மாண்புமிகு பிரதமர் அவர்களின் கனிவான பார்வைக்கும் பரிசீலனைக்கும் சமர்ப்பிக்கிறேன்...
வருங்கால வைப்பு நிதி யில் ஓய்வூதியர் நலனில் கவனம் செலுத்த கோரிக்கை..
30.11.2024 இல் நடைபெற்ற 236 வது CBT கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களில்
வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் 2023-24 நிதி ஆண்டு அறிக்கையின்படி 71,780 கோடி நிர்வாகத்தின் பங்களிப்பு அரசின் பங்களிப்புடன் சேர்ந்து பெறப்பட்டு , அதன் முந்தைய ஆண்டின் ஓய்வூதிய மூலதன நிதி 7.80 லக்ஷம் கோடிக்கு வட்டி வருவாய் 58,868 கோடி பெற்ற நிலையில் குவிந்த தொகை 1,30,459 கோடி உள்ளடக்கிய நிதியில் இருந்து 78.49 லக்ஷம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் 14,866 கோடி பட்டுவாடா செய்வதாகவும் , 8172 கோடி வருங்கால வைப்பு நிதியில் இருந்து விலகியவர்களுக்கு திருப்பி அளித்தது என்றும் இரண்டுக்கும் ஆக 23,038 கோடி செலவானது என்றும் 31.03.2024 இல் 8.88 லக்ஷம் கோடி ரூபாய் இறுதி இருப்பு வைப்பு நிதியாக உள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..
இதில்
36.60 லக்ஷம் ஓய்வூதியர்களுக்கு 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
12.06லக்ஷம் ஓய்வூதியதாரர்களுக்கு 1001-1500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
8.98லக்ஷம் ஓய்வூதியர்களுக்கு 1501-2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
9.29 லக்ஷம் ஓய்வூதியர்களுக்கு 2001-2500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
5.22 லக்ஷம் ஓய்வூதியர்களுக்கு 2501-3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
78.49 லக்ஷம் ஓய்வூதியர்களில் 72.15 லக்ஷம் பேர் 3000 ரூபாய்க்கும் குறைவாக ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்..
6.34 லக்ஷம் பேர் 3000 ரூபாய்க்கும் மேல் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள் ..
இந்த நிலையில் குறைந்த பட்ச ஓய்வூதியம் உயர்த்தி வழங்கக் கோரி PGPORTAL மூலம் மனு செய்தால் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க நிதி இல்லை என்றும் அரசின் கொள்கை முடிவு என்றும் தெரிவித்து கோரிக்கை முடித்து வைக்கப்பட்டு வருவதை மாண்புமிகு பிரதமர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
இந்த கோரிக்கை மூத்த குடிமக்கள் நலன் சார்ந்தது என்பதையும் கவனத்தில் கொண்டு எதிர்வரும் 2025 -26 ஆம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு செய்வது நல்லாட்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்றும் இதனை வருகின்ற குடியரசு தின விழாவில் மாண்புமிகு பிரதமர் அவர்களின் உரையில் சேர்க்க வேண்டும் என்றும் வேண்டுகிறேன்.
நன்றியுடன்,