தமிழில் ஒரு நிரலாக்கப்போட்டி - நிரல்களம் 21

4 views
Skip to first unread message

நீச்சல் காரன்

unread,
Feb 11, 2021, 10:39:20 AM2/11/21
to ThamiZha! - Free Tamil Computing(FTC), தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, wikimedi...@lists.wikimedia.org, Mailing list for discussions about Tamil wikisource / தமிழ் விக்கிமூலம், Mozillians Tamilnadu
வணக்கம்,
இணையத்தில் இவையெல்லாம் தமிழில் இல்லையே, தமிழுக்கு இல்லையே  என எத்தனையோ தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்த்திருப்போம். அத்தகையவற்றை நம் தமிழில் கொண்டு வர சிறு முயற்சியாக நம் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்துடன் (உத்தமம்) இணைந்து 2021 மார்ச் 5,6,7 ஆகிய நாட்களில் இணையம்வழியாக, பன்னாட்டளவில் ஒரு நிரலாக்கப் போட்டியை(Hackathon) நடத்துகிறது.

தற்காப்புக் கலைகள், ஓவியம், சமையல், இசை போன்று அனைத்துத் தமிழ்க் கலைகளை நவீனப்படுத்தவும், கணினிக்குக் கொண்டுவரவும் சுவாரஸ்யமான தலைப்புகள் உள்ளன. அது போலத் தமிழ் இலக்கணம் முதல் இலக்கியம் வரை மொழிக் கருவிகள் உருவாக்கக்கூடிய சவால்களும் உள்ளன. இவ்விரண்டு மட்டுமல்லாமல் கட்டற்ற கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியாவும் அது சார்ந்த திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழுக்கான தீர்வையும் கொண்டுவரலாம்.
15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் இரண்டு முதல் நான்கு நபர் கொண்ட அணியாகக் கலந்து கொள்ள வேண்டும். முன்பதிவிற்குக் கடைசி நாள் பிப்ரவரி 25 ஆகும். எந்தத் துறை மாணவராக இருந்தால், எந்தக் கல்லூரியாக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பங்கு பெறலாம்.

மேலும் அறிய
https://tmfa-gct.com/Niralkalam

நியூஸ்18 ஊடகத்தில் வந்த செய்திக் கட்டுரை:
https://tamil.news18.com/news/technology/hackathons-competitions-in-tamil-nadu-skv-409317.html

--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages