கூகிள் குரோமுக்கான தமிழ்விசை நீட்சி 0.1 முன் வெளியீடு

39 views
Skip to first unread message

Gopalakrishnan (Gopi)

unread,
Sep 20, 2011, 11:04:54 AM9/20/11
to freetamil...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம்,

இத்துடன் கூகிள் குரோமுக்கான தமிழ்விசை நீட்சி 0.1 முன் வெளியீட்டுக் கோப்பினை இணைத்துள்ளேன். இந்த வெளியீட்டில் (twitter, facebook போன்ற) எளிய உரைப் (Plain Text) பெட்டியில் மட்டுமே தமிழ் தட்டச்சு இயங்கும். இவ்வெளியீட்டைக் கொண்டு (Gmail, Yahoo Mail போன்ற) செறிவுரைப்(Richtext) பெட்டியில் தமிழ் தட்டச்சு செய்ய இயலாது.

Chrome/Webkit உலாவியில் initKeyboardEvent என்ற மிகத் தேவையான javascript function சரியான வகையில் நிரலாக்கப்படவில்லை.இந்த javascript function நம்முடைய நீட்சியில் தட்டச்சிடும் ஆங்கில எழுத்துக்கு நிகரான தமிழ் எழுத்தை உலாவியளவில் உள்ளீடு மாற்றம் செய்யப் பயன்படுகிறது. இந்த வழு குறித்த மேலதிக தகவலுக்குப் பார்க்க: http://code.google.com/p/chromium/issues/detail?id=27048 மற்றும் https://bugs.webkit.org/show_bug.cgi?id=16735

இந்தச் சிக்கலுக்கு மாற்றாக இந்த வெளியீட்டின் நிரலில் தகடூர் தமிழ் மாற்றியில் பயன்படுத்திய உத்தியைக் கையாண்டுள்ளேன். (எனவே தான் தகடூர் தமிழ் மாற்றியைப் போலவே இந்த வெளியீட்டிலும் செறிவுரைப்(Richtext) பெட்டியில் தமிழ் தட்டச்சு செய்ய இயலவில்லை)

Chrome/Webkit உலாவியில் initKeyboardEvent சரியான வகையில் நிரலாக்கப்படும் வரை செறிவுரைப்(Richtext) பெட்டியில் தமிழ் தட்டச்சு செய்ய மாற்று வழிகள் ஏதும் உள்ளதா என ஆராய்ந்து வருகிறேன். அத்தகைய வழிகள் ஏதும் அறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

இந்த வெளியீட்டில் பாமினி, அஞ்சல், தமிழ் 99, தமிழ் தட்டச்சு ஆகிய விசைப்பலகை முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

பயன்படுத்திப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் வழுக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

இனிமையுடன்,

கோபி
chrometamilkey.crx

Mugunth

unread,
Sep 20, 2011, 8:12:05 PM9/20/11
to ThamiZha! - Free Tamil Computing(FTC)
வாழ்த்துக்கள் கோபி,
சிறப்பான முயற்சி. தற்போது குரோம் தமிழ்விசை நீட்சையைக் கொண்டு நேரடியாக
குழுவின் வலைப்ப‍த்திலிருந்து தட்ட‍ச்சுகுறேன். சிறப்பாக இயங்குகிறது.

இத்திட்ட‍த்தின் மூல நிரலை https://github.com/thamizha/chrome-tamilvisai
இல் இற்றைப்ப‍டுத்திவிடவும். (கிட்ஹப்பில் மாற்ற‍ங்கள் செய்ய‍ செய்ய‍
இற்றைப்ப‍டுத்திகொண்டே இருப்ப‍து நல்ல‍து)

என்னுடைய‌ பரிந்துரைகள்:
1. விரைவில் richtext editorகளில் தட்ட‍ச்சு செய்ய‍ வழி செய்ய வேண்டும்.
2. விசைப்ப‍லகளுக்கான shortcut களை நாமே தெரிவு செய்ய‍ வசதி வேண்டும்.
3. முடிந்தால் mouse right click செய்து தட்ட‍ச்சு பலகையை மாற்ற‍ வழி
செய்யவும் (பயர்பாக்ஸ் தமிழ்விசையில் இருப்ப‍து போல்).

சிறந்த முயற்சி, மற்ற‍ உறுப்பிணர்கள் பங்கெடுக்க வசதியாக சில
உதவிக்கோப்புகளை https://github.com/thamizha/chrome-tamilvisai/wiki
இங்கு நீங்கள் எழுதினால் திட்ட‍த்தை வேகமாக முன்னெடுக்க‍ உதவும்.

அன்புடன்,
முகுந்த்


On Sep 21, 1:04 am, "Gopalakrishnan (Gopi)" <hig...@gmail.com> wrote:
> அனைவருக்கும் வணக்கம்,
>
> இத்துடன் கூகிள் குரோமுக்கான தமிழ்விசை நீட்சி 0.1 முன் வெளியீட்டுக் கோப்பினை
> இணைத்துள்ளேன். இந்த வெளியீட்டில் (twitter, facebook போன்ற) எளிய உரைப் (Plain
> Text) பெட்டியில் மட்டுமே தமிழ் தட்டச்சு இயங்கும். இவ்வெளியீட்டைக் கொண்டு
> (Gmail, Yahoo Mail போன்ற) செறிவுரைப்(Richtext) பெட்டியில் தமிழ் தட்டச்சு
> செய்ய இயலாது.
>
> Chrome/Webkit உலாவியில் initKeyboardEvent என்ற மிகத் தேவையான javascript
> function சரியான வகையில் நிரலாக்கப்படவில்லை.இந்த javascript function நம்முடைய
> நீட்சியில் தட்டச்சிடும் ஆங்கில எழுத்துக்கு நிகரான தமிழ் எழுத்தை உலாவியளவில்
> உள்ளீடு மாற்றம் செய்யப் பயன்படுகிறது. இந்த வழு குறித்த மேலதிக தகவலுக்குப்

> பார்க்க:http://code.google.com/p/chromium/issues/detail?id=27048மற்றும்https://bugs.webkit.org/show_bug.cgi?id=16735


>
> இந்தச் சிக்கலுக்கு மாற்றாக இந்த வெளியீட்டின் நிரலில் தகடூர் தமிழ் மாற்றியில்
> பயன்படுத்திய உத்தியைக் கையாண்டுள்ளேன். (எனவே தான் தகடூர் தமிழ் மாற்றியைப்
> போலவே இந்த வெளியீட்டிலும் செறிவுரைப்(Richtext) பெட்டியில் தமிழ் தட்டச்சு
> செய்ய இயலவில்லை)
>
> Chrome/Webkit உலாவியில் initKeyboardEvent சரியான வகையில் நிரலாக்கப்படும் வரை
> செறிவுரைப்(Richtext) பெட்டியில் தமிழ் தட்டச்சு செய்ய மாற்று வழிகள் ஏதும்
> உள்ளதா என ஆராய்ந்து வருகிறேன். அத்தகைய வழிகள் ஏதும் அறிந்தவர்கள் பகிர்ந்து
> கொள்ள வேண்டுகிறேன்.
>
> இந்த வெளியீட்டில் பாமினி, அஞ்சல், தமிழ் 99, தமிழ் தட்டச்சு ஆகிய விசைப்பலகை
> முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
>
> பயன்படுத்திப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் வழுக்களையும் தெரிவிக்குமாறு
> கேட்டுக் கொள்கிறேன்
>
> இனிமையுடன்,
>
> கோபி
>

>  chrometamilkey.crx
> 22KViewDownload

Gopalakrishnan (Gopi)

unread,
Sep 21, 2011, 2:29:44 AM9/21/11
to freetamil...@googlegroups.com
நன்றி முகுந்த்,

இந்த முன்வெளியீட்டுக்கான நிரலுக்கு முந்தைய மாற்றம் வரை கிட்ஹப்பில் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முன் வெளியீட்டில் வழுக்கள் தெரிவிக்கப்பட்டால் அதற்கான நிரல் மாற்றம் செய்து பின் கிட்ஹப்பில் இற்றைப்படுத்தலாம் என எண்ணியிருந்தேன். இப்போதைய நிரல் வரை இன்றே இற்றைப் படுத்தி விடுகிறேன்.

உங்கள் பரிந்துரைகளை (நுட்ப வரையரை காரணமாக richtext  வழு தவிர) அடுத்தடுத்து நிரலாக்கம் செய்கிறேன்.

உதவிக்கோப்புகளையும் எழுத ஆரம்பிக்கிறேன்.

நன்றி


2011/9/21 Mugunth <mug...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To post to this group, send an email to freetamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to freetamilcomput...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/freetamilcomputing?hl=en-GB.


கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Sep 26, 2011, 4:33:35 AM9/26/11
to freetamil...@googlegroups.com
கோபி, முகுந்த், நண்பர்களே

குரோம் / குரோமியம் உலாவிகளுக்கும் தமிழ் விசையின் வருகை கண்டு மகிழ்ச்சி.

உபுண்டு 11.04 (யுனிட்டி மேசைத்தளம்) இல் குரோமியம் 12.0.742.112 (90304)
Ubuntu 11.04 வெளியீட்டில் சோதித்தேன்.

கோபி குறிப்பபிடும் செறிவுரைப் பெட்டிகளுள் Gmail இன் Compose
இடைமுகப்பும் அடங்கும் போல. அங்கு செறிவுரை வடிவமைப்பு (RTF)
பயன்படுத்தினாலும் எளியவுரை (Plain Text) பயன்படுத்தினாலும் தமிழ் விசை
செருகல் இயங்குவதில்லை.

அடுத்து சின்னமாகப் பயன்படுத்தப்படும் ஓவம் (icon) பற்றி:

1. விண்டோவில் எ-கலப்பை மற்றும் தமிழ்விசை ஆகியன தமிழா குழுமத்தினது எனப்
பொதுமையைக் காட்ட சின்னங்களில் ஒரு பொது உறுப்பு இருக்க வேண்டும் என்பது
ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் IME வசதிகளிலும் மற்றும் சில
விசைமாற்றங்களிலும் சில வேறுபாடுகள் இருப்பதால் ஒரே சின்னங்களை எல்லா
உள்ளிடல் முறைமைகளுக்கும் பொருத்துவதை தவிர்த்து மாறுபட்ட சின்னங்களை
(தமிழா பொதுமை உறுப்பாகா 'த' உம் உள்ளடக்கி) உருவாக்க வேண்டும் எனக்
கருதுகிறேன்.

2. எ-கலப்பையிலும் இச் செருகலிலும் உள்ள சின்னங்களில் 'த' வை
வட்டத்தினுள் நடுவில்லில்லாமல் சற்று கீழே வைக்கப்பட்டுள்ளதால் அது தி
போல காணப்படுவதை த*உழவன் சுட்டிக்காட்டியுள்ளார் (பார்க்க:
https://mail.google.com/mail/?shva=1#label/Freetamilcomputing/1322ac8b8ba3c23d
இல் கடைசியானது) - "த" வை வட்டத்தின் நடுவிற்கு நகர்த்தினால் நன்று என
நானும் கருதுகிறேன்.

~சேது

2011/9/21 Gopalakrishnan (Gopi) <hig...@gmail.com>:

Muguntharaj Subramanian

unread,
Sep 27, 2011, 2:29:18 AM9/27/11
to freetamil...@googlegroups.com
On Mon, Sep 26, 2011 at 6:33 PM, கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com> wrote:
அடுத்து சின்னமாகப் பயன்படுத்தப்படும் ஓவம் (icon) பற்றி:

1. விண்டோவில் எ-கலப்பை மற்றும் தமிழ்விசை ஆகியன தமிழா குழுமத்தினது எனப்
பொதுமையைக் காட்ட சின்னங்களில் ஒரு பொது உறுப்பு இருக்க வேண்டும் என்பது
ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் IME வசதிகளிலும் மற்றும் சில
விசைமாற்றங்களிலும் சில வேறுபாடுகள் இருப்பதால் ஒரே சின்னங்களை எல்லா
உள்ளிடல் முறைமைகளுக்கும் பொருத்துவதை தவிர்த்து மாறுபட்ட சின்னங்களை
(தமிழா பொதுமை உறுப்பாகா 'த' உம் உள்ளடக்கி) உருவாக்க வேண்டும் எனக்
கருதுகிறேன்.

 
நம் தமிழா சின்னமாக சிவப்பு வட்டத்தினுள்ள த வை பயன்படுத்துகிறோம்.  - http://code.google.com/p/ekalappai/logo இல் உள்ளது போல் . IMEக்களில் விசைப்பலகை மாற்றத்திற்கு ஏற்ப இதே சின்னத்தை வேறு நிறத்தில் காட்டலாம் (அப்படித்தான் எ-கலப்பையில் பயன்படுத்துகிறேன்).

வெவ்வேறு நிறத்திலும் (அளவிலும்) லோகோக்களை ஒரு இடத்தில் வலையேற்றவேண்டும்.

 
2. எ-கலப்பையிலும் இச் செருகலிலும் உள்ள சின்னங்களில் 'த' வை
வட்டத்தினுள் நடுவில்லில்லாமல் சற்று கீழே வைக்கப்பட்டுள்ளதால் அது தி
போல காணப்படுவதை த*உழவன் சுட்டிக்காட்டியுள்ளார் (பார்க்க:
https://mail.google.com/mail/?shva=1#label/Freetamilcomputing/1322ac8b8ba3c23d
இல் கடைசியானது) - "த" வை வட்டத்தின் நடுவிற்கு நகர்த்தினால் நன்று என
நானும் கருதுகிறேன்.


வட்டத்தின் ஓரத்தில் த இருப்பதுதான் இந்த ஓவத்தின்(logo) வடிவமைப்பிலுள்ள சிறப்புத்தன்மை என்று நினைத்தேன் :) -   நம் லோகோவை வடிவமைத்தவர் அருணன்.  அவரின் கருத்தை கேட்போம். முடிந்தளவு லோகோவை மாற்றாமல் இருக்க முயற்சிப்போம்.

அருணன்,
உங்கள் கருத்தை கூறவும்.



--
Blog: http://mugunth.blogspot.com
Follow me @ http://twitter.com/mugunth

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Sep 27, 2011, 2:50:53 AM9/27/11
to freetamil...@googlegroups.com
2011/9/27 Muguntharaj Subramanian <mug...@gmail.com>:

>
>
> On Mon, Sep 26, 2011 at 6:33 PM, கா. சேது | කා. සේතු | K. Sethu
> <skh...@gmail.com> wrote:
>>
>> அடுத்து சின்னமாகப் பயன்படுத்தப்படும் ஓவம் (icon) பற்றி:
>>
>> 1. விண்டோவில் எ-கலப்பை மற்றும் தமிழ்விசை ஆகியன தமிழா குழுமத்தினது எனப்
>> பொதுமையைக் காட்ட சின்னங்களில் ஒரு பொது உறுப்பு இருக்க வேண்டும் என்பது
>> ஏறுக்கொள்ளக்கூடியது. ஆனால் IME வசதிகளிலும் மற்றும் சில

>> விசைமாற்றங்களிலும் சில வேறுபாடுகள் இருப்பதால் ஒரே சின்னங்களை எல்லா
>> உள்ளிடல் முறைமைகளுக்கும் பொருத்துவதை தவிர்த்து மாறுபட்ட சின்னங்களை
>> (தமிழா பொதுமை உறுப்பாகா 'த' உம் உள்ளடக்கி) உருவாக்க வேண்டும் எனக்
>> கருதுகிறேன்.
>>
>
> நம் தமிழா சின்னமாக சிவப்பு வட்டத்தினுள்ள த வை பயன்படுத்துகிறோம்.  -
> http://code.google.com/p/ekalappai/logo இல் உள்ளது போல் . IMEக்களில்
> விசைப்பலகை மாற்றத்திற்கு ஏற்ப இதே சின்னத்தை வேறு நிறத்தில் காட்டலாம்
> (அப்படித்தான் எ-கலப்பையில் பயன்படுத்துகிறேன்).
>
> வெவ்வேறு நிறத்திலும் (அளவிலும்) லோகோக்களை ஒரு இடத்தில் வலையேற்றவேண்டும்.
>

நான் குறிப்பிட்டதற்கு காட்டாக: எ-கலப்பையின் தமிழ99 க்கும் தமிழ்
விசையின் தமிழ்99 க்கும் ஒரே நிறத்திலான ஒரே சின்னம் பயன்படுத்தல்
வேண்டாம். அவ்வாறே ஏனைய சோடிகளுக்கும்.

~சேது

Reply all
Reply to author
Forward
0 new messages