ஆங்கிலத்தில் பிழையோடு பேசினால்/எழுதினால் எள்ளல் செய்யும் சமூகம், தமிழில் செய்தால் சகித்துக் கொள்ளும். தமிழில் பிழை விடுவதென்பதும் அதைப் பெரிதாகக் காணாமல் கடந்து செல்வதும் தமிழ் மீதுள்ள இளக்காரமோ என்ற அச்சமும் உள்ளது. நாம் அவ்வப்போது தனித்தனியாகப் பிழைகளைச் சுட்டிக் காட்டினாலும் ஒன்றாகச் சேர்ந்து சுட்டிக்காட்டியதில்லை. அத்தகைய வாய்ப்பைத் தமிழ் அநிதமும் வாணி பிழைதிருத்தியும் இணைந்து "தமிழ் வேட்டை" என்ற இணையவழிப் போட்டியாக ஐப்பசி முதல் நாள் அறிமுகம் செய்துள்ளன. தமிழ்ப் பிழைகளை வேட்டையாடுவதே இதன் இலக்காகும். இதனால் மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு, அவர்கள் இப்பிழையை விடமாட்டார்கள்.
நீங்களும் கலந்து கொள்ளலாம். அவரவர் சமூகத் தளங்களில் #tamilvettai என்ற கொத்துக்குறியுடன் பிழையைச் சுட்டிக் காட்டலாம். அந்தப் பதிவை
இக்குழுவிலோ, கூகிள் படிவத்திலோ பகிர்ந்து போட்டி ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கலாம். விரிவான போட்டி விதிகள் இந்த இணைப்பில் உள்ளன.