ஒருங்குறியில் கடுகு எழுத்துருக்கள்

6 views
Skip to first unread message

நீச்சல் காரன்

unread,
Jan 24, 2022, 6:58:29 AM1/24/22
to கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, ThamiZha! - Free Tamil Computing(FTC)
வணக்கம்,
மறைந்த எழுத்துவாக்குநரும் நகைச்சுவை எழுத்தாளருமான கடுகு என்ற பி.எஸ் ரங்கநாதன் அவர்களின் சர்மா சொல்யூசன்ஸ் மூலம் ஏழு டிஸ்கி எழுத்துருக்களை அவர் காலத்தில் பொதுவுரிமையில் வெளியிட்டிருந்தார். அவை அக்காலத்தில் டிஸ்கி முறையில் பிரபலமானவை. தற்போது அதனை ஒருங்குறியில் மாற்றி நன்றியுடன் அதே பொதுவுரிமத்தில் வெளியிடப்படுகிறது. அவர் நினைவாக அவரது எமுத்துருக்கள் இனி நம்முடன் பேசும். டிஸ்கி எழுத்துருக்களை வழங்கிய அழகி விஸ்வநாதன் அவர்களுக்கும் நன்றி. 

எழுத்துருக்களை கீழுள்ள முகவரிகளில் முன்தோற்றம் பார்த்துப் பெற்றுக் கொள்ளலாம்.
image.png
மேலும் பொதுவுரிமத்தில் விடுபட்ட பிற எழுத்துருக்களையும் தொகுத்து, சுமார் 2450 எழுத்துருக்கள் இங்கே உள்ளன. 

--
அன்புடன்,
நீச்சல்காரன்

நீச்சல் காரன்

unread,
Jan 24, 2022, 9:57:35 AM1/24/22
to இலக்குவனார் திருவள்ளுவன், thiru thoazhamai, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, ThamiZha! - Free Tamil Computing(FTC), tamilmanram kuzhu, வல்லமை, மின்தமிழ், Tamil Nutpam
வணக்கம் ஐயா,
நீங்கள் குறியாக்கத்தைத்(Encoding) தான் தவறாக எழுத்துரு(font) வகை என்று குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். மேலே குறிப்பிட்ட சிக்கலெல்லாம் குறியாக்கச் சிக்கல். ஒருங்குறிக்கு மாற்றிய பிறகு உலகளாவிய கணினிகளில் சரியாகப் படிக்கமுடியும். நீங்கள் குறிப்பிட்ட 6000 எழுத்துருக்களையும் ஒருங்குறி எழுத்துருக்களாக மாற்றும் நுட்பம் உள்ளது, உரிமமிருந்தால் அவற்றைப் பகிருங்கள் மாற்ற முயல்கிறேன். மாற்ற வேண்டிய ஆவணங்களை இங்கே https://apps.neechalkaran.com/oovan மாற்றிப்பாருங்கள். மற்றபடி ஒருங்குறியில் பல லட்சம் எழுத்துருக்கள் தமிழுக்கு வேண்டும்.

அன்புடன்,
நீச்சல்காரன்


On Mon, 24 Jan 2022 at 17:47, இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com> wrote:
புதுப்புது எழுத்துருக்களை அறிமுகப்படுத்துவோரைத் தூக்கிலிட்டால் நன்றாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.
பேய், பிசாசு என்றெல்லாம் ஆயிரக்கணக்கில் எழுத்துருக்களை உருவாக்கி வைத்துள்ளார்கள்.இரண்டாயிரம் பிறப்பதற்கு முன்பே எனக்கு 6000 எழுத்துருக்களை ஒருவர் அனுப்பினார்.  கணியச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை எழுத்துருவைப் பயன்படுத்துகின்றனர். அவர்களிடம் கணியச்சிடுவோர்  இடையில் வேறு யாரிடமும் போகக் கூடாது என்பதற்காக அவ்வாறு செய்கிறார்களாம். என்னதான் எழுத்துரு மாற்றிகள் இருப்பினும் பலவற்றிற்கு எழுத்துரு மாற்றி இல்லை. கணியச்சிட்டதை வேறு யாருக்கும் அனுப்ப இயலவில்லை. குறிப்பிட்ட சில வகைகளை மட்டும் அரசு வரையறை செய்து - ஐந்திற்கு மிகாமல் இருந்தால் நன்று - அவற்றைத் தரப்படுத்தி விட வேண்டும்.அத்தகைய எழுத்துரு வகையில் பல் வகை வடிவங்களை வேண்டுமென்றால் எழுத்துரு உருவாக்குநர் படைக்கலாம். வேறு எழுத்துரு வகைகளை அறிமுகப்படுத்தத் தடை விதிக்க வேண்டும்.
இதன் முதல் வரியைப் படித்துப்பார்த்தால் எழுத்துரு வகைகளால் நான் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளேன், இடர்ப்பட்டுள்ளேன் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.


