உங்கள் சேவை

1 view
Skip to first unread message

Sundararajan Subramaniam

unread,
Dec 4, 2025, 10:12:10 PM (19 hours ago) Dec 4
to FreeTamilEbooksForum
வணக்கம் . நான் சுந்தரராஜன். சென்னையில் அரசு வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுத்  தற்போது  அமெரிக்காவில் சியேட்டிலில் இருக்கிறேன். நானும் என்  வங்கித் தோழர் கிருபானந்தனும் குவிகம் என்ற இலக்கிய அமைப்பைக் கடந்த 12 வருடங்களாக   நடத்தி வருகிறோம். ( https://kuvikam.com)  . குவிகம் மின்னிதழ்,  அளவளாவல்,  பதிப்பகம்,  ஆவணப்படம் , குறும் புதின மாத இதழ் ஆகியவை எங்களது சிறு முயற்சிகள்.

தமிழை உலகாளச்  செய்ய நீங்கள் செய்யும்  சேவைகள் மகத்தானவை.

உங்கள்  சாதனைகளைப் பற்றிய ஒரு விளக்கக்  கட்டுரை அனுப்பினால் ( MS WORD DOCUMENT - 4/5 பக்கங்கள் -->  edi...@kuvikam.com ) அதை எங்கள் மின்னிதழில் வெளியிடுவதில் பெருமை கொள்வோம். 

உங்கள் சேவைகளுக்கு நாங்கள் எந்தவகையில் உதவி செய்ய இயலும் என்பதைத் தெரிவித்தால் எங்களால் முடிந்ததைச்  செய்வோம். 

நன்றி. 

Shrinivasan T

unread,
Dec 4, 2025, 10:13:18 PM (19 hours ago) Dec 4
to freetamile...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி ஐயா.

அடுத்த வாரத்தில் கட்டுரை அனுப்புவேன்.

வியா., 4 டிச., 2025, 10:12 PM அன்று, Sundararajan Subramaniam
<ssr...@gmail.com> எழுதியது:
> --
> You received this message because you are subscribed to the Google Groups "FreeTamilEbooksForum" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilebooksf...@googlegroups.com.
> To view this discussion visit https://groups.google.com/d/msgid/freetamilebooksforum/4e4925a0-5bf3-4b88-b968-7e98890ab9cbn%40googlegroups.com.



--

--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : https://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : https://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
https://FreeTamilEbooks.com

Sabarish Official

unread,
Dec 4, 2025, 10:23:39 PM (19 hours ago) Dec 4
to freetamile...@googlegroups.com
நன்றி அய்யா. உங்களோடு பயணிக்க மிகவும் ஆவலாக உள்ளேன் அய்யா , எனக்கு வயது 23 ஆகிறது .எனவே உங்களை போன்ற மூத்தோரின் வழிகாட்டல் எனக்கும் புத்தியிலும், சிந்தனையிலும் வழிகாட்டும் என்று நம்புகிறேன்

RAJENDRAN UDAIYAR Vaiyapuri

unread,
Dec 4, 2025, 10:39:22 PM (19 hours ago) Dec 4
to freetamile...@googlegroups.com
உங்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு வாழ்த்துக்கள்.. நான் விழுப்புரம் அருகில் உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 02.10.1980 இல் இளநிலை எழுத்தர் பணியில் சேர்ந்து 31.05.2012 இல் அதே பதவியில் பணி நிறைவுபெற்று உள்ளேன்.. 
நான் வருங்கால வைப்பு நிதியில் சேர்ந்து 01.10.1981 முதல் 31.05.2010 வரை வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995 இல் இணைந்து சந்தா செலுத்தி வந்து உள்ளேன். எனக்கு வருங்கால வைப்பு நிதியில் 09.05.2010 முதல் 1806 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. என்னுடைய PPO no.TNMAS 00524863.
என்னை போன்ற தமிழ் நாட்டில் உள்ள 10 லக்ஷம் மூத்த குடிமக்கள் சார்பாக குறைந்த பட்ச ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று PGPORTAL மூலம் கோரிக்கை வைத்து வரும் நிலையில் வருங்கால வைப்பு நிதியில் குறைந்த பட்ச ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வழி வகை இல்லை என்று நிராகரிக்கப்பட்டு வருகிறது.
நமது பிரதமர் அவர்கள் மூத்த குடிமக்கள் நம் நாட்டின் சொத்து என்று புகழாரம் சூட்டி உரையாற்றுகிறார்.
01.09.2014 இல் குறைந்த பட்ச ஓய்வூதியம் 1000 ரூபாய் என்று அறிவித்து வழங்கி வருவதை இப்போது உள்ள விலைவாசிக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வினா எழுப்பி எழுத்து மூலம் அளிக்கும் பதிலில் நிதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. வருங்கால வைப்பு நிதியில் ஓய்வூதிய மூலதன நிதி 10 லக்ஷம் கோடி ரூபாய் குவிந்து உள்ளது. அதில் இருந்து ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி வட்டி வருவாய் இருந்தும் ஏழை எளிய தொழிலாளர்கள் வாழ்வின் விளிம்பில் வறுமையில் வாழும் நிலையில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அயல்நாட்டில் உள்ள இந்தியர் NRI என்ற அடிப்படையில் ஒரு கருத்துரு அனுப்பி வைத்தால் நல்லது என்று நினைக்கிறேன். உங்களின் முயற்சி எங்களுக்கு வாழ்வளிக்கும் என்று நம்புகிறேன்..
நன்றி,
தங்கள் அன்புள்ள,
வை.இராசேந்திரன், ஓய்வு பெற்ற கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியாளர்.
45/1D, CEE DEE YES Chennai Pattanam Ammapettai kottamedu post, Thiruporur Tk Chengalpet Dt PIN 603108
Mobile.9865775989
மின்னஞ்சல். vair...@gmail.com 
05.12.2025  காலை 09.08. மணி.

