் வலியுறுத்தலுக்குப் பின் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அந்தப் பெண்ணிற்காக நபியவர்களே பாவ மன்னிப்புக் கேட்டதோடு அந்தப் பெண்ணிண் இறை நம்பிக்கையை மிகவும் புகழ்ந்தார்கள்.

தாம் செய்த தவற்றை எல்லோர் முன்னிலும் ஒப்புக் கொண்டு தண்டணை பெற வேண்டும் என்பது மட்டுமில்லாமல், தவறு செய்தவர்கள் மனம் வருந்தி அந்தத் தவறிலிருந்து மீண்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி, அந்த தவறின் பக்கம் செல்லாமல் இருக்கவும் இஸ்லாத்தில் வழியுள்ளது.

இஸ்லாத்தில் நான்கு திருமணங்களுக்கான அனுமதி ஏன் என்பதை விளக்கி பலமுறை பதில் சொல்லியாகி விட்டது. ஏராளமான இணையத்தளங்களிலும் இதற்கு விளக்கங்கள் உள்ளன. திரும்பத் திரும்ப அதையே சொல்லும் மனம் பிறழ்ந்தவர்களின் இஸ்லாத்தைப் பார்க்காமல் தூய இஸலாத்தை அறிய முயற்சி செய்யுங்கள். இணைய முகவரி வேண்டுமானால் தரப்படும்.

Sat Dec 23, 05:31:00 AM

 

Sirajudeen said...

கல்லெறிந்து கொல்லுதல் பற்றிய உங்களது சந்தேகத்திற்கு பதிலாக அபுமுஹை அவர்கள் தெளிவாக பதிவு இடுவார் என்று நம்புகிறேன்.
இருந்தாலும் எம்மால் முடிந்த வரை அதற்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளோம்.
தண்டனைகள் எதற்காக கொடுக்கப்படுகின்றன என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒன்று அரசாங்கம் கொடுக்கும் தண்டனையின் மூலம் அந்த தவறை திரும்பவும் குற்றம் செய்தவன் செய்யக் கூடாது. இரண்டு இது மற்ற மனிதர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். குற்றத்திலும் வித்தியாசம் உள்ளது. ஒருவன் செய்யும் குற்றம் தனிமனிதனை, சமூகத்தை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை பொறுத்தும் தண்டனைகள் கொடுக்கப்படுகிறது. சமூகத்தை பாதிக்கும் அளவைப்பொறுத்து தண்டனைகளின் விரியமும் அதிகரிக்கிறது. இப்போது இந்த விபச்சார விசயத்திற்கு வருவோம். ஒரு ஆண், பெண் சற்று அற்ப இன்பத்திற்காக கூடி விடுகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் சமூதாய பாதிப்பை கணக்கில் கொண்டால் இவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் தண்டனை சரிதான் என்று ஒத்துக கொள்வீர்கள். இதனால் தான் இஸ்லாத்திற்கு மாற்றமாக கருத்து கொண்ட அத்வானி கூட கற்பழிப்புக்கு அரபு நாட்டு தண்டனை (அதாவது மரண தண்டனை) கொடுக்க வேண்டும் என்று அறிவித்தார். கற்பழிப்புக்கும், விபச்சாரத்திற்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. எல்லாமே சமுதாயம் அங்கரித்திருக்கும் திருமண்ம் என்ற கட்டுக்கோப்பை விட்டு வெளியே உள்ள சீhகேடுகள். சிர்கேடுகள் என்று தெரிந்தாலும் மனிதர்கள் தங்களின் மன இச்சையினால் இந்த தவறை சதாரணமாக செய்ய தயங்குவதில்லை. இதனால் சமூகத்தின் குடும்ப காட்டுக் கோப்பை இவர்கள் மதிக்க வில்லை என்பது மட்டுமல்ல. மற்றவர்களும் இது போன்ற தவறை செய்ய இவர்கள் முன்னுதாரணமாக இருக்கிறார்கள். இதுமட்டுமல்ல இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும். தவறே செய்யாத குழந்தை சமூகத்தில் மிகப் பெரிய அவமானத்தை சந்திக்கும். இவர்களை போன்றவர்களை சமூகத்தில் வளர விட்டால் நாளiடைவில் சமூகத்தின் ஒழுக்கம் இல்லாமல் போகும்.

மேலும் நீங்கள் கண்கூடாக பார்க்கிறீர்கள். இந்தியாவில் உள்ள சட்டங்களால் இவை போன்ற தீமைகளை தடுக்கமுடியாத காரணத்தினால் தான் ஜவர்ஹர்லால் நேரு விபச்சாரத்திற்கு லைசென்ஸ் கொடுத்தார். இதற்கு அந்த காலத்தில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் மிகப்பெரிய எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் அவர்களுக்கு நேரு பதிலலிக்கையில் சட்டங்களை கொண்டு இந்த தீமையை தடுக்கமுடியாது என்பதால் தான் நான் விபச்சாரத்திற்கு லைசென்ஸ் கொடுத்தது என்று தெரிவித்ததுடன் குடும்ப பெண்களுக்கு இதனால் பாதுகாப்பு கிடைக்கும் என்றார். ஆக ஒரு நாட்டின் பிரதமர் தன்னுடைய நாட்டு சட்டத்தால் இந்த தீமையை தடுக்க முடியாமல் அந்த தீமையை வேறுமுறையில் ஆதரிக்கிறார் என்றால் காரணம் இந்த சட்டத்தினால் எல்லாம் இந்த தீமையை தடுக்க முடியாது. அதனால் இந்தியாவில் விபச்சாரம் செய்தால் என்ன தண்டனையோ அதற்கு பதிலாக இஸ்லாம் வழங்கும் தண்டனையை செயல்படுத்தி பாருங்கள். இந்த தவறு சமூகத்தில் குறைகிறதா? அல்லது கூடுகிறதா என்று பார்ப்போம். இன்னொரு விசயம் இப்படிப் பட்ட தவறை செய்யும் போது அதை மக்கள் பார்க்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது, இந்த தண்டனை படம் பிடித்து டிவி யில் ஒளிப் பரப்பி பாருங்கள். இதற்கு பிறகு இந்த தவறை மற்றவர்கள் செய்ய முன் வருவார்களா என்று பார்ப்போம். மேலும் இப்படி கல்லெறி தண்டனை விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்டவுன் இஸ்லாம் வழங்கி விடாது. இதற்கு 4 சாட்சிகள் தேவை. இதற்கு பிறகுதான் தண்டனையே வழங்கபெறும்.

அமெரிக்காவில் கூட காதிரினா, ரீட்டா புயல்கள் தக்கிய போது பத்திரிக்கையில் வந்த செய்தி. அந்த சூழலில் டாய்லெட்டுக்கு சென்ற ஒரு பெண்ணை அங்கு வைத்து ஒருவன் கற்பழீக்க முயல்கிறான். சத்தம் கேட்டு பார்த்த மக்கள் அவனை அடித்து கொன்றார்கள் என்பதை படிக்க முடிந்தது. இன்னும் இது போன்று இத்தகைய கற்பழிப்புக்கும், விபச்சாரத்திற்கும் நமது வீட்டு பெண்ணை ஒருவன் பயன்படுத்தினால் நம்முடைய உணர்வு எப்படி இருக்கும். நம்முடைய வீட்டு பெண்ணை ஒருவன் பலாத்காரமாகவோ அல்லது மனஇச்சைக்கு உட்படுத்தியோ கெடுத்து விட்டால் நாம் அவனை சும்மா விடுவோமா? என்பதை சிந்திக்க வேண்டும். இஸ்லாம் இப்படி பாதிக்கப்பட்டவனுடைய உணர்வுக்கு மதிப்பளிக்கிறது.

இத்துடன் இன்னொன்றையும் சகோதரர் கேட்டிருக்கிறார். பால்குடி மறக்கடிக்கப்பட்ட குழந்தைக்கு தாய் தேவையில்லையா என்று. ஆம் தேவை தான். ஆனால் இது சட்டம். சட்டம் என்பது யாருக்கும் வளைந்து கொடுக்கக் கூடாது. அது நூல் போன்று இருக்க வேண்டியது அவசியமானது. இல்லையென்றால் 10 கொலைகள் செய்தவன் தூக்கு தண்டனை கொடுத்தபிறகு நீதபதியிடம் ஐயா நான் 5 குழந்தைக்கு தகப்பன் என்று கேட்பான் இதற்கும் சட்டம் வளைந்து கொடுக்க வேண்டியிருக்கும். இதை யெல்லாம் மனதில் கொண்டு தான் நமது நாட்டின் நீதி தேவதைக்கும் கண்ணில் கருப்பு கயிறு கட்டி இருக்கிறார்கள். சட்டம் என்று வரும்போது அங்கு குற்றம் செய்தவனுக்கு தண்டனை தான் கொடுக்க வேண்டுமே தவிர அங்கு உயர்ந்தவன், தாழ்ந்தவன், இரக்கம், கோபம் என்று பார்த்து தண்டனை கொடுக்க கூடாது.

இந்த நபிமொழியில் கூட அந்த பெண்ணை இருமுறை இறை தூதர் (ஸல்) அவர்கள் தண்டனை கொடுக்காமல் அதற்கான காரணத்தை சொல்லி அனுப்பி விடுகிறார்கள். அந்த பெண்ணிடம் இருந்த இறையச்சத்தின் காரணமாக நாம் இதற்கான தண்டனையை இந்த உலகில் பெறவில்லையென்றால் மறுமை நாளிலே கொடுமையான வேதனை அனுப்பவிக்க வேண்டியதிருக்கும் என்ற அச்சத்தால் அவர்களாகவே யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் வருகிறார் என்பது கவனிக்கதக்கது.

அடுத்த கேள்விக்கும் இது போன்று விரிவாக பதில் அளிக்க வேண்டும். பல முஸ்லீம் அல்லாதவர்களாலும் இக்கேள்வி கேட்கப்பட்டதுதான்.

Sun Dec 24, 09:47:00 PM

 

ஸயீத் said...

\\இது போல் தப்பிக்க எத்தனையோ வழியிருந்தும் தப்பிக்க நினைக்காமல், இறைவனை தூய்மையாக சந்திக்க என்ற நினைவில் அந்தப் பெண் வலியுறுத்தலுக்குப் பின் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.\\

இறையச்சம் எந்த அளவு இஸ்லாத்தினால் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது, இன்று நான் இந்த தண்டனையிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மனிதர்களும் விலங்குகளும் உயிரோடு எழுப்பப்படும் அந்த மறுமை நாளில் இறைவனின் சன்னிதானத்தில் என்னால் தப்பிக்க முடியாது என்ற எண்ணம்தான் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழிந்த பின்னும் அந்தப் பெண்ணை தேடி வந்து தண்டனையைப் பெறவைக்கிறது. அவருடன் நபியவர்கள் அவரைக்கண்காணிக்க காவலரையோ அல்லது வேறு எந்த எற்பாடுமோ செய்யவில்லை.

அந்தப் பெண்ணை கல்லால் அடிக்கும் பொழுது அவரின் இரத்தம் ஒருவரின் உடையின் மேல் பட்டு விடுகிறது அப்பொழுது அவர் "பாவம் செய்த இந்தப்பெண்ணின் இரத்தம் என்மீது படுவதா?" என்று கூறிய பொழுது நபியவர்கள் அவ்வாறு கூறியவரைக் கண்டித்து தோழரே இந்தப்பெண் இப்பொழுது சொர்க்கத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

ஒரு சிறிய பறவையை கூட தான் உண்ணும் உணவுக்காகவன்றி வேறுகாரணத்திற்க்காக கொல்லக்கூடாது என்று கூறியவர் குற்றத்திற்கு தண்டனை என்ற அளவில் மட்டுமே அந்தப்பெண்ணை கல்லெறிந்து கொல்ல அனுமதிக்கிறார்கள். இஸ்லாம் பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்கிறது பாதிக்கப்பட்டவனுக்கே பாதிக்கப்பட்டதன் வலி தெரியும்.

குற்றம் செய்தவர் தேடிவந்து தண்டனை பெறும் சமுதாயத்தை உருவாக்கிய இறைவன் மிகப் பெரியவன்.

Mon Dec 25, 10:34:00 PM

 

அபூ முஹை said...

tamilreber உங்கள் வருகைக்கு நன்றி!

ஒரு குற்றத்திற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று விதி வகுத்துக் கொண்டால், அதற்கு என்ன தண்டனை உறுதி செய்யப்படுகிறதோ அதுதான் அந்தக் குற்றத்திற்கான தண்டனை. அதில் வித்தியாசம் காட்டாமல், எல்லோரும் சமமாகக் கருதப்பட வேண்டும். ஒரே குற்றத்தை இருவர் செய்திருக்கும் போது ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இன்னொருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படுகிறது என்றால் அது போன்ற பாராபட்சமான ஓர வஞ்சனைத் தீர்ப்புக்கு இஸ்லாத்தில் இடமில்லை!

தாய் செண்டிமென்ட் மட்டுமல்ல, எந்த செண்டிமென்டை வைத்தும் குற்றவாளிக்கு தண்டனையிலிருந்து சலுகை என்பது இல்லை, இருக்கவும் கூடாது. ''அச்சச்சோ குழந்தை தாயில்லாமல் போய்விடுமே?'' என்று நீங்களும் நானும் அனுதாபப் படலாம். ஆனால் தீர்ப்பளிக்கும் நீதிபதி அனுதாபப்பட்டால் நீதி சிதைந்து, எவருக்கும் தண்டனை வழங்க முடியாமல் போய்விடும். எந்த மனிதனுக்கும் உறவு என்பது இல்லாமலில்லை - எந்தவொரு மனிதனை நம்பியும் எதாவது ஒரு உறவு இருக்கத்தான் செய்யும்.

//பால்குடி மறந்த பின் தாய் தேவையில்லையா- என்ன குரூரமான நீதி இது// இந்தக் கேள்வியில் எள்ளளவும் நியாயமிருப்பதாகத் தோன்றவில்லை. முதல் மாதக் கருவாக இருக்கும்போதே, தண்டனை குற்றம் செய்தவருக்குத்தான், வயிற்றிலிருக்கும் கருவுக்குத் தண்டனை வழங்கக்கூடாது அதாவது வயிற்றில் வளரும் உயிருக்கு மரண தண்டனை வழங்குவது நேர்மை இல்லை என்றே தண்டனை காலம் தள்ளி வைக்கப்படுகிறது இதைப் போய் நீங்கள் குரூரம் என்கிறீர்களே!

கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றுவது நாகரீகமான செயல் இல்லை என்பவர்கள், விபச்சாரத்தை நாகரீகமான செயலாகக் கருதுவது வேடிக்கையாக இருக்கிறது. நாலு சுவற்றுக்குள் நிறைவேற்றப்படும் தூக்குத் தண்டனையும் நாகரீகமில்லை, மிருகங்களைப் போல் குற்றவாளிகளை - மனிதர்களைக் கம்பி வைத்தக் கூண்டு அறைக்குள் அடைத்து வைப்பதும் நாகரீகமில்லையே, ஆனாலும் இதையெல்லாம் குற்றங்களுக்கான தண்டனையாக நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பகளென நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா? கல்லெறி தண்டனை இஸ்லாம் வழங்கிய தீர்ப்பு அதைத்தான் இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில் நிறைவேற்றுகிறார்கள்.

இங்கே கல்லெறி தண்டனை வழங்குவது மட்டும்தான் அரசு நீதிபதியின் தீர்ப்பாக இருக்கிறது. தண்டனையை நிறைவேற்றுவது, பொது மக்கள் முன்னிலையில் பொது மக்களே தண்டனையை நிறைவேற்றுகிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது. இதில் நல்ல படிப்பினை இருக்கிறது என்பதையும் மறுமொழியில் கருத்து வைத்த சகோதரர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

//ஆனால் ஆண்கள் மட்டும் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.கணவன் மனைவியிடம் அனுமதி பெறாமலும் திருமணம் செய்து கொள்ளலாம். இதுதானே இஸ்லாத்தின் 'நீதி'.//- tamilreber

ஆண்களுக்கு மட்டும் நான்கு பெண்களை மணமுடிக்க அனுமதி வழங்கிய இஸ்லாம், பெண்களுக்கு ஒரே நேரத்தில் இரு ஆண்களை கணவர்களாகப் பெற அனுமதிக்கவில்லையே ஏன்? இது இஸ்லாத்தில் அநீதியாக இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். இது பற்றி நேரம் கிடைக்கும் போது தனிப்பதிவில் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்,
அபூ முஹை

Tue Dec 26, 06:14:00 AM

 

அபூ முஹை said...

சுல்தான், சிராஜுதீன், ஸயீத் உங்கள் வருகைக்கு நன்றிகள்! நல்லக் கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள்.

குற்றவாளிகளை வலைவீசித் தேடி, விரட்டிப் பிடித்து, இரும்புக் கரம் கொண்டு அடக்கி, இரும்புக் கோட்டைக்குள் அடைத்து வைத்து தப்பிக்க வழியில்லாமல் பலத்தப் பாதுகாப்புப் போடுவது எங்கே?

தண்டனை பெறுவதற்காக வலிய வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு பின் குழந்தை பிறந்து பால்குடி மறக்கும் காலம்வரை சுதந்திரமாக நடமாடி, தனக்கு மரண தண்டனைதான் நிறைவேற்றப்படும் என்று உறுதியாகத் தெரிந்திருந்தும், தப்பிக்க எவ்வளவோ வழிகளும், அவகாசங்களும் இருந்தும் கொள்கைய விட உயிர் பெரிதல்ல என அந்த நபித் தோழியர் உறுதியாக இருந்து மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார் என்பது எங்கே?

