தமிழ் ஆர்வலர்கள் கவனத்திற்கு

7 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Jan 2, 2024, 3:51:25 PMJan 2
to
வணக்கம்,
தமிழ் விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டமான தமிழ் விக்கிநூல், தமிழ் விக்கிமேற்கோள், தமிழ் விக்கிசெய்தி ஆகியவை பங்களிப்பாளர்கள் இன்றி நிறுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இத்தகைய கட்டற்ற திட்டம் நிறுத்தப்பட்டால் மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவது கடினமாகும். தொடர்ந்து தமிழ்ச் சமூகம் இத்திட்டங்களில் பங்களித்து /பயன்டுத்தினால் நிறுத்தக் கோரிக்கை கைவிடப்படும். எனவே ஆர்வமுள்ளவர்கள் இதில் எழுதலாம். 

விக்கிநூல் என்பது உலகில் உள்ள எந்தத் தகவல் பற்றியும் வழிகாட்டல்களையோ, பாடங்களைவோ கையேடாகவோ உருவாக்க உதவும் தளம்.

விக்கிமேற்கோள் என்பது புகழ்பெற்றவர்கள், புத்தகங்கள், திரைப்படங்கள் முதலியவற்றின் பொன்மொழிகள், பழமொழிகள், வசனங்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தும் தளம். 

விக்கிசெய்தி என்பது முக்கிய நாட்டு நடப்பை பக்கச்சார்பின்றி ஆவணப்படுத்தும் தளம்.

ஆர்வமுள்ளவர்கள் இத்திட்டங்களில் பங்களிக்கலாம். உதவியோ பயிற்சியோ வேண்டினால் அதை வழங்க ஏற்பாடு செய்கிறோம்.

--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages