Shuttleworth Flash Grant நல்கை

0 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Jan 28, 2021, 11:17:14 AM1/28/21
to panga...@madaladal.kaniyam.com, freetamil...@googlegroups.com, FreeTamilEbooksForum, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், Mozillians Tamilnadu

வணக்கம்,

சமீபத்தில் "Shuttleworth Flash Grant" என்ற நல்கைத் திட்டத்தில் 5000 அமெரிக்க டாலர்கள் நல்கைத் தொகை பெற்றேன் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.

நாம் பார்த்தே இராத பலரும் நமது பணிகளைக் கண்டு, அவற்றை ஊக்க்கப்படுத்தும் வகையில், பரப்புரை செய்வதும், பங்களிப்பதும், நன்கொடை அளிப்பதும், நல்கைகள் அளிப்பதும் பெருமகிழ்ச்சி தருபவை. கணியம் அறக்கட்டளையின் பணிகள் அவ்வாறே பலரையும் சென்றடைந்து, பல்வேறு பங்களிப்பும்கள், நன்கொடைகளை பெற்று வருகின்றன.

Shuttleworth Foundation ஆனது சனவரி 2001 ல் தென்னாப்பிரிக்க தொழில் முனைவர் 'மார்க் ஷட்டில்வொர்த்' என்பவரால் தொடங்கப்பட்டது. மனித சமுதாய வளர்ச்சிக்கு உழைப்பவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சமூக ஆய்வுகளை செய்து வருகிறது. இவரே உபுண்டு லினக்சு மற்றும் அதற்கு பங்களிக்கும் 'கெனானிகல்' நிறுவனம் இரண்டையும் தொடங்கி நடத்தி வருபவர்.

சமூகத்திலும் மக்கள் வாழ்விலும் மாற்றங்களை உருவாக்குபவர்கள், தம் பணிகளை செவ்வனே செய்ய, ஷட்டில்வொர்த் அறக்கட்டளை பல்வேறு நல்கைகளைத் தருகிறது. மேலும் விவரங்களுக்கு அவர்களது வலைத்தளம் காண்க. https://shuttleworthfoundation.org

"Shuttleworth Flash Grant" என்பது அவர்கள் வழங்கும் ஒரு நல்கை. இதன் மூலம் 5000 அமெரிக்க டாலர்கள் தருகின்றனர். 3.60 இலட்சம் இந்திய ரூபாய்கள். ஏற்கெனவே நல்கை பெற்ற ஒருவர் செய்யும் பரிந்துரை மீது ஆய்வு செய்து, பின் இந்த நல்கை வழங்குகின்றனர். இத்தொகையை நாம் விரும்பும் எந்த நற்செயலுக்கும் பயன்படுத்தலாம். என்ன செய்தோம் என்று அறிக்கை எழுத வேண்டும். இதுவரை இந்த நல்கை பெற்றோர் விவரங்கள் இங்கே - https://shuttleworthfoundation.org/fellows/flash-grants/

Coko Foundation - கோகோ அறக்கட்டளையின் நிறுவனர் ஆதம் ஹைட் (Adam Hyde) அவர்கள் எனக்கு இந்த நல்கையை பரிந்துரை செய்தார். கோகோ அறக்கட்டளை குழுவினர் பதிப்பக உலகிற்குத் கட்டற்ற மென்பொருட்களை உருவாக்கி வருகின்றனர். நல்கைக்கு பல்லாயிரம் நன்றிகள் ஆதம்.

https://coko.foundation/wp-content/uploads/2019/08/color.svg_.png
https://coko.foundation/wp-content/uploads/2017/11/0E7A0538.md_bwsq.jpg ஆதம் ஹைட் (Adam Hyde)[/caption]

நல்கைத் தொகை முழுதும் கணியம் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க உள்ளேன். வரி விலக்கு தரும் 80 ஜி அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்த பின் கணியம் கணக்கிற்கு அனுப்புவேன். FreeTamilEbooks.com , தமிழ் விக்கி மூலம் ஆகிய திட்டங்களுக்கு இத்தொகையை பயன்படுத்துவோம். இவை சார்ந்த நிகழ்ச்சிகள், நிரல் திருவிழாக்கள், பயிற்சிப் பட்டறைகள் நடத்த உள்ளோம். செலவு அறிக்கையை 6-12 மாதங்களில் பகிர்வோம்.

ஷட்டில்வொர்த் அறக்கட்டளையின் ஜேசன், அச்சல், கோகோ அறக்கட்டளை நண்பர்கள், ஆதம், கணியம் அறக்கட்டளை பங்களிப்பாளர்கள், கட்டற்ற மென்பொருட்கள் பங்க்களிப்பாளர்கள் ஆகியோருக்கு எனது நன்றிகள். இணைந்து சிறந்த உலகை உருவாக்குவோம்.

த. சீனிவாசன்



--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com
Reply all
Reply to author
Forward
0 new messages