கணினித் தமிழ் நூல்கள்

44 views
Skip to first unread message

நீச்சல் காரன்

unread,
Oct 4, 2021, 12:41:39 PM10/4/21
to கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், ThamiZha! - Free Tamil Computing(FTC), தஇக - கணித்தமிழ் வளர்ச்சி
வணக்கம்,
கல்லூரிகளில் உள்ள கணித்தமிழ்ப் பேரவை கணினி, இணையம் சார்ந்த தமிழ் நூல்களைத் தங்கள் மாணவர்களுக்காக வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டும், பொதுவான ஆர்வலர்களுக்கு உதவும் பொருட்டும், அச்சில் வந்த கணினித் தமிழ் நூல்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. இது கட்டற்ற உரிமையில் இத்தொகுப்பு கிட்ஹப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 


உங்களுக்குத் தெரிந்த கணினித் தமிழ் சார்ந்த அச்சு நூல்களைப் பரிந்துரைக்கலாம். இங்குள்ள நூல்களை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யலாம். 


--
அன்புடன்,
நீச்சல்காரன்

த*உழவன்

unread,
Oct 5, 2021, 2:05:17 AM10/5/21
to நீச்சல் காரன், கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், ThamiZha! - Free Tamil Computing(FTC), தஇக - கணித்தமிழ் வளர்ச்சி
வணக்கம்.
//இது கட்டற்ற உரிமையில் இத்தொகுப்பு கிட்ஹப்பில் வெளியிடப்பட்டுள்ளது. // மட்டற்ற மகிழ்ச்சி. அதற்குரிய 'கிட்அப்' இணைப்பும், இதுவரை இக்கருவித் தொகுத்துள்ள மூல இணையத்தளக் குறிப்புகளும் இருப்பின், நூல் தேடுவோர் அத்தளங்களில் இரண்டாம் முறையாகத் தேடுவதைத் தவிர்ப்பீர். மேலும், இம்முயற்சியில் முன்பு, இதுவரை தொகுக்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கையைக் காட்டியது. அதனைத் தொடர்ந்து பேணுக. இணையக் குழுமங்களிலும், விக்கி மேலாண்மையிலும் உரையாடப் பயனாகும். இக்கருவியினைக் கொண்டும், கணியம் அறக்கட்டளையினரின் https://sangaelakkiyam.org/ என்ற தளத்தினைக் கொண்டும். ஆகத்து மாதம் 14 நூல்களை விக்கி விதிகளுக்கு ஒப்ப பொதுவகத்தில் ஏற்றி, தமிழ் விக்கிமூலத்தில் மேம்படுத்த திட்டபக்கமொன்றினை உருவாக்கியுள்ளேன். விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள் : https://ta.wikisource.org/s/agkv அவற்றின் முதல் நூலானது வ. உ. சி. சிறையில் இருந்தபோது, கைப்படியாக எழுதியது. அவற்றைத் தொகுத்து அவர் மகன் வெளியிட்டுள்ளார். அதில் 80 % பணி முடிவடைந்துள்ளது. அதிலுள்ளபடி தமிழ் எண்கள் இப்பொழுது இல்லை என்பதை அறிந்து வருத்தமடைந்தேன். இப்பொழுது 'ரு'என்பதை 5 என்கின்றனர். ஆனால் அது அப்படியல்ல.  பிறகு தொடர்வோம். 
இத்தகையத் முன்னெடுப்பை விக்கிமூலத்தில் தொடங்க உங்கள் கருவி உந்துதலைத் தந்தது. 



-தகவலுழவன்
Wikimedia-User-Name: Info-farmer  Mobile:+91 9095343342



திங்., 4 அக்., 2021, பிற்பகல் 10:11 அன்று, நீச்சல் காரன் <neecha...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தஇக - கணித்தமிழ் வளர்ச்சி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tva_kanitamil_val...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tva_kanitamil_valarchi/CACir7Or_LDkDSw1vat5UuD91CMM-Hw6c4yQy_v17POYzYA4Bbg%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages