நபி(ஸல்) அவர்களின் திருமணம் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களுடன்

734 views
Skip to first unread message

syed abu thahir

unread,
Jun 22, 2010, 11:26:52 AM6/22/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்

மன்னிக்கவும். இதை பார்க்கவும். 
--
syed
1.doc

நமக்குள் இஸ்லாம்

unread,
Jun 22, 2010, 9:28:35 PM6/22/10
to fro...@googlegroups.com
ஸலாம்.
 
செய்யத் அபு தாஹிர் கவனத்திற்கு,  தயவு செய்து ஒரே தலைப்பில் ஒரே பதிவாக இதைப்பதித்திருக்கலாம்.  ஒரு கட்டுரைக்கு இரண்டு பதிவுகளைக் கொண்டு வந்துள்ளீர்கள்.   மட்டுமின்றி யுனிகோட் பதிவுகளே குழுமத்திற்கு வரவேண்டும் என்று நாம் சொல்லி வருகிறோம்.   உங்களின் இந்த பதிவு ஃபாண்ட் இல்லாததால் படிக்க முடியவில்லை.  யுனிகோடில் டைப் செய்து மீண்டும் இதே தலைப்பில் பதிக்கவும்


--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  
http://quran-audiomp3.blogspot.com/?

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe  

muslim

unread,
Jun 23, 2010, 12:58:09 AM6/23/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

குழும உறுப்பினர் இயன்றவரை பிற உறுப்பினர்கள் படிக்கும் எழுத்துருவில் கருத்துகளைப் பதிவுசெய்யுங்கள். இணைப்பிலுள்ள கருத்துகள், அவை எந்த எழுத்துருவில் இருந்தாலும் அவற்றை யுனிகோடு எழுத்துரு மாற்றியை உபயோகித்து மாற்றம் செய்து நேரடியாக குழுமத்தில் பதிவு செய்யலாம். சிரமம் பாராமல் சற்று முயலவும்.

எழுத்துரு மாற்றியின் சுட்டி: பொங்கு தமிழ்

சகோதரர் syed abu thahir அவர்களின் இணைப்பிலுள்ள பதிவு படிக்க வசதியாக:

**************************

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிரஹீம்
 

பாகம் 1
 


அஸ்ஸலாமு அலைக்கும்

நபி ஸல்லால்லஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணம் ஆயீஷா (ரலி) அவர்களுடன்

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. அவனிடமே மன்னிப்பு தேடுகிறேன். அவனிடமே நேர்வழி வேண்டுகிறேன். எனது உள்ளத்தின் தீமையை விட்டும் எனது செயல்களின் தீமையை விட்டும் அவனிடமே பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகிறோனோ அவரை வழி கெடுக்க எவராலும் முடியாது.எவரை வழிகேட்டில் விட்டு விட்டனோ அவரை நேர்வழி படுத்த எவராலும் முடியாது.அல்லாஹ் ஒருவனை தவிர வேரு இறைவன் இல்லை என்றும் முஹம்மது அவனுடைய திருதூதராகவும் அவனுடைய அடியாரகவும் இருக்கிறார்கள் என்றும் சான்று பகர்கிறேன். ஸலவாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மீது உ¡¢த்தானதாகுக.

கிறிஸ்தவ மிஸனரி அமைப்புகளும், மேலை நாட்டு எழுத்தாளர்களும் இயன்றபோதெல்லாம் இஸ்லாத்தை பற்றியும் இறைத்தூதர் பற்றியும் அவதூறு பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்களின் குற்றச்சாட்டு நபி(ஸல்) அவர்கள் சிறுமியை மணந்தார்கள் என்பதே. அவர்களின் கூற்றுப்படி நபி(ஸல்) அவர்கள் ஒரு பெடொ•பிலியா என்பதே. பெடொ•பிலியா(pedophilia) என்பது ஒரு நோய். மேலும் அவர்கள் சிறுவர் துஷ்பிரயோகத்தில்(child abuse) ஈடுபட்டார்கள் ‎‎‎‎என்று மற்றொரு குற்றச்சாட்டு. முதலில் அது குறித்து பார்ப்போம்.