இந்தக் கருத்தில் உங்கள் மூவரின் சிந்தனையும் ஒரே கோணத்தில் இருந்தது போல் என் சிந்தனையிலும் இதேக் கருத்து தோன்றியது. இந்தத் தியாகங்களின் காரணமாகவே நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய மூன்று தலைமுறைகளில் முதல் தலைமுறையினராக இவர்கள் இருக்கிறார்கள் என்பது கவனித்தக்கது.

//குற்றம் செய்தவர் தேடிவந்து தண்டனை பெறும் சமுதாயத்தை உருவாக்கிய இறைவன் மிகப் பெரியவன்.//- ஸயீத்

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

அன்புடன்,
அபூ முஹை

Tue Dec 26, 06:16:00 AM

 

Sirajudeen said...

\\கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றுவது நாகரீகமான செயல் இல்லை என்பவர்கள், விபச்சாரத்தை நாகரீகமான செயலாகக் கருதுவது வேடிக்கையாக இருக்கிறது. நாலு சுவற்றுக்குள் நிறைவேற்றப்படும் தூக்குத் தண்டனையும் நாகரீகமில்லை, மிருகங்களைப் போல் குற்றவாளிகளை - மனிதர்களைக் கம்பி வைத்தக் கூண்டு அறைக்குள் அடைத்து வைப்பதும் நாகரீகமில்லையே, ஆனாலும் இதையெல்லாம் குற்றங்களுக்கான தண்டனையாக நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பகளென நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா? கல்லெறி தண்டனை இஸ்லாம் வழங்கிய தீர்ப்பு அதைத்தான் இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில் நிறைவேற்றுகிறார்கள்.//

சுருக்கமான,அருமையான விளக்கம் சகோதரர் அபுமுஹை அவர்களே. உங்கள் பணிக்கு அல்லாஹ் மகத்தான கூலி வழங்குவானாக. இந்த சத்திய மார்க்கத்தில் பிறப்பிலே நம்மை எல்லாம் எவ்வித முயற்சியும் இன்றி இணைத்த உயர்ந்தோன் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இதை சகோதரர் tamilreber விளங்கட்டும். அவருடைய நேர்வழிக்காக துஆ செய்வோம்.

Wed Dec 27, 12:03:00 AM

 

அபூ முஹை said...

fztd; ,y;yhky; vthplNkh Foe;ijia ngw;w ngz;Zf;F Kfk;kJ mth;fs; mspj;j jz;lid rhpjhd;. Mdhy; me;j Foe;ijf;F fhuzkhf ,Ue;j MZf;F jz;lid ,y;iyah? ,jpy; vd;d rkePjp ,Uf;fpwJ. xUth; nra;j jtW fhuzkhfth Foe;ij gpwe;jJ? ,e;j Fw;wj;jpy; rk;ge;jg;gl;bUg;gJ ,Uth;. Mdhy; xUtUf;F kl;Lk; jz;lid. ,J ve;j tpjj;jpy; rhp vd;gij tpsf;f KbAkh? ,Jjhd; ePjpah?

கணவன் இல்லாமல் எவரிடமோ குழந்தையை பெற்ற பெண்ணுக்கு முகம்மது அவர்கள் அளித்த தண்டனை சரிதான். ஆனால் அந்த குழந்தைக்கு காரணமாக இருந்த ஆணுக்கு தண்டனை இல்லையா? இதில் என்ன சமநீதி இருக்கிறது. ஒருவர் செய்த தவறு காரணமாகவா குழந்தை பிறந்தது? இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பது இருவர். ஆனால் ஒருவருக்கு மட்டும் தண்டனை. இது எந்த விதத்தில் சரி என்பதை விளக்க முடியுமா? இதுதான் நீதியா?

Posted by suniloliver | Thu Jan 11, 07:55:57 AM

Fri Jan 12, 01:08:00 PM

 

அபூ முஹை said...

suniloliver உங்கள் வருகைக்கு நன்றி!

இந்தப் பதிவில் வைக்க வேண்டிய மறுமொழியை, கருத்துக்கு சம்பந்தமில்லாத வேறு பதிவில் சொல்லியுள்ளீர்கள். உங்கள் கேள்வியும், அதற்கான விளக்கமும் இங்கே...

//கணவன் இல்லாமல் எவரிடமோ குழந்தையை பெற்ற பெண்ணுக்கு முகம்மது அவர்கள் அளித்த தண்டனை சரிதான். ஆனால் அந்த குழந்தைக்கு காரணமாக இருந்த ஆணுக்கு தண்டனை இல்லையா? இதில் என்ன சமநீதி இருக்கிறது. ஒருவர் செய்த தவறு காரணமாகவா குழந்தை பிறந்தது? இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பது இருவர். ஆனால் ஒருவருக்கு மட்டும் தண்டனை. இது எந்த விதத்தில் சரி என்பதை விளக்க முடியுமா? இதுதான் நீதியா?//

மாயிஸ் பின் மாலிக் (ரலி) என்பவர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் வந்து, தாம் விபச்சாரம் செய்து விட்டதாக வாக்கு மூலம் தருகிறார். நபி (ஸல்) அவர்கள் அவரைத் திருப்பி அனுப்பி விடுகிறார்கள் மீண்டும் வந்து முன்பு போலவே விபச்சாரம் செய்து விட்டதாக வாக்கு மூலம் தருகிறார். அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறுக் கட்டளையிடப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

இனி...

ஒரு பெண்மணி வந்து 'அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ''உனக்குக் கெடுதான்! நீ திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவாயாக'' என்று கூறினார்கள்.

அதற்கு அப்பெண், 'மாயிஸ் பின் மாலிக்கைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் திருப்பி அனுப்பப் பார்க்கிறீர்கள் என்று கருதுகிறேன்' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள். ''என்ன அது?'' என்று கேட்டார்கள். அப்பெண், 'நான் விபச்சாரத்தால் கர்ப்பமுற்றவள் என்றார்.

நபி (ஸல்) அவர்கள் (அது) ''நீயா?'' என்று கேட்டார்கள். அப்பெண் 'ஆம்' என்றார். (நபிமொழியின் சுருக்கம், முஸ்லிம்)

விபச்சாரத்தில் ஈடுபட்ட இருவருமே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில் ஆண் தண்டனைப் பெற்ற பின்பே, மாயிஸ் பின் மாலிக் (ரலி) அவரிடம் தாகாத உறவு கொண்டு கர்ப்பமுற்ற பெண்மணி வந்து, நான் விபச்சாரத்தால் கர்ப்பமுற்றவள் என்று ஒப்புக் கொண்டு அவருக்கும் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இங்கே விபச்சாரம் செய்த ஆண், பெண் இருவருமே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விபச்சாரம் செய்த ஆண், பெண் இருவருமே தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் சம நீதி. ஆனால் இதை இருவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது இருவரும் விபச்சாரம் செய்தார்கள் என்று நிரூபிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இருவரையும் தண்டிக்க முடியும்.

இந்தச் சம்பவத்தில், மாயிஸ் பின் மாலிக் (ரலி) வந்து தாம் விபச்சாரம் செய்ததாக ஒப்புக் கொள்கிறார். அவர் மட்டுமே தண்டிக்கப்படுகிறார். விசாரணை என்ற பெயரில் அவர் விபச்சாரம் செய்த பெண் யார்? என்று அவரிடம் கேட்கப்படவுமில்லை, அப்படிக் கேட்டு அப்பெண் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அன்புடன்,
அபூ முஹை

Fri Jan 12, 01:18:00 PM

 

நாடோடி said...

அபூ,

எந்த மதமானாலும் காலத்துக்கு ஏற்றபடி புரிந்து கொள்ளுதல் அவசியம். இஸ்லாமானலும் சரி, கிருத்துவமானலும் சரி இல்லை இந்துவானாலும் சரி ... ஆயிரக்கணக்கான் ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டவை, இக்காலத்துக்கும் சரியாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் தவறு.

நபிகளோ, கிறித்துவோ சொன்னதில் (முடிந்தவரை) ஏற்கக் கூடியதை மட்டும் ஏற்றுக் கொண்டு வாழ்வது நன்று.

மன்னிப்பது தெய்வம். தண்டிப்பது மிருகம். இடைப்பட்டவன்..மனிதன்

Fri Jan 12, 02:18:00 PM

 

அபூ முஹை said...

நாடோடி, உங்கள் வருகைக்கு நன்றி!

//மன்னிப்பது தெய்வம். தண்டிப்பது மிருகம். இடைப்பட்டவன்..மனிதன்//

அப்படியானால், எந்தக் குற்றத்திற்காகவும் மனிதன் தண்டிக்கப்படக் கூடாது என்று சொல்ல வருகிறீர்களா?

அன்புடன்,
அபூ முஹை

Fri Jan 12, 09:01:00 PM

razin rahman

unread,
Oct 23, 2010, 8:49:19 AM10/23/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ அபூமுகை அவர்களின் வலைப்பூ இங்கே அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.அதை நீக்க,யாரை அனுகவேண்டும்.அல்லது அதை காண ஏதேனும் மாற்று வழி இருந்தால் சகோதரர்கள் தெரிவிக்கவும்,,,
--
அன்புடன்
ரஜின் அப்துல் ரஹ்மான்.
http://sunmarkam.blogspot.com

muslim

unread,
Oct 24, 2010, 11:35:01 AM10/24/10
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

அன்புச் சகோதரர் razin rahman அவர்களுக்கு

http://www.islamkalvi.com/portal/?author=23&paged=6

விமர்சனம் - விளக்கம் வலைப்பதிவைப் பார்வையிட மேல்கண்ட சுட்டியிலும் அல்லது இஸ்லாம் கல்வி > மதங்கள் ஆய்வு வழியாகவும் முயன்று பாருங்கள்!


 
 
2010/10/23 razin rahman razin...@gmail.com
 
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

cool boy

unread,
Oct 28, 2010, 9:21:34 AM10/28/10
to fro...@googlegroups.com
asalamu alaikum 
hai brother ,i hav one doubt,thats.. how to send my question in to tamilmuslimgroup.blogspot.com,please sebd that email address.

muslim

unread,
Oct 28, 2010, 12:52:02 PM10/28/10
to fro...@googlegroups.com
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

அன்புச் சகோதரர் cool boy அவர்களுக்கு, உங்கள் சந்தேகம் மற்றும் கேள்விகளை இந்தக் குழுமத்திலும் பதிவு செய்யலாம்!



2010/10/28 cool boy <zia...@ymail.com>
asalamu alaikum 
hai brother ,i hav one doubt,thats.. how to send my question in to tamilmuslimgroup.blogspot.com,please sebd that email address.

ibnuh...@mail.com

unread,
Oct 30, 2010, 8:40:19 AM10/30/10
to fro...@googlegroups.com
 BROTHER........MUSLIM...and NIZARUDEEN...,               assalaamu alaikkum  warahmathullah..................,
 
இந்த  ஹதீஸ் இல் ஒருவர் விபச்சாரம்  செய்தால் கொலை செய்யப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது......  குற்றவியல் சட்டங்கள்  இறைவனின்  தனி  பாட்ட அதிகாரங்களில் உடையது.... அது அவன் மட்டுமே  சொல்ல வேண்டும்..........எனவே , நீங்கள் ,

  விபச்சாரம் செய்பவரை , ஆணோ , பெண்ணோ ,  மரண தண்டனை கொடுத்து  கொலை செய்ய வேண்டும்  என்ற நேரடி கட்டளையை   குர் ஆன்  இலிருந்து தாருங்கள்......
..
 
 


muslim

unread,
Nov 3, 2010, 12:29:26 PM11/3/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்'' (அல்குர்ஆன் 5:44)

''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்'' (அல்குர்ஆன் 5:45)

''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் பாவிகள்'' (அல்குர்ஆன் 5:47)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆனமீகத் தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் இரு வகையானத் தலைமைத்துவத்திலும் ஒப்பற்றத் தலைவராகத் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் தோன்றிய முஸ்லிம் ஆட்சித் தலைவர்கள் தீர்ப்புகள் தொடர்பான விஷயத்தில் மார்க்க அறிஞர்களின் உதவியை நாடியுள்ளனர் என வரலாற்றில் வாசிக்க முடிகிறது.

ஆனால், நபி (ஸல்) அவர்களைப் பொறுத்தவரை ஆன்மீகம், ஆட்சி இரு தலைமைகளுக்கும் அவர்களே பொறுப்பேற்றிருந்ததால் இரு தலைமைகளுக்குமான வழிகாட்டல் மற்றும் தீர்ப்புகள் வழங்கும் உரிமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பு தவறாகுமெனில் (நவூதுபில்லாஹ்)அவற்றைத் திருத்தும் வகையில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருந்தான்.

52:48. எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக. நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர். மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக.

அல்லாஹ்வின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளராகிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அல்லாஹ்வின் புனித சட்டங்கள் சீர்குலைக்கப்படும்போது, அல்லாஹ்வின் கட்டளையுடன்  சீர்குலைப்பவர்களைத் தண்டித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் இருந்தது.

(விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர், என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர்! அல்லாஹ் (வாக்களித்திருந்ததைப் போன்று) பெண்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான்.  மணமாகாத பெண்ணுடன் மணமாக ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு சாட்டையடிகள் வழங்கி, ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தப்பட வேண்டும். மணமான பெண்ணுடன் மணமான ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு சாட்டையடிகள் வழங்கி கல்லெறி தண்டனை வழங்கப்படவேண்டும். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 3489, திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ,)

நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படும்போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். அவர்களது முகம் (கருத்து) நிறம் மாறிவிடும். ஒரு நாள் அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப்பட அவர்கள் இந்நிலையை சந்தித்தார்கள்.

பின்னர் அவர்களை விட்டு அந்நிலை விலகியதும், (விபச்சாரத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். (விபச்சாரம் செய்த) பெண்கள் தொடர்பாக அல்லாஹ் ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமான பெண் மணமான ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால். (அதற்குத் தனிச் சட்டமாகும்) மணமாகாத பெண் மணமாகாத ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால் (அதற்குத் தனிச் சட்டமாகும்) மணமானவர்களுக்கு நூறு சாட்டையடிகளும் கல்லெறி தண்டனையும் வழங்கப்படவேண்டும். மணமாகாதவர்களுக்கு நூறு சாட்டையடிகள் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும் தண்டனையாக வழங்கப்படவேண்டும். என்று கூறினார்கள். அறிவிப்பவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) (நூல் - முஸ்லிம் 3490)

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை! நான் அல்லாஹ்வின் தூதராவேன் என உறுமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய (மரண தண்டனையளிக்க) அனுமதி இல்லை. அவை: 1. திருமணமானவன் விபச்சாரம் செய்வது. 2. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாகக் கொலை செய்வது. 3. ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பை விட்ட (தேச துரோகமும் மார்க்க விரோதமும் செய்த)வன். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) (நூல்கள் - புகாரி 6878, முஸ்லிம் 3463. 3464, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ)

2:89. அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்தபோது, அதை நிராகரிக்கின்றார்கள் இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!

முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தும் வேதம் என அல்லாஹ் திருக்குர்ஆனைக் குறிப்பிடுகிறான். இது குறித்து மேலும் சில வசனங்களை குர்ஆனில் காணலாம்.

''உயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண்'' எனப் பழிவாங்கும் சட்டம் (5:45) முந்தைய தவ்ராத் வேதத்தில் இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அவற்றையே இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் குற்றவியல் தண்டனையின் தீர்ப்பாக வழங்கினார்கள். அதுபோல் விபச்சாரக் குற்றத்திற்கான கல்லெறி தண்டனையும் தவ்ராத்தில் இருந்தன. வேதக்காரர்களால் அவை மறைக்கப்பட்டிருந்தன:

(விபச்சாரக் குற்றத்திற்காக யூதர்களால்) முகத்தில் கரி பூசப்பட்டு, சட்டையடி தண்டனை நிறைவேற்றப்பட்ட யூதனொருவர் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து, ''விபச்சாரக் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள் ''ஆம்'' என்று (பொய்) சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் யூத அறிஞர்களில் ஒருவரை அழைத்து ''மூஸா (அலை) அவர்களுக்குத் தவ்ராத்தை அருளிய அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன். விபச்சாரம் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் ''இல்லை, நீங்கள் இவ்வாறு (அல்லாஹ்வை முன்வைத்துக்) கேட்டிராவிட்டால் நான் உங்களிடம் (உண்மையைச்) சொல்லமாட்டேன். அவனுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்படும் என்றே நாங்கள் அதில் காண்கிறோம். எனினும் எங்கள் மேன்மக்களிடையே விபச்சாரம் அதிகமாகிவிட்டது. (விபச்சாரம் செய்துவிட்ட மேன்மக்களில் ஒருவரை) நாங்கள் பிடித்துவிட்டால் அந்தத் தண்டனையை விட்டுவிடுவோம். (அதேக் குற்றத்திற்காக) சாமானிய மக்களைப் பிடித்தால் அவர்கள் மீது தண்டனையை நாங்கள் நிலைநாட்டுவோம். ஆகவே, நாங்கள் (கலந்து பேசி) உயர்ந்தவர், தாழ்ந்தவர் அனைவருக்கும் பொதுவான ஒரு தண்டனையை நிறைவேற்றும் என முடிவு செய்தோம். அதனடிப்படையில் கல்லெறி தண்டனைக்குப் பகரமாக முகத்தில் கரி பூசி, கசையடி வழங்கும் தண்டனையை நிறைவேற்றலானோம்'' என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''இறைவா! இவர்கள் உனது சட்டமொன்றைச் சாகடித்து விட்டிருந்த நிலையில் அதை (மீண்டும் நடைமுறைப்படுத்தி) உயிர்ப்பித்த முதல் ஆள் நானாவேன்'' என்று கூறிவிட்டு சாகும்வரை கல்லால் அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்.

அவ்வாறே அந்த யூதர் சாகும்வரை கல்லால் அடிக்கப்பட்டார். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ''தூதரே! (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்... என்று தொடங்கும் வசனத்தை ''அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பெற்றால் அதை எடுத்துக்கொள்ளுங்கள். என்று கூறுகின்றனர். (5:41) என்பதுவரை அல்லாஹ் அருளினான். அதாவது முஹம்மதிடம் செல்லுங்கள். (விபச்சாரம் புரிந்தவனுக்கு) முகத்தில் கரி பூசி, கசையடி தண்டனை நிறைவேற்றுமாறு அவர் உத்தரவிட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். சாகும்வரை கல்லால் அடிக்கும்படி அவர் உத்தரவிட்டால் அதைத் தவிர்த்துவிடுங்கள். என்று யூதர்கள் கூறினர்.

மேலும், அல்குர்ஆன் 5:44, 45, 47 ஆகிய வசனங்களையும் அல்லாஹ் அருளினான்.

இந்த (5:47வது) வசனம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். (முந்தைய இரு வசனங்களும் யூதர்கள் தொடர்பாக அருளப்பெற்றவை)

அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 3505, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்)

இதே அறிவிப்பு சற்று மாற்றங்களுடன் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வழியாக புகாரி நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பார்க்க: புகாரி 3635, 4556, 6819, 6841, 7543, முஸ்லிம் 3503, 3504)

விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை குறித்து இஸ்லாம் மார்க்கத்தின் ஆரம்ப நிலைப்பாடு அல்குர்ஆன் 4:15 வது வசனமாக இருந்தது.

4:15. உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள். அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.

பின்னர், 24:2வது வசனத்தை அல்லாஹ் அருளச் செய்து விபச்சாரம் செய்துவிட்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் நூறு கசையடிகள் வழங்கும்படி வழிகாட்டினான்.

24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

விபச்சாரம் செய்துவிட்ட மணமாகாத ஆண், பெண் இருவருக்கும் நூறு கசையடி வழங்குதல் நீடித்து, விபச்சாரம் செய்துவிட்ட மணமான ஆண், பெண் இருவருக்கும் கல்லெறி தண்டனை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பாக நீடிக்கிறது!

''அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்'' என்ற திருக்குர்ஆன் வழிகாட்டலில். விபச்சாரம் செய்துவிட்ட மணமாகாத, மணமான ஆண், பெண் இருவருக்கும் வழங்கும் கசையடியும், கல்லெறியும் தண்டனைகளின் தீர்ப்புகளை நம்பிக்கை கொண்ட - முஸ்லிம் ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நிறைவேற்றினர் - நிறைவேற்றுகின்றனர்.

இது குறித்து இங்கு பேசுவது பொருத்தமில்லை என்றாலும், மானக்கேடான செயல்களை அனுமதிப்பதால் அதுவே ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் என சமூகக் கட்டுகோப்பிற்கு உறுதுணையாக இருக்கும் மாண்புகளைத் தகர்த்து,  சீரழிவிற்கு வித்திட்டு சமுதாயத்தைப் சின்ன பின்னமாக்கி விடுகிறது. 

விபச்சாரத்தை மானக் கேடான செயலென இஸ்லாம் (4:15. 17:32.) அறிவிப்பதோடு, விபச்சாரக் குற்றத்திற்கானத் தகுந்த தண்டனையையும் வழங்கியுள்ளது.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)   

 



2010/10/30 <ibnuh...@mail.com>
 BROTHER........MUSLIM...and NIZARUDEEN...,               assalaamu alaikkum  warahmathullah..................,
 
இந்த  ஹதீஸ் இல் ஒருவர் விபச்சாரம்  செய்தால் கொலை செய்யப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது......  குற்றவியல் சட்டங்கள்  இறைவனின்  தனி  பாட்ட அதிகாரங்களில் உடையது.... அது அவன் மட்டுமே  சொல்ல வேண்டும்..........எனவே , நீங்கள் ,

  விபச்சாரம் செய்பவரை , ஆணோ , பெண்ணோ ,  மரண தண்டனை கொடுத்து  கொலை செய்ய வேண்டும்  என்ற நேரடி கட்டளையை   குர் ஆன்  இலிருந்து தாருங்கள்......
..
 
 


ibnuh...@mail.com

unread,
Nov 3, 2010, 12:52:39 PM11/3/10
to fro...@googlegroups.com



ஸலாம் 

 
இறைவன்  தெளிவாக       விபச்சாரம் செய்தவர்களுக்கு ,    ஒரு தண்டனையை  கூறுகின்றான்.........   அதனால் ,  .....  நேரடி தெளிவான  , மரண தண்டனை என்பது  இறைவனின்  சட்டம்  என உங்களால்  முன்வைக்க முடியாது........ அதற்க்கு பதிலாக,  ஹதீஸ்   சரி மாற்றமாக ஒன்றை கூறுவதை எழுதியுள்ளீர்கள்.....

''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்'' (அல்குர்ஆன் 5:44)
''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்'' (அல்குர்ஆன் 5:45)
''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் பாவிகள்'' (அல்குர்ஆன் 5:4
.... .    
..... வாலிபரையும்  பெண்களிடம்     பால்குடிக்க சொல்லும்  ஹதீஸ் களுக்கு  , காரணம் கூறி அதை  நியாயப்படுத்தும் நிலையே இங்கும்  உள்ளது........  இது பற்றி தொடர்ந்து நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்.........

Roshan Rosheen

unread,
Nov 4, 2010, 1:04:50 AM11/4/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும்,
மிக தெளிவான பதில் அல்லாஹ்  உங்களுக்கு இன்னும் விளக்கத்தை அதிக படுத்தி
தருவானாக.  


From: muslim <tomu...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Wed, November 3, 2010 9:59:26 PM
Subject: Re: குற்றவியல் தண்டனை - விபச்சாரம்.

Aero Travels Eruvadi

unread,
Nov 5, 2010, 11:31:41 PM11/5/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பான சகோதரர் முஸ்லீம் அவர்களுக்கு,

கீழ்கண்ட வசனத்திற்கு நீங்கள் சொல்லும் ஹதீஸ்கள் முரண்படுவது போல் தெரிகிறதே விளக்கவும்.

وَمَن لَّمْ يَسْتَطِعْ مِنكُمْ طَوْلًا أَن يَنكِحَ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ فَمِن مَّا مَلَكَتْ أَيْمَانُكُم مِّن فَتَيَاتِكُمُ الْمُؤْمِنَاتِ ۚ وَاللَّـهُ أَعْلَمُ بِإِيمَانِكُم ۚ بَعْضُكُم مِّن بَعْضٍ ۚ فَانكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَآتُوهُنَّ أُجُورَهُنَّ بِالْمَعْرُوفِ مُحْصَنَاتٍ غَيْرَ مُسَافِحَاتٍ وَلَا مُتَّخِذَاتِ أَخْدَانٍ ۚ فَإِذَا أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنَاتِ مِنَ الْعَذَابِ ۚ ذَٰلِكَ لِمَنْ خَشِيَ الْعَنَتَ مِنكُمْ ۚ وَأَن تَصْبِرُوا خَيْرٌ لَّكُمْ ۗ وَاللَّـهُ غَفُورٌ رَّحِيمٌ

உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;). அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்;. ஆகவே முஃமினான அடிமைப் பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்;. அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்;. தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்;. இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4:25

கசையடியில் பாதி கொடுக்க முடியும்.  ஒரு வருடத்திற்கு பதிலாக ஆறு மாதம் ஊர் விலக்கம் செய்யமுடியும்.  கல்லெறிந்து கொல்வதில் பாதி தண்டணை  எப்படி செயல்படுத்துவது விளக்கவும்?

இப்படிக்கு

சிராஜ் ஏர்வாடி

2010/11/3 muslim <tomu...@gmail.com>



--
Thanks & best regards
 
AeroTravels
160/101, North Main Road ,
Eruvadi - 627103
Tel No.04637 241200 / 329777
Fax No.04637 242222

ibnuh...@mail.com

unread,
Nov 6, 2010, 12:48:36 AM11/6/10
to fro...@googlegroups.com


நன்றி........ சகோ......சிராஜ்..........நான் எழுத இருந்த பதிலில் ஒரு பகுதியை நீங்கள் கேட்டு உள்ளீர்கள்......


சகோ..
சிராஜ்....இந்த வசனத்தில் உள்ள , முஹ்சனாத்தி  எனும் சொல் , சுதந்திரமான  கற்புள்ள  பெண்  என பொருள்படும்.......... விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண் என்பது தவறு....

இந்த வசனத்தின் விளக்கத்தையும்  மேலும்,  ரஜம் எனும் வார்த்தை எந்த இடத்தில்  இறைவன்  பயன்படுத்தில் உள்ளான் என்பதையும் , சகோ..முஸ்லிம்,  தெளிவாக்க வேண்டும் .......... தொடரும் இந்த ஆய்வும்....

-----Original Message-----
From: Aero Travels Eruvadi <eru...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Sat, Nov 6, 2010 9:01 am
Subject: Re: குற்றவியல் தண்டனை - விபச்சாரம்.

muslim

unread,
Nov 6, 2010, 2:01:28 PM11/6/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

திருக்குர்ஆனில் الرَّجْمُ   - அர்ரஜ்ம்

11:91  قَالُوا يَا شُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيرًا مِّمَّا تَقُولُ وَإِنَّا لَنَرَاكَ فِينَا ضَعِيفًا  ۖ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنَاكَ ۖ وَمَا أَنتَ عَلَيْنَا بِعَزِيزٍ

11:91. (அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்” என்று கூறினார்கள்.

18:20   إِنَّهُمْ إِن يَظْهَرُوا عَلَيْكُمْ يَرْجُمُوكُمْ أَوْ يُعِيدُوكُمْ فِي مِلَّتِهِمْ وَلَن تُفْلِحُوا إِذًا أَبَدًا

18:20. ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்” (என்றும் கூறினர்)

19:46   قَالَ أَرَاغِبٌ أَنتَ عَنْ آلِهَتِي يَا إِبْرَاهِيمُ  ۖ لَئِن لَّمْ تَنتَهِ لَأَرْجُمَنَّكَ ۖ وَاهْجُرْنِي مَلِيًّا

19:46. (அதற்கு அவர்) “இப்றாஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக்க கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லாலெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார்.

26:116   قَالُوا لَئِن لَّمْ تَنتَهِ يَا نُوحُ لَتَكُونَنَّ مِنَ الْمَرْجُومِينَ

26:116. அதற்கவர்கள் கூறினார்கள்: “நூஹே! நீர் (உம் பிரச்சாரத்தை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் கல்லாலெறிந்து கொல்லப்படுவீர்” என்று கூறினார்கள்.

36:18   قَالُوا إِنَّا تَطَيَّرْنَا بِكُمْ  ۖ لَئِن لَّمْ تَنتَهُوا لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌ

36:18. (அதற்கு அம்மக்கள்:) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம்; நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிட்டால் உங்களைத் திட்டமாகக் கல்லாலடிப்போம்; மேலும் எம்மிடமிருந்து உங்களை நோவினை செய்யும் வேதனையும் பிடித்துக் கொள்ளும்.”

44:20   وَإِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ أَن تَرْجُمُونِ

44:20. அன்றியும், “என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.

 



2010/11/6 <ibnuh...@mail.com>

ibnuh...@mail.com

unread,
Nov 7, 2010, 10:02:44 AM11/7/10
to fro...@googlegroups.com
சகோ.....முஸ்லிம்........ wa alaikkum salaam.....

மன்னிக்கவும்....... நான் கேட்டது தலைப்புக்கு சம்பந்தப்பட்ட  ரஜம் என்ற வார்த்தையை பயன்படுத்தி , இறைவன் விபச்சாரம் செய்தவர்களுக்கு கல்லெறிந்து கொலை செய்யும் தண்டனையை  குறிக்கும்,  இடத்தை என்பதை  நினைவூட்டுகிறேன்.....  நான் கேட்ட விதம்  நேரடி எனிலும், தலைப்புக்கும் சம்பந்தப்பட்ட  ரஜம்  என்ற சொல்லித்தான்  நான் கேட்டேன் என்பதை நீங்கள் விளங்க்கிக் கொள்வீர்கள்  என நினத்தேன்...... விரிவாக கேட்காததர்ற்கு மன்னிக்கவும்..... இப்போது,  ..

, "ரஜம்" என்ற வார்த்தையை பயன்படுத்தி , இறைவன் விபச்சாரம் செய்தவர்களுக்கு கல்லெறிந்து கொலை செய்யும் தண்டனையை  குறிக்கும் வசனத்தை 
தாருங்கள்........... 

உங்களுக்கு இறைவன் அருள் புரிவான்......

muslim

unread,
Nov 8, 2010, 10:01:07 AM11/8/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புச் சகோதரர் ibnu hassan அவர்களே!

 
விபச்சாரக் குற்றத்திற்கான ''ரஜ்ம்'' தண்டனையை குர்ஆனிலிருந்து காட்டுவோம் என்று நாமெங்கும் சொல்லவில்லை. 
 
விபச்சாரக் குற்றத்திற்கான கல்லெறி மரண தண்டனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பாக நீடிக்கிறது! என்று நாமறிந்த மார்க்க ஆதாரங்களைத் தொகுத்துக் கூறி முடித்து விட்டோம்.

பின்னர், //''ரஜ்ம் எனும் வார்த்தை எந்த இடத்தில் இறைவன் பயன்படுத்தியுள்ளான்''// என்று நீங்கள் கேட்டதற்காக, குர்ஆனிலிருந்து அறிந்தவற்றை பார்வைக்கு வைத்தோம். நீங்கள் எழுதியதை மீண்டும் படித்துப் பாருங்கள். 

இப்போது அப்படியே மாற்றி,

//"ரஜம்" என்ற வார்த்தையை பயன்படுத்தி , இறைவன் விபச்சாரம் செய்தவர்களுக்கு கல்லெறிந்து கொலை செய்யும் தண்டனையை குறிக்கும் வசனத்தை தாருங்கள்....// - ibnu hassan. எனக் கேட்டுள்ளீர்கள்.

இது குறித்து எமக்குத் தெரியாது! குழும சகோதரர்கள் பதில் தரக்கூடும்.

 
 
2010/11/7 <ibnuh...@mail.com>

Aero Travels Eruvadi

unread,
Nov 8, 2010, 10:12:03 AM11/8/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வர`ஹ்

அன்பான சகோதரர் முஸ்லீம் அவர்களுக்கு,

நபியவர்களுக்கு சுயமாக சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளதா?  அதிகாரம் உள்ளது என்றால் அதற்கான குர்ஆன் வசனத்தை காட்டவும்.  

மேலும் இத்தனை இடங்களில்  கல்லால் அடிப்பதை பற்றிய வார்த்தை குறிப்பிட்டுள்ள அல்லாஹ்  விபச்சாரத்திற்கு கல்லெறிந்து மரண தண்டணை என்ற  முக்கியமான சட்ட விஷயத்தில் அந்த வார்த்தையை பயன்படுத்தி சட்டம் சொல்லாமல் நபியிடமே சட்டம் இயற்றும் அதிகாரத்தை விட்டிருப்பான் என்று நினைக்க மனம் ஒப்புக்கொள்ளவில்லை. 

அல்லாஹ்வுடைய கட்டளையை மக்களுக்கு தெளிவாக எடுத்துச்சொல்வது நபியின் பணி என்று நாம் நினைத்திருந்தோம். 

அல்லாஹ் தெளிவுபடுத்திய  ஹலால் ஹராம் சட்டங்களை எப்படி அமல்படுத்துவது என்பதை  மக்களுக்கு தெளிவுபடுத்துவது அவர்கள் பணி என நினைத்திருந்தோம்.   

மேலும்   அல்லாஹ் கடமையாக்கிய வணக்க வழிபாடுகளை எப்படி செய்வது என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுப்பது அவர்கள் பணி என நினைத்திருந்தோம். 

 தீனுல் இஸ்லாத்தில் சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ் நபிக்கு கொடுத்திருக்கிறான் என்பதை குர்ஆன் மூலம் தெளிவுபடுத்தினால்,  அவர்கள் எந்த சட்டத்தை இயற்றியிருந்தாலும் அதை நாம் அப்படியே பின்பற்றுவது கடமை என்பதை புரிந்து செயல்பட்டு தவறான சிந்தனை மனதில் எழுந்தற்காக அல்லாஹ்விடத்தில்  பாவமன்னிப்பு கோரி மீள்வோம் இன்ஷாஅல்லாஹ்.

இப்படிக்கு

சிராஜ் ஏர்வாடி

2010/11/6 muslim <tomu...@gmail.com>

ibnuh...@mail.com

unread,
Nov 8, 2010, 10:20:31 AM11/8/10
to fro...@googlegroups.com
சகோதரர்  MUSLIM  அவர்களே!

விசயங்களை  வரிக்கு வரி  தெளிவாக எழுதியும்  நீங்கள்  விளங்கவில்லை..... அப்படி கேட்டது ஏன் என  தெளிவாக  பதில் தந்திருந்தேனே ....சகோதரரே........  நீங்கள் அனுப்பிய  இடங்களில  ரஜம் வருவது யாம் அறிந்ததே......... 

எனவே , இறைவன்  கல்லால் அடித்து கொலை செய்ய எந்த சட்டமும்  நமக்கு தரவில்லை  என்பது தெளிவு. நீங்களும் ஒத்துக்கொண்டுள்ளீர்கள்.......  தொடர்ந்து  எழுதுகிறேன் ஆய்வு  தொடரட்டும்............ 

-----Original Message-----
From: muslim <tomu...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Mon, Nov 8, 2010 8:31 pm
Subject: Re: குற்றவியல் தண்டனை - விபச்சாரம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புச் 

ibnuh...@mail.com

unread,
Nov 8, 2010, 10:35:33 AM11/8/10
to fro...@googlegroups.com
 சகோ,,,,,முஸ்லிம்.......

நீங்கள் , கீழ்காணும்,  சூரா 04  , வசனம் 25  இலுள்ள , இறைவனின் கட்டளையை  எப்படி  விளக்குவீர்கள் ???

எப்படி  நடை முறைப்படுத்துவீர்கள் ??
???? 


"""" ...........................................ஆகவே முஃமினான அடிமைப் பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்;. அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும்
அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் விபச்சாரம் செய்துவிட்டால் சுதந்திரமான பெண்கள்  மீது ( விபச்சாரத்திற்க்காக விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு  விதிக்கப்பெறும்;."""............................................................................................................... ( 04 : 25 )  .

muslim

unread,
Nov 8, 2010, 1:54:40 PM11/8/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்புச் சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களுக்கு

அல்லாஹ் இறக்கியதைக் கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மணமாகாதவர் செய்துவிட்ட விபச்சாரக் குற்றத்திற்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்தார்கள் என்பதே எமது ஆழமான நம்பிக்கை! அதற்கான சான்றுகளாக அல்குர்ஆன் 5:44, 45, 47 ஆகிய வசனங்களை முன்வைத்து ஆக்கத்தைத் துவக்கியுள்ளோம்! 


 
 
2010/11/8 Aero Travels Eruvadi <eru...@gmail.com>

ibnuh...@mail.com

unread,
Nov 8, 2010, 10:45:06 PM11/8/10
to fro...@googlegroups.com

  சலாம்,,

சகோ, முஸ்லிம், மற்றும் அனைவருக்கும்,,,,,,,,,,,
  

நாம் எல்லோருமே முன்பு சிந்தனையை,  இறைவனின் வேதத்தை ஒருபக்கத்தில் வைத்து விட்டு நமக்கு இஸ்லாம் என போதிக்கப்பட்ட எல்லாவற்றையும் ஆழமாக நம்பித்தான் ,
 பித்கத்துக்களையும்,  ஏன் சில நேரம் சிர்க் நிலைக்கே இட்டு செல்லக்கூடிய  செயல்களையும்,  இஸ்லாத்தின் வழிகாட்டல் என  செய்து வந்தோம்....


எனவே ,   ஒருவரின் ஆழமான நம்பிக்கை ஒருபோதும் இஸ்லாம் ஆகாது.......ஆக முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும்....

.sorra , 05 , maaida , 44 ,
""
நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்;  நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்;
எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்..""
.
வசனம்  45 , 46 இலும்,  இறைவன் ,
எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, ........., என்று கூறி ,  தான் தான் இறைவன் , தனக்கு மட்டுமே மனிதர்களுக்கு  என்ன சட்டம் மூலம்  தண்டனை  அளிக்க முடியும் என்பதை திரும்ப திரும்ப கூறி , அள் ழாஹவின் சட்டத்தை கொண்டு மட்டுமே மனிதர்களுக்கு தீர்பளிக்க வேண்டும்..... என தெளிவாக கட்டளை இடுகின்றான்....

இப்படி தெளிவாக இருந்தும்,,  ,  இறைவன் என்ன சட்டம் கூறுவது, நான் சொல்கிறேன் சட்டம்  நிறைவேற்றுங்கள்  
என்ற
போக்கில்  ரசூலுல்லாஹ் அவர்கள் சொல்வதாக, சுமார் இருநூறு வருசங்கள் பின்னால் வந்தவர்கள் எழுதி வைத்தால் அதை   அப்படியே  நம்புவது மிக பெரும் அநியாயம்..... மட்டுமல்ல , குப்ர் கே இட்டு செல்லும் என  இறைவன் எச்சரிக்கின்றான்......

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு, சகோ..முஸ்லிம் அவர்கள்  , வெளியூரில் இருந்து  வந்ததும்  ஆய்வை தொடர்ந்து எழுதுங்கள்......

.
இறைவனின் தெளிவான கட்டளை  குர் ஆனின்  தூய்மையான கட்டளையை கொண்டே  நிலை நிறுத்தப்பட வேண்டும்...அதை  மக்களுக்கு சொல்லத்தான் இறைவன் தூதர்களை அனுப்பினான் என்பதையும் , கவனத்தில் கொண்டு , உங்கள்  நிலையை எழுதுங்கள்.

தொடர்வோம்.....









-----Original Message-----
From: muslim <tomu...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Tue, Nov 9, 2010 12:24 am
Subject: Re: குற்றவியல் தண்டனை - விபச்சாரம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
அன்புச் 

Roshan Rosheen

unread,
Nov 9, 2010, 3:39:52 AM11/9/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் இப்னு ஹசன் அவர்களுக்கு,
அன்பு சஹோதரர்கள் ஆன முஸ்லிம் \,இப்னு ஹசன்,சிராஜ் அவர்களுக்கு அல்லாஹ் அறிவில் விசாலத்தை கொடுப்பானாக 
சட்டம் இயற்றும் அதிகாரத்தை அல்லாஹ் தனது தூதரான முஹம்மத் சள்ளல்லாஹு அலைஹிவ சல்லம்  அவர்களுக்கும் கொடுத்துல்லானா   ?
இவ்வளவு காலமாக முஹம்மது நபிக்கு அந்த அதிகாரம் இருந்த படியால் தான் நாங்கள் ஐவேளை தொழுது வருகிறோம் 
அந்த அதிகாரம் நபி முஹம்மதுக்கு இருந்தபடியால் தான் நாங்கள் முறைப்படி 2 .5 ஜகாத் கொடுத்து வருகிறோம் அதே போன்று ஹஜ் நோன்பு கடைப்பிடித்து வருகிறோம் இந்த அமல் களின் சட்டங்கள் எல்லாம் அல்லாஹ் குரானில் சொல்லாதவைகள்.உங்களுடைய இந்த வாதத்தில் நீங்கள் அதாவது சிராஜ்,இப்னு ஹசன் உண்மையாலர்களாய் இருந்தால் மேற்சொன்ன விடயங்கள் அனைத்தையும் கடைபிடிக்காமல் இருக்கவேண்டும் அதை முதலில் பகிரங்கமாகவே தெளிவு படுத்தவும்.     


From: "ibnuh...@mail.com" <ibnuh...@mail.com>
To: fro...@googlegroups.com
Sent: Tue, November 9, 2010 9:15:06 AM

Mohamed Faisal john

unread,
Nov 9, 2010, 4:35:57 AM11/9/10
to fro...@googlegroups.com
அன்பு சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் 

மார்க்கம் சம்மந்தபட்ட விசயங்களில் நபி (ஸல்) அவர்கள் தாமாக எதுவும் பேசுவதில்லை மாறாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து தனக்கு வஹி மூலம்  அறிவிக்கபட்டதையே பின்பற்றினார்கள் என்பது நாம் ஏற்றுக்கொண்டுள்ள இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை. 

மேற்சொன்ன அடிப்படையை நன்கு விளங்கி உங்களின் இது போன்ற (திருமணம் முடித்து விபச்சாரம் செய்பவர்களுக்கு கல்லால் அடித்து மரண தண்டனை அளித்தல்) சட்டங்களை அணுகினால் நன்மை உள்ளதாய் அமையும்.

நட்புடன்,
பைசல் 
துபாய் 

2010/11/9 Roshan Rosheen <roshan...@yahoo.com>

Roshan Rosheen

unread,
Nov 9, 2010, 4:43:58 AM11/9/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அழைக்கும் இப்னு ஹசன் அவர்களே,
  சுமார் இருநூறு வருசங்கள் பின்னால் வந்தவர்கள் எழுதி வைத்தால் அதை   அப்படியே  நம்புவது மிக பெரும் அநியாயம்..... மட்டுமல்ல , குப்ர் கே இட்டு செல்லும் என  இறைவன் எச்சரிக்கின்றான்...... 

ஹதீஸ்கள் சம்பந்தமாக உங்கள் நிலவரம் என்ன இரண்டு நூற்றாண்டுகள் பின்னால் எழுதப்பட்டது என்று சொல்கிறீர்கள் அப்பொழுது ஹதீஸ்கள் அத்தனையையும் நிராகரிக்க வேண்டுமா ?

From: "ibnuh...@mail.com" <ibnuh...@mail.com>
To: fro...@googlegroups.com
Sent: Tue, November 9, 2010 9:15:06 AM

Aero Travels Eruvadi

unread,
Nov 8, 2010, 10:23:22 PM11/8/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் இறக்கியதை கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என கூறிவிட்டு குர்ஆனுக்கு முரணாக நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள் என்பது ஏற்க முடியாததாக உள்ளது.  

கீழ்கண்ட கேள்விக்கும்,  சகோதரர் இப்னு  ஹஸன் கேட்ட கேள்விக்கும் பதிலளித்தால் மட்டுமே முரண்பாடு தீரும்.

கசையடியில் பாதி கொடுக்க முடியும்.  ஒரு வருடத்திற்கு பதிலாக ஆறு மாதம் ஊர் விலக்கம் செய்யமுடியும்.  கல்லெறிந்து கொல்வதில் பாதி தண்டணை  எப்படி செயல்படுத்துவது விளக்கவும்?//siraj

அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் விபச்சாரம் செய்துவிட்டால்சுதந்திரமான பெண்கள்  மீது விபச்சாரத்திற்க்காக )  விதிக்கப்படும் தண்டனையில் பாதியேஅப்பெண்களுக்கு  விதிக்கப்பெறும்;//ibnu Hassan

இப்படிக்கு

சிராஜ் ஏர்வாடி

2010/11/9 muslim <tomu...@gmail.com>

Aero Travels Eruvadi

unread,
Nov 9, 2010, 11:20:09 AM11/9/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பான சகோதரர் ரோஷன் ரோஷீன் அவர்களுக்கு,

தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், ஆகியவற்றை அல்லாஹ் கடமையாக்கினான்  என்பதால் செய்கிறோமா?  தூதர் கடமையாக்கினார்கள்  என்பதற்காக செய்கிறோமா? 

பதில் தரவும்

இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி


2010/11/9 Roshan Rosheen <roshan...@yahoo.com>

Aero Travels Eruvadi

unread,
Nov 9, 2010, 11:26:39 AM11/9/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புச் சகோதரர்  முகம்மது பைசல் ஜான் அவர்களுக்கு

திருக்குர்ஆன் வசனத்திற்கு எதிராக ஹதீஸ் இருந்தாலும் பின்பற்றியே ஆக வேண்டுமா?  அதற்கான ஆதாரம் ஏதாவது குர்ஆனில் இருந்தால் தெளிவுபடுத்தவும்.  

இறை வசனத்திற்கு எதிராக நபியவர்கள் ஒரு சட்டத்தை இயற்றியிருப்பார்கள் என்று எப்படி சுலபமாக நீங்கள் கூறுகிறீர்கள்.  நீங்கள் அந்த அடிப்படையில் கூறவில்லை என்றால் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் தரவும். நான் விளங்கி என் சிந்தனையை சரி செய்ய முயற்சிக்கிறேன்.

கசையடியில் பாதி கொடுக்க முடியும்.  ஒரு வருடத்திற்கு பதிலாக ஆறு மாதம் ஊர் விலக்கம் செய்யமுடியும்.  கல்லெறிந்து கொல்வதில் பாதி தண்டணை  எப்படி செயல்படுத்துவது விளக்கவும்?//siraj

அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் விபச்சாரம் செய்துவிட்டால்சுதந்திரமான பெண்கள்  மீது விபச்சாரத்திற்க்காக )  விதிக்கப்படும் தண்டனையில் பாதியேஅப்பெண்களுக்கு  விதிக்கப்பெறும்;//ibnu Hassan

இப்படிக்கு

சிராஜ் ஏர்வாடி.


Aero Travels Eruvadi

unread,
Nov 9, 2010, 11:39:54 AM11/9/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புச் சகோதரர் Roshan Rosheen அவர்களுக்கு,

ஹதீஸ் கலை சட்டங்களுக்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரம் கேட்டு இது வரை யாரும் தரவில்லை என்பதை நினைவில் வைக்கவும்.  அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிதராத ஒரு முறையில் ஹதீஸ்களை சரி தவறு என பிரிப்பதற்கு நமக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் பல முறை பல நபர்களிடம் கேட்டும் யாரும் இதுவரை சரியான பதில் அளிக்கவில்லை.

எனவே ஹதீஸ்களை  யார் வேண்டுமானாலும் ஒரு அளவு கோளை வைத்து தரம்பிரித்து பின்பற்றுவதில் யாரையும் யாரும்  குறை கூற முடியாது.  

ஹதீஸ்கலை சட்டங்களுக்கு இதுவரை அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதருடைய நடைமுறையிலிருந்தும் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்காமல் அதை நாம் கண்மூடி பின்பற்றப்பட்டு வருவதை பரீசீலனை செய்யுங்கள்.  

அதன் பின் ஹதீஸ்கள் எத்தனை வருடங்களுக்கு பின் எழுதப்பட்டது என்பதையும் அதை நிராகரிக்க முடியுமா? ஏற்க முடியுமா? என்பதைபற்றி ஆய்வு செய்வோம்.  இன்ஷாஅல்லாஹ்.

இப்படிக்கு

சிராஜ் ஏர்வாடி

2010/11/9 Roshan Rosheen <roshan...@yahoo.com>

ibnuh...@mail.com

unread,
Nov 9, 2010, 12:16:12 PM11/9/10
to fro...@googlegroups.com
wa alaikkum salaam wa rahmathullah........

brother, Roshan , muslim and brothers........,

இங்கு சில சகோதரர்கள் இந்த தலைப்பின் சரியான ஆய்வின்  நோக்கத்தை சரியாக விளங்கி கொள்ளாது  கேள்விகளை , தலைப்புக்கு சம்பந்தமின்றி வைக்கின்றனர்.......

இங்கு நாம் யாரும்  ஹதீஸ்களை  மறுத்து தேவை இல்லை என  கூற ஆய்வு செய்யவில்லை.....  மாறாக் , ஹதீஸ்கள எனும் பெயரில்  எழுதப்பட்டுள்ளவை , இறைவனின் தெளிவான கட்டளைக்கு மாற்றமாக இருக்கும்போது ,வழிகாட்டலை எப்படி  , எதில் இருந்து  பெற வேண்டும் என்பதை , இறைவனின் வசனங்களில் இருந்து மட்டும் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆய்வு செய்கின்றோம்....இவற்றை  முதலில் நன்கு விளங்கி வாதங்களை வையுங்கள்.... 
முடிந்தால், இங்கு ஹதீஸ் கலை சந்தேகங்கள் என்ற தலைப்பில்  பல கேள்விகள் உள்ளன    அந்த     கேள்விகளுக்கு மட்டுமே நீங்கள் இங்கு வைக்கும்  கேள்விகள் பொருத்தம் ..எனவே , .அவற்றை  சிந்தித்து விடை அளிக்க முயலுங்கள்......

இந்த தலைப்பை சரியாக  புரிந்து கேள்விகளை வையுங்கள். ... இறைவன் தெளிவை  தருவான்.....

மேலும், இங்கு சட்டம் இயற்ற்றும் அதிகாரம் , என்பது ,  குறிப்பாக ,  குற்றவியல்  சட்டம் என்பதை மனதில் வையுங்கள்... மனிதர்களின் ஒரு குற்றத்துக்கு  இந்த உலகிலோ, மறு உலகிலோ  அதற்குரிய தண்டனை சட்டம் அந்த மனித குலத்தை  படைத்த  இறைவன் மட்டுமே  கூற முடியும்...இங்கு அதில் இறைவனின் தூதர் யாருக்கும் அதிகாரமில்லை..... இதை  மேல் சொன்ன சூரா மாயிதா வின் , வசனம்  மிக தெளிவாக விளக்குகின்றது...  ..அதில் மேலோட்டமாக பார்த்தாலே விளங்கும்...  தவ்ராத் வேத  ப்படி தான்  சட்டங்களை  அதற்குரிய தூதர் செயல்படுத்தினார்களே அன்றி,  தவ்ராத்தில்  அள்ழாஹ்  ஒரு சட்டம் கட்டளை இட ,, அதற்கு மாறாக  தூதர் அதை மாற்றி வேறு ஒரு சட்டம் கூறவே இல்லை........ கூறவும் முடியாது........ இதை சரியாக விளங்கி கொள்ளுங்கள்....

ஆனால், நம் ரசூலுல்லாஹ் விடயத்தில்தான் ,  ஹதீஸ் என்ற பெயரில் எத்தனையோ  முரண்பாடுகளை எழுதி குவித்துள்ளார்கள்.. அதையே நமக்கு  ஸஹேஹ்  கிரந்தங்கள் , என புகட்டி உள்ளனர்....... 


இங்கு அறிவை ஒரு பக்கம் வைத்து விட்டு, நம்புவோம், ஆழமாக நம்புவோம் , ஹதீஸ் என கூறினால்  உடன் ஏற்ற்போம் , சிந்திக்க மாட்டோம், இறைவனின் வசங்களுடன் ஒப்பிட்டு உண்மையை அறிந்து அமுல் நடத்த முயல மாட்டோம் என்பவர்களுக்கு, இறைவனின் ஒரே ஒரே எச்சரிக்கையை  முன் வைக்கின்றேன்........


, சூரா புர்கான் , வசனம்  73
  ;;

  وَالَّذِينَ إِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا
 
"".
இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப் பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது
விழமாட்டார்கள்.
(சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.)"" ( 25 ; 73 )


இந்த வசனம் இறைவன்  மட்டும் சொல்லாது இருந்தால் , நாம் இன்று  இஸ்லாத்தின் ..உண்மை நிலையை , தூய்மையான  வழி காட்டலை  ., அறிந்தே இருந்திருக்க மாட்டோம்....... இந்த வசனத்தி உண்மையில் ஆழமாக நம்பிக்கை கொண்ட  எவரும்   எதையும் ஆராயாமல்  கண் மூடி பின்பற்றுவாரானால் , அவர் நிலையை  இறைவன்தான்  நேராக்க வேண்டும்.. மேலும்,  நீங்கள் கேட்ட  ஹஜ்  கிரியைகள் ,  சகாத் , தொழுகை சட்டங்கள்  என்பன  குற்றவியல் சட்டங்கள் அல்ல.....அவை  இறைவனின்   சில இபாத்ததுக்களுக்குரிய அடிப்படை விளக்க செயற்ப்பாடுகள் மாத்திரமே.....

அதிலும் கூட,  இறைவன் தெளிவாக் ஒரு வழி காட்டலை சொல்லி, இந்த முறையில் செய்ய வேண்டும் என கூறினால் அந்த முறைப்படி செய்ய சொல்லி நமக்கு அதை  தெளிவு படுத்தும் செயலையே தூதர் அவர்கள் செய்தார்கள்....... மாறாக், அதை சொல்லாமல்,  நான் சொல்கின்றேன் இப்படி செய்யுங்கள் என கூற வே இல்லை.......கூறவும் முடியாது........ உதாரணமாக,

தொழ முன்  வுழு செய்ய இறைவன் கூறி, அதை எப்படி செய்யணும் என கூறுகின்றான்.......... முதல் முகத்தை கழுவ வேண்டும்......, இதையே நமது தூதர்  முஸ்லிம்களுக்கு அறிவித்தார்...... மாறாக்,  முகத்தை கழுவாது,   முகத்தின் ஒரு பகுதியை கழுவுங்கள் வாய் கொப்பளித்தல், மூக்குக்கு  தண்ணீர் செலுத்தல் என கூறினால்  அவர் , இறைவனுக்கு மாற்று செய்து இறைவனின் வழி காட்டலை  மாற்றிய குற்றத்துக்கு ஆளாவார்....அதே நேரம் ,  முகத்தை கழுவ இறைவன் சொல்வாதாக் நமக்கு கூறி ,  மேலதிகமாக அவர்கள்  செய்த  வாய் கொப்பளித்தல், மூக்குக்கு  தண்ணீர் செலுத்தல் என்பவற்றை செய்தால், செய்ய  சொன்னால் அதுவே நமக்கு , மேலதிக நன்மை தரும்  சுன்னாவாக மாறும்.  இப்போது , இறைவன் வழி காட்டல் பின்பற்றப்பட்டு, மேலதிக சுன்னாஹ்வும் பின்பற்றப்பட்டு  நன்மை கிடைக்கும்......மாறாக,  இறைவன் கட்டளையை மட்டும் செய்து , சுன்னாவான ..வாய் கொப்பளித்தல், மூக்குக்கு  தண்ணீர் செலுத்தல் என்பவற்றை  செய்யாது விட்டால் ,  மேலதிக நன்மை  கிடைக்காது .......அவ்வளவுதான்...... இங்கு இறைவன் கட்டளை தெளிவாக நேரடியாக போன்பற்றப்பட வேண்டும்.......

......இதுவே  இறைவன் நேரடியாக கட்டளை இட்ட விடயங்களில், இறைவனின் கட்டளையை  நேரடியாக பின்பற்றுவதற்கும்  , சுன்னாஹ் வை  பின்பற்றுவதற்கும்  உள்ள  அடிப்படை ... இதை சரியாக விளங்கிக் கொண்டால் இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறியாக  மாறும்...........

..இப்படி  முரண்பாடாக  ஒரு ஹதீஸ் நமக்கு அறிவிக்கப்பட்டால், நாம் எதை செயல் படுத்துவோம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்....இதற்கு இன்னும் பல உதாரணம் தர முடியும்..... நீண்டு விடும் என்பதால்  இது போதும் சிந்திப்பவர்களுக்கு என நினைக்கின்றேன்.....

... இந்த ஒரு இபாதத்தின்  வழி காட்டளேயே நாம் குர் ஆனின் படி தான் முதல் செய்வோம் என்பதில்  மாற்றுக் கருத்து இருக்குமா ?

5:49"" ..............இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்;........................"" ( 05 ; 49 )

05;48 ""...........................
. இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; .................................... """ ( 05 ; 48 )


இப்படி தெளிவாக இறைவனின் கட்டளை இருக்கும்போது,  தூதர் அவர்கள் அதை மாற்றி ,  யூதர்களின்  வழி அமைந்த  தண்டனை சட்டத்தை எப்படி அமுல் நடத்துவார்கள்  ??
.
அப்படி எனில் , குற்றவியல் தண்டனை சட்டம் ஒன்று இறைவன் கட்டளைக்கு  சரி நேர்மாறாக அதுவும் யூதர்களின் அதே வழி முறைப்படி , ஹதீஸ் என்ற பெயரில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் ?  சிந்தியுங்கள்.. ...

எனவே,  மாற்றுக் கருத்துள்ளவர்கள்  தெளிவாக கருத்துக்களை வைக்கலாம்....... ஆய்வு தொடரும்...... ....
...


..  .
.















ibnuh...@mail.com

unread,
Nov 9, 2010, 10:54:21 PM11/9/10
to fro...@googlegroups.com

bro,  Roshan Rosheen ,,,,,, salaam ., 

நாம் எல்லோரும்  இஸ்லாத்தின் உண்மையான  வழி காட்டல்களை  ஆய்ந்து உண்மையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற தூய்மையான நோக்கத்தில் உள்ளோம்......  எனவே நீங்கள்
ஒருவர் எழுதியதை  ஏதும்  மேற்கோள்  காட்டும்போது ,    சரியாக  மேற்கோள் காட்டி  எழுதவும்.....

நீங்கள் நான்  எழுதியாதாக  கூறியுள்ளது........,

///////அஸ்ஸலாமு அழைக்கும் இப்னு ஹசன் அவர்களே,சுமார் இருநூறு வருசங்கள் பின்னால் வந்தவர்கள் எழுதி வைத்தால் அதை   அப்படியே  நம்புவது மிக பெரும் அநியாயம்..... மட்டுமல்ல , குப்ர் கே இட்டு செல்லும் என  இறைவன் எச்சரிக்கின்றான்./////roshan
 
.. சற்று சிந்தியுங்கள் யாரும் ஒருவர் , இதை படிக்கும்போது என்ன  நினைப்பார்...  இந்த  இப்னு ஹசன் என்பவன்  ஹதீஸ்களை எல்லாம்   மறுக்கின்றான்.....அப்படி ஹதீஸ்
களை    நம்புபவன் காபிராகிவிடும்  அளவுக்கு  போய்  விடுவான்...... என்றல்லவா அல்லவா சிந்திப்பார்கள்......... இப்படி தவறான கருத்தை  விதைப்பது  பெரும் பாவம் அல்லவா ???

நீங்கள்  நான் எழுதியதை , சரியான முறையில் மேற்கோள் காட்டுவது எனில்,  .......

/////////
வசனம்  45 , 46 இலும்,  இறைவன் , எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, ........., என்று கூறி ,  தான் தான் இறைவன் , தனக்கு மட்டுமே மனிதர்களுக்கு  என்ன சட்டம் மூலம்  தண்டனை  அளிக்க முடியும் என்பதை திரும்ப திரும்ப கூறி , அள் ழாஹவின் சட்டத்தை கொண்டு மட்டுமே மனிதர்களுக்கு தீர்பளிக்க வேண்டும்..... என தெளிவாக கட்டளை இடுகின்றான்.... இப்படி தெளிவாக இருந்தும்,,  , 
இறைவன் என்ன சட்டம் கூறுவது, நான் சொல்கிறேன் சட்டம்  நிறைவேற்றுங்கள்  
என்ற
போக்கில்  ரசூலுல்லாஹ் அவர்கள் சொல்வதாக, சுமார் இருநூறு வருசங்கள் பின்னால் வந்தவர்கள் எழுதி வைத்தால் அதை   அப்படியே  நம்புவது மிக பெரும் அநியாயம்..... மட்டுமல்ல , குப்ர் கே இட்டு செல்லும் என  இறைவன் எச்சரிக்கின்றான்...////// இப்னு ஹசன்

என்று  நான் எழுதியதை நேர்மையாக  காட் ட  வேண்டும்...

இப்போது இதை படிக்கும் ஒருவர் ,  இறைவனின் கட்டளைக்குக் மாற்றமாக ஒரு ஹதீஸ் இருந்தால் ... அதை ஆய்ந்து  உண்மையை கண்டு , இறைவனின் கட்டளையை மட்டுமே  நடை முறைப்படுத்த வேண்டும் என்ற நல்ல சிந்தனை அல்லவா வரும்......

எனவே இனிமேல் , இந்த விசயத்தில் கவனமுடன் இருங்கள்..... தவறுதலாகவோ , தெரியாமலோ எழுதி விட்டீர்கள் என நல்ல எண்ணம் கொள்கின்றேன்..............  ஆய்வு தொடரட்டும்......... 

Roshan Rosheen

unread,
Nov 10, 2010, 12:26:13 AM11/10/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சஹோதரர் சிராஜ் ஏர்வாடி அவர்களுக்கு,
தொழுகை எவ்வாறு தொழவேண்டும் என்றொரு சட்டம் உள்ளது அதேபோல் ஜகாத் எவ்வாறு கொடுக்கவேண்டும் என்றொரு சட்டம் உள்ளது அதேபோன்று நோன்பு,ஹஜ் எவ்வாறு செய்யவேண்டும் என்றொரு சட்டம் உள்ளது வெறுமனே அல்லாஹ் தொழுங்கள் ஜகாத் கொடுங்கள் ஹஜ் செய்யுங்க நோன்பு இருங்கள் என்று மாத்திரமே சொல்கிறான் அதை எவ்வாறு செய்யவேண்டும் என்ற சட்டங்கள் ஒன்றும் அல்லாஹ் சொல்லவில்லை அதை நபி சள்ளல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்களே சொல்லியுள்ளார்கள்.
அல்லாஹ் கடமையாக்கினானா ரசூல் கடமைய்யாக்கினார்களா என்பதல்ல கேள்வி நபிக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கா இல்லையா என்பதே கேள்வி.
பிழை இருந்தால் சுட்டி காட்டவும்    

From: Aero Travels Eruvadi <eru...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Tue, November 9, 2010 9:50:09 PM

Roshan Rosheen

unread,
Nov 10, 2010, 12:37:21 AM11/10/10
to fro...@googlegroups.com
 அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சஹோதரர் சிராஜ் ஏர்வாடி அவர்களுக்கு,
// எனவே ஹதீஸ்களை  யார் வேண்டுமானாலும் ஒரு அளவு கோளை வைத்து தரம்பிரித்து பின்பற்றுவதில் யாரையும் யாரும்  குறை கூற முடியாது.//
இதுவே என்னுடைய சிந்தனையும் யாரும் யாரையும் குறை சொல்லத்தேவை இல்லை ஆனால் வைக்ககூடிய அளவு கொளை சரியானவையாக இருக்கவேண்டும் அதுவே விமர்சனம் பன்னவேண்டியவை   



From: Aero Travels Eruvadi <eru...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Tue, November 9, 2010 10:09:54 PM

Roshan Rosheen

unread,
Nov 10, 2010, 1:14:27 AM11/10/10
to fro...@googlegroups.com
 அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சஹோதரர் இப்னு ஹசன் அவர்களுக்கு,
நீங்கள் குரானையும் ஹதீசையும் ஏற்றுக்கொண்டு அதிக காலம் இந்த குழுமத்தில் பதிவிடுகிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் அந்த விடயத்தில் நான் உங்களை சந்தேகம் கொள்ளவில்லை.நீங்கள் எழுதியதை முழுமையாக பார்த்த பின்னால் வந்த சந்தேகத்தையே நான் உங்களிடம் கேட்டுள்ளேன்.
அதில் சிறு பகுதியை போட்டு உங்களை தப்பாக மற்றவர்கள் என்னவேண்டும் என்பதற்காக நான் போடவில்லை அதை யாரும் முழுமையாக படித்தால்கூட அந்த சந்தேகம் வரத்தான் செய்யும்.    

Sent: Wed, November 10, 2010 9:24:21 AM

Roshan Rosheen

unread,
Nov 10, 2010, 3:01:59 AM11/10/10
to fro...@googlegroups.com
 அஸ்ஸலாமு அழைக்கும் ஹசன் இப்னு அவர்களுக்கு,
இங்கு நான் தலைப்புக்கு சம்பந்தமில்லாது கேள்விகளை வைக்கவில்லை நீங்கள் சம்பந்தமில்லாமல் ஹதீஸ் 200 வருடம் கழித்து எழுதப்பட்டது என்று சம்பந்தமில்லாமல் கூறுனீர்கள் அதனாலேயே கேட்கவேண்டியதாபோச்சி .
இங்கு யாரும் உங்களை ஹதீஸை மறுத்தவர் என்று சொல்லவில்லை நீங்கள் எழுதினதின் அடிப்படையில் எழுந்த சந்தேகமே இவ்வளவே .
நீங்களும் சற்று தலைப்பை பார்த்து எழுதவும் நன்றி.
   //மேலும், இங்கு சட்டம் இயற்ற்றும் அதிகாரம் , என்பது ,  குறிப்பாக ,  குற்றவியல்  சட்டம் என்பதை மனதில் வையுங்கள்... மனிதர்களின் ஒரு குற்றத்துக்கு  இந்த உலகிலோ, மறு உலகிலோ  அதற்குரிய தண்டனை சட்டம் அந்த மனித குலத்தை  படைத்த  இறைவன் மட்டுமே  கூற முடியும்...இங்கு அதில் இறைவனின் தூதர் யாருக்கும் அதிகாரமில்லை..... இதை  மேல் சொன்ன சூரா மாயிதா வின் , வசனம்  மிக தெளிவாக விளக்குகின்றது...  ..அதில் மேலோட்டமாக பார்த்தாலே விளங்கும்...  தவ்ராத் வேத  ப்படி தான்  சட்டங்களை  அதற்குரிய தூதர் செயல்படுத்தினார்களே அன்றி,  தவ்ராத்தில்  அள்ழாஹ்  ஒரு சட்டம் கட்டளை இட ,, அதற்கு மாறாக  தூதர் அதை மாற்றி வேறு ஒரு சட்டம் கூறவே இல்லை........ கூறவும் முடியாது........ இதை சரியாக விளங்கி கொள்ளுங்கள்.//.ibnu hasa
குற்றவியல் சட்டம் மாத்திரம் அல்ல சஹோதரரே வாழ்க்கைக்கு தேவை படும் அனைத்து சட்டங்களும் அல்லாஹ்வே சொல்லவேண்டும்.சூரா மாயிதாவில் குற்றவியல் சட்டங்களைத்தான் அல்லாஹ் சொல்ல சொல்கிறானா இல்லாவிட்டால் எல்லா சட்டங்கலயுமா  ?
கடமையாகக பட்ட தொழுகை ,நோன்பு,ஹஜ்,ஜகாத் எவ்வாறு நிறை வேற்ற வேண்டும்  என்பதை அல்லாஹ் தான் சொல்லவேண்டும் ஆனால் நாங்கள் நபி சொன்ன பிரகாரமே செய்து கொண்டு இருக்கிறோம்.சட்டத்தை சொல்லும் அதிகாரம் நபிக்கும் கொடுக்கப்பட்டதால் தான் அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள் அது  குர்ஆனில் சொல்லாவிட்டாலும் சரியே.நீங்கள் சொல்லி காட்டிய வுழு சம்பந்தமாக அல்லாஹ் முகத்தை கழுவ சொல்கிறான் ஆனால் வாய் கொப்பளித்து மூக்குக்கு தன்நீர்செளுத்தி  சிந்தும் படி குர்ஆனில் இல்லை நபி செய்துள்ளார்கள் இதை அவர்கள் எவ்வாறு அறிந்து கொண்டார்கள் இதை போன்று ஏராளமாக கேட்கலாம் குரானில் இந்த சட்டங்கள் இல்லாவிட்டாலும் அல்லாஹ் நபிக்கு வஹியாக அறிவித்து கொடுத்தவைகள் தான் என்று.
இந்த கண்ணோட்டத்தில் உங்கள் ரஜ்ம் விடயத்துக்கு வருவோம்திருமணம் முடித்து விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொள்ளப்படவேண்டும் என்று  ஹதீஸில் ஏற்கனவே ரஜ்ம் சம்பந்தமான ஹதீஸ்கள் முன்வைக்க பட்டுவிட்டது  இவைகள் குரானுக்கு முரண் என்று ஒரு ஆயத்தை வைத்தீர்கள்.
    அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் விபச்சாரம் செய்துவிட்டால்சுதந்திரமான பெண்கள்  மீது விபச்சாரத்திற்க்காக )  விதிக்கப்படும் தண்டனையில் பாதியேஅப்பெண்களுக்கு  விதிக்கப்பெறும்;//ibnu ஹசன்.
திருமணம் செய்த அடிமை பெண்கள் விபச்சாரம் செய்தால் சுதந்திரமான கற்புள்ள பெண்கள் விபச்சாரம் செய்து கிடைக்கும் தண்டனையில் பாதியே இந்த அடிமை பெண்களுக்கு கிடைக்கும் என்று அல்லாஹ் தெளிவாக சொல்கிறான்இந்த ஆயத் எவ்வாறு ரஜ்ம் சம்பந்த மான ஹதீசுக்கு முரண்படும் அதில் திருமணமான அடிமை பெண்களுக்கு நபியவர்கள் ரஜ்ம் சட்டத்தை செயல் படுத்தவில்லையே அப்படி செயல் படுத்தினால் தான் அது குரானுக்கு முரணாகும்.நபி சள்ளல்லாஹு அலைஹிவசள்ளம் அவர்கள் அடிமை அல்லாத திருமணமான பெண்கள் மீதே ரஜ்ம் சட்டத்தை நிறைவேற்றி யுள்ளார்கள் என்பது தெளிவாக விளங்கும் சட்டமே.
         

Sent: Tue, November 9, 2010 10:46:12 PM

Subject: Re: குற்றவியல் தண்டனை - விபச்சாரம்.

Aero Travels Eruvadi

unread,
Nov 10, 2010, 3:24:21 AM11/10/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

//திருமணம் செய்த அடிமை பெண்கள் விபச்சாரம் செய்தால் சுதந்திரமான கற்புள்ள பெண்கள் விபச்சாரம் செய்து கிடைக்கும் தண்டனையில் பாதியே இந்த அடிமை பெண்களுக்கு கிடைக்கும் என்று அல்லாஹ் தெளிவாக சொல்கிறான்இந்த ஆயத் எவ்வாறு ரஜ்ம் சம்பந்த மான ஹதீசுக்கு முரண்படும் அதில் திருமணமான அடிமை பெண்களுக்கு நபியவர்கள் ரஜ்ம் சட்டத்தை செயல் படுத்தவில்லையே அப்படி செயல் படுத்தினால் தான் அது குரானுக்கு முரணாகும்.நபி சள்ளல்லாஹு அலைஹிவசள்ளம் அவர்கள் அடிமை அல்லாத திருமணமான பெண்கள் மீதே ரஜ்ம் சட்டத்தை நிறைவேற்றி யுள்ளார்கள் என்பது தெளிவாக விளங்கும் சட்டமே.// Roshan Rosheen

தாங்கள் மேற்குறிப்பிட்டுள்ள அடிப்படையில்  சுதந்திரமான கற்புள்ள பெண்கள் என்பது திருமணமான பெண்களை  குறிக்காது என்பதை கூற வருகிறீர்களா? தெளிவுபடுத்தவும்.

இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி
         

2010/11/10 Roshan Rosheen <roshan...@yahoo.com>

Roshan Rosheen

unread,
Nov 10, 2010, 5:43:44 AM11/10/10
to fro...@googlegroups.com
 அஸ்ஸலாமு அழைக்கும்,
 திருமணம் ஆகாத சுதந்திரமான கற்புள்ள பெண் என்றே சொல்லியுள்ளேன் இவ்வாறு மொழியாக்கம் செய்வது தவறு என்றா நீங்கள் சொல்கிறீர்கள்   

From: Aero Travels Eruvadi <eru...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Wed, November 10, 2010 1:54:21 PM

ibnuh...@mail.com

unread,
Nov 10, 2010, 7:45:26 AM11/10/10
to fro...@googlegroups.com
  """"நீங்கள் சம்பந்தமில்லாமல் ஹதீஸ் 200 வருடம் கழித்து எழுதப்பட்டது என்று சம்பந்தமில்லாமல் கூறுனீர்கள்""" roshan,,

நீங்கள் முதலில் ,     இந்த ஹதீஸ்கள எல்லாம் எப்போது  எழுதப்பட்டு தொகுக்கப்பட்டது  என்பதை  எழுதுங்கள்..அதன் பின் , அது  200  வருஷம் கழிச்சா அல்லது  நீங்கள் கூறுவது போலா என  தெளிவாக்குவோம்..

( இதற்க்கு வேறு தலைப்பு பயன்படுத்துங்கள் ....... )
.

 ""அடிமை அல்லாத திருமணமான பெண்கள் மீதே ரஜ்ம் சட்டத்தை நிறைவேற்றி யுள்ளார்கள் என்பது தெளிவாக விளங்கும் சட்டமே"" rosahn 

 இங்கு குறிப்பிடப்படும் வசனத்தில்    பொதுவாக  சுதந்திர கற்புள்ள பெண்களை  குறிப்பிட்டு இறைவன் கூறுகிறான் ..... திருமனமானவரோ , திருமனமாகாதவரோ  விபச்சாரம் செய்தால்,  நூறு  கசையடி வழங்க வேண்டும் ....  இங்கு பொதுவாக இரு வகயானவருக்கும்  உரிய  தண்டனையை இறைவன் கூறுகிறான்..இறைவன் பிரித்து கூறாது ஒரே வகை தண்டனையை கூறுகிறான்....
இறைவனுக்கு சரியாக தண்டனை வழங்க தெரியவில்லை...... அதனால் நான் சொல்கிறேன் என தூதர் கூறுவது போல் ஒரு   நீங்கள் ஹதீஸ் ஒன்றை காட்டி  , யூதனுகளின்  தண்டனையை , முஸ்லிம்களின் சட்டம்  என வேறு ஒரு கொலை செய்யும் சட்டத்தை  கூறுகிறீர்கள்...... எப்படி ?? 

கொஞ்சம் பொதுவாக சிந்திப்போம்..... தூதர் அவர்கள் மதீனா வந்தபோது,  யூதர்கள்  நோன்பு பிடித்த காரணத்தை காட்டி,  தான்  இரண்டு நாள்  நோன்பு பிடிப்பேன் என கூறி, ஒரு சுன்னாஹ்வான விடயத்திலும்,  யூதர்களிடமிருந்து  வித்தியாசமாக முஸ்லிம்கள் இபாதத் செய்ய வேண்டும் என கூறிய தூதர் அவர்கள், ( யூதர்களுக்கு  மாறு செய்யுங்கள் என  உண்மையான ஹதீஸ் கல் பல உண்டு )  இந்த  குற்றத்தின்  தண்டனை தெளிவாக இறைவன் கூறிய பின்னும்,  அதே யூத ரப்பாய் களால் நடை முறைப்படுத்தப்பட்ட  சட்டத்தை பின்பற்றி , அதுவும் , இறைவன  கூறாத ஒரு சட்டத்தை கொண்டு  தீர்பளித்தார்கள் என எப்படி உங்களால்  முடிவு செய்ய முடிந்தது ????

இறைவன இறக்கிய , அருளிய சட்டத்தை கொண்டு தீர்பளியுங்கள்  .............. என அள்ழாஹ்  தெட்ட தெளிவாக கூறி,  விபச்சாரம் செய்த , ஆணோ ,பெண்ணோ , திரும்னமாணவனோ , திருமணமாகாதவனோ என பாகு படுத்தாது , ஒரே மாதிரி தண்டனையை , நடைமுறைப்படுத்த தூதருக்கு கட்டளை இடுவது  தெளிவாக இருந்தும்.,  இதை  விளங்காது  ஹதீஸ் என எதோ ஒன்றை  , அதுவும் ,  யூதர்களால்  நடைமுறைப்படுத்தும் ஒன்றை முற்று முழுதாக செயல்படுத்துவது , இறைவன் கூறுவது போல், நிச்சயம் அநியாயம்........இது இறைவனுக்கு செய்யும் அநியாயம் மட்டுமல்ல , அந்த குற்றத்தை செய்த வருக்கு  செய்யும் அநியாயம் கூட..

...
உதாரணத்துக்கு , ஒரு கேள்வி,  .

கற்புள்ள பெண்கள் மீது அவதூறு சொன்னால் ,( சூரா அன் நூர் , வசனம்  04 )  எண்பது கசை அடிகள் வழங்க இறைவன் கட்டளை இடுகிறான்....... இந்த அவதூறானது ஒரு பெண்ணின் வாழ்கையே  நாசமாக்கும் ஒரு கடும்  குற்றம்.....அப்படி இருந்தும், இங்கு  கசை அடி மட்டுமே வழங்கப்படுகிறது............ இதில் திருமணமான பெண்  என்றால் ஒரு தண்டனை, திருமணமாகாத பெண் எனில் வேறு ஒரு தண்டனை இந்த குற்றத்துக்கு , தூதர் அவர்கள் வளங்கவில்லேயே ..........ஏன் ??? தெளிவு படுத்த முடியுமா ?


இந்த ZINA விசயத்தில்  கசையடி என்று எந்த தண்டனையும் கூறாது   பொதுவாக , தண்டியுங்கள்......என வந்திருந்தாள் , தூதர் நடைமுரப்படுத்திய விதம்  ஒரு முன்மாதிரி என கொள்ள முடியும்......அதுவே சுன்னாஹ்வாக இருக்கும்......ஆனால் இங்கு நேர் மாற்றமாக அல்லவா  இருக்கின்றது.....

உங்களுக்கும் உங்கள் கருத்தில் இருக்கும் சகோதரர்களுக்கும் தெளிவாக சூரா புர்கான் இலிருந்து இறைவனின் எச்சரிக்கையை  காட்டி இருந்தேனே...... சிந்திக்க மாட்டீர்களா ?

அள் ழாஹ்வின் வசனங்களையே  சிந்தித்து ஆய்து செய்து , அதன் பின் இது நிச்சயம்  இறைவனிடம் இருந்து வந்தததுதான் என விளங்கி நம்பி  பின்பற்ற வேண்டும் என கூறும்போது,   ஹதீஸ் என எழுதி நமக்கு தந்தவைகளை எந்தளவு  ஆய்வு செய்ய வேண்டும் என  ஏன் உங்களால்  விளங்க முடியாதுள்ளது ?...

.உங்கள் , மற்றும் முஸ்லிம் பதில் வந்தபின்....இது பற்றிய வசனங்களை , விளக்கங்களை தொடர்ந்து விரிவாக  எழுதுகிறேன்....






...

Aero Travels Eruvadi

unread,
Nov 10, 2010, 1:49:43 PM11/10/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...............

அன்பான சகோதரர் Roshan Rosheen அவர்களுக்கு,

திருமணம் ஆகாத பெண் என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மொழிபெயர்கின்றீர்கள் என்பதை தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்

Roshan Rosheen

unread,
Nov 10, 2010, 11:56:08 PM11/10/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சஹோதரர் இப்னு ஹசன் அவர்களுக்கு,

நீங்கள் நான் எழுதினதை சரியாக வாசிக்க வில்லை நான் கேட்ட கேள்விகள் கூட கண்டுகொள்ள படவில்லை திரும்பவும் கேட்கின்றேன் 
குற்றவியல் சட்டம் மாத்திரம் அல்ல சஹோதரரே வாழ்க்கைக்கு தேவை படும் அனைத்து சட்டங்களும் அல்லாஹ்வே சொல்லவேண்டும்.சூரா மாயிதாவில் குற்றவியல் சட்டங்களைத்தான் அல்லாஹ் சொல்ல சொல்கிறானா இல்லாவிட்டால் எல்லா சட்டங்கலயுமா  ?
கடமையாகக பட்ட தொழுகை ,நோன்பு,ஹஜ்,ஜகாத் எவ்வாறு நிறை வேற்ற வேண்டும்  என்பதை அல்லாஹ் தான் சொல்லவேண்டும் ஆனால் நாங்கள் நபி சொன்ன பிரகாரமே செய்து கொண்டு இருக்கிறோம்.சட்டத்தை சொல்லும் அதிகாரம் நபிக்கும் கொடுக்கப்பட்டதால் தான் அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள் அது  குர்ஆனில் சொல்லாவிட்டாலும் சரியே.நீங்கள் சொல்லி காட்டிய வுழு சம்பந்தமாக அல்லாஹ் முகத்தை கழுவ சொல்கிறான் ஆனால் வாய் கொப்பளித்து மூக்குக்கு தன்நீர்செளுத்தி  சிந்தும் படி குர்ஆனில் இல்லை நபி செய்துள்ளார்கள் இதை அவர்கள் எவ்வாறு அறிந்து கொண்டார்கள் இதை போன்று ஏராளமாக கேட்கலாம்.
இதற்கு தெளிவான பதிலை நன்றாக சிந்தித்து எழுதவும் ஏனென்றால் இந்த கண்ணோட்டத்தில் தான் ராஜம் சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வரமுடியும்.

நீங்கள் இன்னும் சிலவிடயங்களை சொல்லியுள்ளீர்கள் அதாவது யூதர்களுக்கு ஒப்பாகுவது என்றொரு வாதத்தை முன்வைத்துள்ளீர்கள் இதுவும் இங்கு சம்பந்த படாதவையே வு இலையில் இதை பற்றி பேசுவோம் ராஜம் என்ற சட்டம் பற்றி ஒரு முடிவுக்கு வருவோ இன்ஷா அல்லாஹ்.

  //இந்த ZINA விசயத்தில்  கசையடி என்று எந்த தண்டனையும் கூறாது   பொதுவாக , தண்டியுங்கள்......என வந்திருந்தாள் , தூதர் நடைமுரப்படுத்திய விதம்  ஒரு முன்மாதிரி என கொள்ள முடியும்......அதுவே சுன்னாஹ்வாக இருக்கும்......ஆனால் இங்கு நேர் மாற்றமாக அல்லவா  இருக்கின்றது....//இப்னு ஹசன்

ராஜம் குரானுக்கு முரண் இல்லை அதுவும் அல்லாஹ்வின் சட்டமே நீங்கள் மேலுள்ள கேள்விக்கு பதில் தந்த பிறகு அதை நான் சொல்லுவேன் .

//உங்களுக்கும் உங்கள் கருத்தில் இருக்கும் சகோதரர்களுக்கும் தெளிவாக சூரா புர்கான் இலிருந்து இறைவனின் எச்சரிக்கையை  காட்டி இருந்தேனே...... சிந்திக்க மாட்டீர்களா ?//இப்னு ஹசன்

இந்த ஆயத் உங்களுக்கும் பொருந்தும் சிந்தனையில் பிழை வரலாம் உங்களுக்கும் எங்களுக்கும் அதை திருத்தி கொள்வதற்கே இந்த தளம் எதோ நாங்கள் அடி முட்டாள் போன்றும் நீங்கள் அதி புத்திசாலி போன்றும் எழுத வேண்டாம்.உங்களை போன்று திறந்த சிந்தனையிலேயே இருக்குறோம் தயவு செய்து வைத்த விடயங்களில் மாத்திரமே வாதங்களை முன்வையுங்கள்.
குரானையும் ஹதீசையும் நீங்கள் எவ்வாறு சிந்திக்கின்றீர்களோ அவ்வாறே நானும் சிந்திக்கின்றேன் இனிமேல் இவ்வாறு கேள்விகள் கேட்பதை தவிர்க்கவும்.     



Sent: Wed, November 10, 2010 6:15:26 PM

Subject: Re: குற்றவியல் தண்டனை - விபச்சாரம்.

muslim

unread,
Nov 11, 2010, 12:41:54 AM11/11/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

   وَمَنْ لَمْ يَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا أَنْ يَنْكِحَ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ فَمِنْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ مِنْ فَتَيَاتِكُمُ الْمُؤْمِنَاتِ وَاللَّهُ أَعْلَمُ بِإِيمَانِكُمْ بَعْضُكُمْ مِنْ بَعْضٍ فَانْكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَآتُوهُنَّ أُجُورَهُنَّ بِالْمَعْرُوفِ مُحْصَنَاتٍ غَيْرَ مُسَافِحَاتٍ وَلَا مُتَّخِذَاتِ أَخْدَانٍ فَإِذَا أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنَاتِ مِنَ الْعَذَابِ ذَلِكَ لِمَنْ خَشِيَ الْعَنَتَ مِنْكُمْ وَأَنْ تَصْبِرُوا خَيْرٌ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
 

4:25. உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

 

மேல்கண்ட, திருக்குர்ஆன் நான்காவது அத்தியாயத்தின் 25வது வசனத் தொடரில் இரு இடங்களில் ''முஹ்சனாத்'' என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளன! அதுபோல் திருக்குர்ஆன் 24:23, 24 ஆகிய இரு வசனங்களிலும் முஹ்சனாத் என்கிற பதம் இடம்பெறுகின்றன.

 النور 24 23 إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ لُعِنُوا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ

24:23. எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.

 النور 24 4 وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً وَلَا تَقْبَلُوا لَهُمْ شَهَادَةً أَبَدًا وَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ

24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.

மணமுடித்து கணவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள், திருமணம் முடிந்து கணவனை இழந்த விதவைப் பெண்கள். அல்லது விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், மணமுடிக்காத கன்னிப் பெண்கள். ஆகியோரையும் மொத்தமாக சுட்டும் வாசகமாக முஹ்சனாத் என்ற பதம் குர்ஆனில் பல அர்த்தங்களில் கையாளப்பட்டுள்ளன.

நபிமொழி

"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)" என்று (பதில்) கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் - புகாரி 2766, முஸ்லிம் 145, நஸயீ, அபூதாவூத்)

 حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ عَنْ أَبِي الْغَيْثِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَأَكْلُ الرِّبَا وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصِنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ

திருக்குர்ஆன் 24:23, 24 ஆகிய வசனங்களிலிருந்தும், மேல்கண்ட நபிமொழியிலிருந்தும் மணமுடித்த, முணமுடிக்காத அனைத்து ஒழுக்கமுள்ள - கற்புள்ள பெண்களின் மீது அவதூறு சுமத்தக்கூடாது என்று பொதுவாக விளங்க வேண்டும்.

மணமுடித்து கணவனுடன் வாழும் ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு சொல்லக்கூடாது என்று பொருள் கொண்டால், மணமுடிக்காத அல்லது மணமுடித்து கணவனை இழந்த ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு சுமத்தலாம் என்பதை ஒப்புக்கொண்டாகும். அதுபோல் மணமாகாத கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறக்கூடாது என்று பொருள் கொண்டால், மணமுடித்த பெண்கள் மீது அவதூறு சொல்லலாம் என்பதை ஏற்றுக்கொண்டதாகும். ஆகவே குர்ஆன், சுன்னா இரண்டிலும் முஹ்சனாத் என்ற பதம் கற்பொழுக்கமுள்ள எல்லாப் பெண்களுக்கும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது என்பதையும் விளங்கலாம்.