On Fri, 5 Dec, 2025, 8:43 am Shrinivasan T, <tshrin...@gmail.com> wrote:

RAJENDRAN UDAIYAR Vaiyapuri

unread,
Dec 4, 2025, 10:42:01 PM (19 hours ago) Dec 4
to freetamile...@googlegroups.com
மாண்புமிகு பிரதமர் அவர்களின் கனிவான பார்வைக்கும் பரிசீலனைக்கும் சமர்ப்பிக்கிறேன்...

வருங்கால வைப்பு நிதி யில் ஓய்வூதியர் நலனில் கவனம் செலுத்த கோரிக்கை..

 30.11.2024 இல் நடைபெற்ற 236 வது CBT கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களில் 
வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் 2023-24 நிதி ஆண்டு அறிக்கையின்படி 71,780 கோடி நிர்வாகத்தின் பங்களிப்பு அரசின் பங்களிப்புடன் சேர்ந்து பெறப்பட்டு , அதன் முந்தைய ஆண்டின் ஓய்வூதிய மூலதன நிதி 7.80 லக்ஷம் கோடிக்கு வட்டி வருவாய் 58,868 கோடி பெற்ற நிலையில் குவிந்த தொகை 1,30,459 கோடி உள்ளடக்கிய நிதியில் இருந்து 78.49 லக்ஷம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் 14,866 கோடி பட்டுவாடா செய்வதாகவும் , 8172 கோடி வருங்கால வைப்பு நிதியில் இருந்து விலகியவர்களுக்கு திருப்பி அளித்தது என்றும் இரண்டுக்கும் ஆக 23,038 கோடி செலவானது என்றும் 31.03.2024 இல் 8.88 லக்ஷம் கோடி ரூபாய் இறுதி இருப்பு வைப்பு நிதியாக உள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

இதில்
36.60 லக்ஷம் ஓய்வூதியர்களுக்கு 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 

12.06லக்ஷம் ஓய்வூதியதாரர்களுக்கு 1001-1500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 

8.98லக்ஷம் ஓய்வூதியர்களுக்கு 1501-2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 

9.29 லக்ஷம் ஓய்வூதியர்களுக்கு 2001-2500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 

5.22 லக்ஷம் ஓய்வூதியர்களுக்கு 2501-3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 

78.49 லக்ஷம் ஓய்வூதியர்களில் 72.15 லக்ஷம் பேர் 3000 ரூபாய்க்கும் குறைவாக ஓ‌ய்வூ‌திய‌ம் பெ‌ற்று வரு‌கி‌ன்றன‌ர்..

6.34 லக்ஷம் பேர் 3000 ரூபாய்க்கும் மேல் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள் ..

இந்த நிலையில் குறைந்த பட்ச ஓ‌ய்வூ‌திய‌ம் உயர்த்தி வழங்கக் கோரி PGPORTAL மூலம் மனு செய்தால் ஓ‌ய்வூ‌திய‌ம் உயர்த்தி வழங்க நிதி இல்லை என்றும் அரசின் கொள்கை முடிவு என்றும் தெரிவித்து கோரிக்கை முடித்து வைக்கப்பட்டு வருவதை மாண்புமிகு பிரதமர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.


இந்த கோரிக்கை மூத்த குடிமக்கள் நலன் சார்ந்தது என்பதையும் கவனத்தில் கொண்டு எதிர்வரும் 2025 -26 ஆம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு செய்வது நல்லாட்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்றும் இதனை வருகின்ற குடியரசு தின விழாவில் மாண்புமிகு பிரதமர் அவர்களின் உரையில் சேர்க்க வேண்டும் என்றும் வேண்டுகிறேன். 
நன்றியுடன், 

தங்கள் அன்புள்ள, 
வை. இராசேந்திரன் ,
சென்னை.. கைபேசி. 9865775989. மின் அஞ்சல் முகவரி. vair...@gmail.com நாள். 06.04.2025

Nandhitha Kaappiyan

unread,
12:08 AM (17 hours ago) 12:08 AM
to freetamile...@googlegroups.com

வணக்கம், நல்ல பயனுள்ள தளம், பாராட்டுக்கள்


Reply all
Reply to author
Forward
0 new messages