அது ஒரு மனது மற்றும் பாலியல் ரீதீயிலான நோய். அதில் வயதுக்கு வந்த ஒருவரின் பாலியல் உணர்வுகள் தூண்டப்படுவது மற்றும் திருப்தி அடைவதும் வயதுக்கு வராத சிறு பிள்ளைகள் உடன் முறைகேடாக நடப்பதன் மூலமாகவே ஏற்படுகிறது. இத்தகைய வியாதி உள்ள ஒருவர் இயற்கையாக உள்ள வயது வந்தவர்களுடன் உறவு கொள்ள இயலாது. மேலும் தாழ்வு மனபான்மை உடையவராக இருப்பார்.--என்சைக்ளோபிடியா ப்¡ட்டானிக்கா 1998.

பெடொ•பிலியா--இயற்கைக்கு மாற்றமான பாலியல் உணர்வு - அதில் சிறுவர்களே குறிவைக்கப்படுவர்.-மொ¢யம் வெப்ஸ்டெர் கொல்லெகியட் அகராதி.

பெடொ•பிலியா வியாதி உள்ள ஒருவன் அறிகுறிகள்--அமெரிக்கன் மன நல மருத்துவர் கழகம் -- கூறப்பட்டுள்ளதாவது

1. 6 மாதங்களுக்கும் அதிகமாக - தொடர்ச்சியாக மிக அதிகமான பாலியல் உனர்வுகள் சிறுவர்களை நோக்கி அமைவதும்இ அதிகா¢ப்பதும்இ பாலியல் சம்பந்தமான செய்கைகள் சிறுவர்களுடன் மேற்கொள்வதும்

2. இத்தகைய விசயங்களை மேற்கொள்ளும் நபர் மன உளைச்சளுக்கு ஆளாவதும்

3. அந்த நபர் குறைந்தது 16 வயதிற்கு மிகைத்தவராகவும் அல்லது எந்த சிறுவர்களுடன் ஈடுபடுகிராரோ அவர்களைவிட 5 வயது மிகைத்தவராகவும் இருப்பது.

DSM-111_ற் மன வியாதிகள் மற்றும் அதன் அறிகுறிகள்-கையேடு-பதிப்பு 3- திருத்தப்பட்டது-காப்பிரைட் -அமெரிக்கன் மன நல மருத்துவர் கழகம் ---கூறப்பட்டுள்ளதாவது

இத்தகைய வியாதி உடையவர்கள் -அதிகம் பேர் கீழ் கண்ட நடவடிக்கை உடையவராகவும் இருக்கிறார்கள்.
Exhobitionism - ஒரு வகையான மனது மற்றும் பாலியல் சம்ப்ந்தப்பட்ட நோய்.- பொது இடங்களில் தன்னுடைய மறை உருப்பை வேண்டுமென்றே அடுத்தவர் முன் வெளிப்படுத்துவது.

Voyeurism அ-அடுத்தவர்களின் தாம்பத்ய உறவை மறைந்திருந்து பார்ப்பது மற்றும் அடுத்தவர்களின் நிர்வாணத்தை மறைந்திருந்து ரசிப்பதன் மூலமாக பாலியல் உணர்சிகள் திருப்தி அடைவது.

Rape - வன்புணர்வு அல்லது கற்பழிப்பு

மேற்கூறப்பட்டவற்றில் ஏதாவது நமது நபி(ஸல்) அவர்களுக்கு பொருந்திப்போகிறதா? அல்லாஹ் நம் அனைவரையும் இவ்வாறு எண்ணுவதிலிருந்து காப்பானக. ஆமீன்.

மேற்கூறப்பட்ட வியாதி உடையவர்களின் அறிகுறிகளை மனதில் கொண்டு நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் அவர்களின் திருமணங்களையும் பார்போம்.

அன்னையரின் பெயர் அவர்களின் வயது திருமணத்தின்போது குறிப்பு

கதீஜா பிந்த் கவிலத் 40 முன்பே இருமுறை விதவையானவர்கள்

சௌதா பிந்த் ஸமா 50 ஏற்கனவே விதவையானவர்கள்

ஆயிஷா பிந்த் அபு பக்ர் 9ழூ 9 வயதாகும் போது நபி(ஸல்) அவர்களுடன் வசிக்கதொடங்கினார்கள்

ஹஃப்ஸா பிந்த் உமர் பின் அல்கத்தாப் 22 விதவை

ஸைனப் பிந்த் குஸைமா 30

உம்ம் அல் சல்மா பிந்த் அபு உமையா 26 விதவை

ஸைனப் பிந்த் ஜஹ்ஷ் 38 விதவை

ஜுவைரியா பிந்த் ஹாரித் 20 விதவை

உம்ம் அல் ஹபிபா பிந்த் அபு சுஃபியான் 36 விதவை

மரியா கிப்தியா பிந்த் ஷாமுன் 17 கன்னிஇ எகிப்து

சஃபியா பிந்த் ஹைஇ பிந்த் அக்தப் 17 விதவை

ரைஹானா பிந்த் உம்ரு பின் ஹனஃபா தகவல் இல்லை மைமூனா பிந்த் ஹாரித் 36 விதவை

தகவல்: இஸ்லாத்தின் தூதர்-முன் மாதிரி கணவர். எழுதியவர் சையத் அபு ஜாஃபர் ஸைன்இ காஸி பப்ளிகேசன்சஸ்இ லாகூர்இ முதல் பதிப்பு பக்கம் 10-12

மேற்கண்ட பலகையின் படி
நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் 17 வயது மற்றும் அதற்கு மேற்ப்பட்டவர்கள் 91%
அவர்களின்(ஸல்) துணைவியரில் விதவைகள்  75%

நபி(ஸல்) அவர்களின் மற்ற திருமணங்களை நோக்கும் போது அவர்களின் திருமணம் ஆயீஷா(ரலி) அவர்ளுடன் மாத்திரமே விதிவிலக்கு. மேலும் ஒரு பெடொ•பிலியா நோய் உள்ள ஒருவா¢ன் பாலியல் உணர்ச்சி திருப்தி அடைவது சிறுவர்களுடன் முறைகேடாக நடப்பதன் மூலமாகவே முடியும். இது நபி(ஸல்) அவர்களின் மற்ற திருமணங்களை பார்க்கும்போது முற்றிலும் வேறுபடுகிறது. அவர்களின் திருமணம் 91சதவீதம் 17 வயது மற்றும் அதற்கு மேற்ப்பட்ட வயது உள்ளவர்களோடு நடந்துள்ளது.

ஒரு நடுநிலையான ஆய்வுடன் அவர்களின் வாழ்க்கை மற்றும் திருமணங்களை நோக்கினால் அவர்களின் வாழ்க்கை ஒரு பெடொ•பிலியா நோய் உள்ள நபரை போன்றதல்ல என்பதை தெளிவாக உணர முடியும்.
மேலும் மேற்கூறப்பட்ட பெடொ•பிலியா வியாதி உள்ள ஒருவன் அறிகுறிகளை வைத்து நோக்கும் போது பெரும்பான்மையான பெடொ•பிலியாக்கள் எ•ஸிபிஸனிஸம்(நஒhiடிவைழைnளைஅ)இவாயு¡ஸம்(எழலநரசளைஅ) மற்றும் வன்புணர்வு(சயிந) அல்லது கற்பழிப்பு ஆகிய குற்றங்களை செய்கிறவர்களாக இருக்கின்றனர்.

அரபியாவின் இந்த பெரும் தூதா¢ன்(ஸல்) வாழ்க்கை மற்றும் குண நலன் களை படிக்கும் யாரும் அவர்கள்(ஸல்) எவ்வாறு கற்பித்தார்கள். எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறியும் போது இறைவனின் பெரும் தூதர்களில் ஒருவராகிய அவர்களை குறித்து மரியாதையே மேலோங்குவதை உணராலாம். நான் கூறும் பல விசயங்கள் பலருக்கு பரிச்சயமாக இருந்த போதிலும் நான் அவர்களின் வாழ்க்கையை எப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் படிக்கும்போது என்னில் ஒரு புதுவித மதிப்பும் மரியாதையும் அந்த வலிமையான அரபியாவின் ஆசிரியரை குறித்து மேலோங்குவதை உணர்கிறேன். அன்னீ பெசண்ட் முஹம்மது(ஸல்)வின் போதனைகளும் வாழ்க்கையும் மதராஸ் 1932 பக்கம் 4.

டீ. சிலர் கூறுவதாவது கன்னியமிக்க நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயீஷா(ரலி) அவர்களை சிறு வயதில் மண முடித்ததன் மூலம் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார்கள் என்பதே.

இந்தக் குற்றச்சாட்டை ஆராய்வோம்.

சிறுவர் துஷ்பிரயோகத்தின் விளக்கம்:

சிறுவர் துஷ்பிரயோகம்- (சிறுவர்களின் மீது இழைக்கப்படும் கொடுமை அல்லது அநீதி என்றும் அழைக்கப்படுகிறது)சிறுவர்களின் மீது வேண்டுமென்றே இழைக்கப்படும் வேதனை மற்றும் நியாயப்படுத்தவியலாத கொடுமைகளை குறிக்கிறது.

அது எவ்வாறு விவரிக்கப்படுகிறது எனில் வரம்பு மீறிய உடல் ரீதியிலான கொடுமை நியாயப்படுதவியலாத சுடுசொற் பிரயோகம் சரியான தங்கும் வசதி முறையான சாப்பாடு தேவையான மருத்துவ வசதி மன ரீதியான அரவணைப்பு-போன்றவை செய்து தராமை incest-மிக நெருங்கிய இரத்த சம்பந்தமுடையவரகளுக்கிடையேயான தாம்பத்ய உறவு(வழக்கில் அது ஹராம்-உதாரணமாக தகப்பன் மகளுடன் கூடுவது) molestation - அடுத்தவருடைய விருப்பம் இல்லாமல் அவரை மிரட்டியோ அல்லது வேறு விதமாகவோ அவரை தாம்பத்ய உறவுக்கு அல்லது அது தொடர்பான செய்கைகளுக்கு நிர்ப்பந்திப்பது அவர்களை வன்புணர்வது அவர்களை வைத்து நீலப் படங்கள் எடுப்பது-போன்றவை அனைத்தும் சிறுவர் துஷ்பிரயோகத்தில் அடங்கும்.

மருத்துவ துறையில் battered child syndrome - என்று குறிக்கப்படுகிறது. battered child syndrome
- பெற்றோர்களாலோ அல்லது அந்த குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்களாலோ குழந்தைகளுக்கு உடல் ரீதியிலாக காயங்கள் ஏற்ப்படுத்துவது அல்லது அது போன்ற சூழ் நிலைகளை ஏற்ப்படுத்துவது-உதாரணமாக தேவையான சாப்பாடு கொடுக்காமல் இருப்பது எலும்பு நொருங்கும் அளவு அடிப்பது சூடுவைப்பது உள்காயமேற்ப்படுத்துவது.

உலக அளவில் சிறுவர் துஷ்பிரயோகம் கிரிமினல் குற்றமாக இருக்கிறது. சிறுவர் துஷ்பிரயோகம் அதில் துன்புறுத்தப்படும் குழந்தைகள் மீது பின்னாட்களில் பெரும் அளவில் பாதிப்பை உண்டாக்குவதாக இருக்கிறது. உடல் வளர்ச்சியில் குறைவு ஏற்படுவது பேச்சில் தடுமாற்றம் impaired cognitive abilities,(cognitive abilities -the higher mental processes, including understanding, reasoning, knowledge, and intellectual capacity) - அதாவது அறிதல் ஆராய்தல் அறிவு மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றில் பாதிப்பு மற்றும் நடத்தையில் தெளிவு இல்லாமை சரியான வயதுக்கு தேவையான பக்குவம் இல்லாமை சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கும் திறனில் கோளாறு--போன்றவை அக்குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. - என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிக்கா 1998

மேற்கூறப்பட்ட எதுவுமே நபி(ஸல்) அவர்களின் தூய வாழ்வில் பொருந்தவில்லை. நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயீஷா(ரலி) அவர்கள் மீதோ அல்லது வேறு யார் மீதோ அவ்வாறு நடந்து கொண்டதாக ஒரு சிறு நிகழ்வும் இல்லை. நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயீஷா(ரலி) உடனோ அல்லது வேறு மனைவிகளுடனோ எந்த ஒரு துஷ்பிரயோகத்திலும் ஈடுபடவில்லை என்பதை அறிய முடிகிறது.

சிறுவர் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட சிறுவரோ, சிறுமியோ உடல் வளர்ச்சியில் குறைவு, பேச்சில் தடுமாற்றம், அறிவுத்திறன் பாதிக்கப்படுவது மற்றும் பல பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்று மேலே பார்த்தோம். நாம் அன்னை ஆயீஷா(ரலி) அவர்களின் கன்னியமான வாழ்வை பார்த்தால் அவர்களின் சொல், செயல், நடத்தை, அறிவு, ஆன்மீகம் எல்லாம் ஒரு எந்த பாதிப்புக்கும் ஆளாகாத ஒரு சாதரணமான நபரைவிட மிக உயர்ந்து எங்கேயோ உயரத்தில் சாதரண ஆட்கள் எட்டிபிடிக்க முடியாத தரத்தில் மிளிர்கிறது. நபி(ஸல்) அவர்களுடனான திருமணத்தின் மூலமும் அவர்களுடைய வழிகாட்டுதல் மூலமும் அன்னை ஆயீஷா(ரலி) அவர்கள் பாதிக்கப்பட்டவராக இல்லை மாற்றமாக அல்லாஹ்வினால் ஆசிர்வதிக்கப்பட்டவராகவே இருக்கிறார்கள்.

இந்த திருமணம் இஸ்லாத்திற்கும் மனித குலத்திற்கும் நன்மையாகவே முடிந்திருக்கிறது. மேலும் இது அல்லாஹ்வினால் முடிவு செய்யப்பட்ட திருமணம். நபி(ஸல்) அவர்களுடனான திருமணம் வஹியின் வாயிலாகவே முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நபி(ஸல்) வாயிலாக அன்னை ஆயீஷா(ரலி) அவர்களே அறிவிக்கும் ஹதீஸில், 'நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், நான் உன்னை கனவில் மூன்று முறை கண்டேன். வானவர் உன்னை அழைத்து வந்தார்கள். நீ பட்டுத்துணியில் மூடப்பட்டிருந்தாய். இது உங்களுடைய மனைவி என்று உனது முகத்தை திறந்து கான்பித்தார்கள்'--ஸஹிஹ் முஸ்லிம் 2ஆம் பாகம், பக்கம் 285.

நபி(ஸல்) அவர்களின் மனைவி மற்றும் நெருங்கிய சஹாபியுமாய் இருந்ததனால் அன்னை ஆயீஷா(ரலி) அவர்கள் பெற்ற அறிவும்இ தெளிவும் வேறு எந்த பெண்ணும் பெறவில்லை எனலாம்.

நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் கிட்டத்தட்ட 50 வருடங்கள் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். திருத்தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் நேரடியாக பெற்ற பாக்கியசாலி. குர் ஆனை மனனம் செய்த 3 மனைவியரில் இவர்களும் ஒருவர்.

ஹதீஸ் கலையை பொருத்தவரையில் 2000க்கும் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த நால்வரில் ஒருவர். அவர்களிடமிர்ந்து 2210 ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 174 ஹதீஸ்கள் புகா¡¢ மற்றும் முஸ்லிம் ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்கள் அறிவித்த ஹதீஸ்களில் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான விஷயங்கள் அதிகம். அது அன்னை ஆயீஷா(ரலி) அவர்கள் போன்ற நிலையில் உள்ள ஒருவரால்தான் அறிவித்தாகமுடியும். மிக முக்கியமான விஷயம் அவர்களின் வாயிலாக எழுத்து மூலமாக ஹதீஸ்கள் மூன்று நபர்களை அடைந்துள்ளது. அதில் ஒருவர் அவர்களின் அக்காள் மகன் உர்வா நபிதோழர்களுக்குப்பின் வந்தவர்களில் முக்கியமான இஸ்லாமிய வல்லுனர். இஸ்லாமிய வல்லுனர்களால் கூறப்படுகிறது. அவர்கள் இல்லாமல் இருந்தால் இல்முல் ஹதீஸில் பாதி அழிந்திருக்கும்.

நபித்தோழர்களில் மிகவும் திறமையுடைய பலரும் அவர்களுக்குப்பின் வந்தவர்களும் அன்னை(ரலி)யின் அறிவினால் பலனடைந்திருக்கிறார்கள். அபு மூஸா அல்-அஷா¢(ரலி) ஒரு தடவை நபிதோழர்களாகிய நாங்கள் ஏதாவது விஷயத்தில் கஷ்டத்தை கண்டால் அன்னை ஆயீஷா(ரலி) அவர்களிடம் கேட்போம்.--அல் முவத்தா - இமாம் மாலிக் ஹதீஸ் 2.75

உர்வா பின் ஜுபைர் அறிவிப்பதாவது' அன்னை அயீஷா(ரலி) அவர்களைத்தவிர குர் ஆனிலோ ஹலால் ஹராம் சட்டதிட்டங்களிலோ இல்மு-அல் அன்சாபிலோ அரபுக் கவிதையிலோ சிறந்து விளங்கியவரை நான் கண்டதில்லை. அதனால்தான் மூத்த சஹாபாக்கள்கூட மிகவும் நுணுக்கமான விஷயங்களில் அன்னையிட்ம் கலந்தாலோசிப்பவர்களாக இருந்தனர். --ஜலா-உல்-அ•ப்ஹாம்-இப்னு கைய்யூம் மற்றும் இப்னு சா'த்இ தொகுப்பு 2இ பக்கம் 26

நபி(ஸல்) கூறினார்கள் மற்ற பெண்களைக்காட்டிலும் ஆயீஷாவின் மேன்மை எவ்வாறு எனில் மற்ற உணவுகளைக்காட்டிலும் தரித்(இறைச்சியும்இரொட்டியும் கலந்த அரபிய உணவு)எவ்வாறு சிறந்ததோ அவ்வாறு. ஆண்களில் பலர் முழுமை அடைந்திருக்கின்றனர். ஆனால் பெண்களில் அவ்வாறு யாரும் இல்லை. இம்ரானின் மகள் மர்யம்(ஈஸாவின்(அலை) தாயார்) மற்றும் •பிர் அவ்னின் மனைவி ஆசியாவைத் தவிர. புஹா¡ ஹதீஸ் எண் 4.643

மூசா இப்னு தல்ஹா(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது' அன்னை ஆயீஷா(ரலி) அவர்களைப்போல் பேச்சில் தெளிவுடையவரை நான் கண்டதில்லை'. முஸ்தத்ரக் ஹக்கிம் தொகுப்பு 4, பக்கம் 11.

தூரதூரங்களிலிருந்து ஆண்களும் பெண்களும் அவர்களின் அறிவைத்தேடி வருவார்கள்.

குர் ஆனைக் குறித்து அவர்களுக்குள்ள அறிவும் தெளிவும் அறிந்த விசயமே. எத்தனையோ முறை வஹி வரும்போது நேரடி சாட்சியாக இருந்ததனால் அந்த வசனங்களின் பொருளும் அதன் பின்னனியும் அவர்களுக்கு தெளிவாக தெரிந்திருந்தது. நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் அவர்களுடன் இருக்கும்போது மாத்திரமே வஹி வந்திருக்கிறது. இது அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு கிடைத்த தனிச்சிறப்பு. ஆகவேதான் குர் ஆன் வசனங்களை விவரிப்பதில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயீஷா(ரலி) அவர்கள் மடியில்தான் உயிர் நீத்தார்கள். அவர்களது அறையில்தான் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

அன்னை ஆயீஷா(ரலி) அவர்களின் இந்த குணங்களும் நபி(ஸல்) அவர்கள் அந்த வைரத்தை பட்டை தீட்டி ஒளிரவிட்டதுமே இந்த திருமணத்தில் விளைந்தவை. வரம்புமீறும் சிலரின் கூற்று போல நபி(ஸல்) அவர்கள் அத்தகையவர்கள் அல்லர்.

அன்னை ஆயீஷா(ரலி) அவர்களின் வாழ்வு பெண்கள் ஆண்களைவிட அறிவில் சிறந்து விளங்க முடியும் என்பதற்கு சான்றாக விளங்குகிறது. மேலும் அவர்கள் இஸ்லாமிய அறிஞர்களுக்கும் மேதைகளுக்கும் ஆசிரியராக இருந்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் வாழ்வு பெண்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு உந்துதலாகவும் வழிகாட்டுதலாகவும் அமையமுடியும் என்பதற்கு ஒரு சான்று. தங்களை பாடகர்களிலும் நடிகர்களிலும் விளையாட்டு வீரர்களிலும் தேடும் இளைஞர்களுக்கு அவர்கள் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்கள். அல்லாஹ் சுப்ஹானஹ¤வத்தஆலா அவர்களின் நினைவை நம் உள்ளங்களில் என்றும் ஒளிரச்செய்வானாக. அவர்களுக்கு சுவனத்தில் உயர்ந்த இடத்தை அளிப்பானாக. ஆமீன்.

இந்த கட்டுரையை எழுதியவர் சபீல் அஹ்மது. இவரைப்பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால் நான் ஒற்றை வரியில் சொல்ல விரும்புகிறேன். இவர் அஹ்மது தீதாத் அவர்களின் மாணவர்.

இந்த கட்டுரை இதனுடன் முடிகிறது. இதன் தொடர்ச்சி பாகம் 2ல் பார்க்கவும். இன்ஷா அல்லாஹ்.
 


2010/6/22 syed abu thahir <syed....@gmail.com>
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

Reply all
Reply to author
Forward
0 new messages