இப்போது 4:25வது வசனத் தொடரினைப் பார்ப்போம்: இந்த வசனத்தில் முதலில் இடம்பெறும் ''முஹ்சனாத்'' என்ற வாசகத்தை ''சுதந்திமான பெண்கள்'' என்று மொழியாக்கம் செய்து, அதே வசனத்தில் இடம்பெறும் மற்றொரு முஹ்சனாத் என்ற வாசகத்துக்கு விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் என்று மொழியாக்கம் செய்வது போல், மணமாகாத - கணவனில்லாத சுதந்திரமான பெண்கள் எனவும் மொழிபெயர்க்கலாம். முரண்பாட்டைத் தவிர்க்க இவ்வாறு அர்த்தப்படுத்துவதே சரியாகும். 4:25வது வசனத்தின் மொழிபெயர்ப்பில் தடுமாற்றமுள்ளதை  விளங்குவதற்காக குர்ஆன் 4:24 மற்றும் 5:5 ஆகிய இரு வசனங்களையும் பார்வைக்கு எடுத்துக் கொள்வோம்:

وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ كِتَابَ اللَّهِ عَلَيْكُمْ وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ أَنْ تَبْتَغُوا بِأَمْوَالِكُمْ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُمْ بِهِ مِنْ بَعْدِ الْفَرِيضَةِ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا
 

4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.

الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَهُمْ وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَلَا مُتَّخِذِي أَخْدَانٍ وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
 

5:5. இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்ட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; மேலும் எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.

4:24வது வசனத்தில் இடம்பெறும் ''முஹ்சனாது'' என்ற வாசகம் மணமுடித்த ''கணவனுள்ள பெண்கள்'' என்பதைக் குறிப்பிடுகிறது. 5:5வது வசனத்தில் இடம்பெறும் முஹ்சனாது என்ற வாசகம் மணமுடிக்காத, அல்லது மணமுடித்து கணவனை இழந்த ''கற்புடைய பெண்களை'' குறிப்படுகின்றது! மணமுடித்து கணவனுள்ள பெண்களைக் குறிப்பிடவும், முஹ்சனாத் என்ற சொல்லாளப்பட்டுள்ளது போல், மணமாகாத, மணமுடிக்கத்தக்க கணவனில்லாத கற்புடைய பெண்களையும் குறிப்பிடுவதற்கு குர்ஆனில் முஹ்சனாது என்ற சொல்லாளப்பட்டுள்ளது என்பதை மேல்கண்ட 4:24 மற்றும் 5:5 வசனங்களிலிருந்து விளங்கலாம்.

முரண்பாடற்றது!

முஹ்சனாத் என்ற வாசகம்: 4:24 வசனத்தில் மணமுடித்த - கணவனுள்ள பெண்களைக் குறிப்பிடுகின்றது.

4:25 வசனத்தின் முதல் முஹ்சனாத், மணமுடிக்கதக்க (அடிமைகளல்லாத) கன்னிப் பெண்கள், விதவை, மற்றும் விவாகரத்துப் பெற்ற சுதந்திரமான பெண்களைக் குறிப்பிடுகின்றது.

5:5 வசனத்தில் கன்னிப் பெண்கள் உள்பட விதவை மற்றும் விவாக விலக்குப் பெற்ற கற்பொழுக்கமுள்ள பெண்களைக் குறிப்பிடுன்றது.

24:23, 24 ஆகிய இரு வசனங்களும் கன்னிப் பெண்கள், விதவை, விவாக விலக்குப் பெற்ற பெண்கள் மற்றும் கணவணுள்ள பெண்கள் என கற்பொழுக்கமுள்ள எல்லாப் பெண்களையும் குறிப்பிடுகின்றது.

குர்ஆனில் இடம்பெறும் முஹ்சனாத் என்ற வாசகத்திற்கு பல அர்த்தமுள்ளதால் ஒரு வசனத்திற்கு அர்த்தப்படுத்தியதை அடுத்த வசனத்தில் பொருள் கொள்ள முடியாது!

முரண்பாடுகிறது என்பது வேறு. முரண்படுத்துவது என்பது வேறு! மரண தண்டனையில் பாதி என முரண்பாடாக விளங்குவதைவிட நூறில் பாதி ஐம்பது. என பிரிப்பதில் எவ்வித சிரமும் இருக்காது. குர்ஆன் 4:25 வசனத்தில் இடம்பெறும் இரு முஹ்சனாத்தில் இரண்டாவது முஹ்சனாத்திற்கு சுதந்தரமான பெண்கள் என்று அர்த்தப்படுத்துவதோடல்லாமல், ''மணமாகாத - கணவனில்லாத சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே திருமணமான அடிமைப் பெண்களுக்கு விதிக்கப்பெறும்'' என்று விளங்குவதே பொருத்தமாகும்.

விபச்சாரம் செய்துவிட்ட அடிமைப் பெண்களுக்கான கசையடிகள்!

"ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் அவளுக்கு. எஜமானன் கசையடி கொடுக்கட்டும்! (அவளை தண்டித்துவிட்டதால்) குற்றம் சொல்ல வேண்டாம்! பிறகு மறுபடியும் அவள் விபச்சாரம் செய்தால் அவளுக்குக் கசையடி கொடுக்கட்டும்! குற்றம் சொல்ல வேண்டாம்! மூன்றாம் முறையும் விபச்சாரம் செய்தால் அவளை (அவளுடைய எஜமானன்) முடியாலான ஒரு கயிற்றுக்காகவாவாது விற்று விடட்டும்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 2152, 2234, 6839 முஸ்லிம், 3507, 3509 திர்மீதி, அபூதாவூத், இப்னுமாஜா)

(ஒரு நாள்) அலி (ரலி) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது ''மக்களே! உங்கள் அடிமைகள் மீதும் குற்றவியல் தண்டனையை நிறைவேற்றுங்கள். அவர்கள் திருமணமானவர்களாக இருக்கட்டும், திருமணமாகாதவர்களாக இருக்கட்டும். ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமைப் பெண் ஒருவர் விபச்சாரம் செய்துவிட்டார். அவருக்குச் சாட்டையடிகள் வழங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.

ஆனால், அவருக்கு அப்போதுதான் மகப்பேறு இரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தது. அவருக்கு சாட்டையடி தண்டனையை நிறைவேற்றினால் (எங்கே) அவரை நான் கொன்று விடுவேனோ என அஞ்சினேன். (எனவே, தண்டனையை தள்ளி வைத்தேன்) இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது ''நீங்கள் செய்தது சரிதான்'' என்று அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அலி (ரலி) அவர்கள் (நூல்கள் - முஸ்லிம் 3511, திர்மிதீ, அபூதாவூத்)

''அவள் பிரசவ உதிரப் போக்கிலிருந்து தூய்மையாகி விட்டால் அவளுக்கு ஐம்பது கசையடிகள் வழங்குங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அஹ்மத் 1146 நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

எழுதியவற்றில் மாற்றுக் கருத்துகள் இருப்பின் தகுந்த ஆதாரங்களுடன் பகிர்ந்துகொள்க!

(அல்லாஹ் மிக அறிந்தவன்)


 
 
2010/11/6 Aero Travels Eruvadi <eru...@gmail.com>
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பான சகோதரர் முஸ்லீம் அவர்களுக்கு,

கீழ்கண்ட வசனத்திற்கு நீங்கள் சொல்லும் ஹதீஸ்கள் முரண்படுவது போல் தெரிகிறதே விளக்கவும்.


وَمَن لَّمْ يَسْتَطِعْ مِنكُمْ طَوْلًا أَن يَنكِحَ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ فَمِن مَّا مَلَكَتْ أَيْمَانُكُم مِّن فَتَيَاتِكُمُ الْمُؤْمِنَاتِ ۚ وَاللَّـهُ أَعْلَمُ بِإِيمَانِكُم ۚ بَعْضُكُم مِّن بَعْضٍ ۚ فَانكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَآتُوهُنَّ أُجُورَهُنَّ بِالْمَعْرُوفِ مُحْصَنَاتٍ غَيْرَ مُسَافِحَاتٍ وَلَا مُتَّخِذَاتِ أَخْدَانٍ ۚ فَإِذَا أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنَاتِ مِنَ الْعَذَابِ ۚ ذَٰلِكَ لِمَنْ خَشِيَ الْعَنَتَ مِنكُمْ ۚ وَأَن تَصْبِرُوا خَيْرٌ لَّكُمْ ۗ وَاللَّـهُ غَفُورٌ رَّحِيمٌ

உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;). அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்;. ஆகவே முஃமினான அடிமைப் பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்;. அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்;. தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்;. இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4:25

கசையடியில் பாதி கொடுக்க முடியும்.  ஒரு வருடத்திற்கு பதிலாக ஆறு மாதம் ஊர் விலக்கம் செய்யமுடியும்.  கல்லெறிந்து கொல்வதில் பாதி தண்டணை  எப்படி செயல்படுத்துவது விளக்கவும்?


இப்படிக்கு

சிராஜ் ஏர்வாடி

2010/11/3 muslim <tomu...@gmail.com>

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்'' (அல்குர்ஆன் 5:44)

''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்'' (அல்குர்ஆன் 5:45)

''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் பாவிகள்'' (அல்குர்ஆன் 5:47)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆனமீகத் தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் இரு வகையானத் தலைமைத்துவத்திலும் ஒப்பற்றத் தலைவராகத் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் தோன்றிய முஸ்லிம் ஆட்சித் தலைவர்கள் தீர்ப்புகள் தொடர்பான விஷயத்தில் மார்க்க அறிஞர்களின் உதவியை நாடியுள்ளனர் என வரலாற்றில் வாசிக்க முடிகிறது.

ஆனால், நபி (ஸல்) அவர்களைப் பொறுத்தவரை ஆன்மீகம், ஆட்சி இரு தலைமைகளுக்கும் அவர்களே பொறுப்பேற்றிருந்ததால் இரு தலைமைகளுக்குமான வழிகாட்டல் மற்றும் தீர்ப்புகள் வழங்கும் உரிமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பு தவறாகுமெனில் (நவூதுபில்லாஹ்)அவற்றைத் திருத்தும் வகையில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருந்தான்.

52:48. எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக. நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர். மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக.

அல்லாஹ்வின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளராகிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அல்லாஹ்வின் புனித சட்டங்கள் சீர்குலைக்கப்படும்போது, அல்லாஹ்வின் கட்டளையுடன்  சீர்குலைப்பவர்களைத் தண்டித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் இருந்தது.

(விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர், என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர்! அல்லாஹ் (வாக்களித்திருந்ததைப் போன்று) பெண்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான்.  மணமாகாத பெண்ணுடன் மணமாக ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு சாட்டையடிகள் வழங்கி, ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தப்பட வேண்டும். மணமான பெண்ணுடன் மணமான ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு சாட்டையடிகள் வழங்கி கல்லெறி தண்டனை வழங்கப்படவேண்டும். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 3489, திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ,)

நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படும்போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். அவர்களது முகம் (கருத்து) நிறம் மாறிவிடும். ஒரு நாள் அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப்பட அவர்கள் இந்நிலையை சந்தித்தார்கள்.

பின்னர் அவர்களை விட்டு அந்நிலை விலகியதும், (விபச்சாரத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். (விபச்சாரம் செய்த) பெண்கள் தொடர்பாக அல்லாஹ் ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமான பெண் மணமான ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால். (அதற்குத் தனிச் சட்டமாகும்) மணமாகாத பெண் மணமாகாத ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால் (அதற்குத் தனிச் சட்டமாகும்) மணமானவர்களுக்கு நூறு சாட்டையடிகளும் கல்லெறி தண்டனையும் வழங்கப்படவேண்டும். மணமாகாதவர்களுக்கு நூறு சாட்டையடிகள் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும் தண்டனையாக வழங்கப்படவேண்டும். என்று கூறினார்கள். அறிவிப்பவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) (நூல் - முஸ்லிம் 3490)

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை! நான் அல்லாஹ்வின் தூதராவேன் என உறுமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய (மரண தண்டனையளிக்க) அனுமதி இல்லை. அவை: 1. திருமணமானவன் விபச்சாரம் செய்வது. 2. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாகக் கொலை செய்வது. 3. ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பை விட்ட (தேச துரோகமும் மார்க்க விரோதமும் செய்த)வன். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) (நூல்கள் - புகாரி 6878, முஸ்லிம் 3463. 3464, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ)

2:89. அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்தபோது, அதை நிராகரிக்கின்றார்கள் இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!

முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தும் வேதம் என அல்லாஹ் திருக்குர்ஆனைக் குறிப்பிடுகிறான். இது குறித்து மேலும் சில வசனங்களை குர்ஆனில் காணலாம்.

''உயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண்'' எனப் பழிவாங்கும் சட்டம் (5:45) முந்தைய தவ்ராத் வேதத்தில் இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அவற்றையே இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் குற்றவியல் தண்டனையின் தீர்ப்பாக வழங்கினார்கள். அதுபோல் விபச்சாரக் குற்றத்திற்கான கல்லெறி தண்டனையும் தவ்ராத்தில் இருந்தன. வேதக்காரர்களால் அவை மறைக்கப்பட்டிருந்தன:

(விபச்சாரக் குற்றத்திற்காக யூதர்களால்) முகத்தில் கரி பூசப்பட்டு, சட்டையடி தண்டனை நிறைவேற்றப்பட்ட யூதனொருவர் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து, ''விபச்சாரக் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள் ''ஆம்'' என்று (பொய்) சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் யூத அறிஞர்களில் ஒருவரை அழைத்து ''மூஸா (அலை) அவர்களுக்குத் தவ்ராத்தை அருளிய அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன். விபச்சாரம் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் ''இல்லை, நீங்கள் இவ்வாறு (அல்லாஹ்வை முன்வைத்துக்) கேட்டிராவிட்டால் நான் உங்களிடம் (உண்மையைச்) சொல்லமாட்டேன். அவனுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்படும் என்றே நாங்கள் அதில் காண்கிறோம். எனினும் எங்கள் மேன்மக்களிடையே விபச்சாரம் அதிகமாகிவிட்டது. (விபச்சாரம் செய்துவிட்ட மேன்மக்களில் ஒருவரை) நாங்கள் பிடித்துவிட்டால் அந்தத் தண்டனையை விட்டுவிடுவோம். (அதேக் குற்றத்திற்காக) சாமானிய மக்களைப் பிடித்தால் அவர்கள் மீது தண்டனையை நாங்கள் நிலைநாட்டுவோம். ஆகவே, நாங்கள் (கலந்து பேசி) உயர்ந்தவர், தாழ்ந்தவர் அனைவருக்கும் பொதுவான ஒரு தண்டனையை நிறைவேற்றும் என முடிவு செய்தோம். அதனடிப்படையில் கல்லெறி தண்டனைக்குப் பகரமாக முகத்தில் கரி பூசி, கசையடி வழங்கும் தண்டனையை நிறைவேற்றலானோம்'' என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''இறைவா! இவர்கள் உனது சட்டமொன்றைச் சாகடித்து விட்டிருந்த நிலையில் அதை (மீண்டும் நடைமுறைப்படுத்தி) உயிர்ப்பித்த முதல் ஆள் நானாவேன்'' என்று கூறிவிட்டு சாகும்வரை கல்லால் அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்.

அவ்வாறே அந்த யூதர் சாகும்வரை கல்லால் அடிக்கப்பட்டார். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ''தூதரே! (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்... என்று தொடங்கும் வசனத்தை ''அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பெற்றால் அதை எடுத்துக்கொள்ளுங்கள். என்று கூறுகின்றனர். (5:41) என்பதுவரை அல்லாஹ் அருளினான். அதாவது முஹம்மதிடம் செல்லுங்கள். (விபச்சாரம் புரிந்தவனுக்கு) முகத்தில் கரி பூசி, கசையடி தண்டனை நிறைவேற்றுமாறு அவர் உத்தரவிட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். சாகும்வரை கல்லால் அடிக்கும்படி அவர் உத்தரவிட்டால் அதைத் தவிர்த்துவிடுங்கள். என்று யூதர்கள் கூறினர்.

மேலும், அல்குர்ஆன் 5:44, 45, 47 ஆகிய வசனங்களையும் அல்லாஹ் அருளினான்.

இந்த (5:47வது) வசனம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். (முந்தைய இரு வசனங்களும் யூதர்கள் தொடர்பாக அருளப்பெற்றவை)

அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 3505, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்)

இதே அறிவிப்பு சற்று மாற்றங்களுடன் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வழியாக புகாரி நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பார்க்க: புகாரி 3635, 4556, 6819, 6841, 7543, முஸ்லிம் 3503, 3504)

விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை குறித்து இஸ்லாம் மார்க்கத்தின் ஆரம்ப நிலைப்பாடு அல்குர்ஆன் 4:15 வது வசனமாக இருந்தது.

4:15. உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள். அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.

பின்னர், 24:2வது வசனத்தை அல்லாஹ் அருளச் செய்து விபச்சாரம் செய்துவிட்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் நூறு கசையடிகள் வழங்கும்படி வழிகாட்டினான்.

24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

விபச்சாரம் செய்துவிட்ட மணமாகாத ஆண், பெண் இருவருக்கும் நூறு கசையடி வழங்குதல் நீடித்து, விபச்சாரம் செய்துவிட்ட மணமான ஆண், பெண் இருவருக்கும் கல்லெறி தண்டனை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பாக நீடிக்கிறது!

''அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்'' என்ற திருக்குர்ஆன் வழிகாட்டலில். விபச்சாரம் செய்துவிட்ட மணமாகாத, மணமான ஆண், பெண் இருவருக்கும் வழங்கும் கசையடியும், கல்லெறியும் தண்டனைகளின் தீர்ப்புகளை நம்பிக்கை கொண்ட - முஸ்லிம் ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நிறைவேற்றினர் - நிறைவேற்றுகின்றனர்.

இது குறித்து இங்கு பேசுவது பொருத்தமில்லை என்றாலும், மானக்கேடான செயல்களை அனுமதிப்பதால் அதுவே ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் என சமூகக் கட்டுகோப்பிற்கு உறுதுணையாக இருக்கும் மாண்புகளைத் தகர்த்து,  சீரழிவிற்கு வித்திட்டு சமுதாயத்தைப் சின்ன பின்னமாக்கி விடுகிறது. 

விபச்சாரத்தை மானக் கேடான செயலென இஸ்லாம் (4:15. 17:32.) அறிவிப்பதோடு, விபச்சாரக் குற்றத்திற்கானத் தகுந்த தண்டனையையும் வழங்கியுள்ளது.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)   

 



2010/10/30 <ibnuh...@mail.com>

 BROTHER........MUSLIM...and NIZARUDEEN...,               assalaamu alaikkum  warahmathullah..................,
 
இந்த  ஹதீஸ் இல் ஒருவர் விபச்சாரம்  செய்தால் கொலை செய்யப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது......  குற்றவியல் சட்டங்கள்  இறைவனின்  தனி  பாட்ட அதிகாரங்களில் உடையது.... அது அவன் மட்டுமே  சொல்ல வேண்டும்..........எனவே , நீங்கள் ,

  விபச்சாரம் செய்பவரை , ஆணோ , பெண்ணோ ,  மரண தண்டனை கொடுத்து  கொலை செய்ய வேண்டும்  என்ற நேரடி கட்டளையை   குர் ஆன்  இலிருந்து தாருங்கள்......
..
 
 


--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
--
Thanks & best regards
 
AeroTravels
160/101, North Main Road ,
Eruvadi - 627103
Tel No.04637 241200 / 329777
Fax No.04637 242222

Roshan Rosheen

unread,
Nov 11, 2010, 12:49:36 AM11/11/10
to fro...@googlegroups.com
 வாலைக்கும் சலாம்,
 சகோ..சிராஜ்....இந்த வசனத்தில் உள்ள , முஹ்சனாத்தி  எனும் சொல் , சுதந்திரமான  கற்புள்ள  பெண்  என பொருள்படும்..........விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண் என்பது தவறு....இப்னு ஹசன் .

இது அவரின் விளக்கம் :
                  இங்கு குறிப்பிடப்படும் வசனத்தில்    பொதுவாக  சுதந்திர கற்புள்ள பெண்களை  குறிப்பிட்டு இறைவன் கூறுகிறான் ..... திருமனமானவரோ , திருமனமாகாதவரோ  விபச்சாரம் செய்தால்,  நூறு  கசையடி வழங்க வேண்டும் ....  இங்கு பொதுவாக இரு வகயானவருக்கும்  உரிய  தண்டனையை இறைவன் கூறுகிறான்..இறைவன் பிரித்து கூறாது ஒரே வகை தண்டனையை கூறுகிறான்..

அதாவது உங்கள் வாதப்படி குரானில் அல்லாஹ் விவாகம் செய்யப்பட்ட விவாகம் செய்ய படாத என்று தண்டனை பிரித்து சொல்லவில்லை.இப்னு ஹசன் சொல்வதுபோல் பொதுவாக மொழியாக்கம் செய்யுங்கள் அதுவே உங்கள் கருத்துக்கு நியாயமாகும் விவாகம் செய்யப்பட்டது என்பது பிழை.நாங்கள் திருமணம் செய்யபடாத பெண் என்பதற்கு ஹதீஸில் இருந்து சஹோதரர் முஸ்லிம் அவர்கள் முன்வைத்து விட்டார்கள்.அவைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தக்க காரணத்தை முன்வைக்கவும் அந்த ஹதீஸ்களை மருப்பெர்கலானால் நபியவர்கள் சொன்ன குரானில் இல்லாத ஏராளமான சட்டங்களை மறுக்கவேண்டி வரும் உதாரணமாக நான் முன்கேட்டது தொழுகை சட்டம் ஹஜ் சட்டம் நோன்பு சட்டம் ஜகாத் சட்டம் வுழு உடைய சட்டம் கடமை குளிப்புடியி சட்டம் ...........இன்னும் ஏராளம் இவ்வாறு போனால் இறுதியில் ஹதீஸ் முழுமையுமே மறுக்கவேண்டி வரும்                      


From: Aero Travels Eruvadi <eru...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Thu, November 11, 2010 12:19:43 AM

Aero Travels Eruvadi

unread,
Nov 12, 2010, 10:39:03 AM11/12/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  
Roshan Rosheen அவர்களுக்கு,

//ஹதீஸ்களை மறுப்பீர்களானால் நபியவர்கள் சொன்ன குரானில் இல்லாத ஏராளமான சட்டங்களை மறுக்கவேண்டி வரும் உதாரணமாக நான் முன்கேட்டது தொழுகை சட்டம் ஹஜ் சட்டம் நோன்பு சட்டம் ஜகாத் சட்டம் வுழு உடைய சட்டம் கடமை குளிப்புடியி சட்டம் ...........இன்னும் ஏராளம் இவ்வாறு போனால் இறுதியில் ஹதீஸ் முழுமையுமே மறுக்கவேண்டி வரும்// Roshan Rosheen                  


அல்லாஹ்  இறக்கியதை கொண்டு மட்டும் தீர்ப்பளிக்க (Judgement)  கூறுகின்றான் என்பதை திருக்குஆனில் நாம் பல இடங்களில் காண முடிகின்றது.  அந்த அடிப்படையில்  இறக்கப்பட்டது எது?   குர்ஆனா?  நபிமொழியா? என்பதை நாம் முடிவு செய்தால் தான் அதற்கு தீர்வு சொல்ல முடியும்.

நீங்கள் இறக்கப்பட்டது என்பது எது என கூறுகிறீர்கள்? தெளிவுபடுத்தவும்.

إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى مِنْ بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُولَئِكَ يَلْعَنُهُمُ اللَّهُ وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونَ

நாம் இறக்கிய வைத்த தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.  2:159


كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ وَأَنْزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ وَمَا اخْتَلَفَ فِيهِ إِلَّا الَّذِينَ أُوتُوهُ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ بَغْيًا بَيْنَهُمْ فَهَدَى اللَّهُ الَّذِينَ آمَنُوا لِمَا اخْتَلَفُوا فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِهِ وَاللَّهُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் நன்மாராயங் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்கு தீர்ப்பளிக்க, அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.2:213

குறிப்பு:  நபிமார்களை எதற்கு அல்லாஹ் அனுப்பி வைத்தான் என்பதை தெளிவுபடுத்திவிட்டு,  கருத்துவேறுபாடுகளை களையவும், தீர்த்துவைக்கவும்  அவர்களுடன்  பொய்யே கலக்காத, இட்டுக்கட்டப்படாத, உண்மையுடைய வேதத்தை இறக்கி வைத்தாகவும் கூறுவதை சற்று சிந்திக்கவும். எனவே  கருத்து வேறுபாடு உள்ள  சட்டங்களில் குர்ஆனுடைய வசனங்களே இறுதி தீர்வு என்பதை நாம் மனதில் பதிய வைத்து ஆய்வு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.


إِنَّا أَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا أَرَاكَ اللَّهُ وَلَا تَكُنْ لِلْخَائِنِينَ خَصِيمًا
அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்;. எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர். 4:105

குறிப்பு:  அல்லாஹ் அறிவித்ததை கொண்டு தீர்ப்பு வழங்குவதற்காக என குறிப்பிடுவதோடு, அதற்காகவும் இவ்வேதத்தை இறக்கியதாக கூறுகின்றான்.    

எனவே தீர்ப்பு வழங்குவது என்பது எப்பிரச்சினையில் என்பதை நாம் கவனத்தில்  கொள்ள வேண்டும்.  ஒன்றாக இருக்கும் சமுதாயத்தில் நபிமார்கள் நன்மையை ஏவி, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் போது பிளவுகளும் சர்சைகளும் ஏற்பட்டது என்பதை நான் மேலே குறிப்பிட்டுள்ள 2:213 வசனம் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.   உலகியல் வாழ்க்கையில் ஏற்படும் சர்ச்சைகளும் பிளவுகளும் பல்வேறு கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் போது அதில் தீர்ப்பு வழங்குவதற்காகவும், இவ்வேதம் இறக்கப்பட்டுள்ளது. 

(CRIMINAL) குற்றவியல் சட்டங்கள் அல்லாத மற்ற விஷயங்களான தொழுகை, நோன்பு மற்றும் நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடுகளோ, சர்சைகளோ ஏற்பட்டால் அதை மறுமைவரை பொறுத்திருந்து,  அல்லாஹ்விடம்  தீர்ப்பை எதிர்பார்ப்பதால் உலகியல் வாழ்க்கையில் எந்த குழப்பமும் ஏற்பட்டு விடாது.  

அதே நேரத்தில் குற்றவியல் சட்டங்களில் இவ்வுலகில் மனிதர்களுக்கிடையில் தீர்ப்பளித்தே ஆக வேண்டிய நிர்பந்தம்  ஆட்சியாளர்களுக்கும்,  பொறுப்பாளர்களுக்கும் உள்ளது.  இதை மறுமைவரை கொண்டு சென்று தீர்ப்பை எதிர்பார்த்திருக்க முடியாது.   இவ்வுலகிலேயே தீர்பளிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு  தீர்வாகவும் இந்த வேதமான குர்ஆன் இறக்கபட்டது எனபதை மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.


وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ وَكَانَ الْإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا

இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான். 18:54

எனவே மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில் நாம் பிரச்சினைகளை அணுகலாம் என்பது என்னுடைய ஆய்வாக உள்ளது.  தாங்களின் எதிர்கருத்துகளை பதிவு செய்தால் மேலும் விபரம் இருந்தால் தருகிறேன் இன்ஷாஅல்லாஹ்.

இன்ஷாஅல்லாஹ்  கூடியவிரைவில் 
முஹ்சனாத்தி என்னும் சொல்லை எப்படி மொழிபெயர்க்க வேண்டும் என்பதற்கான என்னுடைய ஆய்வை தருவேன். 

இப்படிக்கு

சிராஜ் ஏர்வாடி

2010/11/11 Roshan Rosheen <roshan...@yahoo.com>

Roshan Rosheen

unread,
Nov 13, 2010, 4:05:21 AM11/13/10
to fro...@googlegroups.com
வஅழைக்கும் சலாம் சிராஜ் ஏர்வாடி அவர்களுக்கு,
 
அல்லாஹ்  இறக்கியதை கொண்டு மட்டும் தீர்ப்பளிக்க (Judgement)  கூறுகின்றான் என்பதை திருக்குஆனில் நாம் பல இடங்களில் காண முடிகின்றது.  அந்த அடிப்படையில்  இறக்கப்பட்டது எது?   குர்ஆனா?  நபிமொழியா? என்பதை நாம் முடிவு செய்தால் தான் அதற்கு தீர்வு சொல்ல முடியும்.

நீங்கள் இறக்கப்பட்டது என்பது எது என கூறுகிறீர்கள்? தெளிவுபடுத்தவும்.

 
  
وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ وَمَا أَنزَلَ عَلَيْكُم مِّنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ يَعِظُكُم بِهِ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
 அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்துப் பாருங்கள். இவற்றைக் கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான்; அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.2 :231 

  
   وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكَ وَرَحْمَتُهُ لَهَمَّت طَّائِفَةٌ مِّنْهُمْ أَن يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ إِلَّا أَنفُسَهُمْ  ۖ وَمَا يَضُرُّونَكَ مِن شَيْءٍ ۚ وَأَنزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُن تَعْلَمُ ۚ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا

(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது; இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது; மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.4 :113  
  
   
3:164   لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ.
'' நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.3 :164 

3:48   وَيُعَلِّمُهُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنجِيلَ
இன்னும் அவருக்கு(ஈசாவுக்கு) அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.3 :48

இங்கு முதல் இரண்டு வசனத்திலும் கிதாபோடு ,ஹிக்மா இறக்கப்பட்டுள்ளது கிதாப் என்றால் குரான் எங்களிடம் உள்ளது இறக்கப்பட்ட ஹிக்ம என்னது விளக்குங்கள்?

மற்ற இரண்டு வசனத்திளையும் கிதாபையும் ஹிக்மத்தையும் கற்றுகொடுக்கபட்டுள்ளது.கற்றுக்கொடுக்கப்பட்ட ஹிக்மா  என்னது விளக்கவும்?

 وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ  ۖ فَيُضِلُّ اللَّهُ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۚ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.14 :4  

     الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِندَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنجِيلِ يَأْمُرُهُم بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ ۚ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ  ۙ أُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.7 :157 

முதல் வசனத்தில் நபி விளக்கம் இல்லாமல் குரான் விளங்க முடியாது தொழுகை,நோன்பு,ஹஜ்,ஜகாத் நபி விளக்கம் இல்லாமல் பின்பற்றமுடியாது .இரண்டாம் வசனத்தில் நபியை பின்பற்றும் படி சொல்லிவிட்டு அவர் ஹலால்  ஹராம் ஆக்கும் அதிகாரத்தையும் அல்லாஹ் கொடுத்துள்ளத்தையும் அதை பின்பற்றி (ஹதீஸ்)குரானையும் பின்பற்றினாலே வெற்றி கிடைக்கும் என்று அல்லாஹ் முடித்துள்ளான்.
அதோடு அல்லாஹ்   இன்னொரு விடயமும் சொல்கிறான் உண்மை பொய் கலப்படம் செய்யப்பட்ட இன்ஜீலிலும் தவ்ராத்திலும் இவரை பற்றி எழுத பட்டுள்ளது என்று சொல்கிறான்.அதேபோல் 5 :47 இல்

"இன்ஜீலை உடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததை கொண்டு யார் தீர்பளிக்க வில்லையோ அவர்கள் தான் பாவிகள் ஆவார்கள்"
இந்த வசனம் இறங்கும் பொழுது நிச்சயமாகஇன்ஜீலும் தவறாது  உண்மையும் பொய்யும் கலந்து கலப்படமாகவே இருந்தது அப்படி இருந்தும் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை   கொண்டு தீர்பளிக்கசொல்கிறான்.தவ்ராத் இன்ஜீல் உடைய நிலையை  நபியவர்களின் ஹதீஸ் எந்த வகையில் குறையுடையது சஹோதரரே?
தவறாது இஜீளும் எப்படி கலப்படம் இருந்தாலும் அல்லாஹுடைய தீர்ப்பை முயற்சி செய்து எடுக்க சொல்கிறானோ அதேபோல் ஹதீஸ்களில் கலப்படம் இருந்தாலும் முயத்சி செய்து குரானுக்கு முரனானவைகளை விட்டு நம்பகத்தன்மையை உறுதிசெய்து அதை எடுத்து நடப்பதில் என்னதவறு இருக்கின்றது.இதை உணர்த்தக்கூடிய வசனம்.

     
நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் (பிறரை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தும், நேர்வழி தங்களுக்குத் தெளிவான பிறகு (நம்) தூதரை எதிர்த்து முரண்பட்டுக் கொண்டும் இருக்கின்றனரோ - அவர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித இடர்பாடும் செய்துவிட முடியாது; அன்றியும் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனற்றவையாக ஆக்கியும் விடுவான்.
 ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.47 :32 ,33  

// 
நபிமார்களை எதற்கு அல்லாஹ் அனுப்பி வைத்தான் என்பதை தெளிவுபடுத்திவிட்டு,  கருத்துவேறுபாடுகளை களையவும், தீர்த்துவைக்கவும்  அவர்களுடன்  பொய்யே கலக்காத, இட்டுக்கட்டப்படாத, உண்மையுடைய வேதத்தை இறக்கி வைத்தாகவும் கூறுவதை சற்று சிந்திக்கவும். எனவே  கருத்து வேறுபாடு உள்ள  சட்டங்களில் குர்ஆனுடைய வசனங்களே இறுதி தீர்வு என்பதை நாம் மனதில் பதிய வைத்து ஆய்வு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.//சிராஜ் ஏர்வாடி 

குரான் பொய்
 
கலபடம் இல்லாத வேதமாக இருந்தாலும் பல வசனங்களிலும் இந்த சமுதாயத்தில் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.இந்த கருத்து வேறுபாடுகளை தீர்க்க நபியின் பங்களிப்பும் விளக்கமும் தேவை என்பதை  முன்பு சொன்ன வசனங்களில் இருந்து விளங்கலாம்.

அடுத்தது தீர்ப்பு பற்றி சொல்லியுள்ளீர்கள் //  
(CRIMINAL) குற்றவியல் சட்டங்கள் அல்லாத மற்ற விஷயங்களான தொழுகை, நோன்பு மற்றும் நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடுகளோ, சர்சைகளோ ஏற்பட்டால் அதை மறுமைவரை பொறுத்திருந்து,  அல்லாஹ்விடம்  தீர்ப்பை எதிர்பார்ப்பதால் உலகியல் வாழ்க்கையில் எந்த குழப்பமும் ஏற்பட்டு விடாது. சிராஜ் ஏர்வாடி 

நான் தொழுகை நோன்பு சம்பந்தமாக சொன்னது குரானில் எவ்வாறு செய்யவேண்டும் என்ற சட்டம் இல்லை என்பதுதான் இந்த பிரச்சினையை மறுமை வரை எதிர்பார்த்திருக்கும் படி சொல்கிறீர்களா?அப்பொழுது குரானை பின்பற்றியதாக ஆகுமா?மறுமையில் அல்லாஹ் தண்டிக்க மாட்டானா.

சஹோதரரே எனக்கு தெரிந்த கருத்துகளை பதிந்துள்ளேன் உங்களுடைய மறுவிளக்கத்தை எதிர்பார்கிறேன்.    
      
 

   


From: Aero Travels Eruvadi <eru...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Fri, November 12, 2010 9:09:03 PM
Reply all
Reply to author
Forward
0 new messages