நூல் வெளியீடு தொடர்பாக

35 views
Skip to first unread message

Hema Dhanasek

unread,
Feb 12, 2024, 5:41:08 AMFeb 12
to FreeTamilEbooksForum
வணக்கம் நான் என் முதல் படைப்பு 
ஒன்றை அனுப்பி வைத்தேன். அது ஏற்றுக் கொள்ளப்பட்டதா என அறிய விழைகிறேன். 
நூல் தலைப்பு: இதயச் சுவடுகள்
நூல் ஆசிரியர்:ஹேமா தனசேகர்

Shrinivasan T

unread,
Feb 12, 2024, 9:51:48 AMFeb 12
to freetamile...@googlegroups.com
வணக்கம்,

உங்கள் மின்னூல் பெற்றோம்.

விரைவில் வெளியிடுவோம்.

மிக்க நன்றி

திங்., 12 பிப்., 2024, AM 5:41 அன்று, Hema Dhanasek <hemadh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "FreeTamilEbooksForum" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilebooksf...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/freetamilebooksforum/915b41ed-4004-483f-9c87-a45dafea9b7en%40googlegroups.com.


--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com

Pollachi Nasan Thamizham

unread,
Feb 12, 2024, 8:33:07 PMFeb 12
to FreeTamilEbooksForum
மொழி அறிதல் (Language Learning) என்பது எளிமையானது, இயல்பானது, உயர்வானது. 

உலகில் உள்ள அத்தனை மொழிகளையும் 1) பேச்சு வழக்கில் உள்ள மொழி, எழுத்துருக்களைக் கொண்ட மொழி எனவும்,  2) தனக்கான சிறப்பு எழுத்துருக்களைக் கொண்ட மொழி எழுத்துருக்களை கடன் வாங்கி ஒலிக்கும் மொழி எனவும், 3) எழுத்துகளை இணைத்துப் படித்ததால் இயல்பாக ஒலிக்கும் மொழி (Phonetic), மாறுபட்டு ஒலிக்கும் மொழி (Unphonetic) எனவும், பொதுவாக வகைப் படுத்தலாம். 

இன்றைய சூழலில் மொழி அறிதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. படிப்பு, பணி, புலம் பெயர்தல் என்கிற பல்வேறு சூழல்களில் மாறுபட்ட இடங்களுக்குச் சென்று வேற்று மொழிகளைப் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. மொழி அறிதல் என்பது இயல்பானது. வேற்று மொழிச் சூழலில் ஒரு மாதங்கள் இருந்தாலே போதும். அந்த மொழியின் ஒலிப்பு முறையை அறிந்து கொள்ளலாம். படித்தல் எழுதுதல் என்பதற்காகத்தான் அந்த மொழியைப் படிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறோம். உலகம் முழுவதும், இந்த மொழி கற்றலை, இரண்டாம் மொழி (Second Language) கற்றல் என்று வகைப்படுத்திக் கற்பிக்கப் படுகிறது. 

மொழி கற்பித்தல் (Language Teaching) என்பது எளிமையானது. உலகில் உள்ள அத்தனை மொழிகளையும் அறிந்து கொள்ள ஒரு எளிமையான படிநிலை / அடிப்படை உள்ளது. அதை இப்பொழுது பார்ப்போம். எழுத்து – எழுத்துகள் இணைந்தால் சொல் – சொற்கள் இணைந்தால் தொடர் – தொடர்களைச் செப்பமாக எழுதுவதற்கு அந்த மொழிக்கான அடிப்படையான இலக்கணம் – அந்த மொழியின் சிறப்புக் கூறுகளான படைப்புகள் அறிதல். இந்தப் படிநிலைதான் உலகில் உள்ள அத்தனை மொழிகளையும் எளிமையாகப் படிப்பதற்குரிய அடிப்படையாக அமையும். இந்த அடிப்படையில்தான் தமிழ் கற்பதற்கான படிநிலைகளை நான் 1) படித்தல் 2) பேசுதல் 3) சொற்கள் அறிதல் 4) தொடர்கள் அறிதல் 5) இலக்கணம் அறிதல் 6) தமிழ் மொழியின் சிறப்புக் கூறுகளான பா அறிதல் என்கிற படிநிலைகளை உருவாக்கி அறிமுகப்படுத்தி வருகிறேன். 

இன்றைய சூழலில் உலகம் முழுவதும் இரண்டாம் மொழியைப் படிக்க, வகுப்புகள், பாடங்கள் என வரிசைப்படுத்திக் கற்பிக்கப் படுகின்றன. பாடங்கள் அனைத்தும் LSRW என்கிற அடிப்படையிலேயே வரிசைப் படுத்தப் பட்டுள்ளன. அறிதல் (know) (knowledge), புரிதல் (understand), தெரிதல் (applied knowledge) என்கிற படிநிலைகளே, வள்ளுவர் வழி நாம் அறிந்து கொள்கிற தமிழ் கற்பித்தலுக்கான படிநிலைகள். எழுத்துகளை அறிந்து, அந்த எழுத்துகளை இணைத்துப் பிழையில்லாமல் படிக்கிற படித்தல் என்கிற நிலையையே மொழி கற்பித்தலுக்கான முதல் படியாக நாம் அமைக்க வேண்டும். தொடக்க நிலையில் பிழையில்லாமல் படிக்கத் தொடங்கி விட்டார்கள் என்றால் – சொற்களஞ்சிய அகராதியைக் கொடுத்து, படிப்பது என்ன என்று புரிந்து கொள்வதற்கான அடித்தளம் அமைத்தால், படிப்பதை அவர்களாகவே இயல்பாகப் பரிந்து கொள்வார்கள். சூழலில் பேசுவதற்கான அடித்தளம் அமைந்து இருந்தால் சொற்கள் அறிவதை இயல்பாகவே அவர்கள் அடைந்து விடுவார்கள். இதுவே மொழி கற்பித்தலுக்கான எளிய அணுகுமுறையாக இருக்கும். 

ஈடுபாடு உள்ளவர்கள் தொடர்பு கொண்டால் மொழி கற்பித்தலுக்கான எளிய முறையை நாம் வரிசைப் படுத்தி இரண்டாம் மொழி படிப்பவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். ம. நடேசன் 8667421322


Reply all
Reply to author
Forward
0 new messages