கணியம் – இதழ் 16

10 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Apr 30, 2013, 2:13:35 PM4/30/13
to freetamil...@googlegroups.com, mint...@googlegroups.com, ilugc...@ae.iitm.ac.in, tamil-inaiya...@googlegroups.com
http://www.kaniyam.com/release-16/

வணக்கம்.

‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உபுண்டு லினக்ஸின் அண்மைய பதிப்பான 13.04(Raring Ringtail)
25-ஏப்ரல்-2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

தரவிறக்கம் செய்ய: http://www.ubuntu.com/download/desktop

உபுண்டு 13.04 பதிப்பில் பலவிதமான மாற்றங்கள் செய்து வெளியிட்டுள்ளனர்.
உபுண்டு 12.10 பதிப்பைக் காட்டிலும் வேகமாக செயல்படும் விதத்தில்
மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Getting Started With Ubuntu :என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளது
http://ubuntu-manual.org/

உலகெங்கும் உள்ள உபுண்டு லினக்ஸ் பயனர்கள் இதன் வெளியீட்டு விழா ஒன்றை
நடத்துகின்றனர். இதன் மூலம் பல புதிய பயனர்கள் லினக்ஸ் பற்றி அறியும்
வாய்ப்பு ஏற்படுகிறது. உங்கள் ஊரிலும் ஒரு உபுண்டு லினக்ஸ் வெளியீட்டு
விழா நடத்தலாமே. உதவிக்கு எங்களை அழைக்கவும்.

தமிழுக்கான சொற்கோவை Corpus உருவாக்கும் பணி செவ்வனே தொடங்கி உள்ளது.
Ruby on Rails மொழியில் உருவாகும் இந்த ‘சொற்கண்டு’ மென்பொருளின்
வளர்ச்சியை இங்கே காணலாம் http://sorkandu.herokuapp.com/

இதற்கான மடலாடற்குழு:
https://lists.sourceforge.net/lists/listinfo/sorkandu-discussions/
திட்ட மேலாண்மை : https://sourceforge.net/p/sorkandu/
மூல நிரல்: https://github.com/mindaslab/tamil_corpus

இந்த மென்பொருளை உருவாக்கி வரும் கார்த்திக் [mind...@gmail.com]
அவர்களுக்கு நன்றிகள் விரைவில் தனி தளத்தில் சொற்கண்டு உங்கள்
பங்களிப்புகளுக்கு தயாராகிவிடும்.

இந்த இதழை கிண்டில், ஐபேட் , டேப்லட் போன்ற மின் புத்தக கருவிகளிலும்
படிக்கும் வகையில் 6″ pdf, epub , azw ஆகிய வடிவங்களிலும் அளிக்கிறோம்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில்
வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து
கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக
ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும்
www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை
யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட
வேண்டும்.

நன்றி.

ஸ்ரீனி ஆசிரியர், கணியம் edi...@kaniyam.com



பொருளடக்கம்

எளிய தமிழில் WordPress

எளிய செய்முறையில் C – பாகம் 5

S.M.A.R.T (Self Monitoring, Analysis and Reporting Technology)

Vim File Editor – Vim உரை திருத்தி

உபுண்டு லினக்ஸ் ஏன் பாடுவதில்லை?

எச்.டி.எம்.எல் 5 பட விளக்கம்(5)

பைதான் – 9

ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள்

கணியம் வெளியீட்டு விவரம்

கணியம் பற்றி…

--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge

திவாஜி

unread,
Apr 30, 2013, 11:40:46 PM4/30/13
to freetamilcomputing
2013/4/30 Shrinivasan T <tshrin...@gmail.com>:
> உபுண்டு 13.04 பதிப்பில் பலவிதமான மாற்றங்கள் செய்து வெளியிட்டுள்ளனர்.
> உபுண்டு 12.10 பதிப்பைக் காட்டிலும் வேகமாக செயல்படும் விதத்தில்
> மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.


:-))
ஒரு வேகத்தையும் காணோம். சீக்கிரம் ஷட் டவுன் ஆகிறது. பெரிசா புதுசா ஒண்ணுமில்லை.

--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
May 6, 2013, 4:37:07 AM5/6/13
to freetamilcomputing

2013/5/1 திவாஜி <agni...@gmail.com>

2013/4/30 Shrinivasan T <tshrin...@gmail.com>:
> உபுண்டு 13.04 பதிப்பில் பலவிதமான மாற்றங்கள் செய்து வெளியிட்டுள்ளனர்.
> உபுண்டு 12.10 பதிப்பைக் காட்டிலும் வேகமாக செயல்படும் விதத்தில்
> மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.


:-))
ஒரு வேகத்தையும் காணோம்.

12.10 ஐ விட தொடங்கும் வேகம் சற்று கூடுதலாகத்தான் தெரிகிறது
 
சீக்கிரம் ஷட் டவுன் ஆகிறது.

தாங்கள் முன்னைய வெளியீட்டிலிருந்து upgrade செய்தீர்களா அல்லது புதிதாக நிறுவினீர்களா?

நான் புதிதாக தனி வகிர்வில் நிறுவியுள்ளேன். "ஷட் டவுன்" பிரச்சினை இதுவரை ஏற்படவில்லை. ஆனால் சில வேளைகளில் (ஓர் அமர்வில் ஒரு தடவை) "Sorry, Ubuntu 13.04 has experienced an internal error"  போல் Apport அறிவிப்பு வந்தது - ஏன் என இனிதான் கண்டறிய வேண்டும்.


பெரிசா புதுசா ஒண்ணுமில்லை.


வேகம் கூடியிருப்பதற்கான காரணங்களையும் கணியம் ஆசிரியர் எடுத்துரைப்பது நன்று.

நான் மேலோட்டமாகக் கணட சில குறிப்புகளில் சில முக்கிய பயன்பாடுகளில் முன்னைய வெளியீட்டில் இருந்த Memory Leaks வழுக்கள் நீக்கப்பட்டுளதாகவும் அதனால் வேகம் கூடுயிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

எனது கணினியில் இந்த வெளியீடு முன்னரைவிட விரைவானது போலத்தான் தெரிகிறது.

ஆனால் முக்கியமாக இந்த 13.04 முதல் LTS இல்லாத இடைக்கால வெளியீடுகளின் வாழ்க்கைக்காலம் பற்றி உபுண்டு தொழிநுட்பக்குழு (Technical Board) எடுத்துள்ள முடிவுகள் பற்றி யாவரும் அறிந்திருக்க வேண்டும்.  இதைப்பாருங்கள்:

http://fridge.ubuntu.com/2013/03/19/ubuntu-technical-board-looks-at-shuttleworths-proposal-for-release-management-methodology/

முன்னர் இடைக்கால வெளியீடு (interim release) எனக் குறிப்பிடப்பட்ட  non-LTS வெளியீடுகள் இனி சீரதர வெளியீடு (standard release) எனவே குறிப்பிடப்படும்.

மேலும் 13.04 க்கும் வரும் காலத்தில் வரும் அத்தகைய சீர்தர வெளியீடுகளுக்கும் அவர்கள் துணை (Support) வழங்கப்போவது 18 மாதங்களுக்குப் பதில் 9 மாங்களுக்கு மட்டுமே. ஒரு வெளியீடின் 6 மாதத்திற்குப் பின் வரும் அடுத்த வெளியீட்டுக்கு அதன் பின் 3 மாதங்களுக்குள் தானியக்கமாக மேம்படுத்தும் விதமாக ஒருவகை "Rolling Releases" முறைமைக்குச் செல்லப்போவதாக அப்பதிவில் குறிபிட்டுள்ளனர்.

(remaster) மீளாக்கங்களுக்கும் அல்லது புதிய உபுண்டு பயனர்களுக்கு பரப்புதலுக்கும் LTS எனப்படும் 12.04 முதல் 5 வருடங்களுக்கு துணை கள் வழங்கப்படும் வெளியீடுகளைப் பயன்படுத்துவதே சிறந்த அணுகுமுறை என நான் குருவதில் யாவரும் உடன்படுவர் என எதிர்பார்க்கிறேன்.

உபுண்டுவின் வெளியீடுகளும் துணைகள் வழங்கப்படும் கால அட்டவணைகள் பின்வரும் பக்கத்தில் காணலாம்: https://en.wikipedia.org/wiki/List_of_Ubuntu_releases
   
 ~சேது

Shrinivasan T

unread,
May 6, 2013, 7:42:29 AM5/6/13
to freetamil...@googlegroups.com
>
> வேகம் கூடியிருப்பதற்கான காரணங்களையும் கணியம் ஆசிரியர் எடுத்துரைப்பது நன்று.

க ருத்துகளுக்கு நன்றி. பல புதிய தகவல்களை அளிக்க ஆசைதான். ஆனால்
கணியம் இதழ், போதிய கட்டுரைகளும் எழுத்தாளர்களும் இன்றி, ஒவ்வொரு மாதமும்
வெளிவர மிகவும் தாமதம் ஆகிறது.

நீங்களும் கணியத்திற்கு கட்டுரைகள் எழுதி உதவலாமே.

நன்றி.

ஸ்ரீனி

Reply all
Reply to author
Forward
0 new messages