பெரு மகிழ்ச்சியான செய்தி ஐயா.
உங்களுடனான முதல் உரையாடலில் இருந்தே நீங்கள் அளித்து வரும் உற்சாகமே இன்னும் நிறைய செய்யும் ஆர்வத்தைத் தூண்டுகின்றது.
உங்கள் ஆதரவுக்கும் அருமையான எழுத்துகளுக்கும் நன்றிகள்.
சீனி
வணக்கம் சீனிவாசன்.நலம் தானே?இந்தக்கடிதம் உங்களுக்கு ஆச்சரியம் தரக்கூடும்.சில வருடங்களுக்கு முன்பு நீங்க ஒரு மாலை வேளையில் தான் அமெரிக்காவில் இருந்தபடியே என்னுடன் பேசுனீங்க. தளம் குறித்து திட்டங்கள் தொடர்பாக.ஆனால் இன்று கணக்குப் போட்டு பார்த்ததில் என்னுடைய மின் நூல்கள் ஒரு லட்சம் பேர்களையும் தாண்டி சென்று அடைந்துள்ளது.முதல் முறையாக இலக்கு ஒன்று நிர்ணயித்து அதை அடைந்து வெற்றி அடைந்ததும் இதுவே.உங்கள் உழைப்புக்கு உங்கள் குழுவினரின் ஆதரவுக்கு என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என் மின் நூல்களை ஒவ்வொருவரும் படித்து முடித்து அலைபேசி எண் கேட்டு வாங்கி அழைத்துப் பேசும் போது பெரிய எழுத்தாளர்கள் செய்யாத ஏதோவொன்றை நான் செய்த திருப்தி வந்துள்ளது.மீண்டும் நன்றி.😀32329 ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்10150 வெள்ளை அடிமைகள்8890 பயத்தோடு வாழப் பழகிக் கொள்7481 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்8516 காரைக்குடி உணவகம்16500 கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு14296 தமிழர் தேசம்3811 கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி1,01,973