--
You received this message because you are subscribed to the Google Groups "தஇக - கணித்தமிழ் வளர்ச்சி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tva_kanitamil_val...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tva_kanitamil_valarchi/CACir7OrKyFMPYKUCMDHRZdM%3D0e9s64Qy9Cmr46HXHRgptTrcHA%40mail.gmail.com.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Muthu A

unread,
Jan 24, 2022, 12:00:29 PM1/24/22
to ThamiZha! - Free Tamil Computing(FTC), நீச்சல் காரன்
அருமை நீச்சல்!  கடுகு செயல்படுத்திய encoding table என்பதை பொருவாகவும் வெளியிட / வலைபூ வழியாக எழுத வேண்டுகிறேன்.

நன்றி

--

Muthu A

unread,
Jan 24, 2022, 12:07:02 PM1/24/22
to நீச்சல் காரன், ThamiZha! - Free Tamil Computing(FTC), கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், தஇக - கணித்தமிழ் வளர்ச்சி
வணக்கம் நீச்சல்,

ஒருவர் இறந்த போதும் அவர் நினைவினை மறந்ததாலொழிய அவர் இறப்பதில்லை என்ற தத்துவமாக இந்த வறலாற்று எழுத்துருவை புதிப்பித்து வழங்கியது அரும்பணி!

மறுஉயிர்!

-முத்து

--

இளங்குமரன்

unread,
Jan 25, 2022, 11:42:28 PM1/25/22
to freetamil...@googlegroups.com, இலக்குவனார் திருவள்ளுவன், thiru thoazhamai, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, tamilmanram kuzhu, வல்லமை, மின்தமிழ், Tamil Nutpam
வணக்கம் ஐயா. திருவள்ளுவர் ஐயாவின் கூற்றே எனக்கும். ஆங்கிலம்போல் ஒரு சீர்மை தமிழ் எழுத்துருக்களில் இல்லை. எழுத்தின் வடிவங்களை ஆயிரம் நூறாயிரம் என மாற்றி மாற்றி உருவாக்கலாம். ஆனால் ஐயா குறிப்பிட்டுள்ளது போல் மற்றவர்களிடம் போகக் கூடாது என்பதற்காக விசைப்பலகை அமைப்பை மனம்போன போக்கில் மாற்றி வைக்கும் போக்கு மிகவும் துன்பத்திற்குரியதே. சிங்கையில் கணியன் என்றொரு மென்பொருள் அதில் தயாரித்த வினாத்தாட்கள், ஆவணங்கள் எதனையும் பயன்படுத்த இயலா நிலைதான். எழுத்துரு மாற்றிகள் பல நேரங்களில் பல எழுத்துகளை மாற்றத் தெரியாவில்லை. ஏன் இந்த ஒற்றுமையில்லா நிலை எனப் புரியவில்லை. 

You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilcomput...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/freetamilcomputing/CACir7OpqpuZRQL91%2BKO21cZ7kdx6Onu07ZmT6jHO2-POK%3DdhLg%40mail.gmail.com.


--
அன்புடன்
         ஐயா
எழுத்தேணி அறக்கட்டளை
 

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 25, 2022, 11:42:52 PM1/25/22
to நீச்சல் காரன், thiru thoazhamai, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, ThamiZha! - Free Tamil Computing(FTC), tamilmanram kuzhu, வல்லமை, மின்தமிழ், Tamil Nutpam
புதுப்புது எழுத்துருக்களை அறிமுகப்படுத்துவோரைத் தூக்கிலிட்டால் நன்றாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.
பேய், பிசாசு என்றெல்லாம் ஆயிரக்கணக்கில் எழுத்துருக்களை உருவாக்கி வைத்துள்ளார்கள்.இரண்டாயிரம் பிறப்பதற்கு முன்பே எனக்கு 6000 எழுத்துருக்களை ஒருவர் அனுப்பினார்.  கணியச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை எழுத்துருவைப் பயன்படுத்துகின்றனர். அவர்களிடம் கணியச்சிடுவோர்  இடையில் வேறு யாரிடமும் போகக் கூடாது என்பதற்காக அவ்வாறு செய்கிறார்களாம். என்னதான் எழுத்துரு மாற்றிகள் இருப்பினும் பலவற்றிற்கு எழுத்துரு மாற்றி இல்லை. கணியச்சிட்டதை வேறு யாருக்கும் அனுப்ப இயலவில்லை. குறிப்பிட்ட சில வகைகளை மட்டும் அரசு வரையறை செய்து - ஐந்திற்கு மிகாமல் இருந்தால் நன்று - அவற்றைத் தரப்படுத்தி விட வேண்டும்.அத்தகைய எழுத்துரு வகையில் பல் வகை வடிவங்களை வேண்டுமென்றால் எழுத்துரு உருவாக்குநர் படைக்கலாம். வேறு எழுத்துரு வகைகளை அறிமுகப்படுத்தத் தடை விதிக்க வேண்டும்.
இதன் முதல் வரியைப் படித்துப்பார்த்தால் எழுத்துரு வகைகளால் நான் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளேன், இடர்ப்பட்டுள்ளேன் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.


--
You received this message because you are subscribed to the Google Groups "தஇக - கணித்தமிழ் வளர்ச்சி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tva_kanitamil_val...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tva_kanitamil_valarchi/CACir7OrKyFMPYKUCMDHRZdM%3D0e9s64Qy9Cmr46HXHRgptTrcHA%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages