Firefox mobile 14.0b1 available in 16 languages - and no Tamil yet

4 views
Skip to first unread message

Muguntharaj Subramanian

unread,
May 16, 2012, 4:35:52 AM5/16/12
to freetamil...@googlegroups.com
நண்பர்களே,

பயர்பாக்ஸ் மொபைல் உலாவி அடுத்த பதிப்பு 16 மொழிகளில் உருவாகிவருகிறது. அதில் இந்தியாவிலுருந்து பஞ்சாபி மொழியும் அடங்கும்.
இந்த சுட்டியை பார்க்க: http://ftp.mozilla.org/pub/mozilla.org/mobile/candidates/14.0b1-candidates/build3/android/
இது சார்ந்த செய்தியை இங்கு பார்க்கவும் - http://groups.google.com/group/mozilla.dev.l10n/browse_thread/thread/a41eccc1f6c52a66#

இந்தப் பட்டியலில் தமிழ் இல்லை. தமிழராகிய நாம் இந்த விசயத்தில் முயற்சி எதும் செய்யாமலிருக்கிறோம் என்று நினைக்கையில் வருத்தமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது.
கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குவதில் அன்மைகாலமாக தமிழர் பங்களிப்பு மிகக் குறைவே. இதை மாற்ற நாம் என்ன செய்யலாம்.

அன்புடன்,
முகுந்தராஜ்

--
Blog: http://mugunth.blogspot.com
Follow me @ http://twitter.com/mugunth

Amachu

unread,
May 16, 2012, 6:20:28 AM5/16/12
to freetamil...@googlegroups.com
On 05/16/2012 02:05 PM, Muguntharaj Subramanian wrote:
> கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குவதில் அன்மைகாலமாக தமிழர் பங்களிப்பு மிகக் குறைவே.
> இதை மாற்ற நாம் என்ன செய்யலாம்.

அன்பின் முகுந்த்,

நாம் பங்களிக்கும் இத்தைகைய திட்டங்கள் யாவும் வணிக நிறுவனங்களாலோ/ அறக்கட்டளைகளாலோ
தாங்கப்பட்டு தன்னார்வலர்களைக் கொண்டு இயங்குகிறது.

முழு நேரமாய் அங்கிருப்போர் அவற்றை தளராமல் நடத்தி வருகின்றனர். அவர்களை சுற்றி
ஊக்கத்தோடு உழைக்கும் தன்னார்வலர்கள் இயங்குகின்றனர். அவர்கள் உருவாக்கும் வேகத்திற்கு
ஈடுகொடுத்து செய்ய வேண்டுமானால் குறைந்தபட்சம் அப்படியொறு செயல்முறை இருத்தல் உத்தமம்.

அத்தகைய அமைப்பை ஏற்படுத்த வேண்டி தோற்றுவிக்கப் பட்டதே யாவர்க்கும் அறக்கட்டளை.
இருவருக்கு தேவையான இடம் பொருள் ஊதியம் உள்ளிட்டவற்றை குறைந்தபட்சம் திரட்டவேண்டும் என
நினைத்திருந்தேன்.

http://www.yavarkkum.org/wiki/index.php?title=2012_2013_நிதியாண்டிற்கானத்_திட்டம்

அது தொடர்ந்து வளர்ந்து விசாலமாகலாம். கருத்துக்களை முன்வையுங்கள். எப்படி போகிறதென்று
பார்க்கலாம்.

--

ஆமாச்சு





Muguntharaj Subramanian

unread,
May 16, 2012, 7:51:01 AM5/16/12
to freetamil...@googlegroups.com
நண்பர் ஆமாச்சு,

இன்னும் பத்து அமைப்பைக் கூட நாம் நிறுவலாம். நிறைய பணத்தை நன்கொடையாக வாங்கி வாரி இறைக்கலாம். ஆனால் நம்மில் நிரலெழுத தயாராக இருக்கும் தன்னார்வலர் இல்லை என்றால் பயன் ஏதும் இருக்காது.

தமிழ் நிரலாளர்கள் ஏன் பங்களிப்பு செய்ய முடியவில்லை என்ற கேள்விக்கு நிறுவணம் இல்லை, பணம் இல்லை என்பதெல்லாம் வெற்று சாக்குப் போக்கு மட்டுமே.

நாம் ஏன் கட்டற்ற மென்பொருட்களுக்கு பங்களிக்க முடியவில்லை என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டாலே நமக்கு விடை தெரியும்.

- முகுந்த்
 

2012/5/16 Amachu <rama...@amachu.net>






--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To post to this group, send an email to freetamilcomputing@googlegroups.com.
To unsubscribe from this group, send email to freetamilcomputing+unsub...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/freetamilcomputing?hl=en-GB.

Amachu

unread,
May 16, 2012, 11:25:47 AM5/16/12
to freetamil...@googlegroups.com
On 05/16/2012 05:21 PM, Muguntharaj Subramanian wrote:
> இன்னும் பத்து அமைப்பைக் கூட நாம் நிறுவலாம். நிறைய பணத்தை நன்கொடையாக வாங்கி வாரி
> இறைக்கலாம். ஆனால் நம்மில் நிரலெழுத தயாராக இருக்கும் தன்னார்வலர் இல்லை என்றால் பயன்
> ஏதும் இருக்காது.
>
> தமிழ் நிரலாளர்கள் ஏன் பங்களிப்பு செய்ய முடியவில்லை என்ற கேள்விக்கு நிறுவணம் இல்லை,
> பணம் இல்லை என்பதெல்லாம் வெற்று சாக்குப் போக்கு மட்டுமே.
>
> நாம் ஏன் கட்டற்ற மென்பொருட்களுக்கு பங்களிக்க முடியவில்லை என்று நம்மை நாமே
> கேட்டுக்கொண்டாலே நமக்கு விடை தெரியும்.

இக்கருத்தை தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளதை அறிவேன். நிரலாக்கம் மட்டும்
பணியல்ல. மொழிபெயர்ப்பு எனப் பல துறைகளுக்கு கண்ணோட்டம் விரிகிறது.

கடந்த சில ஆண்டுகளாய் மாணவர்களோடு இணைந்து பணியாற்றி அவர்களை பங்களிக்க வைத்து அவர்கள்
திறம்பட பங்களிக்கும் தருணங்கள் அவை மங்கிக் குறைந்திடும் நேரங்களை உணர்ந்தே சொல்கிறேன்.

நிறைய பல கட்டற்ற அமைப்புகள் உருவாக வேண்டும். தனியாக பங்களிக்கத் தொடங்கும் யாரும்
தங்களால் அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டு நடத்தப் பட வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

இன்று கோட்பாடுகளை அரசிடம் வலியுறுத்தக் கூட வாலன்டியராகத் தான் செயல்பட
வேண்டியிருக்கிறது. அமைப்பாக திரளும் போது அதன் பிரபாவமே தனி. உருவாக்கத்திலும்
ஏனையவற்றிலும்.

--


ஆமாச்சு

த*உழவன்

unread,
May 16, 2012, 12:25:07 PM5/16/12
to ThamiZha! - Free Tamil Computing(FTC)
அதற்குரிய மொழிபெயர்ப்பு பிரிவில் என்னால் இயன்றஅளவு பங்களிக்க
விரும்புகிறேன். வழிகாட்டுக. வணக்கம்.

Muguntharaj Subramanian

unread,
May 16, 2012, 5:54:04 PM5/16/12
to freetamil...@googlegroups.com


2012/5/17 Amachu <rama...@amachu.net>

 

கடந்த சில ஆண்டுகளாய் மாணவர்களோடு இணைந்து பணியாற்றி அவர்களை பங்களிக்க வைத்து அவர்கள் திறம்பட பங்களிக்கும் தருணங்கள் அவை மங்கிக் குறைந்திடும் நேரங்களை உணர்ந்தே சொல்கிறேன்.

ஏற்கணவே நீங்கள் மாணவர்களை பங்களிக்கவைத்து மங்கிப்போன போன கட்டற்ற மென்பொருட்ளின் நிரல்களில் பட்டியலை, வலைத்தள சுட்டிகளை அளிக்க முடியுமா ?
அந்த தகவல் கிடைத்தால் நம்மில் சிலர் அவற்றை தொடர வாய்ப்புள்ளது.

அன்புடன்,
முகுந்த்



R.KATHIRVEL CSE PMU

unread,
May 16, 2012, 9:58:20 PM5/16/12
to freetamil...@googlegroups.com
வருத்தமாகத்தான் இருக்கிறது.  செயல்பாடுகளை முன்னெடுத்துச் சென்றால், நான் கண்டிப்பாக பங்களிக்கிறேன். ஒரு பொறியியல் மாணவன் என்ற முறையில் கூறுகிறேன், மாணவர்களிடம் கட்டற்ற மென்பொருள்களைப் பற்றிய விழிப்புணர்வும், அதன் பயனும், உரிம மென்பொருள்களுக்கு பின்னால் உள்ள அரசியல் பின்புலமும் பற்றி விழிப்புணர்வும் கொஞ்சம் கூட இல்லை.  இரண்டாவது  கல்லூரியில் படிக்கும் காலங்களிலேயே இத்தகைய விழிப்புணர்வுகளைக் கொடுக்க வேண்டும் ஆனால் தவறு செய்துக்கொண்டிருக்கிறோம்.  மென்பொருள்களை தமிழிலும் பயன்படுத்த லாமா என்று வியப்புடன் என்னுடைய சக தோழர்கள் கேட்கும் பொழுது மனதிற்கு கொஞ்சம் கவலையாகத் தான் இருக்கிறது.   முதழில் ஏன் மென்பொருள்களை தமிழாக்கம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.

நாமெல்லாம் ஒன்றாக இணைந்து இதை முன்னெடுத்துச் செல்வோம்.  என்னால் முடிந்த பங்களிப்பை நிச்சயம் நான் கொடுக்கிறேன். வழிமுறைகள் என்ன என்று கூறினால்.

2012/5/17 Muguntharaj Subramanian <mug...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To post to this group, send an email to freetamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to freetamilcomput...@googlegroups.com.

Amachu

unread,
May 17, 2012, 12:44:29 AM5/17/12
to freetamil...@googlegroups.com
On 05/17/2012 03:24 AM, Muguntharaj Subramanian wrote:
ஏற்கணவே நீங்கள் மாணவர்களை பங்களிக்கவைத்து மங்கிப்போன போன கட்டற்ற மென்பொருட்ளின் நிரல்களில் பட்டியலை, வலைத்தள சுட்டிகளை அளிக்க முடியுமா ?


நதியா - https://launchpad.net/~tamcal
நாகராஜா - https://launchpad.net/~tamilocr
சுஜி & மாலதி - https://launchpad.net/~tamilfontsteam
செல்வம் பின்னர் சரண்யா, சரண்யா -
http://itsmeselvam.blogspot.in/2008/08/centralised-tamil-spell-checker-for.html


இவை தவிர தி. வாசுதேவனின் பொறுப்பிலிருக்கும் குநோம், ஸ்போக்கன் டுடோரியல்
நானும் பொறுப்பு வகிக்கும் - கேடீயீ - பெடோரா - உபுண்டு - குனு தமிழாக்கம்.
ஸ்ரீநி பொறுப்பு வகிக்கும் கணியம்
அருண் பொறுப்பு வகிக்கும் பயர்பாக்ஸ் (நீங்கள் குறிப்பிட்டது)


அந்த தகவல் கிடைத்தால் நம்மில் சிலர் அவற்றை தொடர வாய்ப்புள்ளது.


பிரச்சனை ஆட்கள் இல்லை. அப்படி முனவருகிற போது இப்படி செய்ய வேண்டும் என்ற சரியான வழிகாட்டுதல் போதாமல் இருக்கிறது.

டெபியனுக்கு/ பெடோராவுக்கு ஒருவர் பங்களிக்க வரும் போது முதலில் அதை படித்து வா. பின்னர் ஒரு மென்டரை தேர்வு செய் - என்று வழிகாட்டி நடத்த ஆவணங்கள் பல உள்ளன.

அது போல் இருப்பது பணிகள் கட்டுக் கோப்பாய் நடைபெற வழி செய்யும். நீ நேரம் கிடைக்கும் போது செய். நானும் கிடைக்கற நேரத்தில் என்ன செய்ய முடிகிறதென்று பார்க்கிறேன் எனும் போது சறுக்கல்கள் வருகின்றன.

--

ஆமாச்சு

Muguntharaj Subramanian

unread,
May 17, 2012, 2:01:30 AM5/17/12
to freetamil...@googlegroups.com


2012/5/17 Amachu <rama...@amachu.net>

On 05/17/2012 03:24 AM, Muguntharaj Subramanian wrote:
ஏற்கணவே நீங்கள் மாணவர்களை பங்களிக்கவைத்து மங்கிப்போன போன கட்டற்ற மென்பொருட்ளின் நிரல்களில் பட்டியலை, வலைத்தள சுட்டிகளை அளிக்க முடியுமா ?


நதியா - https://launchpad.net/~tamcal
நாகராஜா - https://launchpad.net/~tamilocr
சுஜி & மாலதி - https://launchpad.net/~tamilfontsteam
செல்வம் பின்னர் சரண்யா, சரண்யா -
http://itsmeselvam.blogspot.in/2008/08/centralised-tamil-spell-checker-for.html



மேற்கூறிய நான்கு சுட்டிகளுக்கு நன்றி. நம் குழுவில் இருப்போர்  யாருக்கேனும் இதில் ஆர்வம் ஏற்படலாம்.


 
இவை தவிர தி. வாசுதேவனின் பொறுப்பிலிருக்கும் குநோம், ஸ்போக்கன் டுடோரியல்
நானும் பொறுப்பு வகிக்கும் - கேடீயீ - பெடோரா - உபுண்டு - குனு தமிழாக்கம்.
ஸ்ரீநி பொறுப்பு வகிக்கும் கணியம்
அருண் பொறுப்பு வகிக்கும் பயர்பாக்ஸ் (நீங்கள் குறிப்பிட்டது)


மேலேயுள்ளவைகளுக்கும் சுட்டிகள் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். அதே போல் சம்மந்தப்பட்ட நண்பர்கள் ஏன் கைவிட்டார்கள் எம் தெரிந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
கட்டற்ற மென்பொருள் திட்டங்களின் வலைதளங்களில் சம்மந்தபட்ட அனைத்து விபரங்களை யும் குறிப்பிடவேண்டும். அதுவே திட்டத்தின் தொடர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

 

அந்த தகவல் கிடைத்தால் நம்மில் சிலர் அவற்றை தொடர வாய்ப்புள்ளது.


பிரச்சனை ஆட்கள் இல்லை. அப்படி முனவருகிற போது இப்படி செய்ய வேண்டும் என்ற சரியான வழிகாட்டுதல் போதாமல் இருக்கிறது.


இதற்கு நம் மடலாடற்குழு, நேரடி சந்திப்புகள் போன்றவை உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். நமக்கத் தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்ள இவை உதவும்.

Manickkavasakam

unread,
May 17, 2012, 2:02:55 AM5/17/12
to freetamil...@googlegroups.com
வணக்கம் ,

அமாச்சு,

நிறைய பல கட்டற்ற அமைப்புகள் உருவாக வேண்டும். தனியாக பங்களிக்கத் தொடங்கும் யாரும் தங்களால் அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டு நடத்தப் பட வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

இன்று கோட்பாடுகளை அரசிடம் வலியுறுத்தக் கூட வாலன்டியராகத் தான் செயல்பட வேண்டியிருக்கிறது. அமைப்பாக திரளும் போது அதன் பிரபாவமே தனி. உருவாக்கத்திலும் ஏனையவற்றிலும்.


அமைப்புகள் நிச்சயம் தேவைதான். அமைப்புக்கு அடித்தளம் செயல். தொடர்ச்சியான செயல்பாடுகளும் அதன் வழியில் வரக்கூடிய போதாமைகளும் தான் அமைப்பின் உருவாக்கத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும். அப்படிப் பட்ட அமைப்புகள்தான் நீடித்த சரியான வழியில் செயல்களை செய்யும். சுருக்கமா சொன்னா, சட்டில இருந்தா தான் அகப்பைல வரும். சட்டில சரக்கு வேணும். ;)

கட்டற்ற மென் பொருளுக்காக வேலை செய்யும் எல்லோரும் அமைப்பு ஆரம்பிச்சிட்டு தான் வேலை செய்யனும்னா அமைப்பகள் தான் அதிகமா இருக்கும்.

- மாணிக்

Amachu

unread,
May 17, 2012, 2:47:39 AM5/17/12
to freetamil...@googlegroups.com
On 05/17/2012 11:32 AM, Manickkavasakam wrote:
> அமைப்புகள் நிச்சயம் தேவைதான். அமைப்புக்கு அடித்தளம் செயல். தொடர்ச்சியான
> செயல்பாடுகளும் அதன் வழியில் வரக்கூடிய போதாமைகளும் தான் அமைப்பின் உருவாக்கத்திற்கு
> இட்டுச் செல்ல வேண்டும்.

ஆம்.

> அப்படிப் பட்ட அமைப்புகள்தான் நீடித்த சரியான வழியில் செயல்களை செய்யும். சுருக்கமா
> சொன்னா, சட்டில இருந்தா தான் அகப்பைல வரும். சட்டில சரக்கு வேணும். ;)

பெரும்பாலும் அமைப்புகளின் வீரியம் அதிகபட்சம் ரெண்டு தலைமுறை. அதுக்கப்பறம் அதை
ஏற்படுத்தியோர் சேர்த்த சொத்து சுகம் புகழுக்கே எல்லாரும் அடித்துகொள்வர் ;-) நிற்க.

ஆனாலும் முனைந்து பங்களிப்போர் தொடர்ந்து இதனைச் செய்ய வேண்டும். செய்ய முன்வர வேண்டும்.

But, I am substantiating my claims with evidences and not sweeping
statements.

GNU - Free Software Foundation
Linux - Linux Foundation
GNOME - GNOME Foundation
KDE - KDE Foundation
Fedora - Redhat
Ubuntu - Canonical
Apache - Apache Software Foundation
Wikipedia - Wikimedia Foundation
Debian - Software in Public Interest
Drupal - Drupal Foundation

Don't miss the point I am trying to make out amidst generic sweeping
claims.

How many we have for Free Software? In India?

>
> கட்டற்ற மென் பொருளுக்காக வேலை செய்யும் எல்லோரும் அமைப்பு ஆரம்பிச்சிட்டு தான் வேலை
> செய்யனும்னா அமைப்பகள் தான் அதிகமா இருக்கும்.

அப்படியல்ல. அதிக ஆற்றலுடையோர் அதைச் செய்ய முன்வர வேண்டும் என்பதே விருப்பம்.

Amachu

unread,
May 17, 2012, 2:50:04 AM5/17/12
to freetamil...@googlegroups.com
On 05/17/2012 11:31 AM, Muguntharaj Subramanian wrote:
> அதே போல் சம்மந்தப்பட்ட நண்பர்கள் ஏன் கைவிட்டார்கள் எம் தெரிந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

may be, priority to their career that earns them their living.

Amachu

unread,
May 17, 2012, 3:00:17 AM5/17/12
to freetamil...@googlegroups.com
On 05/16/2012 09:55 PM, த*உழவன் wrote:
> அதற்குரிய மொழிபெயர்ப்பு பிரிவில் என்னால் இயன்றஅளவு பங்களிக்க
> விரும்புகிறேன். வழிகாட்டுக. வணக்கம்.

கேடிஇக்கு சொல்கிறேன்.

குபுண்டு - http://www.kubuntu.org/getkubuntu/download நிறுவிக்கொள்ளுங்கள்.
கேடிஇ கல்வயில் கிடைக்கும் பயன்பாடுகளை நிறுவி பயன்படுத்துங்கள் பழகுங்கள் -
http://edu.kde.org/
பின்னர் மொழிபெயர்க்க வழிகள் தருகிறேன். மொழிபெயர்ப்பதோடு தொடர்ச்சியாக பராமரித்து
வாருங்கள்.
#yavarkkum என்ற IRC அரங்கில் இருப்பேன். இணையுங்கள். http://webchat.freenode.net/

--

ஆமாச்சு



Manickkavasakam

unread,
May 17, 2012, 3:41:58 AM5/17/12
to freetamil...@googlegroups.com
Hi Amachu,

Are these tools will be useful for teachers/educators to teach especially Maths?

- Manikk

2012/5/17 Amachu <rama...@amachu.net>


--

ஆமாச்சு



Reply all
Reply to author
Forward
0 new messages